Latest News

June 29, 2012

Mugamoodi Official Trailer
by admin - 0



Read More

யார் படத்துக்கும் நெருக்கடி வேணாம்... கோச்சடையானை தள்ளி வச்சுக்கலாம்! - ரஜினி
by admin - 0


போட்டி மிக்க இந்த சினிமா உலகில், யாருக்கும் தன் படத்தால் நெருக்கடி வேண்டாம் என்ற நினைக்கும் ஹீரோவைக் காட்ட முடியுமா...
ஏன் முடியாது... இதோ சூப்பர் ஸ்டார் ரஜினி!
தீபாவளிக்கு கோச்சடையானை வெளியிடவிருப்பதாக பல நாட்களுக்கு முன்பே தயாரிப்பாளர்கள் அறிவித்துவிட்டது நினைவிருக்கலாம். சூப்பர் ஸ்டாரும் இதை உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் இப்போது சில தினங்கள் தள்ளி படத்தை ரிலீஸ் செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.
காரணம்?
தீபாவளிக்கு ஷாரூக்கான் - கரீனா நடித்த 'யே கஹான் ஆ காயே ஹம்' படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். ஷாரூக்கான் பாலிவுட்டில் பெரிய நடிகராக இருந்தாலும், இப்போது ஒரே நேரத்தில் ரஜினி - ஷாரூக் படங்கள் வெளியானால் தியேட்டர் கிடைப்பது சிரமமாகிவிடும்.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் ரஜினி படம் என்பதால், மும்பையில் மட்டும் 150க்கும் மேற்பட்ட அரங்குகள் - மால்களில் கோச்சடையானை வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
இதனால் ஷாரூக் படத்துக்கு தியேட்டர் கிடைப்பது சிரமம். மேலும் அதே தினத்தில் அஜய் தேவ்கன் நடித்த படமும் வெளியாகிறது. கோச்சடையானால் இந்தப் படங்களுக்கு மும்பையில் நெருக்கடி வேண்டாம் என்ற ரஜினி, 'படத்தை சில தினங்கள் தள்ளி வெளியிடலாம். யாருக்கும் பாதிப்பு வேண்டாம்' என்று கூறிவிட்டாராம்.


Read More

குடிப்பழக்கம்! நடிகையிடம் சண்டை போடும் த்ரிஷா
by admin - 0


நடிகர் சிம்பு இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த ‘சிலம்பாட்டம்’ படம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் வெற்றியடையவில்லை. ஆனாலும் அந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நடிகை ‘சானா கான்’ தனது கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார்.

சிலம்பாட்டம் படத்தைத் தொடர்ந்து ’தம்பிக்கு எந்த ஊரு’, ‘பயணம்’, ’ஆயிரம் விளக்கு’ ஆகிய படங்களில் நடித்த சானாகான், சில நாட்கள் தமிழ்சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்தார். மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க சமீபத்தில் சென்னை வந்து தங்கியிருக்கும் சானாகான், ஒரே பேட்டியில் அனைத்து நடிகைகளையும் தன் பக்கம் திரும்ப வைத்துள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் சானாகான் “ பாலிவுட் நடிகைகளை விட, தென்னிந்திய நடிகைகளே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். பெரும்பாலான நடிகைகளை குடித்துவிட்டு உளருவதை நான் என் கண்ணாலேயே பார்த்திருக்கிறேன்.

அவர்களுக்கு புகை பிடிக்கும் பழக்கமும் இருப்பது தான் அதிர்ச்சியான செய்தி. நான் அந்த மாதிரியான நடிகை கிடையாது. உடலை சீராக வைத்துக்கொள்ள ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 30 நாட்கள் பட்டினியாக இருக்கிறேன். தினமும் கடவுளை வணங்குகிறேன். புகைப் பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் எனக்கு கிடையாது” என்று ஓபனாக தென்னிந்திய நடிகைகளை வம்பிற்கு இழுத்துவிட்டார்.

சானாகானின் பேட்டி பற்றி அறிந்த தென்னிந்திய நடிகைகள் இதை சாதாரணமாக விடுவார்களா. “சானாகான் இப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்” என கூறியுள்ளனர். சானாகானின் கைபேசிக்கும், தொலைபேசிக்கும் ஓயாது ஃபோன் செய்து தங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனராம்.

ஃபோன் செய்ய நேரமில்லாத நடிகைகள் குறுஞ்செய்திகள் மூலமாகவும் சானாகானை பொரிந்து தள்ளுகிறார்களாம். நடிகை த்ரிஷா எல்லா வகையிலும் சானாகானை திட்டிவிட்டதால் அடுத்தபடியாக திரைக்கலைஞர்கள் சங்கத்தில் சானாகான் மீது புகார் கொடுக்குமாறு தனது பி.ஏ-விடம் கூறியுள்ளாராம்.

Read More

விவசாயிகளது ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது
by admin - 0

கிரிதலே பிரதேசத்தில் விவசாயிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

விவசாயிகளுக்கு தேவையான நீரை வழங்குவது தொடர்பில் பிரதியமைச்சர் சிரிபால கம்லத் உறுதியளித்ததை தொடர்ந்து விவசாயிகளது ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த வீதி மறியல் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக இன்று காலை வேளையில் கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதியில் கிரிதலே பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.


Read More

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் 1400 பேருக்கு நியமனம்
by admin - 0



மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல்முறையாக 1400 வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிலையத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 2004ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்னரும் 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையான கலாப்பகுதியில் பட்டப்படிப்பை முடித்த வேலையற்ற சுமார் 1400 பட்டதாரிகளுக்கு தொழில் நியமனக் கடிதங்கள் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வழங்கப்பட்டன. இவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஆகியவற்றிலேயே இவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன.

இவர்களின் இந்த நியமனங்கள் ஆறுமாதங்களுக்கு பின்னர் நிரந்தர நியமனங்களாக அரசாங்கத்தின் பல்வேறு திணைக்களங்களுக்கும் இவர்கள் உள்ளீர்க்கப்படுவார்கள் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்
Read More

June 28, 2012

தொட்டியில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் விடும் முறை..
by admin - 0

தொட்டியில் வளர்க்கும் செடிகள், தம்முடைய தேவைகளுக்கு நம்மையே முழுவதும் நம்பி உள்ளன. அவை நல்லமுறையில் வளர்ந்து பலன் தருவது... நம்முடைய பராமரிப்பைப் பொருத்தே அமையும். எனவே அவற்றை மிகவும் கவனமாக பராமரிக்க வேண்டும்.

1. எப்போதும், தேவையான அளவு தண்ணீர் விடவும். கூடுதலாக அல்லது குறைவாக தண்ணீர் விட கூடாது.
2. தண்ணீர் உங்கள் அருகில் உள்ளதையே விடவும். மிகவும் குளிர்ந்த தண்ணீர் விடக்கூடாது.
3. இரவில் அல்லது விடியற்காலையில் தண்ணீர்விடுவது சிறந்தது.
4. மழை நீர் விழும்படி செடித்தொட்டி இருந்தால் மிகவும் நல்லது.
5. நண்பகல் அல்லது வெயில் அதிகம் அடிக்கும்போது தண்ணீர் விடவேண்டாம்.



Read More

இவன்தான் மனிதன்!
by admin - 1


இந்தப் படத்தில் உள்ள பெரியவரின் பெயர்... மா சான்ஸியோ. சீனாவைச் சேர்ந்த 62 வயதாகும் இந்த முதியவர், ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு Blood poisoning எனப்படும் மோசமான நோய் (Septicemia) உண்டு. இதன் காரணமாக இரண்டு கால்களையும் அடுத்தடுத்து இழந்துவிட்டவர். இந்நிலையிலும்கூட கடந்த 10 ஆண்டுகளாக ஆட்கள் நடமாட்டமே இல்லாத மலைப்பகுதியைத் தேர்ந்தெடுத்து, சுமார் 3,000 மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார்.

ரத்த காயம் எதுவும் ஏற்பட்டால், அந்த பாகத்தையே வெட்டியெடுத்துவிட வேண்டும் எனும் மோசமான உடல் நிலையில் இருக்கும் இவர், மரக்கன்று நடும் பணியின்போது தவறிவிழுந்து வலது கை சுண்டு விரலில் அடிபட்டு, அதுவும் வெட்டியெடுக்கப்பட்டு விட்டது. அதற்கு பிறகும்கூட, 'இதுதான் ஆத்ம திருப்தியான பணி. இதை எல்லோரும் செய்யுங்கள்' என்றபடியே மரக்கன்று நடும் வேலையைத் தொடர்கிறார்.
இவன்தான் மனிதன்!

Read More

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் பாசமலர்!
by admin - 0

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் உருவான கர்ணன் படம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.

இப்படம் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் திரையிடப்பட்டது. சென்னையில் இத்திரைப்படம் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது மட்டுமின்றி, வசூலிலும் சாதனை புரிந்த்து.

இதன் வெற்றியை அடுத்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் துணையுடன் மீண்டும் மனதை வருட வருகிறது பாசமலர்.

1961ஆம் ஆண்டில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் அண்ணனாகவும், சாவித்திரி தங்கையாகவும் நடித்திருப்பர்.

ஜெமினி கணேசன் சாவித்ரியின் கணவனாக நடித்திருப்பார். கவியரசர் கண்ணதாசனின் காவிய வரிகளில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராம்மூர்த்தியின் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டானதாகும்.

ஏ.பீம்சிங் இயக்கியுள்ள இத்திரைப்படும் மீண்டும் திரைப்பிரவேசம் செய்ய இருக்கிறதாம்.



Read More

விஜய் துப்பாக்கி அம்பேல் அதிர்ச்சியில் விஜய்
by admin - 1

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் தலைப்பை பயன்படுத்த கோர்ட் தடை விதித்துள்ளது.
நடிகர் கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்தவர் தயாரிப்பாளார் ரவிதேவன். இவரது தயாரிப்பில் லோகியாஸ் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு ‘கள்ளத்துப்பாக்கி’ என்ற படத்தலைப்பு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு துப்பாக்கி என்று தலைப்பு வைக்கப்பட்டது.
துப்பாக்கி படத்தின் டைட்டில் டிசைனும் கள்ளத்துப்பாக்கி படத்தின் டைட்டில் பாணியில் இருந்தது.
இதையடுத்து கள்ளத்துப்பாக்கி குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைவராக இருப்பதால், தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்துக்குப் போனார்கள் கள்ளத்துப்பாக்கி குழுவினர்.
கள்ளத்துப்பாக்கி குழுவினரின் மனுவை விசாரித்த நீதிபதி, விஜய் நடித்து வரும் படத்திற்கு துப்பாக்கி என்று டைட்டில் வைக்கக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டார்!


Read More

June 27, 2012

உரிமைகளை அடையும் வரை ஓயமாட்டோம்; போராடுவோம் முறிகண்டியில் மாவை சூளுரை
by admin - 0

எமது உரிமைகளை அரசும், இராணுவமும், பௌத்த குருமாரும் அழித்துவருகின்றனர். இதற்கெதிராக நாங்கள் ஜனநாயக ரீதியிலான பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்போம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

தமிழர் தாயக நிலங்களின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் நேற்று முற்பகல் 9.30 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை முல்லைத்தீவு திருமுறிகண்டி ஆலய முன்றிலில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மாவை சேனாதிராசா இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு
எங்கள் நிலத்தில் நாங்கள் வாழும் உரிமையை எங்களின் வாழ்வுரிமையை இந்த அரசு திட்டமிட்டு இராணுவத்தின் ஊடாகவும், பௌத்த குருமார் ஊடாகவும் பறித்து வருகிறது. எமது நிலங்களை ஆக்கிரமித்து தமது குடியிருப்புக்களையும், புத்த விகாரைகளையும், இராணுவ முகாம்களையும் அமைத்து அவர்கள் எமது மக்களை அகதிகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் இலட்சக் கணக்கான மக்கள் தமது நிலங்களுக்குப் போகாமல் இருப்பதற்கு காரணம் இராணுவம் இந்த நிலங்களை ஆக்கிரமித்திருப்பது தான். பௌத்த குருமார் புத்த சிலைகளை வைத்து ஆக்கிரமித்து இருப்பது தான்.

தமிழ் மக்களின் பண்பாடு, கலாசாரம், அவர்களுடைய நில உரிமை, வாழ்வுரிமை, அவர்களது ஜனநாயக உரிமை என்பவற்றையும் சீரழித்திருக்கின்றது இந்த அரசு.
இதற்கு எதிராக இன்று நாங்கள் சில மணிநேரங்கள் போராட்டம் நடத்துகின்றோம்.

இது ஒரு அடையாளமாக எங்களால் மேற்கொள்ளப்படும் போராட்டம். இதே போன்று அனைத்து இடங்களிலும் எமது போராட்டங்களை முன்னெடுப்போம். நேற்று முன்தினம் கூட இங்கு மீளக்குடியமர்வதற்கு கொண்டுவரப்பட்ட திருமுறிகண்டியைச் சேர்ந்த மக்கள் மாலையில் இராணுவத்தினரால் மிருகத் தனமாகத் தாக்கப்பட்டு பஸ்களில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் செல்லப்பட்டனர்.

இந்த உரிமை இராணுவத்துக்கு வழங்கியது யார்? எனவே தான் இந்த அட்டூழியங்களைச் செய்கின்ற இராணுவம், எங்கள் நிலங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்று சொல்கின்றோம். என்றார்.

Read More

அக்ரிமெண்ட் ஆப்பு! தவிக்கும் ப்ரணிதா!
by admin - 0



கார்த்தி, ப்ரணிதா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’சகுனி’. படத்தின் உரிமையாளர்கள் படத்திற்கு சக்சஸ் மீட் வைத்துக்கொண்டிருந்தாலும், எதிர்பார்த்த அளவு சகுனி வசூல் செய்யவில்லையென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சகுனி படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் ப்ரணிதாவிற்கு பாராட்டுக்களும் வாய்ப்புகளும் வந்து குவிகின்றதாம்.

ப்ரணிதாவுடன் ஜோடியாக நடித்திருக்கும் கார்த்தி “ப்ரணிதாகூட நடிச்சது ரொம்ப சௌகரியமா, வசதியா இருந்துச்சு! படத்தில் அவருக்கு முக்கியத்துவம் இருக்கு! அவரும் எனக்கு நல்லா ஈடுகொடுத்து நடிச்சிருக்காரு” என்று சில்லுனு சிரிர்த்திருக்கிறார்.

சகுனி படத்தில் நடித்தது பற்றி ப்ரணிதா “ சகுனி படத்தில் நடித்தது சந்தோஷமாக இருந்தது. அதற்கு காரணம் ஹீரோ கார்த்தி கொடுத்த ஊக்கமும் ஆதரவும்தான். இயக்குனர் ஷங்கர் தயாளும் தூண்டுகோலாக இருந்து என்னோட திறமைய வெளிப்பட வெச்சாரு. படம் என்னவோ அரசியல் ஆக்‌ஷனா இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை தென்றல் வீசுற பூங்காவுல ஜாலியா உலா வந்த மாதிரி தான் இருந்துச்சு” என்று ஜில்லிடுகிறார்.

சகுனியால் ப்ரணிதாவிற்கு ஒரு சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. “தொடர்ந்து எங்க நிறுவனத்துக்கு மூணு படங்கள் நடிச்சுக் குடுக்குறதா இருந்தா சகுனி நாயகியாகலாம். இல்லனா நாங்க வேற ஹீரோயின பாத்துக்குறோம்” என தயாரிப்பாளர் கே.ஆர்.பிரபு சொல்ல, அவரது டிமாண்டை ஒப்புக்கொண்டு தான் சகுனியில் நாயகியாக நடித்தாராம்(!) ப்ரணிதா. சகுனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் நல்ல ரீச் கிடைத்திருப்பதால் பல படங்களின் கதைகள் ப்ரணிதாவின் கண்களுக்கருகில் வருகிறதான். இருந்தாலும் இந்த மூணு பட அக்ரிமெண்டால் ஒப்புக்கொள்ள முடியாமல் தவிக்கிறாராம் ப்ரணிதா.

தமிழ் படங்களில் ஒப்புக்கொள்ள முடியாததால் இப்போது ஓரே ஒரு கன்னட படத்தில் மட்டும் நடித்துக்கொண்டிருக்கும் ப்ரணிதா ” நம்ம போட்ட அக்ரிமெண்டை பெரிய மனசோட கேன்ஸல் பண்ணுங்க சார். அப்பறமா நீங்க கேட்கும் போதெல்லாம் கால்ஷீட் தர்றேன்” என கெஞ்சலாக கோரிக்கை விடுத்திருக்கிறார்.


Read More

நானும் பெரிய நடிகன் தான்
by admin - 0

இயக்குனர் பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்துக்கொண்டிருக்கும் படம் ’மாரீயன்’. முதல் கட்ட படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்திக்கொண்டிருக்கும் இயக்குனர் பரத்பாலாவிற்கும், தனுஷிற்கும் படப்பிடிப்பில் சண்டை நடந்ததாக தெரிகிறது.

தனுஷ் நடக்கும் காட்சிகள் படமாக்கப்படுவதாக கூறப்பட்டதால் படப்பிடிப்பிற்கு வந்த தனுஷ், தனது வரவை இயக்குனரிடம் கூறுமாறு உதவி இயக்குனரிடம் சொல்லிவிட்டு கேரவனிலேயே காத்திருந்திருக்கிறார்.

மற்ற நடிகர்களை வைத்து ஷூட்டிங் நடத்திக்கொண்டிருந்த பரத்பாலா தனுஷை கண்டுகொள்ளவில்லையாம். நீண்ட நேரமாகியும் எந்த பதிலும் வராததால் மறுபடியும் உதவி இயக்குனரை அழைத்து “ இன்றைய படப்பிடிப்பில் ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா என தயவு செய்து இயக்குனரிடம் கேளுங்கள். இல்லையென்றால் அவரையே நேரடியாக நான் எப்போது வரவேண்டும் எனறு சொல்லச் சொல்லுங்கள்” என கூறிவிட்டு கோவமாக படப்பிடிப்பு நடந்த இடத்திலிருந்து சென்றுவிட்டாராம்.

இதையறிந்த இயக்குனர் பரத்பாலா ஃபோனில் தனுஷை தொடர்புகொண்டு பேசிய போது “தமிழ்நாட்டில் நானும் பெரிய நடிகன் தான்” என தனுஷ் காட்டமாக பேசியதாக தெரிகிறது. இயக்குனருக்கும் ஹீரோவுக்கும் இப்படி ஒரு மோதல் நடந்ததை அறிந்த படக்குழுவினரிடையே பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.



Read More

June 26, 2012

அழிவின் விளிம்பில் பயிர்கள், விரைவில் மின்வெட்டு, நீர்வெட்டு
by admin - 0

பருவமழை தாமதமாவதால்
இலங்கையில் கடும்
வரட்சி ஏற்பட்டுள்ளது.
நீர்த்தேக்கங்கள்
வற்றியுள்ளதால், விவசாயம், நீர் மின்உற்பத்தி என்பன கடுமையாகப்
பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
நேற்று அலரி மாளிகையில், அவசர கூட்டம்
ஒன்றை நடத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில்
அரசின் முக்கிய அமைச்சர்கள் மற்றும்
திறைசேரி செயலாளர் ஆகியோரும் விவசாய
அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். இலங்கையின் வடக்கு, வடமத்திய, வடமேல்
மாகாணங்களில் வரட்சியினால் 150,000ஏக்கர்
நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் முற்றாக
அழியும் ஆபத்தில் இருப்பதாக விவசாய
அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன
தெரிவித்துள்ளார். கொத்மல, பொல்கொல்ல நீர்த்தேக்கங்களில்
இருந்து நீரைப் பெறும் விவசாய நிலங்களும்
கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.
சிறிய குளங்கள், நீர்த்தேக்கங்கள் முற்றாக
வற்றி வறண்டு போயுள்ளன. பாரிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக
குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்கள
அதிகாரிகள் கூறியுள்ளனர். பொலன்னறுவில்
7500 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள்
கைவிடப்பட்டுள்ளன. மேலும் 15 ஆயிரம் ஏக்கர் நெல், 50 ஆயிரம்
ஏக்கர் ஏனைய பயிர்களும் அழியும் ஆபத்தில்
உள்ளன. இதற்கிடையே, நீர்த்தேக்கங்களின்
நீர்மட்டம் குறைந்துள்ளதால் நீர்மின்
உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யாது போனால் நீர்
மின்உற்பத்தி முற்றாக தடைப்படும்
ஆபத்து ஏற்பட்டுள்ளது.
நிலைமையை சமாளிக்க அனல் மின்
உற்பத்தி மூலமே மின்சாரத்
தேவை ஈடுசெய்யப்படுகிறது. இதனால் இலங்கையில் விரைவில் கடுமையான
மின்வெட்டு, நீர்வெட்டு என்பன
நடைமுறைக்கு வரும் என்றும்
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read More

June 25, 2012

இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கேல் ஜாக்சன் ஆவி!
by admin - 0

மறைந்த
பிரபல பாப் பாடகர்
மைக்கேல் ஜாக்சனின்
ஆவி அவரது வீட்டைச்
சுற்றி வருவதாக
அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர். பிரபல பாப் பாடகர் மைக்கேல்
ஜாக்சனுக்கு அவரது மருத்துவர் அதிக அளவில்
மயக்க மருந்து, வலிநிவாரணி மற்றும் தூக்க
மாத்திரைகள் கொடுத்ததால்
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம்
அடைந்தார். இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் அவர்
உயிரை விட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள
பெவர்லி ஹில்ஸ் வீட்டில்
அவரது ஆவி உலவுவதாக அக்கம்பக்கத்தினர்
தெரிவித்துள்ளனர். உலாவுவது மட்டுமல்ல இரவு நேரத்தில்
பாடவும் செய்கிறதாம். இதனால்
அப்பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருக்கையில்
அடிக்கடி ஜன்னல்கள் வழியாக யார்
போகிறார்கள், வருகிறார்கள் என்பதைப் பார்ப்பாராம். தற்போது அவர் இசையமைக்கும்,
பாட்டுப் பாடும் சத்தம் கேட்கிறதாம். மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருக்கையில்
தனது குழந்தைகள் பிரின்ஸ், பாரிஸ் மற்றும்
பிளாங்கெட்டுடன் பெவர்லி ஹில்ஸ் வீட்டில்
தான் தங்கியிருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்
அவருக்கு ஆவிகள் மீது நம்பிக்கை இருந்தது. தற்போது அவரே ஆவியாக வருகிறார்
என்று கூறப்படுகிறது.
Read More

எவ்வாறான தடைகள் வந்தாலும் தமிழர் தாயக பூமியை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளுக்குஎதிராக நாளைய தினம் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம
by admin - 0

திருமுறிகண்டியில்
மீளக்குடியமர்விற்காக
காத்திருந்த பொது மக்களை இராணுவத்தினரும்
பொலிஸாரும் இணைந்து வலுக்கட்டயமாக
வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளதாக தமிழ்
தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்
தெரிவித்துள்ளார். இன்றிரவு 7.30
மணியளவிலேயே இவர்களை இராணுவத்தினர்
வலுக்கட்டாயமாக கதறக்கதற வாகனங்களில்
ஏற்றிச்சென்றுள்ளனர். முறிகண்டியில்
பொது மக்களது நிலங்களை பறிக்கும்
செயற்பாடுகளுக்கு எதிராக நாளைய தினம்
பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ள
நிலையிலேயே, இச்செயற்பாட்டை அவர்கள்
மேற்கொண்டுள்ளனர். முறிகண்டியில் தங்கியிருந்து சுமார் 64
குடும்பங்களை அவர்களது விருப்பமின்றி வலுக்
இரண்டு பஸ் மற்றும்
இரண்டு லொறி ஆகியவற்றில் ஏற்றி மீண்டும்
வவுனியாவிலுள்ள
முகாம்களுக்கு கொண்டு சென்றதாக தவல்கள் கிடைத்துள்ளன. எவ்வாறான தடைகள் வந்தாலும் தமிழர் தாயக
பூமியை ஆக்கிரமிக்கும்
செயற்பாடுகளுக்கு எதிராக நாளைய தினம்
திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் முறிகண்டியில்
நடைபெறும் என நாடாளுமன்ற உறுப்பினர்
சி.சிறீதரன் குறிப்பிட்டார்.
Read More

June 23, 2012

ஜெயலலிதா சிறைச்சாலைக்கு போகக்கூடிய காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது
by admin - 0

அதிமுக அரசின் அடக்குமுறைக்கு எதிராக திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் 22.06.2012 சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி

இன்றைய தினம் கலைஞர் அவர்கள் செயற்குழுவைக் கூட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி 4ஆம் தேதி சிறை போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். தமிழ்நாடே ஆவலோடு எதிர்பார்க்கிற அந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் சிறைசெல்ல இருக்கிறார்கள். ஜெயலலிதா திருந்துவார் என்று சிலபேர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா இன்றைக்கு அல்ல. இன்னும் பத்து தலைமுறை ஆனாலும் அந்த அம்மா திருந்தவே மாட்டார்கள். திமுகவினரை யார் யார் அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள்தான் அழிந்ததாக வரலாறு இருக்கிறதே தவிர, திமுக அழிந்ததாக வரலாறு இல்லை. எனவே நான் தெரிவித்துக்கொள்கிறேன். எத்தனை திமுகவினரை சிறைக்குள் அடைக்கிறார்களோ, அதே வேகத்திலே ஜெயலலிதாவும் சிறைச்சாலைக்கு போகக்கூடிய காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு பேசினார்.

Read More

கனவுலகில் வாழும் யாழ்ப்பாண தமிழர்களுக்கு அதிர்ச்சி தகவல்
by admin - 0

நாட்டில் ஏனைய மாகாணங்களின் சனத்தொகையில் கணிசமான வளர்ச்சி காணப்பட்ட போதிலும் வடமாகாணத்தின் சனத்தொகை பெருமளவு வீழ்ச்சியடைந்திருப்பதாக கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டில் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 1981ஆம் ஆணடு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டில் 7இலட்சத்து 38ஆயிரத்து 788பேர் வாழ்வதாக கணிப்பிடப்பட்டிருந்தது. ஏனைய மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட சனத்தொகை வளர்ச்சியோடு ஒப்பிட்டால் யாழ் மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டில் 12இலட்சம் பேர் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டில் 6இலட்சத்து 17ஆயிரம் பேரே வாழ்வதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சரியாக 50வீதத்தால் சனத்தொகை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தமை, போரில் கொல்லப்பட்டமை, கொழும்பு நீர்கொழும்பு போன்ற தென்னிலங்கைக்கு இடம்பெயர்ந்தமை, போரில் இளைஞர்கள் கொல்லப்பட்டமை, போன்ற காரணிகளால் யாழ்ப்பாணத்தின் சனத்தொகை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் பெண்களே அதிகம் பேர் வாழ்கின்றனர். 6இலட்சத்து 17ஆயிரம் பேரில் 3இலட்சத்து 25பேர் பெண்களாவர். 2இலட்சத்து 92ஆயிரம் பேர் மட்டுமே ஆண்களாவர். இலங்கையில் தேசிய ரீதியான சனத்தொகையிலும் ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ளனர்

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குடிசன வீட்டு வசதிகள் மதிப்பீட்டின் பிரகாரம் ஒருகோடியே மூன்று இலட்சத்து 57 ஆயிரம் ஆண்களும் (10357000) ஒரு கோடியே ஐந்து இலட்சத்து 12 ஆயிரம் பெண்களுமாக (10512000) மொத்தம் இரண்டு கோடியே எட்டு இலட்சத்து 69 ஆயிரம் பேர் (20,869000) நாட்டில் வசிப்பதாகத் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதென நிதி திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கணக்கீட்டின்படி ஆண்களை விட ஒரு இலட்சத்து 55 ஆயிரம் பெண்கள் அதிகமாக இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டிருப்பதாக அமைச்சு சமர்ப்பித்துள்ள புள்ளி விபரத்தில் கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர். இதுவே தேசிய மட்ட புள்ளிவிபரத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகம் என்ற நிலையை தோற்றுவித்துள்ளது.

நாட்டின் சனத் தொகை மாவட்ட மட்டத்தில் நோக்குகையில்,




Read More

ரஜினியின் கோச்சடையான் கதை என்ன?
by admin - 0



இந்த ஆண்டின் பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களில் முதலிடத்தில் இருப்பது சந்தேகமில்லாமல் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான்தான்.
ஆரம்பத்தில் இது வெறும் அனிமேஷன் படம்தானே, எப்படி வரப் போகிறதோ என்று சந்தேகம் கிளப்பியவர்கள், நாளுக்கு நாள் அந்தப் படம் குறித்த உண்மையான தகவல்கள் தெரிய வந்ததும், அமைதியாகி, ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளது சௌந்தர்யாவுக்கு நிச்சயம் நல்ல செய்திதான்!
இந்தப் படத்துக்கு தமிழ் திரையுலகம் தாண்டி, இந்தி, தெலுங்கு, ஜப்பான், கொரியா, யுஎஸ் என பல நாடுகளிலும் விசாரிப்புகள் தொடர்கின்றன. ஹாலிவுட்டில் நடிக்காமலேயே, ஹாலிவுட் நடிகருக்கு நிகரான செல்வாக்கைப் பெற்றுள்ள ஒரே நடிகர் என்ற பெருமை ரஜினிக்குக் கிடைத்திருக்கிறது.
கோச்சடையான் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. சில பாடல்கள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. அதற்காக மீண்டும் ரஜினி ஹாங்காங் செல்லப் போகிறார்.
இந்த நிலையில் படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
படத்தில் ரஜினி, அப்பா - மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். கதைப்படி ரஜினி, ஜாக்கி ஷெராப், நாசர் ஆகியோர் பண்டைய தமிழ் மன்னர்கள். ரஜினி, ஜாக்கி ஷெராப் ஆகிய இரு மன்னர்களுக்கும் இடையில் சண்டை நடக்கிறது.
இந்த சண்டை அடுத்த தலைமுறையிலும் தொடர்கிறது. ரஜினியின் மகனுக்கும் (ரஜினி), ஜாக்கி ஷெராப் மகனான ஆதிக்கும் நடக்கும் சண்டையில் யார் வெற்றி பெற்றார்கள்? எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதுதான் படத்தின் கதை.
இதில் ரஜினிக்கு உதவும் பாத்திரத்தில் சரத்குமார் வருகிறார்.
இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என்கிறார்கள். படப்பிடிப்பு குறைந்த நாட்களில் முடிந்துவிட்டாலும், தொழில்நுட்ப நேர்த்திக்காக இன்னும் சில மாதங்கள் கூட அவகாசம் தேவைப்படுகிறதாம். ஹாங்காங், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லண்டனைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் இந்தபர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

June 22, 2012

மருத்துவமனையில் விஜய் :தள்ளுமுள்ளு -ரத்தக்காயம் ( படங்கள் )
by admin - 0



நடிகர் விஜய் பிறந்த நாள் விழா இன்று ( 22.6.2012) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு விஜய் சென்றார். அங்கு இன்று பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் விஜய் தங்க மோதிரம் அணிவித்தார்.


இதே ஆஸ்பத்திரியில்தான் விஜய் பிறந்தார் என்பதால் அவரே நேரில் வந்து மோதிரம் அணிவித்தார்.


காலை 10.30 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 11 மணிக்கு மேல்தான் விஜய் மருத்துவமனைக்கு வந்தார்.

அவரின் வருகைக்காக பொதுமக்களுடன் மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் காத்தி ருந்தனர். மருத்துவர்களூம், மருத்துவமனை ஊழியர்களூம் வேலையை கவனிக்காமல் விஜய்யின் வருகைக்காக காத்திருந்ததால் சிகிச்சைக்காக வந்திருந்தவர்கள் அவதியுற்றனர்.


பிரசவம் ஆன தாய்மார்கள் வலியில் படுத்திருந்தார்கள். அவர்களை விஜய் வருகிறார் என்று கூறி படுக்க விடாமல் 1 மணி நேரமாக உட்காரவைத்திருந்தனர். பிரசவம் ஆகி ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்த ஒரு பெண்ணை, விஜய் அங்கே வருகிறார் இங்கே வருகிறார் என்று ஸ்டெச்சரில் வைத்தே அங்கெ இங்கே நெடு நேரத்திற்கு அலையவிட்டனர்.


விஜய் வந்ததும் பொதுமக்களாலும், ஊழியர்களாலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மருத்துவமனை கண்ணாடிகள் உடைந்தன. இதனால் போலீசாருக்கு ரத்தக்காயங்கள் ஏற்பட்டன.

Read More

கூட்டணி மாற்றம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை! கலைஞர் பேட்டி!
by admin - 0



திமுக தலைவர் கலைஞர் தலைமையில் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் இன்று (22.06.2012) சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடி முக்கிய ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்து ஜூலை 4ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கலைஞர் அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.


கேள்வி: மத்தியில் பல்வேறு அரசியல் சூழ்நிலை நடந்துகொண்டிருக்கிற இந்த நேரத்தில் தேசிய அரசியலில் ஒரு பெரிய கூட்டணி மாற்றம் வருமா?


பதில்: வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.


கேள்வி: சிறை நிரப்பும் போராட்டத்தில் நீங்கள் கலந்துகொள்வீர்களா?


பதில்: சொன்னால் கலந்து கொள்கிறேன்.


கேள்வி: திமுகவில் அனுபவம் வாய்ந்த திறமையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். காலியாகப்போற நிதித்துறையை கேட்டுப் பெறுவீர்களா? அல்லது முக்கிய துறையை கேட்டுப்பெறுவீர்களா?


பதில்: காலியாகப்போகிற நிதியை யாராவது கேட்பார்களா?


இவ்வாறு பதில் அளித்தார்.

Read More

தமிழினிக்கு புனர்வாழ்வு
by admin - 0

பல வருடங்களாக கடுழிய சிறை வாசம் அனுபவித்த தமிழிழ பெண்கள் பிரிவு தலைவர் தமிழினி'யை புனர்வாழ்வுக்கு உட்படுத்த கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு
Read More

விஜயகாந்திடம் ஆதரவு கேட்போம்: நிர்மலா சீதாராமன்
by admin - 0

பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் சென்னை பாரதீய ஜனதா அலுவலகத்தில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர், ’’ஜனாதிபதி தேர்தலில் சங்மாவுக்கு பாரதீய ஜனதா முழு மனதுடன் ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் பிரணாப்முகர்ஜிக்கு சிவசேனா கட்சி ஆதரவு தெரிவித்து இருப்பதால், பாரதீய ஜனதா கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்பு இல்லை.

அதேநேரத்தில் ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சங்மாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அவருக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்பட அனைத்து கட்சி தலைவர்களிடமும் ஆதரவு கேட்போம்’’ என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

Read More

June 21, 2012

வவுனியா தேசிய இளைஞர்கள் சேவை மன்றம் இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரியுள்ளது.
by admin - 0

வவுனியா தேசிய இளைஞர்கள் சேவை மன்றம் இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரியுள்ளது. மூன்றாம் நிலை தொழில் கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்ய்பட்ட வவனியா மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் பயிற்சி நிலையத்தினால் இப்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

6 மாதங்களை கொண்ட இப்பயிற்சி நெறிக்கு கா.பொ.த (சா.த) பரீட்சையில் தோற்றிய 16 வயது முதல் 30 வயதுடைய இளைஞர் யுவதிகள் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ் பயிற்சி, கணனி பிரயோக உதவியாளர், கணனி வன்பொருள் திருத்துனர், வானொலி தொலைக்காட்சி மறறும் கையடக்க தொலைபேசி திருத்துனர், ஆடை வடிவமைப்பாளர், மேலைத்தேய நடனம் மற்றும் கீழைத்தேய மேலைத்தேய சங்கீதம் ஆகிய பயிற்சி நெறிகளுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க விரும்புவோர் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் 'நிலைய பொறுப்பதிகாரி, தேசிய இளைஞர் பயிற்சி நிலையம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், கண்டி வீதி, வவுனியா எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

Read More

பில்லா-2 தாமதம்! காரணம் கார்த்தியா? கொதிக்கும் தல ரசிகர்கள்
by admin - 0

நாளை 22.06.2012 அன்று கார்த்தி நடிக்கும் சகுனி திரைப்படம் உலகெங்கும் வெளியாகிறது. உலகம் முழுக்க 1050 திரையரங்களில் சகுனி வெளியாகிறது. ரஜினி நடித்த எந்திரன் உலகெங்கும் 2050 திரையரங்குகளில் வெளியானது. எந்திரன் படத்திற்கு பிறகு கார்த்தி நடிக்கும் சகுனி தான் அதிக அளவு திரையரங்களில் வெளியாகிறது என்று திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அஜித் நடிக்கும் பில்லா-2 படமும் இதே தேதியில் வெளியாக இருந்தது. அஜித்தின் பில்லா-2 படமும் கார்த்தி நடிக்கும் சகுனி படமும் மோதிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களுக்காக பில்லா-2 படத்தின் ரிலீஸ் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தள்ளிவைக்கப்பட்டது.

சகுனி படத்துக்கு கிடைத்த வரவேற்பால் தான் பில்லா-2 படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது என்று பேச்சு வந்தது. பில்லா-2 படத்தின் தாமதத்திற்கு கார்த்தியின் சகுனி தான் காரணமா? என்று பேச்சு வந்ததால், கொதிப்பில் இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். தல-க்கு போட்டி கார்த்தியா? என்ன பாஸ், ஒன்னும் காமெடி கீமிடி பண்ணலையே! என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

சரி, உண்மையான பிரச்சனை என்ன என்று இயக்குனர் விசாரித்தோம். இதை மறுத்த பில்லா2 படத்தின் இயக்குனர் சக்ரி, சென்சார் விஷயத்தில் சில பிரச்சனைகள் வந்தது. அதனால் ஏற்பட்ட தாமதம் தானே தவிர, வேறு காரணங்கள் எதுவும் இல்லை என்றார்.

மேலும் அவர் 'பில்லா-2' படத்துக்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. அனால் படத்திற்கு 'யூ/ஏ' சான்றிதழ் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டோம். இதனால் படத்தை மும்பையில் உள்ள மேல் முறையீட்டு குழுவுக்கு அனுப்பினோம் என்றார்.

படத்தில் வன்முறை மற்றும் கவர்ச்சி காட்சிகள் அதிகம் இருந்த்தால் தணிக்கை குழுவினர் அவற்றை வெட்டி எறிய முயற்சித்தனர். ஆனால் இயக்குனர் சம்மதிக்கவில்லை. இதனால் தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர்.



Read More

ஷங்கரின் புதிய மெகா பட்ஜெட் படம் 'ஐ' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
by admin - 0

தனது அடுத்த படத்துக்கு வித்தியாசமாக 'ஐ' எனப் பெயர் சூட்டியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
இந்தப் படத்தில் ஷங்கருடன் இணைபவர் விக்ரம். நாட்டின் தலையாய பிரச்சினையான தேர்தல் முறைகேடுகள் பின்னணியில் இந்தப் படம் உருவாகவிருப்பதாக சொல்லப்படுகிறது.
படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழில் 'ஐ' என்றால் ஐவர் என்று ஒரு பொருள் உண்டு. ஆங்கிலத்தில் 'நான்' என்று சொல்லலாம்.
படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படத்துக்காக அவர் மணிரத்னம் படத்தை துறந்ததோடு, மொத்தமாக கால்ஷீட்டை கொடுத்துள்ளாராம்.
விரைவில் படத்தின் பிற விவரங்களை ஷங்கர் வெளியிடவிருக்கிறார்.

Read More

பி.ஏ.சங்மாவுக்க்கு ஆதரவு! ஜெ. அறிவிப்பு!
by admin - 0

பி.ஏ.சங்மாவுக்குதான் அதிமுக ஆதரவு அளிக்கும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


கொடநாடு போகும் முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ.சங்மாவுக்குதான் அதிமுக ஆதரவு அளிக்கும் என்றும், மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜியும் பி.ஏ.சங்மாவை ஆதரிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா அறிவித்து இருந்தார். பின்னர் சென்னை வந்த அவர், முதல் அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டார். அப்போது, அவருக்கு ஆதரவு அளிப்பதாக ஜெயலலிதா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More

June 20, 2012

சிறிலங்காவிலேயே மிக உயரமான மனிதர் ஒரு முன்னாள் போராளி
by admin - 0

சிறிலங்காவிலேயே மிகஉயரமான மனிதராக கருதப்படுபவர் தற்போது பொலன்னறுவ மாவட்டத்திலுள்ள கண்டகாடு புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்றுவரும் ஒரு முன்னாள் போராளியாவார்.

குணசிங்கம் கஜேந்திரன் என்ற இந்த முன்னாள் போராளியின் உயரம் 7 அடி 3 அங்குலமாகும்.

இவர் 2009 மே 17ம் நாள் சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்து பூசா தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.



கடந்த பெப்ரவரி 22ம் நாள் கண்டகாடு புனர்வாழ்வு முகாமுக்கு இவர் மாற்றப்பட்டார்.

33 வயதான கஜேந்திரன் சாவகச்சேரியை சேர்ந்தவர். இவருக்கு தற்போது 3 வயதில் ஒரு குழுந்தையும் உள்ளது.

சிறிலங்காவின் மிக உயரமான மனிதராகக் கருதப்படும் அவர், தனது உயரத்தினால் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளதாக கூறியுள்ளார்.

“ஏனையோரைப் போல பேருந்துகளில் பயணிக்க முடியவில்லை.

சாதாரணமாக வீடுகளில் உள்ள கதவுகள் வழியாக கடந்து செல்ல முடியவில்லை. குனிந்து கொண்டே செல்ல வேண்டியுள்ளது.

உடல்நல ரீதியாகவும் இந்த உயரத்தினால் சிரமப்பட வேண்டியுள்ளது. அதிக நேரம் நிற்கவோ, நடக்கவோ, அமர்ந்திருக்கவோ முடியவில்லை.

வெளியே செல்லும் போது மற்றவர்கள் நிமிந்து பார்ப்பது சங்கடத்தை ஏற்படுத்துகிறது“ என்று அவர் கூறுகிறார்.

ஆனால், இந்த உயரம் தனக்கு சிலவேளைகளில் உதவியாக அமைவதாகவும் கஜேந்திரன் கூறியுள்ளார்.

சாதாரணமாக வீடுகளில் மின்குமிழ்களை மாற்றுவதற்குக் கூட மற்றவர்கள் உயரமான ஒரு பொருளைத்தேட வேண்டியுள்ளது.

ஆனால் தனக்கு அவ்வாறு உயரமான பொருளை வைக்காமலேயே மின்குமிழ்களை மாற்ற முடிவதாக அவர் கூறுகிறார்.

ஒரு ஆண்டுக்கு கண்டகாடு முகாமில் புனர்வாழ்வு மற்றும் தொழிற்பயிற்சியைப் பெற்ற பின்னர் இவர் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

காது கேளாதவர்களும் இனி செல்போனில் பேசலாம்.
by admin - 0

காது கேளாதவர்களும் செல்போனை பயன்படுத்துவதற்கான கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள் புதுக்கோட்டை மாணவர்கள்

காது கேளாதவர்களும் இனி செல்போனில் பேசலாம். அதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செந்தூரான் பொறியியல் கல்லூரி மாணவர்களான சிவனேஷ், வேலரசன் மற்றும் செல்வராஜ் ஆகியோர். இவர்கள் பொறியியல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இறுதி ஆண்டு பயில்கிறார்கள். மூவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் படிப்பின் இறுதி ஆண்டு புராஜெக்ட்டாக இவர்கள் கண்டறிந்துள்ள இந்தக் கருவி மூலம் மறுமுனையில் பேசுபவரின் பேச்சைத் துல்லிய மாக உணர முடிவதோடல்லாமல், நம்மைப் போலவே காது கேளாதவர் கள் பொழுதுபோக்காகப் பாடல்களைக் கேட்டும் ரசிக்கமுடியும்.

இவர்களுக்கு இந்த ஐடியா எப்படி வந்தது?

"எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருப்பவருக்கு சரியாகக் காது கேட்காது. அவருக்காக நாம் ஒரு கருவி கண்டுபிடித்தால் என்ன என்ற யோசனையின் விளைவே இந்தக் கருவி" என்கிற சிவனேஷ், "அரைமனசோட அவர் என் கருவியைப் பயன்படுத்தி செல்போன்ல பேசுனப்ப அவர் முகத்துல வெளிப்பட்ட சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை" என்கின்றபோது, சிவனேஷின் முகத்தில் சாதித்த பெருமிதம் அலையாடியது.

எப்படி இயங்குகிறது இந்தக் கருவி?

ஹெட்போன் போன்று இருக்கும் இந்தக் கருவியில் பிரத்யேகமாக இணைக்கப்பட்டிருக்கும் மோட்டாரில்தான் இருக்கிறது சங்கதி. ஹெட்போனை மொபைலுடன் இணைத்துப் பேசும்போது மோட்டாரின் அதிர்வினைப் பயன்படுத்தி மறுமுனையில் பேசுபவரின் பேச்சைக் கேட்க முடியும் என்பதே இதன் செயல்பாடு.

"பொதுவாகவே மூக்கு, தொண்டை, காது போன்றவை ஒரே நரம்பால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. இதனால், இவை எல்லாவற்றையும் இணைக்கும் பாலமான பல் இதற்கு உதவி செய்கிறது. ஹெட்போனில் இருக்கும் நீண்ட குச்சி போன்ற அமைப்பு பேசும்போது, தொடர்ந்து பல்லில் பட்டு அதிர்வினை ஏற்படுத்தி காது கேட்பவர்கள் கேட்க உதவி செய்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தால் பேசுவதைக் கேட்பதோடல் லாமல் பாடலையும் கேட்க முடியும்" என்று சிவனேஷ் தங்கள் கருவியின் செயல்பாட்டைப் பற்றி சாதாரணமாகச் சொல்லிவிட்டாலும் கருவியைக் கண்டுபிடிக்கவே 2,500 ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்.

பேட்டரி மூலம் இயங்கும் இந்தக் கருவியை எந்த செல்போனோடு வேண்டுமானாலும் இணைத்துப் பயன்படுத்த முடியும். தற்பொழுது பேடண்ட் வாங்க முயற்சித்து வருகிறார்கள். அது கிடைத்து, தொழிற் சாலையில் தயாரிக்கத் துவங்கி விட்டால் குறைவான விலைக்கே வழங்க முடியும் என்கிறார்கள்.

இவர்களின் செயலை பாராட்டுவோம்....





Read More

June 19, 2012

காக்க வைத்த அஜீத்! கை கொடுத்த சூர்யா!
by admin - 0

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிப்பதாக இருந்த ‘துப்பறியும் ஆனந்தன்’ படத்தில் சூர்யா நடிக்கிறார். ‘துப்பறியும் ஆனந்தன்’ படத்தின் கதை இரண்டு வருடங்களுக்கு முன்னரே கௌதம் மேனனால் எழுதப்பட்டது. அந்தக் கதையில் அஜீத் நடிப்பார் என அப்போது எதிர்பார்க்கப்பட்டது.

அஜீத்திடம் இந்தக் கதையை சொன்ன கௌதம் மேனன், அவர் நிச்சயம் சம்மதிப்பார் என எதிர்ப்பார்த்தார். ஆனால் அஜீத் எந்த பதிலும் சொல்லவில்லை. பொருமை இழந்த கௌதம் மேனன், அஜீத்துக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு சூர்யா இருக்கிறார்! என்று பேட்டி அளித்தார்.





பின்னர் கௌதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. துப்பறியும் ஆனந்தன் கதையில் தான் விஜய் நடிக்கிறார் என்று நினைத்த நேரத்தில், அது வேறு கதை, இது வேறு கதை என்று சொன்னார் கௌதம் மேனன்.

இப்போது மீண்டும் துப்பறியும் ஆனந்த் கதையை கையில் எடுத்திருக்கிறார் கௌதம். அதில் சூர்யா நடிக்கிறார் என்று உறுதியான தகவலை வெளியிட்டிருக்கிறார். இளையராஜா இசையமைத்து கௌதம் மேனன் இயக்கும் நீதானே என் பொன்வசந்தம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.



அதன் பிறகு விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார் கௌதம் மேனன். விஜய் நடிக்கும் யோஹன் அத்தியாயம்-1 படத்தை முடித்த பின், துப்பறியும் ஆனந்த் படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் 2013ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதைப்பற்றி பேட்டியளித்த சூர்யா, கௌதம் மேனனும் நானும் சேர்ந்தாலே எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கும். அதே போல இந்தப் படத்திலும் காதல், அதிரடிக் காட்சிகள், அபாரமான பாடல்கள் என எல்லாமே இருக்கும், என்றார்.

கௌதம் மேனன் பேசும் போது, இந்தப் படத்தில் சூர்யா நடிக்க முன் வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இது ஒரு அதிரடியான படம் தான், அதே சமயம் சரித்திர கால படத்தின் சாயலும் இதில் இருக்கும் என்றார்.

இதற்கு முன்பு அஜீத் நடிக்க வேண்டிய நேருக்கு நேர், கஜினி போன்ற படங்களில் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்கள் சூர்யாவுக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுத்தாலும், அஜீத்துக்கான மாஸ் இன்னும் அப்படியே இருக்கிறது என்பதற்கு அவர் ரசிகர்கள் சாட்சி!


Read More

கிலானியின் பதவியை பறித்தது உயர் நீதிமன்றம்: பாகிஸ்தானில் பரபரப்பு _
by admin - 0

பாகிஸ்தானில் யூசுப் ரஸா கிலானி பிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துள்ளதாக அந்நாட்டின் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ஆஸிப் அலி சர்தாரிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்குகளை மீண்டும் விசாரிப்பதற்கு மறுத்ததன் மூலம் நீதிமன்றத்தை கிலானி அவமதித்தார் என உச்சநீதிமன்றம் இரண்டு மாதங்கள் முன்பு அறிவித்திருந்தது.

மேலும் அவருக்கு நீதிமன்றத்தில் சிறிது நேரம் நின்றுகொண்டிருக்கும்படி தண்டனையும் வழங்கியது.

இதன் படி ஏப்ரல் 26ஆம் தேதி முதல் அவர் பிரதமர் பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்படுவதாக 3 நீதிபதிகள் கொண்ட குழு தீர்ப்பளித்துள்ளது.

கிலானியின் எம்.பி. பதவியை சபாநாயகர் பறிக்கவேண்டும் என பாகிஸ்தான் அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்த விவகாரம் பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் மக்களவையில் எதிரொலித்தது. இதற்கு பதிலளித்த சபாநாயகர் பெஞ்மிதா மிர்ஷா, 'பிரதமர் கிலானியின் எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை’ என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளான கிலானி பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர், எனவே அவரது பதவி பறிக்கப்பட வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது. மேலும் கிலானி நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியில் நீடிக்கலாம் என சபாநாயகர் அளித்த தீர்ப்பையும் இரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இத்தீர்ப்பானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ___
Read More

யானை உருவில் பிறந்த குழந்தை !video
by admin - 0

அதேபோல பெண் ஒருவரின் உடலெங்கும் அதிக உரோமங்கள்
வளர்வது கண்டு அதிர்ச்சி உற்றுள்ள உலகம் .
முதல்ல காணொளி பாருங்க !

Read More

அஜீத்துக்கு சிறந்த வில்லன் விருது!
by admin - 0



மங்காத்தா படத்தில் நடித்ததற்காக அஜீத்துக்கு சிறந்த வில்லன் விருதினை வழங்கியுள்ளது விஜய் டிவி.

விஜய் டி.வி. சார்பில் ஆண்டு தோறும் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 2011-ம் ஆண்டுக்கான விருதுக்குரிய நட்சத்திரங்கள் மற்றும் படங்களை ரசிகர்கள் தேர்வு செய்தனர்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யூகிசேது, நடிகைகள் நதியா, லிசி, ஒளிப்பதிவாளர் ரத்தினவேல் ஆகியோர் நடுவர்களாக இருந்தார்கள். 143 படங்களில் இருந்து 34 விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.

விருது வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.

சிறந்த நடிகருக்கான விருது தெய்வத் திருமகள் படத்தில் நடித்ததற்காக விக்ரமுக்கு வழங்கப்பட்டது. இயக்குனர் பிரபுதேவா இவ்விருதை வழங்கினார். சிறந்த நடிகைக்கான விருதை எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தமைக்காக அஞ்சலி பெற்றார். சிம்ரன் இவ்விருதை வழங்கினார்.

சிறந்த திரைப்படத்துக்கான விருது எங்கேயும் எப்போதும் படத்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த காமெடி நடிகர் விருதை சந்தானம் பெற்றார். பிடித்தமான நாயகன் விருது அஜீத்துக்கும், பிடித்தமான நடிகை விருது அனுஷ்காவுக்கும் வழங்கப்பட்டன.

சிறந்த பொழுதுபோக்கு நடிகருக்கான விருதை தனுஷ் பெற்றார். பிடித்த படத்துக்கான விருது 'கோ'வுக்கு வழங்கப்பட்டது. கோவை சரளா சிறந்த காமெடி நடிகைக்கான விருதை பெற்றார்.

சிறந்த இயக்குநர் விருது வெற்றி மாறனுக்கும் சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி.பிரகாசுக்கும் வழங்கப்பட்டன. சரத்குமார், உமா ரியாஸ் ஆகியோரும் சிறப்பு விருது பெற்றார்கள். சிறந்த பாடலாசிரியர் விருது வைரமுத்துக்கும், செவாலியே சிவாஜி கணேசன் விருது பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் வழங்கப்பட்டன.

விழாவில் கமலின் விஸ்வரூபம் படம் டிரெய்லர் வெளியிடப்பட்டது.



Read More

அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by admin - 0

இணையத்தில் ஏராளமான பயன்படக்கூடிய தளங்கள் இருந்தாலும் இலவசமானதும்,சிக்கல் அற்ற இலகுவானதுமான தளங்களை காண்பது மிக கடினம்.நிங்கள் சிலவேளைகளில் அறிந்திருக்காத ஆனால் அறிந்து இருக்கவேண்டிய ஒன்பது தளங்களை கீழே பார்ப்போம்.

1 . http://www.printwhatyoulike.com/

நீங்கள் சில வலைப்பக்கங்களை பிரிண்ட் எடுக்க வேண்டி வரும். அப்படியான சந்தர்ப்பங்களில் உங்களுக்கு தேவையான விஷயங்கள் மட்டு மன்றி உங்களுக்கு தேவையற்ற அப்பக்கத்தில் உள்ள விளம்பரங்கள், வெற்று இடம் என்பனவும் பிரிண்ட் ஆகும்.ஆனால் சில செக்கன்களில்(SECTION) உங்களுக்கு வேண்டியதை மட்டும் பிரிண்ட் பண்ணி எடுத்துக் கொள்ள ஏற்றவாறு அந்த பக்கத்தை மாற்றி உங்களுக்கு இந்த தளம் உதவி செய்யும்.

2 . http://www.alertful.com/

உங்களுக்கு வேண்டிய ஒன்றை நினைவூட்ட வேண்டுமா?உதாரணமாக ஒருவரின் பிறந்த நாள்.நீங்கள் செய்ய வேண்டியது இது தான். இந்த தளத்துக்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டிய விபரத்தையும் வழங்கினீர்கள் என்றால் அது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எப்போது உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டுமோ அந்த நேரம் நினைவூட்டலை வழங்கும்

3 . http://www.pdfunlock.com/

சில PDF files களை நீங்கள் பார்த்தால் சில கட்டுப்பாடுகள் கொண்டதாக இருக்கும்.உதாரணமாக கொப்பி, பிரிண்ட், எடிட் பண்ண முடியாதிருக்கும் .கவலையை விடுங்கள் இந்த தளத்துக்கு சென்று குறித்த PDF file ஐ கொடுத்தால் எல்லா கட்டுப்பாடுகளையும் உடைத்து உங்களுக்கு விரும் பியவாறு அதாவது உங்கள் கோப்பு போன்று எப்படி வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம்.

4 . http://www.daileez.com/

இது ஒரு நினைவுக்குறிப்பு போன்றது.அதாவது இன்றைய நாள் முடிவில் நீங்கள் செய்ததை டயரி இல் எழுதுவீர்கள். அதை ஒரு ஒரு சின்னமாக அதாவது Icon ஆக காட்டினால் எப்படி இருக்கும். இத்தளம் மூலம் அதை நீங்கள் செய்து கொள்ள முடியும்.உங்கள் செயலை நீங்கள் எழுத நினைப் பதை காட்டக்கூடிய அந்த Icon இக்கு விரும்பினால் ஒரு சிறிய விளக் கத்தையும் சேர்த்துக்கொள்ள முடியும்

5 . http://isitraining.in/

இந்த கணம் ஒரு குறிப்பிட்ட நகரம்(பெரிய) ஒன்றில் மழை பெய்கிறதா என நீங்கள் கண்டு பிடிக்க வேண்டுமா.இந்த தளத்துக்கு சென்று அந்நகரத்தின் பெயரை வழங்கினால் நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல நீங்கள் வழங்கிய நகரத்தின் இக்கண weather conditions களையும் அறிந்து கொள்ள முடியும். இந்த தளம் உலக வானிலை அறிக்கையே உங்கள் காலடியில் கொண்டு வந்து சேர்க்கும்.

6 . http://www.typingweb.com/

இது ஒரு ஆன்லைன் தட்டச்சு பயிற்சி வழங்கும் இலவச தளமாகும். பலவகை திறன் மட்டங்களை கொண்டவர்களுக்கும் வெவ்வேறு மட்டங் களில் பயற்சி வழங்கக்கூடிய தளமாக இது அமைந்தது உள்ளது.இன்றைய யுகத்தில் விரைவான டைப்பிங் திறமையும் பல வேலைவாய்ப்புகளை தீர்மானிக்கும் ஒரு தகுதியாக இருப்பதால் இத்தளம் நிச்சயம் அப்படிபட்ட வர்களுக்கு ஒரு நல்ல ஒரு வாய்ப்பாக அமைகிறது.

7 . http://www.gedoo.com/

இந்த தளம் ஒரு தேடல் தளமாக அதாவது கூகுல் போன்று உங்களுக்கு விரும்பிய ஒன்றை பற்றி தேடு தளமாக உள்ளது.நீங்கள் ஒன்றை பற்றி தேடினால் அது தானாக கூகுல் இல்ருந்து தேடி தரும். ஆனால் நிங்கள் 4300 தேடு தளங்களில் ஒன்றை தெரிவு செய்து அதிலிருந்து தேடி தருமாறு செய்யலாம்.இந்த தளம் 4300 தேடு தளங்களில் உங்களுக்கு பிடித்ததில் தேடி தரும். அதவாது புரோக்கர் போல.ஹிஹிஹி

8 . http://www.cvmaker.in/

வேலை ஒன்றுக்கு அப்ளை பண்ணும் பொது தரமான Cv ஒன்றை ரெடி பண்ணுவது மிக முக்கியம்.எல்லா தகவல்கள் தகமைகள் இருந்தும் அதை எப்படி வடிவமைப்பது என மூளையை கசக்கி பிழிந்து கொண்டு இருப் பீர்கள்.இக்கவலை போக்க இத்தளம் உதவி செய்கிறது.சில நிமிடங்களில் ஒரு அழகான professional ஆன Cv ஐ ரெடி பண்ணி கையில் தரும்.

9 . http://www.zoom.it/

இணையதளங்களில் உள்ள சில படங்கள் குறிப்பாக google search படங்களின் URL இனை இந்த தளத்துக்கு வழங்கினால் நீங்கள் வழங்கிய படத்தை மிக மிக தரமான ஒரு படமாக மாற்றி தரும்.அது மட்டுமல்ல மாற்றப்பட்ட படத்துக்குரிய ஒரு url முகவரியையும் தரும் . நீங்கள் அதை பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே ஒரு சாதாரணமான படத்தை மாறுப்பட்ட ஒரு அனுபவத்தை தரும் படமாக மாற்றும்

Read More

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட மனசாட்சி இடம்கொடுக்கலை: அப்துல்கலாம்
by admin - 0

நாட்டின் 13-வது குடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிட விரும்பவில்லை என்று முனனள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய அரசியல் சூழ்நிலைகளின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தமது மனசாட்சி இடம் கொடுக்க வில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் தாம் போட்டியிட விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கலாம் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்துல்கலாம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று கலாமிடம் 3 முறை தொலைபேசியில் பேசியிருந்தார். மமதா பானர்ஜியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தார். பாஜகவின் குல்கர்னி நேரில் சென்று கலாமை சந்தித்துப் பேசினார்.

இருப்பினும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருமித்து கலாமை ஆதரிக்காததே அவர் போட்டியிடாமல் இருக்கக் காரணம் என்று கூறப்படுகிறது.

Read More

June 18, 2012

டப்பிங் பேசிய காலம்! வியக்க வைக்கும் விக்ரம்!
by admin - 0





1990களில் தமிழ்த் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். என் காதல் கண்மணி, தந்துவிட்டேன் என்னை, மீரா போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வந்தார்.

திறமை இருந்தாலும் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் முயற்சியை அவர் கைவிடவில்லை. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டார். டெலி ஃபிலிம்களும் நடித்தார். தனக்கான அங்கீகாரத்தை இந்த திரையுலகம் ஒரு நாள் கண்டிப்பாக தரும் என்று நம்பினார், காத்திருந்தார்.

வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் காலத்தில் மற்ற ஹீரோக்களுக்கு டப்பிங் பேசினார். அப்பாஸ், பிரபுதேவா போன்ற பலருக்கும் அவர் டப்பிங் பேசி இருக்கிறார். அந்த நடிகனின் திறமையை உணர்ந்து சரியான வாய்ப்பைக் கொடுத்தார் இயக்குனர் பாலா. அந்த படம் சேது. முழு அர்ப்பணிப்போடு அந்தப் படத்தில் நடித்தார் அந்த ஹீரோ.

வெளிவர முடியாத நிலையில் இருந்த சேது படம் பல தடைகளையும் தாண்டி வெளியிடப்பட்டது, பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. தொடர்ந்து படங்கள் நடிக்க தொடங்கினார் அந்த ஹீரோ. ராசி இல்லாத ஹீரோ என்று ஒரு காலத்தில் ஒதுக்கப்பட்டவர். வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்தார். பிதாமகன் படத்தில் தன் நடிப்பால் தேசத்தையே தன் பக்கம் திருப்பினார். தேசிய விருதையும் பெற்றார்! தொடர்ந்து ஷங்கர், மணிரத்னம் படங்களில் நடித்தார்.

தமிழ் திரையுலகில் சிவாஜி கணேசன், கமல்ஹாசனுக்குப் பிறகு வித்தியாசம் என்ற பெயரை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார். அவர் தான் சீயான் விக்ரம்! 16.06.2012 அன்று 6வது விஜய் அவர்ட்ஸ் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. திரையுலகின் ஜாம்பவான்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். சிறந்த நடிகருக்கான விருது விக்ரமிற்கு வழங்கப்பட்டது. (படம் - தெய்வத்திருமகள்)

அந்த விருதை அவருக்கு வழங்கியவர் பிரபுதேவா. ஒரு காலத்தில் பிரபுதேவாவிற்கு டப்பிங் பேசியவர் தான் விக்ரம் என்ற சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. இதை அவர்கள் இருவரும் கூட உணார்ந்திருக்க கூடும். விக்ரமின் வளர்ச்சி மிக பிரம்மாண்டமானது என்பதை நாம் அந்த நேரத்தில் உணர முடிந்தது.

அதே விழாவில், சிறந்த நடிகைக்கான விருது அஞ்சலிக்கு வழங்கப்பட்டது (படம் - எங்கேயும் எப்போதும் ). ஃபேவரெட் ஹீரோ விருது அஜீத்துக்கும், ஃபேவரெட் ஹீரோயின் விருது அனுஷ்காவுக்கும் வழங்கப்பட்டது.

செவாலியர் சிவாஜி கணேசன் விருது பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு வழங்கபட்டது. கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான், பிரபு மூவரும் இணைந்து எஸ்.பி.பி.க்கு அந்த விருதை வழங்கினார்கள்.

Read More

தற்பொழுது நடந்து கொண்டு இருக்கும் புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா காட்சிகள்
by admin - 0

ஸ்ரீ புதூர் நாகதம்பிரான் ஆலயம்








கண்ணிவெடி விழிப்புணர்வு கூட








பொங்கல் உற்சவத்தையொட்டி வவுனியர், முல்லைத்தீவு, கிளிநெர்ச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலிருந்து விசேட பஸ்சேவைகள் இடம்பெற்றதினால் இலட்சக்கணக்கான பக்தர்கள் ஆலய தரிசனத்திற்கு வந்தமை சிறப்பாகவிருந்தது.

பெருமளவு பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


















Read More

12,000 ஆண்டுகளுக்கு முந்திய மனிதனின் முழுமையான எலும்புக்கூடு மீட்பு
by admin - 0




இலங்கையில் முதல் முறையாக வரலாற்றுக் காலத்துக்கு முந்திய மனிதனின் எலும்புக்கூடு முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சேனாரத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
களுத்துறை, பகியங்கல, பகீன் வளைவு தொல்பொருள் பிரதேசத்திலேயே இந்த மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வரலாறுக் காலத்துக்கு முந்திய மனிதனின் எலும்புக்கூடு முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். முன்னதாக, அம்பலாந்தோட்ட, ஹங்கமவில் வரலாற்றுக் காலத்துக்கு முந்திய மனிதனின் எலும்புத்தொகுதி கண்டுபிடிக்கப்பட்ட போதும் அது முழுமையாகனதாக இருக்கவில்லை.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடு, 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியதாக இருக்கக் கூடும் என்று கலாநிதி சேனாரத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

Read More

மலையாளப் படத்தில் நடிக்கிறார் விஜய்
by admin - 0



மலையாளத்தில் ரஜினிக்கு அடுத்து ஓரளவு வரவேற்புள்ள நடிகர் விஜய். இவரது சமீபத்திய படங்கள் சில அங்கு 50 நாட்களைத் தாண்டி ஓடியுள்ளன. வசூலும் பரவாயில்லை!

சமீபத்தில் திருவனந்தபுரம், கொச்சின் போன்ற நகரங்களில் ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டர் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

கருத்தன் என்ற மலையாளப் படத்தில் விஜய் நடிக்கப் போவதாக அந்த போஸ்டர் மூலம் தெரிந்து கொண்ட மலையாள ரசிகர்கள் உற்சாகத்துடன் விஜய்க்கு வாழ்த்து சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் படத்தை மஸ்தான் முஜீப் கான் இயக்கப் போவதாகவும், எஸ்என் சாமி திரைக்கதை வசனம் எழுதப் போவதாகவும் வேறு குறிப்பிட்டிருந்தனர்.

இது உண்மைதானா என விஜய்யின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டோம்.

அவர் கூறுகையில், "மலையாளப் படத்தில் விஜய் நடிப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. இப்போதைக்கு தமிழ்ப் படங்களில்தான் அவர் கவனம் செலுத்துகிறார். தெலுங்கு, இந்தியில் வந்த வாய்ப்புகளைக் கூட அவர் ஏற்கவில்லையே," என்றார்.

ஆனால் அடுத்த இரு ஆண்டுகளுக்குப் பின் விஜய் மலையாளத்தில் ஒரு படம் நடிக்கக்கூடும் என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்!



Read More

ஐ.நா.குழுவை அனுமதிக்க இலங்கை அரசு இணக்கம்
by admin - 0


ஐ.நா. மனித உரிமைகள் பேரவை யின் உயர்மட்டக் குழுவை நாட்டுக் குள் அனுமதிப்பதில்லை என்பதில் இறுக்கமாக இருந்த இலங்கை அரசு, அந்த நிலைப்பாட்டை தளர்த்திக் கொண்டு ஐ.நா.குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு இணக்கம் தெரிவிக் கும் என கொழும்பு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதி ரான தீர்மானம் ஒன்று அமெரிக்காவி னால் கொண்டு வரப்பட்டு நிறைவேற் றப்பட்டது.



இதற்கமைய நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறை ப்படுத்தப்படுவதை கண்காணிப்பதற் காகவும் அதற்கு உதவுவதற்காகவும் மனித உரிமைகள் பேரவையின் குழு ஒன்று இலங்கைக்கு அனுப்பி வைக் கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டி ருந்தது.

இருந்த போதிலும் அவ்வாறான குழு வொன்றை அனுமதிப்பதில்லை என்ற நிலைப்பாட்டையே இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தி வந்தது. எனினும் தற்போத சர்வதேச ரீதி யான அழுத்தங்கள் அதிகரித்து வருவ தால் இவ்விடயத்தில் சாதகமான பிர திபலிப்பை வெளிப்படுத்துவதற்கு தீர் மானித்திருப்பதாக கொழும்பு ஆங் கில வாரப் பத்திரிகை ஒன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.இது தொட ர்பில் இலங்கை அரசாங்கத்தின் பதில் இந்த வாரப் பகுதியில் ஜெனிவாவு க்கு அனுப்பி வைக்கப்படும் என தெரி விக்கப்படுகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ நாட்டில் இல்லாத நிலையிலேயே இந்தப் பதில் அனுப்பிவைக்கப்பட இருக்கி றது. மகிந்த ராஜபக்­ கியூபா மற்றும பிரேசில்ஆகிய நாடுகளுக்கான பய ணமொன்றை தற்போது மேற்கொண் டிருக்கிறார். எதிர்வரும் வெள்ளிக்கிழ மையே அவர் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகின்றது. தமது குழு வொன்றை அனுப்பி வைப்பதற்கான கோரிக்கையை மனித உரிமைகள் பேரவை கடந்த மாதம் அனுப்பி வைத்திருந்தது. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் விஜயத்துக்கு முன்னோடியாக இந்தக் குழுவின் வருகை அமையுமென கரு தப்பட்டதால் இதனை அனுமதிப்பதி ல்லை என்ற நிலைப்பாட்டை இல ங்கை அரசாங்கம் முதலில் வெளிப்ப டுத்தியிருந்தது.

இருந்த போதிலும் சர்வதேச ரீதியா ன அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் மகிந்த ராஜபக்­ அரசுக்கு ஏற்பட்டிருப் பதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரி வித்துள்ளன.கற்றுக் கொண்ட பாடங் கள் மற்றும நல்லிணக்க ஆணைக்கு ழுவின் பரிந்துரைகளை நடைமுறை ப்படுத்துவதற்கு ஐ.நா. மனித உரி கைள் பேரவையுடன் இணைந்து செயற்பாட முன்வரவேண்டும் என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் சில தினங்களுக்கு முன்னர் தான் இலங்கை அரசாங்கத்தை கோர யிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Read More

வரட்சி காலநிலை தொடர்ந்தால் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்: மின்சாரசபை நிர்வாகம் எச்சரிக்கை
by admin - 0

நாட்டில் தொடர்ந்தும் வரட்சியான காலநிலை நீடித்தால் மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என இலங்கை மின்சாரசபை நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் நிலவும் மிக மோசமான வரட்சிக் காலநிலை தற்போது நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீர் மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் நாள் ஒன்றுக்கு எட்டு மணித்தியாலயம் மின் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

நீர் மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி வீழ்ச்சியினால், அனல் மின்நிலையங்களின் உற்பத்தியை அதிகரிக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு மின் அலகிலும் மின்சார சபைக்கு 5.88 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Read More

கார்த்திக்காக சகுனியில் காமெடி பீசான அனுஷ்கா
by admin - 0



கார்த்தி கேட்டுக் கொண்டதால் அவரது சகுனி படத்தில் அனுஷ்கா காமெடி போலீசாக வருகிறார்.

கார்த்தி, பிரணீதா நடித்துள்ள படம் சகுனி. இது தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது. புது முகம் சங்கர் தயால் இயக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சூர்யாவுக்கு எப்படி கஜினி அமைந்ததோ அது போன்று கார்த்திக்கு சகுனி அமையும் என்று கூறப்படுகிறது. சகுனு வரும் 22ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

இந்த படத்தில் அனுஷ்கா கெஸ்ட் ரோலில் காமெடி போலீசாக வருகிறாராம். அனுஷ்கா கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அவர்கள் நல்ல நண்பர்களாகிவிட்டார்களாம். இதையடுத்து கார்த்தி தனது சகுனி படத்தில் கெஸ்ட் ரோலில் வருமாறு அனுஷ்காவை கேட்டுள்ளார். அவரும் உடனே ஒப்புக் கொண்டுள்ளார்.

படத்தில் அனுஷ்கா, சந்தானம், கார்த்தி ஆகியோருடன் சேர்ந்து காமெடி செய்துள்ளராம். அனுஷ்கா வரும் காட்சிகளில் அரங்கம் அதிரும் என்று கூறப்படுகிறது. படத்தில் அவர் வரும் காட்சிகள் பெரிதும் பேசப்படுமாம். கவர்ச்சியில் ரசிகர்களை திக்குமுக்காடச் செய்த அனுஷ்கா தற்போது காமெடி சீன்களில் வந்து ரசிகர்களை சிரிக்க வைக்கப்போகிறார்.

அனுஷ்காவுக்கு காமெடி கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Read More

June 17, 2012

ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
by admin - 0

ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
கோச்சடையான் படப்பிடிப்பில் தான் நடிக்க வேண்டிய காட்சிகளை நடித்து முடித்துவிட்டு வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ரஜினி இன்று(16.06.12) காலை கலைஞரை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் பேட்டியளித்த ரஜினி “கலைஞரின் பிறந்த நாளின்போது நான் பெங்களூரில் இருந்தேன். நேற்றுதான் சென்னை வந்தேன். இன்று காலை அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல நேரில் சந்தித்தேன். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று கூறினார்.

கோச்சடையான் படப்பிடிப்பிற்காக லண்டன், நியூயார்க் என வெளிநாடுகளுக்குச் சென்ற ரஜினிகாந்த் சமீபத்தில் தான் சென்னைக்கு திரும்பினார். ரஜினியின் அடுத்த படம் என்றால் அது கோச்சடையான் தான், அதுவரை காத்திருக்க வேண்டும் என்ற நினைப்பில் இருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்துள்ளது ரஜினி நடித்த “எந்திரன்” படம். இப்போது எந்திரன் பற்றி என்ன செய்தி என்று புருவத்தை உயர்த்தாமல் மேலே படியுங்கள்.

ஜப்பானில் ரஜினிக்கு அதிக ரசிகர்கள் இருப்பதும், முத்து படம் முதல் எந்திரன் வரை ரஜினி படங்களுக்கு ஜப்பானில் அமோக வரவேற்பு இருப்பதும் அனைவரும் அறிந்ததே. இப்போது ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு, ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது ரஜினியின் எந்திரன்.

உலகத்திலேயே ரோபோக்கள் அதிகமாக உருவாகும் நாடான ஜப்பானில் எந்திரன் படம் 1300 அரங்குகளில் வெளியிடப்பட்டு வெற்றிகரமான ஹவுஸ்புல் காட்சிகளாக ஜப்பானை கலக்கிவருகிறது. முதலில் இரண்டு மணி நேர படமாக சில விழாக்களிலும் நிகழ்ச்சிகளிலும் திரையிடப்பட்ட எந்திரன் பெற்ற அமோக வரவேற்பால் மூன்று மணி நேர படமாக திரையரங்குகளில் திரையிடத் துவங்கியுள்ளனர்.



ஜப்பான் நாட்டில் அதிகமான விஞ்ஞானிகள் ரோபோ தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அழிவை உண்டாக்கக்கூடிய ஒரு ரோபோ தயாரிக்கப்பட்டாலும் அது நாட்டிற்கு எவ்வளவு பெரிய அச்சுருத்தலாக இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் எந்திரன் படம் இருப்பதால் ஜப்பானில் அமோக வரவேற்பு என்கின்றனர். கெட்ட ரோபோ கேரக்டரில் ரஜினி ‘மே...!’ எனச் சொல்லும் வசனமும், ’இரும்பிலே ஒரு இதயம்’ எனும் பாடலும் ரசிகர்கள் முணுமுணுத்தபடி இருக்கிறார்களாம்.



Read More

இந்திய விடுதலைப்போராட்டத்தைவிட 100 மடங்கு பெரியது இலங்கை ஈழ விடுதலை போராட்டம்: காசிஆனந்தன்
by admin - 0

இந்திய விடுதலைப்போராட்டத்தைவிட 100 மடங்கு பெரியது இலங்கை ஈழ விடுதலை போராட்டம் என்று புத்தக வெளியீட்டு விழாவில் காசி ஆனந்தன் பேசினார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி பேசிய அவர்,

இந்திய சுதந்திர போராட்டத்தைவிட தமிழீழத்திற்கானது பெரிய போராட்டம் ஆகும். சுபாஷ் சந்திரபோஸ் தான் எனக்கு வழிகாட்டி என்று பிரபாகரன் கூறியிருக்கிறார். இந்திய விடுதலைப்போராட்டத்தைவிட 100 மடங்கு பெரியது இலங்கை ஈழ விடுதலை போராட்டம்.

இந்திய போரில் சுமார் 30,000 பேர் இறந்துஇருப்பார்கள். ஆனால் ஈழ மண்ணில் நடந்த போரில் மூன்று லட்சத்திற்கு மேல் இறந்துள்ளனர். அப்போது விமானத்தில் வந்து யாரும் குண்டுகள் போடவில்லை. இப்போது அப்படியில்லை, அதிகமாக தமிழர்கள் வாழ்ந்த பூமியில் அதிகமான அளவில் குண்டு போட்டு சாகடித்துள்ளனர். அந்த போரில் யாரும் விதவையாக்கப்படவில்லை. மாறாக இலங்கையில் 89,000 பெண்கள் விதவையாக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 60,000 பெண்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக்கப்பட்டுள்ளனர்.

அதே போல் காந்தியடிகளின் உண்ணாவிரத போராட்டத்தில் யாரும் இறக்கவில்லை. ஆனால் இந்த இலங்கை விடுதலை போராட்டத்தில் திலீபன் போன்றவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள். இது மிகவும் உயர்ந்த விடுதலைப் போராட்டமாகும்.

அங்குள்ளவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். நாங்கள் அவர்களைவிட உறுதியாக இருக்கிறோம். ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு, இந்த போராட்டம் தொடரும். வழக்கம்போல் உங்கள் தோள்கள், கைகள் தொடர்ந்து எங்களுக்கு கைகொடுங்கள் என்று காசி ஆனந்தன் பேசினார்.

Read More

கோலிவுட்டைக் கலக்கும் சூடான வதந்தி!
by admin - 0



கோலிவுட்டில் ஒரு செய்திதான் படு ஹாட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது வதந்தியாகத்தான் இப்போது பரபரப்பாகிக் கிடக்கிறது என்றாலும் உண்மையானதாகவும் கூறப்படுகிறது.

நல்ல கருப்பு நிறமுடைய உயரமான நடிகர் அவர். தற்போதைய இளம் ஹீரோக்களில் நல்ல டிமாண்ட் உடையவர். அதிரடி படங்களிலும், அட்டகாசமான கெட்டப் சேஞ்சிலுமாக கலக்கியவர். முத்திரை இயக்குநரின் 'டபுள் ஹீரோ' படத்தில் வித்தியாசமான 'கெட்டப்பில்' கலக்கலாக நடித்தவர்.

இவருக்கும், முக்கியமான சீனியர் நடிகரின் முதல் மனைவியின் மகளுக்கும் இடையே காதல் பற்றிக் கொண்டிருக்கிறதாம். இதுதான் கோலிவுட்டில் இப்போது படு ஹாட்டாக பேசப்படுகிறது.

இந்த செய்தியால் அந்த சீனியர் நடிகர் படு கோபமாக இருக்கிறாராம். அவரே ஒரு 'பஞ்சாயத்து'ப் பேசும் நடிகர், அவரது வீட்டுக்கே பஞ்சாயத்து வந்து விட்டதே என்று சீனியர் நடிகரின் சுற்றத்தார் டென்ஷனாகிக் கிடக்கிறார்களாம்.

இளம் நடிகரைப் பாய்ந்து கடித்துக் குதறி விடுவது என்று கோபத்தில் கொந்தளித்த நடிகரை, அவரது 2வது மனைவிதான் தடுத்து நிறுத்தி அமைதிப்படுத்தி வைத்துள்ளாராம்.

மகளையும் கண்டிக்க முடியாமல், அந்த நடிகரையும் கண்டிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் சீனியர் நடிகர், விவகாரத்தை மிகவும் கவனமாக கையாள முயற்சித்து வருவதாக கூறுகிறார்கள்.

ஏற்கனவே இந்த இளம் நடிகரின் குடும்பத்தார் மீது படத் தயாரிப்பு தொடர்பாக சீனியர் நடிகரின் 2வது மனைவி பஞ்சாயத்துக் கிளப்பியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். எனவே, இளம் நடிகர், சீனியர் நடிகரின் மகளுடன் நட்பு பாராட்டுவது பழி வாங்கும் படலமா என்ற சந்தேகப் பார்வையும் கோலிவுட்டில் எழுந்துள்ளதாம்.

ஆனால் இதைப் பற்றி இளம் நடிகர் கவலையேபடவில்லையாம். அதேபோல சீனியர் நடிகரின் மகளும் கவலைப்படவில்லையாம். இருவரும் சேர்ந்து இப்போது ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்கள் என்பதுதான் இந்த செய்தியின் ஹைலைட்டாகும்.

Read More

June 16, 2012

ஹம்பாந்தோட்டை ஜேவிபி கூட்டத்தில் துப்பாக்கிச்சூடு இருவர் பலி
by admin - 0

ஹம்பாந்தோட்டை - கட்டுவன பகுதியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணி கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (15) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அத தெரணவிடம் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் ஆயுதம் தாங்கிய குழுவே இத்தாக்குதலை நடத்தியதாக அவர் குற்றம் சுமத்தினார்.

Read More

June 15, 2012

புதுக்கோட்டையில் ஆளும் அ.தி.மு.க.,‌‌வெற்றி !; டெபாசிட்டை தக்க வைத்தது தே.மு.தி.க.,
by admin - 0

புதுக்கோட்டை இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடந்தது. 23 வது இறுதிச்சுற்றின்படி அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திக்தொண்டைமான் 71 ஆயிரத்து 498 வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மொத்தம் பதிவான ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 277 ஓட்டுகளில், அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் ஒரு லட்சத்து 1, 998 ஓட்டுகள் பெற்றார். அவருக்கு அடுத்து தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர் உசேன் 30 ஆயிரத்து 500 ஓட்டுகள் பெற்றார். இதன்மூலம் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 71 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் அ‌மோக வெற்றி பெற்றார். மொத்தம் பதிவான ஓட்டுக்களில் 6 ல் ஒரு மடங்கு பெற்று தே.மு.தி.க., தனது டெபாசிட் தொகையை தக்க வைத்தது.

புதுக்கோட்டை எம்.எல்.ஏ., முத்துக்குமரன் சாலை விபத்தில் இறந்ததைத் தொடர்ந்து, அங்கு 12ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளரை அறிவித்து, பிரசாரத்தை அ.தி.மு.க., துவங்கியது. தி.மு.க., - காங்கிரஸ் - ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. எதிர்க்கட்சியான தே.மு.தி.க., நீண்ட ஆலோசனைக்குப் பின், வேட்பாளரை களமிறக்கியது.
தீவிர பிரசாரம்: இதனால், அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. 32 அமைச்சர்கள் உட்பட 52 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து, அ.தி.மு.க., பிரசாரம் மேற்கொண்டது. முதல்வர் ஜெயலலிதா ஒருநாள் பிரசாரம் மேற்கொண்டார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் புதுக்கோட்டையில் முகாமிட்டு பிரசாரம் செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தே.மு.தி.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டது. பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் இன்றி நடந்து முடிந்த இடைத்தேர்தலில், 1 லட்சத்து 47 ஆயிரத்து 277 பேர் ஓட்டளித்தனர்.

வீடியோ கேமரா கண்காணிப்பு: ஓட்டு எண்ணிக்கை, வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. இதற்காக ஓட்டு எண்ணிக்கை அறைக்குள், ஐந்து வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டன.
Read More

தடகள வீராங்கனை பிங்கி ஆணா..?: கற்பழித்து விட்டதாக பெண் புகார்- கைது!
by admin - 0

ஆசிய கோப்பை தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரான பிங்கி பிரமனிக் என்ற வீராங்கனையை போலீஸார் கற்பழிப்பு வழக்கில் கைது செய்துள்ளனர். அவர் உண்மையில் ஆண் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் பிங்கியைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

2006ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4×400 தொடர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம் பெற்றிருந்தவர் பிங்கி. அதேபோல அதே ஆண்டு மெல்போர்னில் நடந்த காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்றார். 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் பிங்கி மீது மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பகுய்ஹாத்தி காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார் கொடுத்தார். அதில், தன்னை பிங்கி கற்பழித்து விட்டதாகவும், அவர் ஆண் என்றும், தானும், பிங்கியும் சில மாதங்களாக பழகி வருவதாகவும், தன்னை கல்யாணம் செய்து கொள்ள பிங்கி மறுப்பதாகவும் கூறியிருந்தார்.

இதையடுத்து பிங்கியைப் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவர் ஆண் என்பது தெரிய வந்ததாக போலீஸார் கூறுகிறார்கள். இதையடுத்து அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு பரிசோதனையை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அது முடிந்ததும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

வீராங்கனை பிங்கி ஆண் என்றும், அவர் ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டார் என்றும் வெளியாகியுள்ள தகவலால் மேற்கு வங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read More

வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தனி ஈழத்தை தாரைவார்ப்பதற்குச் சமனான செயலாகும்.
by admin - 0

வடக்குத் தேர்தலை நடத்துவது தனி ஈழத்தைத் தாரைவார்ப்பதற்குச் சமனான செயலாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபைத் தேர்தல் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தனி ஈழத்தை அமைப்பதற்கே சர்வதேசம் வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற ஒரு பொறியைப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது. எனவே அந்த பொறியில் அரசு சிக்கக்கூடாது.

13வது அரசமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படும். அது பின்னர், பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். அதனால்தான் அதனை ரத்துச் செய்யுமாறு நாம் கோருகின்றோம்.

வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அதன் அதிகாரங்கள் தீயசக்திகளிடம் செல்லும் அந்த சக்திகளைப் பயன்படுத்தி புலி ஆதரவாளர்களுடன் இணைந்து தனி ஈழத்தைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிப்பர்.

எனவே, வடக்கு மாகாண சபைத் தேர்தலை தற்போதைய சூழ்நிலையில் அரசு நடத்தக்கூடாது, வடக்குத் தேர்தல் என்ற பேச்சுக்கே இடமளிக்க கூடாது.

வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தனி ஈழத்தை தாரைவார்ப்பதற்குச் சமனான செயலாகும். எனவே, அரசு இந்த விடயத்தில் சிந்தித்துச் செயற்படவேண்டும்.

தேசத்துரோகமான நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் சம்பந்தனுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி சட்டமா அதிபருக்கும், சபாநாயகருக்கும் நான் கடிதம் அனுப்பவுள்ளேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

நமீதாவுக்கு பாட்டி சொன்ன விளக்கம்
by admin - 0

நடிகை நமீதாவுக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் இல்லாத காரணத்தால் தனது பிசினஸ் பணிகளில் தீவிரமாக இருந்து வருகிறார். எப்படியும் கட்டுமானத் துறையில் பெரிய அளவில் வந்துவிடவேண்டும் என முழுமூச்சுடன் இறங்கிய நமீதாவிற்கு மூச்சுவிடமுடியாத அளவிற்கு நெருக்கடி ஏற்பட்டதால் மீண்டும் சினிமா நிகழ்ச்சிகளில் தலைகாட்ட துவங்கினார்.



எப்படியாவது மறுபடியும் பழைய மார்கெட்டை பிடித்துவிட வேண்டும் என்று நினைத்த நமீதா செயலில் இறங்கியதன் விளைவு தான் பெரும்பாலான பார்ட்டிகளிலும், நிகழ்ச்சிகளிலும் எடுக்கப்பட்ட ஃபோட்டோக்களில் நமீதாவின் முகம் பளிச்சென பதிந்திருந்தது. பல கிராமங்களில் நமிதாவே இன்னும் கவர்ச்சிக்கன்னியாக இருந்தாலும் தனது வரவை கோடம்பாக்கத்தில் பதிய வைக்க வேண்டும் என விரும்பிய நமீதா ஒரு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிக்கொண்டிருக்கும் போது சிறிய கோவிலில் நடந்த ஒரு ஏழை குடும்பத்தின் திருமணத்தில் கலந்து கொண்டது.

அந்த திருமணத்தில் கலந்து கொண்டது பற்றி பேசிய நமீதா “நான் திடீரென அந்த திருமணத்தில் கலந்து கொண்ட போது அந்த ஏழையின் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி தெரிந்தது. அதற்காகத் தான் நான் திருமணத்திற்குச் சென்றேன்” எனக் கூறியிருந்தார்.

இந்த திருமணத்தை பற்றிய பரபரப்பான பேச்சு அடங்குவதற்குள் ’சுருட்டு’ பிடிக்கப் போகிறேன் என்று ஒரு பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறார் நமீதா. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த நமீதா வீதியில் ஒரு பாட்டி சுருட்டு பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்து வண்டியை நிறுத்த சொல்லியிருக்கிறார். அந்த பாட்டியிடம் சென்ற நமீதா “ இது என்னது பாட்டி. சிகிரெட் மாதிரி இல்லையே இவ்ளோ பெரிசா இருக்கு” என்று கேட்டிருக்கிறார்.

அந்த பாட்டி ”இது சுருட்டுமா. வேணும்னா புடிச்சி பாக்குறியா” எனக் கேட்க, அதற்குள் நமீதாவின் உதவியாளர் அது ’சிகார்’ மேடம் என நமீதாவிற்கு புரிவது போல் கூறியுள்ளார். விவரம் அறிந்த நமீதா பாட்டியிடம் விடைபெற்றுக் கொண்டு அந்த இடத்திலிருந்து கிளம்பியிருக்கிறார். ’எப்படியும் சிகார் பிடித்துவிடுவேன்’ என நமீதா சபதம் செய்தாராம். சபதத்தை நிறைவேற்ற நமீதா புகைத்தாரோ இல்லையோ இந்த செய்தி கோடம்பாக்கத்தில் புகைய ஆரம்பித்துவிட்டது.

Read More

விஜய் தன் தவறை உணரும் காலம் வரும்! சீமான் அதிரடி
by admin - 0

ஈழத்தில் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை கண்டித்து இயக்குனர் சீமான் அரசியல் பொதுக்கூட்டங்களில் பலரையும் கடுமையாக விமர்சித்து பேசி வந்தார். மத்திய அரசை விமர்சித்ததற்காக இயக்குனர்கள் அமீரும், சீமானும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

அதன் பிறகு இயக்குனர் சீமான் அரசியல் கட்சி துவங்கினார். அந்த நேரத்தில் சீமானின் பேச்சு அரசியல் களத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது என்பதென்னவோ உண்மைதான்.

அந்த நேரம், நடிகர் விஜய்யும் ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யக் கோரி தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுக-வை ஆதரிக்கும் முடிவை எடுத்தது. விஜய்யின் இந்த முடிவும் அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்த தவறவில்லை. இந்த சமயத்தில் விஜய்யும் சீமானும் இணைந்து படம் எடுப்பதைப் பற்றி திட்டமிட்டார்கள்.

விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டப்படிக் குற்றம் படத்தில் சீமானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் சீமான் விஜய்யை வைத்து படம் இயக்குவார் என உருதியாக பேசப்பட்டது.

பகலவன் என தலைப்பிடப்பட்ட அந்த படத்தில் பல அரசியல் விஷயங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கலைப்புலி எஸ்.தாணு படத்தை தயாரிக்க சம்மதித்தார். ஆனால் தேர்தலுக்கு பிறகு முதலமைச்சருக்கு பாராட்டு விழாக்கள் வைப்பதில் பிஸியாகிவிட்டார் சீமான். விஜய்யும் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன் என அடுத்தடுத்த படங்களில் பிஸியானார்.

கிடப்பில் இருந்த பகலவன் படத்தை பற்றி சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் சீமான்,“ தண்ணீரால் நனைய வேண்டிய பூமி கண்ணீராலும் ரத்தத்தாலும் நனைகிறது. மக்கள் அனுபவிக்கும் துயரங்களை அடிப்படையாகக்கொண்டு தான் நான் பகலவன் கதையை எழுதினேன்.

நடிகர் விஜய் நடிப்பதாக இருந்த இந்த படத்தில் இபோது அவர் நடிக்கவில்லை. ஏன் பின்வாங்கினார் என்ற காரணமும் சொல்லவில்லை. நடிகர் ஜீவாவிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். அவர் கண்டிப்பாக நடிப்பார். படம் வெளியாகும் போது, இந்தப் படத்தை தவறவிட்டது தவறு என்பதை தவறவிட்டவர்கள் உணர்வார்கள்” என்று கூறியுள்ளார்.

Read More

மூத்த நடிகர் காகா ராதாகிருஷ்ணன் மரணம்!
by admin - 0



நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் நேற்று மாரடைப்பால் காலமானார்.

இவருக்கு கடந்த சில மாதங்களாக மூச்சுத்திணறல் இருந்தது. அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் ஓரளவு குணம் அடைந்து வீடு திரும்பினார்.

இருப்பினும் நேற்று மாலை மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாலை 3-30 மணிக்கு மரணம் அடைந்தார்.

காகா ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் 6 வயதில் இருந்து நாடகத்தில் நடித்தவர். நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் நாடகக்குழுவில் நீண்ட காலம் நடித்தார்.

மங்கையர்க்கரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் நடித்தபோது ஒருமரத்தில் ஏறி காக்கா பிடித்தவாறு நடித்திருந்தார். அதில் இருந்து அவர் `காகா ராதாகிருஷ்ணன்' என்று அழைக்கப்பட்டார்.

இதுவரை 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜியுடன் நடித்த மனோகரா, கமலுடன் நடித்த குணா, தேவர்மகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அஜீத்துடன் நடித்த உன்னைத்தேடி, விஜய்யுடன் நடித்த காதலுக்கு மரியாதை ஆகியவை அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தகுந்தவை.

மாயி படத்தில் அவரும் வடிவேலுவும் நடித்த காமெடி காட்சிகள் மிகவும் பேசப்பட்டவை.

அவரது சொந்த ஊர் திண்டுக்கல். ஆனால் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில்தான் வளர்ந்தார்.

இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் விசாலாட்சி. இவருக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். 2-வது மனைவி பெயர் சாரதாம்பாள். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். 16 பேரன் பேத்திகள் உள்ளனர்.

இன்று உடல் தகனம்

காகா ராதாகிருஷ்ணனின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தியாகராயநகர் சிங்காரம் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடல் தகனம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயானத்தில் நடைபெறுகிறது. தொடர்புக்கு: ராஜவேலு-. 92822 44040.

Read More

June 14, 2012

ஜப்பானை அதிரவைத்த ரஜினியின் ரோபோ - 1300 அரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகள்!
by admin - 0




சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி, இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையைப் பெற்ற எந்திரன் - தி ரோபோ, இப்போது ஜப்பானைக் கலக்கி வருகிறது.

இந்தப் படத்துக்கு ஜப்பானில் கிடைத்துள்ள ஆதரவு உலகையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது. ரோபோ என்ற மனித எந்திரங்கள் உற்பத்தியில் உலகின் முதன்மை நாடாகப் போற்றப்படும் ஜப்பானில், ரஜினியின் ரோபோ திரைப்படம் வெளியாகியுள்ளதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி வருகின்றனர் அந்நாட்டு மக்கள்.

ஆரம்பத்தில் இந்தப் படம் அங்கு சில திரைப்பட விழாக்களில் இரண்டு மணி படமாக எடிட் செய்யப்பட்டு வெளியானது.

அங்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. பின்னர் அந்த எடிட் செய்த பிரதியையே, நாடு முழுவதும் வெளியிட்டனர். எத்தனை தியேட்டர்கள் தெரியுமா... தமிழை விட அதிகம்... 1300 திரையரங்குகள்!

வெளியிட்ட அனைத்து ஜப்பானிய நகரங்களிலும் ரோபோவின் ராஜ்ஜியம்தான். ரஜினி இன்றைக்கு ஜப்பானின் தன்னிகரில்லா சூப்பர் ஸ்டார்.

படம் வெளியாகி நான்கு வாரங்களுக்குப் பிறகும் கூட்டம் குறையவில்லை. ரோபோ ரஜினி முகமூடி அணிந்தபடி இரும்பிலே ஒரு இதயம் பாடலை முணுமுணுத்தபடி, மீண்டும் மீண்டும் படம் வருகிறார்கள் ரசிகர்கள்.

வில்லன் ரஜினி மே... என பழித்துக் காட்டுவாரே... அது அந்த ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம்.

ஆரம்பத்தில் 2 மணிநேரப் படமாக காட்டப்பட்ட ரோபோ, இப்போது 3 மணி நேரப் படமாக மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Read More

நான் உயிர் விடுவதற்குள் தமிழ் ஈழம் அமைவதைக் காண விரும்புகிறேன் : கலைஞர்
by admin - 0

தி.மு.க தலைவர் கலைஞர் 89-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அவரது தொகுதியான திருவா ரூரில் நடந்தது.
இக்கூட்டத்தில் பேசிய கலைஞர், ‘’தி.மு.க நிர்வாகிகள் மீது அ.தி.மு.க அரசு வேண்டுமென்றே வழக் குகள் போடுகிறார்கள்.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கொள்கைகளை மாற்றிக் கொள்ளமாட்டோம். திமுக நிர்வாகிகளை நீதிமன்றம் விடுவித்தாலும் கூட அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்கிறது.

திருவாரூர் தொகுதியில் திமுக ஆட்சியில் பல நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அத்திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தமிழ் ஈழம் அமைவதுதான் எனது வாழ்வின் லட்சியம். நான் உயிர் விடுவதற்குள் தமிழ் ஈழம் அமைவதைக் காண விரும்புகிறேன். அப்படி தமிழ் ஈழம் அமைந்து, அதற்கு அடுத்த கணமே நான் இறந்தாலும் மகிழ்ச்சிதான். நான் உயிரிழந்தால்தான் தமிழீழம் அமையும் என்றால், அதற்காக உயிரை விடவும் நான் தயார்’’ என்றார்.

Read More

June 13, 2012

குமரிக்கண்டம் பற்றிய அரிய தகவல்.
by admin - 0



Read More

பிரட்ரிக் கோட்டை வாசலில் காணப்படுகின்ற தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டு
by admin - 0



திருக்கோணேஸ்வரம் அமைந்திருக்கின்ற திருகோணமலையின் சுவாமிமலைப் பகுதியிலிருந்து இரு கல்வெட்டுக்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒன்று தமிழ் மொழியிலும் மற்றது வடமொழியிலும் எழுதப்பட்டுள்ளது.

கி.பி 1624ல் போர்த்துக்கேயரால் ஆலயம் இடிக்கப்பட்டு பிரட்ரிக் கோட்டை கட்டப்பட்டபோது, ஆலயச் சுவரிலே பொறிக்கப்பட்டிருந்த தமிழ் கல்வெட்டு ஒன்றும் சேர்த்து கோட்டை வாசலில் காணப்படுகிறது.

(பிரட்ரிக் கோட்டை வாசலில் காணப்படுகின்ற தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டு)

இக் கல்வெட்டானது பிற்காலத்திலே நடக்க இருக்கின்ற நிகழ்வுகளை முற்கூட்டியே தெரிவித்த தீர்க் தரிசனப் பாடலாக உள்ளது.

கல்வெட்டு வாசகம்

னனே குள
காட முடத
ருப பணியை
னனே பறங்கி
ககவே மனன
ன பானன
னையயறற
தே வை த
ரை
கள

இக் கல்வெட்டினது மொழி பெயர்ப்புக்கள் பல காணப்பட்டாலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டும், பாரம்பரியமாக கூறப்பட்டுவருவதுமான மொழிபெயர்ப்பு

"முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியை
பின்னே பறங்கி பிரிக்கவே - மன்னாகேள்
பூனைக் கண், செங்கண் புகைக் கண்ணன் போனபின்
மானே வடுகாய்விடும்"

இப்பாடலின் கருத்தினை யாவருமே எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடியவாறு உள்ளது. முற்காலத்திலே குளக்கோட்டன் என்பவர் திருப்பணி செய்த இந்த ஆலயத்தை, பிற்காலத்தில் பறங்கி இனத்தவர் அழிப்பர் என்றும் அதன்பின் ஆட்சியில் ஏற்பட இருந்த மாற்றங்கள் பற்றியும் கூறுகின்றது இக்கல்வெட்டு.

கிருஷ்ண சாஸ்திரி என்பவரது ஆய்வுக் கருத்தின்படி, ''இவ்வெழுத்தமைப்பானது கி.பி. 16ம் நூற்றாண்டுகளைச் சார்ந்ததென்றும் ஆனால் 'குடும்பியாமலை சாசனத்துடன் ஒப்பிடும் போது இதில் பொறிக்கப்பட்டுள்ள இரு கயல்களும் கி.பி 13ம் நூற்றாண்டைச் சார்ந்ததென்றும்'' கூறப்படுகிறது.

கி.பி 1624ல் கோணேசர் ஆலயத்தை அழித்த போர்த்துக்கேயத் தளபதி 'கொன்ஸ்ரான்ரைன் டீசா' என்பவனது தினக் குறிப்பேட்டிலிருந்து , ''இவ்வாலயமானது மனுராசா என்னும் இலங்கையின் சக்கரவர்த்தி ஒருவனால் கி.மு 1300ம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டதாக'' அறியக் கூடியதாக உள்ளது.

Read More