ஐ.நா. மனித உரிமைகள் பேரவை யின் உயர்மட்டக் குழுவை நாட்டுக் குள் அனுமதிப்பதில்லை என்பதில் இறுக்கமாக இருந்த இலங்கை அரசு, அந்த நிலைப்பாட்டை தளர்த்திக் கொண்டு ஐ.நா.குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு இணக்கம் தெரிவிக் கும் என கொழும்பு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதி ரான தீர்மானம் ஒன்று அமெரிக்காவி னால் கொண்டு வரப்பட்டு நிறைவேற் றப்பட்டது.

இதற்கமைய நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறை ப்படுத்தப்படுவதை கண்காணிப்பதற் காகவும் அதற்கு உதவுவதற்காகவும் மனித உரிமைகள் பேரவையின் குழு ஒன்று இலங்கைக்கு அனுப்பி வைக் கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டி ருந்தது.
இருந்த போதிலும் அவ்வாறான குழு வொன்றை அனுமதிப்பதில்லை என்ற நிலைப்பாட்டையே இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தி வந்தது. எனினும் தற்போத சர்வதேச ரீதி யான அழுத்தங்கள் அதிகரித்து வருவ தால் இவ்விடயத்தில் சாதகமான பிர திபலிப்பை வெளிப்படுத்துவதற்கு தீர் மானித்திருப்பதாக கொழும்பு ஆங் கில வாரப் பத்திரிகை ஒன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.இது தொட ர்பில் இலங்கை அரசாங்கத்தின் பதில் இந்த வாரப் பகுதியில் ஜெனிவாவு க்கு அனுப்பி வைக்கப்படும் என தெரி விக்கப்படுகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக் நாட்டில் இல்லாத நிலையிலேயே இந்தப் பதில் அனுப்பிவைக்கப்பட இருக்கி றது. மகிந்த ராஜபக் கியூபா மற்றும பிரேசில்ஆகிய நாடுகளுக்கான பய ணமொன்றை தற்போது மேற்கொண் டிருக்கிறார். எதிர்வரும் வெள்ளிக்கிழ மையே அவர் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகின்றது. தமது குழு வொன்றை அனுப்பி வைப்பதற்கான கோரிக்கையை மனித உரிமைகள் பேரவை கடந்த மாதம் அனுப்பி வைத்திருந்தது. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் விஜயத்துக்கு முன்னோடியாக இந்தக் குழுவின் வருகை அமையுமென கரு தப்பட்டதால் இதனை அனுமதிப்பதி ல்லை என்ற நிலைப்பாட்டை இல ங்கை அரசாங்கம் முதலில் வெளிப்ப டுத்தியிருந்தது.
இருந்த போதிலும் சர்வதேச ரீதியா ன அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் மகிந்த ராஜபக் அரசுக்கு ஏற்பட்டிருப் பதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரி வித்துள்ளன.கற்றுக் கொண்ட பாடங் கள் மற்றும நல்லிணக்க ஆணைக்கு ழுவின் பரிந்துரைகளை நடைமுறை ப்படுத்துவதற்கு ஐ.நா. மனித உரி கைள் பேரவையுடன் இணைந்து செயற்பாட முன்வரவேண்டும் என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் சில தினங்களுக்கு முன்னர் தான் இலங்கை அரசாங்கத்தை கோர யிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments
Post a Comment