Latest News
Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

July 20, 2015

ருசியான மீன் கட்லட்
by admin - 0

ருசியான மீன் கட்லட்
-----------------------------------


மீன் கட்லட் செய்து மாலை பள்ளியில் இருந்து வரும் உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்துப் பாருங்கள், (என்ன ஆகும் என்று நீங்கள் கேடப்பது எனக்கும் கேட்கிறது) மீண்டும் மீண்டும் செய்து தரச்சொல்லி உங்களையே சுற்றி சுற்றி வருவார்கள். 

என்ன குழந்தைகளின் அன்பைப் பெற தயாரா!?

■ தேவையான பொருட்கள்

● மீன் –  1/2   கிலோ
● உருளைக்கிழங்கு  –  2
● சின்ன வெங்காயம்  – 100 கிராம்
● பச்சைமிளகாய்  – 5
● சீரகத்தூள்  –  1/2 ஸ்பூன்
● மிளகுத்தூள்  – 1/2 ஸ்பூன்
● மிளகாய்த்தூள்  – 1 ஸ்பூன்
● இஞ்சி, பூண்டுவிழுது  – 1/4 ஸ்பூன்
● மல்லி இலை -1 கொத்து
● புதினா இலை -1 கொத்து
● ரஸ்க் – 4  (தேவைக்கு ஏற்ப்ப)
● முட்டை – 4 (தேவைக்கு ஏற்ப்ப)
● எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன்  
● உப்பு – தேவையான அளவு
● எண்ணெய் – தேவையான அளவு

■ செய்முறை

மீன்,  உருளைக்கிழங்கு இரண்டையும் ஆவியில் வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.

வாணலியில் (சட்டி) சிறிது எண்ணெயை விட்டு வெங்காயம்,  பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, மல்லி இலை, புதினா இலை ஆகியவற்றை வதக்கி மீன் கலவையில் சேர்க்கவும்.

அத்துடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

முட்டையை (வெள்ளைக்கரு மட்டும்) ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் (சட்டி) எண்ணெயை விட்டு நன்கு சூடாகியதும் மீன் கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக  நமக்குப் பிடித்த வடிவில் தட்டி முட்டையில்  தோய்த்து ரஸ்க் தூளில் புரட்டி பொரித்தெடுக்கவும்.

இப்போது மீன் கட்லட் ரெடி..!! 

வாய் ஊற சாப்பிட்டு குழந்தைகளுக்கும் கொடுத்து அவர்களது அன்பினையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
Read More

July 16, 2015

சுவையான மீன் சொதி
by admin - 0

சுவையான மீன் சொதி
---------------------------------------

இலங்கையில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி உண்ணக்கூடிய ஒருவகைக் கறி வகையே மீன் சொதியாகும். சொதி வகையில் பல வகைகள் உண்டு. அசைவ சொதி, சைவ சொதி என்று பல வகைகளில் சொதி இலங்கையில் உள்ள பல ஊர்களுக்கு ஏற்ப வகையில் வித்தியாசமான முறைகளில் சமைத்து உண்பார்கள். 

உண்மையிலேயே மீன் சொதியானது மதிய நேர உணவிற்கே பயன்படுத்தப்பட்டாலும் இரவு நேர உணவான புட்டு, இடியப்பம் மற்றும் பான் போன்றவற்றிற்கு மிகவும் பொருத்தமானது. அதிலும் அடுத்தநாள் காலையில் சூடாக்கிய மீன் சொதியை காலை உணவான புட்டு, இடியப்பம் மற்றும் பானுடன் சேர்த்து சாப்பிடும் போது அதன் சுவையே தனியானது.


■ தேவையான பொருட்கள்

● சுத்தம் செய்த மீன் துண்டுகள் - 250 கிராம்

● பழப்புளி - 10 கிராம் (சிறிய உருண்டை)

● வெங்காயம் - 15 கிராம்

● உள்ளி - 4 பற்கள்

● பச்சை மிளகாய் - 2

● தேங்காய்ப் பால் - 100 மி.லி

● வெந்தயம் - ஒரு தேக்கரண்டி

● மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி

● கரம் மசாலாத்தூள் - கால் தேக்கரண்டி

● உப்பு - 1 1/2 தேக்கரண்டி

● கறிவேப்பிலை - 1 நெட்டு

■ செய்யும் முறை 

வெங்காயம், பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். சொதி செய்ய தேவையான மற்ற பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், பூண்டு போட்டு அதனுடன் இரண்டாக பிளந்த மிளகாய் மற்றும் வெந்தயத்தை சேர்க்கவும்.

அதன் மேல் மீன் துண்டுகளைப் போட்டு 300 மி.லி தண்ணீரில் புளியைக் கரைத்து ஊற்றி உப்பையும் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

பாதியளவு வெந்ததும் மீன் துண்டுகளை பிரட்டி விட்டு நன்கு வேக விடவும்.

மீன் நன்றாக வெந்தத்தும் மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், பால் சேர்த்துக் கொதிக்க விடவும்.

நன்கு கொதித்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கி வைக்கவும்.

சுவையான மீன் சொதி தயார். இதனை சூடாக பரிமாறவும்.
Read More

July 04, 2015

யாழ்ப்பாணத்து குழல் புட்டு நீங்களும் சுவைத்து பாருங்க !!j
by admin - 0

யாழ்ப்பாணத்து குழல் புட்டு நீங்களும் சுவைத்து பாருங்க !!

யாழ்ப்பாணத்தில் அரிசிமாவினால் செய்யப்படும் உணவு பண்டங்களை அதிகம் பயன்படுத்துவது வழக்கம் ஆகும்.இந்த வகையில் இடியப்பம் மற்றும் பிட்டு ஆகியன அரிசிமாவினாலேயே தயாரிக்கப்படுகின்றன.

■ தேவையான பொருட்கள்

● அரிசிமா

● தேங்காய்

● உப்பு

● சுடு நீர்

● புட்டுக்குழல்

● அகப்பைக் காம்பு

■ செய்முறை

நெல்லை உரலில் இடித்து அளவான பதத்தில் தீட்டி சிவப்பு பச்சை அரிசியை எடுக்க வேண்டும். துப்புரவாக்கிய பச்சை அரசியை மூன்று  மணிநேரம் ஊறவிட்டு கல் உரலில் இடித்து மாவை அரித்து எடுக்க வேண்டும். அரித்தெடுத்த மாவை நெருப்பில் பதமாக வறுத்து அதன் பின்னர் மீண்டும் அரித்து எடுக்க வேண்டும். மாவை மென்மையாக வறுக்க வேண்டும்.

அரிசிமாவுடன் தேவையான அளவு உப்பு கலந்து நன்றாக கொதித்த நீரை பாத்திரத்தில் எடுத்து சிறிது நேரம் வைத்த பின்னர் மெல்லியசூட்டில் விட்டு குழைக்க வேண்டும்.

குழைத்த மாவை கொத்து சுண்டினால் தொத்த வேண்டும் தற்போது மாவைக் கொத்துவதற்கு உயர்ந்த  சில்வர் பேணியினைப் பயன்படுத்துவார்கள்.

இளம் தேங்காய்  ஒன்றை எடுத்து உடைத்து,பூவாக திருவவேண்டும். முன்னதாக எடுத்து சுத்தப்படுத்தி எண்ணெய் பூசி வைத்த குழலின் அடியில் அடைப்பானைப் போட்ட பின்னர் சிறிதளவில் மாவை எடுத்து போட வேண்டும். குழைத்த மாவினைப் போட்ட பின்னர் சிறிதளவில் துருவிய தேங்காய்ப் பூவினை இட்டு பின்னர் மாவினை இட்டு மேலாக சிறிது தேங்காய்ப்பூவினை இட்டு புட்டு அவிக்கும் பானையின் மேல் வைக்க வேண்டும்.

பிட்டு அவிந்தவுடன் இறக்கி அகப்பை காம்பால் பின்புறத்தில் இருந்து தள்ளி இறக்க வேண்டும்.சுடு பிட்டை வாழை இலையில் போடுவது உடலுக்கு நல்லது.

இவ்வாறு செய்யும் குழல் புட்டுக்கு சுவை அதிகம். சிலர் கோதுமை மா, குரக்கன் மா மற்றும் ஆட்டா மா போன்றவற்றிலும் குழல் புட்டு அவிப்பார்கள்.

யாழ்ப்பாணத்தில் குழல்புட்டுக்கு பொரித்து இடித்த சம்பல்,வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், பொரியல், குழம்பு போன்ற உப கறிகளை பயன்படுத்துவார்கள்.

எனினும், அரிசிமாக் குழல்புட்டு என்றவுடன் எங்களது நினைவில் வருவது தென்மராட்சி மாம்பழமே. வயல்களில் விளைந்த நெல்லினைப் பக்குவமாக இடித்து மாவாக்கி புட்டு அவிப்பதுடன், அதற்குத் தேவையான தேங்காயினை உடனே மரங்களிலிருந்து பிடுங்கி துருவிப் பாவிப்பதுடன், தங்களது வீட்டு மரங்களில் காய்த்த மாம்பழங்களையும் பாவிப்பார்கள். எனினும், இவை எல்லாம் தற்போது காணமற்போய்விட்டன.
Read More

யாழ்ப்பாணத்து மீன் ஒடியல் கூழ் குடிக்கலாம் வாங்கோ!
by admin - 0

யாழ்ப்பாணத்து மீன் ஒடியல் கூழ் குடிக்கலாம் வாங்கோ!

யாழ்ப்பாணத்துத் தமிழர்க்கும் தமிழக ஊர்ப்புறத்தாருக்கும் ஆடிமாதமெனில் கொதிக்கும் வெய்யிலில் இதமான கூழ் வடித்துக் குடிப்பது வழமை. இது மேலும் பனங்கட்டியும், தேங்காய்ச் சொட்டுடன் சேர்த்துச் சுவைப்பதும் பண்டைய கால மரபு.

■ தேவையானவை

● ஒடியல் மா 

● மீன் 
(வகை வகையான சிறு மீன்கள். முள் குறைந்த மீன்களாக இருப்பது நல்லது)

● நண்டு (இவை கூட மிகச் சிறிய நண்டுகளாக இருந்தால் நல்லது)

● இறால் 

● சின்னச் சின்ன கணவாய்கள்.

● நெத்தலி மீன் கருவாடு 

● பயிற்றங்காய் (1 அங்குல நீள துண்டுகள்)

● பலாக்கொட்டைகள் (கோது நீக்கி பாதியாக வெட்டியது)

● ஒரு பிடி கீரை அல்லது கீரை வகைகள் 

● ஒரு பிடி அரிசி 

● பச்சை மிளகாய் இரண்டாக பிளந்தது

● செத்தல் மிளகாய் அரைத்தது

● பழப்புளி 

● உப்பு சுவைக்கேற்ப

■ செய்முறை

முதலில் ஒடியல் மாவை ஒரு சிரு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரைக்கவும் 2 மணி நேரமாவது ஒடியல் மா ஊற வேண்டும். 

செத்தல் மிளகாய் எனப்படும் காய்ந்த மிளகாயை நீர் தெளித்து அம்மியில் நன்றாக விழுது போல் அரைக்கவும். காரம் அதிகமாக இருக்க வேண்டுமானல் 3 அல்லது 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். 

பழப் புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் விட்டு அதிகம் நீர்த்தன்மையில்லாமல் கரைத்து வைக்கவும்.

இன்னொரு பெரிய பாத்திரத்தில் சரியான அளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். (கூழில் நிறைய பொருட்கள் போடுவதால் அவை நன்றாக வேகுமளவுக்கு தண்ணீர் அதிகமாய் இருக்க வேண்டும். அதே போல் பாத்திரமும் பெரிதாக இருந்தால் தான் பொருட்கள் அடி பிடிக்காமல் பதமாக இருக்கும்.) 

அதனுள் கழுவிய அரிசி, பயற்றங்காய், பலாக்கொட்டைகள், மீன்துண்டுகள், மீன்தலைகள், நண்டு, இறால், நெத்தலி கருவாடு, கீரை ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விடவும்.

நன்றாக அவிந்ததும் ஒடியல் மா (நீரை வடித்துவிட்டு கரைசலான ஒடியல் மாவை மட்டும் எடுக்கவும்.) அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைப் போட்டு கலந்து சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக பரிமாறவும்.

■ கீழ்குறிப்பு

சைவ உணவு உண்போர் வெண்டைக்காய், பூசனி போன்ற காய்கறிகள் சேர்த்தும், மரவள்ளி, வாழைக்காய், பலாக் கொட்டை போன்றவற்றை பொரித்துச் சேர்த்தும் கூழைத் தயார் செய்யலாம்.
Read More

July 01, 2015

ருசியான நோன்புக்கஞ்சி எப்படி செய்வது
by admin - 0

நோன்பு நாட்களில் நோன்புக்கஞ்சி முஸ்லிம் மக்களின் இன்றியமையாத உணவு 

Read More

June 29, 2015

இராசவள்ளிக் கிழங்கு டெசேர்ட்
by admin - 0

இராசவள்ளிக் கிழங்கு டெசேர்ட்
-------------------------------------------------------

சுவையான பல சிற்றுண்டிகளைச் செய்வதற்கு ஏற்ற ஒரு கிழங்குதான்  இராசவள்ளிக் கிழங்கு ஆகும்.

இதில் பல வகைகள் உள்ளன. கிழங்குகள் மங்கலான பழுப்பு நிறத்தில் இருக்கும். உள்ளேயுள்ள சதைப்பகுதி ஊதா, மஞ்சள், வெள்ளை, சிவப்பு என வெவ்வேறு நிறங்களில் இருக்கும்.
  
இலங்கையில் ஊதா நிற இராசவள்ளிக் கிழங்கு கிடைக்கிறது.

முளையை நட்ட ஒரு மாதத்தில் முளைத்து வளர ஆரம்பிக்கும். இலைகள் வெற்றிலைபோல இருக்கும் தண்டு அழகிய ஊதா நிறத்தில் இருப்பதால் கொடி அனைவரையும் கவரும். 

கொடிகள் வளர்ந்துவர பட்டமரக் கொப்புகள் அல்லது மூங்கில் தட்டிகள் வைத்துப் படர விடுவார்கள். இரண்டு மாதத்தில் களைகள் பிடுங்கி மண் அணைத்து விட வேண்டும்.

இலைகள் மஞ்சள் நிறம் கலந்து பழுப்பு நிறமாகி உதிரத் தொடங்கும்போது நிலத்தில் வெடிப்புகள் ஏற்படும் அப்போது அறுவடைசெய்து கொள்ளலாம். வீட்டுத்தோட்டங்களில் நாட்டிக் கொள்வார்கள். நவீனத்தில் பூச்சாடிகளில் வளர்த்து பல்கனிகளில் அழகுக்குப் படரவிடுவதுடன் கிழங்கும் பெறலாம்.

விநாயக ஷஷ்டி இருபது நாட்களும் கோவில்களில் விநாயகருக்கு நாள்தோறும் ஒரு நிவேதனம் படைக்கப்படும். அதில் இக்கிழங்கும் ஒருநாள் படைக்கப்படும் அளவு முக்கியத்துவம் பெற்றது. சர்க்கரை வள்ளிக் கிழங்கைப்போல இதில் இனிப்பு அதிகம் கிடையாது.

தாவரவியில் பெயர் Dioscorea  alata ஆகும். இதில் water yam,  winged yam,  purple yam என மூன்று வகைகள் உண்டு. தெற்கு ஆசியாவில் முதன்முதல் பயிரிடப்பட்டது. 

பிலிப்பைன்ஸ் இல் Ube என்கிறார்கள். பலவிதமான இனிப்பு டெசேட்களில் பயன் படுத்துகிறார்கள். 

வியட்னாமில் khoaimo என்பர். பிரதானமாக சூப்பில் கலக்கிறார்கள். இந்தியாவில் ratalu  அல்லது violet yamபெருவள்ளிக் கிழங்கு என்றும் அழைப்பார்கள். 

ஹவாயில் Uhi   என அழைப்பர். 


இலங்கையில் இராச வள்ளிக் கிழங்கு என்ற பதமே பயன்படுத்தப்படுகிறது.

■ போசனை

100 கிராமில் 20.6 கலோரி, புரதம் 1.4 கி, கொழுப்பு மிகக் குறைவு 0.2 கி, நார்ப்பொருள் 8.8 கி, நீர்ப்பிடிப்பு 72.4 மி.லி, பொட்டாசியம் 256 மி.கி, மக்னீசியம் 15 மிகி, கல்சியம் 15 மிகி, சோடியம் 9 மிகி, இரும்புச் சத்து 0.8மிகி. Zinc 0.3 மிகி. B3 0.2மிகி, விட்டமின C 15மிகி வரையே இருக்கிறது. 

கொலஸ்டரோலைக் குறைக்கும் தன்மையும், Antioxidant அதிகம் இருப்பதும் இதன் நன்மைகளாகும். ஓஸ்டியோபொரோசிஸ் சைத் தடுக்கும் தன்மையும் இருப்பதாக நம்பப்படுகிறது.

எங்கள் பாட்டி இக்கிழங்கை சீவி எடுத்து பொரித்து ஒருவகை சிப்ஸ் செய்து தருவார்.

கிழங்கை அவித்து மசித்து சர்க்கரை தேங்காய்ப் பால் விட்டு கட்டியாக வருவதற்காக  உழுந்துமா கலந்து கிளறி ஆறவைத்து துண்டுகளாக வெட்டிப் பரிமாறுவார்கள்.

■ இராசவள்ளிக் கிழங்கு டெசேர்ட்

தேவையான பொருட்கள்:

● கிழங்கு – ½ கிலோ
● சீனி – 4 - 5 டேபிள் ஸ்பூன்
● கட்டித் தேங்காய்ப்பால் - 4 டேபிள் ஸ்பூன்
● முந்திரி பிளம்ஸ் சிறிதளவு.
● உப்பு - சிறிதளவு.
● ஆமன்ட் அல்லது வனிலா எசென்ஸ் சில துளிகள்.

■ செய்முறை

சொறியும் தன்மையுள்ளது இக்கிழங்கு கைக்கு கிளவுஸ் உபயோகியுங்கள். கிழங்கை தோல் சீவி நன்கு கழுவி எடுங்கள். சிறு சிறு மெல்லிய துண்டுகளாகச் சீவுங்கள்.

பாத்திரத்தில் போட்டு கிழங்கின் ¾ பாகம் தண்ணீர்விட்டு அவித்தெடுங்கள்.
நன்கு அவிந்ததும் மசித்து விடுங்கள். சீனி , உப்பு, முந்திரி, பிளம்ஸ் சேருங்கள்.

தேங்காய்ப் பால் ஊற்றிக் கலக்கி இறக்கிவையுங்கள்.

சற்று ஆறியபின் எசன்ஸ் கலந்து டெசேட் கப்களில் ஊற்றுங்கள். மேலே வறுத்த முந்திரி தூவி  நன்கு ஆறவையுங்கள். 

குளிர்சாதனப் பெட்டியில் (fridge) குளிரவைத்துப் பரிமாறுங்கள். கலர்புல் டெசேட் காணாமல் போய்விடும். மியா மியாப் பூனைகளும் வந்துவிடும்.   

- மாதேவி
Read More

June 28, 2015

நண்டுக்கறி சாப்பிடலாம் வாங்க...
by admin - 0

நண்டுக்கறி சாப்பிடலாம் வாங்க...
----------------------------------------------------------

■ தேவையான பொருட்கள்:

● நண்டு - 500 கிராம் 
● பெரிய வெங்காயம் - ஒன்று 
● சிறிய வெங்காயம் - 5 
● பச்சை மிளகாய் - 5 
● பூண்டு - 5 பல் 
● கறிவேப்பிலை – 1 இறகு
● புளி – சிறிய தேசிக்காயளவு 
● இஞ்சி - சிறிது 
● சரக்கு மிளகாய்த்தூள்- 3 தேக்கரண்டி (உறைப்பு தேவைக்கேற்ப) 
● மஞ்சள்தூள் - சிறிதளவு
● பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி 
● கடுகு - சிறிதளவு
● மிளகு - சிறிதளவு
● வெந்தயம் - சிதளவு
● தேங்காய் - பாதி 
● எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு 
● உப்பு - தேவையான அளவு

■ செய்முறை:

1. நண்டைச் சுத்தம் செய்து, பெரிய நண்டாக இருந்தால் 4 துண்டுகளாக உடைக்கவும் சிறிய நண்டாயின் இரண்டாக உடைக்கவும். 

பெரிய கால்களை இரண்டாக முறிக்கவும். 
அவற்றை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும். (சிலர் மஞ்சள் பாவிப்பதில்லை)

2. பாதித் தேங்காயை துருவி ஒரு தட்டில் வைக்கவும்.

வெங்காயம், பச்சைமிளகாய், என்பனவற்றை நீட்டாக வெட்டி தனித்தனியாக வைக்கவும்.

உள்ளியை சிறுதுகள்களாக சீவிக் கொள்ளவும்.

இஞ்சியையும் சீவிக் கொள்ளலாம் அல்லது குத்திக் கொள்ளவும்.

3. தேங்காய், பெருஞ்சீரகம், மிளகு, ஆகியவற்றை ஒரு தாச்சியில் இட்டு தேங்காய்ப்பூ பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்திருக்கவும்.

3. தாச்சியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடேறியதும் அதில் கொஞ்சக் கடுகு, பெருஞ்சீரகத்தை போடவும். கடுகு வெடித்ததும் அதற்குள் கொஞ்ச வெந்தயம் போடவும். வெந்தயம் பொரிந்து சிவத்ததும் வெட்டிவைத்த பெரிய வெங்காயத்தையும், பச்சை மிள்காயையும், உள்ளியையும் போட்டு வதக்கவும். 

4. வெங்காயம் வதங்கி வந்ததும் அதற்குள் கழுவி வைத்த நண்டை போட்டு கிளறி வதங்க விடவும். கொஞ்சம் வதங்கி வந்ததும் அதற்குள் பழப்புளியைக் கரைத்து விடவும். அத்துடன் நண்டு அவிய தேவையான அளவு தண்ணீரையும் விடவும்.

5. அதற்குள் 3 தேக்கரண்டி சரக்கு மிளகாய்தூளும் (உறைப்புக்கேற்ப), தேவையான உப்பும், சீவி வைத்த இஞ்சியையும், வெட்டி வைத்த சின்ன வெங்காயமும் போட்டு கலக்கி மூடி அவிய விடவும். சிலர் வெட்டிய பச்சை மிள்காயை வதக்காது சின்ன வெங்காயத்துடன் சேர்த்து அவியப் போடுவார்கள். 

6. நண்டு அரை அவியல் அவிந்ததும் அதற்குள் நாம் வறுத்து வைத்த தேங்காய் வறுவலைப் போட்டு நன்கு கலக்கித் துளாவி திரும்பவும் கொதித்து அவிய விடவும். 

கறி வற்றி பிரட்டல் கறியாக வரும் போது கறிவேப்பிலையைப் போட்டு இறக்கி மூடிவிடவும்.

இப்போது நண்டுக் கறி ரெடி.

■ குறிப்பு:

சிலர் பழப் புளிக்கு பதிலாக தேசிக்காய் புளியும் விடுவார்கள்.

இன்னும் சிலர் கறிமுருக்கம் இலை சேர்ப்பார்கள்,

தேங்காய் பாலாகவும் சேர்க்கலாம். கறி தடிக்காது. பூவை வறுத்துப் போட்டால் கறி தடிக்கும், ருசியாகவும் இருக்கும்

நண்டு வாங்கும் போது பாரமான பெட்டை நண்டாக பார்த்து வாங்கவும்
Read More

June 27, 2015

யாழ்ப்பாணத்து மீன் குழம்பு
by admin - 0

யாழ்ப்பாணத்து மீன் குழம்பு
------------------------------------------------

யாழ்ப்பாணத்தில் உள்ள அசைவ உணவுப் பிரியர்கள் வீடுகளில் பொதுவாக புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் கட்டாயமாக அசைவ உணவு சமைப்பார்கள். 
ஆனாலும் பொதுவாக தாங்கள் வணங்கும் தெய்வங்களைப் பொறுத்தும், அத்தெய்வங்களின் திருவிழாக் காலங்களைப் பொறுத்தும் அவர்களின் உணவு முறையில் மாற்றம் உண்டாகும்.

■ மீன் குழம்புக்குத் தேவையான பொருட்கள்

● வெட்டிக் கழுவிய மீன் துண்டுகள் - 500 கிராம்

● உரித்து, கழுவி, வெட்டிய சிறிய வெங்காயம் - 100 கிராம்

● கழுவி, வெட்டிய பச்சை மிளகாய் - 4

● யாழ்ப்பாணத்துத் தூள் - காரத்துக்குத் தேவையான அளவு

● உப்பு - தேவையான அளவு

● பழப்புளிக் கரைசல் - 1 கப்

● தேங்காய்ப்பால் - முதற்பால் 1 கப் - 2 ம் 3ம் பால் ஒவ்வொரு கப்

■ மீன் குழம்பு செய்யும் முறை

ஒரு மண் சட்டியில் கழுவிய மீன் துண்டுகள், வெட்டிய சிறிய வெங்காயம் , பச்சை மிளகாய் போன்றவற்றைப் போடவும். சிலர் கருவேப்பிலையும்போடுவார்கள். 

பழப்புளிக் கரைசல், தேங்காய்ப் பால், தேவையான அளவு உப்பு, யாழ்ப்பாணத்து மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

சேர்த்த கலவையை நன்றாகக் கலக்கவும். மண் சட்டியை அடுப்பில் மிதமான சூட்டில் வைக்கவும். அதிகம் நெருப்பும் தேவைப்படுவதில்லை. 

குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் பிறந்து வரும்போது நற்சீரகம், மிளகு, உள்ளி ஆகியவற்றை இடித்துப் போடுவார்கள். இதனால் குழம்பு நன்றாக மணக்கும். 

பொதுவாக இவ்வாறே மீன் குழம்பு வைத்தாலும், இடத்துக்கு இடம் சில சில வேறுபாடுகளைக் காணமுடியும்.

மதிய நேரத்திற்கு பிரதான கறியாக மீன் குழம்பு பயன்படுத்தப்படுவதுடன், இரவு தயாரிக்கப்படும் புட்டுக்கும் பொருத்தமான கறியாக மீன் குழம்பு இருக்கும்.

முன்னரெல்லாம் அடுத்த நாள் காலையில் பழஞ்சோற்றுடனும் உண்ணப்படும் கறியாக மீன் குழம்பு பயன்படுத்தப்படும்.

இடியப்பம், புட்டு, பான் மற்றும் ஒடியல் புட்டு   போன்ற உணவுகளுக்கு மீன் குழம்பு மிகப் பொருத்தமானதாக இருக்கும்
Read More

June 26, 2015

சுவையான அப்பம் செய்யும் முறை
by admin - 0

சுவையான அப்பம் செய்யும் முறை


தேவையான பொருட்கள்:

    1. புழுங்கல் அரிசி  – 2 கப்

    2. பச்சரிசி  – 2 கப்

    3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப்

    4. தேங்காய்ப்பால் - 2 கப்

    5. சர்க்கரை  – 1 கப்

    6. கல் உப்பு - 3 தேக்கரண்டி

    7. சமையல் சோடா - 1 / 2 தேக்கரண்டி

    8. என்னை - தேவையான அளவு  

செய்முறை:

    *அப்பம் செய்வதற்கு முதல் நாள் , புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு மூன்றையும் கலந்து ஊறவைக்கவும். அரிசியில் தன்மைக்கு ஏற்ப ஊரும் நேரம் மாறுபடும் - குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்கு மேல் ஆகும்

    *அரிசி, பருப்புக் கலவையை மிக்ஸியில்  போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்புப் போட்டு பொங்க விடவும்

    *ஒரு நாள் கழித்து, மாவை வெளியில் எடுத்து அத்துடன் தேங்காய்ப் பால், சர்க்கரை, சமையல் சோடா ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்

    *நாம் ஏற்கனவே பார்த்தது போல், அப்பம் குழிவாக வருவதற்கு, அதே வடிவம் கொண்ட சட்டியில் தான் சுடப்போகிறோம்

    *சட்டியை அடுப்பில் வைத்துக் காய விடவும், சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக எல்லாத் திசைகளிலும் சுழற்றிவிடவும்

    *இப்போது அரைத்த மாவை சட்டியின் மத்தியில் ஊற்றுங்கள். அது அங்கேயே தங்கிவிடாதபடி சட்டியை மெல்ல சுழற்றி எல்லாத் திசைகளிலும் பரவும்படி செய்து கொள்ளுங்கள் (முட்டை அப்பம் வேணுமென்றால் பரவிய அப்பத்தின் மேல் உடனடியாக ஒரு முட்டையை உடைத்து ஊற்றிய பின் சுழற்றி எல்லாத் திசைகளிலும் பரவும்படி செய்து கொள்ளுங்கள்)

    *அப்பம் தேவையான வடிவம் வந்ததும், சட்டியை முழுவதுமாக மூடிவிடவும், இதன் மூலம், அப்பத்தை நாம் திருப்பி போடவேண்டியதில்லை, ஆவியிலேயே அப்பத்தின் இன்னொரு பக்கம் வெந்துவிடும், மூன்று நிமிடம் கழித்து அப்பத்தின் ஓரங்கள் பொன்னிறமாக வரும்போது எடுத்து விடலாம்

    *சட்டியிலிருந்து அப்பத்தை எடுத்தவுடன் உடனடியாகச் சாப்பிடவேண்டும். இத்துடன் தொட்டுக்கொள்ள தேங்காய்ப்பால், கொஞ்சமாக சீனி, உறைப்பான கூட்டு வேணும் என்றால் தேங்காயப்பூச் சம்பல், மாசிக்கருவாட்டுச் சம்பல் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். இது தவிர அவரவர் விருப்பத்திற்கு ஏற்றமாதிரி வேறு எந்தக் கூட்டும் சேர்த்துக் கொள்ளலாம்.
Read More

June 24, 2015

"வடே வடே வடேய் இஸ்சோ வடே.."(றால் வடை )
by admin - 0

"வடே வடே வடேய் இஸ்சோ வடே.."(றால் வடை )

"வடே வடே வடேய் இஸ்சோ வடே.."

இந்தக் கூவலைக் கேட்காமல் நீங்கள் இலங்கைப் பேருந்துகளிலும், இரயில்களிலும் பிரயாணம் பண்ணியிருக்க முடியாது.

அவ்வளவு பிரசித்தம், பெரு விருப்பு இந்த இஸ்சோ மீது.
இஸ்சோ என்றால் வேறொன்னும் இல்லை! நம்ம இறால்தான்

இலங்கை நாற்புறமும் கடலால் சூழப்பட்ட நாடு. இங்கு மீன் உற்பத்தி பலகாலம் தொட்டு நடைபெற்று வருகிறது. இத்தொழில் கைத் தொழிலாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது.
முதலில் புத்தளம் மாவட்டத்தில் இறால் மீன் பிடிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
வருடம் ஒன்றிற்கு 4360 மெட்ரிக் தொன் இறால்கள் இங்கு கிடைத்தன. பின்னர் வெள்ளைப் புள்ளி நோயினால் வீழ்ச்சி ஏற்பட்டது. 1570 மெட்றிக் தொன் ஆகக் குறைந்தது. இப்பொழுது கிழக்கு மாகாணத்தில் சுமார் 2900 ஹெக்டரில் இறால் பண்ணைகள் அமைக்க கடற்தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது. இறால் பண்ணைகளை ஆரம்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் காணிகளையும் வழங்க தீர்மானித்துள்ளார்கள்.
இறால் பிரியர்களுக்கு ஒரு அமோக செய்தி. இத் திட்டத்தின் படி வடக்கிலும் கிழக்கிலுமாக 4000 ஹெக்டரில் இறால் வளரப்புப் பண்ணைகளை முன்னெடுக்க முடியும் என்கிறார்கள். இனி என்ன? இறால் பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான்.
அலர்ஜி உள்ளவர்களுக்கு திண்டாட்டம் கூடி வரும் எனச் சொல்லத்தேவையில்லை.
இறால் மிகவும் சுவையான உணவாக இருப்பதால் அதற்கு கிராக்கி அதிகம். அதியுயர் பெறுமதி மிக்க உணவாக இருக்கின்றது. 500 கிறாம் 450 ரூபாவிற்கு மேல் விற்பனையாகிறது.
இலங்கையில் கரையோரப் பகுதிகளில் இறால் மீன்பிடித் தொழில் நடைபெற்று வருகிறது. இத்துடன் கடல் நீர் ஏரிகளிலும் இறால் மீன்பிடிப்பதைக் காணலாம்.
தொண்டைமனாற்றுக் கடல் வல்லைவெளி, காரைநகர், மழைநீர்த் தேக்கங்களில் கூடுகட்டி வலை வீசி இறால் மீன் பிடிப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.
இறால் நன்நீரிலும் உவர் நீரிலும் வாழும். பின்புறமாகவும் நீந்தும். கழிவுப் பொருட்களை உண்டு வாழ்கின்றன.
மட்டக்களப்பு சிங்கை இறால் மிகவும் பிரசித்தமானது. ஆசிய நாடுகள் இறால் உற்பத்தியி;ல் முன்னணியில் நிற்கின்றன. சீனா, தாய்லாந்து இந்தியாவின் ஆந்திரா இறால் உற்பத்தி அதிகம். உலகில் தாய்லாந்து இறால் ஏற்றுமதியில் முதல் இடம் வகிக்கின்றது.

■ இறாலில் உள்ள போசனைப் பொருட்கள் எவை?
● ஒரு சேர்விங் 3 அவுன்ஸ் என எடுத்துக் கொண்டால் அதில் புரதம் 18 கிறாம் உள்ளது.
● கலோரி அளவு 92 மட்டுமே. நிரம்பிய கொழுப்பு 1 சதவிகிதம் மட்டுமே உண்டு.
● கொலஸ்டரோல் அளவு மிக அதிகம் 199 மி.கிராம் உள்ளது.
● இரும்புச் சத்து 15 சதவிகிதம்விற்றமின் சீ 3 சதவிகிதம்
● விற்றமின் ஏ 4 சதவிகிதம் கல்சியம் 3 சதவிகிதம்
■ குருதிக் கொலஸ்டரோலும் உணவுக் கொலஸ்டரோலும்

எமது குருதிக் கொலஜ்டரோலைப் பொறுத்தவரையில் உணவிலிருந்து நாம் நேரடியாகப் பெறும் கொலஸ்டரோலை விட நிரம்பிய கொழுப்புகளால் எமது உடல் உற்பத்தி செய்யும் கொலஸ்டரோலே அதிக பாதகம் கொண்டது.
"வடே வடே வடேய் இஸ்சோ வடே.." இந்தக் கூவலைக் கேட்காமல் நீங்கள் இலங்கைப் பேருந்துகளிலும், இரயில்களிலும் பிரயாணம் பண்ணியிருக்க முடியாது. அவ்வளவு பிரசித்தம், பெரு விருப்பு இந்த இஸ்சோ மீது. இஸ்சோ என்றால் வேறொன்னும் இல்லை! நம்ம இறால்தான் இலங்கை நாற்புறமும் கடலால் சூழப்பட்ட நாடு. இங்கு மீன் உற்பத்தி பலகாலம் தொட்டு நடைபெற்று வருகிறது. இத்தொழில் கைத் தொழிலாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. முதலில் புத்தளம் மாவட்டத்தில் இறால் மீன் பிடிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வருடம் ஒன்றிற்கு 4360 மெட்ரிக் தொன் இறால்கள் இங்கு கிடைத்தன. பின்னர் வெள்ளைப் புள்ளி நோயினால் வீழ்ச்சி ஏற்பட்டது. 1570 மெட்றிக் தொன் ஆகக் குறைந்தது. இப்பொழுது கிழக்கு மாகாணத்தில் சுமார் 2900 ஹெக்டரில் இறால் பண்ணைகள் அமைக்க கடற்தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது. இறால் பண்ணைகளை ஆரம்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் காணிகளையும் வழங்க தீர்மானித்துள்ளார்கள். இறால் பிரியர்களுக்கு ஒரு அமோக செய்தி. இத் திட்டத்தின் படி வடக்கிலும் கிழக்கிலுமாக 4000 ஹெக்டரில் இறால் வளரப்புப் பண்ணைகளை முன்னெடுக்க முடியும் என்கிறார்கள். இனி என்ன? இறால் பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான். அலர்ஜி உள்ளவர்களுக்கு திண்டாட்டம் கூடி வரும் எனச் சொல்லத்தேவையில்லை. இறால் மிகவும் சுவையான உணவாக இருப்பதால் அதற்கு கிராக்கி அதிகம். அதியுயர் பெறுமதி மிக்க உணவாக இருக்கின்றது. 500 கிறாம் 450 ரூபாவிற்கு மேல் விற்பனையாகிறது. இலங்கையில் கரையோரப் பகுதிகளில் இறால் மீன்பிடித் தொழில் நடைபெற்று வருகிறது. இத்துடன் கடல் நீர் ஏரிகளிலும் இறால் மீன்பிடிப்பதைக் காணலாம். தொண்டைமனாற்றுக் கடல் வல்லைவெளி, காரைநகர், மழைநீர்த் தேக்கங்களில் கூடுகட்டி வலை வீசி இறால் மீன் பிடிப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. இறால் நன்நீரிலும் உவர் நீரிலும் வாழும். பின்புறமாகவும் நீந்தும். கழிவுப் பொருட்களை உண்டு வாழ்கின்றன. மட்டக்களப்பு சிங்கை இறால் மிகவும் பிரசித்தமானது. ஆசிய நாடுகள் இறால் உற்பத்தியி;ல் முன்னணியில் நிற்கின்றன. சீனா, தாய்லாந்து இந்தியாவின் ஆந்திரா இறால் உற்பத்தி அதிகம். உலகில் தாய்லாந்து இறால் ஏற்றுமதியில் முதல் இடம் வகிக்கின்றது. ■ இறாலில் உள்ள போசனைப் பொருட்கள் எவை? ● ஒரு சேர்விங் 3 அவுன்ஸ் என எடுத்துக் கொண்டால் அதில் புரதம் 18 கிறாம் உள்ளது. ● கலோரி அளவு 92 மட்டுமே. நிரம்பிய கொழுப்பு 1 சதவிகிதம் மட்டுமே உண்டு. ● கொலஸ்டரோல் அளவு மிக அதிகம் 199 மி.கிராம் உள்ளது. ● இரும்புச் சத்து 15 சதவிகிதம்விற்றமின் சீ 3 சதவிகிதம் ● விற்றமின் ஏ 4 சதவிகிதம் கல்சியம் 3 சதவிகிதம் ■ குருதிக் கொலஸ்டரோலும் உணவுக் கொலஸ்டரோலும் எமது குருதிக் கொலஜ்டரோலைப் பொறுத்தவரையில் உணவிலிருந்து நாம் நேரடியாகப் பெறும் கொலஸ்டரோலை விட நிரம்பிய கொழுப்புகளால் எமது உடல் உற்பத்தி செய்யும் கொலஸ்டரோலே அதிக பாதகம் கொண்டது. ● இறாலில் நிரம்பிய கொழுப்பு 1 சதவிகிதம் மட்டுமே இருப்பதால் பாதிப்பு அதிகம் இல்லை. ஆனால் அதிகளவு கொலஸ்டரோல் இருக்கிறது. ● மனிதர்களது உணவில் உண்ணப்படும் நேரடிக் கொலஸ்டரோல் 300 மி.கி தாண்டக் கூடாது என்கிறார்கள். ● முட்டையில் 250 மிகி இருப்பதால் அளவோடு சாப்பிட வேண்டும் என்கிறார்கள். ● இறாலில் 199 இருப்பதால் அதையும் ஓரளவு மட்டுமே சேர்த்துக் கொள்ளலாம். ● ஆனால் இறால் முட்டை, இறைச்சி எல்லாவற்றையும் சேர்த்துச் சாப்பிட்டால் என்னவாகும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். இலங்கையில் இஸ்சோ வடை (Isso Vade) மிகவும் பிரபலம். கூனி இறால் என அழைக்கப்படும் சிறு இறால் போட்டு புட்டு அவித்து உண்பார்கள். சிறிய இறால் கருவாடும் பிரபலம். பருப்பு, பலாக்காய் கறிகளில் கலந்து கொள்வார்கள். இறால் பிரியாணி, ப்ரைட் ரைஸ், புட்டு, இடியாப்ப பிரியாணி, நூடில்ஸ் என மக்கள் வெளுத்துக் கட்டுவார்கள். சைனீஸ்தாய் குக்கிங் இல் புரொன் டிஸ்சஸ் முக்கியத்துவம் வகிக்கின்றன. ஹார்லிக் புரொன் பெப்பர் புரொன், ஸ்வீற் அன்ட் சவர் புரொன், புரொன் சூப், கிறில்ட் புரொன், பட்டர் புரொன், புரொன் பாஸ்ரா, ஹாட் சில்லி புரொன், ஸ்பைசி ரொமாட்டோ புரொன், என இன்னும் பல விதங்களாக உணவுகள் தயாரிக்கலாம். சிப்ஸ் பிரியர்களுக்காக இறால் ப்ளேவட் சிப்ஸ்சும், பைக்கற்களில் விற்பனை ஆகின்றன. இலங்கை இந்தியச் சமையல்களில் இறால் முருங்கைக் காய், கத்தரிக்காய் குழம்பு, பலராலும் விரும்பப்படும் உணவாகும். இறால் வறை, சலட், பொரியல், தேங்காய்ப்பால் கறி, சொதி, தொக்கு, கூழ், சம்பல், பஹோடா, எனப் பலவாறு உண்ணப்படுகிறது. ■ இறால் தேங்காய்ப் பால் காரக் குழம்பு □ சேகரிக்க வேண்டியவை ● இறால் - 20 ● வெங்காயம் - 1 ● பச்சை மிளகாய் - 1 ● பெரும்சீரகம் - ¼ தேக்கரண்டி ● வெந்தயம் - ¼ தேக்கரண்டி ● தட்டிய பூண்டு - 4 ● மிளகாய்த் தூள் - 1 ரீ ஸ்பூன் ● மல்லித் தூள் - ½ ரிஸ்பூன் ● மஞ்சள் - ¼ ரிஸ்பூன் ● தேங்காய்ப்பால் - ¼ கப் ● உப்பு - தேவைக்கு ● புளிக்கரைசல் - தேவைக்கு ● ரம்பை - 4 துண்டு ● கறிவேற்பிலை - சிறிதளவு. ● ஓயில் - 1 டேபிள் ஸ்பூன் ■ தயாரிப்பு ● இறாலை தலை வால் நீக்கி கோதுகளைக் கழற்றி, பிடுங்கிச் சுத்தம் செய்யுங்கள். ● உடம்பின் மேற்புறத்தைக் கீறி, சாப்பாட்டுக் குடலை எடுத்துவிடுங்கள். நன்கு கழுவி, நீர் வடியவிட்டு கோப்பையில் எடுங்கள். ● ஓயிலில் சோம்பு, வெந்தயம், பூண்டு வதக்கி, பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதங்க விடுங்கள். ● ரம்பை, கறிவேற்பிலை சேருங்கள் ● இறால் சேர்த்து உப்புப் போட்டு கிளறி, சிறிது பொரிய விடுங்கள். மிளகாய்பொடி. மஞ்சள்பொடி, மல்லித் தூள் சேர்த்து கிளறி ஒரு நிமிடம் வதக்குங்கள். மணம்; ஊரையெல்லாம் கூட்டி வயிற்றைக் கிளறும். சாப்பிடாதவர்களுக்கு வயிற்றைக் குமட்டும். மூக்கைப் பொத்தி வீட்டைவிட்டே ஓட வைக்கும். புளிக்கரைசல் ஊற்றிக் கொதிக்க விடுங்கள். இறுதியாக தேங்காய்பால் ஊற்றி பரிமாறும் போலில் மாற்றி விடுங்கள். நாலுகால் பூனைகளுடன் இரண்டுகால் பூனைகளும் களவு எடுக்க வரும். - மாதேவி

● இறாலில் நிரம்பிய கொழுப்பு 1 சதவிகிதம் மட்டுமே இருப்பதால் பாதிப்பு அதிகம் இல்லை. ஆனால் அதிகளவு கொலஸ்டரோல் இருக்கிறது.
● மனிதர்களது உணவில் உண்ணப்படும் நேரடிக் கொலஸ்டரோல் 300 மி.கி தாண்டக் கூடாது என்கிறார்கள்.
● முட்டையில் 250 மிகி இருப்பதால் அளவோடு சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.
● இறாலில் 199 இருப்பதால் அதையும் ஓரளவு மட்டுமே சேர்த்துக் கொள்ளலாம்.
● ஆனால் இறால் முட்டை, இறைச்சி எல்லாவற்றையும் சேர்த்துச் சாப்பிட்டால் என்னவாகும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
இலங்கையில் இஸ்சோ வடை (Isso Vade) மிகவும் பிரபலம்.
கூனி இறால் என அழைக்கப்படும் சிறு இறால் போட்டு புட்டு அவித்து உண்பார்கள். சிறிய இறால் கருவாடும் பிரபலம். பருப்பு, பலாக்காய் கறிகளில் கலந்து கொள்வார்கள். இறால் பிரியாணி, ப்ரைட் ரைஸ், புட்டு, இடியாப்ப பிரியாணி, நூடில்ஸ் என மக்கள் வெளுத்துக் கட்டுவார்கள்.
சைனீஸ்தாய் குக்கிங் இல் புரொன் டிஸ்சஸ் முக்கியத்துவம் வகிக்கின்றன. ஹார்லிக் புரொன் பெப்பர் புரொன், ஸ்வீற் அன்ட் சவர் புரொன், புரொன் சூப், கிறில்ட் புரொன், பட்டர் புரொன், புரொன் பாஸ்ரா, ஹாட் சில்லி புரொன், ஸ்பைசி ரொமாட்டோ புரொன், என இன்னும் பல விதங்களாக உணவுகள் தயாரிக்கலாம்.
சிப்ஸ் பிரியர்களுக்காக இறால் ப்ளேவட் சிப்ஸ்சும், பைக்கற்களில் விற்பனை ஆகின்றன.
இலங்கை இந்தியச் சமையல்களில் இறால் முருங்கைக் காய், கத்தரிக்காய் குழம்பு, பலராலும் விரும்பப்படும் உணவாகும்.
இறால் வறை, சலட், பொரியல், தேங்காய்ப்பால் கறி, சொதி, தொக்கு, கூழ், சம்பல், பஹோடா, எனப் பலவாறு உண்ணப்படுகிறது.

■ இறால் தேங்காய்ப் பால் காரக் குழம்பு
□ சேகரிக்க வேண்டியவை
● இறால் - 20
● வெங்காயம் - 1
● பச்சை மிளகாய் - 1
● பெரும்சீரகம் - ¼ தேக்கரண்டி
● வெந்தயம் - ¼ தேக்கரண்டி
● தட்டிய பூண்டு - 4
● மிளகாய்த் தூள் - 1 ரீ ஸ்பூன்
● மல்லித் தூள் - ½ ரிஸ்பூன்
● மஞ்சள் - ¼ ரிஸ்பூன்
● தேங்காய்ப்பால் - ¼ கப்
● உப்பு - தேவைக்கு
● புளிக்கரைசல் - தேவைக்கு
● ரம்பை - 4 துண்டு
● கறிவேற்பிலை - சிறிதளவு.
● ஓயில் - 1 டேபிள் ஸ்பூன்

■ தயாரிப்பு
● இறாலை தலை வால் நீக்கி கோதுகளைக் கழற்றி, பிடுங்கிச் சுத்தம் செய்யுங்கள்.
● உடம்பின் மேற்புறத்தைக் கீறி, சாப்பாட்டுக் குடலை எடுத்துவிடுங்கள். நன்கு கழுவி, நீர் வடியவிட்டு கோப்பையில் எடுங்கள்.
● ஓயிலில் சோம்பு, வெந்தயம், பூண்டு வதக்கி, பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதங்க விடுங்கள்.
● ரம்பை, கறிவேற்பிலை சேருங்கள்
● இறால் சேர்த்து உப்புப் போட்டு கிளறி, சிறிது பொரிய விடுங்கள். மிளகாய்பொடி. மஞ்சள்பொடி, மல்லித் தூள் சேர்த்து கிளறி ஒரு நிமிடம் வதக்குங்கள்.
மணம்; ஊரையெல்லாம் கூட்டி வயிற்றைக் கிளறும்.
சாப்பிடாதவர்களுக்கு வயிற்றைக் குமட்டும். மூக்கைப் பொத்தி வீட்டைவிட்டே ஓட வைக்கும்.
புளிக்கரைசல் ஊற்றிக் கொதிக்க விடுங்கள். இறுதியாக தேங்காய்பால் ஊற்றி பரிமாறும் போலில் மாற்றி விடுங்கள். நாலுகால் பூனைகளுடன் இரண்டுகால் பூனைகளும் களவு எடுக்க வரும்.
- மாதேவி


Read More