Latest News

June 26, 2015

சுவையான அப்பம் செய்யும் முறை
by admin - 0

சுவையான அப்பம் செய்யும் முறை


தேவையான பொருட்கள்:

    1. புழுங்கல் அரிசி  – 2 கப்

    2. பச்சரிசி  – 2 கப்

    3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப்

    4. தேங்காய்ப்பால் - 2 கப்

    5. சர்க்கரை  – 1 கப்

    6. கல் உப்பு - 3 தேக்கரண்டி

    7. சமையல் சோடா - 1 / 2 தேக்கரண்டி

    8. என்னை - தேவையான அளவு  

செய்முறை:

    *அப்பம் செய்வதற்கு முதல் நாள் , புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு மூன்றையும் கலந்து ஊறவைக்கவும். அரிசியில் தன்மைக்கு ஏற்ப ஊரும் நேரம் மாறுபடும் - குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்கு மேல் ஆகும்

    *அரிசி, பருப்புக் கலவையை மிக்ஸியில்  போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்புப் போட்டு பொங்க விடவும்

    *ஒரு நாள் கழித்து, மாவை வெளியில் எடுத்து அத்துடன் தேங்காய்ப் பால், சர்க்கரை, சமையல் சோடா ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்

    *நாம் ஏற்கனவே பார்த்தது போல், அப்பம் குழிவாக வருவதற்கு, அதே வடிவம் கொண்ட சட்டியில் தான் சுடப்போகிறோம்

    *சட்டியை அடுப்பில் வைத்துக் காய விடவும், சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக எல்லாத் திசைகளிலும் சுழற்றிவிடவும்

    *இப்போது அரைத்த மாவை சட்டியின் மத்தியில் ஊற்றுங்கள். அது அங்கேயே தங்கிவிடாதபடி சட்டியை மெல்ல சுழற்றி எல்லாத் திசைகளிலும் பரவும்படி செய்து கொள்ளுங்கள் (முட்டை அப்பம் வேணுமென்றால் பரவிய அப்பத்தின் மேல் உடனடியாக ஒரு முட்டையை உடைத்து ஊற்றிய பின் சுழற்றி எல்லாத் திசைகளிலும் பரவும்படி செய்து கொள்ளுங்கள்)

    *அப்பம் தேவையான வடிவம் வந்ததும், சட்டியை முழுவதுமாக மூடிவிடவும், இதன் மூலம், அப்பத்தை நாம் திருப்பி போடவேண்டியதில்லை, ஆவியிலேயே அப்பத்தின் இன்னொரு பக்கம் வெந்துவிடும், மூன்று நிமிடம் கழித்து அப்பத்தின் ஓரங்கள் பொன்னிறமாக வரும்போது எடுத்து விடலாம்

    *சட்டியிலிருந்து அப்பத்தை எடுத்தவுடன் உடனடியாகச் சாப்பிடவேண்டும். இத்துடன் தொட்டுக்கொள்ள தேங்காய்ப்பால், கொஞ்சமாக சீனி, உறைப்பான கூட்டு வேணும் என்றால் தேங்காயப்பூச் சம்பல், மாசிக்கருவாட்டுச் சம்பல் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். இது தவிர அவரவர் விருப்பத்திற்கு ஏற்றமாதிரி வேறு எந்தக் கூட்டும் சேர்த்துக் கொள்ளலாம்.
« PREV
NEXT »

No comments