Latest News
Showing posts with label உறவுகள். Show all posts
Showing posts with label உறவுகள். Show all posts

April 30, 2016

மரணித்த மனிதம் கவிதை நூல் வெளியீடு
by admin - 0

முல்லைப் பார்த்தா எழுதிய மரணித்த மனிதம் என்ற கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழா இன்று மாலை 4.30 மணிக்கு யாழ். கச்சேரி அருகில் உள்ள வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் நடைபெற்றது. 

யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை மாணவனும் அகில இலங்கை இளைஞர் இலக்கிய மன்றத்தின் அமைப்பாளருமாகிய ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி முதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் கலந்து கொண்டார். 

நிகழ்வில் வரவேற்புரையை சட்டத்துறையின் புகுமுக மாணவி ப.கதிர்தர்சினியும் ஆசியுரையை முல்லை வலய தமிழ்ப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் கி.கௌரிபுத்திரியும் வாழ்த்துரைகளை முத்தையன்கட்டு வலதுகரை மகா வித்தியாயலய அதிபர் சி. நாகேந்திரராசாவும் கனடா - படைப்பாளிகள் உலகம் நிறுவுநர் ஐங்கரன் கதிர்காமநாதனும் நூல.ஆய்வுரையை யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வராவும் ஆற்றினர். 

நூலாசிரியரான கற்சிலைமடு ஒட்டிசுட்டானைச் சேர்ந்த கனகரட்ணம் பார்த்தீபன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையில் மூன்றாம் ஆண்டில் பயின்றுகொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தொகுதியில் உள்ள கவிதைகளில் பெரும்பாலானவை போர் வலியைப் பாடுவனவாக உள்ளன.
Read More

April 22, 2016

வேலணை ஒன்றியம் பிரித்தானியா மூன்றாம் ஆண்டு நிறைவு விழா
by admin - 0

வேலணை ஒன்றியம் பிரித்தானியா மூன்றாம் ஆண்டு நிறைவு விழா

இந் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் அனைத்து வேலணை உறவுகளை அன்புடன் அழைக்கிறார்கள் நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவினர்



Read More

April 14, 2016

இந்திய இலங்கைக் கலைஞர்களின் கூட்டுத் தயாரிப்பாக நினைவெல்லாம் காமாட்சி இறுவட்டு வெளியீடு.
by admin - 0

யாழ். வண்ணை காமாட்சி அம்மன் (நாச்சிமார் கோவில்) மீது பாடப்பட்ட நினைவெல்லாம் காமாட்சி என்ற பக்திப் பாடல் இறுவட்டின் வெளியீட்டு விழா கடந்த 10.04.2016 ஆம் திகதி கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி முதல்வர் ச.லலீசன் தலைமையில் ஆலய முன்றிலில் அமைக்கப்பட்ட விசேட பந்தரில் இடம்பெற்றது. 

ஒலியமைப்பாளர் மினி மகாலிங்கத்தின் தயாரிப்பிலும் இசையமைப்பாளர் ஜி.சாயிதர்ஷனின் இசையமைப்பிலும் வெளிவந்துள்ள இந்த இறுவட்டின் வெளியீட்டு விழாவின் பிரதம விருந்தினராக இந்திய துணைத்தூதர் ஆ. நடராஜன் கலந்து கொண்டு இறுவட்டை வெளியிட்டு வைத்தார்.

நிகழ்வில் வண்ணை காமாட்சி அம்மன் ஆலயப் பரிபாலன சபைத் தலைவர் க.சிவகுமார் வரவேற்புரையையும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆசியுரையையும் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் சிறப்புரையையும் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் பா. அகிலன் அறிமுகவுரையையும் இசைவாணர் கண்ணன் இறுவட்டு வெளியீடு தொடர்பான ஏற்புரையையும் இசையமைப்பாளர் கோ. சத்தியன் (முரளி) நன்றியுரையையும் ஆற்றியிருந்தார்கள். 

இந்திய இலங்கைக் கலைஞர்களின் கூட்டுத் தயாரிப்பாக பத்துப் பாடல்களைக் கொண்டு இவ்விறுவட்டு வெளிவந்துள்ளது. இறுவட்டில் உள்ள பாடல்களை அமரர் வீரமணி ஐயர் மற்றும் தமிழகப் பாடலாசிரியர்களான வ.கருப்பன், முகிலன் ஆகியோர் எழுதியுள்ளனர். பாடல்களை சாந்தன் மற்றும் தமிழகப் பாடகர்களான மதுபாலகிருஸ்ணன், ஓ.எஸ்.அருண், அனுராதா ஸ்ரீராம், சோனியா, பிரசன்னாராவ், சின்மயி, சத்தியப்பிரகாஷ் ஆகியோர் பாடியுள்ளனர். 
மேற்படி இறுவட்டுக்கு இசைவழங்கிய கோ. சாயிதர்ஷன், ஈழத்தின் மூத்த இசையமைப்பாளர் இசைவாணர் கண்ணனின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 







Read More

April 12, 2016

சுவீஸ் வாழ் அல்வாய் அத்தாய் உறவுகளின் ஒன்றுகூடல் நிகழ்வு
by admin - 0

சுவிஸ்சர்லாந்து வாழ் அல்வாய்  அத்தாய் உறவுகளின் ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பி ப 3-00 மணியளவில் சூரிஸ் நகரில் நடைபெறவுள்ளது சுவிஸ் வாழ் அல்வாய் மக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது
Read More

March 20, 2016

லண்டன் வாழ் அல்வாய் சமூகத்தின் கலைமாலை நிகழ்வு
by admin - 0

பிரித்தானியாவில் வாழ்த்துவரும் அல்வாய் அத்தாய் மக்களின் ஏற்பாட்டில் அல்வாய் சமூகம் கலைமாலை நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை5-00 மணியளவில் வேம்பிளி நகரில் நடைபெற்றது , பல நூற்றுகணக்கான அல்வாய் மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர் இளம் சமூகத்தின்  கலைநிகழ்வுகள் இடம்பெற்றது குறிப்பிடதக்கது..
























Read More

March 10, 2016

மகாசிவராத்திரி தினம் -சரவணை கிராமம்
by admin - 0

சிவராத்திரி தினத்தில் சரவணை கொட்டாங்காடு ஞான பைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற காத்தவராயன் சிந்து நடைக் கூத்தின் பதிவுகள்














Read More

February 07, 2016

வேலணை கிழக்கு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் நடாத்திய பொங்கல் விழாவும், பத்தாவது ஆண்டு விழாவும் மிகவும் விமர்சையாக 30.01.2016 அன்று லண்டன் மாநகரில் இடம்பெற்றது
by admin - 0

வேலணை கிழக்கு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் நடாத்தும் பொங்கல் விழாவும், பத்தாவது ஆண்டு விழாவும் மிகவும் விமர்சையாக 30.01.2016 அன்று லண்டன் மாநகரில் இடம்பெற்றது



இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக harrow மாநகர முதல்வர் திரு சுரேஷ் கிருஷ்ணா அவர்களும் சிறப்பு விருந்தினராக பாடசாலையின் ஸ்தாபகர் அமரர் கந்தர் காங்கேசு அவர்களின் புதல்வர் திரு ஞானேஸ்கந்தன்  காங்கேசு அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக 



DR சிவ ஆதித்தன் (போசகர் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரத்தானிய )

குகன் நடராஜா திரு பொன்னையா தியாகராஜா (பொருளாளர் சைவதமிழ் பண்பாட்டு பேரவை -டென்மார்க் )

திரு குலசேகரம்பிள்ளை விக்கினராஜா (தலைவர் வேலணை கிழக்கு மகாவித்தியாலயம் பழைய மாணவர் சங்கம் -பிரான்ஸ் )

திரு மாணிக்கம் இந்துசேகரன் (செயலாளர் சைவ முன்னேற்றசங்கம் - பிரித்தானியா )

திரு நரேன் நரேந்திரன் (தலைவர் பிரித்தானியா தமிழர் துடுப்பாட்ட கழகம் )
கலந்துகொண்டார்கள்  லைக்கா நிறுவன அனுசரணையில் நடந்த இந்நிகழ்வில் ஊடக அனுசரணையாக தமிழ்இதல் இணைய வானொலி , லங்காசிறி இணையம், லங்காசிறி வானொலி மற்றும் விவசாயி இணையம் என்பன ஊடக அனுசரணையில் வழங்கியிருந்தன .

பிரதான நிகழ்ச்சி தொகுப்பை தமிழ்இதழ் வானொலி அறிவிப்பாளர் A.N வினோத் அவர்கள் வழங்கியிருந்தார்
















Read More

January 27, 2016

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பிரதான நுழைவாயிலை நீதிபதி இளஞ்செழியன் திறந்து வைத்தார் !
by admin - 0

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் 2002 ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு பழைய மாணவர்களால் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயிலை வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 1999 ஆம் ஆண்டு கல்விப் பொதுசாதாரணதரம் படித்த மற்றும் 2002 ஆம் ஆண்டு அந்த பாடசாலையில் உயர்தரம் படித்த பழைய மாணவர்களால் 25 இலட்சம் ரூபாய் செலவில் பாடசாலைக்கு அழகிய நுழைவாயில் அமைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, கிளிநொச்சி மாவட்ட நீதிபதியும் பாடசாலையின் பழைய மாணவனுமாகிய ரி.பிரபாகரன், மாவட்ட அரச அதிபர் எம்.வி.ரோஹண புஸ்பகுமார, வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, பொலிஸ் அதிகாரிகள்,அதிபர், ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள், பெற்றோர்,  எனப் பலரும் கலந்து கொண்டனர்.















Read More