Latest News
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

December 03, 2016

இன்று அகவை காணும் தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
by admin - 0

நல்லிரவின் கீதத்தை
நடுப்பகலின் கோவத்தை
காட்டுக்குள் இருக்கும் 
வேங்கையை கவிதை என 
சொல்லுக்குள் போட்டு தீ 
மூட்டிய கவியரசே...
இன்று உனக்கு பிறந்த நாளாம் !

தாயக புதல்லவர்களை சீராட்டி
அவர்களின் வீரத்தை எடுத்துரைத்த 
ஆசானே எட்டி விட்டாய் அகவையில் 
ஒன்றால்...

உன்னை அவ்வளவு சுலபமாக எழுதி 
விட என்னால் முடியாது..
என் பேனா முனையோ வன்னிப்பரப்பின்
புளுதியில் மேடு பள்ளம் எல்லாம் சென்று 
நிதானம் இழந்து நடுக்கத்துடன் நிக்கிறது..

பாரதிக்கு பின் தமிழரின் பாட்டுக்கு 
உரம் ஏற்றி தேரோட்டிய புலி வீரனே
நீ வெந்தனலா..?
வீசும் புயலா..?
ஆம் உன் கவிக்கு நிகர் ஏது..?
வையகப்பரப்பெங்கும் உன் கவி ஏராளம்
அதை கேட்ட செவிகள் என்ன தவம்
செய்ததுவோ...

தொட்டு தளுவிய உன் பெற்றவரும்
தாயக உறவுகளும் இணைந்து பாடும் 
வாழ்த்து எட்டுகிறதா உன் காதுகளுக்கு..?

முப்படையும்,பிற்படையும்,வால்பிடித்தபடையும்
எப்படையும் வந்த போது வெற்றி சமர் ஆடிய
வேங்கைகளுக்கு நீ அளித்த கவி விருந்து
எம் நாவில் இன் நாளும்..

பண்பாடோடு கலைதனை பார்போற்ற
கோலோச்சி தாயே நிகரான எங்கள்
தாயகத்தை காதல் செய்து கவிபாடிய
முதுமையின் முத்தே..

புதுவை ஐயாவே...
உனக்கு திரையா..?
நீ வருவாய் என வழி பார்த்து
விழி நிரம்பி நிக்கின்றோம் 
வந்து வீறாப்பாய் மிடுக்கோடு 
கவி மாலை சூடு...

ஆம் பெரியவரே..
உருக்குலைந்து,உனை இழந்து
துடுக்கிழந்து,துயர் சுமந்து
குருடாகி,முடமாகி
சாவு மணி ஒரு பக்கம் 
சத்துணவு ஒரு பக்கம்
யாருமற்ற ஏதிலியாய் 
நீ இருக்கும் திசை அறியாமல்
மூச்சடங்கி முனங்குகிறோம்..

என்றும் நீ வாழ்க...உன் கவி வாழ்க..!

உன்னோடு கூடுகட்டி வாழ்ந்திருந்த
குருவிக்கூட்டம் நாங்கள் இன்று உனை 
வாழ்த்துகிறோம் ஏற்றுக்கொள்..

பெரியவரே உங்களை என் கவியால்
(நீ/உன்) என வார்த்தைகளை அள்ளி 
வீசி விட்டேன் மன்னிக்க மண்டியிட்டு
வேண்டுகிறேன் !

தாயக மண்வாசனை நிரம்பிய இனிய
பிறந்தநாள் நல் வாழ்த்துகள் கவியரசே!!

உங்கள் அன்பின் 
நீர்வை இளவல் ஈழம்ரஞ்சன்.
Read More

November 27, 2016

கடவுள்களான கல்லறைகள்..!
by admin - 0

 

கார்கால மழையில் நனைகின்ற மலரே…
கார்த்திகைப் பூவான எங்களின் உயிரே…
காத்திருந்த உறவுகள் பூக்களைத்தான் பறிப்பார்
கல்லறைக்குள்ளே – காவல் காத்திட்ட
தெய்வங்கள் கண்களைத்தான் திறப்பார்.

தேகம் உருக்கி தேசம் காத்தவரே – இங்கு
தேசம் உருக கல்லறைக்குள் துயில்பவரே
இரத்தம் சிந்தி ஈழம் அமைத்தவரே – எம்
இதயங்கள் தொழுகின்ற தெய்வங்களானவரே
கார்த்திகை மாதம் மலர்களோடு வருகின்றோம் – உங்கள்
வேர்களில் விழுந்து ஈர விழுதுகளாகின்றோம்
ஆலயமணியொலிக்க எங்கள் ஆத்மாவில் தொழுகின்றோம் – உம்மை
எம் தெய்வங்களாக்கி இதயத்தில் வணங்குகின்றோம் – எங்கள்
இதயத்திலும் வணங்குகின்றோம்

கார்கால மழையில் நனைகின்ற மலரே…

உலகம் முழுதும் உறவுகள் அழுகின்றார் – உம்
கல்லறை தேடியே கடவுளை வேண்டுகின்றார்
முத்தம் கொடுத்த முத்தான கண்மணிகளே – உம்மை
முத்தமிடத் துடிக்கின்றோம் அருகினில் வாருங்களே
பாடல் வரிகள் பாரெல்லாம் ஒலிக்கும் – உம்மை
பார்க்க முடியாமல் எம்மிதயமெல்லாம் வலிக்கும்
அழுதழுது வருடங்கள் பல ஓடும் – உம்மை
எம்மண்ணில் காணது எம் இதயங்கள் வாடும் – எங்கள்
இதயங்களும் வாடும்

 

கார்கால மழையில் நனைகின்ற மலரே…

ராத்திரிப் பகலாக தூக்கம் தொலைத்தவரே – எம்மை
காத்திட வந்து உயிரை மாய்த்தவரே
கல்லறைகள் கட்டி உம்மை கோவில்களாக்கினோம் – இன்றோ
கோவில்களை இழந்து நாம் கல்லறைளாகினோம்
கண்களுக்கு தெரிவதில்லை கடவுளின் காட்சி – உம்மை
கடவுளாக வணங்குவதே பலர் கண்ட சாட்சி
உலகம் உள்ளவரை உயிர்கள் பல தேடி வரும் – எம்
தலைவனையும் வணங்கி எம் தலைமுறை வாழ்ந்து வரும் – எங்கள்
தலைமுறையும் வாழ்ந்து வரும்

கார்கால மழையில் நனைகின்ற மலரே…

– வல்வை அகலினியன்

 

http://feeds.feedburner.com/vivasaayi/QMzm

 
Read More

November 14, 2016

தமிழின் தலைமகனே - ச ச முத்து
by admin - 0


ஒவ்வொரு தந்தையர் தினத்திலும்
அப்பாவின் நினைவுகள் அலைமோதினாலும்- கூடவே
அண்ணனே உன் நினைவும்
எப்படியோ வந்து சேர்ந்துவிடுகிறது..
மீசை அரும்பும் வயதில்
உன்னிடம் வந்து சேர்ந்தோம்.
இன்று உலகின் நிகழ்வு ஒவ்வொன்றையும்
எப்படி பார்க்க வேணும் என்ற பார்வை நீ
உன் தோள்மீது எங்களை தூக்கி
வைத்து நீ காட்டியதுதானே தலைவா.
கூட்ட நெரிசல் நிறை
தேர் திருவிழா ஒன்றில் தன்
தோள்மீது தூக்கி வைத்து
காட்டும் தந்தையின் பரிவை போலவே
நீ எங்களை சுமந்தாய்.
தமிழின் தலைமகனே, நீ எமக்கு
வெறுமனே .38 கைத்துப்பாக்கியின்
தோட்டா பாயும் திசை மட்டும்
சொல்லி தரவில்லை.
எம் இருப்பிடம் வரும்போதெல்லாம்
உன் கையில் ஏதேனும் புத்தகங்கள்
இருந்தே நான் பார்த்திருக்கேன்.
சொக்கலிங்கம் மொழிபெயர்த்திருந்த
டால்ஸ்டாயின் போரும் அமைதியும்
எண்ணூறு பக்க புத்தகத்தை காவிவந்து
நீ எம்மை படிக்க சொன்னபோது
அந்த வயதில் உன்மீது இனம்புரியா
கோபம் வந்ததென்னவோ உண்மைதான்.
உனக்கு தெரியும் நாங்கள்
ஏதோ ஒரு சாகச எண்ணத்துடனேயே
உன்னிடம் வந்துள்ளோம் என.
அதனை இலட்சிய எண்ணமாக
மாற்ற நீ உழைத்த உழைப்பு
மிகப் பெரிது அண்ணா.
ஒருநாள் நீ வரும்போது
உன் கையில் அம்புலிமாமா..
எமக்கோ ஆச்சரியத்தின் உச்சம்.
பொன்னியின் செல்வiனின்
பழுவேட்டையரை சொல்லிதந்துவிட்டு
டால்ஸ்டாயின் ரஸ்ய இளவரசனை
படிக்க தந்துவிட்டு
இதென்ன அம்புலிமாமா என.
நீ அமைதியாக சொன்னாய்
அப்போதுதான் புதிதாக வந்திருந்த
ஒரு போராளியின் பெயர் சொல்லி
அவனுக்கு முதலில் கடினமான
ஒன்றை கொடுக்க கூடாது
முதல்லை அம்புலிமாமா பிறகு
படிப்படியா மற்றது என.
தினமும் நம்மை சுற்றி
நிகழும் ஒவ்வொரு சம்பவத்தையும்
இப்படித்தான் பார் என்று
புதிய ஒரு கோணத்தை உன்னிடமே
கற்றோம் தேசியதலைவனே,
எமக்கு காய்ச்சல் வந்த பொழுதெல்லாம்
பக்கத்தில் இருந்து "மகனுக்கு என்ன செய்யிது"
என கேட்டு எல்லாம்தான் நீ செய்தாய்..
முந்தா நாள் உன் வரலாறு தெரிந்த
ஒரு குர்தீஸ்காரன் சொன்னான்
' உங்கள் இனத்துக்கு கிடைத்த நல்ல தலைவன் ' என.
நான் சிரித்துக்கொண்டே சொன்னேன்.
' எங்களுக்கு மட்டுமல்ல உலகின்
எந்த இனத்துக்கும் இப்படியான ஒரு
தலைவன் கிடைக்க மாட்டான்' என!! - -
Read More

May 18, 2016

முள்ளிவாய்க்காலோடு முடக்கி கிடந்த தமிழினம் முழு மூச்சோடு நிமிர்ந்து நிற்கிறது... – ஈழத்து நிலவன்
by admin - 0

கொடிய நீண்ட இரவின் பிறப்பில்
எலும்பும் சதையுமாக
எரிந்து கொண்டிருந்தது
முள்ளிவாய்க்கால்.

கனவுகள் உடைந்து
கல்லறைக்குள் ஒளித்துக் கொண்டது
இரத்தமும் சதையுமாய்
எழுப்பிய சுவருக்குள்
எங்கள் முகங்கள்
எரிந்து கருகின...

முள்ளிவாய்க்காலில் சாவின் வாயில் அகலத் திறந்தே இருந்தது
செத்தவனின் உடலைத் தூக்கச் சென்றவர்கள் செத்தார்கள்
கொத்துக் கொத்தாகச் செத்தார்கள்
வீதிகள் தறப்பாள் வீடுகள் எங்கும்
பிணக்குவியல்கள் நிறைந்திருந்தன!

காக்கையும் குருவியும்
கரைந்த படி திரிய
நாறிக் கிடந்தன பிணங்கள்
நாங்கள் மனிதரில்லை என்றே
மூடிக் கிடக்கிறது முள்ளிவாய்க்கால்
புத்தரின் காவியினால்.

காயப்பட்டவர் கிடந்து முனகிய கொட்டிலின் கட்டிலில்
கொத்துக்குண்டு விழுந்து வெடித்ததை...
நேசித்த உறவல்லாம் ஒவ்வொன்றாய் சாக
யாசித்து யாசித்து வான்பார்த்து அழுததை...
யுத்தம் குடித்து சிந்திய ரத்தம்
வெள்ளை மண்மீது ஊறிக் கிடந்ததை...
கண்ணீர் வழிந்த கன்னத் தசைகளில்
கையால் தொட்டு உப்புச் சுவைத்ததை...
மறக்க முடியுமா? மறைக்க முடியுமா?

பஞ்சமும் பசியும் நிறைந்த ஊண், உறக்கம் அற்ற
நரக வாழ்க்கைதான் நிறைந்தது!
பிணக் குவியல்களுக்குள் இருந்து
குற்றுயிரும் குறை உயிருமாக தப்பியவர்கள்
நீண்ட வரிசையில் அடுக்கப்பட்டு
சிறைப்பிடிக்கப்பட்டு, அடிமையாக்கப்பட்டு
முள்வேலிகளுக்குள் அடைக்கப்பட்டார்கள்!

முள்ளிவாய்க்காலோடு முடக்கி
கிடந்த தமிழினம்
முழு மூச்சோடு நிமிர்ந்து
நிற்கிறது
இனிமேலும் எவனும்
கிட்ட நெருங்கி எம்மை அடக்க
நினைப்பான என்ன??

இன்று துரோகிகள்
ஓடி ஒளிக்கின்றனர்
முப்பது நாடும் ஒன்றாய்
செய்த தவறை மறைக்க தமிழனுக்கு
தீர்வு கொடுப்பதுபோல் நடிக்கிறன
நாட்களை நகர்த்தியபடி.

பூனையின்
பிணத்தைக் காட்டி
‘புலியைக் கொன்றுவிட்டோம்’
என்னும்
ஓநாய்களின் கூச்சலை
ஒதுக்கிவிட்டுக் கேள்
புலியின் உறுமல் கேட்கும்!

தாயக விடுதலையை
உயிர் மூச்சாய் கொண்டவர்கள்
தமிழீழ தேசமெங்கும்
விதையாய் கிடக்கின்றார்...

எழு!
விவேகத்தைத் துணை கொள்
பொறி கொண்ட விடுதலையை
ஊதிப் பெரிதாக்கு
உலகம் எம்பக்கம்
உண்மையும் எம்பக்கம்

எங்கள் எல்லை நீக்கி
உங்கள் படைகள்
ஓடும் வரை
எங்கள் வீரர்க்கு
இறப்பே இல்லை....

– ஈழத்து நிலவன் –
Read More

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 7ம் ஆண்டு நினைவுக் கவிதை
by admin - 0

ஏழு வருடங்களுக்கு முன்பாக சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்க, உலக மக்களின் கண்களுக்கு முன், அனைத்து வேதங்களும் தெய்வங்களும் சாட்சியாக இருக்கையில் முள்ளிவாய்க்காலில் வைத்து படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும். போராளிகளுக்கும் கண்ணீர் அஞ்சலிகளும் வீர வணக்கங்களும்.

Read More

May 01, 2016

தொழிலாளர்களது உழைப்பைச் சுரண்டி தொழிலாளர் தினம்...
by admin - 0

தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி
தொழிலாளர் தினம் கொண்டாடும் 
வேடிக்கையான நாடு இது
வேட்டியை வரிந்து கட்டிய அரசியல்வாதிகள்
மேடை போட்டு கூட்டங்கூடி
தொழிலாளர் உரிமை பற்றி பகட்டாக
தொண்டை கிழியக் கத்தும்
தொழிலாளர் தினம் இன்று
இன்றோடு முடிந்துவிடும்
இவர்களது தொழிலாளர் உரிமை
இதற்குப் பின்னர் அடுத்த 
தொழிலாளர் தினத்துக்கான அடுக்குத்தான்
தொழிலாளர்களது உழைப்புக்கேற்ற
ஊதியத்தைப் வழங்க முடியாதவர்கள்
உழைப்பைச் சுரண்டி
ஊரறிய விழா எடுக்கிறார்களாம்......
இதுதான் 
தொழிலாளர் தினம்!
இப்படித்தான் 
தொழிலாளர் உரிமை!

சிவேந்தன்.
Read More

April 04, 2016

புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 7 ஆம் வீரவணக்க நாள் இன்றாகும்
by admin - 0

சித்திரை நாலு சிதறின எம் மனங்கள்
ஊற்றடைத்து கொண்டது உங்கள்
மூச்சு ஊமை ஆகி போனது எங்கள் நாவு
வன்னி மண்ணே வரலாற்றில் என்றேனும்
வந்த பகை வென்றதுண்டோ??
உலகமும் சதி செய்தது உள்ளூர்
சிங்களமும் விஷம் வைத்தது..!

முப்படையிலும் தேரோட்டிய உங்கள்
நினைவுத் தடயங்களில் இன்று எங்கும்
எதிலும் சிங்களவன் செருப்பு தடயங்கள்
வியூகம் உடைக்க வந்த பகை அழித்து
விரட்ட தலைவன் குரல் எழுப்பி
வாவென்று அழைக்கு முன்னே
வரிசையில் முதல் சென்ற
வரலாற்று நாயகர்களே..!

சுய நலம் நீங்கி
பொது நலம் தாங்கி
விடுதலையே மேலோங்கி
எம் தேசத்திற்காக அர்பணித்த
பிரிகேடியர்களே..!

தாய்ப்பாசத்தை விலக்கி வைத்து
விடுதலையை சிரசில் வைத்து
அந்த ஒன்றையே சிந்தித்து
எங்கள் மனங்களெல்லாம்
கண்ணீர் தூவிச் சென்றவர்களே..!

நெஞ்சுக்குள் புயலை விதைத்தபடி
வெளியே குயிலெனப்பாடி, நதியென
ஓடித்திரிந்த உங்கள் நினைவுகளும்
தாயக மண்ணும் அதன் வரலாறும்
என்றும் எங்கள் மனதில் நிலைத்திருக்கும்..!

ஒரு கணம் நினைவுகள் ஒடுக்கியே
உங்கள் நினைவுகளை எம் நெஞ்சில்
சுமந்து இன்னாளில் வீர காவியமான
உங்கள் நினைவுகளோடு நாம் இங்கே
போர்க்கள விடி வெள்ளிகளே
உங்களுக்கு வீரம் நிறைந்த
தாயக கண்ணீர் பூக்களை
காணிக்கை ஆக்குகின்றோம் !!
வீர வணக்கங்கள் !!

கவிவரிகள்:-மார்ஷல் வன்னி

ஆனந்தபுரத்திலே ஆகுதியாகிய அக்கினி பிளம்புகளே...









Read More

December 03, 2015

இன்று அகவை காணும் தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயாவிற்கு அறுபத்தியேழாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
by admin - 0

இன்று அகவை காணும் தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயாவிற்கு அறுபத்தியேழாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
நீர்வை இளவல் ஈழம்ரஞ்சன்.

நல்லிரவின் கீதத்தை
நடுப்பகலின் கோவத்தை
காட்டுக்குள் இருக்கும்
வேங்கையை கவிதை என
சொல்லுக்குள் போட்டு தீ
மூட்டிய கவியரசே...
இன்று உனக்கு பிறந்த நாளாம் !
தாயக புதல்லவர்களை சீராட்டி
அவர்களின் வீரத்தை எடுத்துரைத்த
ஆசானே எட்டி விட்டாய் அகவையில்
ஒன்றால்...
உன்னை அவ்வளவு சுலபமாக எழுதி
விட என்னால் முடியாது..

என் பேனா முனையோ வன்னிப்பரப்பின்
புளுதியில் மேடு பள்ளம் எல்லாம் சென்று
நிதானம் இழந்து நடுக்கத்துடன் நிக்கிறது..
பாரதிக்கு பின் தமிழரின் பாட்டுக்கு
உரம் ஏற்றி தேரோட்டிய புலி வீரனே
நீ வெந்தனலா..?
வீசும் புயலா..?
ஆம் உன் கவிக்கு நிகர் ஏது..?
வையகப்பரப்பெங்கும் உன் கவி ஏராளம்
அதை கேட்ட செவிகள் என்ன தவம்
செய்ததுவோ...
தொட்டு தளுவிய உன் பெற்றவரும்
தாயக உறவுகளும் இணைந்து பாடும்

வாழ்த்து எட்டுகிறதா உன் காதுகளுக்கு..?
முப்படையும்,பிற்படையும்,வால்பிடித்தபடையும்
எப்படையும் வந்த போது வெற்றி சமர் ஆடிய
வேங்கைகளுக்கு நீ அளித்த கவி விருந்து
எம் நாவில் இன் நாளும்..

பண்பாடோடு கலைதனை பார்போற்ற
கோலோச்சி தாயே நிகரான எங்கள்
தாயகத்தை காதல் செய்து கவிபாடிய
முதுமையின் முத்தே..
புதுவை ஐயாவே...
உனக்கு திரையா..?

நீ வருவாய் என வழி பார்த்து
விழி நிரம்பி நிக்கின்றோம்
வந்து வீறாப்பாய் மிடுக்கோடு
கவி மாலை சூடு...

ஆம் பெரியவரே..
உருக்குலைந்து,உனை இழந்து
துடுக்கிழந்து,துயர் சுமந்து
குருடாகி,முடமாகி
சாவு மணி ஒரு பக்கம்
சத்துணவு ஒரு பக்கம்
யாருமற்ற ஏதிலியாய்
நீ இருக்கும் திசை அறியாமல்
மூச்சடங்கி முனங்குகிறோம்..

என்றும் நீ வாழ்க...உன் கவி வாழ்க..!
உன்னோடு கூடுகட்டி வாழ்ந்திருந்த
குருவிக்கூட்டம் நாங்கள் இன்று உனை
வாழ்த்துகிறோம் ஏற்றுக்கொள்..

பெரியவரே உங்களை என் கவியால்
(நீ/உன்) என வார்த்தைகளை அள்ளி
வீசி விட்டேன் மன்னிக்க மண்டியிட்டு
வேண்டுகிறேன் !

தாயக மண்வாசனை நிரம்பிய இனிய
பிறந்தநாள் நல் வாழ்த்துகள் கவியரசே!!

உங்கள் அன்பின்
நீர்வை இளவல் ஈழம்ரஞ்சன்.
Read More

November 26, 2015

உலகமும் ரசிக்கிறது காண்
by admin - 0

உலகமும் ரசிக்கிறது காண்

வீரம்
சுதந்திரம்
மண்வாசம்
விலைபோகா தலைவன்
செஞ்சமர் போராளி என
செழுமையான
தமிழீழத்தை
கருக்கொண்ட துரோகம்
கருவறுத்து சென்றது காண்

எதிரியும்
துரோகியும்
கைகுலுக்கி
நடத்திட்ட
அதர்ம யுத்தத்தில்
தர்மம் புதைக்கப்பட்டு
உரிமை மறுக்கப்பட்டு
ஊமையான ஈழத்தில்
கந்தக துகள் கவிவது காண்

குண்டு மழை
பொழிந்து
பூரிப்படைந்தது
யுத்த மேகம்
சகதியில்
புதைந்து
சரிந்தது
எம்மவர் தேகம்
வீரென வந்த ரவை
தோலுரித்து
தசை கிழித்து
நரம்பறுத்து
எலும்புடைத்து
குருதி குடித்து
உயிர் எடுத்து
சகதியில் நுழைந்து
செந்நிறமாய் கலந்தது காண்

மிஞ்சிட்ட உடல்
தஞ்சமென உயிர்
ஆறுதலுக்கு யாருமில்ல
அம்மா என்றும்
அப்பா என்றும்
மகளே என்றும்
மகனே என்றும்
துடி துடித்து
வெள்ளி பறவையின்
மிரட்டலுக்கும்
கொத்து குண்டின்
கொலைப் பசிக்கும்
இரையாகி போனதை காண்

உறவுகள்
உடற்குவியல்
ஈருயிராய் தமிழச்சி
வலியால் வாடி
மயக்கமுற்று
விழித்து
துணைவனை தேடுகிறாள்
அவயங்களில்லை
வார்த்தைகளில்லை
கண்ணீரால் பேசுகிறான்
தாகம்
உமிழ் நீரும்
உறுதுணை இல்லை
மூச்சையாகி
மழலை குரல் கேட்டு
மகவை அணைத்து
தொப்புள் கொடி
கடித்து
பிஞ்சை காக்க
பகையே
தஞ்சமென
நடக்க
மறைந்திருந்த சிங்களத்திற்கு
பாசம் மரணித்து
சிசுவை பறித்து
பசுவை தனித்து
தர்ம சக்கரத்தில்
கட்டி
சிங்களம் வேட்டையாட
கூகுளும் பார்த்தது
கழுகும் பார்த்தது
பதறிய தாய்க்கும்
கதறிய சேய்க்கும்
உதவிட சாமியில்ல
தமிழினம்
மீட்சியற்று மடிவதை
உலகமும் ரசிக்கிறது காண்

ஞா. ரேனுகாசன்
Read More

November 25, 2015

தேசம் காத்த எங்கள் காவலன் கரிகாலனுக்கு அகவை அறுபத்தொன்று...!
by அகலினியன் - 0

தேசம் காத்த எங்கள் காவலன் 
கரிகாலனுக்கு அகவை அறுபத்தொன்று...!

அகிலம் வாழ் தமிழரெல்லாம்
அகத்தில் உங்களை இருத்தி
நெஞ்சமதை நிமிர்த்தி 
நாம் தமிழர் என்றும்
நம் தலைவன் பிரபாகரன் என்றும்
மார்பு தட்டி முழக்கமிட்டு
உங்கள் பிறப்பின் நாளை
திருநாளாய் பெருநாளாய் 
கொண்டாடி மகிழ்கின்றோம்
எம் தலைவா..!

ஆண்டாண்டாய் ஆண்ட இனம்
அடிமைப்பட்டு வீழ்ந்த போது
வல்வையின் மண்ணிலே
வல்லவனாய் நீ மலர்ந்தாய்
எம் அடிமையின் விலங்கொடிக்க
புலிக்கொடியின் கீழ் படை திரட்டி
பகைவர் கதையை முடித்தாய்
கரிகாலன் எங்கள் காவல் 
கடவுளாய் வரம் தந்தாய் 
வரலாறு பல நூற்றில் இடம் பிடித்தாய்
முப்படைகளையும் நீ அமைத்து
தமிழர்க்கு என்றொர் அரசமைத்து 
எதிரிகள் யாவரும் உங்கள்
பெயரை கனவிலும் நினைவிலும் 
உச்சரிக்க வைத்த தன்மான வீரனே 
எங்கள் தலைவா..!

கானகம் கூட உங்கள் வீடானது
மரங்கள் கூட உங்கள் கூடானது
தேசம் மீட்பதே உங்கள் இலக்கானது
இளைஞர்கள் சேனைகள் 
உங்கள் துணையானது
உலகத் தமிழர்களுக்கு எல்லாம்
உங்கள் பெயர் உயிரானது
காலம் தந்த வீரத்தமிழா எங்கள் தலைவா..!

வரி உடையில் உங்கள் நடை கண்டு
எதிரி படைகள் குலை நடுங்கும்
ஆண்டுக்கு ஒரு முறை 
உங்கள் குரல் கேட்க்க
தமிழினம் மட்டுமா காத்திருக்கும்
சிங்கள அரசோடு உலக அரசும் 
அல்லவா.....
ஒன்று கூடி செவி தீட்டி காத்திருக்கும்
அப்போதே நாம் உணர்ந்து விட்டோம்
நீங்கள் எங்கள் தேசத்தின் 
தந்தை என்றும்
நீங்கள் எங்கள் தேசத்தின் 
சொத்து என்றும்
தமிழர் எழுச்சிக்கு உரமிட்ட 
எங்கள் தலைவா!

உங்கள் சுட்டு விரலுக்குள்ளே
எதிரி மட்டுமா சுழன்றான்
வல்லமை பேசும் வல்லரசுகளும்
அல்லா...
சுழன்றது எம் தலைவா
உங்கள் சொல்லும் செயலும் ஒன்றே
உங்கள் தீர்க்க தரிசனமும் நன்றே
என்று இன்றே நாம் 
உணர்கின்றோம் நம் தலைவா....!

கரிகாலன் எங்கள் காவலன்
அவன் புவியாழ வந்தவன்
தமிழர் எமக்கு அடையாளம் தந்தவன்
களத்தில் எதிரியை வென்றவன்
தமிழர்கள் இதயத்திலே உறைந்தவன்
தமிழரின் துயரம் துடைத்திட
வந்த இறைவனிவன்
எதிரிக்கும் மனிதநேயம் காட்டும் 
மனிதநேய வித்தகன்
அண்ணனாய் எம்மை வழி நடத்தியவன்
அணையாத விளக்காய் 
எமக்கு ஒளி தருபவன்
இருள் இல்லை ஒரு நாளும் எமக்கு
எம் தலைவன் சூரியதேவனின் 
கொள்கை வழியில் நடந்தால்...!

வீழ்ந்து கிடந்தோம் உங்கள் 
வரவால் எழுந்தோம் 
தலை நிமிர்ந்தோம் 
அடிமை என்று எம்மை வதைத்தவரின்
சிறையை உடைத்தோம் 
ஐநா வரை குரல் தொடுத்தோம் 
தமிழர் என்னும் இனத்தின் 
நிலை உரைத்தோம் 
உங்கள் வரவால் எம் தலைவா 
எங்கள் தமிழ் குமரா 
காலத்தை வென்ற மா தலைவா
உங்கள் வரவை எம் விழிகள் 
நோக்கி காத்திருக்கிறதே
வாரும் எங்களுக்காய் வாரும்
தமிழர் எங்கள் தலைவா
எம் இன்னிலையை பாரும்
தலைவா எங்கிருந்தாலும் 
நீங்கள் வாழ்க
எங்களுக்காக அவதரித்த 
உத்தமனே வாழ்க!

Read More

November 21, 2015

முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்திலிருந்து...
by அகலினியன் - 0

முள்ளிவாய்க்கால்
துயிலும் இல்லத்திலிருந்து...

ஒரு புலி வீரனின் சீருடை
வீரத்தின் அடையாளமாய் 
அமைதியாக
உறங்கிக் கொண்டிருக்கிறது!!!

வலி கொண்ட இனத்தின் 
விடிவிற்காக - வரிப்புலி சுமந்து
வீறுகொண்டெழுந்த வேங்கை ஒன்று
வீரப் போர் புரிந்து....
வீரமரணம் அடைந்த பின்பும்...
தனது உடல் விதையாகிப் போக...
தன் உடல் சுமந்த 
வரிப் புலிச் சீருடையின்
ஒற்றைப் பகுதியை... 
வீரத்தின் அடையாளமாய்
விட்டுச் சென்றுள்ளான்.!!

ஆறாண்டுகள் போன பின்பும்...
மங்கிப் போகாத பொலிவுடன்
யுத்தத்தின் காயங்களை சுமந்தவாறு
ஒரு புலி வீரனின் சீருடை
வீரத்தின் அடையாளமாய்
முள்ளிவாய்க்கால் மண்ணிலே
அமைதியாக...
உறங்கிக் கொண்டிருக்கிறது!!!

"விடுதலைப் புலிகள் வீழ்வதுமில்லை.!!
இலட்சிய வீரர்கள் இறப்பதுமில்லை!!!"

- வல்வை அகலினியன்
Read More

October 18, 2015

உறவுக்கூடுகள் கலைந்து போனது!
by அகலினியன் - 0

உறவுக்கூடுகள் கலைந்து போனது!

ஈழத்தெருக்களில் 
முழங்கிய உன் குரல்
அடங்கிப்போய் அமைதியாய்
கிடக்கின்றது.
உறவுக்கூடுகள்
கலைந்து போனதால்...

கொடிய நோய் வந்த
செய்தி எமக்கு தெரியாமல்
உரிமை சிறகொடிந்த
தோழிகளாய் நாம் 
தொலைந்து 
தொலை தூரமாகிப் போனோம்.!!

நேற்றைய காற்று
சாவு செய்தியை
காவி வந்தது.!!

எம் இனம் எங்கனும் 
கலகலப்பிழந்தது
ஏற்க மறுத்தது மனது.!!
ஏற்றுக்கொண்டது நியதி

ஈழப்பெண்களின் வீரம்சொல்லி
நீ பாடிய தெருக்களில்
உன் தீரம் சொல்லி
கூவிட முடியா 
வாயடைத்து நிற்கின்றோம்

உலகத்தமிழ் இனமே 
ஊமையாய் அழுகின்றது
உண்மைகள் தெரியாது..!!


Read More

தேசியக் கொடியோடு பயணிக்க வேண்டியவள்... இன்று தனிமையோடு போகிறாள்!!!!
by அகலினியன் - 0

தேசியக் கொடியோடு பயணிக்க வேண்டியவள்...
இன்று தனிமையோடு போகிறாள்!!!!

அடிமைப்பட்டுக் கிடந்த 
தமிழர் தேசத்தில்
அடுப்பூதும் பெண்கள் கையிலும்...
ஆயுதம் ஏநத வைத்த 
தலைவன் வழியில்...
அடிமை விலங்கினை 
உடைத்தெறியவென 
பூக்களும்....
போர்களம் போனவர்களில்
நீயும் ஒருத்தி..!

வலி சுமந்த 
வீர மங்கையான நீ....
போர்க்களத்தில்....
வரி சுமந்த
புலியாகிப் புயலானாய்.!!
அரசியல் சாணக்கியத்திலும்
தென்றலாய்... பூவாய்...
உலா வந்தாய்..!!

இன்றோ...
நீ இறந்தநாள் என...
அனைத்துத் தமிழரும்
தமிழர் ஊடகங்களும்
கண்ணீர் அஞ்சலியோடு
அழுது தீர்க்கின்றனர்..!!!

ஆனாலும்.....
உனது சரித்திரம் அப்படியல்ல...

தலைவன் நிழலில்...
தலைவனின் பார்வையில்...
தளபதிகள் போராளிகளோடு
மக்கள் கடலில் சங்கமித்து
வானலைகளில்
விடுதலைக் கீதங்கள் 
இசைக்கப்பட்டு...
தேசமெங்கும் 
மஞ்சள் சிகப்புக் கொடிகள்
அலங்கரிக்க...
தோரணங்கள் தொங்க விடப்பட்ட
வீதிகளில் - தமிழீழ 
தேசியக் கொடி போர்த்தப்பட்ட
உன் புனித
வித்துடல் பயணிக்க...

தெருவெல்லாம் காத்திருக்கும்
குழந்தைகள் முதல்
முதியவர்கள் வரை
தம் உறவொன்று
வீரமரணம் எய்தியதாக...
உன் புனித வித்துடலை
கண்ணீரோடு 
மலர் மாலைகள் சாத்தி
வணங்கிக் கொள்ள...

தமிழீழ தாகத்தினைத் தாங்கி
தமிழர்களின்...
நினைவுகளைச் சுமந்து
"புலிகளின் தாகம்
தமிழீழத் தாயகம்" என 
துயிலும் இல்லத்தில் 
இராணுவ மரியாதையோடு
வீரச்சாவாய்....
விதைக்கப்பட்டிருக்க வேண்டிய 
உன் புனித வித்துடல்,

இன்றோ....
சாதாரண சாவாய்...
எதுவமற்று
வெறும் சடங்குகளோடு
தீயினில் சங்கமித்து
வெறும் சாம்பலாகிப் போனதே.!!!

வீர வரலாறாக...
வீர வணக்கத்தோடு...
உயர் பதவி நிலையோடு...
கல்வெட்டுகளிலும்
சரித்திரப் பக்கங்களிலும்
பதிக்க வேண்டிய உன்னை...

இன்றோ....
சூனியத்தில் இருந்து 
சாபங்களை வேண்டி
வெறும் கண்ணீர்
அஞ்சலிகளோடு
கோழைகளாக.....
கையாலாகாத நிலையில்
வெட்கித்து நின்று - வெறும் 
அஞ்சலி மட்டுமே செய்து 
கண்ணீரோடு கதறுகின்றோம்.!!!

வீரச்சாவாய்...
வீர வரலாறுகளுடன்
விதைக்கப்பட வேண்டிய
உன் புனித வித்துடல்...

இன்று...

தீயினில் சங்கமாகி
சாம்பலாகிப் போனாலும்...
தமிழர்களாகிய நாம்
நெஞ்சமெல்லாம் சுமந்து
உனக்கான கல்லறை அமைத்து
வீர வரலாறுகளாய்....
உன் வரலாற்றுப் பக்கங்களையும்
உன் நினைவுகளையும்
எழுதி... எழுதியே...
வீரவணக்கம் செலுத்துவோம்!!!!

Read More

September 14, 2015

திலீபன் அண்ணா... எழுந்து வா!!!
by admin - 0

திலீபன் அண்ணா... எழுந்து வா!!!

வஞ்சம் சூழ்ந்த வையகத்திலே
சாவுக்கு மஞ்சம் போட்டு
அமர்ந்தவனே!
உன் நெஞ்சத் துணிவு
கண்டு காந்தீயம் மிரண்டதடா..!

துஞ்சும் விழி மறந்து
அன்னம் தண்னீர் துறந்து,
உண்ணா நோன்பினை ஏற்று,
ஈழத்தமிழனுக்காய்
அன்று நல்லூர் வீதியினிலே
தவம் இருந்தாயடா..!

பார்த்தீபனே பார்த்தாயா.............
இந்த மண்ணில் மனித நேயம்
மரணித்து நெடுங்காலம்.!!

பன்னிரண்டு நாள்
பச்சைத் தண்ணீர் கூட அருந்தாமல்
பல்லாயிரம் பேர் பதறி அழ....
அவர்கள் முன் சிறுகச் சிறுக
கருகி மாண்டாயடா

"மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்" என
நாள் வெகு தூரமில்லையென
நீ உரைத்தது போலவே
ஈழம் நிமிர - தமிழன்
உரம் கொண்டு எழுந்தானடா.!!

வீட்டுக்கு ஒரு பிள்ளை
நாட்டுக்காகவென வீறு
கொண்டு விரைந்தானடா.!!

உன் கனவு பலிக்கும்
நன்னாள் நெருங்கி
வரும் வேளையிலே...
வல்லரசு கூட்டாகி - ஒற்றைத்
தமிழைச் சுற்றி வளைத்து...
முற்றுகைப் போர் தொடுத்து...
முள்ளிவாய்க்காலில்
முடிவு கட்டினாரய்யா!
முடிவில்லாப் பயணம் அது!

முள்ளிவாய்க்கால் முடிவல்ல...
ஆரம்பம் என்பதை
நாம் அறிவோம். - எங்கள்
மாவீரர் கனவுகள் வீண்போகாது.!!

வானம் வழி சமைத்தால்
வந்து போக மாட்டீரோ...
மானத்தமிழன் ஒன்று சேர
உங்கள் எழுச்சிக் குரலாம்
இனிய குரலால்...
உரிமையின் உண்மை விளக்கம்
உரைத்து எழிச்சிக்கு விதை
தூவிச் செல்வீரோ.!!

ஆண்டுகள் பல துவண்டாலும்
அண்டவெளிகளில் உங்கள்
குரல் ஒலித்தபடி இருக்குதய்யா...
ஞாலம் போடும் திருகுதாளத்தில்
எங்கள் கோலம் மாறுதய்யா.!!

காலம்... இனிக் காத்திருக்காது
தலைவன் ஆணை தவறாது.
சேனை மீண்டும் உருவாகும் - அது
சுதந்திரத் தமிழீழத்தை பிரசவிக்கும்.!!

- வல்வை சபீதா

Read More

July 03, 2015

நாளை அது நடந்தேறும்
by admin - 0

நாளை அது நடந்தேறும்

(அவன் ஒரு தமிழ்க்கவிஞன். ஈழத்தை நேற்றுவரை ஊடகங்களில் மட்டுமே பார்த்தவன். முதன்முறையாக ஈழமண்ணில் காலடிவைக்கிறான். ஆகாய வெளியெங்கும் சாம்பலாய்க்கருகிய தமிழர்களின் புகைமண்டலம் இன்னும் அப்படியே இருக்கிறது. எல்லாத்திசையிலும் பிணவாடை. அவன், நாசியையும் இமைகளையும் இறுக்கப் பொத்திக்கொண்டு நடக்கிறான். எதிரே ஒரு குழந்தை அழும் குரல்.வேதனையோடு பார்க்கிறான். அதனருகே போய் வீரியமாய்க் கேட்கிறான். அவன் பேனா பேசத்தொடங்குகிறது....)

ஏனழுகிறாய்க் குழந்தாய்?
ஆறேழு நாட்களுக்குமுன்
உன் தாயும் தகப்பனும்
உயிரோடு எரிக்கப்பட்டார்களாமே
அப்போதுகூட நீ 
அழுததில்லையாமே
இப்போது ஏனழுகிறாய்?
பயந்தவர்களின் கூடாரம்
பரப்பிய பொய்களை 
நம்பிவிட்டாயா?
அவன்-
வெறும் அத்தியாயமல்ல
ஒரே இரவில் முடித்துவிட.
சில தலைமுறைகளின்
வரலாறு!
அவன் ஒரு யுகத்தீ!
ஈரமற்றவர்களின் எச்சிலா
அவனை
அணைத்துவிட முடியும்?

போர்த்தமிழின்
ஆயுத எழுத்து அவன்.
பீரங்கிக் குண்டுகளே
பட்டுத் தெறிக்கும் அவனைத்
துளைத்துவிடும் கனவு
தோட்டாக்களுக்கா
கைகூடும்?
அவனை அழித்துவிடும்
ஆயுதசூட்சுமம்
அறிவியலுக்கே
இன்னும் அகப்படவில்லை.
அழாதே குழந்தாய்....!
இன விடுதலையின்
பிரகடனப் பத்திரத்தில்
கையெழுத்திடாமல்
மரண சாசனத்தில்
அவன் பேனா மண்டியிடாது!
பூனையின்
பிணத்தைக் காட்டி
'புலியைக் கொன்றுவிட்டோம்'
என்னும்
ஓநாய்களின் கூச்சலை
ஒதுக்கிவிட்டுக் கேள்
புலியின் உறுமல் கேட்கும்!
இந்த நூற்றாண்டின்
ஒரே மனித அதிசயம்
அவன்.
அவனோர் விசித்திரப் போராளி.
அவனுக்கு
சிறகுகளும் உண்டு.
செதில்களும் உண்டு!
தனிமனிதன் அல்ல
ஒரு மாபெரும்
கட்டமைப்பின்
சிற்பி அவன்!
ஆயுதம் ஏந்தினான்.
அவன் தோட்டாக்களுக்கு
இரையானது
ஆட்டுக்குட்டிகள் அல்ல.
ஓநாய்களும்
நரிகளும்தான்!

களையெடுப்பது
எப்படி
கொலைக்குற்றமாகும்?
அந்த வேங்கையின்
வேட்டைப் பட்டியலில்
இந்திய நரியும்
ஒன்று உண்டு.
அதனாலேயே
இந்தியம்
அவன் இறந்துவிட்டதாக
கொண்டாடுகிறது
கொண்டாடட்டும்.
நீ அழாதே குழந்தாய்!
அவன் வருவான்.
காவுகொடுக்க வேண்டிய
கூமுட்டைகள்
இங்கே
குவிந்து கிடக்கின்றன
ஒவ்வொன்றாய் அல்ல.
ஒட்டுமொத்தமாய்
உடைத்தெறிய
சிரித்துக்கொண்டே
அவன் வருவான்!
'நானிருக்கிறேன்
உன்னைக் கரைசேர்க்க'
என்று
இந்துமகா சமுத்திரத்தின்
அந்தப் புறமிருந்து
நாளுக்கொரு 
கரைவேட்டிகள் ஓலமிடும்
நம்பாதே.
மகுடங்களைக்
கழட்ட மறுக்கும்
அந்த
மண்டை ஓடுகளுக்குள்
உனக்கான எதிர்காலத்தைச் சிந்திக்கும்
மூளை இல்லை.
உனக்கான நாளைகளை
வரையறுக்க
அவன் ஒருவனால்
மட்டுமே முடியும்.
வருவான்!

கொக்கரிக்கும் காடைகளை
எச்சரிக்கையாய்
இருக்கச்சொல் குழந்தாய்.
எந்த நேரத்திலும்
அவன் வரக்கூடும்!
இதுவரை
அவனால் தண்டிக்கப்பட்டவர்களை
விடவும்
மன்னிக்கப் பட்டவர்களே அதிகம்.
இனி -
நன்றிகெட்டவர்களின்
நெற்றிப் பொட்டுகளை
அவனின்
மனிதாபிமான துப்பாக்கி
மன்னிக்காது!
கந்தக குண்டுகள்
பொசுக்கிய உயிர்கள்
எத்தனை?
எந்திரக்கருவிகள்
நசுக்கிய உடல்கள்
எத்தனை?
எல்லாக் கணக்கும்
அவனுக்கு தெரியும்.
சாம்பலாகிப்போன
ஒவ்வொரு உயிருக்கும்
ஈரேழு மடங்காய்
அவன் ஈடுகட்டுவான்!
பாதுகாப்பு வளையத்திற்குள்
அடைபட்டுக் கிடக்கும்
உன் இனத்திற்குச்
சொல்லிவை.
கடைசித் தமிழனும்
சாம்பலாகும் வரை
அவன் காத்திருக்கமாட்டான்.
விரைவில் வருவான்!
தனியாக அல்ல.
தடயமே இல்லாமல்
அழிக்கப்பட்டதாய்ச்
சொல்லப்பட்ட
அவன் தளபதிகளோடு!

ஒரேநாள் யுத்தத்தில்
விட்டுக் கொடுத்த
உரிமைகளையெல்லாம்
தட்டிப் பறிப்பான்!
மறுநாள் -
அவன் காலடியில்
மல்லார்ந்து கிடந்து
உயிர்ப்பிச்சை கேட்கும்
ரத்தக்காட்டேரியின்
ஒளிக்கலப்பில்லாத
உண்மையான முகமும்
அவன் தோட்டாக்கள்
சல்லடையாக்கிய
காட்டேரியின் சடலமும்
ஒவ்வொரு ஊடகங்களிலும்
வெளியாகும்.
அதே தினத்தில் -
நந்திக்கடலின் கரைகளில்
காட்டிக்கொடுத்தே
கௌரவம் பெற்றவனின்
நிர்வாணப் பிணமும்
நீந்தும்.
அப்போது 
நீ அடையாளம் காட்டு.
இவன்தான்
இவன்தான் எங்கள்
'இனத்துரோகி' என்று!
அவன் துப்பாக்கி
முழங்கி முடித்து
மௌனமான பிறகு -
அடைபட்டுக் கிடக்கும்
கூட்டம்
சுதந்திர சிறகுகட்டி
அவனை நோக்கி
பறந்து வரும்.
அவன் -
தோளில் உன்னைத்
தூக்கியபடியே
அந்தக் குயில்களைநோக்கி
வீரநடை போடுவான்!
நீ கைகொட்டிச் சிரிப்பாய்.
அந்தச் சிரிப்புச்சந்தத்தில்
தமிழீழத்தின் 'தேசியகீதம்' பிறக்கும்!

- நேசன் ரவி
Read More

June 20, 2015

அகதியாக வாழ்ந்துபார்..! உனக்கும் வலி புரியும்!!
by admin - 0

அகதியாக வாழ்ந்துபார்..! 
உனக்கும் வலி புரியும்.!!
-------------------------------------

பார்வையாளனாக வெளியில் இருந்து
சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு,
எங்கள் அவலமான வாழ்க்கையை
கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கும்
சர்வதேச சமூகமே…!

ஒரேயொரு நாள்
நீயும் அகதியாக வாழ்ந்துபார்!
எங்கள் மரணவலி உனக்குப் புரியும்!

குடியிருக்க ஒரு வீடு இல்லாமல்…
படுத்துறங்க ஒரு படுக்கை இல்லாமல்…
வலிகளை பகிர்ந்து கொள்ள உற்றார் உறவுகள் இல்லாமல்…
இடம்பெயர ஒரு ஊர் இல்லாமல்…
கேட்க எந்த நாதியும் இல்லாமல்…
நடைப்பிணங்களாக…
அங்கங்களை இழந்து சதைப்பிண்டங்களாக…
வழிந்தோடும் குருதியை கட்டுப்படுத்த
ஒரு துளி மருந்து இல்லாமல்…

பசியோடு கதறும் பச்சைக் குழந்தைக்கு
அன்போடு அணைத்து
ஒரு சொட்டுத் துளி பால் பருக்க
மார்பினில் பால்கூட இல்லாமல்…

ஒட்டிய வயிரோடும்,
பட்டினி பசியோடும்
போகும் இடமெல்லாம் துப்பாக்கிச் சன்னங்களும்...
எறிகணைக் குண்டுகளும்...
ஒவ்வொரு உயிராக ருசித்துக் கொண்டு துரத்த
பாதி உயிர் போனபடி
மீதி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு
முப்பது வருடங்களுக்கு மேலாக
அகதியாக ஓடியோடி…….

உயிரோடு வாழ்வதற்கு
ஒரு நிரந்தரமான
ஒரு பாதுகாப்பான இடமேதும் இல்லாமல்…
அலைந்து அலைந்து
புதுவிடியலைத் தேடிக்கொண்டிருக்கும்
எங்கள் அகதி வாழ்க்கையை
நீயும் உணர வேண்டுமென்றால்…

ஒரேயொரு நாள்
நீயும் அகதியாக வாழ்ந்து பார்!
எங்கள் மரணவலி உனக்குப் புரியும்!

-வல்வை அகலினியன்.
(29-06-2013)
Read More

May 15, 2015

உணர்வற்ற ஜென்மங்களுக்கு.!!-வல்வை அகலினியன்
by admin - 0

உணர்வற்ற ஜென்மங்களுக்கு.!!
-------------------------------------------------------

(உணர்வற்ற ஜென்மங்களுக்கு... மனக்குழப்பத்துடன் எழுதுகின்றேன்)

● என் தங்கை
இசைப்பிரியா அவளை
துன்புறுத்தி சீரழித்து
காமப் பேய்கள்
இழுத்துச் செல்லும்
காட்சிகளிலும்…

இதழ்கள் புடுங்கப்பட்ட
பூவாகத் துடித்து
“அய்யோ,
துவாரகா நானில்லை” என
இறுதி வார்த்தைகளை
விட்டுச் சென்ற
காட்சிகளிலும்…

கைகள் கட்டப்பட்டு
கசங்கிய பூவாக
இதழ்கள் உதிர்ந்து
பெண்மை கலங்கி
உயிரற்ற உடலாக
உருக்குலைந்த கிடந்த
காட்சிகளிலும்…
இறந்தே போய் விட்டது
என் மனது!

அவளை…
ஒரு சாதாரண
மனிதப் பிறவியாக
பார்க்கும் போது
பதறி வலிக்கிறது
என் மனது!

அவளை…
ஒரு சரித்திரப்
பெண் புலியாகப்
பார்க்கும் போது
வெடித்துக் கொதிக்கிறது
என் இதயம்!

கையாலாகாத…
அண்ணனாக இருந்து கொண்டு
உன் உணர்வுகளை நினைத்து
என் உணர்வுகளைக்
கொட்டலாம் என்றால்…

என் உணர்வுகள் மூர்ச்சையாகி
என் வார்த்தைகள் ஊமையாகி
என் பேனா அழுகின்றது!
என் தாளோ நனைகின்றது!

எதையெதையோ எழுதிய எனக்கு
உன்னை மட்டும்
எழுதமுடியாமல் மூடிப் போனது
என் கணக்கு!

உன் இறுதி வலிகளை...
உன் இறுதிக் கதறல்களை...
உன் இறுதி எண்ணங்களை...
உன் இறுதி நினைவுகளை...
உன் இறுதி உணர்வுகளை...
உன் இறுதி ஏக்கங்களை...
உன் இறுதி தவிப்புக்களை...

எழுத…
தேடித் தேடிப் பார்க்கின்றேன்
வார்த்தைகள் கூட வராமல்
மறைந்து நின்று
அழுது புலம்புகின்றது!

இருந்தும் ஓரிரு வார்த்தைகளால்
என் உணர்வுள்ள வலிகளையாவது
வார்த்தைகளாக…
எழுதலாம் என்று
காகிதத்தை எடுத்தால்…
என் கண்ணீரால்
நனைகின்றது காகிதம்!

என்னால்…
எதுவும் முடியாமல்
இவளின் மருத்துவச்சி
கானவியிடம் கவிதை கேட்டேன்

அவள் கண்ணீரையே தந்தாள்..!

காரணம் கேட்டேன்,
கதறியபடி வார்த்தைகள் தந்தாள்!

கானவியின் வார்த்தைகளை
பொறுக்கிக் கொண்டு
என் உணர்வுகளை
எழுதலாம் என்றுதான்
ஆரம்பித்தேன்…
விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com

சில நாட்களாக
சில உணர்வற்ற
சில மானங்கெட்ட மனிதர்களால்
எதையும் சீராக
எழுத முடியாமல்
சினந்து போனது என் மனது!
சிதைந்து போனது என் எழுத்து!
சிவந்து போகின…
என் விழிகள்!
விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com

விக்கித்து விக்கித்து
அழுகின்றேன்…
முனகி முனகி எழுதுகின்றேன்!

“இசைப்பிரியாவின் படத்தினை
பதிவு செய்யாதீர்கள்
மனது வலிக்கிறது
என்கிறீர்கள்”

“உங்களின் அக்காள், தங்கை
படங்களினை…
இவ்வாறு பதிவிடுவீர்களா…?
மனது கொதிக்கிறது
என்கிறீர்கள்”
tgte

இவ்வாறு பல விதமான
வார்த்தை அம்புகளை
தூர இருந்து ஏவுகிறீர்கள்
நாங்களும்…
ஆறு வருடங்களாக…
உங்கள் வார்த்தை அம்புகளை
தாங்கிக் கொண்டோம்..!

நீங்களும்…
எம் தங்கையின் உருக்குலைந்த
கோலங்களைப் பார்த்து
உங்களின் மனது கொதித்து

எதையாவது செய்வீர்கள் என…
செய்வீர்கள் என…

உணர்வுகளால்…
பொங்கி எழுவீர்கள் என…
பொங்கி எழுவீர்கள் என…

கோபமாகி…
தெருக்களில் இறங்கிப்
போராடுவீர்கள் என…
போராடுவீர்கள் என…

உங்களின் நாடி நரம்புகளிலும்
உங்களின் எண்ண உணர்வுகளிலும்
எம் தங்கையின்
கதறல் ஒலி கேட்டு
எம் தங்கையின்
அவல நிலை பார்த்து
ஆடைகள்
அவிழ்க்கப் பட்டதைப் பார்த்தும்
துடிக்கத் துடிக்க
கொல்லப் பட்டதைப் பார்த்தும்
சினிமா கதாநாயகர்கள் போல்
நீங்களும்…
பொங்கி எழுவீர்கள் என
நம்பினோம்..!

ஒவ்வொரு வருடங்களும்
ஒவ்வொரு சந்தர்ப்பங்களில்
எம் தங்கையின்
இதழ்கள் உதிர்ந்து
இரத்தம் தோய்ந்த படங்களை
உங்களின் ரோச நரம்புகளுக்கு
தூண்டட்டும் என்று
பல தடவை பதிவிட்டோம்!

நீங்களோ…
எங்கோ தூரத்தில்
இருந்து கொண்டு
வார்த்தை அம்புகளை
ஏவி விட்டு
வாய்ச்சவுடால் வீரர்களாக.,
ஒவ்வொரு முறையும்
ஏவி விட்டு ஒதுங்கி விடுகிறீர்கள்..!
உங்கள் செயல் முறைகளில்
இதுவரை…
எந்த மாற்றங்களும் இல்லை!!!
விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com

எம் தங்கையின்
ஆடைகள் அவிழ்ந்த
படத்தினைப் பார்த்து
உள்ளம் கொதிக்கிறதே என்று
வார்த்தை ஜாலங்களை
அள்ளி விட்டு….

பின்பு…
உங்கள் கனவுகளில்
கதாநாயகிகளின் ஆடைகளை
அவிழ்த்துப் போட்டு
கிள்ளி விட்டுத் தவிக்கிறது
உங்கள் வாழ்க்கை!

எத்தனை மனிதர்கள்
உட்கார்ந்த இடத்தில்
இருந்து கொண்டு
தன்மானத் தமிழனாக
வாய்ச்சவுடால் வார்த்தைகளை
அள்ளி வீசி விட்டு…

பின்…
அந்தி இரவுகளில்…
எத்தனை பெண்களின்
ஆடைகளை அவிழ்த்து
உங்கள் மன்மத வித்தைகளை
அரங்கேற்றியிருப்பீர்கள்..! ஏன்
உங்கள் மனச்சாட்சியை
நீங்களே ஒரு தடவை
தொட்டுப் பார்த்துக் கேளுங்கள்???

ஒரு சிலரோ…
“எம் தங்கையைப் பெற்ற வயிறு
எப்படிக் கொதித்திருக்கும்”
என்றார்கள்..!

இன்னும் ஒரு சிலரோ…
“எம் தங்கையின்
சகோதரிகளின் மனது
எப்படி வலித்திருக்கும்”
என்றார்கள்..!
உண்மையில்
வலித்திருக்கும் என்பது
உண்மைதான்!
உண்மைதான்!!
உண்மைதான்!!!

எனக்கும் எனது மனது
வலிக்கின்றது!
எனக்கும் எனது இதயம்
கொதிக்கின்றது!
என் மனைவியின் கண்கள்
கலங்கி அழுகின்றதாம்!
என் தாயின் வயிற்றில்
நெருப்பு எரிகின்றதாம்!
என் தோழிகளின் உடல்கள் கூசி
உள்ளங்கள் அழுது
கொதிக்கின்றதாம்!

நமக்கே…
இவ்வாறு இருக்கும் போது…
உயிரான உணர்வுகளை
இரத்தமாக்கி…
இரத்தத்தைப் பாலாக்கி
உயிர் கொடுத்து
வளர்த்தவளின் மனது
எப்படி அழுதிருக்கும்…
பெற்ற வயிறு
எப்படி வலித்திருக்கும் என்று
எனக்கும் தெரியும்தான்..!

ஒரே வயிற்றில் உயிராக்கப்பட்டு
ஒரே உயிரில் உருவாக்கப்பட்டு
ஒரே வீட்டில் கட்டியணைத்து
உருண்டு பிரண்டு
ஓடி விளையாடி
ஒன்றாக தூங்கி எழுந்து
உணர்வுகளோடு ஒன்றிப் போன
இவளின் – அந்த
நான்கு சகோதரிகளின்
இதயங்கள் எவ்வாறு துடி துடித்து
அழுதிருக்கும் என்பது
எனக்கும் தெரியும்தான்..!
இருந்தாலும்…

இசைப்பிரியா யார்..?

அவள் தனிப்பட்ட மனிதர்களுக்கு
சொந்தமானவளா..?

அவளை யாரும் தனியாக
உரிமை கொண்டாட முடியுமா?
இல்லவே இல்லை!
ஒரு போதும் இல்லை!!

விடுதலைப் போராட்டத்தில்
இணைந்து விட்டால்…
இணைந்த அனைவரும்
அனைத்துத் தமிழர்களுக்கும்
சொந்தமானவர்கள்..!

அவர்கள் பொதுவானவர்கள்..!
ஈழத்தின் காவற்காரர்கள்..!
அதனால், தமிழர்கள்
அனைவருக்கும் சொந்தமானவர்கள்!
தனிப்பட்ட ரீதியில்
எவரும் இசைப்பிரியாவை
உரிமை கொள்ள முடியாது!

அவளின் உறவாக இருந்தாலும்
அவளின் பெற்ற தாயாக
இருந்தாலும்…
அனைத்து மக்களைப் போலும்
அவர்களும்…
வணங்கிக் கொள்ளத்தான் வேண்டும்!

தாய், சகோதரிகள் என்ற முறையில்
தனிப்பட்ட உணர்வுகளைக்
காட்டிக் கொள்ளாலாம்
அவ்வளவுதான்..!
வேறு எதுவும்
அவர்கள் பணிக்க முடியாது!

இசைப்பிரியா, அனைத்துத்
தமிழர்களுக்கும் சொந்தமானவள்!
நீங்கள் ஒவ்வொருவரும்
தனித்தனியாக…
உரிமைகள் எடுத்து
தனித்தனியாக கட்டளையிட…
அவள் உங்கள் வீட்டுப் பிள்ளை
சோபனா இல்லை!

தமிழர்கள் அனைவரும்
எல்லா உணர்வுகளோடும்
எல்லா உரிமைகளோடும்
கொண்டாடுகின்ற…
முள்ளிவாய்க்காலின்
“முல்லைத் தேவி”
அவள்!

இனவாத காட்டு மிராண்டி
இலங்கை அரசிற்கும்
இரத்தம் குடித்த
காமப் பிசாசுகளான
முதுகு எலும்பற்ற
இலங்கை சாத்தான் படைகளுக்கும்
கனவிலும் பீதியைக்
கொடுத்துக் கொண்டிருக்கும்
“பத்ரகாளி” அவள்!

அவளை…
சாதாரண மனிதப் பிறவியாகக்
கருதி ஓலமிடும் ஓநாய்களே…!
உணர்வற்றுக் கிடக்கின்ற
தமிழர்களை – அடிக்கடி
தட்டி எழுப்ப வேண்டும் என்றால்…
என்ன செய்ய வேண்டும் என்று
நீங்களே சொல்லுங்கள்?!

கைக்கெட்டும் தூரத்தில்
துடிக்கத் துடிக்க
கதறக் கதற கொன்றழித்து
ஒன்றரை இலட்சம் உறவுகளை
மண்ணுக்குள் உரமாக
புதைத்த பின்பும்
புதைத்த இடத்தில் இருந்து
புதிதாய் மரங்கள்
முளைத்து விட்டன…

உங்கள் உள்ளங்களில்
அந்த கோரக் காட்சிகளை
புதைத்த பின்பும்
அப்போதும்…
காப்பாற்ற முடியவில்லை!

ஐந்து வருடங்களாகி இன்றும்
சிதைக்கப் பட்டுக் கொண்டிருக்கும்
தமிழச்சிகளின் உயிர்ப் பைகளை
இப்போது வரைக்கும்
காக்கவும் முடியவில்லை!
காப்பாற்றவும் முடியவில்லை!!

உங்களின்…
உண்ணாவிரதங்கள்,
ஊர்வலங்கள்,
ஆர்ப்பாட்டங்கள்,
பேரணிகள் அனைத்தையும்
உங்கள் வீட்டு
மொட்டை மாடிகளில்
நடத்துங்கள்…
நான்கு கொசுக்களுக்காவது
நிறைய இரத்தம் கிடைக்கும்!
உங்கள் அரசு
எதுவுமே செய்யாது!

அட… அறிவு கெட்ட
ஜென்மங்களே..!
உங்கள் அரசியல் தலைவர்களின்
நாடக நடிப்புக்களை…
முப்பது வருடங்களுக்கு
மேலாகப் பார்த்தும்…
இன்றுவரையும்…
சூடு சொரணையற்ற ஜென்மங்களாக…
திரும்பத் திரும்ப
இவைகளைத்தானே
செய்து வருகிறீர்கள்..?!
அந்தக் காலத்திலிருந்து
போராடுகிறீர்கள்…

ஆனால், இன்றும்
மீனவன் கொல்லப்பட்டுக்
கொண்டுதான் இருக்கிறான்!
அந்தக் காலத்திலிருந்து
போராடுகிறீர்கள்…
ஆனால், இன்றும் உங்கள் உறவுகள்
அகதிகளாக உலகம் முழுதும்
அலைந்து கொண்டுதான்
இருக்கிறார்கள்!
உங்கள் போராட்டங்களால்
என்ன மாற்றங்களைக்
கண்டீர்கள்.?

கன்னடன்…
காவேரி நீர் தரமாட்டான்..!
ஆந்திரன்…
கிருஸ்ணா நீர் தரமாட்டான்..!
கேரளத்தன்…
முல்லைப் பெரியாரை வைத்து
உங்கள் மூளைகளில் அடிப்பான்..!
நீங்களின் தண்ணீர் கேட்டு
கண்ணீர் விட்டு
பழையபடி போராட்டங்கள்
உண்ணாவிரதங்கள்,
ஊர்வலங்கள்,
ஆர்ப்பாட்டங்கள்,
பேரணிகள் என தொடரும்
உங்கள் அவலங்கள்..!

உங்கள் தலைவர்களும்
கடிதம் எழுதியே
கதைகள் சொல்லி
கவனங்களைத் திருப்புவார்கள்!
பிரச்சனைகள் தீர்வடையாது!
தொடரும் உங்களின் அவலங்கள்..!
வருடங்கள் பல கடந்தும்…
உங்கள் ஆயுள் முடிந்தும்…
உங்களின் பிள்ளைகளிலிருந்து
மறுபடியும் போராட்டங்கள்…..

ஆனாலும்,
எந்த மாற்றங்களும் உருவாகாது!
தெரிந்தும்,
நீங்கள் திருந்துவதாக இல்லை!
உங்கள் போராட்ட வடிவங்களும்
மாறுவதாக இல்லை!
மாற்றத்திற்குரிய தலைவனை
இன்னும் உங்களிடத்தில்
நான் பார்க்கவும் இல்லை!
பழைய புளித்துப் போன
போராட்டங்கள்
எதுவுமே வேண்டாம்..!

ஆரம்பத்திலிருந்து…
பழகி வந்து பழைய
போராட்ட வடிவங்களுக்கு…
புதிய நீர் பாய்ச்சி
புதிய உரமூட்டி
புதிய வடிவங்களோடு…
புதிய சிந்தனைகளோடு…
கொதித்தெழுந்து
புதிய புரட்சியினை
உருவாக்க வேண்டும் என்றுதான்
உங்களைப் போன்றவர்களுக்கு
முத்துக்குமார், தன்னையே வைத்து
முன்னுரை எழுதி
புதிய எழுச்சியினைத்
தூண்டி – புதிய பாதையினை
துறந்து விட்டான்..!

ஆனாலும், அப்பப்ப
நீங்களும் மறந்து போகின்றீர்கள்!
உங்களை அப்பப்ப தட்டியெழுப்பி
உங்கள் உணர்வுகளையும்…
உங்கள் இதயங்களையும்
கொதித்து எழுச்சியடைய
வைக்கத்தான் – அப்பப்ப…
உங்களின் உணர்வற்ற உள்ளங்களுக்கு
இசைப்பிரியா, காட்சியளிக்கிறாள்..!

இசைப்பிரியாவின் உயிரற்ற உடலம்
பேசாமலே போயிருந்தால்…
உங்களின் உணர்வற்ற உள்ளங்களுக்கு
எதுவுமே தெரிந்திருக்காது!
தெரியும் என்று சொல்லாதீர்கள்..!

முப்பது வருடங்களாக…
ஈழத்தில் தமிழர்கள்
ஈவிரக்கமில்லாமல் துடிக்கத் துடிக்க
கொல்லப்படும் போது
நீங்கள் என்ன செய்து
கொண்டிருந்தீர்கள்..?
உங்கள் பிள்ளைகளையும்
உங்களைப் போலவே
உணர்வற்றவர்களாகவே
வளர்த்து வந்தீர்கள்..!
அவர்களும், திரைப்படம் (சினிமா)
மட்டைப் பந்துதான் (கிரிக்கெட்)
உலகம் என வளர்ந்தார்கள்..!

முள்ளிவாய்க்காலில்…
தமிழர்களை கொன்று குவித்து
குழந்தைகள், பெரியவர்கள் என
அனைவரினது உடலங்களை
அங்கங்கள் இழந்த
சதைப்பிண்டங்களாக
பார்த்த பிறகும்…
தாயின் கர்ப்பத்திலிருந்து
கிழிந்து உயிரற்ற சிசுக்களாக
வெளியேறிய காட்சிகளைப்
பார்த்த பிறகும்…
ஈழத்துப் புது ரோஜாக்களின்
ஆடைகளை அவிழ்த்தும்
ஈழத்துக் காவல் தெய்வங்களின்
ஆடைகளை அவிழ்த்தும்
தெரு நாய்களைப் போல்…
கூட்டம் கூட்டமாக
கற்பழித்து கொன்று விட்ட
ஆடையற்ற எம் சகோதரிகளை
படங்களாக பார்த்த பிறகுதான்…

தமிழகத்தில் மானமுள்ள தமிழர்கள்
பொங்கி எழுந்தார்கள்..!
ஈழத்து உறவுகளை
அரவணைத்து அணைத்தெடுக்க
துடியாய்த் துடித்தார்கள்..!
ஆனாலும்…
போராட்டங்கள் மாறவேயில்லை!
பழைய பாணிதான்..!
சில மாதங்களில்
மறந்து போகிறீர்கள்…!

புறநானுற்றுத் தமிழனாக…
நீங்கள் அனைவரும் மாறி
தமிழர்களைத் தமிழர்களே
ஆள வேண்டும் என்றும்..!
உங்களின் எதிர்ப்புக்கள்
ஒவ்வொன்றும்…
துப்பாக்கிகளின் ரவைகளாக…
தாக்க வேண்டும் என்றுதான்
அடிக்கடி உங்களின் சகோதரி
இசைப்பிரியாவின் படங்களை
பதிவு செய்து…
உங்களின் மனச்சாட்சியின் பார்வைக்கு
அனுப்பி வைக்கப் படுகிறது..!

முப்பது வருடங்களாக
இலங்கையில் கொன்றழிக்கப்பட்ட
தமிழர்களுக்கு நீதிகள் கிடைக்கவில்லை
காரணம், காட்சிகள் பதிவுகள்…
இல்லாமல் போனதால்
தமிழர்களின் சிதைக்கப்பட்ட கதைகள்
வரலாறாக சொல்லியும்
கவனத்தில் எடுக்கப்படவில்லை!
இப்போதுதான்…

வரலாற்றுக் கதைகள் இல்லாத
சிதைக்கப்பட்ட தமிழர்களின்
காட்சிகளும்…
சீரழிக்கப்பட்ட தமிழச்சிகளின்
உருக்குலைந்த காட்சிகளும்…
படங்களாக பதியப்பட்டதனால்தான்…
குருடாகிப் போன…
சர்வதேசத்தின் பார்வையில்
ஊசியாகக் குத்தி நிற்கின்றது!

தமிழகத்தில் தூங்கிய தமிழனையும்…
உலகத்தில் அகதிகளாக
அலைந்து கொண்டு
ஏங்கிய தமிழனையும்…
சர்வதேசத்தின் துருப்பிடித்த
இதயங்களையும் – ஈரமாக்கி
இரத்தம் கசிய வைத்துக்
கொண்டிருக்கிறது..!

இலங்கை மீது…
அடுக்கடுக்கான அழுத்தங்களும்
போர்க்குற்றவாளியாக…
உலகத்தின் பார்வைக்கு
கொண்டு செல்லவும்
இக்காட்சிகள்தான்…
சாட்சிகளாக மாறி வருகின்றது!

இலங்கை அரசும் நழுவிக் கொண்டு
போகப் போக… – மேலும் மேலும்
சாட்சிகள்… காட்சிகளாக வந்து
இலங்கையின் கழுத்தை நெரிக்கின்றது!
எட்டுக் கோடி தமிழர்களின்
உணர்வுகளால்…
செய்ய முடியாத ஒன்றை..!

இசைப்பிரியாவின் உயிரற்ற
உடலம் செய்கின்றது என்றால்…
அவளின் புனித உடலை
வலிகளோடு பார்க்காமல்…
கடவுளின்…
உருவச் சிலையாகப் பாருங்கள்!
வாய்ச்சவுடால் வீரர்களாக நீங்கள்…
உயிரோடு இருந்து
கிழிக்க முடியாததை…
இசைப்பிரியாவானவள்…
உயிரற்ற உடலமாக
உலகத்தின் மனக்கதவுகளைத் துறந்து
இலங்கையின் முகத்திரையை
நார் நாராக…
கிழித்துக் கொண்டு இருக்கிறாள்!

இசைப்பிரியாவோடு…
கசக்கி எறியப்பட்ட
பல பெண் காவல் தெய்வங்களின்
இரத்தம் தோய்ந்த படங்கள்தான்
உணர்வற்ற தமிழர்களுக்கு
உணர்வுகள் ஊட்டிக் கொண்டிருக்கிறது.
பல மாற்றங்களை…
உருவாக்கிக் கொண்டு இருக்கிறது!

இசைப்பிரியா…
உயிரோடும் தாய்மண்ணின்
விடுதலைக்காகப் போராடினாள்!
உயிர் போகும் போதும்
வலிகளோடு போராடினாள்!
உயிர் போன பின்பும்
உயிரற்ற உடலாக…
படங்களில் பதிவாகி
தமிழர்களின் விடிவிற்காக
போராடி வருகிறாள்!!!

1972 ஆம் ஆண்டிலே…
வியட்நாம் போரின் போது
ட்ராங் பாங்க் என்னும் ஊரிலே
கிம் புக் என்ற சிறுமி…
ஆடையற்று அலறிக் கொண்டு
நிர்வாணமாக ஓடிய அந்தப் படம்தான்…
வியட்னாம் போரை நிறுத்தியது!

2009 ஆம் ஆண்டிலே… ஈழத்தின்
முள்ளிவாய்க்கால் எனும் ஊரிலே…
எங்களின் சகோதரி இசைப்பிரியா
ஆடைகளற்று உயிரற்ற
உடலத்தைத் தாங்கிய படம்தான்
ஈழ மக்களுக்கான…
புது விடியலை உருவாக்கி வருகிறது!

இவ்வாறான நேரங்களில்…
உங்களின் மட்டுப்படுத்தப்பட்ட
சுயநலப் புத்திகளால்…
விடியலைக் கெடுத்து விடாதீர்கள்!
வியர்வை சிந்தாமல்…
இரத்தம் சிந்தாமல்…
வலிகள் இல்லாமல்…
விடுதலை கிடைக்காது!

நாட்டிற்காக என…
தன்னை அர்ப்பணித்தால்…
எல்லாவிதமான வலிகளையும்
ஏற்கத்தான் வேண்டும்!
மறைமுக பெண்கரும்புலிகளின்
வலிகள் கூடிய வாழ்க்கை வரலாறுகளை
நான் இங்கே எழுத ஆரம்பித்தால்…
உங்கள் இதயங்களில் இருந்து
இரத்தம் ஒழுகும்..!
உங்கள் விழிகளின் கண்ணீரெல்லாம்
செந்நீராக மாறும்!
துக்கங்கள் கூடி…
உங்கள் தூக்கங்கள் கலையும்!

அதே போல்…
இசைப்பிரியாவும்
வார்த்தைகளால் சொல்ல முடியாத…
மரண வலிகளோடு…
ஈழத்தின் விடிவுற்காக…
மடிந்த ஆயிரமாயிரம் மாவீரர்களோடு
மாவீரராகக் கலந்து விட்டாள்..!

ஈழத்தமிழர்களின்…
இதய தெய்வமாகி விட்டாள்!

தயவு செய்து
அவளின் புனித உடலை…
கடவுளின் சிலையாகப் பாருங்கள்!

- வல்வை அகலினியன்
விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com

■ குறிப்பு
--------------
என் தாய்
என் அக்காள்
என் தங்கை
என் மனைவி
என் குழந்தைகள் என
எவராயினும்..
விடுதலைப் பாதையில் பயணித்தால்…
இதைத்தான் குறிப்பிடுவேன்..!
“இனத்தின் விடிவிற்காக
தனது மானத்தையே
ஆகுதியாக்கியவர்கள்” என
கல்வெட்டில் பதிப்பேன்.
Read More

April 04, 2015

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
by Unknown - 0




பதுங்கு குழிகளில் வாழ்க்கை
உங்களைச் கொஞ்சம்
உலகம் தேடும்
முத்தமிழ் சிவப்பாகும்
போர் மேகங்கள் சூழும்
உங்களுக்கும் வலிகள் புரியும்
இயந்திரப் பறவைகள் எதிரியாகும்
ஆமிக்காரன் இயமன் ஆவான்
உயிர் வெளியேறிய
உடல்களை காகம் கொத்தும்
விழிகளிலே குருதி கசியும்
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
தொப்புள் கொடியில்
பலமுறை தீப்பிடிக்கும்
பார்த்துக் கொண்டே இருப்பீர்களா?
குருதியில் அடிக்கடி
நீ குளிப்பாய்
பெற்ற பிள்ளையை
படுக்கையில் நீ இழப்பாய்
நித்திரையில் நிம்மதியே இருக்காது
மரநிழலில் மனம் குமுறும்
நரம்புகள் வெடிக்கும்
நா வறண்டு போகும்
பெண்களின் ஆடைகள் தூக்கி
பேய்கள் வெறி தீர்க்கும்
ரத்த ஆறு வழிந்தோடும்
நடுவிலே நாய் நக்கும்
தலையில் செல்வந்து விழும்
தட்டிவிட்டு வலியின் வதையோலம்
வானைப் பிளக்கும்
கண்ணீர்த் துளிகள் கடலாகும்
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
வீட்டுக்குள்ளே ஓடி ஓடியே
பதுங்கு குழிகளில் வாழ
உங்களால் முடியுமா?
அகோரத்தின் உச்சத்தை
உணர்ந்தது உண்டா?
அழுது களைத்து மீண்டும்
எழுந்து நின்றது உண்டா?
உன்னைப் புதைக்கும் இடத்தில்
உயிர் வாழப் பழகியதுண்டா?
உலகம் எங்கும் சிதறி
தாயைப் பிரிந்து வாழும்
துயரத்தை அனுபவிக்க முடியுமா?
பனிக் குளிரில் பனியோடு
பனியாய்க் கரைந்து
உங்களால் உறைய முடியுமா?
சவப் பெட்டிக்குள் உறங்கி
நாடு விட்டு நாடு போய்
நரகத்தில் தொலையமுடியுமா?
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
பாண் துண்டோடு பருப்பு
பகலில் வயிறு பசியாறும்
பாதி வயிற்றோடு நெருப்பு
இருளில் குளிர் காயும்
சிறைச்சாலைக்கும ் திறந்தவெளிச்
சிறைச்சாலைக்கும ்
ஒரே ஒரு பொருள்தான்
எங்கள் யாழ்ப்பாணம்!
பாலைவனத்து ஒட்டகமாய்
பாம்புகளுக்கு நடுவில்
எங்கள் வாழ்க்கை ஓடும்
ஊரின் பெயரோ மட்டக்களப்பு!
தாய்மண் தேகத்தை சுவைத்து
ஆட்டுக்கறியாக பங்கு போடும்
நவீன மிருகஙக்ளை
யார் வேட்டையாடுவது?
ஆண்ட பரம்பரையின்
அடையாளத்தை அழிக்கமுடியுமா?
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
ஆளும் கட்சிகள்
ஆட்சி இழந்தாலும்
அனைத்துக் கட்சிகள்
கூட்டம் நடந்தாலும்
தமிழகம் முழுவதும்
கடைகள் மூடப்பட்டாலும்
திரையுலகமும் திரண்டு
பேரணியில் சென்றாலும்
இலக்கியத் தோப்பினில்
எரிமலை எழுந்தாலும்
தனித் தனியாக நீங்கள்
உண்ணாவிரதம் இருந்தாலும்
எப்போதும் உங்களை
நெஞ்சிலே சுமக்கின்றோம்
தணியாத தாகமாய்
விடுதலை கேட்கிறோம்!
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
உங்கள் எழுச்சியால்
எங்கள் நெஞ்சு நிறைகிறோம்!
நீட்டியுள்ள நேசக்கரத்தை
உறுதியாய்ப் பற்றுகின்றோம்!
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்


Read More