தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி
தொழிலாளர் தினம் கொண்டாடும்
வேடிக்கையான நாடு இது
வேட்டியை வரிந்து கட்டிய அரசியல்வாதிகள்
மேடை போட்டு கூட்டங்கூடி
தொழிலாளர் உரிமை பற்றி பகட்டாக
தொண்டை கிழியக் கத்தும்
தொழிலாளர் தினம் இன்று
இன்றோடு முடிந்துவிடும்
இவர்களது தொழிலாளர் உரிமை
இதற்குப் பின்னர் அடுத்த
தொழிலாளர் தினத்துக்கான அடுக்குத்தான்
தொழிலாளர்களது உழைப்புக்கேற்ற
ஊதியத்தைப் வழங்க முடியாதவர்கள்
உழைப்பைச் சுரண்டி
ஊரறிய விழா எடுக்கிறார்களாம்......
இதுதான்
தொழிலாளர் தினம்!
இப்படித்தான்
தொழிலாளர் உரிமை!
சிவேந்தன்.
No comments
Post a Comment