Latest News

Slider Area

Featured post

பிரித்தானியாவில் இடம்பெற்ற தமிழின அழிப்பு நாள் நினைவு

ஐரோப்பிய நாடுகளில் அதிகளவான புலம்பெயர் தமிழர்களைக் கொண்ட பிரித்தானியாவில் 18/05/2023 பல நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிகழ்வுகளில் பிரித...

தமிழீழம்

சினிமா

தமிழ் வளர்ப்போம்

May 19, 2023

பிரித்தானியாவில் இடம்பெற்ற தமிழின அழிப்பு நாள் நினைவு
by Editor - 0

ஐரோப்பிய நாடுகளில் அதிகளவான புலம்பெயர் தமிழர்களைக் கொண்ட பிரித்தானியாவில் 18/05/2023 பல நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.


இந்த நிகழ்வுகளில் பிரித்தானிய அரசியல் கட்சி பிரபலங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்


லண்டனில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன இணைந்து 18/05/2025 அன்று   பிற்பகலில் பேரணியுடன் கூடிய ஒன்றுகூடலை நடத்தியிருந்தன.


இதேபோல பிரித்தானிய தமிழர்பேரவை ட்ரபல்கார் சதுக்கத்தில் 18/05/2023 அன்று மாலை தனது அமைப்பு சார்பான நிகழ்வை நடத்தியிருந்தது.

Read More

May 18, 2023

வலி சுமந்த மாதம்..!
by Editor - 0


வலி சுமந்த மாதம்..!
இது வைகாசி மாதம்!
வலி சுமந்த மாதம்!
இரத்த ஆற்றிலே
எம்மினம் மிதந்து
அழிந்திட்ட மாதம்!
இது வைகாசி மாதம்!
உறுதியிழந்த ஓரினத்தின்
ஒப்பாரிகள் வானைப்
பிளந்திட்ட மாதம்!
இறுதிக் களத்திலும்
இறுமாப்புடன் நின்று
போராடிய புலி வீரர்கள்
மௌனித்த மாதம்!
இது வலி சுமந்த மாதம்!
அத்தனை வியூகங்களையும்
மொத்தமாய் வகுத்து
அத்தனை அணிகளையும்
ஒன்றாக நிறுத்தி
உயிர் கொண்ட மண்ணை
பகைவன் வசம் விட்டிடாது
விழ விழ எழுந்து போராடிய
விடுதலை வேங்கைகளை
மண் விதையாக பெற்ற
வலி சுமந்த மாதம்!
தரைவழிப் பாதை
கடல் வந்து சேர
வான் பரப்பில் வல்லாதிக்கம்
வல்லூறாய் வட்டமிட
வலியோடு நின்ற எம்மினம்
வலிமை இழந்து
பலிகளாய்ப் போன
பெரும் வலி சுமந்த மாதம்!
கட்டளைத் தளபதிகள்
விதையாகி விழ... விழ...
கட்டளையிட எவருமில்லா
தனியொரு போராளியும்
தமக்குத் தாமே தளபதியாகி
வீரத்துடன் உயிர் பிரியும் வரை போர்முனையில்
போராடி பேரிழப்பைக் கண்ட
வலி சுமந்த மாதம்!
கொத்துக் குண்டுகளால்
குத்துயிரும் கொலையுயிருமாய்
குருதி ஓட... ஓட...
எம்மினத்தின் உடல் துண்டங்கள்
முள்ளிவாய்க்கால் முற்றமெங்கும்
சிதறிப்போய்க் கிடந்த அவலத்தின்
வலி சுமந்த மாதம்!
அவலத்தின் உச்சத்தை
அரங்கேற்றிய பின்பும்
அடங்காத சிங்களவன்!
ஓரினம் அழிந்து போவதென்பதை
அறிந்த அண்டை நாடுகளும்
வல்லாதிக்க நாடுகளும்
சிங்களத்தோடு கைகோர்த்து
எம்மினத்தை சிதைத்த
வலி சுமந்த மாதம்!
தலை சிதறி முண்டமான தாயின்
உயிர் பிரிந்ததறியாத சிசு
தாயின் மார்பினில்
பால்குடித்த பரிதாபம்!,
கண்முன்னே குண்டுபட்டு
துடி துடித்து இறந்த
இரத்த உறவுகளைக் கடந்து
சென்றிட முடியாமல்
கதறுகின்ற உறவுகளின்
பரிதாபங்கள் கண்ட
வலி சுமந்த மாதம்!
உடலைத் துளைத்து சிதறடிக்கும்
கொடிய நாசகார குண்டுகளால்
பிழிந்து எறியப்பட்ட எம்மினத்தின்
குருதியால் நந்திக்கடல்
சிவந்துகிடக்க
குற்றுயிராய் கிடந்தவர்களை
வல்லூறுகள் இரையாக்க
பெரும் வலியோடு வலுவிழந்த
வலி சுமந்த மாதம்!
கஞ்சிக்குக் கையேந்தி
காத்திருந்த வேளையிலும்
கண்முன்னே வீழ்ந்த குண்டு
வெடித்த கணப்பொழுதில்
பல உடல்களை
கருக்கிப்போன மாயக்குண்டுகளும்,
நிலத்தின் பசுமையினை அழித்த
நச்சுக் குண்டுகளும்
போரியல் விதிகளை மீறி
எம்மினத்தில் ஏவப்பட்ட
வலி சுமந்த மாதம்!
அவயங்களை இழந்து
அவதியுற்று அழுகின்ற
அழுகைகள் வானையும்
மண்ணையும் பிளக்க
சரணடைந்தவர்
கைகளும், கண்களும்
கட்டப்பட்டு மண்ணரணுக்குள்
மண்டியிடவைத்து
சுடப்படும் தருணத்தில் எழுந்த
அவலக் குரல்கள் கதறி ஓய்ந்த
வலி சுமந்த மாதம்!
பிரிவின் பெரும்வலியோடு
பிடிபட்டுக்கொண்ட
பிரியமான உடன்பிறப்புகள்
சிங்கள காம வெறியர்களால்
கற்பழிக்கப்பட்டு கசக்கியெறிந்த
வலி சுமந்த மாதம்!
உலகே வேடிக்கை பார்க்க
உன்னத இனமொன்றின்
குரல் ஊமையாக்கப்பட்டு
ஐ.நா சபையின் பார்வைகள்
குறுகியே குருடாகி..
எம்மினத்தில் பார்வைகள் படாமல் போக,
இந்திய தேசமும் இரத்தாற்றை கண்டும்
இரக்கமின்றி வேடிக்கை பார்த்த
வலி சுமந்த மாதம்!
சிங்களமே! எமை தோற்கடிக்க
எத்தனை நாடுகள் வந்தன என்ற
உண்மைகள் புலர்ந்தன...
ஈழத்தை வெல்ல உன்னால் முடியாது
என்ற எம் வீரத்தின் தன்மை
உணர்ந்து கொண்ட
வலி சுமந்த மாதமிது!
- அபிராமி கவிதன்
Read More

May 20, 2022

பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள்
by Editor - 0

முள்ளிவாய்க்கால் 13 ம் ஆண்டு நினைவு நாளினை நினைவு கூரும் வகையில், பிரித்தனியத் தமிழ் இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற சதுக்கத்தின் முன்றலில் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிவரை கவனயீர்ப்புப் போராட்டமும் அதனைத் தொடர்ந்து    முள்ளிவாய்க்காலின் 13 ம் ஆண்டு நிகழ்வின் தொடர்ச்சியாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து நிகழ்வை முன்னெடுத்தனர். தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஒழுங்கமைப்பில் பிற்பகல் 2:30 மணியளவில் ஒல்ட் பிலேஷ் யாட் ல் இருந்து நீதிக்கானபேரணி ஆரம்பமாகி இல 10 டவுணிங் சாலைக்கு  முன்பாக வந்தடைந்தது.Read More

May 18, 2022

13 வருடங்கள் கடந்து செல்கிறது நீதி எங்கே?
by Editor - 0

13 வருடங்கள் கடந்து செல்கிறது நீதி எங்கே?
vivasaayi


சட்டம் ஒழுங்கு இல்லாத ஶ்ரீ லங்காத் தீவில் தமிழ் மக்கள் சந்திக்கும் தொடர்ச்சியான ஒடுக்குமுறை, அடக்குமுறை தமிழின அளிப்பு, நில அபகரிப்பு.

தமிழ் மக்கள் பிரிந்துசென்று தமது இறையாண்மையுடன் சுயாட்சியை அமைத்து சுதந்திர தமிழீழத்தில் வாழத் தகுதியுடையவர்கள் என்பது 1948ம் ஆண்டு இலங்கை ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் அடைந்தகாலத்தில் இருந்தே தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த ஒடுக்குமுறைகளும் தமிழின அளிப்பும் சட்டத்தின்பால் நிரூபித்து நிற்கின்றது.

காலம்கடந்து ஞானம் பிறந்தது போன்று இன்று சிங்கள மக்கள் தமது சோத்துச்சண்டையில் தமிழ் மக்களுக்கு ஆதரவுபோன்று குரல் கொடுப்பதைப்பார்த்தால் சிங்கள அரசியல்வாதிகள் தொடக்கம் இராணுவம்வ்ரை பலதடவை நம்பவைத்து தமிழ் மக்களின் கழுத்தை அறுத்த சம்பவங்கள்தான் நினைவுக்கு வருகிறது அப்பொழுதெல்லாம் எந்த சிங்கள மக்களாக இருந்தாலும் சரி அரசியல்வாதியாக இருந்தாலும்சரி 2009 ம் ஆண்டு தமிழ் மக்கள் சந்தித்த கொடூர தமிழின அளிப்பு யுத்தத்தை தடுத்து நிறுத்தவோ, தமிழ் மக்களை பாதுகாக்கவோ எந்தவகையான ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடவில்லை சிங்கள மக்களும் புனித இஸ்லாத்தை தழுவிய தமிழ் மக்களும் தமது நாட்டில் ஒரு சகோதர இனம் தமது நாட்டு இராணுவத்தால் இனச்சுத்திகரிப்பு செய்யப்படும்போது  அக மகிழ்ந்து வெற்றிவிளா கொண்டாடினார்கள், அக்காலத்தில் தமிழ் பேசும் இசுலாமியரான ரவூக் கஹீம் ஶ்ரீ லங்காவின் நீதி அமைச்சராக இருந்து உள்ள அரபிய நாட்டுக்கெல்லாம் சென்று தன் நலம் கருதி நடந்த தமிழின அளிப்பை மூடிமறைத்து பிரச்சாரம் செய்த வரலாற்று துரோகத்தை உலகத்தமிழ் மக்கள் நன்கு அறிவார்.

தமிழ் மக்கள் நாம் பிரிந்து சென்று தன்னாட்சி அமைக்கும் உரிமை எமக்குண்டு அது ஒற்றை ஆட்சிக்குள் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பூமி தமிழ் மக்கள் தமது பாரம்பரியம் கலாச்சாரம், தமது வழிபாட்டு அடையாளங்கள், விழுமியங்களை கொண்டு பல ஆயிரம் வருடங்கள் வாழ்ந்த வரலாறு உண்டு என்பதை அனைத்து மக்களும் அறிந்து புரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது, பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம், இந்துத்துவம் உருவாகும் முன்னரே சைவ வழிபாடு தமிழ் மக்களின் மரபுவழி வழிபாட்டை அடையாளப்படுத்தி உள்ளதை வரலாறு எமக்கு கற்பித்து நிற்க்கிறது.

வரலாற்றில் தமிழ் மக்கள் ஏமாந்து அழிந்து போனது போதும், சமகாலத்தில் தமிழின அளிப்பை செய்த   சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு செய்த மனித குலத்திற்கு எதிரான இனச்சுத்திகரிப்பை சட்டத்தின் பார்வையில் பார்த்தால் சுயாட்சியை அமைக்கும் தகுதி எமக்கு தமிழ் மக்களுக்கு எல்லாவகையிலும் உண்டு என்பதை சர்வதேச சட்டமும் விடுதலை அடைந்த நாடுகளின் வரலாறும் உறுதிப்படுத்தி நிற்க்கின்றது.

Article I
The Contacting Parties conform that genocide, whether committed in time of peace or in time of war, is a crime under international law which they undertake to prevent and to punish.
சமாதான காலத்திலும் யுத்தகாலத்திலும் சர்வதேச சட்ட விதிமுறைகளையெல்லாம் மீறி மனித குலத்திற்கு எதிரான அத்தனை கொடூரத்தையும் தமிழ் மக்களுக்கு எதிராக ஶ்ரீ லங்கா அரசும் இராணுவமும் செய்தது மட்டுமல்ல சர்வதேச விசாரணையையோ, தலையீட்டை அனுமதிக்கவில்லை.

Article II 
In the present Convention, genocide means any of the following acts committed with intent to destroy, in whole or part, a national, ethnical, racial or religious groups, as such: பாதுகாப்பு வலயமென அறிவித்து அந்த இடத்தில் மக்களை இலக்குவைத்து வான் தாக்குதலும், பல்குழல் எறிகணை தாக்குதலும், கொத்தனி குண்டுத தாக்குதலுடன் மட்டும் நிறுத்தவில்லை சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட இரசாயன குண்டுத் தாக்குதலும் நடத்தி மக்களை கொன்றது மட்டுமல்ல மருத்துவமனையும் தாக்கி அளிக்கப்பட்டது.

(a) killing members of the group; வெள்ளை கொடியுடன் சரணடைந்தவர்கள் கிறிஸ்த்தவ பாதிரியார் முதல் பொதுமக்கள் சிறுவர்கள் என்ற பாகுடாடு இல்லாது சட்டத்திற்கு மாறாக சுட்டும் சித்திரவதை செய்தும் படுகொலை செய்யப்பட்டனர்.

(b) causing serious bodily or mental harm to members of the group; சரணடைந்தோர் கைதிகளாக பிடிபட்டோர், சந்தேகத்திற்கு உரியோர் என ஆண்கள் பெண்கள், சிறுவர்கள் என்ற வேறுபாடு இன்றி சட்டத்திற்குப் புறம்பான வகையில் கொடூரமாக சித்திரவை செய்து படுகொலை செய்தது மட்டுமல்ல பாலியல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.

(c) deliberately inflicting on the group conditions of life calculated to being about its physical destruction in whole or in part, பலரை கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளாக்கி பாலியல் ரீதியாகவும், உடல்ரீதியாகவும் உழவியல் ரீதியாகவும் துன்புறுத்தி பலவீனப்படுத்தி ஆரோக்கியம் அற்றவராக்கியமை மட்டுமல்ல அவர்களின் வாழ்நாட்கள் குறுகியதாக்கி பலர் ஒருசில வருடத்தில் இறந்து போனார்கள்.

(d) imposing measures intended to prevent births within the group; 18/05 2009 ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததும் பலர் வலுக்கட்டாயமாக கற்ப்பத்தடை தடுப்பூசி போடப்பட்டார்கள் அது தமிழர்களின் தாய் நிலத்தில்  அவர்களை வீதாசரத்தில் குறைக்கும் நோக்கோடு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது.

(e) possibly transferring children of the group to another group. 2009 ஆண்டில் யுத்தம் முடிந்ததும் யுத்தத்தால் கொல்லப்பட்டு தாய் தந்தையரை இழந்த சிறுவர்கள் கடத்தப்பட்டார்கள் சிலர் தாய் தந்தையர் இருந்தும் கடத்தப்பட்டு அவர்கள் எங்கே என்ன ஆனார்கள் என்று தெரியாமல் இன்றும் பெற்றோர்கள் தேடுகிறார்கள்.

இன்று  ஶ்ரீ லங்கா ஆட்சியாளர்கள் தமது சொந்த இனத்தையே சூரையாடி கொலைசெய்யத் துணியும் பௌத்த சிங்கள அரசுடனும் தமிழின அளிப்பை வெற்றிவிழாவாக கொண்டாடிய சிங்கள மக்களுடனும் சேர்ந்து வாழ்ந்து இதுவரை காலமும் தமிழ் மக்கள் சந்தித்த பொருளாதார இழப்புகள், உயிரிழப்புகள், (தமிழின அளிப்பு ) போதும் எதிர்வரும் காலத்திலாவது ஒன்றிணைந்த வடக்கு கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலமான தமிழீழத்தில் அடுத்த சந்ததியை கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னிலைப்படுத்தி தமிழர்கள் நாம் சமத்துவமாக கௌரவமாக ஆட்சி அமைப்பதே சாலச் சிறந்தது அதுவே சிங்கள மக்களை மேலும் அவர்களின் கல்வி பொருளாதாரத்தில் உயர்த்திசெல்லும் என்பதை சமகால நிலமை அனைவருக்கும் உணர்த்தி உள்ளது என்பதை யாராலும் நிராகரிக்க முடியாது.


செய்தி தயாரிப்பாளர் 
த தயீசன்
Read More

April 24, 2022

காலம் தாமதித்தாலும் நீதி வெல்லும்
by Editor - 0

இன்றய ஶ்ரீலங்கா, காலம் தாமதித்தாலும் நீதி வெல்லும் சத்தியம் தோற்றதாக வரலாறு அரிது.

திரு வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவர் சார்ந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும் தமிழ் மக்களும் சிங்கள மக்களையும் ஶ்ரீலங்கா என்ற அண்டை நாட்டை எவ்வளவு நேசித்தார்கள் என்பதை உணர்த்தும் பதிவைத்தான் இச் செய்தியூடாக விளக்குகிறேன்.

இன்றைய ஶ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும் பஞ்சத்திற்கும் காலம்தொட்டு வந்த சுயநலம் பிடித்த சிங்கள ஆட்சியாளர்களும் அதற்கு உறுதுணையாக நின்று  போலியான, உண்மைக்குப் புறம்பான, திரைப்படங்களை தயாரித்து சிங்கள இளைஞர்களை ஆயுதம் ஏந்த தூண்டிவிட்டவர்களே முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும்.


அன்று ஒருகாலம் 2002ம்  ஆண்டு என்று நினைக்கிறேன் சிங்கள மக்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அக்காலப்பகுதியில் சிங்கள கிராமங்களான களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி போன்ற பகுதிக்கு 12 லொறிகளில் உணவுப்பொருட்கள், பால்மா போன்ற பல அத்தியாவசிய பொருட்களுடன் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு உறுப்பினர்கள் அப்பொருட்களை அந்த மக்களுக்கு பகிர்ந்தளித்த சம்பவம் ஒன்று அன்றைய நாளில் பல சிங்கள ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் சிங்கள மக்களுக்கு செய்த மனிதனேயத்தொண்டை அகமகிழ்ந்து நன்றியோடு பிரசுரித்த பதிவில் ஒன்றை இச்செய்தியூடாக பிரசுரிக்கின்றேன், அன்று சிங்கள மக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை அன்போடு வரவேற்று உபசரித்து சிங்கள ஒளிப்பட தயாரிப்பாளர்கள் கூறுவது போன்று புலிகள் மக்களிலும் விட வேறுபட்டவர்கள் அல்ல, புலிகளின் உறுப்பினர்கள் எம்மைப்போன்ற மனிதர்கள் என்று உணர்ந்து புலிகளின் உறுப்பினர்களின் கையை, முகத்தை தொட்டுப்பார்த்து அவர்களை அரவணைத்தகாலமது. இன்று முன்னாள் சிங்கள இராணுவ சிப்பாய் ஒருவர் 30 வருடமாக வந்த அரசுகள் தம்மை ஏமாற்றி புலிகளுக்கு எதிராகயுத்தம் செய்ய வைத்ததை கூறும்போது தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளார்கள் ஏனெனில் இன்றைய நிலைபோன்று பல பொருளாதார நெருக்கடிகளை 30 வருடங்களாக வலியுடன் சுமந்து கடலால் சூழப்பட்ட இலங்கைத் தீவில் அன்னிய தலையீட்டை ஏற்க மறுத்து தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் சுயாட்சியை வேண்டிப் போராடிய இனம் தமிழினம்.


1960 களில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்த யுத்தத்தில்க்கூட அண்டைநாடான இந்தியாவிற்கு விரோதமாக சிங்கள ஆட்சியாளர்கள் சீனாவிற்கே தமது ஆதரவை தெரிவித்து இருந்தனர் அதன் பிற்காலத்தில் உருவான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இந்திய ஆதரவுடன் ஒரு தனித்துவமான கொள்கையை கொண்டிருந்தது, இருந்தாலும் கால நேரத்திற்கு ஏற்றவாறு தம்நலம் கருதி ஆட்சிக்கு வரும் போலிச் சிங்கள ஆட்சியாளர்கள் சுற்றிவர கடலால் சூழப்பட்ட தமது சொந்தநாட்டில் உலகநாடுகளால் தயாரிக்கப்படும் கொடிய ஆயுதங்களை அவர்களின் மூளைச்சலவைக்கு அடிபணிந்து சொந்த நாட்டின் மீதும், தமிழ் மக்கள் மீதும் பரிசீலித்து நாட்டையும் ஒட்டுமொத்த மக்களையும் இன்று கொடூரமாக ஆதாள பாதாளத்தில் தள்ளி உள்ளதே இன்றைய அவலத்திற்கான காரணமாகும்.

இவற்றுக்குக்கெல்லாம் புலிகள் சிங்கள மக்களை கொல்ல வருகிறார்கள் போன்று உண்மைக்குப் புறம்பான போலியான திரைப்படங்களை தயாரித்து எமது சிங்கள அப்பவி இளைஞர்கள் யுவதிகளை இராணுவத்தில் இணைத்து போலிப் பிரச்சனைகளை மேற்கொண்டது.நேசக்கரம் நீட்டிய புலிகள் மீதும் தமிழ் மக்கள் மீதும் எல்லாவகையான கொடூரத்தையும் ஒரு தமிழின அழிப்பை நிகழ்த்தியது அதன் பிரதிபலனை இன்று பொருளாதாரரீதியில் பாமர சிங்கள மக்களை சுமக்கவைத்து உள்ளனர் பிழைப்பு தேடிவந்த சிங்கள திரைப்பட இயக்குனர்களும் மனிதனேயம் மனித தர்மம் அற்ற சிங்கள ஆட்சியாளர்களும் இன வாதத்தினையே வெளிப்படையாக உமிழ்ந்தும்வந்தனர்.

நானும் அப்படியான போலித் திரைப்படத்தை பார்த்து வியந்துபோனவன் என்ற வகையிலும், ஒரு மனிதனேயம் உள்ள  தமிழனாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் திரு வே பிரபாகரன் அவர்கள் சிங்கள மக்கள் மீதும் அவர்களின் இறையாண்மை மீதும் எவ்வளவு அக்கறைக இருந்துள்ளார் என்பதை பல சந்தர்ப்பங்களில் பலரிடம் இருந்து அறிந்து கொண்டவன் என்ற வகையிலும், அத்தோடு நெருக்கடிகள் வரும்போதெல்லாம் சிங்கள மக்களும், இஸ்லாமிய மக்களும் மேதகு பிரபாகரன் நாமம் உச்சரித்து அவரை தேடுவதையும் 2009ம் ஆண்டின் பின்னர் கண்டறிந்தவன் என்ற வகையிலும் இச்செய்தியை எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

செய்தித் தொகுப்பாளர் 
தயீசன்
Read More

April 03, 2022

சமூக வலைதள தடைநீக்க கரணம் ?
by Editor - 0

இலங்கையில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை முடக்கும் முகமாக தடை செய்யப்பட்ட சமூக வலைத்தளங்கள் அனைத்தையும் உடனடியாக செயற்பாட்டுக்கு கொண்டு வருமாறு பொது பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு மற்றும் அனைத்து அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் அறிவித்துள்ளது.


இதனை இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனடிப்படையில் முடக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள் இன்று பிற்பகல் வழமைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய சனிக் கிழமை நள்ளிரவு முதல் சமூக வலைத்தள ஊடகங்கள் முடக்கப்பட்டன.

சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமை பொது மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளதுடன் அரசாங்கத்திற்கு எதிரான அவர்களின் எதிர்ப்பை மேலோங்க செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சமூக வலைத்தளங்கள் மீதான தடைகளை நீக்கியதாக கூறப்பட்டாலும் ஆனால் காரணம் வேறு என கூறப்படுகிறது.

அதாவது சமூக வலைத்தளத்தை தடை செய்தவுடன் மக்கள் vpn ஐ பாவித்து சமூக வலைத்தளத்தை பாவிக்க தொடங்க பல்வேறு நாடுகளில் #gohomegota போன்ற குறியீடுகள் அந்த நாடுகளில் பிரபல்யம் அடைந்துள்ளன இதனால் உலகெங்கும் அரசுக்கு எதிரான மக்கள் வெளிப்பாடுகள் பரவ தொடங்கியதால் உடனடியாக இந்த தடைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Read More

March 13, 2022

பேரணிக்கு அணிதிரளுமாறு மக்களிடம் அறைகூவல் விடுக்கின்றோம்: செல்வராசா கஜேந்திரன்
by Editor - 0

வவுனியா பேரணிக்கு அனைவரையும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


அவரது நேற்றைய ஊடக அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் தெரிவிக்கையில்,

''புதிய அரசியல் யாப்பினை நாட்டிற்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளைச் சிங்கள பௌத்த பேரினவாத அரசு முன்னெடுத்து வருகின்றது. இலங்கைக்கான நான்காவது அரசியல் யாப்பும் மிக இறுக்கமான சிங்கள பௌத்த ஆதிக்கத்தைக் கொண்ட ஒற்றையாட்சி அரசியல் யாப்பாகவே அமையவுள்ளது.

இந்நிலையில் தமிழ்த் தரப்பின் கடமையானது ஒற்றையாட்சியை முற்றாக நிராகரித்து தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி தீர்வை வலியுறுத்துவதாக அமைந்திருக்க வேண்டும்.

அந்த வகையில், வடக்கு கிழக்கிலுள்ள பொதுசன அமைப்புக்களையும், ஒற்றையாட்சியை நிராகரிக்கும் அரசியல் தரப்புக்களையும் இணைத்து - ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் கீழான 13ஆம் திருத்தத்தையும் முற்றாக நிராகரித்து இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசமும் அதன் இறைமையையும், சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரித்த 'சமஷ்டி' அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தியும், இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோரியும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்குரிய நீதியை வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வலியுறுத்தியும், அரசியல் கைதிகளினுடைய விடுதலையை வேண்டியும், சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும் பிரகடனம் இடம்பெறவுள்ளது.

இப்பிரகடனம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) பி.ப 2.00 மணியளவில் வவுனியா கச்சேரிக்கு அருகாமையிலுள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுத்தூபியிலிருந்து பேரணியாகச் சென்று தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழக மைதானத்தில் (தாண்டிக்குளம் புகையிரத நிலையம் முன்பாக) இடம்பெறவுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள மேற்படி போராட்டத்திற்கு வலுசேர்க்க, அனைத்து வேறுபாடுகளையும் கடந்து தமிழ் மக்களை அணிதிரண்டு வருமாறு அழைக்கின்றோம்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Read More

February 05, 2022

தமிழர்களின் கரி நாள்! புலம்பெயர்தேசங்களில் பேரெழுச்சி இடம்பெற்ற நிகழ்வு
by Editor - 0

சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் நடத்தப்பட்ட கரிநாள் எதிர்ப்பு போராட்டங்களுக்கு சமாந்தரமாக இன்று புலம்பெயர்நாடுகளின் முக்கிய நகரங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

லண்டன் மற்றும் பாரிஸ் ஆகிய நகரங்களில் சிறிலங்கா தூதரகம் அமைந்துள்ள இடத்திற்கு அருகே ஒன்றுகூடிய மக்கள் தமது போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிறிலங்காவின் சுதந்திர நாளுக்கெதிரான பதாதைகளை தாங்கியபடி கண்டனக் கொட்டொலிகளை எழுப்பியிருந்தனர்.

Read More

November 28, 2021

பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் நினைவு நாள் 2021
by Editor - 0

பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் நினைவு நாள் 2021

தமிழீழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் பிரித்தானியாவில்  சிறப்பாக நடைபெற்றுள்ளது

லண்டன் நடைபெற்ற மாவீரர் நினைவு ஒஸ்போர்டில்  நடைபெற்ற மாவீரர் நினைவு Read More

September 23, 2021

திலீபனின் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்த சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட மூவர் கைது
by Editor - 0


நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்த சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள கொவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய நீதிமன்ற தடை உத்தரவின்றி இந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு காவல்துறையின் உயர் மட்டத்திலிருந்து பணிக்கப்பட்டிருந்ததுடன் யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை பரிசோதகர் உள்ளிட்ட மூவர் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அங்கு அஞ்சலி செலுத்த முயன்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முன்னதாக தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி காவல்துறையினர் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய – இலங்கை அரசுகளிடம் நீதி கோரி – 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, உணவு ஒறுப்பிலிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 34ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வு பூர்வமாக ஆரம்பமானது.

1987 செப்ரெம்பர் 15ஆம் திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வீதியில், உணவு ஒறுப்பை ஆரம்பித்த தியாக தீபம் திலீபன், 11ஆவது நாளான, செப்ரெம்பர் 26ஆம் திகதி உயிர்நீத்தார்.

அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில், உணவு ஒறுப்பை ஆரம்பித்த 34ஆவது ஆண்டு நினைவு வாரம் கடந்த 15ஆம் திகதி நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
Read More

September 22, 2021

இன அழிப்புக்கு நீதி கோரி ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் ஈழத் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
by Editor - 0


இன அழிப்புக்கு நீதி கோரி ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் ஈழத் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

ஐ.நா.வின் 48வது மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இடம்பெற்று வருகின்ற நிலையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இறுதிப்போரில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் இனஅழிப்பு  தொடர்பில் விசாரணை நடத்தவேண்டும் என்றும், ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதன்போது  ஆர்ப்பாட்டக்காரர்கள் புலிகளின் கொடிகளை ஏந்தியிருந்ததுடன் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவப்படங்களையும் ஏந்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Read More

September 14, 2021

சேதன பசளை உற்பத்தியினை ஊக்குவிக்கும் முகமான விழிப்புணர்வு நடவடிக்கை
by Editor - 0

சேதன பசளை உற்பத்தியினை ஊக்குவிக்கும் முகமான விழிப்புணர்வு நடவடிக்கை ஒட்டுசுட்டான் விவசாயா போதனாசிரியர் பிரிவில் வட மாகாண விவசாய திணைக்களத்தின் வழிகாட்டலில் CSIAP திட்டத்தின் அனுசரணையில் பிரதி மாகாண விவசாயப் பணிமனையின் ஆலோசனையில் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தின் ஒழுங்கமைப்பில் இன்று இடம்பெற்றது இவ் நிகழ்வில் வட மாகாண விவசாய பணிப்பாளர் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின்  வட மாகாண பிரதி பணிப்பாளர் முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பண்ணை முகாமையாளர் விவசாய போதனாசிரியர்கள் கலந்து கொண்டனர் இதில் சேதன பசளை உற்பத்தி சம்பந்தமான தெளிவூட்டல்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது
Read More

May 21, 2021

பிரித்தானியா பாராளுமன்ற சதுக்கத்தின் முன் நினைவேந்தப்பட்ட தமிழின அழிப்பு நாள் MAY 18
by Editor - 0

முள்ளிவாய்க்கால் 12 ம் ஆண்டு நினைவு நாளினை நினைவு கூரும் வகையில், பிரித்தனிய தமிழ் இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற சதுக்கத்தின் முன்றலில் இளையோர் முள்ளிவாய்க்காலின் 12 ம் ஆண்டு நிகழ்வின் தொடர்ச்சியாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து நிகழ்வை முன்னெடுத்தனர். பிரித்தானிய கொடியினை தமிழ் இளையோர் அமைப்பினைச் சேர்ந்த செல்வி பாபரா ராசன் ஏற்றி வைத்ததை தொடர்ந்து, தமிழீழ தேசிய கொடியினை இம்ரான் படையணி தளபதி மணியரசன் அவர்களின் துணைவியார் ஆரபி ஏற்றி வைத்தார்கள் . முன்னாள் போராளி சாவித்திரி அவர்கள் நினைவு தூபிக்கான மலர் மாலையினை அணிவித்தார்கள்.

தொடர்ந்து எழுச்சி நடனம் , கவிதை மற்றும் உரையினை தொடர்ந்து உணவு தவிரப்பு நிகழ்வில் கலந்தவர்களுக்கு பழச்சாறு வழங்கி உணவு தவிர்ப்பை நிறைவு செய்ததை தொடர்ந்து தேசிய கொடிகள் கையேந்த பட்டு ,தமிழீழம் எனும் இலக்கு அடையும் வரை தொடர்ந்து பயணிப்போம் என்ற உறுதியோடு நிகழ்வு நிறைவு பெற்றது.

அதே சமயம் தமிழீழ தேசிய துக்க நாளை(மே18) முன்னிட்டு

*உயிர் கொடுத்தவர்களுக்காய் உதிரம் கொடுப்போம்* எனும் தொனி பொருளில் பிரித்தானியாவில் “Lambeth Town Hall - Brixton”எனும் பகுதியிலும்   16.05.2021(ஞாயிற்றுக் கிழமை) அன்றும் Startford பகுதியிலும்  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் குருதிக்கொடை வழங்கப்பட்டது.

Read More

April 17, 2021

ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் தொடங்கியது விவேக்கின் இறுதி ஊர்வலம்.. திரளானோர் பங்கேற்பு!
by Editor - 0


தமிழ் சினிமா நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிசச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அரவது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் 24 மணி நேரத்திற்கு பிறகே சொல்ல முடியும் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நேற்று மாலை தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று காலை நடிகர் விவேக் அவர்கள் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.


அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறை பிரபலங்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 5 மணியளவில் அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது.


ஆனால் மூன்றரை மணிக்கே விவேக்கின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதிச்சடங்குகளை தொடங்கினர். இதனை தொடர்ந்து தற்போது நடிகர் விவேக்கின் பூத உடல் ஊர்வலமாக மேட்டுகுப்பம் மின் மயானத்தில் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்படவுள்ளது.

Read More

April 11, 2021

விடுதலைப்புலிகள் மீதான தடைநீக்கத்தின் தீர்வு நோக்கிய சட்டப்போராட்டம் தொடர்பாக பிரித்தானிய வாழ் மக்களிடம் வேண்டுகோள் TGTE
by Editor - 0

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைநீக்கத்தின் தீர்வு நோக்கிய சட்டப்போராட்டம் தொடர்பாக பிரித்தானிய வாழ் மக்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள் ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது.
2018ம் ஆண்டு பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை நீக்கும்படி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மனு மூலம் விண்ணப்பித்திருந்தது. அந்நேரம் துரதிஷ்டவசமாக மேலும் தடையைத் தொடர உள்துறை அமைச்சகம் தீர்மானித்தது.
 
 அதனைத்தொடர்ந்து தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேல்முறையீடு செய்திருந்தது. அப்போதைய உள்துறை அமைச்சு தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் நீடிப்பதற்கு முடிவெடுத்தது. அவ்வேளையில் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு ஆணையத்தின் வல்லுநர் குழு தடை மீளாய்வு குறித்து முடிவு ஒன்றை எடுத்திருந்தது. அவ்முடிவானது தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை என்பது அடிப்படை சட்ட வரையறைகளுக்கு முரணானது என்பதை விசேட தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
 
 அமைச்சரின் பணிந்துரை கூட்டுப் பயங்கரவாதப் பகுப்பாய்வு மையத்தின் (JTAC) கருத்துகளைத் துல்லியமாகச் சரியாக சுருக்கித் தரவில்லை என்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு ஆணையம் கண்டறிந்தது. இந்தச் செய்திகள் “மிக துல்லியமாக கவனிக்கப்பட வேண்டியவை” என்று ஆணையம் கருதியது. ஆகவே தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் நீடித்து வைத்துக் கொள்ளும் முடிவு பிழையானது என்று தீர்ப்பளித்தது.
 
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேல்முறையீடு வெற்றி பெற்றது என்பது உங்களில் பெரும்பாலானவர்கள் அறிந்த விடயமே. இந்த வெற்றி படியின் அடுத்தகட்டமாக, உள்துறை அமைச்சரின் மூல முடிவு நீக்கம் செய்யப்பட்ட போது தடைநீக்க விண்ணப்பத்தை மீளாய்வு செய்யக் கால அவகாசம் தருமாறு அமைச்சர் மேல்முறையீட்டு ஆணையத்தை வேண்டிக் கொண்டார். 

மேல்முறையீட்டு ஆணையம் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைநீக்கம் செய்யக் கோரும் விண்ணப்பத்தை மீளாய்வு செய்வேன் என்ற உள்துறை அமைச்சரின் உறுதிமொழியை feb 18ம் நாள் ஏற்றுக்கொண்டது.
 
மாண்புமிகு உள்துறை அமைச்சர் பிரீத்தி படேல் அவர்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கான கோரிக்கையை முன் வைப்போம். தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது நமக்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. தீர்வினை நமதாக்கிக்கொள்வது ஒவ்வொரு பிரித்தானிய வாழ் தமிழர்களின் கையில் தான் தங்கியுள்ளது. இதற்கு உங்கள் ஆதரவும் செயல்பாடும் மிகவும் முக்கியமானது.
 
நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரி உள்துறை அமைச்சுக்கு கடிதம் மூலம் எழுதுமாறு உங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மின்மடல் மூலமாக தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுப்பதற்கு இந்த கீழேயுள்ள இணையப்பொறி முறையினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நீங்கள் செய்யவேண்டியது…….
 
www.lifttheban.uk எனும் இணைப்பினை அழுத்தி “Click Here to Email Your MP” என்ற பட்டினை அழுத்தியவுடன் புதிய திரையின் இறுதிப்பகுதியின் பெட்டியில் உங்கள் முகவரி அஞ்சல் குறியீட்டைப் (UK Residing Address Post Code) பதிவு செய்து “FIND MY MP” என்ற பட்டினை அழுத்தியவுடன் உங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருக்கு அனுப்புவதற்கான திரை தோன்றும் அதில் உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் விபரங்களை பதிவு செய்து Submit என்ற பட்டினை அழுத்தியவுடன் உங்களுடைய மின்னஞ்சல் உங்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு அனுப்புவதற்கான மாதிரி காண்பிக்கப்படும் இறுதியாக I agree எனும் பட்டினை அழுத்தி Confirm & Send என்ற பட்டினை அழுத்தியவுடன் உங்களுடைய மின்னஞ்சல் உங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சென்றடையும்.

இவ்வாறு பிரித்தானிய வாழ் தமிழர்கள் தத்தமது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூடுதலான அழுத்தமாக அது மாற்றமடைவதுடன் குறித்த தீர்ப்பினை தீர்வாக மாற்ற பிரித்தானிய அரசிற்கு அழுத்தம் கொடுப்போம்.

மேலதிக உதவி தேவையெனில் எம்மை தொடர்புகொள்ளுங்கள் :
தொலைபேசி எண் – 07926899145 அல்லது மின்னஞ்சல் – adminuk@tgte.org

தமிழர் தலைவிதியை தீர்மானிக்க நீங்கள் செலவிடுவது ஒரு நிமிடம் மட்டுமே
Read More