திருகோணமலை மாவட்டத்தின் கோமரன்கடவெல (குமரேசன் கடவை) காட்டுப் பகுதியில் மஹா சிவராத்திரி பூசை நிகழ்வு இடம்பெற்றது.
இந்து பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் மஹா சிவராத்திரி பூசை நிகழ்வு வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றது.
இதன்போது சுயம்பு லிங்கத்திற்கான அபிஷேகம் மற்றும் பூசை நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு பொங்கல் நிகழ்வும் இடம்பெற்றது.
அதேவேளை “சுயம்பு லிங்கேஸ்வரர் சிவன் ஆலயம் கி பி 9-13ம் நூற்றாண்டு காலத்திற்கு உரியது என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்து பௌத்த சங்கம் சார்பாக கியூல கடவெல பிரதேசத்தில் அமைந்துள்ள கி பி 9-13ம் நூற்றாண்டு காலத்திற்கு உரிய “சுயம்பு லிங்கேஸ்வரர் சிவன் கோயில்” இல் மஹா சிவராத்திரி பூசை மற்றும் நமஸ்காரங்கள் தொல்லியல் திணைக்கள அனுமதியுடன் வெகு சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது இந்து பௌத்த சங்க உயர்பீட உறுப்பினர்களுடன் இரு மதங்களை சார்ந்த பெரும் அளவிலான மக்கள் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.
No comments
Post a Comment