சாந்தன் அண்ணாவின் உடலைத் தமிழ் நாட்டில் எழுச்சி வரக் கூடாது என அடக்கி வைத்தும் அவரோடு சிறையில் வாழ்ந்தவர்கள் உள்ளிட்ட தமிழ்த் தேசியப் போராளிகள், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் சில, தமிழினவுணர்வாளர்கள் சிலர் என விமானத்தில் ஏற்றமுன்பு 33 ஆண்டுகள் “இன வலி” சுமந்தது போராடிய ஒரு போராளியாகப் போற்றி *வீர வணக்கம்* செலுத்தி மதிப்பளித்துள்ளனர்!
ஈழத்தில் “வட கிழக்கு தமிழர் தாயகம் எழுச்சியோடு சாந்தன் அண்ணாவிற்கு வீர வணக்கம்! செலுத்த வேண்டும்!” என தமிழக இனவுணர்வாளர்கள் வேண்டுகின்றனர்!
எங்கள் இனத்திற்காக செய்யாத குற்றத்திற்கு சிறை, சித்திரவதை முகாம் என கொடிய இனவலி சுமந்து போராடிய சாந்தன் அண்ணாவிற்கு வீர வணக்கம் செலுத்தி உலகத் தமிழராக மதிப்பளிப்பது தமிழினத்தின் கடமை!
“ஆதிக்க சக்திகள் எழுத முனையும் கதைகள் வரலாறுகள் ஆகாமல் மக்கள் சக்தியின் புரட்சி வரலாறுகள் எழுதப்பட வேண்டும்!”
சாந்தன் அண்ணா அரச வல்லாதிக்கத்தினால் தமிழன் என்பதற்காக வதையுண்டு பலியான அத்தனை போராளிகளினதும் ஒரு குறியீடாக உள்ளார்!
தமிழீழ மண்ணே! உலகத் தமிழினமே! சாந்தன் அண்ணாவிற்கு வீர வணக்கம் செலுத்தி எழுகை கொள்!
அத்தோடு இதர மூன்று அப்பாவித் தமிழரை அவர்களும் கொல்லப்படமுன் விடுதலை செய்யப்பட உறுதியாகக் குரல் கொடுத்துப். போராடுவோம்!
சாந்தன் அண்ணா இன வலி சுமந்து 33 ஆண்டுகள் போராடிய ஒரு மக்கள் போராளி! அவரது சாவும் களச் சாவே!
அவருக்கு எம் வீர வணக்கம்!
No comments
Post a Comment