இலங்கையில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை முடக்கும் முகமாக தடை செய்யப்பட்ட சமூக வலைத்தளங்கள் அனைத்தையும் உடனடியாக செயற்பாட்டுக்கு கொண்டு வருமாறு பொது பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு மற்றும் அனைத்து அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் அறிவித்துள்ளது.
இதனை இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனடிப்படையில் முடக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள் இன்று பிற்பகல் வழமைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய சனிக் கிழமை நள்ளிரவு முதல் சமூக வலைத்தள ஊடகங்கள் முடக்கப்பட்டன.
சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமை பொது மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளதுடன் அரசாங்கத்திற்கு எதிரான அவர்களின் எதிர்ப்பை மேலோங்க செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சமூக வலைத்தளங்கள் மீதான தடைகளை நீக்கியதாக கூறப்பட்டாலும் ஆனால் காரணம் வேறு என கூறப்படுகிறது.
அதாவது சமூக வலைத்தளத்தை தடை செய்தவுடன் மக்கள் vpn ஐ பாவித்து சமூக வலைத்தளத்தை பாவிக்க தொடங்க பல்வேறு நாடுகளில் #gohomegota போன்ற குறியீடுகள் அந்த நாடுகளில் பிரபல்யம் அடைந்துள்ளன இதனால் உலகெங்கும் அரசுக்கு எதிரான மக்கள் வெளிப்பாடுகள் பரவ தொடங்கியதால் உடனடியாக இந்த தடைகள் எடுக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment