Latest News

June 18, 2012

மலையாளப் படத்தில் நடிக்கிறார் விஜய்
by admin - 0



மலையாளத்தில் ரஜினிக்கு அடுத்து ஓரளவு வரவேற்புள்ள நடிகர் விஜய். இவரது சமீபத்திய படங்கள் சில அங்கு 50 நாட்களைத் தாண்டி ஓடியுள்ளன. வசூலும் பரவாயில்லை!

சமீபத்தில் திருவனந்தபுரம், கொச்சின் போன்ற நகரங்களில் ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டர் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

கருத்தன் என்ற மலையாளப் படத்தில் விஜய் நடிக்கப் போவதாக அந்த போஸ்டர் மூலம் தெரிந்து கொண்ட மலையாள ரசிகர்கள் உற்சாகத்துடன் விஜய்க்கு வாழ்த்து சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் படத்தை மஸ்தான் முஜீப் கான் இயக்கப் போவதாகவும், எஸ்என் சாமி திரைக்கதை வசனம் எழுதப் போவதாகவும் வேறு குறிப்பிட்டிருந்தனர்.

இது உண்மைதானா என விஜய்யின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டோம்.

அவர் கூறுகையில், "மலையாளப் படத்தில் விஜய் நடிப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. இப்போதைக்கு தமிழ்ப் படங்களில்தான் அவர் கவனம் செலுத்துகிறார். தெலுங்கு, இந்தியில் வந்த வாய்ப்புகளைக் கூட அவர் ஏற்கவில்லையே," என்றார்.

ஆனால் அடுத்த இரு ஆண்டுகளுக்குப் பின் விஜய் மலையாளத்தில் ஒரு படம் நடிக்கக்கூடும் என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்!



« PREV
NEXT »

No comments