Latest News

June 18, 2012

வரட்சி காலநிலை தொடர்ந்தால் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்: மின்சாரசபை நிர்வாகம் எச்சரிக்கை
by admin - 0

நாட்டில் தொடர்ந்தும் வரட்சியான காலநிலை நீடித்தால் மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என இலங்கை மின்சாரசபை நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் நிலவும் மிக மோசமான வரட்சிக் காலநிலை தற்போது நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீர் மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் நாள் ஒன்றுக்கு எட்டு மணித்தியாலயம் மின் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

நீர் மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி வீழ்ச்சியினால், அனல் மின்நிலையங்களின் உற்பத்தியை அதிகரிக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு மின் அலகிலும் மின்சார சபைக்கு 5.88 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

« PREV
NEXT »

No comments