Latest News

June 17, 2012

கோலிவுட்டைக் கலக்கும் சூடான வதந்தி!
by admin - 0



கோலிவுட்டில் ஒரு செய்திதான் படு ஹாட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது வதந்தியாகத்தான் இப்போது பரபரப்பாகிக் கிடக்கிறது என்றாலும் உண்மையானதாகவும் கூறப்படுகிறது.

நல்ல கருப்பு நிறமுடைய உயரமான நடிகர் அவர். தற்போதைய இளம் ஹீரோக்களில் நல்ல டிமாண்ட் உடையவர். அதிரடி படங்களிலும், அட்டகாசமான கெட்டப் சேஞ்சிலுமாக கலக்கியவர். முத்திரை இயக்குநரின் 'டபுள் ஹீரோ' படத்தில் வித்தியாசமான 'கெட்டப்பில்' கலக்கலாக நடித்தவர்.

இவருக்கும், முக்கியமான சீனியர் நடிகரின் முதல் மனைவியின் மகளுக்கும் இடையே காதல் பற்றிக் கொண்டிருக்கிறதாம். இதுதான் கோலிவுட்டில் இப்போது படு ஹாட்டாக பேசப்படுகிறது.

இந்த செய்தியால் அந்த சீனியர் நடிகர் படு கோபமாக இருக்கிறாராம். அவரே ஒரு 'பஞ்சாயத்து'ப் பேசும் நடிகர், அவரது வீட்டுக்கே பஞ்சாயத்து வந்து விட்டதே என்று சீனியர் நடிகரின் சுற்றத்தார் டென்ஷனாகிக் கிடக்கிறார்களாம்.

இளம் நடிகரைப் பாய்ந்து கடித்துக் குதறி விடுவது என்று கோபத்தில் கொந்தளித்த நடிகரை, அவரது 2வது மனைவிதான் தடுத்து நிறுத்தி அமைதிப்படுத்தி வைத்துள்ளாராம்.

மகளையும் கண்டிக்க முடியாமல், அந்த நடிகரையும் கண்டிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் சீனியர் நடிகர், விவகாரத்தை மிகவும் கவனமாக கையாள முயற்சித்து வருவதாக கூறுகிறார்கள்.

ஏற்கனவே இந்த இளம் நடிகரின் குடும்பத்தார் மீது படத் தயாரிப்பு தொடர்பாக சீனியர் நடிகரின் 2வது மனைவி பஞ்சாயத்துக் கிளப்பியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். எனவே, இளம் நடிகர், சீனியர் நடிகரின் மகளுடன் நட்பு பாராட்டுவது பழி வாங்கும் படலமா என்ற சந்தேகப் பார்வையும் கோலிவுட்டில் எழுந்துள்ளதாம்.

ஆனால் இதைப் பற்றி இளம் நடிகர் கவலையேபடவில்லையாம். அதேபோல சீனியர் நடிகரின் மகளும் கவலைப்படவில்லையாம். இருவரும் சேர்ந்து இப்போது ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்கள் என்பதுதான் இந்த செய்தியின் ஹைலைட்டாகும்.

« PREV
NEXT »

No comments