Latest News

June 15, 2012

புதுக்கோட்டையில் ஆளும் அ.தி.மு.க.,‌‌வெற்றி !; டெபாசிட்டை தக்க வைத்தது தே.மு.தி.க.,
by admin - 0

புதுக்கோட்டை இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடந்தது. 23 வது இறுதிச்சுற்றின்படி அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திக்தொண்டைமான் 71 ஆயிரத்து 498 வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மொத்தம் பதிவான ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 277 ஓட்டுகளில், அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் ஒரு லட்சத்து 1, 998 ஓட்டுகள் பெற்றார். அவருக்கு அடுத்து தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர் உசேன் 30 ஆயிரத்து 500 ஓட்டுகள் பெற்றார். இதன்மூலம் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 71 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் அ‌மோக வெற்றி பெற்றார். மொத்தம் பதிவான ஓட்டுக்களில் 6 ல் ஒரு மடங்கு பெற்று தே.மு.தி.க., தனது டெபாசிட் தொகையை தக்க வைத்தது.

புதுக்கோட்டை எம்.எல்.ஏ., முத்துக்குமரன் சாலை விபத்தில் இறந்ததைத் தொடர்ந்து, அங்கு 12ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளரை அறிவித்து, பிரசாரத்தை அ.தி.மு.க., துவங்கியது. தி.மு.க., - காங்கிரஸ் - ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. எதிர்க்கட்சியான தே.மு.தி.க., நீண்ட ஆலோசனைக்குப் பின், வேட்பாளரை களமிறக்கியது.
தீவிர பிரசாரம்: இதனால், அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. 32 அமைச்சர்கள் உட்பட 52 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து, அ.தி.மு.க., பிரசாரம் மேற்கொண்டது. முதல்வர் ஜெயலலிதா ஒருநாள் பிரசாரம் மேற்கொண்டார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் புதுக்கோட்டையில் முகாமிட்டு பிரசாரம் செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தே.மு.தி.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டது. பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் இன்றி நடந்து முடிந்த இடைத்தேர்தலில், 1 லட்சத்து 47 ஆயிரத்து 277 பேர் ஓட்டளித்தனர்.

வீடியோ கேமரா கண்காணிப்பு: ஓட்டு எண்ணிக்கை, வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. இதற்காக ஓட்டு எண்ணிக்கை அறைக்குள், ஐந்து வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டன.
« PREV
NEXT »

No comments