Latest News

June 15, 2012

விஜய் தன் தவறை உணரும் காலம் வரும்! சீமான் அதிரடி
by admin - 0

ஈழத்தில் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை கண்டித்து இயக்குனர் சீமான் அரசியல் பொதுக்கூட்டங்களில் பலரையும் கடுமையாக விமர்சித்து பேசி வந்தார். மத்திய அரசை விமர்சித்ததற்காக இயக்குனர்கள் அமீரும், சீமானும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

அதன் பிறகு இயக்குனர் சீமான் அரசியல் கட்சி துவங்கினார். அந்த நேரத்தில் சீமானின் பேச்சு அரசியல் களத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது என்பதென்னவோ உண்மைதான்.

அந்த நேரம், நடிகர் விஜய்யும் ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யக் கோரி தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுக-வை ஆதரிக்கும் முடிவை எடுத்தது. விஜய்யின் இந்த முடிவும் அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்த தவறவில்லை. இந்த சமயத்தில் விஜய்யும் சீமானும் இணைந்து படம் எடுப்பதைப் பற்றி திட்டமிட்டார்கள்.

விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டப்படிக் குற்றம் படத்தில் சீமானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் சீமான் விஜய்யை வைத்து படம் இயக்குவார் என உருதியாக பேசப்பட்டது.

பகலவன் என தலைப்பிடப்பட்ட அந்த படத்தில் பல அரசியல் விஷயங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கலைப்புலி எஸ்.தாணு படத்தை தயாரிக்க சம்மதித்தார். ஆனால் தேர்தலுக்கு பிறகு முதலமைச்சருக்கு பாராட்டு விழாக்கள் வைப்பதில் பிஸியாகிவிட்டார் சீமான். விஜய்யும் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன் என அடுத்தடுத்த படங்களில் பிஸியானார்.

கிடப்பில் இருந்த பகலவன் படத்தை பற்றி சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் சீமான்,“ தண்ணீரால் நனைய வேண்டிய பூமி கண்ணீராலும் ரத்தத்தாலும் நனைகிறது. மக்கள் அனுபவிக்கும் துயரங்களை அடிப்படையாகக்கொண்டு தான் நான் பகலவன் கதையை எழுதினேன்.

நடிகர் விஜய் நடிப்பதாக இருந்த இந்த படத்தில் இபோது அவர் நடிக்கவில்லை. ஏன் பின்வாங்கினார் என்ற காரணமும் சொல்லவில்லை. நடிகர் ஜீவாவிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். அவர் கண்டிப்பாக நடிப்பார். படம் வெளியாகும் போது, இந்தப் படத்தை தவறவிட்டது தவறு என்பதை தவறவிட்டவர்கள் உணர்வார்கள்” என்று கூறியுள்ளார்.

« PREV
NEXT »

No comments