Latest News

June 15, 2012

நமீதாவுக்கு பாட்டி சொன்ன விளக்கம்
by admin - 0

நடிகை நமீதாவுக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் இல்லாத காரணத்தால் தனது பிசினஸ் பணிகளில் தீவிரமாக இருந்து வருகிறார். எப்படியும் கட்டுமானத் துறையில் பெரிய அளவில் வந்துவிடவேண்டும் என முழுமூச்சுடன் இறங்கிய நமீதாவிற்கு மூச்சுவிடமுடியாத அளவிற்கு நெருக்கடி ஏற்பட்டதால் மீண்டும் சினிமா நிகழ்ச்சிகளில் தலைகாட்ட துவங்கினார்.



எப்படியாவது மறுபடியும் பழைய மார்கெட்டை பிடித்துவிட வேண்டும் என்று நினைத்த நமீதா செயலில் இறங்கியதன் விளைவு தான் பெரும்பாலான பார்ட்டிகளிலும், நிகழ்ச்சிகளிலும் எடுக்கப்பட்ட ஃபோட்டோக்களில் நமீதாவின் முகம் பளிச்சென பதிந்திருந்தது. பல கிராமங்களில் நமிதாவே இன்னும் கவர்ச்சிக்கன்னியாக இருந்தாலும் தனது வரவை கோடம்பாக்கத்தில் பதிய வைக்க வேண்டும் என விரும்பிய நமீதா ஒரு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிக்கொண்டிருக்கும் போது சிறிய கோவிலில் நடந்த ஒரு ஏழை குடும்பத்தின் திருமணத்தில் கலந்து கொண்டது.

அந்த திருமணத்தில் கலந்து கொண்டது பற்றி பேசிய நமீதா “நான் திடீரென அந்த திருமணத்தில் கலந்து கொண்ட போது அந்த ஏழையின் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி தெரிந்தது. அதற்காகத் தான் நான் திருமணத்திற்குச் சென்றேன்” எனக் கூறியிருந்தார்.

இந்த திருமணத்தை பற்றிய பரபரப்பான பேச்சு அடங்குவதற்குள் ’சுருட்டு’ பிடிக்கப் போகிறேன் என்று ஒரு பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறார் நமீதா. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த நமீதா வீதியில் ஒரு பாட்டி சுருட்டு பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்து வண்டியை நிறுத்த சொல்லியிருக்கிறார். அந்த பாட்டியிடம் சென்ற நமீதா “ இது என்னது பாட்டி. சிகிரெட் மாதிரி இல்லையே இவ்ளோ பெரிசா இருக்கு” என்று கேட்டிருக்கிறார்.

அந்த பாட்டி ”இது சுருட்டுமா. வேணும்னா புடிச்சி பாக்குறியா” எனக் கேட்க, அதற்குள் நமீதாவின் உதவியாளர் அது ’சிகார்’ மேடம் என நமீதாவிற்கு புரிவது போல் கூறியுள்ளார். விவரம் அறிந்த நமீதா பாட்டியிடம் விடைபெற்றுக் கொண்டு அந்த இடத்திலிருந்து கிளம்பியிருக்கிறார். ’எப்படியும் சிகார் பிடித்துவிடுவேன்’ என நமீதா சபதம் செய்தாராம். சபதத்தை நிறைவேற்ற நமீதா புகைத்தாரோ இல்லையோ இந்த செய்தி கோடம்பாக்கத்தில் புகைய ஆரம்பித்துவிட்டது.

« PREV
NEXT »

No comments