மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல்முறையாக 1400 வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிலையத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றது.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 2004ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்னரும் 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையான கலாப்பகுதியில் பட்டப்படிப்பை முடித்த வேலையற்ற சுமார் 1400 பட்டதாரிகளுக்கு தொழில் நியமனக் கடிதங்கள் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வழங்கப்பட்டன. இவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஆகியவற்றிலேயே இவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன.
இவர்களின் இந்த நியமனங்கள் ஆறுமாதங்களுக்கு பின்னர் நிரந்தர நியமனங்களாக அரசாங்கத்தின் பல்வேறு திணைக்களங்களுக்கும் இவர்கள் உள்ளீர்க்கப்படுவார்கள் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்
No comments
Post a Comment