நடிகர் சிம்பு இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த ‘சிலம்பாட்டம்’ படம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் வெற்றியடையவில்லை. ஆனாலும் அந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நடிகை ‘சானா கான்’ தனது கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார்.
சிலம்பாட்டம் படத்தைத் தொடர்ந்து ’தம்பிக்கு எந்த ஊரு’, ‘பயணம்’, ’ஆயிரம் விளக்கு’ ஆகிய படங்களில் நடித்த சானாகான், சில நாட்கள் தமிழ்சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்தார். மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க சமீபத்தில் சென்னை வந்து தங்கியிருக்கும் சானாகான், ஒரே பேட்டியில் அனைத்து நடிகைகளையும் தன் பக்கம் திரும்ப வைத்துள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில் சானாகான் “ பாலிவுட் நடிகைகளை விட, தென்னிந்திய நடிகைகளே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். பெரும்பாலான நடிகைகளை குடித்துவிட்டு உளருவதை நான் என் கண்ணாலேயே பார்த்திருக்கிறேன்.
அவர்களுக்கு புகை பிடிக்கும் பழக்கமும் இருப்பது தான் அதிர்ச்சியான செய்தி. நான் அந்த மாதிரியான நடிகை கிடையாது. உடலை சீராக வைத்துக்கொள்ள ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 30 நாட்கள் பட்டினியாக இருக்கிறேன். தினமும் கடவுளை வணங்குகிறேன். புகைப் பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் எனக்கு கிடையாது” என்று ஓபனாக தென்னிந்திய நடிகைகளை வம்பிற்கு இழுத்துவிட்டார்.
சானாகானின் பேட்டி பற்றி அறிந்த தென்னிந்திய நடிகைகள் இதை சாதாரணமாக விடுவார்களா. “சானாகான் இப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்” என கூறியுள்ளனர். சானாகானின் கைபேசிக்கும், தொலைபேசிக்கும் ஓயாது ஃபோன் செய்து தங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனராம்.
ஃபோன் செய்ய நேரமில்லாத நடிகைகள் குறுஞ்செய்திகள் மூலமாகவும் சானாகானை பொரிந்து தள்ளுகிறார்களாம். நடிகை த்ரிஷா எல்லா வகையிலும் சானாகானை திட்டிவிட்டதால் அடுத்தபடியாக திரைக்கலைஞர்கள் சங்கத்தில் சானாகான் மீது புகார் கொடுக்குமாறு தனது பி.ஏ-விடம் கூறியுள்ளாராம்.

No comments
Post a Comment