Latest News

June 17, 2012

ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
by admin - 0

ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
கோச்சடையான் படப்பிடிப்பில் தான் நடிக்க வேண்டிய காட்சிகளை நடித்து முடித்துவிட்டு வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ரஜினி இன்று(16.06.12) காலை கலைஞரை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் பேட்டியளித்த ரஜினி “கலைஞரின் பிறந்த நாளின்போது நான் பெங்களூரில் இருந்தேன். நேற்றுதான் சென்னை வந்தேன். இன்று காலை அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல நேரில் சந்தித்தேன். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று கூறினார்.

கோச்சடையான் படப்பிடிப்பிற்காக லண்டன், நியூயார்க் என வெளிநாடுகளுக்குச் சென்ற ரஜினிகாந்த் சமீபத்தில் தான் சென்னைக்கு திரும்பினார். ரஜினியின் அடுத்த படம் என்றால் அது கோச்சடையான் தான், அதுவரை காத்திருக்க வேண்டும் என்ற நினைப்பில் இருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்துள்ளது ரஜினி நடித்த “எந்திரன்” படம். இப்போது எந்திரன் பற்றி என்ன செய்தி என்று புருவத்தை உயர்த்தாமல் மேலே படியுங்கள்.

ஜப்பானில் ரஜினிக்கு அதிக ரசிகர்கள் இருப்பதும், முத்து படம் முதல் எந்திரன் வரை ரஜினி படங்களுக்கு ஜப்பானில் அமோக வரவேற்பு இருப்பதும் அனைவரும் அறிந்ததே. இப்போது ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு, ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது ரஜினியின் எந்திரன்.

உலகத்திலேயே ரோபோக்கள் அதிகமாக உருவாகும் நாடான ஜப்பானில் எந்திரன் படம் 1300 அரங்குகளில் வெளியிடப்பட்டு வெற்றிகரமான ஹவுஸ்புல் காட்சிகளாக ஜப்பானை கலக்கிவருகிறது. முதலில் இரண்டு மணி நேர படமாக சில விழாக்களிலும் நிகழ்ச்சிகளிலும் திரையிடப்பட்ட எந்திரன் பெற்ற அமோக வரவேற்பால் மூன்று மணி நேர படமாக திரையரங்குகளில் திரையிடத் துவங்கியுள்ளனர்.



ஜப்பான் நாட்டில் அதிகமான விஞ்ஞானிகள் ரோபோ தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அழிவை உண்டாக்கக்கூடிய ஒரு ரோபோ தயாரிக்கப்பட்டாலும் அது நாட்டிற்கு எவ்வளவு பெரிய அச்சுருத்தலாக இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் எந்திரன் படம் இருப்பதால் ஜப்பானில் அமோக வரவேற்பு என்கின்றனர். கெட்ட ரோபோ கேரக்டரில் ரஜினி ‘மே...!’ எனச் சொல்லும் வசனமும், ’இரும்பிலே ஒரு இதயம்’ எனும் பாடலும் ரசிகர்கள் முணுமுணுத்தபடி இருக்கிறார்களாம்.



« PREV
NEXT »

No comments