Latest News

February 29, 2012

மீன்முள் தொண்டையில் சிக்கி குடும்பஸ்தர் மரணம்; யாழில் சம்பவம்
by admin - 0


மீன்கூழ் குடித்த நபருக்கு மீன்முள் தொண்டையில் சிக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்று யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி வைத்திய நிபுணர் சி.சிவரூபன் தெரிவித்தார்.

யாழ். குப்பிளான் தெற்கு, வரிசயப்புலம் பகுதியைச் சேர்ந்த ஜந்து பிள்ளைகளின் தந்தையான கற்பன் கிருஸ்ணகுமார் (வயது 51) என்பவரே இன்று புதன்கிழமை காலை இவ்வாறு உயிரிழந்தவராவர்.

கிருஸ்ணகுமார் தோட்ட வேலை செய்து விட்டு காலையில் மீன்கூல் குடித்துக் கொண்டு இருக்கும் போது தொண்டையில் திரளி மீன்முள் சிக்கிக் கொண்டதில் மூச்சு எடுப்பதற்கு கஸ்டப்பட்டுள்ளதாகவும் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அவரை அழைத்துச் செல்லும் போது வழியிலேயே உயிரிழந்துள்ளார் என்றும் மனைவி கி.சத்தியசீலி குறிப்பிட்டார்.

இவரது மரணம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More

நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதாக கூறி இருவர் வவுனியாவில் கைது
by admin - 0


இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களை விசாரணைக்கு அழைப்பதாக கூறி பொய்ப் பத்திரம் தயாரித்த இருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்துவந்த இருவர் வவுனியா காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டிலுள்ள தமிழர்களை வவுனியா முகாம் இராணுவத்தினர் விசாரணைக்கு அழைப்பதாகக் கூறி குறித்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு போலி முத்திரைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தமக்கு தகவல் கிடைத்தாகவும் வவுனியா குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான ஆவணங்களைத் தயாரிப்பதன் மூலம் வெளிநாட்டிலுள்ள புலம்பெயர் மக்களது இருப்பானது தொடர்ந்தும் பாதுகாக்க இவர்கள் எடுக்கும் முயற்சியானது இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுவதாகவே அமைகின்றத என வவுனியா காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
Read More

கூட்டணிக்காக காலில் விழாத குறையாக கெஞ்சிய அதிமுக: 'டேப்' ஆதாரம் இருப்பதாக பிரேமலதா தகவல்
by admin - 0


சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய அக் கட்சியின் தலைவர் விஜய்காந்தின் மனைவி பிரேமலதா, தங்களுடன் கூட்டணி அமைக்க அதிமுகவின் முக்கிய தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்ட 3 பேர் காலில் விழாத குறையாக கெஞ்சியதாகக் கூறியுள்ளதோடு, அதற்கான வீடியோ ஆதாரமும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இனியும் விஜய்காந்தை அதிமுக சீண்டினால் அந்த ஆதாரங்களை வெளியிடு​வோம் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவரான விஜயகாந்த், இனி பொதுச் செயலாளராகவும் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த 'ராமு வசந்தன் இறந்ததும் அந்தப் பதவிக்காக, பல முக்கிய தலைகளும் போட்டியிட, இதை வைத்து கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த அதிமுக முயன்றதாகவும், இதனால் தான் அந்தப் பதவியை தானே வைத்துக் கொண்டார் விஜய்காந்த் என்கிறார்கள்.

கூட்டத்தில் பிரேமலதா பேசுகையில், கடந்த ஆட்சியில் 13 இடைத்தேர்தல்கள் நடந்தன. அதில் தன்னந்தனியாகத் தைரியத்தோடு போட்டியிட்டது தே.மு.தி.க. ஆனால், 5 இடைத் தேர்தல்களில் போட்டி போடாமலேயே ஓடி ஒளிந்தவர்கள், பென்னாகரத்தில் டெபாசிட்டைப் பறி கொடுத்தவர்கள் எல்லாம் திராணி பற்றிப் பேசுகிறார்கள்.

அதிமுகவோடு கேப்டன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் அந்த அம்மா ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? தே.மு.தி.கவோடு கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று சொல்கிறார் ஜெயலலிதா. நம்மோடு கூட்டணி சேர அவர்கள் எவ்வளவு இறங்கி வந்தார்கள் என்று சொன்னால், அவர்கள் முகத்திரை கிழிந்து தொங்கும். இப்போது, அமைச்சர்களாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் அப்போது கேப்டனை சந்திக்க எங்கள் வீட்டுக்கு வந்து காத்திருந்தார்கள்.

அவர்கள் என்னென்ன பேசினார்கள். நம்மோடு கூட்டணி வைக்க எப்படி எல்லாம் அலைந்தார்கள், காலில் விழாத குறையாக எப்படிக் கெஞ்சினார்கள் என்பதை எல்லாம் பதிவு செய்து வைத்திருக்கிறோம். அதைக் கேட்கும் தைரியம் அந்தம்மாவுக்கு உண்டா?. இனியும் எங்களை சீண்டினால் அந்த ஆதாரங்களை வெளியிடு​வோம் என்றார்.

முன்னதாக இந்தக் கூட்டத்துக்கு வந்த நிர்வாகிகளின் செல்போன்களை எல்லாம் தொண்டர் படையினர் வாங்கி வைத்துக் கொண்டே உள்ளே அனுப்பினார். இதற்கான காரணத்தையும் விஜய்காந்த் பின்னர் விளக்கினார்.

அவர் பேசுகையில், சங்கரன்கோவில் இடைத் தேர்தல் வேட்பாளரை பொதுக் குழுவிற்கு முன்பாகவே ஏன் அறிவித்தேன் தெரியுமா? தேர்தலில் நாம் கலந்து கொள்வது தொடர்பான ஒரு சர்ச்சையை இந்தக் கூட்டத்தில் உருவாக்க அதிமுக சதித் திட்டம் தீட்டியிருந்தது. அதை முறியடிக்கத்தான் வேட்பாளரை அறிவித்துவிட்டுப் பொதுக்குழுவிற்கு வந்தேன்.

மேலும் வெளியிலிருந்து செல்போன் மூலம் இங்கே கலவரத்தை யாரும் ஏற்படுத்திவிடக் கூடாது என்றுதான் இங்கே செல்போன்களுக்குத் தடை விதித்தேன் என்றார்.
Read More

காட்சிக்காக உண்மையாகவே குடித்துவிட்டு நடித்தார் விக்ரம்!
by admin - 0

மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் படத்தில் நடித்ததற்கு பிறகு இந்தியில் விக்ரம் நடிக்கும் இரண்டாவது படம் “டேவிட்”. தமிழ் படங்களின் கால்ஷீட்டைக் கூட குறைத்துக் கொண்டுள்ளார் விக்ரம்.இப்படத்தின் இயக்குனரான பெஜோய் நம்பியார் மணிரத்னம் இயக்கிய குரு, ராவணன் படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர். இந்த படத்திற்காக இந்தி நடிகர்களான ஷாருக் கான், அமீர் கான் ஆகியோரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதால் டேவிட் இந்தியிலும் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

டேவிட்டில் மீனவனாக நடிக்கிறாராம் விக்ரம். படப்பிடிப்புக் காட்சிகள் ஆலப்புழையிலும், கேரள மாவட்டத்தின் எல்லைப்புற ஊர்களிலும் நடந்துள்ளன.

மீனவன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விக்ரம் படத்தில் தண்ணியில்(மது) வருவது போல் தான் அதிக காட்சிகளாம். அந்த கதாபத்திரத்திரம் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று விரும்பிய விக்ரம்,
உண்மையாகவே குடித்துவிட்டு அந்த காட்சிகளை நடித்துக் கொடுத்தாராம்.

இதுக்கு பேர் தான் கேரக்டரோட ஒன்றி நடிக்கிறதோ?

Read More

விடுதலைப்புலிகள் கதை JAFFNA: பாலிவுட்டில் படமாகிறது
by admin - 0


விடுதலைப்புலிகளை பின்புலமாக வைத்து கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தை மணிரத்னம் இயக்கினார். மாதவன் முக்கிய கேரக்டரில் நடித்தார்.


இதுபோல் இந்தியில் விடுதலைப்புலிகளை மையப்படுத்தி புதுப்படம் தயாராகிறது. சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமான சண்டை, ஈழப் போராட்டம், விடுதலைப் புலிகளின் யுத்த நடவடிக்கைகள் போன்றவை இதில் காட்சிபடுத்தப்படுகின்றன.

இதில் கதாநாயகனாக ஜான் ஆபிரகாம் நடிக்கிறார். அவரே தயாரிக்கவும் செய்கிறார். ஜாப்னா என படத்துக்கு பெயரிட்டுள்ளனர்.

போரில் ஒரு விடுதலைப் புலி சந்தித்த நிகழ்வுகள், பட்ட கஷ்டங்கள் போன்றவற்றை திரைக்கதையாக தொகுத் துள்ளனர். இப்படத்தை ஜோசித் சிர்கார் இயக்குகிறார்.


இவர் ஏற்கனவே காஷ்மீர் பிரச்சினையை வைத்து ‘யாஹன்’ என்ற படத்தை எடுத்து வெளியிட்டார். விடுதலைப்புலிகள் பற்றிய ‘ஜப்னா’ படம் அரசியல் திரில்லர் கதையாக உருவாகிறது என்று தெரிவித்துள்ளார் அவர்.
Read More

பில்லா 2 இசை வெளியீடு மார்ச் இறுதியில்
by admin - 0



அஜீத் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் பில்லா 2. சக்ரி டோல்ட்டி இயக்க, யுவன் இசையமைத்து வருகிறார்.

படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இன்னும் இப்படத்தின் புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

இந்நிலையில் பில்லா 2 படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான Sunir Kheterpal கூறியிருப்பது: ”இசை வெளியீடு மார்ச் மாத கடைசியில் இருக்கும். டிரெய்லர்கள் தயாராகி வருகின்றன. மார்ச் 15க்குப் பிறகு தியேட்டர்களில் டிரெய்லர்கள் வெளியிடப்படும்
Read More

பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை - விரைவில் சட்டம்
by admin - 0


நாட்டில் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதித்து சட்டமூலம் ஒன்றை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த சட்ட மூலம், சட்டமூல திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த சட்ட மூலம் திணைக்களத்திற்கு வருடாந்தம் அனுப்பி வைக்கப்படுகின்ற போதும் தமிழ் மொழிப் பெயர்ப்பில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் காலதாமதமாவதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Read More

பாதை தவறிய முச்சக்கர வண்டியின் நிலை..
by admin - 0


கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியின் அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டுப் பகுதியில் முச்சக்கர வாகனமொன்று இன்று (28) செவ்வாய்கிழமை காலை தடம் புரண்டதில் நபரொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிந்தவூரிலிருந்து பயணித்த முச்சக்கர வண்டியே மேற்படி விபத்துக்குள்ளானது.

இதன்போது சாரதியுடன் நால்வர் பயணித்திருந்தனர்.

காயமடைந்தவர் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

மிகுதிப் பணத்தை வழங்கத் தவறும் பஸ் நடத்துநர் இடைநிறுத்தப்படுவர்;கெமுனு விஜேரட்ன
by admin - 0

னியார் பஸ்களில் பயணிகளுக்கு மிகுதிப் பணத்தை வழங்கத் தவறும் நடத்துநர்களை இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்.

அதற்கமைய, மிகுதிப் பணத்தை வழங்கத் தவறும் நடத்துநர்களை இரண்டு தினங்கள் பணியிலிருந்து இடை நிறுத்தத் தீர்மானித்துள்ளதாக அச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையுயர்வு காரணமாக அண்மையில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையிலும் அதிக கட்டணம் அறவிடுதல் மற்றும் மிகுதிப் பணத்தை வழங்காமல் விடுதல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுவருவது குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read More

எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்'!!
by admin - 0


கேள்வி 1:

இவற்றில் ஒருவர் செய்வதைப் பார்த்து மற்றவர் அப்படியே செய்வதை எப்படிக் குறிப்பிடுவீர்கள்?

நாய் அடிச்சான் காப்பி
கொசு அடிச்சான் காப்பி
ஈயடிச்சான் காப்பி
பேய் அடிச்சான் காப்பி

கேள்வி 2:

ஒரு உணவின் பெயர் கொண்ட பண்டிகை எது?

ஏகாதசி
பொங்கல்
விநாயக சதுர்த்தி
மெதுவடை

-இந்தக் கேள்வி பதில்களைப் படித்ததும், என்னய்யா கிண்டலா என கடுப்பாக உங்களுக்குள் கேள்வி எழுந்தால்... அதை அப்படியே கேம்ஷோ நடத்தும் தனியார் தொலைக்காட்சிகள் பக்கம் திருப்பிவிடுங்கள்!.

'எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்' என்று மயிலாசாமியிடம் விவேக் நடத்திய கேம்ஷோவை விட 'மகா அறிவாளித்தனமான' கேள்விகள் கேட்கப்படுவது தான் கோபத்தை வரவழைக்கிறது. மக்களை முன்னேறவே விட மாட்டார்கள் போலிருக்கிறது.

கேள்விகள் கேனத்தனமாக இருக்கிறதே என்று நக்கலடித்தபடி, அடுத்த வேலைக்கு போய்விட்டால், நாம் முட்டாள்கள். அதற்குள் உள்ள மோசடியைப் புரிந்து கொண்டால், இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துபவர்களை முட்டாளாக்க ஒரு வாய்ப்பாவது உண்டாகும்.

இது போன்ற கேள்வி- பதில் நிகழ்ச்சியின் பின்னால் விளையாடுகிறது பல கோடி ரூபாய் மக்கள் பணம்.

எப்படி... எல்லாம் பார்வையாளர்கள் மற்றும் ஆர்வக் கோளாறு நேயர்கள் மூலம்தான்.

இந்த கேம் ஷோவில் கலந்து கொள்ள ஒரு எஸ்எம்எஸ் போட்டி வைத்தார்கள். அந்த போட்டிக்கு இங்கே நீங்கள் படித்ததை விட கேவலமான ஏழு கேள்விகளை, ஏழு நாள் கேட்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் பல லட்சம் எஸ்எம்எஸ்கள். அதாவது ஒருவர் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதாது... இரண்டு அனுப்ப வேண்டும்.

அப்படி அனுப்பியதில் கிட்டத்தட்ட 5 கோடி எஸ்எம்எஸ் குவிந்ததாகச் சொல்கிறார்கள். ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு குறைந்தது ரூ 6 முதல் 9 வரை சார்ஜ் பண்ணுகின்றன மொபைல் நிறுவனங்கள்.

இப்போது கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். சராசரியாக ரூ 6 என்று வைத்துக் கொண்டால்கூட, எஸ்எம்எஸ் மூலம் மட்டுமே ரூ 30 கோடியை சம்பாதித்திருக்க முடியும். இது தவிர, ஸ்பான்ஸர்கள், விளம்பரதாரர்கள் தரும் பல கோடி ரூபாய்கள்...

ஒரு டிவி இந்த நிகழ்ச்சியை அறிவித்து கல்லா கட்டியதைக் கண்டதும், இன்னொரு முன்னணி டிவியும் ஒரு கோடி என்ற மயக்க பிஸ்கட்டை மக்கள் முன் நீட்ட ஆரம்பித்துள்ளது.

இது வர்த்தகம்தான் என்றாலும்... மிக சாமர்த்தியமாக மக்களைச் சுரண்டும் தந்திரம் என்பதே பல சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியை அனுமதிக்கும் அரசு, ஆன்லைன் லாட்டரிகள், ஒரு நம்பர் லாட்டரி, லாட்டரிச் சீட்டுகள், மூணு சீட்டு என பல்வேறு வகை சூதாட்டங்களையும் தாராளமாக அனுமதிக்கலாமே. பணம் சம்பாதிக்கும் குறுக்கு வழிகளில் இவையும் அடங்கும்தானே, என கோபக் கேள்விகள் எழுந்துள்ளன.

அரசின் 'கொர்ர்' தொடருமா, கலையுமா?
Read More

தமிழர் நாடுகடத்தல் குறித்து பிரிட்டன் கருத்து
by admin - 0

பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் இலங்கை தமிழர்கள் அங்கு சித்திரவதை மற்றும் பாலியல் வல்லுறவுக்கான ஆபத்துக்களை எதிர்நோக்குவதாக இரு மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளதை பிரிட்டன் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
மற்றுமொரு தொகுதி இலங்கையர்கள் இன்று நாடு திருப்பி அனுப்பப்படவுள்ள நிலையில் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மற்றும் பிரீடம் ஃபுரம் டோச்சர் (சித்ரவதையில் இருந்து விடுதலை) ஆகிய அமைப்புக்கள், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் அங்கு கொடூரமாக நடத்தப்படுவார்கள் என்று கூறி, அவர்களை அங்கு அனுப்புவதகான விமானம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று கேட்டுள்ளன.
ஒவ்வொரு நபரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் போது அங்கு அவருக்கு எந்தவிதமான பாதுகாப்பும் தேவையில்லை என்று பிரிட்டிஷ் அரசாங்கமும், நீதிமன்றமும் திருப்தி அடையும் பட்சத்திலேயே பிரிட்டன், தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு பிபிசிக்கு கூறியுள்ளது.
அரசியல் தஞ்சம் கோரும் எல்லா தமிழர்களுக்குமே பாதுகாப்பு தேவை என்று கூறமுடியாது என்று மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியிருப்பதை பிரிட்டிஷ் அரசாங்கம் சுட்டிக்காட்டுகின்றது.
பிரிட்டனில் இருந்து திருப்பி அனுப்பப்படுபவர்கள் தவறாக நடத்தப்படுகிறார்கள் என்று திடமான குற்றச்சாட்டு எதுவும் கிடையாது என்றும் அது கூறியுள்ளது.
இதன் மூலம், அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மற்றும் பிரிட்டனை தளமாகக் கொண்ட பிரீடம் ஃபுரம் டோச்சர் ஆகிய அமைப்புக்களின் கடுமையான வார்த்தைகளைக் கொண்ட அறிக்கைகளுடன் அது முரண்படுகின்றது.
கடந்த வாரத்தில் இலங்கை இராணுவமும், பொலிஸாரும் வெளிநாட்டில் இருந்து திரும்பிய சில தமிழர்களை கைது செய்து, அவர்களை அடித்து, மண்ணெண்ணையில் மூழ்கடித்து அல்லது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விடுதலைப்புலிகளுடன் தொடர்பிருந்ததாக குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்குமாறு நிர்ப்பந்தித்ததாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியிருந்தது.
இலங்கை திரும்பும் பெரும்பாலான தமிழர்களை இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் சந்தித்து சில உதவிகளை வழங்கினாலும், அந்த உதவிகளை அவர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதமாகக் கொள்ள முடியாது என்றும் அது கூறியுள்ளது.
பாலியல் வல்லுறவு உட்பட இந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை பொலிஸார் மறுத்திருக்கிறார்கள்.
ஆனால், நாடு திருப்பி அனுப்பப்பட்ட சிலர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.http://sureptr.com/pages/index.php?refid=vivasaayi
Read More

அந்தரத்தில் வினோதமாக அமர்ந்திருக்கும் மாயாஜால மனிதர்
by admin - 1

பொதுவாக மாயாஜாலம் அனைத்து தரப்பினரையும் அதிகமாக கவர்வதுடன் அனைவரின் மனதில் பெரும் மகிழ்ச்சியையும், சிந்தனையும் ஏற்படுத்துகின்றது.
ரமனா என புகழ்பெற்ற இந்த மேஜிக் நிபுணர், தனது தாத்தாவிடம் இருந்து ஆரம்ப மேஜிக் வித்தைகளைக் கற்றுக்கொண்டு, பின்பு இந்தியாவின் புகழ்பெற்ற மேஜிக் அக்கடமியில் கலந்து கொண்டு பலவிதமாக வித்தைகளை கற்றுள்ளார்.

மேலும் அவ்வாறு இங்குள்ள மேஜிக் நிபுணர் செய்யும் வித்தைகளில் சிலவற்றைக் காணொளியில் காணலாம்.http://sureptr.com/pages/index.php?refid=vivasaayi
Read More

February 28, 2012

எதிரி இலக்கை தாக்கிவிட்டு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வரும் ஏவுகணை - இந்தியா முயற்சி
by admin - 0

எதிரி இலக்கை தாக்கி அழித்து விட்டு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வரும் ஏவுகணையை இந்தியா தயாரிக்கிறது என விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை கூறினார்.


தஞ்சை மாவட்டம் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் அதிர்வலைகள் தொடர்பான 2 நாள் தேசிய கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் வரவேற்றார். கருத்தரங்கை தொடங்கி வைத்து, பிரம்மோஸ் ஏவுகணை திட்ட முதன்மை செயல் அலுவலர் சிவதாணுப்பிள்ளை,


‘’விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அக்னி, பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகள் குறிப்பிட்ட இலக்கை மிகச்சரியாக சென்று வீழ்த்தும் வல்லமை படைத்தவை.

சூப்பர் சானிக் ஏவுகணைகளை தொடர்ந்து ஹைபர் சானிக் ஏவுகணைகளை இந்தியா கண்டுபிடித்துள்ளது. இதற்காக பல்வேறுகட்ட ஆராய்ச்சிகள் மேற் கொள்ளப்பட்டன.

இந்த ஏவுகணைகள் இந்திய தரைப்படை, கப்பல்படைகளில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு மேலும் பலப்படுத் தப்பட்டுள்ளது. ஏவுகணை தொழில் நுட்பத்தில் உலக அளவில் இந்தியா தலைமை வகிக்கிறது.


சூப்பர்சானிக் இன்ஜின்கள் மூலம் விண்வெளி ஓடங்களும் இன்று வடிவமைக்கப்பட்டு வருகின்றன. விண்வெளியில் உள்ள தட்பவெப்பத்தை தாங்கிச் செல்லும் வகையில் இவற்றில் பல்வேறு வகையான உலோகங்களும், பல நுண்ணிய நானோ தொழில் நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


எதிரியின் இலக்கை துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை தொடர்ந்து, இலக்கை தாக்கி அழித்துவிட்டு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்துசேரும் வகையிலான ஏவுகணைகள் தயாரிப்பில் தற்போது முழுக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. விரைவில் இந்தியா இந்த முயற்சியில் வெற்றிபெறும்’’என்று பேசினார்.
Read More

காரைக்கால் கடற்கரையில் லட்சக்கணக்கான மீன்கள் உயிரற்ற நிலையில் கரை ஒதுங்கி இருந்தது
by admin - 0


காரைக்கால் கடற்கரையில் லட்சக்கணக்கான மீன்கள் உயிரற்ற நிலையில் கரை ஒதுங்கி இருந்தது.

அந்த மீன்கள் அனைத்தும் ஒரே இனத்தைச் சேர்ந்தது என்றும், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி பிடித்த போது, வலை அறுந்து மீன்கள் கரை ஒதுங்கி இருக்கலாம் என மீனவ கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்தார் தெரிவித்தனர். கரை ஒதுங்கி இருக்கும் மொத்த மீன்கள் 10 டன் எடை கொண்டதாகும் என்றும் அவை 5-ல் இருந்து பத்து லட்சம் ரூபாய் மதிப்புடையதாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த மீன்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். அங்கு வந்து பார்வையிட்ட மீன் வளத்துறை அதிகாரிகள், இது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
Read More

தீவிரவாதிகளுக்கு ஆப்பு
by admin - 0


தீவிரவாத தாக்குதல்கள் அன்றாட உலக நடப்பாகி வரும் நிலையில், இத்தகைய சட்டவிரோத காரியங்களின் பின்னணி சக்திகளை குறி வைக்கும் பாதுகாப்பு சாதன சந்தையும் சுருசுருப்பாகவே உள்ளது.

தீவிரவாதிகளின் இருப்பிடங்களை கண்டறிந்து அழிக்க உதவும் ஆளில்லாத குட்டி விமானங்களை பல்வேறு நாடுகள் தேடத் தொடங்கியுள்ளன. இதனால், UNMANNED AERIAL VEHICLE, அதாவது யுஏவி எனப்படும் இந்த வகை விமானங்களுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இப்போது இவற்றின் வர்த்தகம் 5.9 பில்லியன் டாலர்களாக உள்ள நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் இது 11.3 பில்லியன் டாலர்களாக உயரும் என்று அமெரிக்காவின் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டீல் குரூப் தெரிவித்துள்ளது. ஆசிய நாடுகள் தங்கள் வருவாயில் பெரும்பகுதியை பாதுகாப்பு சாதனங்கள் வாங்கவே செலவழிக்கின்றன என கூறும் இந்த ஆய்வு, இதில் யுஏவிக்கும் முக்கிய பங்கு உள்ளது என்று கூறியுள்ளது. 1970களில் இஸ்ரேல் ராணுவத்தால் இந்த யுஏவி விமானங்கள் உருவாக்கப்பட்டன.
Read More

வங்கி கொள்ளையர்கள் 5 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்தபோது, ஒரு துப்பாக்கி குண்டுகூட அவர்கள் உடலில் இல்லை
by admin - 0

வங்கி கொள்ளையர்கள் 5 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்தபோது, ஒரு துப்பாக்கி குண்டுகூட அவர்கள் உடலில் இல்லை என்பது தெரியவந்தது.

வேளச்சேரியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த வங்கி கொள்ளையர்களான வினோத் குமார் என்கிற அஜய்குமார் ராய், சந்திரிகாரே, ஹரிஷ்குமார், வினய் பிரசாத், அபய்குமார் ஆகிய 5 பேரையும், கடந்த 23ம் தேதி அதிகாலை போலீசார் சுட்டுக் கொன்றனர். அவர்களின் உடல்கள், சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், கடந்த 25ம் தேதி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், கொள்ளை கூட்டத்தின் தலைவனாக கருதப்பட்ட அஜய்குமார் ராய் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்ற 4 பேரின் உடல்களும், பிரேத பரிசோதனை கூடத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட அறையில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கொள்ளையர்களின் உடலில் 35க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. ஆனால், பிரேத பரிசோதனையின் போது, 5 பேரின் உடலில் இருந்தும் ஒரு துப்பாக்கி குண்டு கூட எடுக்கப்படவில்லை. எல்லா குண்டுகளும் உடலின் உள்ளே போய் வெளியேறி உள்ளது.

அஜய்குமார் ராய் மார்பு மற்றும் காலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து வெளியேறி உள்ளது. கொள்ளையன் ஒருவன் தலையை துப்பாக்கி குண்டு துளைத்து எடுத்துள்ளது.

பெரும்பாலும் எல்லா குண்டுகளும் மார்பு பகுதி மற்றும் அதற்கு மேலேயே பாய்ந்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு, 5 பேரின் உடல்களும் உடற்கூறியல் துறைக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு, எம்பாமிங் எனப்படும் 10 சதவீத பார்மலினுடன் பாமாயில் கலந்து 4 லிட்டர் அளவு எடுத்து, ஊசி மூலம் பிரேத பரிசோதனை செய்ய உடலில் ஏற்றபட்டது. இதனால், அந்த உடல் கெட்டுப்போகாது.
Read More

ஒஸ்காரிலும் அரசியல்: இஸ்ரேலை வென்றது ஈரான்
by admin - 0


உலகத்தினது கவனத்தினை வழக்கம்போல தன் பக்கம் ஈர்த்துள்ள சர்வதேச திரைப்பட விருதான ஒஸ்காரிலும் சர்வதேச அரசியல் விவகாரங்கள் எதிரொலித்திருக்கின்றன.

இன்று அறிவிக்கப்பட்ட சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஒஸ்கார் விருதை ஈரான் நாட்டுத் திரைப்படமான "ஏ செபரேஷன்" வென்றுள்ளது.

இவ் விருதைவிட ஈரானியர்களுக்கு மகிழ்ச்சியளித்த இன்னொரு விடயமும் உள்ளது.ஆம், ஈரானின் தி செப்பரேசன் படம் போட்டியிட்டது இஸ்ரேல் நாட்டு திரைப்படமான "புட்நோட்"டுடன்.

இவ்விரு நாடுகளுக்குமிடையில் ஏற்கனவே அரசியல் அரங்கத்தில் முறுகல் நிலை காணப்படுகின்றது.

ஒஸ்கார் விருதை தமது நாட்டுத் திரைப்படம் வென்றதினை இஸ்ரேலை வெற்றிகொண்டதாகவே அந்நாட்டு ஊடகங்கள் கருதுகின்றன.

இதனை 'Victory over Zionist regime' என ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அஸ்கர் பர்ஹாடியின் இயக்கத்தில் வெளியாகிய இத்திரைப்படம் கடந்த ஆண்டும் பல விருதுகளை பெற்றிருந்தது.

Read More

திமுகவுக்கு முழுக்கு.. அதிமுகவில் இணைகிறார் பாக்யராஜ்!
by admin - 2


தனிக் கட்சி நடத்தி போணியாகாமல், சமீபத்தில் திமுகவில் இணைந்த நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

1970, 80களில் முன்னணி நடிகர், இயக்குனராக இருந்த இவர் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தார். தனது படங்களில் கடும் வெயிலிலும் கூட கருப்பு, வெள்ளை, சிவப்பு பார்டர் போட்ட மப்ளர் போட்டுக் கொண்டு வந்து போவார். 'டபுள் மீனிங்கை' தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கே உண்டு.

எம்ஜிஆர் மறைந்த பின் 1989ல் எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவங்கினார். ஆனால், அது கரையேறாததால் அந்தக் கட்சியை கலைத்தார். 2006ம் ஆண்டு திடீரென திமுகவில் இணைந்தார்.

தற்போது திமுகவில் பேச்சாளராக இருந்து வருகிறார். ஆனால், இவரை திமுக தனது ஆதாயத்துக்காக சும்மா பயன்படுத்திக் கொண்டதே தவிர, அவருக்கு எதையும் செய்யவில்லை.

இந் நிலையில் அவர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவில் இணைய பாக்யராஜ் விருப்பம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு தகவல் அனுப்பி விட்டதாகவும் அவரது அழைப்புக்காக காத்திருப்பதாகவும் தெரிகிறது.

கடந்த 24ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி பாக்யராஜ் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த விழாவே நடைபெறவில்லை.

இந் நிலையில் அவருக்கு அதிமுகவிலிருந்து எந்த நேரமும் அழைப்பு வரலாம் என்கிறார்கள்.
Read More

மார்ச் 8ல் இணையம் முடக்கப்படுமா?
by admin - 0

அமெரிக்க அரசின் புலனாய்வுத் துறை தன் தளத்தில் விடுத்த எச்சரிக்கையால், பலர் கதிகலங்கி உள்ளனர். மார்ச் 8 அன்று எப்.பி.ஐ.(FBIFederal Bureau of Investigation) என அழைக்கப்படும் அமெரிக்க புலனாய்வுத் துறையின் தளம் மூடப்படும் என்ற செய்தி பரவலாகப் பல வலைமனைகளில் பரவி வருகிறது. இதற்குக் காரணம் டி.என்.எஸ். சேஞ்சர்(DNS Changer) என்னும் வைரஸ் தான். இது ஒரு ட்ரோஜன் (Trojan) வகை வைரஸ். இதன் அளவு 1.5 கிலோ பைட்ஸ் . இதனை OSX.RSPlug.A மற்றும் OSX/Puper என்ற பெயர்களாலும் அழைக்கின்றனர். இது பெரும்பாலும் வீடியோ கோடக் பைல் போல, பாலியல் தளங்களில் காட்டப்படுகிறது. வீடீயோ பைல்களைப் பார்க்கும் ஆர்வத்தில், கோடக் குறியீடு தேவை என்ற செய்தியின் அடிப்படையில், பலர் இதனை டவுண்லோட் செய்து விட்டு மாட்டிக் கொள்கின்றனர்.
இதில் மிக வேடிக்கையும் அதிர்ச்சியும் தரும் செய்தி என்னவென்றால், அமெரிக்காவின் பார்ச்சூன் (Fortune 500) நிறுவனங்கள் என்று கருதப்படும் முதல் 500 நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்களின் சர்வர்களை, இந்த வைரஸ் தாக்கியுள்ளது. அமெரிக்க அரசின் பல துறைகளின் தளங்களிலும் இது காணப்படுகிறது.
பல நாடுகளில் பரவி உள்ள இந்த வைரஸ், தான் அடைந்துள்ள கம்ப்யூட்டர் மூலம் இன்டர்நெட் பிரவுஸ் செய்திட முயற்சிக்கையில், பயன்படுத்துபவர் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் தளத்திற்கு மாறாக, பாலியல் சார்ந்த தளங்களுக்கு அவர்களை இழுத்துச் செல்கிறது. இந்த தளங்கள் சைபர் கிரிமினல்களின் கட்டுப் பாட்டில் உள்ள தளங்களாகும். இதன் பின்னர், கம்ப்யூட்டரைப் பயன்படுத்து பவரை தங்கள் வசம் வைத்துக் கொண்டு தகவல்களை இவர்கள் திருட ஆரம்பிப்பார்கள்.
அல்லது தவறான சாப்ட்வேர் தொகுப்புகள் மற்றும் பிற வசதிகளைத் தருவதாகக் கூறும் தளங்களுக்குச் சென்று, இந்த வைரஸை உருவாக்கியவர்களுக்குப் பணத்தைப் பெற்றுத் தருகிறது. இதற்குக் காரணம், பாதித்த கம்ப்யூட்டரில் உள்ள டி.என்.எஸ். சர்வரின் செட்டிங்ஸை இந்த வைரஸ் மாற்றிவிடுவதே காரணம். கம்ப்யூட்டரில் உள்ள ‘NameServer’’ ரெஜிஸ்ட்ரி கீயினை வேறு ஒரு ஐ.பி. முகவரிக்கு இது மாற்றுகிறது. இதனால், அந்த கம்ப்யூட்டர் இணைய தளங்களைத் தேடுகையில், மாற்றப்பட்ட டி.என்.எஸ். சர்வர் தரும் போலியான தளங்கள் நமக்குக் காட்டப்படுகின்றன.
அது மட்டுமின்றி, கம்ப்யூட்டர்களில் பதியப்பட்டுள்ள வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களை செயல் இழக்கச் செய்கிறது. பாதுகாப்பிற்கான அப்டேட் பைல்களைத் தரவிறக்கம் செய்திடாமல் தடுக்கிறது. இதனை எதிர்கொண்டு அழிக்க, பல தொழில் நுட்ப வல்லுநர்கள் தொடர்ந்து புரோகிராம்களை வடிவமைத்து வருகின்றனர். ஆனால், இதுவரை இதனை நீக்கும் சாத்தியக் கூறுகள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.
நம் கம்ப்யூட்டரில் இது உள்ளதா என எப்படி அறிவது? நீங்கள் குறிப்பிட்ட முகவரியினை டைப் செய்து தளத்தை எதிர்பார்க்கையில், அதே போல தோற்றம் கொண்ட இன்னொரு தளம் உங்களுக்குக் காட்டப்பட்டாலோ, அல்லது வேறு ஒரு தளத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு, அதில் நீங்கள் கேட்காத சில புரோகிராம்கள் இருப்பதாகக் காட்டப்பட்டாலோ, உங்கள் கம்ப்யூட்டரில் இந்த வைரஸ் வந்து அமர்ந்துவிட்டது என்று பொருள்.
நாம் கொடுக்கும் இணைய முகவரிகள், முதலில் டொமைன் நேம் சர்வர்களுக்குச் செல்கின்றன. அங்கு அந்த முகவரிகளுக் கான தள எண்கள் பெறப்பட்டு, அவை மூலம் தான் நமக்கு தளங்கள் பெறப்பட்டு காட்டப்படுகின்றன. இந்த டொமைன் நேம் சர்வர்களின் பணிகளைப் பாதிக்கும் வேலையைத் தான் இந்த வைரஸ்கள் செய்கின்றன. இது ஏற்கனவே 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் கண்டறிந்த போது அடக்கப்பட்டது. ஆனால் இப்போது பல நாடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது மார்ச் 8 ஆம் நாள் அன்று தன் முழு வேகத்தைக் காட்டி, இணைய தளங்களை முடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பின்னணியின் அடிப்படையில் தான், அமெரிக்கப் புலனாய்வுத் துறை தன் இணைய தளத்தை மார்ச் 8 அன்று மூடும் என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இந்த வைரஸ் நம் கம்ப்யூட்டரைப் பாதித்துள்ளதா? வந்து அமர்ந்துள்ளதா? என்று அறிய இணைய தளத்தில் பல புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. http://www.avira.com/en/supportforhomeknowledgebasedetail/kbid/1199 என்ற முகவரியில் கிடைக்கும் புரோகிராம் இதில் ஒன்று. ஆனால் வைரஸை நீக்குவதில் இந்த புரோகிராம் வெற்றி அடைய முடியவில்லை. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தயாரித்து வழங்கும் பல நிறுவனங்கள், இந்த வைரஸை அழிப்பது சிரமம் என்று அறிவித்துள்ளனர். இதனால், மார்ச் 8 அன்று இன்டர்நெட் பல கம்ப்யூட்டர்களுக்குக் கிடைக்காது என்கின்றனர். அப்படியானால், இதற்குத் தீர்வு தான் என்ன? வழக்கம் போல, ஹார்ட் டிஸ்க்கில் உள்ள டேட்டா பைல்களை நகல் எடுத்து வைத்துவிட்டு, மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்து, சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை அமைப்பதுதான் ஒரே வழி என்கின்றனர் பலர்.
சிகிளீனர் மற்றும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைக் கொண்டு இந்த வைரஸ் தொகுப்பினை நீக்கினாலும், மீண்டும் அடுத்த முறை கம்ப்யூட்டரை இயக்குகையில் இந்த வைரஸ் காணப் படுகிறது. இணையத்தில் இத்தகைய புரோகிராம்களை வழங்கும் சாப்ட் பீடியா (Softpedia) நிறுவனம் தன் தளத்தில், இந்த வைரஸை நீக்க ஒரு புரோகிராமினை http://mac.softpedia.com/get /Security/DNSChangerRemovalTool.shtml என்ற முகவரியில் தருகிறது. இதன் பெயர் DNSChanger Removal Tool. இந்த தளம் சென்று இதற்கான புரோகிராமினை டவுண்லோட் செய்து இயக்கவும். இயங்கத் தொடங்கியவுடன், முகப்பு பக்கத்தில் Scan என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, டி.என்.எஸ். சேஞ்சர் வைரஸ் இருந்தால், தகவல் தெரிவித்து, அதனை நீக்கவா என்று ஆப்ஷன் கேட்கிறது. சரி என ஆப்ஷன் கொடுத்த பின்னர் வைரஸ் நீக்கப்படும். பின் மீண்டும் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்து பயன்படுத்த வேண்டும்.
அமெரிக்க அரசின் புலனாய்வுத் துறையின் இணைய தளத்தில் இந்த வைரஸ் இருப்பதனை சோதனை செய்திட ஒரு டூல் தரப்பட்டுள்ளது. இதனை https://forms.fbi. gov/checktoseeifyourcomputerisusingrogueDNS என்ற முகவரியில் காணலாம். இந்த தளம் சென்று உங்கள் டி.என்.எஸ். சர்வரின் இணைய தள முகவரியைத் தர வேண்டும். அதன் பின்னர், , “Your IP corresponds to a known rogue DNS server, and your computer may be infected. Please consult a computer professional.” என்ற செய்தி கிடைத்தால், உங்கள் கம்ப்யூட்டரில் இந்த வைரஸ் புகுந்துள்ளது என்று பொருள். இதனை நீக்க நீங்கள் வேறு தள உதவியைத் தான் நாட வேண்டும்.
http://www.fbi.gov/news/stories/2011/november/malware_110911/DNSchangermalware.pdf என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில், எப்படி இந்த வைரஸை கண்டறியலாம் என்பதற்கான குறிப்புகள் அடங்கிய பி.டி.எப். கோப்பு கிடைக்கிறது. இதுவும் அமெரிக்க அரசின் எப்.பி.ஐ. தளமாகும். டவுண்லோட் செய்து முழு விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
காஸ்பெர்ஸ்கி என்ற ஆண்ட்டி வைரஸ் நிறுவனம் தன் தளத்தில் இந்த வைரஸை நீக்கும் உதவியை வழங்குகிறது. http://support.kaspersky.com/ downloads/utils/tdsskiller.exe என்ற முகவரி யில் உள்ள இந்நிறுவன தளத்தில் இருந்து, tஞீண்ண்டுடிடூடூஞுணூ.ஞுதுஞு என்ற பைலை தரவிறக்கம் செய்து, அதனை இயக்க வேண்டும். கம்ப்யூட்டர் முழுமையும் சோதனை செய்திட விருப்பம் தெரிவிக்க வேண்டும். வைரஸ் இருந்தால், நிச்சயம் அதனை நீக்குவதாக இந்த தளம் அறிவிக்கிறது.
Read More

தசரதனுக்கு கூனி தமிழருக்கு கூட்டமைப்பு
by admin - 0

ஐ.நா. மனிதவுரிமை ஆணைக்குழுவின் 19 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியாகிவிட்டன. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப் பதில் அமெரிக்கா திடசங்கற்பம் பூண்டுள்ளது. அதேநேரம் தமக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேறுவதைத் தடுப்பதற்காக இலங்கை அரசு பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறது. இந் நிலையில் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனிதவுரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கையயான்றை வெளியிட்டுள்ளார். இதில் ஜெனிவா கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாமைக்குத் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘... தற்போது நிலவும் நிலையற்ற நிலைமை தொடருமேயானால் அது வன்முறைக்கு வித்திடலாம். குடிமக்கள் அதனால் மீண்டும் பாதிக்கப்படலாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அஞ்சுகிறது. தற்போதைய சூழ்நிலையில் அமைதிகாக்கப்படுவதும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதும் அவசியமான செயற்பாடுகள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது. எனவே இந்தக் காரணங்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவில் பிரசன்னமாகியிருக்க மாட்டாது.’ இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். சம்பந்தன் தெரிவித்த கருத்துக்களின் சாராம்சம் என்னவென்று ஆராய்ந்தால், தற்போது நாட்டின் நிலைமை சரியாக இல்லை. ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறினால்-அந்தக் கூட் டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பங் கேற்றிருந்தால் நாட்டில் கலவரம் ஏற்படும் என்று சம்பந்தன் அஞ்சுகிறாராம்.

வன்னியில் மிக மோசமான போர் நடந்த போது இந்தியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த என்.கே.நாராயணனைத் தனிப்பட்ட முறையில் சந்தித்த சம்பந்தனுக்கு வன்னியில் நடந்த வன் யுத்தம்-அழிவு தெரியவில்லை. ஆனால், இப்போது வன்முறை வெடிக்கும் என்று அச்சமாம். அப்படியானால் எங்களுக்காக வெளிநாடுகள் ஏதாவது செய்யட்டும். நாம் ஒதுங்கிக் கொள்வோம் என்பது கூட்டமைப்பின் முடிபு. இதுதான் முடிபாக இருந்தால் நீங்கள் உங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருக்க வேண்டும்.

அப்போதுதான் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் கொண்டுவரும் போது தமிழர்கள் தரப்பில் கருத்து கூறுவதற்கு கூட அங்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லை என்று பேசப்படும். ஆனால் நீங்களோ! ஆ! கடவுளே! இப்படியயாரு முடிபா? கூனியை இனங்காணாத தசரதனும் உங்களை புரிந்துகொள்ள முடியாத ஈழத்தமிழ் மக்களும் மிகப்பெரும் பாவங்கள். ஆனாலும் அடுத்த தேர்தலிலும் நீங்கள்தான் தாயகக் கோட்பாட்டின் காவலர்கள். என் செய்வோம் இறைவா!சங்கு
Read More

February 27, 2012

அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை
by admin - 0

ஜெனீவாவில் இன்று (27) ஆரம்பமாகும் மனித உரிமைகள் பேரவைகக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தற்போது நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுரகம் இலங்கையிலுள்ள தனது நாட்டுப் பிரஜைகளைக் கேட்டுள்ளது.

இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டமானது நேரடியாகவே அமெரிக்காவுக்கு எதிராக இருப்பதன் காணரமாகவே இந்த வேண்டுகோளை அது விடுத்துள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த ஆர்ப்பாட்டமானது கொழும்பிலுள்ள தமது தூதுரகத்துக்கு வெளியிலும் இடம்பெறலாம் எனவும் அது தெரிவித்துள்ளது
Read More

என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்-விஜய்
by admin - 0



இளைய தளபதி விஜய் துப்பாக்கி படத்தில் என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறாராம்.

ஏ. ஆர். முருகதாஸின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் துப்பாக்கி. இதில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கிறார். முதல் ஷெட்யூல் முடிந்த நிலையில், திடீரென்று இந்தப் படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் விஜயிடம் கேட்டதற்கு, 'படம் ட்ராப்னு வர்ற செய்திகளை நம்பாதீங்க. சீக்கிரமே மீண்டும் தொடங்கிடும். பெப்சி பிரச்சனை போன்றவையெல்லாம் தீர்ந்ததும் படப்பிடிப்பு தொடங்கிடும்" என்றார்.

தற்போது பெப்சி பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்ததையடுத்து தற்போது படப்பிடிப்பு துவங்கியுள்ளது. துப்பாக்கி படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்படுகிறது.

இந்த படத்தில் விஜய் என்ன கதாபாத்திரத்தில் வருகிறார் என்பது இத்தனை நாட்கள் ரகசியமாக வைத்திருந்தனர். இந்நிலையில் அவர் திருடர்களை டொப்பு, டொப்புன்னு சுட்டுத் தள்ளும் என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.

என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்டாக விஜய் நடிப்பது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழகத்தை ஒரு என்கெளன்டர் பரபரப்புக்குள்ளாகி வருகிறது. இந்த நிலையில் விஜய் வேறு துப்பாக்கியைத் தூக்குகிறார்...!
Read More

2வது பில்லாவில் கெஸ்டாக நயன்தாரா
by admin - 0

பில்லா 2 படத்தில் நயன்தாரா சிறப்பு தோற்றத்தில் வரக்கூடும் என்று கூறப்படுகின்றது.

பில்லா படத்தில் அஜீத் ஜோடியாக நடித்தார் நயன்தாரா. இந்நிலையில் பில்லா 2 படத்தில் அஜீத் ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா கெஸ்ட் ரோலில் வந்து செல்லக்கூடும் என்று கூறப்படுகின்றது.



திரையுலகை விட்டு விலகியிருந்த நயன்தாரா பிரபுதேவாவைப் பிரிந்த பிறகு மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார். ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாக நயன் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பில்லா 2 படத்திலும் நயன் வரவிருக்கிறார். அப்படியென்றால் அடுத்தடுத்து 2 படங்களில் தல-நயன் ஜோடியைப் பார்க்கலாம்.

இப்படத்தை உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்குகிறார். இதில் அஜீத்தும், தூக்குடு தெலுஙகு படம் மூலம் பிரபலமான மீனாக்ஷி தீக்ஷிதும் சேர்ந்து ஆட்டம் போட்டுள்ள குத்துப்பாட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Read More

உலகின் மிகச் சிறிய மனிதர் நேபாள முதியவர் டாங்கி: உயரம் 21.5 இன்ச் மட்டுமே
by admin - 0


நேபாளத்தைச் சேர்ந்த 72 வயது முதியவரான சந்திர பஹதூர் டாங்கி உலகின் மிகச் சிறிய மனிதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தென்மேற்கு நேபாளத்தில் உள்ள டாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திர பஹதூர் டாங்கி(72). அவரது உயரம் வெறும் 21.5 இன்ச் தான் அதாவது 54.6 செமீ. இந்நிலையில் கின்னஸ் உலக சாதனை நிறுவன அதிகாரிகள் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு லண்டனில் இருந்து காத்மாண்டு வந்தனர். அவர்கள் டாங்கியின் உயரத்தை ஒரே நாளில் 3 தடைவை அளந்தனர். இதையடுத்து உலகின் மிக குள்ளமான மனிதர் என்ற சான்றிதழை அவர்கள் டாங்கியிடம் வழங்கினர்.

இத்தனை நாட்கள் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 59.9 செமீ உயரமுள்ள பாலாவிங் தான் உலகின் மிக குள்ளமான மனிதர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தார். தற்போது அந்த சாதனையை டாங்கி முறியடித்துள்ளார்.

இதுவரை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற மிக குள்ளமானவர்களிலேயே டாங்கிக்கு தான் அதிக வயது என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளுக்கு செல்லவும், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க விரும்புவதாகவும் டாங்கி தெரிவித்துள்ளார்.
Read More

டெங்கு நோயின் தாக்கம் அதிகம்; சுகாதார அமைச்சு
by admin - 0


நாடளாவிய ரீதியில் இவ்வாண்டு ஜனவரியில் மட்டும் டெங்கின் தாக்கத்தினால் 27 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் 6138 டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 50 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
நாட்டு மக்கள் அனைவரும் தமது பிரதேசங்களில் உள்ள நுளம்பு பரவுவதற்குரிய இடங்களை உடனடியாக துப்புரவு செய்யுமாறும் வேண்டப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல காய்ச்சல் ஏற்பட்டு தொடர்ந்தும் மூன்று நாட்களுக்கு மேல் இருக்குமானால் உடனடியாக வைத்தியரை நாடுமாறும் சுகாதார அமைச்சு பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது
Read More

மணிரத்னத்திற்கு நான் வில்லன் அல்ல: அர்ஜுன்
by admin - 0



மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் தான் வில்லன் இல்லை என்று ஆக்ஷன் கிங் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

ராவணன் படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படம் கடல். இதில் நடிகர் கார்த்திக் மகன் கவுதம் தான் ஹீரோ. சமந்தா நாயகியாக நடிக்கிறார். அர்ஜுனும், மோகன் பாபு மகள் லட்சுமி மஞ்சுவும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்க, வைரமுத்துவும் அவர் மகன் மதன் கார்க்கியும் பாடல்கள் எழுதுகிறார்கள். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் அர்ஜுன் தான் வில்லன் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அதை அர்ஜுன் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

கடல் படத்தில் நான் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இன்னும் ஷூட்டிங் துவங்காததால் படத்தைப் பற்றி வேறு எதுவும் கூற இயலாது. மணிரத்னம் இயக்கத்தில் நான் நடிப்பது இது தான் முதல் தடவை என்பதால் ரொம்ப த்ரில்லாக உள்ளது. இதில் நான் தான் வில்லன் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை. கடல் படத்தில் நடிகர் அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது தான் எனக்குத் தெரியும்.

இரண்டாவது நாயகனாக நடிப்பதில் பிரச்சனையில்லை. ஏனென்றால் எனக்கு கதாபாத்திரம் தான் மிகவும் முக்கியம். தென்னிந்திய சினிமாவில் பெயர் எடு்த்துவிட்டேன். பாலிவுட்டிலும் ஒரு கை பார்க்கலாம் என்று நினைத்து கதை தயார் செய்து கொண்டிருக்கிறேன். அதில் நான் தான் ஹீரோ என்றார்.
Read More

'3' படத்தின் கிளைமாக்ஸை மாற்றச் சொன்ன ரஜினி?
by admin - 0


'3' படத்தின் பிரத்யேக காட்சியை பார்த்த ரஜினி படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சோகமாக இருப்பதற்கு பதில் மகிழ்ச்சியாக இருக்குமாறு வைக்கலாமே என்று அறிவுரை கூறியுள்ளார்.

ஒய் தி்ஸ் கொலவெறி, கொலவெறி டி பாடல் மூலம் புகழ் பெற்றது தனுஷ் மட்டுமல்ல அவரது மனைவி ஐய்வர்யா இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள 3 படமும் தான். இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் ரஜினி மகள் படத்தில் கமல் மகள் ஸ்ருதி நாயகியாக நடித்திருப்பது தான். இந்த படம் மார்ச் மாத இறுதியில் ரிலீஸாகிறது.

இந்த நிலையில் '3' படத்தின் பிரத்யேக காட்சியைப் பார்த்த ரஜினி தனுஷ், ஸ்ருதிஹாசன் ஆகியோரின் நடிப்பு சிறப்பாக உள்ளதாகவும், ஐஸ்வர்யா சிறப்பாக பணியாற்றி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கிளைமாக்ஸ் சோகமாக முடிவது மட்டும் ரஜினிக்கு பிடிக்கவில்லை போன்று. அதனால் கிளைமாக்ஸை சந்தோஷமாக முடியும்படி மாற்றலாமே என்று அறிவுறுத்தியுள்ளார். சூப்பர்ஸ்டார் பேச்சுக்கு மறுபேச்சேது. கிளைமாக்ஸை மாற்றுவது குறித்து ஐஸ்வர்யாவும், தனுஷும் ஆலோசித்து வருகின்றனர்.


click for money instant payment low minimum payout
Read More

வானத்திற்கு செல்ல அதிசய 'லிப்ட்'
by admin - 0

நிலவுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச்செல்ல ஒரு நிறுவனம் முயற்சி செய்து வரும் வேளையில், ஜப்பானை சேர்ந்த ஒபயாஷி என்ற கட்டுமான நிறுவனம், வானவெளிக்கு செல்ல அதிசய `லிப்ட்' அமைக்கப்போவதாக அறிவித்து உள்ளது.
'இந்த உலகத்துக்கு வெளியே' என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தின்படி, நிலவுக்கு செல்லும் பாதையில் கால்வாசி தூரம்வரை, அதாவது தரையில் இருந்து 96 ஆயிரம் கி.மீற்றர் தூரம்வரை, அதாவது தரையில் இந்த லிப்ட் அமைக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.

இரும்பை விட 20 சதவீதம் அதிக வலுவுள்ள “நானோ டியூப்” தொழில்நுட்பம் மூலம் இந்த லிப்ட் அமைக்கப்படும் என்றும், 40 ஆண்டுகளுக்குள் இந்த அதிசய லிப்ட் கட்டி முடிக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.

ஒரே நேரத்தில் 30 பயணிகளை இந்த லிப்டில் ஏற்றிச் செல்வார்கள் என்றும், மணிக்கு 200 கி.மீற்றர் வேகத்தில் ஒரு வாரத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் தெரிவித்து உள்ளது.

அவர்கள் 36 ஆயிரம் கி.மீற்றரில் அமைக்கப்பட்டிருக்கும் நிலையத்தில் இறக்கி விடப்பட்டு, வானவெளி அதிசய காட்சிகளை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் மட்டுமே அதற்கு மேல் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.
Read More

விஜய் தயாரிப்பில் விக்ரம்!
by admin - 0


விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. துப்பாக்கி படத்தை பற்றிய செய்திகளை எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் விஜய் எடுத்திருக்கும் புதிய அவதாரத்தை பற்றிய செய்தி தான் வெளிவந்துள்ளது.விஜய் சினிமாவில் நடிகர் என்ற ஒரு கதாபாத்திரத்தோடு தயாரிப்பாளர் என்ற புதிய கதாபாத்திரத்தையும் இணைத்துக் கொண்டார். நடிகர் பிரபுவின் மகன் விகரம் தான் விஜய் தயாரிக்கும் படத்தின் ஹீரோ. இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு “கில்லி பிலிம்ஸ்” என பெயர் வைத்துள்ளார்.

விஜய்யின் தந்தை தயாரித்த சில படங்கள் ஓடாத போது “வீட்லயே இருங்க பா” என்று கூறிக் கொண்டிருந்த விஜய் திடீரென இந்த முடிவெடுத்திருப்பதற்கு காரணம் விஜய் தயாரிப்பது ரீமேக் படம். ரீமேக் செய்வது விஜய் தந்தை இயக்கிய “சட்டம் ஒரு இருட்டறை” என்ற படத்தை தான்.

இந்த படம் அடைந்த மெகா வெற்றியின் மூலம் படத்தின் ஹீரோவான விஜயகாந்த் முன்னணி ஹீரோவாக மாறினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் விக்ரமுக்கு இதே வெற்றி கிடைக்குமா? என பொருத்திருந்து பார்ப்போம் என்கின்றனர் ரசிகர்கள்..............
Read More

இரண்டு தலையுடன் பிறந்த அதிசய கன்றுகுட்டி
by admin - 0

இந்தியாவில் தர்மபுரி மாவட்டத்தில் ஏமகுட்டியூர் பகுதியைச் சேர்ந்த நரசிம்மன்(35), விவசாய தொழிலாளி ஆவார். இவர் வளர்த்த பசு ஒன்று நேற்று காலை 2 தலையுடன் கூடிய கன்றை ஈன்றடெடுத்து, அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியுள்ளது.
ஆனால், கன்றுக்குட்டி பிறந்த 2 மணி நேரத்தில் இறந்துவிட்டது. கிராம மக்கள் அந்த கன்றுக்குட்டிக்கு இறுதி சடங்குகளை நடத்தினர்.சந்தனம், குங்குமம் வைத்து, மாலை அணிவித்து சடங்குகளை செய்தனர். இதுகுறித்து கால்நடை மருத்துவர் கூறும்போது, 10 ஆயிரம் கன்றுக் குட்டிகளில் ஒன்று இப்படி அதிசயமாக பிறப்பது உண்டு.



அப்படி பிறக்கும் கன்றுக் குட்டிகள் நீண்டநேரம் உயிருடன் இருக்காது. உடல் ரீதியாக குறைபாடுடன் பிறக்கும் கன்று குட்டிகள் சிறிது நேரத்தில் இறந்துவிடும் என்று கூறியுள்ளார்.
Read More

தமிழர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் சோழநாடு!
by admin - 0


தமிழர்களின் வாழ்வியலையும், அவர்களின் குடும்ப உறவுகளையும் கருவாக வைத்து, சோழநாடு என்ற படம் உருவாகிறது. படத்தில் புதுமுகங்கள் தேவா, அஷீதா ஆகிய இருவரும் கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ளனர். பிரகதீசுவரர் இசையமைக்க, மோகன்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் டைரக்டர் ரா.ரவிச்சந்திரன்.

இந்த படத்தை பற்றி டைரக்டர் ரா.ரவிச்சந்திரன் அளித்துள்ள பேட்டியில், இன்றைய நகர்ப்புற நாகரிகத்தால் இந்த சமூகம் இழந்து நிற்கிற அண்ணன், தங்கை பாசம், மாமன்-மச்சான் உறவு, அத்தை மகள்-, மாமன் மகன் இருவருக்கும் இடையேயான இயல்பான காதல் இவைகளை மையப்படுத்தி, சோழநாடு படத்தை உருவாக்கியிருக்கிறோம். தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டார மக்களால் பிறப்பு முதல் இறப்பு வரை கையாளப்படும் `மொய் விருந்து கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தி, இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. நம் மூதாதையர்கள் விளையாடிய வீர விளையாட்டுக்களில் ஒன்றான `தேங்காய் போர் விளையாட்டு, படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, என்று கூறியுள்ளார்.

Read More

மீண்டும் சூர்யாவுடன் இணைகிறாரா ஸ்ருதி
by admin - 0


இயக்குனர் வெங்கட் பிரபுவின் படத்தில் சூர்யா ஜோடியாக மீண்டும் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதை இயக்குநர் வெங்கட்பிரபு மறுத்துள்ளார்.

ஸ்ருதி ஹாசன் பாலிவுட்டில் லக் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். ஆனால் லக் அவருக்கு லக்கியாக இல்லை. தமிழில் அவர் அறிமுகமான ஏழாம் அறிவு அவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. சூர்யா-ஸ்ருதி ஜோடியும் நல்ல ஜோடியாக இருக்கிறது என்று பேசப்பட்டது.

இந்நிலையில் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் மீண்டும் சூர்யாவுடன் ஸ்ருதி ஜோடி சேர்வதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து வெங்கட் பிரபுவிடமே கேட்டதற்கு, அவர் கூறியதாவது,

மங்காத்தா வெற்றி பெற்றதையடுத்து மீண்டும் தல அஜீத்தை வைத்து படம் எடுக்கிறீர்களா என்று கேட்கின்றனர். அவரை வைத்து படம் எடுக்க ஆசையாக உள்ளது. ஆனால் அதற்கு நாளாகும்.

தற்போது சூர்யா நடிக்கும் ஆக்ஷன், த்ரில்லர் படத்தை இயக்குகிறேன். இதில் தெலுங்கு ஹீரோ ரவி தேஜாவும் நடிக்கிறார். தற்போது சூர்யாவும், ரவி தேஜாவும் வேறு படங்களில் பிஸியாக இருக்கின்றனர்.

அந்த படங்களை முடித்த பிறகு இந்த படப்பிடிப்புக்கு வருவார்கள். முன்னணி நடிகை ஒருவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். அது ஸ்ருதி தானே என்று பலர் கேட்கின்றனர். சூர்யா-ஸ்ருதி எனது படத்தில் ஜோடி சேர்வதாகக் கூறப்படுவது வெறும் வதந்தி தான் என்றார்.
Read More

ஏய், 'பிராம்ப்டிங்' பண்ணாதே: நயன்
by admin - 0


பிரபு தேவாவுடன் திருமணம் நடப்பதாக இருந்ததால் மதம் மாறி, சினிமாவை விட்டு விலகியிருந்த நயன்தாரா அடுத்த ரவுண்டுக்கு வந்துவிட்டார். இதனால் குஷியாகியுள்ள இயக்குனர்களும், நடிகர்களும் நயனிடம் கால்ஷீட் கேட்கத் துவங்கியுள்ளனர்.

நயன்தாராவுக்கு யாராவது பிராம்ப்ட் செய்தால் சுத்தமாகப் பிடிக்காது. அதாவது வசனத்தை அப்பப்போ எடுத்துக் கொடுத்து உதவுவது பிடிக்காது. எவ்வளவு பெரிய வசனமாக இருந்தாலும் மனப்பாடம் செய்துவிட்டு தான் படப்பிடிப்புக்கு வருவார். இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதன்படி பேசி நடிப்பார். கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த நயன் தமிழில் நன்றாகப் பேசுவார்.

பேசினால் மட்டும் போதாது என்று நினைத்த அவர் தற்போது தமிழில் எழுதப், படிக்கவும் கற்றுக் கொண்டுள்ளார். தன்னைப் பற்றி வரும் செய்திகளை இணையதளஙகளில் தேடிப்பிடித்துப் படிக்கிறார். இவர் இப்படி இருக்க ஸ்ரேயா தமிழில் நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகியும் தமிழில் பேசச் சொன்னால, சாரி ஐ டோன்ட் நோ டாமில் என்கிறார்.

நயன் நம்ம செய்தியையும் படிப்பார் என்று நம்புகிறோம்.
Read More

பிரபாகரனின் மனைவியிடம் 100 மில்லியன் ரூபா கப்பம் தருமாறு மிரட்டல்
by admin - 0

கொழும்பு வெள்ளவத்தையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடத்திச்செல்லப்பட்ட தமிழ் வர்த்தகர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. தொடர்ந்தும் அவரைக் கண்டு பிடிக்கும் முயற்சிகள் தொடர்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்கருமான அஜித் ரோகண தெரிவித்துள்ளனர்.
இராமசாமி பிரபாகரன் வயது 42 என்ற வர்த்தகர், வெள்ளவத்தையில் உள்ள அவரது வீட்டில் இருந்து வெள்ளை வானில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டார்.
இவர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அதனையடுத்து, தன்னை கைதுசெய்தமை தொடர்பாக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக 90 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி, தனது அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கை தொடுத்திருந்தார். எனினும், அதன் மறுநாளே அவர் இனந்தெரியாதோரால் கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.
ஆனால் தற்போது அவர் தமக்கு நஷ்டஈடாக கோரியிருந்த 90 மில்லியன் ரூபாய்களை விட அவரைக் கடத்திச் சென்றவர்கள் பிரபாகரனின் மனைவியிடம் 100 மில்லியன் ரூபாய்களை கோரியுள்ளனர்.
இந்தநிலையில் இது வரை அவர் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறாத நிலையிலும் தொடர்ந்தும் வர்த்தகரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Powered by Conduit
Read More

கொலை, கொள்ளை, வெடிகுண்டு வீச்சு.. 'சகலகலாவல்லவனாக' திகழ்நத கொள்ளையர் தலைவன்!
by admin - 0


போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வங்கிக் கொள்ளைக் கும்பலின் தலைவனான வினோத்குமார் எனப்படும் சுஜாய் குமார் ரே மீது கொலை வழக்குகள், ஏராளமான கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவனது என்கவுண்டருக்கு சொந்த ஊர் போலீஸாரே ஆதரவு தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சுஜாய் குமாரின் உடலைப் பெற்றுக் கொள்ள சென்னை வந்திருந்த அவனது அத்தை மகன் அபய்குமார்தான் இந்தத் தகவலைக் கூறினார்.

8வது வகுப்பு வரை மட்டுமே படித்தவனாம் சுஜாய் குமார் ரே. அதன் பிறகு கிரிமினலாகி விட்டான். வெடிகுண்டுகள் செய்வதில் இவன் கை தேர்ந்தவன். ஏராளமான இடங்களில் கொள்ளையடித்துள்ளான். அப்போதெல்லாம் கையில் நாட்டு வெடிகுண்டுகளைக் கொண்டு செல்வாரான். போகும்போது பிரச்சினை வந்தால் வெடிகுண்டு வீசி விட்டுச் செல்வது வழக்கமாம். அதில் ஒருமுறை குண்டு வெடித்தபோதுதான் இவனது சிக்கி 3 விரல்கள் போய் விட்டதாம்.

மும்பையைச் சேர்ந்த சோட்டாகான் என்ற பிரபல தாதா தான் சுஜாய் குமாரின் கிரிமினல் செயல்களுக்கு குருவாக விளங்கிய பராம். சோட்டா கான்தான் சுஜாய்குமாருக்கு துப்பாக்கியால் சுடுவது, வெடிகுண்டுகள் தயாரிப்பது, கொள்ளையடிப்பது உள்ளிட்டவற்றை பலவற்றையும் கற்றுக் கொடுத்தானாம்.

சோட்டா கான் கும்பலில் செயல்பட்டு வந்த சுஜாய்குமார் 2006ம் ஆண்டு முதல் இந்தக் கும்பலின் தலைவனாகவும் செயல்பட ஆரம்பித்தான். சோட்டா கான் சிறைக்குப் போய் விட்டதால் சுஜாய் குமார் தலைவனாகி விட்டானாம்.

சோட்டா கான் கும்பலைச் சேர்ந்த பலரையும் போலீஸார் வேட்டையாட ரம்பிக்கவே சுஜாய் குமார் அங்கிருந்து இடம் பெயர்ந்து சென்னைக்கு வந்ததாக தெரிகிறது. சோட்டா கான் மற்றும் சுஜாய் குமார் உள்ளிட்டோர் மீது மும்பை காவல் நிலையங்களில் வழக்குகள் இப்போதும் நிலுவையில் உள்ளதாம்.

ஊரில் 2 பேரைக் கொலை செய்தவன்
Powered by Conduit

சுஜாய் குமார் கொலையும் செய்தவன். இவனது சொந்த ஊரில் 2 உறவினர்களைக் கொலை செய்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. 2006ம் ஆண்டு கையில் குண்டுவெடித்தது தொடர்பான வழக்கில் சிறைக்குப் போய் விட்டு வந்தவன்

பல மாநிலங்களில் வங்கிக் கொள்ளை வழக்குகள்

சுஜாய் குமார் மீது சட்டிஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 6 வங்கிக் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். மேலும் கொல்கத்தா, டெல்லி, பெங்களூர் நகரங்களிலும் கொள்ளை அடித்து வழக்கில் சிக்கியுள்ளான். இதுவரை ரூ. 2 கோடி அளவுக்கு இவன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்துள்ளதாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவனது சொந்த ஊரைச் சேர்ந்த போலீஸார் சுஜாய் குமார் கொல்லப்பட்டது குறித்து நிம்மதி தெரிவித்துள்ளனராம். சுஜாய் குமார் செத்தது நிம்மதி அளிக்கிறது என்று அவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுட்டுக் கொல்லப்பட்ட சுஜாய் குமாருக்கு இந்து தேவி என்ற மனைவியும், 7 வயதில், 5 வயதில் என இரண்டு மகன்களும் உள்ளனராம்.
Read More

இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம்!
by admin - 0


இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம் என்பது ஆகும்.

இப்போர் விமானத்தை உருவாக்குகின்றமைக்கு யாழ்ப்பாண தமிழர்கள் வழங்கி இருந்த நிதிப் பங்களிப்புக் காரணமாகவே இப்பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது.

இப்போர் விமானம் குறித்த தகவல்கள் மிகவும் சுவாரஷியமானவை.

முன்னைய கால விமானங்கள் 100 குதிரை வலு என்ஜின்களுடன் இயங்கி வந்தன. இவை மரம், துணி, வயர்கள் போன்றவற்றால் ஆக்கப்பட்டு இருந்தன.

முதலாம் உலகப் போர் இடம்பெற்ற காலம். எதிரிகளை வேவு பார்ப்பதற்கும், குண்டு வீசுவதற்கும் சிறந்த பொறியாக விமானம் கண்டு கொள்ளப்பட்டது. ஆனால் மேற்சொன்ன ரக விமானங்கள் அவற்றின் வடிவமைப்புக் காரணமாக எளிதில் தாக்குதல்களுக்கு உள்ளாகின.

போர் விமானத்தை உருவாக்க தீர்மானித்தது இங்கிலாந்து அரசு. ஆனால் இதை உருவாக்குவதற்கான பணம் இன்றி திணறியது. இந்நிலையில் காலனித்துவ நாடுகளுக்கு இச்செய்தி அனுப்பியது.

மலேசியாவை அப்போது நிர்வகித்து வந்தவர் டாக்டர் அல்மா பேக்கர். வரிகள் மூலம் தேவையான பணத்தை பெற முடியாது என்று உணர்ந்து இருந்தார். வித்தியாசமான பிரசார உத்தி ஒன்றை தொடங்கினார். போர் விமானத்துக்கு உதவி செய் என்பது இப்பிரசாரம். அதிக பணம் தருகின்றவர்கள் முன்மொழிகின்ற பெயர் இவ்விமானத்துக்கு சூட்டப்படும் என்று உறுதிமொழி வழங்கி இருந்தார்.

யாழ். மல்லாகத்தை பூர்வீகமாக கொண்ட சுப்பிரமணியம் என்பவர் மலேசியாவில் உயர் தொழில் வகித்து வந்தார். இவரை இப்பிரசாரம் மிகவும் கவர்ந்தது. மலேசியாவில் குடியேறி இருந்த யாழ்ப்பாணத்தார்களிடம் இருந்து நிதி சேகரித்து F.E.2b ரக விமானம் ஒன்றை பரிசாக இங்கிலாந்து அரசுக்கு வழங்கினார். அன்றைய நாளில் 2250 ஸ்ரேர்லிங் பவுண்டு வரை பணம் சேர்க்கப்பட்டு இருந்தது.

இவ்விமானம் இரட்டைச் சிறகுகள் கொண்டிருந்தது. இரண்டு பயணிகளை கொண்டு செல்லக் கூடியதாகவும், குண்டு வீசவும், துப்பாக்கிச் சமரில் ஈடுபடவும் வேண்டிய வசதிகளை கொண்டதாகவும் இருந்தது. பிரித்தானிய அரச விமான தொழில்சாலையில் தயாரிக்கப்பட்டது. ஜேர்மனியர்களின் குண்டு மழைகளுக்குள் தீவிரமாக நுழைந்து பேரழிவுகளை ஏற்படுத்தியது. முதலாவது உலக மகாயுத்தத்தின்பின் அருங்காட்சி அகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
Read More

February 26, 2012

அஜீத்தையும் விட்டுவைக்காத வாஸ்து!
by admin - 0


அஜீத்தையும், வாஸ்து படுத்த ஆரம்பித்து விட்டதாம். தனது அலுவலகத்தை வாஸ்து பார்த்து மாற்றி வருகிறாராம்.

வாஸ்து பார்த்து வீடு கட்டுவது, அதை மாற்றியமைப்பது திரையுலக நட்சத்திரங்களின் வாடிக்கையாகிவிட்டது. இதற்கு 'தல' அஜீத் ஒன்றும் விதிவிலக்கல்ல. அவரது அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் உள்ளது. அதை தற்போது வாஸ்து பார்த்து அதன்படி மாற்றிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

தனது அலுவலகத்தை ஹைடெக் அலுவலகமாக மாற்றத் தான் தல இப்படி செய்வதாகவும் கூறப்படுகின்றது. மங்காத்தாவின் வெற்றிக்குப் பிறகு அஜீத் ரொம்பவே பிஸியாகிவிட்டார். தற்போது பில்லா 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் வெங்கட் பிரபுவுடன் இணையப் போவதாகவும் கூறப்படுகின்றது. கை நிறைய படங்கள் வைத்துக் கொண்டு ஓடி, ஓடி நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஷூட்டிங் இல்லாத நேரத்தில் மகள் அனௌஷ்காவுடன் விளையாடி மகிழ்கிறார். அவரது மனைவி ஷாலினி மகளை பல கோணத்தில் புகைப்படங்கள் எடுத்து அதைப் பார்த்து பூரித்துப் போகிறார்.
Read More

மதிமுகவுக்கு திருப்புமுனையாக இருக்கும் சங்கரன்கோவில் தேர்தல் : வைகோ நம்பிக்கை
by admin - 0


சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிவுகள் மதிமுகவுக்கு திருப்புமுனையாக இருக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சங்கரன்கோவில் வடக்கு ரதவீதியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழ்நாட்டில், ஊழல், அதிகாரம் இல்லாத ஆட்சி தொடர வேண்டுமா அல்லது அண்ணா வழி ஜனநாயகம் வேண்டுமா என்று தீர்பளிக்கும் விதத்தில் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மதிமுகவுக்கு சட்டமன்றத்தில் ஒரு உறுபபினர் கூட இல்லை. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வெற்றி எங்களுக்கு திருப்பு முனையாக இருக்கும் என்று நம்புகிறோம்.

கோட்டை மாற்றமா?

தமிழக முதல்வர் 32 அமைச்சர்களை உள்ளடக்கிய 43 பேரை கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளார். சென்னை கோட்டையை சங்கரன்கோவிலுக்கு மாற்றி விட்டாரா என்று நான் முதல்வரை கேட்கிறேன்.

அதிமுக ஆட்சியில் கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது. மணல் கொள்ளை தொடர்ந்து நடக்கிறது. 2 ஆயிரம் யூனிட் மணல் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என நிர்ணயித்து கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.

பிரேக்காக மதிமுக...

இந்த கொள்ளையெல்லாம் தடுக்க இந்த ஆட்சிக்கு நீங்கள் மூக்கணாங்கயிறு கட்ட வேண்டும். அதற்காக நீங்கள் சதன் திருமலைக்குமாருக்கு பம்பரம் சின்னத்தில் வாக்களியுங்கள். அதி்முக பிரேக் இல்லாத வாகனமாக செல்கிறது. அதை இயக்குபவர் சதன்திருமலைக்குமாராகத்தான் இருக்க வேண்டும் என்றார் அவர்.

17 நாள் முகாம்

சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் மார்ச் 2,5,10, 13, 16 ஆகிய ஐந்து நாட்களும், சங்கரன்கோவில் ஒன்றியத்தில் 7ந் தேதியும், மேலநீலிதநல்லூர் ஓன்றியத்தில் 3,8,12,14 மற்றும் குருவிகுளம் தெற்கு, வடக்கு ஒன்றியங்களில் பிப் 27,28 மார்ச் 4,6,9,11,15 என மொத்தம் 17 நாட்கள் வைகோ வாக்கு சேகரிக்கிறார்.

மார்ச் 16ந் தேதி சங்கரன்கோவில் நகரில் வைகோ தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.
Read More

பிரபாகரன் 94 வயது வரை நலமாக வாழ்வார் video in
by admin - 0


இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் கூட்டத்துக்கு சோதிடம் மீது இனி இல்லையென்ற அதீத நம்பிக்கை.

குறிப்பாக ஒருவர் பிறந்த உடனேயே ஜாதகம் எழுதப்படுகின்றது.

இந்த ஜாதகம்தான் ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது.

இந்த ஜாதகத்தை கொண்டு உரியவரின் இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகியவற்றை சிறந்த ஜோதிட நிபுணர்களால் பிசகின்றி எடுத்துச் சொல்ல முடியும்.

இந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனுக்கும் ஒரு ஜாதகம் உள்ளது.

பிரபாகரனின் ஜாதகத்துக்கு பலன் சொல்லி இணையத்தில் இரு வருடங்களுக்கு முன் வெளியிட்டு இருக்கின்றார் ஜோதிடர் ஒருவர்.

இந்த ஜாதகத்தின்படி பிரபாகரன் 94 வயது வரை நலமாக வாழ்வார் என்று சொல்லப்பட்டு உள்ளது.
Powered by Conduit
Read More

இந்தியா இலங்கைக்கு ஆதரவு அளிக்காது என ஊடகங்கள் பல வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் தவறானது
by admin - 0

இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் நாளை (27) அமெரிக்காவால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை தோல்வியடையச் செய்ய இந்தியா, சீனா, ரஷ்யா, கியூபா உள்ளிட்ட நாடுகள் ஆதரவை வழங்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜெனீவாவிலுள்ள அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தொலைபேசி ஊடாக இத்தகவலை தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா இலங்கைக்கு ஆதரவு அளிக்காது என ஊடகங்கள் பல வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் தவறானது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கைக்கு பாரிய ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் நாளை (27) ஆரம்பமாகவுள்ள மனித உரிமை கவுன்ஸிலின் 19வது கூட்டத் தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக பிரேரணை ஒன்றை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படும் தீர்மானத்தை 25 முதல் 30 நாடுகள் ஆதரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன என்று ஜெனிவாத் தகவல்கள் கூறுகின்றன.

47 நாடுகளைக் கொண்ட மனித உரிமைகள் சபையில் 24 நாடுகளின் ஆதரவு இருந்தால் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியும்.

அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குத் தமது உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளன.

அதேபோன்று ஆபிரிக்க நாடுகளும் தமது ஆதரவைத் தெரிவிக்க உள்ளன.

இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா, கனடா அல்லது மேற்கு நாடு ஒன்று கொண்டு வரலாம் என்று எதிர்பார்ப்பு இருந்தபோதும் ஆபிரிக்க அல்லது தென்னமெரிக்க நாடு ஒன்றே அதனைக் கொண்டு வரும் என்று இப்போது தெரிவிக்கப்படுகிறது.
Read More

ஈரானை தாக்க திட்டம் ரெடி-கட்டளைக்காக அமெரிக்க துருப்புக்கள் காத்திருப்பு
by admin - 0

வாஷிங்டன்:பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள ஈரான், அந்தக் கடுப்பில், ஹோர்முஸ் நீரிணையை மூட எத்தனித்தால், அதைத் தடுக்கும் விதத்தில், அமெரிக்கா தனது தரை மற்றும் கடற்படைகளை அப்பகுதியில் அதிகமாகக் குவிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. எண்ணெய் நிறுத்தம்:ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது, அமெரிக்கா மற்றும் மேற்குலகம் சந்தேகம் கொண்டுள்ளன. அதனால், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு, ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. ஈரானும், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கு எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை விவகாரம்:தன் மீது மேலும் மேலும் நெருக்கடி அதிகரிக்கும் பட்சத்தில், உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து நடக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடி விட நேரிடும் என, ஈரான் ஏற்கனவே எச்சரித்துள்ளது. அது நிகழ்ந்தால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும். படைக் குவிப்பில் அமெரிக்கா:ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடுவதைத் தடுப்பதற்காக, அந்நாட்டை மிரட்டும் வகையில், அப்பகுதியில் அமெரிக்கா, தனது தரை மற்றும் கடற்படைகளைக் குவிப்பதிலும், வியூகங்கள் வகுப்பதிலும் தீவிரம் காட்டி வருவதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. போர்க் கப்பல்கள் தயார்:அதன்படி, பெர்ஷிய வளைகுடாவில் நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்கப் போர்க் கப்பல்களில் உள்ள ஆயுதங்கள், நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. கரையில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள், பூமிக்கு அடியில் உள்ள சுரங்கங்களைக் கண்காணிக்கும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. சிறப்புப் பயிற்சிகள்:ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றிலும் அமெரிக்க ராணுவம், தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதோடு, ஐக்கிய அரபு நாடுகளில், அமெரிக்காவின் சிறப்பு அதிரடிப் படைக் குழுக்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆபத்துக்கு உதவுவதற்காக, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் பஹ்ரைன் படைகளுக்கு, இந்த சிறப்பு குழுக்கள் பயிற்சி அளித்து வருகின்றன.ஹோர்முஸ் நீரிணையில், ஈரானின் அதிவேக தாக்குதல் படகுகள் சுற்றி வருவதால், அவற்றைத் தாக்கும் விதத்தில், அமெரிக்க போர்க் கப்பல்களில் ஆயுதங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. உளவு நிறுவனங்களின்தகவல்கள்:இதற்கிடையில், ஐ.நா.,வின் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் பிரதிநிதிகள் குழு, ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்து, இரு முறை ஆய்வுகள் நடத்திய பின், வெளியிட்ட அறிக்கைகளுக்கு மாறாக, அமெரிக்க உளவு நிறுவனங்கள் வேறு விதமான தகவல்களை அளித்துள்ளன.அவற்றின்படி, அணு ஆயுதங்கள் தயாரிப்பை ஈரான் கைவிட்டு விட்டது. அணு ஆயுதத் தயாரிப்பிற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. அதேநேரம், யுரேனியம் செறிவூட்டலை ஈரான் அதிகரித்திருப்பதில், அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் ஐரோப்பிய உளவு நிறுவனங்களுக்கு இடையில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.ஆனால், யுரேனியச் செறிவூட்டலை அதிகரித்த கையோடு, அணு ஆயுதத் தயாரிப்பை மேற்கொள்வது குறித்து, ஈரான் இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும், அண்டை நாடுகளை ஒருவித பீதியிலேயே வைத்திருப்பதற்காக ஈரான் இதுபோன்ற தகவல்களைக் கசிய விடுவதாக, அமெரிக்க உளவு நிறுவனங்கள் கருதுகின்றன. ஐ.ஏ.இ.ஏ., அறிக்கை என்ன சொல்கிறது?ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் அவற்றின் ராணுவ ரீதியிலான பரிமாணங்கள் குறித்து இதுவரை சர்வதேச அணுசக்தி ஏஜென்சி (ஐ.ஏ.இ.ஏ.,) பிரதிநிதிகள் குழு இரு முறை ஈரானில் ஆய்வுகள் மேற்கொண்டது.இரு முறையும், கோம் நகரின் போர்டோ பகுதியில் உள்ள அணுசக்தி நிலையத்திற்குள் சென்று ஆய்வு மேற்கொள்ள ஈரான் அக்குழுவை அனுமதிக்கவில்லை என ஐ.ஏ.இ.ஏ., குற்றம்சாட்டியுள்ளது. அங்கு தான் அணு ஆயுதத் தயாரிப்பிற்கான சில குண்டுவெடிப்புகள் நடந்ததாக ஐ.ஏ.இ.ஏ., ஏற்கனவே கூறியிருந்தது. இந்த இரு ஆய்வுகள் குறித்து, ஐ.ஏ.இ.ஏ., வெளியிட்ட 11 பக்க அறிக்கையின் சாராம்சம்:*அணுசக்தி திட்டங்களின் ராணுவப் பரிமாணங்கள் குறித்து ஏஜென்சி கவலை கொண்டிருக்கிறது.*போர்டோ அணுசக்தி நிலையத்தில் உள்ள 696 மையவிலக்கு விசை கருவிகள் மூலம், 20 சதவீத யுரேனியச் செறிவூட்டலை ஈரான் மும்மடங்கு அதிகரித்துள்ளது.*அதேநேரம் அணு ஆயுதத் தயாரிப்பிற்கு உதவும் வகையில், 90 சதவீதம் வரை யுரேனியத்தை ஈரான் செறிவூட்டி வருகிறது.*கடந்த ஆண்டு ஆகஸ்டில் மேற்கொண்ட ஆய்வின்படி, 19.8 கிலோ யுரேனியம், டெஹ்ரானின் ஜாபர் இபின் ஹயான் ஆய்வகத்தில் இருந்தது. ஆனால் அதை விடக் குறைவான யுரேனியம் தான் கணக்கில் காட்டப்பட்டிருந்தது. இதை வைத்து அணு ஆயுதம் தயாரிக்க முடியாது என்றாலும், இவை ஆயுதப் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இந்த முரண்பாடுகள் குறித்து ஈரான் விளக்கம் அளிக்கவில்லை.*1995 - 2002 காலகட்டத்தில் யுரேனிய செறிவூட்டலில் இந்த ஆய்வகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பற்றிய விவரங்களை ஈரான் தரவில்லை.
Read More

இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்தது என்று சொல்ல முடியாத அளவுக்கு அந்த நாட்டை பூண்டோடு அழித்து விடுவோம்
by admin - 0

டெஹரான்: ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தால், இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்தது என்று சொல்ல முடியாத அளவுக்கு அந்த நாட்டை பூண்டோடு அழித்து விடுவோம் என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அகமது வஹிதி அளித்துள்ள ஒரு பேட்டியில், இஸ்ரேல் எங்களை தாக்கி அழித்து விடலாம் என்று கருதினால் அது தப்புக் கணக்காகி விடும். எங்களை இஸ்ரேல் தாக்கினால், அந்த நாடே இல்லாமல் போய் விடும். அந்த நாட்டை முழுமையாக அழித்து விடுவோம்.

எங்களை இஸ்ரேல் தாக்கினால், அந்த நாட்டை நிர்மூலமாக்கி விடுவோம். அதற்கான அத்தனை சக்தியும் எங்களிடம் உள்ளது என்றார் அவர். ஆனால் இஸ்ரேல் மீது என்ன மாதிரியான தாக்குதல் நடத்தப்படும் என்பதை அகமது தெரிவிக்கவில்லை.

ஈரான் அமைச்சரின் பேச்சால் இப்பிராந்தியத்தில் நிலவி வரும் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது.
Read More

ஒரே கருவியில் பல செயற்பாடுக​ளை மேற்கொள்ள கூகுள் கண்ணாடிகள்
by admin - 0


இணைய உலகில் இமையமாக நிற்கும் கூகுள் ஆனது பல அம்சங்களுடன் கூடிய மூக்குக்கண்ணாடி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இக்கண்ணாடியில் புகைப்படமெடுக்கும் கமெரா, திரை, ஹெட்போன் என்பன காணப்படுகின்றன. எனவே இவற்றை பயன்படுத்தி புகைப்படங்களை எடுக்க முடிவதுடன், பாட்டுக்களையும் செவிமடுக்க முடியும்.இவற்றை விட விசேட அம்சம் என்னவென்றால் இணையவசதி கொண்ட இந்த கண்ணாடியானது செல்பேசிகளுக்கு பதிலாக பயன்படுத்த முடியும் என்பதுதான்.

அதேநேரம் அதில் காணப்படும் திரையின் மூலம் எமது மின்னஞ்சல் முகவரிக்கு வரும் புதிய மின்னஞ்சல் பற்றிய தகவல்களையும் உடனுக்குடன் அறியக்கூடியவாறு உள்ளது.

கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படும் இந்த கண்ணாடிகள் தற்போதுள்ள 3G வலையமைப்பிற்கும் 4G வலையமைப்பிற்கும் இசைவாக தொழிற்படக்கூடியது.

இவ்வாறான பல வசதிகளை கொண்ட கூகுள் கண்ணாடியை அணிந்து கொண்டு பாதையை சரியாக இனங்கண்டு நடக்க முடியுமா? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்! ஆம், துல்லியமாக பாதையை அல்லது முன்னாலுள்ள பொருட்களை பார்க்கக்கூடியவாறான ஔி ஊடுபுகவிடும் கண்ணாடிகளே பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் போன்களுக்கு நிகராக கருதப்படும் இந்த கண்ணாடியின் பெறுமதியானது 380 யூரோவிலும் குறைவாகவே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Read More

February 25, 2012

ஏதாவது காமெடி வேஷமிருந்தா கொடுங்களேன்! - ஸ்ரேயா
by admin - 0


ஏதாவது ஒரு படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க ஆசையாக உள்ளது என்றார் நடிகை ஸ்ரேயா.

ரஜினியுடன் சிவாஜி படத்துக்குப் ஒரு பெரிய ரவுண்ட் வந்து, இப்போது டல்லடித்து நிற்கும் ஸ்ரேயா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலப் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் படங்கள் எதுவும் இல்லை. நேற்று அவர் ஹைதராபாத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "காலம்தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது. நேற்று போல் இன்று இருப்பது இல்லை. இன்று போல் நாளை இருப்பது இல்லை. என்னை பொறுத்தவரை, தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழிகளில் திருப்தியான வேடங்களில் நடித்து முடித்து விட்டேன்.

ஆனாலும் முழுக்க காமெடி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது.

எனக்கு பிடிக்காதது திகில் கதைகள். திகில் படங்களை நான் பார்ப்பது கூட இல்லை. அது போன்ற படங்களில் நடிக்கவும் மாட்டேன்.

பணம் கொடுத்து பார்க்க வரும் ரசிகர்களுக்கு இது போன்ற பயங்கர கதைகளை காட்டுவது சரியில்லை," என்றார்.
Read More