Latest News

February 26, 2012

மதிமுகவுக்கு திருப்புமுனையாக இருக்கும் சங்கரன்கோவில் தேர்தல் : வைகோ நம்பிக்கை
by admin - 0


சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிவுகள் மதிமுகவுக்கு திருப்புமுனையாக இருக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சங்கரன்கோவில் வடக்கு ரதவீதியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழ்நாட்டில், ஊழல், அதிகாரம் இல்லாத ஆட்சி தொடர வேண்டுமா அல்லது அண்ணா வழி ஜனநாயகம் வேண்டுமா என்று தீர்பளிக்கும் விதத்தில் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மதிமுகவுக்கு சட்டமன்றத்தில் ஒரு உறுபபினர் கூட இல்லை. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வெற்றி எங்களுக்கு திருப்பு முனையாக இருக்கும் என்று நம்புகிறோம்.

கோட்டை மாற்றமா?

தமிழக முதல்வர் 32 அமைச்சர்களை உள்ளடக்கிய 43 பேரை கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளார். சென்னை கோட்டையை சங்கரன்கோவிலுக்கு மாற்றி விட்டாரா என்று நான் முதல்வரை கேட்கிறேன்.

அதிமுக ஆட்சியில் கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது. மணல் கொள்ளை தொடர்ந்து நடக்கிறது. 2 ஆயிரம் யூனிட் மணல் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என நிர்ணயித்து கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.

பிரேக்காக மதிமுக...

இந்த கொள்ளையெல்லாம் தடுக்க இந்த ஆட்சிக்கு நீங்கள் மூக்கணாங்கயிறு கட்ட வேண்டும். அதற்காக நீங்கள் சதன் திருமலைக்குமாருக்கு பம்பரம் சின்னத்தில் வாக்களியுங்கள். அதி்முக பிரேக் இல்லாத வாகனமாக செல்கிறது. அதை இயக்குபவர் சதன்திருமலைக்குமாராகத்தான் இருக்க வேண்டும் என்றார் அவர்.

17 நாள் முகாம்

சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் மார்ச் 2,5,10, 13, 16 ஆகிய ஐந்து நாட்களும், சங்கரன்கோவில் ஒன்றியத்தில் 7ந் தேதியும், மேலநீலிதநல்லூர் ஓன்றியத்தில் 3,8,12,14 மற்றும் குருவிகுளம் தெற்கு, வடக்கு ஒன்றியங்களில் பிப் 27,28 மார்ச் 4,6,9,11,15 என மொத்தம் 17 நாட்கள் வைகோ வாக்கு சேகரிக்கிறார்.

மார்ச் 16ந் தேதி சங்கரன்கோவில் நகரில் வைகோ தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.
« PREV
NEXT »

No comments