Latest News

February 27, 2012

பிரபாகரனின் மனைவியிடம் 100 மில்லியன் ரூபா கப்பம் தருமாறு மிரட்டல்
by admin - 0

கொழும்பு வெள்ளவத்தையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடத்திச்செல்லப்பட்ட தமிழ் வர்த்தகர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. தொடர்ந்தும் அவரைக் கண்டு பிடிக்கும் முயற்சிகள் தொடர்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்கருமான அஜித் ரோகண தெரிவித்துள்ளனர்.
இராமசாமி பிரபாகரன் வயது 42 என்ற வர்த்தகர், வெள்ளவத்தையில் உள்ள அவரது வீட்டில் இருந்து வெள்ளை வானில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டார்.
இவர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அதனையடுத்து, தன்னை கைதுசெய்தமை தொடர்பாக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக 90 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி, தனது அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கை தொடுத்திருந்தார். எனினும், அதன் மறுநாளே அவர் இனந்தெரியாதோரால் கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.
ஆனால் தற்போது அவர் தமக்கு நஷ்டஈடாக கோரியிருந்த 90 மில்லியன் ரூபாய்களை விட அவரைக் கடத்திச் சென்றவர்கள் பிரபாகரனின் மனைவியிடம் 100 மில்லியன் ரூபாய்களை கோரியுள்ளனர்.
இந்தநிலையில் இது வரை அவர் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறாத நிலையிலும் தொடர்ந்தும் வர்த்தகரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Powered by Conduit
« PREV
NEXT »

No comments