போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வங்கிக் கொள்ளைக் கும்பலின் தலைவனான வினோத்குமார் எனப்படும் சுஜாய் குமார் ரே மீது கொலை வழக்குகள், ஏராளமான கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவனது என்கவுண்டருக்கு சொந்த ஊர் போலீஸாரே ஆதரவு தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சுஜாய் குமாரின் உடலைப் பெற்றுக் கொள்ள சென்னை வந்திருந்த அவனது அத்தை மகன் அபய்குமார்தான் இந்தத் தகவலைக் கூறினார்.
8வது வகுப்பு வரை மட்டுமே படித்தவனாம் சுஜாய் குமார் ரே. அதன் பிறகு கிரிமினலாகி விட்டான். வெடிகுண்டுகள் செய்வதில் இவன் கை தேர்ந்தவன். ஏராளமான இடங்களில் கொள்ளையடித்துள்ளான். அப்போதெல்லாம் கையில் நாட்டு வெடிகுண்டுகளைக் கொண்டு செல்வாரான். போகும்போது பிரச்சினை வந்தால் வெடிகுண்டு வீசி விட்டுச் செல்வது வழக்கமாம். அதில் ஒருமுறை குண்டு வெடித்தபோதுதான் இவனது சிக்கி 3 விரல்கள் போய் விட்டதாம்.
மும்பையைச் சேர்ந்த சோட்டாகான் என்ற பிரபல தாதா தான் சுஜாய் குமாரின் கிரிமினல் செயல்களுக்கு குருவாக விளங்கிய பராம். சோட்டா கான்தான் சுஜாய்குமாருக்கு துப்பாக்கியால் சுடுவது, வெடிகுண்டுகள் தயாரிப்பது, கொள்ளையடிப்பது உள்ளிட்டவற்றை பலவற்றையும் கற்றுக் கொடுத்தானாம்.
சோட்டா கான் கும்பலில் செயல்பட்டு வந்த சுஜாய்குமார் 2006ம் ஆண்டு முதல் இந்தக் கும்பலின் தலைவனாகவும் செயல்பட ஆரம்பித்தான். சோட்டா கான் சிறைக்குப் போய் விட்டதால் சுஜாய் குமார் தலைவனாகி விட்டானாம்.
சோட்டா கான் கும்பலைச் சேர்ந்த பலரையும் போலீஸார் வேட்டையாட ரம்பிக்கவே சுஜாய் குமார் அங்கிருந்து இடம் பெயர்ந்து சென்னைக்கு வந்ததாக தெரிகிறது. சோட்டா கான் மற்றும் சுஜாய் குமார் உள்ளிட்டோர் மீது மும்பை காவல் நிலையங்களில் வழக்குகள் இப்போதும் நிலுவையில் உள்ளதாம்.
ஊரில் 2 பேரைக் கொலை செய்தவன்
Powered by Conduit |
சுஜாய் குமார் கொலையும் செய்தவன். இவனது சொந்த ஊரில் 2 உறவினர்களைக் கொலை செய்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. 2006ம் ஆண்டு கையில் குண்டுவெடித்தது தொடர்பான வழக்கில் சிறைக்குப் போய் விட்டு வந்தவன்
பல மாநிலங்களில் வங்கிக் கொள்ளை வழக்குகள்
சுஜாய் குமார் மீது சட்டிஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 6 வங்கிக் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். மேலும் கொல்கத்தா, டெல்லி, பெங்களூர் நகரங்களிலும் கொள்ளை அடித்து வழக்கில் சிக்கியுள்ளான். இதுவரை ரூ. 2 கோடி அளவுக்கு இவன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்துள்ளதாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவனது சொந்த ஊரைச் சேர்ந்த போலீஸார் சுஜாய் குமார் கொல்லப்பட்டது குறித்து நிம்மதி தெரிவித்துள்ளனராம். சுஜாய் குமார் செத்தது நிம்மதி அளிக்கிறது என்று அவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுட்டுக் கொல்லப்பட்ட சுஜாய் குமாருக்கு இந்து தேவி என்ற மனைவியும், 7 வயதில், 5 வயதில் என இரண்டு மகன்களும் உள்ளனராம்.
No comments
Post a Comment