Latest News

February 25, 2012

ஏதாவது காமெடி வேஷமிருந்தா கொடுங்களேன்! - ஸ்ரேயா
by admin - 0


ஏதாவது ஒரு படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க ஆசையாக உள்ளது என்றார் நடிகை ஸ்ரேயா.

ரஜினியுடன் சிவாஜி படத்துக்குப் ஒரு பெரிய ரவுண்ட் வந்து, இப்போது டல்லடித்து நிற்கும் ஸ்ரேயா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலப் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் படங்கள் எதுவும் இல்லை. நேற்று அவர் ஹைதராபாத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "காலம்தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது. நேற்று போல் இன்று இருப்பது இல்லை. இன்று போல் நாளை இருப்பது இல்லை. என்னை பொறுத்தவரை, தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழிகளில் திருப்தியான வேடங்களில் நடித்து முடித்து விட்டேன்.

ஆனாலும் முழுக்க காமெடி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது.

எனக்கு பிடிக்காதது திகில் கதைகள். திகில் படங்களை நான் பார்ப்பது கூட இல்லை. அது போன்ற படங்களில் நடிக்கவும் மாட்டேன்.

பணம் கொடுத்து பார்க்க வரும் ரசிகர்களுக்கு இது போன்ற பயங்கர கதைகளை காட்டுவது சரியில்லை," என்றார்.
« PREV
NEXT »

No comments