நடிகை சுருதிஹாசன் பாலிவுட்டில் நுழைவதற்கு முன்பு தன் மூக்கில் சிறு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகக் கூறியுள்ளார். அது மூக்கை அழகாக்க அல்ல. மருத்துவக் காரணங்களுக்காகவாம்.
மூச்சு விடுவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மூக்கில் சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.
அதற்கான நான் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தங்கி அந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டேன் என்று கூறும் சுருதி, அதற்கு முன்பு மூச்சு விட அதிக சிரமப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சை செய்து கொண்டால் எங்கே என் குரல் வளம் போய் விடுமோ என்று பயந்து சிகிச்சைக்கு நாள் கடத்திக் கொண்டே வந்தேன். ஆனால், 2009ம் ஆண்டு பாலிவுட்டில் லக் படத்தில் நடிப்பதற்கு முன்பு அந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டேன். இப்போது நலமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்..
No comments
Post a Comment