தமிழர்களின் வாழ்வியலையும், அவர்களின் குடும்ப உறவுகளையும் கருவாக வைத்து, சோழநாடு என்ற படம் உருவாகிறது. படத்தில் புதுமுகங்கள் தேவா, அஷீதா ஆகிய இருவரும் கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ளனர். பிரகதீசுவரர் இசையமைக்க, மோகன்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் டைரக்டர் ரா.ரவிச்சந்திரன்.
இந்த படத்தை பற்றி டைரக்டர் ரா.ரவிச்சந்திரன் அளித்துள்ள பேட்டியில், இன்றைய நகர்ப்புற நாகரிகத்தால் இந்த சமூகம் இழந்து நிற்கிற அண்ணன், தங்கை பாசம், மாமன்-மச்சான் உறவு, அத்தை மகள்-, மாமன் மகன் இருவருக்கும் இடையேயான இயல்பான காதல் இவைகளை மையப்படுத்தி, சோழநாடு படத்தை உருவாக்கியிருக்கிறோம். தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டார மக்களால் பிறப்பு முதல் இறப்பு வரை கையாளப்படும் `மொய் விருந்து கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தி, இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. நம் மூதாதையர்கள் விளையாடிய வீர விளையாட்டுக்களில் ஒன்றான `தேங்காய் போர் விளையாட்டு, படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, என்று கூறியுள்ளார்.
No comments
Post a Comment