வேளச்சேரியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த வங்கி கொள்ளையர்களான வினோத் குமார் என்கிற அஜய்குமார் ராய், சந்திரிகாரே, ஹரிஷ்குமார், வினய் பிரசாத், அபய்குமார் ஆகிய 5 பேரையும், கடந்த 23ம் தேதி அதிகாலை போலீசார் சுட்டுக் கொன்றனர். அவர்களின் உடல்கள், சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், கடந்த 25ம் தேதி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், கொள்ளை கூட்டத்தின் தலைவனாக கருதப்பட்ட அஜய்குமார் ராய் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்ற 4 பேரின் உடல்களும், பிரேத பரிசோதனை கூடத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட அறையில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கொள்ளையர்களின் உடலில் 35க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. ஆனால், பிரேத பரிசோதனையின் போது, 5 பேரின் உடலில் இருந்தும் ஒரு துப்பாக்கி குண்டு கூட எடுக்கப்படவில்லை. எல்லா குண்டுகளும் உடலின் உள்ளே போய் வெளியேறி உள்ளது.
அஜய்குமார் ராய் மார்பு மற்றும் காலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து வெளியேறி உள்ளது. கொள்ளையன் ஒருவன் தலையை துப்பாக்கி குண்டு துளைத்து எடுத்துள்ளது.
பெரும்பாலும் எல்லா குண்டுகளும் மார்பு பகுதி மற்றும் அதற்கு மேலேயே பாய்ந்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு, 5 பேரின் உடல்களும் உடற்கூறியல் துறைக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு, எம்பாமிங் எனப்படும் 10 சதவீத பார்மலினுடன் பாமாயில் கலந்து 4 லிட்டர் அளவு எடுத்து, ஊசி மூலம் பிரேத பரிசோதனை செய்ய உடலில் ஏற்றபட்டது. இதனால், அந்த உடல் கெட்டுப்போகாது.
No comments
Post a Comment