தீவிரவாத தாக்குதல்கள் அன்றாட உலக நடப்பாகி வரும் நிலையில், இத்தகைய சட்டவிரோத காரியங்களின் பின்னணி சக்திகளை குறி வைக்கும் பாதுகாப்பு சாதன சந்தையும் சுருசுருப்பாகவே உள்ளது.
தீவிரவாதிகளின் இருப்பிடங்களை கண்டறிந்து அழிக்க உதவும் ஆளில்லாத குட்டி விமானங்களை பல்வேறு நாடுகள் தேடத் தொடங்கியுள்ளன. இதனால், UNMANNED AERIAL VEHICLE, அதாவது யுஏவி எனப்படும் இந்த வகை விமானங்களுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இப்போது இவற்றின் வர்த்தகம் 5.9 பில்லியன் டாலர்களாக உள்ள நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் இது 11.3 பில்லியன் டாலர்களாக உயரும் என்று அமெரிக்காவின் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டீல் குரூப் தெரிவித்துள்ளது. ஆசிய நாடுகள் தங்கள் வருவாயில் பெரும்பகுதியை பாதுகாப்பு சாதனங்கள் வாங்கவே செலவழிக்கின்றன என கூறும் இந்த ஆய்வு, இதில் யுஏவிக்கும் முக்கிய பங்கு உள்ளது என்று கூறியுள்ளது. 1970களில் இஸ்ரேல் ராணுவத்தால் இந்த யுஏவி விமானங்கள் உருவாக்கப்பட்டன.
No comments
Post a Comment