காரைக்கால் கடற்கரையில் லட்சக்கணக்கான மீன்கள் உயிரற்ற நிலையில் கரை ஒதுங்கி இருந்தது.
அந்த மீன்கள் அனைத்தும் ஒரே இனத்தைச் சேர்ந்தது என்றும், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி பிடித்த போது, வலை அறுந்து மீன்கள் கரை ஒதுங்கி இருக்கலாம் என மீனவ கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்தார் தெரிவித்தனர். கரை ஒதுங்கி இருக்கும் மொத்த மீன்கள் 10 டன் எடை கொண்டதாகும் என்றும் அவை 5-ல் இருந்து பத்து லட்சம் ரூபாய் மதிப்புடையதாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த மீன்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். அங்கு வந்து பார்வையிட்ட மீன் வளத்துறை அதிகாரிகள், இது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
No comments
Post a Comment