Latest News

February 28, 2012

எதிரி இலக்கை தாக்கிவிட்டு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வரும் ஏவுகணை - இந்தியா முயற்சி
by admin - 0

எதிரி இலக்கை தாக்கி அழித்து விட்டு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வரும் ஏவுகணையை இந்தியா தயாரிக்கிறது என விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை கூறினார்.


தஞ்சை மாவட்டம் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் அதிர்வலைகள் தொடர்பான 2 நாள் தேசிய கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் வரவேற்றார். கருத்தரங்கை தொடங்கி வைத்து, பிரம்மோஸ் ஏவுகணை திட்ட முதன்மை செயல் அலுவலர் சிவதாணுப்பிள்ளை,


‘’விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அக்னி, பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகள் குறிப்பிட்ட இலக்கை மிகச்சரியாக சென்று வீழ்த்தும் வல்லமை படைத்தவை.

சூப்பர் சானிக் ஏவுகணைகளை தொடர்ந்து ஹைபர் சானிக் ஏவுகணைகளை இந்தியா கண்டுபிடித்துள்ளது. இதற்காக பல்வேறுகட்ட ஆராய்ச்சிகள் மேற் கொள்ளப்பட்டன.

இந்த ஏவுகணைகள் இந்திய தரைப்படை, கப்பல்படைகளில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு மேலும் பலப்படுத் தப்பட்டுள்ளது. ஏவுகணை தொழில் நுட்பத்தில் உலக அளவில் இந்தியா தலைமை வகிக்கிறது.


சூப்பர்சானிக் இன்ஜின்கள் மூலம் விண்வெளி ஓடங்களும் இன்று வடிவமைக்கப்பட்டு வருகின்றன. விண்வெளியில் உள்ள தட்பவெப்பத்தை தாங்கிச் செல்லும் வகையில் இவற்றில் பல்வேறு வகையான உலோகங்களும், பல நுண்ணிய நானோ தொழில் நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


எதிரியின் இலக்கை துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை தொடர்ந்து, இலக்கை தாக்கி அழித்துவிட்டு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்துசேரும் வகையிலான ஏவுகணைகள் தயாரிப்பில் தற்போது முழுக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. விரைவில் இந்தியா இந்த முயற்சியில் வெற்றிபெறும்’’என்று பேசினார்.
« PREV
NEXT »

No comments