மீன்கூழ் குடித்த நபருக்கு மீன்முள் தொண்டையில் சிக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்று யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி வைத்திய நிபுணர் சி.சிவரூபன் தெரிவித்தார்.
யாழ். குப்பிளான் தெற்கு, வரிசயப்புலம் பகுதியைச் சேர்ந்த ஜந்து பிள்ளைகளின் தந்தையான கற்பன் கிருஸ்ணகுமார் (வயது 51) என்பவரே இன்று புதன்கிழமை காலை இவ்வாறு உயிரிழந்தவராவர்.
கிருஸ்ணகுமார் தோட்ட வேலை செய்து விட்டு காலையில் மீன்கூல் குடித்துக் கொண்டு இருக்கும் போது தொண்டையில் திரளி மீன்முள் சிக்கிக் கொண்டதில் மூச்சு எடுப்பதற்கு கஸ்டப்பட்டுள்ளதாகவும் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அவரை அழைத்துச் செல்லும் போது வழியிலேயே உயிரிழந்துள்ளார் என்றும் மனைவி கி.சத்தியசீலி குறிப்பிட்டார்.
இவரது மரணம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Post a Comment