Latest News
Showing posts with label சரவணை மைந்தன். Show all posts
Showing posts with label சரவணை மைந்தன். Show all posts

November 18, 2015

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி லண்டனில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம்.
by அகலினியன் - 0

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி லண்டனில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம்.

இலங்கைச் சிறைச்சாலையில் பல ஆண்டுகளாக போர் கைதிகளாகவும், அரசியல்  கைதிகளாகவும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற எமது  உறவுகளை இலங்கை  அரசு உடனடியாக விடுவிக்கக் கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டமானது இலங்கை அரசாங்கத்தின் நிபந்தனைக்கு அமைய எமது உறவுகளால் 15.12.2015 வரை தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ள  காரணத்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் அமெரிக்காவில் ஐநா அலுவலகத்திற்கு  முன்பாக நாளை (18.11.2015) 12 மணிக்கு ஆரம்பமாகி முடிவடையும் அதே நேரம் பிரித்தானியாவில் திங்கட் கிழமை ஆரம்பமாகிய உண்ணாவிரதப் போராட்டம் நாளை மாலை 07:00 மணிக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள எமது உறவுகளின் போராட்டம் தொடரும்    பட்சத்தில் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் எமது போராட்டம் தொடரும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்

- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்







Read More

March 06, 2015

மைத்திரி அரசின் போலி நாடகங்கள்
by admin - 0

மைத்திரி அரசின் போலி நாடகங்கள்
மைத்திரி

புலனாய்வுப் பிரிவுகளில் இருக்கும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உளவாளிகள் புதிய  அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தி வருவதுடன் வெளிநாடுகளுடன் ஏற்படுத்தி வரும் சிறந்த தொடர்புகளை சீர்குழைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்களோ என்ற பாரதூரமான சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.இப்படி இவர் சொல்வதை ஏற்பதற்கு தமிழர்கள்,உலக தலைவர்கள் என்ன முட்டாள்களா?
அண்மையில் இலங்கைக்கு வந்த 10 தமிழர்கள் கட்டுநாயக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்தும் ஒரு வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரி பாலேந்திரன் சம்மந்தமாகவும் உடனடியாக சட்டத்தை செயல்படுத்துமாறு சர்வதேச ரீதியில் கொடுக்கப்படும் அழுத்தங்கள் குறித்து சிங்கள ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பிய  போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெயக்குமாரிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லையென்றால் அவரை தமது யாழ் விஜயத்திற்கு முன்னதாக விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்திருந்த போதிலும் புலனாய்வுப் பிரிவினர்  இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக ஒரு நாடகம் மைத்திரியின் அரசு நடத்த அதை செய்தியாக வெளியாகிறது இது என்ன மைத்திரி என்ன சாதரன ஒரு ஆளா? இவரால் இராணுவ புலனாய்வு துறையை கட்டுப்படுத்த முடியாதா?
அமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசெய்னை சந்தித்த தினத்தில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் பிரான்ஸிலிருந்து இலங்கை வந்து மீண்டும் பிரான்ஸ் திரும்ப, விமான நிலையம் சென்ற போது முருகேசு பகீரதி என்ற பெண்ணையும் அவரது 8 வயது மகளையும் கைது செய்தனர் இதில் புலனாய்வுத்துறைதான் சம்பந்தம் அரசு தாங்கள் சம்பந்தம் இல்லை என்பதை எந்த மடையன் நம்புவான்.

இந்த புலனாய்வு பிரிவினரும்,இராணுவமும் அரசாங்கத்தின் கிழ் இல்லையா? மைத்திரி  விடுதலை செய் என்றால் இவர்கள் விடுதலை செய்யமாட்டார்களா? இப்படியான புதிய அரசின் செயல்கள் தாங்கள் தப்பித்து கொள்ள இப்படியான வேடிக்கையான கதைகளை கூறி வருகிறார்கள். அப்படி இவர்கள் சொல்வது சரியாயின் இன்றும் மகிந்த சகோதர்ர்கள்தான் ஆட்சி செய்கிறார்களா?

சரவணை மைந்தன் 
Read More

January 22, 2015

தாயகம் ,தேசியம்,சுயநிர்ணயம் என்ற கொள்கையுடன் ஒன்றுபட வழி உண்டா? - சரவணை மைந்தன்
by admin - 0


சரவணை மைந்தன்
TNA
இலங்கை தீவானது உலக வல்லரசுகளின் கழுகு பார்வையில் உள்ள ஒரு அழகான தீவு பல்லின மக்கள் வாழும் தீவில் என்றுமே எதிரிகளாக தமிழரும் சிங்களவரும் இதனால் சிவப்பாகிய ஈழம் இன்றுவரை அதன் சிவப்புக்கறை போகவில்லை சுதந்திர தமிழீழத்தை மீண்டும் பெற தமிழர்களின் போராட்டம் இந்த மணித்துளி வரை நடந்துகொண்டே இருக்கிறது.
இந்த போராட்டத்தில் உன்னத உயிர்களையும் எண்ணிலடங்கா உடைமைகளையும் இழந்தும் விடுதலைப் பற்று என்னும் நெருப்புடன் தமிழ் சமூகம் இன்றுவரை விழ விழ எழுவோம் என்பதற்கிணங்க தமது ஈழ விடுதலை போராட்டத்தை தொடர்ந்து நடத்துகின்றார்கள்.
அகிம்சை போராட்டம் பலனில்லாமல் போக ஆயுதப் போராட்டம்  வெற்றிப்பாதையில் பயணித்துக்கொண்டது வெற்றியின் உச்சத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் தொட்டனர். தரைப்படை,கடற்படை அத்துடன் விமானப்படையையும் அடைந்து சிங்களப்படைகளுக்கு பெரும் அச்சுறுத்தலைக் கொடுத்தனர். தமிழீழம் என்ற தனிநாடு மலரும் தருவாயில் பக்கத்து வல்லரசு, உலக வல்லரசு, உலக நாடுகள் இலங்கையில் இரண்டு ஆதிக்க சக்திகள் இருப்பதால், அதாவது தமிழீழ அரசு மற்றும் சிங்கள அரசு என இரண்டு இருப்பதால் தங்களின் ஆதிக்க நலனைக்கருதி தமிழீழ அரசை அழிக்க திட்டம் தீட்டி தமிழீழ நிழல் அரசை உலக நாடுகளின் துணையுடனும் இந்திய நேரடிக்கள முன்னெடுப்புடனும் சிங்கள கூட்டுடன் அழித்தன.  தமிழர்களின் பலத்தை முள்ளிவாக்காலில் துடைத்து அழித்தது.
 ஆனால் முள்ளிவாய்க்காலில் தமிழர் போராட்டம் முடியவில்லை என்பதை தமிழர்கள் இன்றுவரை நடத்தும் ஜனநாயக வழி போராட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன. தமிழர்களின் ஜனநாயக வழிப்போராட்டம் உலக அரங்கில் உத்வேகம் அடைந்து வீறுநடை போடுகின்றது.

சரவணை மைந்தன்
ANANTHY
ஈழத்தில் விடுதலைப்புலிகளின் மௌனத்தின் பின் தமிழீழ விடுதலைப்புலிகளால் தமிழீழ மக்களுக்கு தங்களின் ஜனநாயக அமைப்பாக தேசிய தலைவரால் சுட்டிக்காட்டப்பட்ட அமைப்பு என்ற ஒரு காரணத்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் தங்களின் ஜனநாயக விடுதலை அமைப்பாக கருதுகின்றனர்.
இதனால் கூட்டமைப்பு விடுதலை புலிகளின் மௌனத்தின் பின் தமிழ் மக்களின் விடுதலைக் குரலாக மாறியது. தமிழ் மக்களின் விடுதலைக் குரலாகவும் ஜனநாயக அமைப்பாகவும் இருக்கும் கூட்டமைப்பைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்திய வல்லரசு முயல்கின்றது. அதாவது தனது கைப்பொம்மை போல் பாவித்து தான் போடும் தாளத்திற்கேற்ப ஆட்டுவிக்கும் முயற்சியில் இறங்கியது. அதில் அவர்கள் வெற்றியும் கண்டார்கள் என்பதே உண்மை. அந்த வெற்றி கூட்டமைப்பின் சில பழுத்த அரசியல் வாதிகளின் அனுசரணையோடு பெற்றுக்கொள்ளப்பட்டது.
முன்னைய காலங்களில் விடுதலைப்புலிகளை தங்களின் ஆதிக்க நலன்களுக்கு பயன்படுத்த முயன்று தோற்றுப்போன இந்தியா விடுதலைப்புலிகளின் வளர்ச்சி பொறுக்கமுடியாமல் சிங்கள பேரினவாத அரசுக்கு தனது ஆதரவை வழங்கி தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தது.
தற்பொழுது கூட்டமைப்பைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்குக் கூட்டமைப்பில் உள்ள சில அரசியல்வாதிகள் தடைக்கல்லாக இருப்பதாலும் மற்றும் அவர்கள் விடுதலைப்புலிகளை நேரடியாக பிரநிதித்துவப்படுத்துவதோடுஅவர்கள் புலிகளின் கொள்கையுடன் தற்பொழுதும்இருக்கிறார்கள் என்பதாலும் அவர்களை கூட்டமைப்பில் இருந்து அகற்ற முடிவெடுத்தது. இதில் முதல் பலியானவர்கள் பத்மினி சிதம்பரநாதன், செல்வராஜா கஜேந்திரன்  இவர்களுடன் சேர்த்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற சிறந்த தமிழ் தேசியவாதிகள். 
"இவர்கள் தமிழ்த்தேசியம் பேசுவார்கள்,  விடுதலைப்புலிகளின் கொள்கையை கடைப்பிடிப்பார்கள், இவர்களை கூட்டமைப்பில் இருந்து நீக்குங்கள்" என்ற இந்தியாவின் கட்டளைக்கு அமைய பத்மினி சிதம்பரநாதன்,செல்வராஜா கஜேந்திரன் போன்றவர்களை கூட்டமைப்பின் தலைமை 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரளுமன்ற தேர்தலில் போட்டி இடுவதற்கு கூட்டமைப்பின் சார்பில் நிறுத்தாமல் தவிர்த்தது. இதனால் இவர்களுடன் சேர்ந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார். அதாவது இவர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
 இந்தியாவின் கட்டளைக்கு அமைய கூட்டமைப்பின் தலைமை தமிழ்தேசிய  பற்றுள்ள விடுதலைப்புலிகளின் கொள்கைக்கு ஏற்றாற்போல் நடக்கும் அல்லது புலிகளால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை  கூட்டமைப்பில்  இருந்து சாதூரியமாக  விலக்கியது.
அதாவது விடுதலைப்புலிகள், தமிழீழம் போன்ற அடையாளங்களை தமிழர்களிடம் இருந்து பிரித்தெடுக்க உலக அரங்கில் நடக்கும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமே இந்த நடவடிக்கைகள். அதேபோல் விடுதலைப்புலிகளின் வவுனியா மற்றும் திருகோணமலை அரசியல் பொறுப்பாளராக கடமையாற்றி இறுதி யுத்தத்தில் சிங்கள இராணுவத்திடம் சரணடைந்த எழிலன்(சசிதரன்) அவர்களின் மனைவி அனந்தி  சசிதரன் அவர்களின் இடைநிறுத்தமும் இதனையே தெளிவாக்குகின்றது.
கூட்டமைப்பின் வாக்கு பலத்தை அதிகரிக்க வடமாகாண சபைதேர்தலில் விடுதலைப்புலிகளை வைத்து அரசியல் செய்வதற்கு அனந்தி  சசிதரனை பாவித்த கூட்டமைப்பு தற்பொழுது அவருடைய வளர்ச்சி கண்டு அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அவரை புறந்தள்ள வேண்டும் என்ற இந்திய அறிவுறுத்தலுக்கு அமைய தற்பொழுதே நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கை கூட்டமைப்பை தமிழ் மக்களிடமிருந்து வேறுபடுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆகவே தமிழர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கூட்டமைப்பினர் வரும் தேர்தலில் முன்னர் விட்ட தவறுகளை சரி செய்து தமிழ் தேசிய உணர்வாளர்களையும் இணைத்து, அவர்களையும் வரும் பொதுதேர்தலில் கூட்டமைப்பின் சர்ப்பாக நிறுத்துவதன் மூலம் கூட்டமைப்பானது தமிழர் தேசத்தில் அதிகளவு பிரதிநிதிகளை தெரிவு செய்ய வழிசமைத்து கொடுக்க முன்வரவேண்டும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பு போன்றன இணைவதோடு, அனந்தி சசிதரன் அவர்களுக்கும் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கி பொதுத்தேர்தலை சந்தித்தால், 3 தொடக்கம் 4மேலதிக  உறுப்பினர்கள் தெரிவை தமிழர் கூட்டமைப்பு பெற்றுகொள்ளச் சந்தர்ப்பம் ஏற்படும். வல்லரசுகளை  மக்கள் பலத்தின் மூலம் தமிழர்களாகிய எங்களின் கொள்கைக்கு வரவைப்போம். 
தாயகம் ,தேசியம், சுயநிர்ணயம் என்ற கொள்கைகளோடு தமிழர்கள் யாவரும் இணைந்து செயற்படுங்கள். ஒற்றுமையே விடுதலையைப் பெற்றுத்தரும்.

சரவணை மைந்தன்

Read More

January 01, 2015

தமிழர் தரப்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தி இருக்கலாம் சீமான் கருத்து
by admin - 0

தமிழர் தரப்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தி இருக்கலாம் சீமான் கருத்து 

சரவணை மைந்தன் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையில் இதைத்தான் குறிப்பிட்டு இருந்தார் ஜனாதிபதி தேர்தல் வேட்ப்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு முன்னரே அது வெளியிடப்பட்டது










கட்டுரையை வாசிக்க கிழே உள்ள இணைப்பை செருகவும்





ஜனாதிபதி தேர்தல் தமிழர்களின் நிலை என்ன? சரவணை மைந்தன்






ஜனாதிபதி தேர்தல் தமிழர்களின் நிலை என்ன? சரவணை மைந்தன்



Read More

November 23, 2014

ஜனாதிபதி தேர்தல் தமிழர்களின் நிலை என்ன? சரவணை மைந்தன்
by admin - 0


இலங்கையின் பிரதம மந்திரிப் பதவி 1948 ஆம் ஆண்டில் இலங்கை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தபோது உருவாக்கப்பட்டது. பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் அமைப்பைப் போன்ற அரசியலமைப்பு இலங்கையிலும் நடைமுறையில் இருந்தது. அதனால் இலங்கையிலும் பிரத மந்திரியே நாட்டின் அதியுயர் தலைமைப் பதவியைக் கொண்டிருந்தார். இலங்கை 1972 இல் குடியரசான போதும் பிரதம மந்திரியே நாட்டின் தலைவராக இருந்தார். ஆனால் இவ்வமைப்பு 1978இல் மாற்றப்பட்டது. 1978 ஆம் ஆண்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி (அரசுத்தலைவர்) அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. இதன்படி ஜனாதிபதி நாட்டின் தலைவராகவும் அரசின் தலைவராகவும் இருக்க வழிகோலப்பட்டது.இது ஜனாதிபதி பதவியின்  சுருக்க வரலாறு

இலங்கை தேசம் பல ஜனாதிபதி தேர்தல்களை சந்தித்துள்ளது இதில் பல வகையான ஜனாதிபதிகள் வந்து ஜனாதிபதி அரியணையில் அமர்ந்துள்ளார்கள் அனைவருமே இனவாத அடிப்படையில் தமது அதிகாரத்தை செலுத்தி சிங்கள் பெரும்பான்மை என்னும் மமதையில் ஆட்சி செய்வதால் தமக்குள்ள ஒற்றுமையை வெளிப்படுத்தினார்கள், வெளிப்படுத்துவார்கள். 


 நிறைவேற்று ஆதிகாரம் என்பது ஒரு நாட்டை சர்வதிகார போக்கில் ஆளும் ஒரு ஆட்சி ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டவர் தனக்கு கிழ் அனைத்து அரச அதிகாரங்களையும் வைத்திருக்க கூடியவர்.மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தையே அதன் ஆயுள்காலம் முடிவடைய முன்னர் கலைக்கும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே இலங்கையில் காணப்படுகிறது.

இப்படி பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் அமர ஸ்ரீலங்காவின் அரசியல் தலைமைகள் என்ன விலை கொடுக்கவும் தயங்கமாட்டார்கள்.நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பேன் என்று வாக்குறுதி அளித்து பதவியில் அமரும் யாரும் அந்த அதிகாரத்தை தாரவாக்க என்றுமே முயன்றதில்லை அந்தளவுக்கு அந்த பதவியின் அதிகாரம் அவர்களை இறங்கி போக விடுவதில்லை.

இந்த அதிகார ஆசையால் சிங்கள் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் இனவாதத்தை பேசியே பெரும் பான்மை சிங்களவர்களின் வாக்குகளை பெறுவதற்காக தமிழர்களை சிங்களவர்களின் எதிரிகளாக்கி இன்றும் தனது இனவாதத்தை காட்டி வருகிறது. சிங்களவர்களின் வாகுபலத்தை பெற்றால் சிறுபான்மை தமிழர்களின் வாக்குகள் அவர்களுக்கு தேவையற்றதாகிறது. இதனால் தமிழர்கள் என்றுமே அடக்கப்பட்ட இனமாக சிறிலங்காவில் அடிமையாக வாழ்கிறார்கள் .அகிம்சை,ஆயுதம் போன்றவற்றை கையில் எடுத்து போராடும் தமிழர் இனம் இன்று வரை பேராடும் இனமாகவே காணப்படுகிறது விடிவு என்பது இன்னும்  எட்டவில்லை. சிங்கள ஆட்சியாளர்கள் தீர்வு தருவார்கள் என்பது என்று நடவாத ஒன்றாகி போய்விட்டது மீண்டும் மீண்டும் ஏமாற்றம் அடைய தமிழர்கள் தாயார் இல்லை.

கற்ற பாடங்களை கையில் எடுத்து எமது போராட்டத்தை உலகுக்கு அவர்களின் வழிகளிலேயே உணர்த்தவேண்டும்.ஜனாதிபதி தேர்தல் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது அதன் திகதியும் தைமாதம் எட்டாம் நாள் என தேர்தல் திணைக்களமும் அறிவித்து விட்டது இதனால் தமிழர்களாகிய எங்களுக்கு என்ன பலன். ஆட்சியில் அமரபோவது ஒரு சிங்கள பெரும்பான்மை வேட்ப்பாளர் ஒருவரே அவர் எப்படிப்பட்டவர் எனபது அவர் வந்தபின் தெரியும் என்பது முட்டாள்தனம் இதுவரையும் பட்ட  பாடங்களிலிருந்து சிங்கள ஆட்சி அதிகாரங்களின் அதாவது பேரினவாதத்தின் முகங்கள் எப்படிப்பட்டது என்பது தமிழ் சமுகம் நன்கு அறியும். சிங்களம் எங்களுக்கு எந்த ஒரு  தீர்வையும் தராது சிங்களம் அதற்கு இடம் கொடுக்காது அவர்கள் தமிழர்களை என்றுமே அடிமைத்தனமாக வைத்திருக்க முயலுவார்கள் நாங்கள் பலமாக இருந்தபோதே தீர்வை தராதவர்கள் இப்போது தருவார்களா என்பது ஒரு மூடனுக்கும் தெரியும் ஆகவே நாங்கள் எங்களுக்கான தீர்வை வலியுறுத்தி இந்த ஜனாதிபதி தேர்தலை சந்திக்கவேண்டும்  

நாம் கற்றுகொண்ட அனுபவங்களை  எமது பாடங்களாக்கி எமது விடுதலை வடிவத்தை கொண்டு செல்லவேண்டும் அதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலை சிறப்பாக பயன்படுத்தவேண்டும்.இப்போதைய ஜனாதிபதிக்கும் எதிரணி வேட்ப்பாளரான  சுகந்திர கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன இடையில் கடும் போட்டி இருக்கலாம் இதில் யாரும் வெற்றி பெறலாம்.அதனால் தமிழருக்கு என்ன கிடைக்கும்.இதில் யாரும் தமிழர் வாக்குகளை பகிரங்கமாக எமக்கு அளியுங்கள் உங்களுக்கு தீர்வை தருகிறோம் என்று சொல்ல தயங்குவார்கள் ஏன் என்றால் யார் தமிழர் வாக்குகளை பெற அவர்களின் அதரவு தமக்கு உண்டு என்று கூறி சிங்களவர்களிடம் வாக்கு கேட்ககிறார்களோ அவர்கள் புலி முத்திரை குத்தப்பட்டு சிங்கள மக்களின் கணிசமான அளவு ஆதரவை இழப்பார்கள் அந்தளவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் தமிழ்விரோத இனவாதம் விதைக்கப்பட்டுள்ள்ளது.மறைமுகமாக ஆதரவை கூட்டமைப்பிடம் கேட்ப்பார்கள் வெற்றிபெற்றபின் எல்லாம் பழைய பல்லவிதான் தமிழர்களுக்கு எதுவும் இல்லை ஆகவே இதில் நாங்கள் மிகவும் அவதானத்துடன் செயலாற்றவேண்டும் 


எந்த ஒரு வேட்பாளர்களையும் ஆதரிப்பதால் பலன் ஏதும் எமக்கு கிடைக்க போவதில்லை தமிழ் மக்களின் தெரிவுகளில் ஒன்று தேர்தலை புறக்கணிப்பது அல்லது தமிழ்தேசிய கோரிக்கைகளை முன் வைத்து தமிழர் தரப்பு ஒரு வேட்பாளரை நிறுத்துவது. இந்த இரண்டு தெரிவுகளே தமிழர்களின் தெரிவாகலாம். இதில் சிறந்தது எது? தமிழர்களின் அபிலாசைகளை எது வெளிப்படுத்தும் ?அதாவது எமக்கும்  இந்த ஜனாதிபதி தேர்தலில்  எந்த ஒரு தீர்வும் கிடைக்காது இதில்  எந்த நப்பிக்கையும்  இல்லை என்பதை தேர்தல் புறக்கணிப்பின் மூலம் உலகுக்கு பறைசாற்றலாம் இது தேர்தலை புறக்கணிப்பதால் வெளிப்படும் ஆனால் நாம் தமிழரை பிரநிதித்துவப்படுத்தும் தமிழர்களின் சுயநிர்ணய தாயக கோட்பாட்டை பறைசாற்றி ஒரு தமிழ் தேசிய வேட்பாளரை நிறுத்துவதால் தேர்தலை புறக்கணிப்பதால் ஏற்படும் தாக்கத்தை விட உலகுக்கு தமிழரின் அபிலாசைகளை வெளிக்காட்டி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் . இதில் வடக்கு கிழக்கு பகுதிகளில் பெரும்பானமையான 80% மேற்ப்பட்ட வாக்குகளை தமிழ் தேசிய வேட்ப்பாளர் பெற்று வடகிழக்கில் வெற்றி  பெறுவாராயின் தமிழ்தேசியம் பறைசாற்றப்படும் இதனால் உலகுக்கு எமது அபிலாசைகளை கொண்டு சென்று எமக்கு என்ன வேண்டும் என்பதை மக்கள் ஆணையாக வெளிப்படுத்தலாம். இதற்கு தெளிவான தமிழ்தேசிய சுயநிர்ணய கொள்கையை இன்றுவரை கொள்கை மாறாமல் வெளிபடுத்தும் ஒரு வேட்ப்பாளரை தெரிவு செய்து அதற்க்கு தமிழ்தேசியகூட்டமைப்பு  மற்றும் தமிதேசிய மக்கள் முன்னணி போன்றன அதரவு வழங்கி தமிழர் அபிலாசைகளான  தங்களை தங்கள் ஆளும் கொள்கையை வகுத்து தேர்தலில் போட்டியிட்டு எமது விடுதலைக்கு வலுசேர்க்கவெண்டும்.இதுவே நல்லதொரு தெரிவாகலாம் இதை தமிழ் தலைமைகள் ஒன்றுமையுடன் வெளிப்படுத்தவேண்டும்.


Read More

November 19, 2014

புலிகள் மீள் வருகை என்னும் நாடகத்தின் தொடர்ச்சி இன்னும் முடியவில்லை இதன் கிளைமக்ஸ் இனித்தான் ஆரம்பம் - சரவணை மைந்தன்
by admin - 0

Read More

November 13, 2014

தமிழின அழிப்பு ஈழத்திலிருந்து தமிழகத்துக்கும்
by admin - 0

இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று முன்பு வர்ணிக்கப்பட்டது. மிகையான அழகும் வளமும் பொருந்திய  இத்தீவு ஶ்ரீலங்கா மற்றும் தமிழீழம் ஆகிய இரு நாடுகளை கொண்டது. இதில் தமிழீழம் வளம் மிகுந்த பெரிய கடற்பரப்பையும் நிலவளங்கள் பலவற்றையும் தன்னகத்தே கொண்ட நாடாகும். தமிழ் தேசமெங்கும் சிங்கள இனவெறியர்களின் பயங்கரவாத கால்கள் ஊன்றியுள்ளன. தமிழ் மக்கள் ஒரு பெரும் திறந்த வெளிச்சிறைச்சாலையில் அதாவது உலகில் உள்ள மிகப் பிரமாண்டமான சிறையில் அடைபட்டுள்ளார்கள். இந்த மக்களின் விடிவுக்காக உலகில் வாழும் தமிழர்கள் யாவரும் மாபெரும் போராட்டங்களை செய்துவருகின்றார்கள்.

இதில் தமிழ்நாட்டு சொந்தங்களின் தியாகங்கள் அளப்பெரியது. தமிழ் மக்களின் இவ்வாறான ஶ்ரீலங்கா எதிர்ப்பு  நடவடிக்கைகள் சிங்களம் உலக அரங்கில் பல அசௌகரியங்களையும் தோல்விகளையும் அடையக் காரணமானதால் இப்படியான போராட்டங்களை தடுத்து நிறுத்த பல வழிகளில் முயல்கின்றது இதன் ஓர் அங்கமாக புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை பயங்கரவாதிகள் என தடை செய்தது அதில் தனிப்பட்ட நபர்களையும் தடை செய்து தனது இயலாத தன்மையை வெளிப்படுத்தியது.

அடுத்தது தமிழ்நாட்டு தமிழர்களை அவர்களின் போராட்டத்தையும் மங்க செய்ய பல பிரயத்தன்ம் செய்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் சிங்களம் அவர்களின் போராட்டங்களை அடக்க செய்யும் முயற்சிகள் பலனற்றவையாகவே இருந்து வருகின்றன. தமிழக மக்களின் பின்னி பிணைந்த  சினிமா போன்ற துறைகளில் மூக்கை நுளைத்து சில தலைமைகளை பணம் கொடுத்து வாங்க முற்பட்டது முற்படுகிறது  இது தமிழக மக்களின் பலத்த எதிர்ப்புக்கள் மத்தியிலும் அவர்களின் இனப்பற்றின் பலத்தினாலும் அனைத்து சிங்கள பாய்ச்சல்களும் பலனற்று  போயின இனியும் போகும். இதனால் தமிழக மக்களை பழிவாங்க தமிழக மீனவர்களை கடற்பரப்பில் வைத்து சுடுவதும் தாக்குவதுமாக தனது இனவழிப்பை தமிழீழத்தில் இருந்து தமிழகத்துக்கு பரவவிட்டுள்ளது. இதன் ஒரு வடிவமே தமிழர்களை அழிக்க சிங்களம் தனது கட்டுப்பாட்டில் உள்ள நீதித்துறையை கையில் எடுத்து புதிய வடிவில் தனது  இனவழிப்பை மேற்கொள்வது. இதில்  மீனவர்கள் பழியாகிறார்கள் பழியாக்கப்படுகிறார்கள். 2011 நவம்பர் மாதத்தில் இலங்கை அரசு போதை கடத்தல் தொடர்பாக கைது செய்தவர்களில் 25 பேர் பாகிஸ்தானியர், 4 இந்தியர், ஆறு மாலைதீவினர், ஐந்து ஈரானியர் என்று இலங்கை அரசு சொல்லியது. ஆனால் தற்பொழுது ஐந்து மீனவர்களை தூக்கு தண்டனைக்கு அனுப்புவதாக சொல்லி இருக்கிறது. 

ஶ்ரீலங்கா மேற்காசியாவில் இருந்து கிழக்காசியாவிற்காகவும் போதை கடத்தலின் போக்குவரத்து புள்ளியாக இருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தானிற்கும் இந்தியாவிற்குமான புள்ளி என்கிறார்கள். 

மேலும் இக்கடத்தலில் அதிக அளவிற்கு ஈடுபடுபவர்கள் பாகிஸ்தானியர்கள். இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இம்மாதிரியான தண்டனை கொடுக்கப்பட்டவில்லை இதற்கு முன்னதாக 2010இல் 55கிலோ ஹெராயின் போதை பொருள் , 3.5கிலோ கோரொய்ன் கடத்தியதாக 58 வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது என்பதற்கான விவரங்கள் கூட தெரிவிக்கவில்லை ஆனால் தமிழர்கள் விடயத்தில் இவர்களின் தீர்ப்பு சிங்கள தேசத்தின் தமிழ் இன அழிப்பு எங்கெல்லாம் பரவுகிறது என்பது தெளிவாகிறது.தமிழக தமிழர்களுக்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு இந்திய நடுவன் அரசின் இயலாத தன்மையை மற்றும் இந்தியாவின் தமிழின அழிப்பு உடந்தயை எடுத்து காட்டுவதாக அமைகிறது.இந்த மீனவர்களின் விடுதலைக்கு உலகில் வாழும் தமிழ் மக்கள் கண்டன குரல் எழுப்ப  வேண்டும் அப்போதுதான் ஶ்ரீலங்காவின் அட்டுழியத்துக்கு முடிவு கட்டமுடியும் 
சரவணை மைந்தன்
Read More

May 11, 2014

முள்ளிவைக்கால் முற்றுபெறும் ஒரு தீ அல்ல.
by admin - 0


முள்ளிவைக்கால் முற்றுபெறும் ஒரு தீ அல்ல.
விடுதலையின் பெரும் மூச்சு.
வீறுகொண்டு எழும் வீரம்.
கருவில் பிறபெடுக்கும் அக்குனி குஞ்சுகளின் கருப்பை !
வருவோம் விடுதலை பெறுவோம் என்று தணல் விடும் தேசம்.

விடுதலை மக்களின் வீர நிலம் அது சிவப்பு
முள்ளிவாய்காலின் கரையின் நிறம் நீலம் அல்ல
 முள்ளிவாய்க்கால் கடல் நீர் தமிழ் வீரர்களின்
குருதியால் சிவந்த நீர்  -மணல்
காற்று வீச்சு மாவீரர்களின் சுவாசம்

கடல் அலைகள் சொல்லி சொல்லி அடிக்கும் தமிழ்வீரம்
எதிரியின் நித்திரையை குழப்பிவிடும்.
தாயை பிரிந்த மகனின் குரல்
மகனை பிரிந்த தாயின் கதறல்
 இந்தி தேசத்துக்கு கேட்கவில்லை-ஆயினும்
எங்கள் தொப்புள்கொடி உறவுகளுக்கு என்றும்
உரைக்கும் இந்தியாவின் துரோகம்.
அது கொடுக்கும் தக்க பதில்.
அதுவே தமிழர்களின் தீயின்
அணையா விடிவிளக்கு.

சரவணை மைந்தன்


Read More

April 17, 2014

புலிகள் மீள் வருகை என்னும் நாடகத்தின் தொடர்ச்சி இன்னும் முடியவில்லை இதன் கிளைமக்ஸ் இனித்தான் ஆரம்பம் - சரவணை மைந்தன்
by admin - 0

புலிகளின் மீள்  உருவாக்கம் என்ற போர்வையில் வடக்கு கிழக்கு  பிரதேசத்தில் இராணுவ பிரசன்னத்தை நியாயப்படுத்திய  ஸ்ரீலங்கா பயங்கரவாத அரசு தற்பொழுது  தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசியத்தின்பால் அக்கறை கொண்ட தமிழ் மக்களின் அபிலாசைகளை எந்தவித அச்சமும் இன்றி உலகுக்கு வெளிப்படுத்திக்கொண்டு ஈழத்திலேயே ஆதிக்க வெறியர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் சில தமிழ் தேசிய கொள்கைகளை இறுக பற்றி பிடித்து போராடும் பாராளுமன்ற உறுப்பினர்களை குறிவைக்க தொடங்கியுள்ளது. 

சில தினங்களுக்கு முன்னர் இலங்கை மற்றும் இந்திய அரசுகளால் இணைந்து நடத்தப்பட்ட புலிகள் மீள் வருகை என்னும் நாடகத்தின் தொடர்ச்சி இன்னும் முடியவில்லை இதன் கிளைமக்ஸ் இனித்தான் ஆரம்பம்.தமிழ்தேசிய கூட்டமைப்பின் கடும் போக்கான,தேசிய பற்றான பாராளுமன்ற உறுப்பினர்களை பலியெடுக்கும் படலத்தை இந்தியாவின் ஆலோசனைப்படி இலங்கை அரசு முன்னெடுக்க ஆரம்பிக்கிறது இதன் வெளிப்பாடே  சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று விடுதலை புலி உறுப்பினர்களுக்கு போக்குவரத்து வசதிகள் மற்றும் தங்குவதற்கு இடம் வழங்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது உயர் கல்வியமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

2009 மே மாதம் விடுதலைப்புலிகளின் செயற்ப்பாடுகள் தமிழீழத்தில் மௌனிக்கப்பட்டத்திலிருந்து  அடுத்து இடம்பெற்ற இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலுக்கு யாழ் மாவட்டத்தில் இருந்து அதிக வாக்குகளால் முன்னர் தெரிவு செய்யப்பட்ட தீவிரமான தமிழ் தேசிய பற்றுடன் உழைத்த விடுதலைப்புலிகளால் தெரிவு செய்யப்பட்ட முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவின் வேண்டுகோளுக்கு இனங்க தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமையினால்  வேட்ப்பாளர்களாக அறிவிக்கப்படவில்லை.

 இவர்கள் திரும்பவும் கூட்டமைப்பில் நின்றால் அவர்களால் தேசியம்,சுயநிர்ணயம் ,தாயகம் என்று விடாப்பிடியாக நிற்ப்பார்கள் எனவே அவர்களை கூட்டமைப்பு நிறுத்தக்கூடாது என இந்தியா விடாப்பிடியாக கட்டளை இட்டது. இது தமிழ் தேசிய கூட்டமைப்பில் இந்தியாவின் ஆதரவுடன் நடந்த இந்திய இலங்கை  கூட்டு  களையெடுப்பு.

அதுபோல் இன்றும் இலங்கை மற்றும் இந்திய கூட்டு நடவடிக்கையில் மீண்டும் தேசிய செயற்பட்டாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலியெடுக்க புதிய திட்டத்துடன் நடவடிக்கை ஆரம்பிக்கபடுகிறது  

தற்பொழுது புலிகள் கதை கூறி அவர்களுடன் தொடர்ப்பு என்று சில தமிழ்தேசிய மக்கள் பிரதிநிதிகளை கைது செய்து சிறையில் அடைக்க பெரும் திட்டத்தை நிறைவேற்ற தொடங்கியுள்ளார்கள்.தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள முக்கிய மக்கள் பிரதிநிதிகள் இதில் குறிவைக்கப்பட்டுள்ளார்கள்.

தங்களை குறிவைக்கிறார்கள் என்று அவர்கள் முன்னரே அறிந்தும் இருக்கிறார்கள் இதை அவர்கள் தங்களுடன் நெருங்கியவர்களுடன் பகிர்ந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது. இதனை தடுப்பதாயின் அனைத்து தமிழ்மக்களும் தமிழக மக்களும் அந்த தமிழ் தேசிய மக்கள் பிரதிநிதிகளின் கைகளை பலப்படுத்த ஓரணியில் திரண்டு அவர்களுக்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும்.
Read More

November 20, 2013

யாழில் இராணுவ வீரருக்கும் தமிழ்ப் பெண்ணுக்கும் திருமணம்
by admin - 0

யாழ்ப்பாணத்தில் இராணுவ வீரர் ஒருவருக்கும் தமிழ் யுவதியொருவருக்கும் இந்து சமய முறைப்படி இன்று புதன்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது.
அனுராதபுரம் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் அமரசிங்க என்ற இராணுவத்தின் இரண்டாவது சிங்க படையணியில் கடமையாற்றும் வீரரும் மானிப்பாய் சுதுமலையைச் சேர்ந்த ரகு தர்மினி என்ற யுவதியுமே திருமண பந்தத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

இதில் சிந்திக்க வேண்டியது என்ன என்றால் கலப்பு திருமணம் நல்லது ஆனால் தமிழர்களை அழித்து தமிழ் பெண்களின் கர்ப்பை மானத்தை சூறை ஆடிய சிங்கள இராணுவத்தை மணம் முடிப்பது ஏற்றுகொள்ள முடியாதது அப்படி அவர்கள் காதலித்து மணம் முடிப்பதாயின் ஏன் அவர்கள் திருமணத்தை இராணுவ பிரசன்னம் மூலம் நடத்துகிறார்கள் அதுவும் அவர்களின் சிருடை தரித்து இதற்கான காரணம்.

உலகத்துக்கு தமிழர்கள் சிங்களவர்கள் கணவன் மனைவி போன்றவர்கள் (மாண்பு மிகு வடக்கு முதலைச்சர் சொன்னது போன்று )என்று கட்டுவதற்கு  முக்கியமாக தூர நோக்கத்தில் இது ஒரு இன அழிப்பின் மறைமுகமான அழிப்பாகும் அதாவது சிங்களவர்கள் தமிழர்கள் கலப்பு திருமணங்கள் இலங்கையில் சிறுபான்மையாக இருக்கும் தமிழர்களின் வீதாசாரத்தை குறைக்கும் இதனால் தமிழர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்.

இலங்கை இராணுவம் வடகிழக்கில் பெருமளவில் நிலைகொண்டு இருப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று 

மற்றும் தமிழ் பெண்கள் பெரும்பாலும் கட்டாயத்தின் நிமிர்த்தம் இராணுவ  திருமணத்துக்கு தள்ளப்படுகிறார்கள் அதாவது இராணுவத்தின் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட தமிழ் பெண்கள் வேறு வழியின்றி இப்படியான திருமணத்துக்கு தள்ளப்படுகிறார்கள் 

இதை தடுப்பதற்கு தமிழ் ஊடகங்கள் மற்றும் இளைய சமுதாயம் விழிப்புடன் செயட்பட வேண்டும் 

சரவணை மைந்தன் 


Read More

September 23, 2013

இந்தியா தமிழீழத்தை ஏற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை
by admin - 0

பாதைகள் மாறலாம் இலட்சியம் என்ற எமது இலக்கு மாறது தமிழீழம் என்ற எமது இறுதி இலக்கு தமிழன் என்ற ஒரு உயிர் இருப்பினும் அது தொடரும் எங்கள் இன பெண்களின் மார்பை அறுத்து குருதி குடித்த சிங்கள பேரினவாத அரக்கர்களுடன் நாம் சேர்ந்து வாழ மாட்டோம். மாகாண சபையை வைத்து சமஸ்டியை பெற்று தனியரசை நிறுவுவோம் இப்படி படிப்படியாக தமிழீழம் காண மக்கள் அளித்த அங்கீகாரம்தான் கூட்டமைப்பின் வெற்றி. இந்தியா கூட்டமைப்பை அழைத்து கூறிய வார்த்தைகள்??? ஈழம் என்ற தீர்வு இந்தியா ஏற்றுகொள்ளாது. இந்தியாவே தமிழீழமே எங்கள் மூச்சு தலைவனே எங்கள் உயிர் "மாவீரன் பிரபாகரன்" இந்த ஒரு சொல் விக்க்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது. கூட்டமைப்பின் அனைத்து தேர்தல் பிரச்சாரத்திலும் "மாவீரர்" " போராளிகள்" "களமுனை" " வித்தாகி போனவர்கள்" " பிரபாகரன் " " துயுளும் இல்லம்" போன்ற வசனங்கள் இல்லாமல் யாரும் பேசி இருகிறார்களா? இவை அனைத்தும் தமிழீழ விடுதலை மக்களின் விடுதலை வசனங்கள் அந்த விடுதலைக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்தான் வாக்கு.இதை உணர்ந்து இந்தியா தமிழீழத்தை ஏற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை .

சரவணை மைந்தன்  
Read More

August 06, 2013

மத்திய அரசின் செயலால் தமிழ்நாடு தனிநாட்டு கோரிக்கையை கையில் எடுக்குமா?
by admin - 0

"தமிழ்நாட்டை அவமதிக்கும் இந்திய மத்திய அரசு தமிழர்களை இப்படி அவமதிப்பது இந்திய அரசின் பாரபட்ச செயட்பாடுகள் வெளிப்படுகின்றன. இதுபோன்ற அவமதிப்புகள் தமிழ்நாட்டை பிரிக்க இந்தியா விரும்புகிறதா என்ற கேள்வி தமிழர்கள் மனதில் வெளிப்படுவது தவிர்க்க முடியாதது இது போன்ற செயற்பாடுகளை கட்சி வேறுபாடு இன்றி எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும்." 
சரவணை மைந்தன் 

NEWS

தமிழகத்தை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிக்கே இந்த அவமானம் என்றால், இந்திய அரசு சராசரி தமிழர்களை எப்படி மதிக்கும், ஈழ தமிழர்களை எப்படி நடத்தும் என சொல்ல வேண்டியதே இல்லை. தமிழர்களை அவமதிப்பது என்பது இந்திய அரசு அதிகாரிகளுக்கு பிடித்த ஒரு செயல்.
தமிழகத்தை ஒரு அடிமை மாநிலமாகவே இந்தியா பார்க்கிறது. திருச்சியில் வரவேற்புக்காக வந்த டி.ஜி.பி.யை சிறப்பு பாதுகாப்புக்குழு (எஸ்.பி.ஜி.)
அதிகாரி தடுத்ததாகவும், இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
பிரதமருக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மன்மோகன்சிங்க்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ‘பெல்’ நிறுவனத்தின்
தொழிற்சாலை பிரிவை தொடக்கி வைப்பதற்காக 2–ந்தேதி திருச்சிக்கு வந்திருந்தீர்கள். தமிழக அரசின் சார்பில் உங்களை வரவேற்பதற்காக திருச்சி மாவட்ட கலெக்டரை தவிர்த்து,
நிதித்துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர், காதி மற்றும் கிராமத்தொழில்துறை அமைச்சர்,
தலைமைச்செயலாளர், டி.ஜி.பி. ஆகியோரை நியமித்திருந்தேன். இந்த அதிகாரிகளுடன், நீங்கள் வந்த விமானத்துக்கு அருகே ஏணிப்படி இருந்த
பகுதியை நோக்கி நோக்கிச் டி.ஜி.பி. செல்லும்போது, சிறப்பு பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த
கீழ்நிலை அதிகாரியால் அவர் மூர்க்கத்தனமாக எதிர்கொள்ளப்பட்டுள்ளார். மேலும் விமானத்தை நோக்கி செல்வதற்கும் அவரால் டி.ஜி.பி. தடுக்கப்பட்டுள்ளார். டி.ஜி.பி. தனது சீருடையில் இருந்த நிலையில்கூட இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. ஏணிப்படி பகுதியில் உங்களை வரவேற்பதற்காக யார் யார் வருவார்கள் என்பதற்கான பட்டியல்
உங்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. அந்த பட்டியல் 1–ந்தேதி உங்கள் அலுவலகத்தால்
பெறப்பட்டுவிட்டது என்று உறுதியும் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் டி.ஜி.பி.யின் பெயரும்
இடம்பெற்றுள்ளது. பிரதமர் வரவேற்பு மற்றும் விடையளிக்கும் நபர்களில் டி.ஜி.பி.யின் பெயர் இடம் பெற்றிருந்தாலும் கூட, அதை உங்கள் அலுவலகம் உறுதி செய்திருந்தும் கூட, டி.ஜி.பி.க்கு ஏற்பட்ட இந்த ஒழுக்கக்கேடான நிலை,
சிறப்பு பாதுகாப்புக்குழு அதிகாரிகளின் ஒழுங்கீனத்தைக் காட்டுகிறது. மாநிலத்தின் தலைமைப் பதவியில் இருக்கும் போலீஸ் அதிகாரியான டி.ஜி.பி.யை, அதுவும் அவர் அந்த பதவிக்கான சீருடையை அணிந்திருந்த நிலையில், அவரை அடையாளம் காணமுடியாத எஸ்.பி.ஜி.யை நினைக்கும்போது ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போது அமைதியாகவும், இடையூறின்றியும் வந்து செல்லும் சூழ்நிலையை உருவாக்குவதற்கான பொறுப்பை செய்திருந்தவர் அந்த டி.ஜி.பி.தான் என்பதையும் உங்களிடம்
தெரிவிக்கிறேன். எனவே நீங்கள் இந்த விவகாரம் குறித்து விசாரித்து, அந்த சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற குறைபாடுகள் நேராமல் இருப்பதற்குரிய ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More

July 24, 2013

தமிழ் இன அழிப்பு சர்வதேச நிலைப்பாடு மாற்றம் பெறுகிறதா ?
by admin - 0


ஈழத்தில் இலங்கை இராணுவதின் இன அழிப்பு நடந்த இறுதி நிமிடத்தில் கூட விடுதலை புலிகளினால் சர்வதேசத்துக்கு மக்களை காப்பாற்றுமாறு கோரிக்கை விடப்பட்டது ஆனால் ஏற்றுகொள்ளாத சர்வதேசம்  ஸ்ரீலங்கா  அரச இன  அழிப்புக்கு  கண்மூடி நின்றது. "காப்பற்றுங்கள் காப்பற்றுங்கள்" என்று கதறிய மக்களை காப்பற்ற தவறிய உலகம் தற்பொழுது உணருகிறதா? தமிழர்கள்  இழந்தவற்றை சர்வதேசம் பெற்று தருமா? தமிழீழம் என்ற இழந்த தமிழர் நாட்டை அங்கீகரித்தால் மட்டுமே இவர்களின் தவறுக்கு தமிழர்களுக்கு  செய்யும் ஒரு மிகப்பெரிய உதவியாகவும் அவர்களின் தவறுக்கு தேடிக்கொள்ளும் பாவ மன்னிப்பாகும் . 
சரவணை மைந்தன் 

அமெரிக்க அறிக்கை  


தொடர்புடைய செய்தி 

இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக்கட்ட காலங்களில் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள், இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகள்
அமைப்புக்கும் எதிராக அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வந்தன என்று அமெரிக்காவின் புதிய அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ராஜாங்க செயலாளர் மெட்லின் அல்பிரைட் தலைமையிலான 3
அமெரிக்க நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகளின்
அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அந்த
அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சர்வதேசம், இலங்கையில் போரை நிறுத்துவதற்கோ, அதற்குரிய பொறுப்புகளை நிறைவேற்றவோ நடவடிக்கை தஞ்சம் வழங்குவது, உரிமைகளை பாதுகாப்பு தொடர்பிலான
சர்வதேச இணக்கப்பாடுகளை பல நாடுகள்
ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால்
அவற்றை அமுல்படுத்துவதில்லை. முக்கியமாக இலங்கையில் நடைபெற்ற
போரின் இறுதிக் கட்டத்தில் சர்வதேசம்
தமது கடமையை சரிவர
நிறைவேற்றவில்லை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Read More

June 07, 2013

வீரவேங்கை நிலமங்கை,லெப்டினன்ட் காரிகை உட்பட 16 வேங்கைகளின் நினனைவு தினம் இன்று.
by admin - 0


ஈழத்தில் தமிழ்மக்களுக்கு எதிராக சிங்கள பேரினவாத அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக தமிழ்மக்களின் எழுச்சி வடிவமாக விடுதலை இயக்கமாக புலிகளை மக்கள் பார்க்கிறார்கள். தமிழீழ மக்களின் விடுதலை வேண்டி போராடிய இயக்கங்களில் தங்களுடைய இலச்சியத்தை என்றுமே விட்டுகொடுக்காமல் சுகந்திர தாகத்துடன் இறுதிவரை போராடும் தமிழீழ இயக்கமாக இன்று வரை புலிகளே இருக்கிறார்கள். இவர்களின் தியாகங்கள் தமிழ் தமிழ் மக்களின் மனங்களில் என்றுமே அழியாமல் நிலைத்திருக்கும். தமிழ் மக்களை உலகுக்கு உணர்த்திய புலிகளை தமிழர்களின் மனங்களின் இன்றுமே நிலைத்திருக்க வைத்தவர்கள் விதையாகி விதையாகி போன போன பல ஆயிரம் மாவீரர்கள் ஆகும் .இவர்களின் நினைவுகள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் தமிழர்களின் நெஞ்சங்களின் என்றுமே நிலைத்திருக்கும்.மாவீரர் மீளாத்துயில் கொள்ளும் இடங்களை அழித்தாலும் அவர்களின் நினைவுகள் எங்களை விட்டு விலகாது. இந்த மாவீரர்களின் வரிசையில் இடம்பிடித்த தீவுப்பகுதி மண் பெற்றெடுத்த வீரவேங்கை நிலமங்கையும் ஒருத்தி .யாழ்ப்பாணத்தில் தீவுப்பகுதியில் சரவணை என்னும் அழகிய கிராமத்தில் சிவாஜினி   என்னும் பெயரில்உதித்தவள்தான் நிலமங்கை   இவள் சிவகுருநாதன் இந்திராணி தம்பதியர்களுக்கு மூன்றாவது மகளாக வந்து பிறந்தாள் .சிங்கள இராணுவ படையெடுப்புகளால் பல இடப்பெயர்வுகளை சந்தித்த தமிழ் மக்களுடன் இவள் குடும்பமும் பல இடப்பெயர்வுகளை சந்தித்து வன்னியில் குடியேறியது. 

1997ல் விடுதலைப்புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்ட இவள் நிலமங்கை பெயர்கொண்டு யெஜசிக்குரு பெரும் சமர்களில் தன்னை ஈடுபடுத்தி இராணுவத்துக்கு பல இழப்புக்களை கொடுத்தாள். இவளின் திறமை கண்டு சோதியா படையணியின் சிறப்பு படைக்கு மாற்றப்பட்டாள்.சோதியா படையணில் இணைக்கப்பட்ட நிலமங்கை, காரிகை (துரைசிங்கம் குமுதினி )யும் இணைபிரியாத நண்பிகளாக சண்டைகளங்களிலும் பாசறைகளிலும் விளங்கினார்கள். 08.06.1998 அன்று பரந்தனில் சிங்கள இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் நிலமங்கை,காரிகை உட்பட பதினாறு வேங்கைகள் தங்களின் இன்னுயிர்களை இந்த மண்ணின் விடுதலைக்காக ஆகுதியாக்கிகொண்ட்டார்கள். இணைபிரியா இரண்டு நண்பிகளும் வித்தாகும் போதும் இணைந்தே வித்தாகி போனார்கள்.

சரவணை மைந்தன்.
Read More

May 25, 2013

கையில் வெள்ளை கொடியுடன் வந்தவருக்கு என்ன ஆனது புதிய ஆதாரம் இணைப்பு -படங்கள் இணைப்பு
by admin - 0

இலங்கை அரசால் 2009 மே மாதம் இறுதி யுத்தத்தில் பலாயிரக்கனக்கான மக்களை ஈவிரக்கம் இல்லாமல் கொன்று குவிக்கப்பட்டது .பல நாட்டு உதவுயிடன் அழித்தொழிக்கப்பட்ட தமிழீழ மக்கள் வெள்ளைக்கொடியுடன் போர் மரபுக்கு ஏற்றப சரண் அடையவந்த தமிழ்மக்களும் மற்றும் விடுதலைப்புலிகளும் போர் மரபுகளுக்கு எதிராக கொன்று குவிக்கப்பட்டார்கள். இதில் விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர்களும் போராளிகளும் அடங்குவார்கள் வெள்ளைக்கொடி விவகாரம் இலங்கை அரசை கழுத்து பிடி பிடித்து இறுக்கிவரும் இவ்வேளையில் வெள்ளைக்கொடியுடன் வரும் ஒருவரின் படம் தற்பொழுது வெளியாகியிருக்கிறது. வெள்ளைக்கொடியுடன் வந்தவர் பின்னர் கைகள் கட்டப்பட்டு இருக்கும் படங்கள் முன்னர் வெளிவந்திருந்தது. தற்பொழுது அவர் வெள்ளை கொடியுடன் வருவது வெளிவந்திருப்பது இலங்கை அரசின் அப்பட்டமான போர் குற்ற ஆதாரம், மற்றும் வெள்ளைக்கொடியுடன் சரணடைத்த செய்திக்கு வலுசேர்க்கும் ஒரு ஆதாரம் என்பதுக்கு மற்று கருத்து இல்லை.









தமிழ் இணையங்கள் தங்களுக்குள்ள போட்டியின் வெளிப்பாடு போர் குற்ற ஆதார படங்களை வெளிவிடுவதிலும் உள்ளதை நினைக்கும் போது தமிழரின் ஒற்றுமை கேள்விக் குறியாகிறது. இணையங்கள் செய்தி மூலம் கேட்க அல்லது லோகோ இல்லாமல் படத்தை தர விவசாயி இணையம் தயார் தொடர்ப்புக்கு

சரவணை மைந்தன்
www.vivasayii@gmail.com
Read More

May 06, 2013

காலத்தின் கட்டளை நியத்தின் வழி பகுதி 1
by admin - 0

தமிழீழ தனியரசுக்கு தேவையான அனைத்து தேவைகளும் தேசிய தலைவர்களால் உருவாக்கப்பட்டு மிகவும் நேர்த்தியாக நீதி வழுவாமல் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. பல நாடுகளின் உதவியுடன் அல்ல பல நாடுகள் சேர்ந்துதான் ஆட்சியை ஆயுத ஆட்பலம் கொண்டு இன அழிப்பு ஒன்றை செய்து முடித்தார்கள். இலங்கை இறையாண்மையை என்று கூறி தமிழீழத்தின் இறையாண்மையை அழித்து எமது இனத்தை தனிமைப்படுத்தியது. எமது இனத்தை அழிப்பதற்கு அவர்கள் எமது பாதுகாப்பு அரண்களை பயங்கரவாத அரண்கள் என்று ஒரு ஆயுதத்தை இவர்கள் பாவித்தார்கள் அதற்க்கு அவர்கள் கூறுகின்ற காரணங்களில்
யாழில் இருந்து முஸ்லிம் சகோதரர்களை வெளியேற்றியமை ஒரு மிகப்பெரும் குற்ற சாட்டை முன்வைக்கிறார்கள் அதாவது ஒரு சிறுபான்மை இனத்தின் விடுதலைக்காக போராடம் போராட்ட அமைப்பு இன்னொரு சிறுபான்மை இனத்தை கூண்டோடு ஒருநாளில் வெளியேற்றுவது எப்படி ஏற்று கொள்ளலாம் ஆகவே நீங்கள் பயங்கரவாதிகளே என்பதை இன்றும் கூறுகிறார்கள்.ஒரு இனத்தை ஒரு இரவில் வெளியேற்றியது ஒரு மறுக்கமுடியா குற்றம். அவர்களை இப்படி வெளியேற்ற புலிகளுக்கு ஏற்பட தவிர்க்க முடியாமல் பல சம்பவங்கள் சில முஸ்லிம் சகோதரர்களால் தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கு எதிராக செய்யப்பட்டது அதாவது போராளிகள் பலபேர் சில முஸ்லிம் சகோதரர்களால் கட்டி கொடுக்கப்பட்டு ஸ்ரீலங்கா அரச படையால் கொல்லப்பட்டு மாண்டனர். இப்படியொரு செயல்களால் அன்று புலிகள் இப்படியான துர்ப்பாக்கிய நிலையை எடுத்தார்கள் ஆயினும் அதை அவர்கள் தவறு என்று சொல்லி பின் அவர்களை யாழில் வந்து குடிஏறலாம் என்று அறிவித்தார்கள். தமிழீழ விடுதலை போராட்டத்தில் இரண்டு முஸ்லிம் மாவீரர்கள் வீர காவியம் ஆனது குறிப்பிடத்தக்கது. எனவே பழையதை மறந்து அனைத்து தமிழ்பேசும் மக்களும் இணைந்து தமிழீழ விடுதலைக்காக ஆயுத வழியின்றி போராடுவோம். அப்போவாவது இந்த உலக நாடுகள் நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை ஒரு தேச இனவிடுதலை விரும்பிகள் எங்கள் விடுதலைக்காக நாங்கள் போராடுகிறோம் என்று உணரட்டும்.

சரவணை மைந்தன்


Read More

September 09, 2012

சரவணை கொட்டன்காடு வைரவகோவில் கிணற்றில் மனித எலும்புக்கூடு
by admin - 0

பாவனையற்று இருந்த வேலணை சரவணை கொட்டைக்காடு வைரவர்கோவில் கிணறை சுத்தப்படுத்தி கொண்ண்டபோது சேற்றிலிருந்து மண்டையோடு மற்றும் எலும்புகொடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது இதனால் இந்த சரவணை கிராமமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது


சரவணை மைந்தன்
Read More