Latest News
Showing posts with label இது நம்மவர். Show all posts
Showing posts with label இது நம்மவர். Show all posts

July 19, 2020

முருகனைப் பற்றிபேச யாருக்கும் தகுதி இல்லை! கறுப்பர் கூட்டத்துக்கு பதிலடி
by Editor - 0

முருகன் குறித்தான வலையொளி ஒன்றின் ஆபாசப்பேச்சு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலவிதமான விவாதங்களை உருவாக்கி இருக்கிறது.

இந்துக் கடவுளை பழித்துரைத்து இழிவுசெய்யும் நோக்கோடு வெளியிடப்பட்டுள்ள அக்காணொளி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக இருக்கும் முருக கடவுளை கொச்சைப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள அக்காணொளி தொடர்பில் சமூக ஆர்வலர் ஒருவரின் ஆதங்கமாக வருகிறது இக்காணொளி

ibctamil
Read More

May 04, 2016

ஆனந்தபுரத்தில் வீரர்கள் விட்டு சென்ற வாசகம் மீட்பு ஒன்றுபடுமா தமிழினம் ?
by admin - 0

விடுதலைப் புலிகளின் வெற்றி தோல்வியை தீர்மானித்த சமராக கருதப்படும் முல்லைத்தீவு ஆனந்தபுரச் சமர் நடைபெற்று ஏழு வருடங்களாகி விட்டன.

இந்நிலையில் இன்று அக்களப்பகுதி இராணுவ கட்டுப்பாட்டிற்குள் சிக்கிக் கிடக்கின்றது.

2009ம் ஆண்டு புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரச் சமரில் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் (கடாபி), பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உள்ளிட்ட தமிழீழ தேசிய  விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள், பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து வரலாறு படைத்துள்ளனர்.

தமிழீழ தேசிய  தலைவர் பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலை உளமார ஏற்று, கிழக்கு மாகாண போராளிகளும் சிறப்பாக ஆனந்தபுரச் சமர்க்களத்தில் களமாடி வீரகாவியமாகி உள்ளார்கள் என்பதற்குரிய ஆதாரங்கள் அங்கே காணப்படுகின்றன.

மட்டு-அம்பாறை மாவட்ட நிதித்துறை வழங்கற்பகுதி வெளியிட்டு வைத்த 2006ம் ஆண்டு சிறிய நாட்காட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதில் “பொங்கி எழும் அலையாய் உன் பின்னால் உலகத் தமிழினம்- இனி தங்கு தடைகள் இன்றி தடைகள் தகர்க்கும்” என்னும் வாசகத்தை எழுதி கவரிட்டு பாதுகாக்கப்பாக வைக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.


Read More

February 07, 2016

உலகமே அலறித் துடிக்கும் வேளையில் ஸிகா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த தமிழர்
by admin - 0

உலகில் முதன்முறையாக 'ஸிகா' வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
இப்போது தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் ஸிகா வைரஸ், கால் பதித்துள்ளது. கர்ப்பம் தரித்த பெண்களை ஸிகா வைரஸ் தாக்கினால், பிறக்கக்கூடிய குழந்தைகள் பிறவிக்குறைபாடுகளை கொண்டிருக்கும். குறிப்பாக தலை சிறியதாக இருக்கும், மூளை பகுதியில் பாதிப்பு இருக்கும். பிரேசில் நாட்டில் மட்டும் இப்படி 4,074 குழந்தைகள் சிறிய தலைகளுடன் பிறந்துள்ளதால், அங்கு பெண்கள் கர்ப்பம் அடைய வேண்டாம் என இப்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தெற்கு அமெரிக்காவின் கொலம்பியா பகுதியில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஸிகா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 3177 பேர் கர்ப்பிணிப் பெண்கள் என்பதால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இங்கு மட்டும் மேலும் 6 லட்சம் பேர் ஸிகா பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சுமார் 40 லட்சம்பேரை ஸிகா வைரஸ் தாக்கும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கினால் அதற்கு சிகிச்சையும் இல்லை. வராமல் தடுப்பதற்கு தடுப்பூசியும் இல்லை என்பதால் உலக நாடுகள் அலறுகின்றன.
உலக சுகாதார நிலையம் சர்வதேச அவசரநிலையை பிரகடனம் செய்து உள்ளது. ஒருபுறம் உலக நாடுகள் தடுப்பு மருந்துக்கான தேடுதலில் தீவிரம் காட்டி வருகின்றன. மற்ற உலக நிறுவனங்கள் ஸிகா வைரஸ் தடுப்புக்கான மருந்தை கண்டுபிடிக்க ஆராய்ச்சியில் களம் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஸிகா வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் சர்வதேச லிமிடெட் ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மிகவும் முக்கியம் வாய்ந்த நடவடிக்கையாக ஐதராபாத் ஆய்வு விஞ்ஞானிகள் உலகில் முதன்முறையாக ஸிகா வைரசுக்கு எதிராக இரண்டு விதமான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். 
பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான டாக்டர் கிருஷ்ணா எல்லா இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடையே பேசுகையில், “உலகில் முதலாவதாக ஸிகா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடித்த நிறுவனம் நாமாக இருக்கலாம், சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பே மருந்தை பாதிக்கப்பட்ட நபருக்கு செலுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது,” என்று கூறியுள்ளார்.
உலகில் ஸிகா வைரஸ் நோய்த்தொற்று தோன்றுவதற்கு முன்னதாக கடந்த ஆண்டிலேயே அதிகாரப்பூர்வமாக 'ஸிகா' வைரஸ் மாதிரியை இறக்குமதி செய்து இரண்டு விதமான தடுப்பு மருந்துகளை தயாரித்துள்ளோம். இந்த மருந்தை விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் அளித்து பரிசோதிக்க இந்திய அரசின் ஆதரவை நாடியுள்ளோம். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் உதவிசெய்ய முன்வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், பாரத் பயோடெக் 'ஸிகா' வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடித்து உள்ளதாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை நாங்கள் அறிவியலாளர்கள் கருத்தின்படி ஆய்வுசெய்ய வேண்டும், ஆய்வை மேலும் முன்நோக்கி எடுத்துசெல்லும் சாத்தியத்தை பார்க்கவேண்டும். இது 'மேக் இன் இந்தியா' தயாரிப்புக்கு ஒருநல்ல உதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இதுவரை 'ஸிகா' வைரஸ் தாக்கம் யாருக்கும் ஏற்படவில்லை. இந்நிலையில் இந்த புதிய தடுப்பு மருந்து உலக அளவில் பெரும் வரவேற்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இந்த ஸிகா வைரஸ் நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்த விஞ்ஞானியான கிருஷ்ணா எல்லா என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் அமெரிக்காவில் உள்ள ஹவாய் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் பட்டம்பெற்று தாவர தடயவியலில் ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றார். தெற்கு கரோலினாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
அப்போது, இவரை தனது தாய்நாடான இந்தியாவுக்கு திரும்பிவந்து ஏதாவது நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு கிருஷ்ணாவின் தாயார் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு எளிதில் சம்மதிக்காத கிருஷ்ணாவிடம் அவரது தாய் என்ன கூறினார் தெரியுமா..?
மகனே, உன் வயிற்றின் அளவு வெறும் ஒன்பது அங்குலம்தான். நீ எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும், அதற்குமேல் உன்னால் சாப்பிட முடியாது. நீ நம் நாட்டுக்கு திரும்பிவந்து என்ன வேண்டுமானாலும் செய். என் இறுதி மூச்சுள்ளவரை உன்னை பட்டினியாக கிடக்க விடாமல் உனக்கு சாப்பாடு கிடைக்க நான் வழி செய்கிறேன் என கூறிய கிருஷ்ணா எல்லாவின் தாயார் அவரது மனதை மாற்றினார்.
பின்னர், ஒருவித வைராக்கியத்துடன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய இவர், ஐதராபாத்தில் பாரத் பயோடெக் என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் பொருளாதார முதலீடு உள்ளிட்ட பல்வேறு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்ட கிருஷ்ணா எல்லா, இன்று 10 கோடி அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் நிர்வாகத்தின் தலைவராக சப்தமில்லாமல் பல சாதனைகளை செய்து வருகிறார்.
புதிய நோய்கள் உருவாவதற்கு முன்னரே அவற்றுக்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் அதிக முதலீட்டை செலவிட்டுவரும் கிருஷ்ணா எல்லாவின் தீவிர முயற்சியின் விளைவாக உலகிலேயே மிக குறைந்த விலையில் ஹெபிடைட்டிஸ் பி வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை இவரது நிறுவனம் கண்டுபிடித்தது.
போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதத்தை தடுக்கும் சொட்டு மருந்து, ரோட்டா என்ற வைரஸால் ஏற்படும் வயிற்றுப்போக்கு நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து ஜப்பானிய என்செபாலிட்டிஸ் எனப்படும் கொசுவால் பரவும் வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தையும் இவரது தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை நாடு முழுவதும் 3.5 பில்லியன் யூனிட் போலியோ சொட்டு மருந்தை இந்த நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.
உலகையே அச்சுறுத்திய சிக்கன் குன்யா நோய்க்கு காரணமான வைரஸ் கிருமி எது? என்பதை இவரது ஆய்வகம்தான் முதன்முதலாக கண்டுபிடித்தது.
தற்போது, ஸிகா நோய்க்கு எதிரான இரண்டுவகை தடுப்பு மருந்தை கண்டுபிடித்து, ‘மேக் இன் இந்தியா’ என்ற லேபிளுடன் உலக நாடுகளுக்கு அனுப்பவுள்ள கிருஷ்ணா எல்லாவின் சாதனை முயற்சியில் அவர் வெற்றிபெற வாழ்த்த வேண்டியது, தமிழர்கள் என்ற வகையில் நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும்!
Read More

January 24, 2016

வேலணை கிழக்கு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் நடாத்தும் பொங்கல் விழாவும், பத்தாவது ஆண்டு விழாவும்
by admin - 0

வேலணை கிழக்கு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் நடாத்தும் பொங்கல் விழாவும், பத்தாவது ஆண்டு விழாவும்




Read More

January 12, 2016

பிரித்தானியாவில் கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 23ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு
by admin - 0

நீங்காத நினைவில் 23 ஆண்டுகள் கேணல் கிட்டு ஒரு தனி மனித சரித்திரம் நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு.

கேணல் கிட்டு,லெப்டினன் கேணல் குட்டி சிறி உட்பட பத்து வேங்கைகளின் நினைவு வணக்க நிகழ்வுக்கு அனைவரையும் தோழமையுடன் அழைக்கிறோம்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரித்தானியா:02033719313

St Boniface clu.
185 Mitcham Road
Tooting
Sw17 9pg
நேரம்:மாலை 6 மணி
Read More

July 18, 2015

"இது நம்மவர்" இந்த வாரம் வைரமுத்து தர்மகுலநாதன்
by admin - 0

யாழ் உதைபந்தாட்டத்தின் மறு உருவம் ஊரேழு றோயல்  வைரமுத்து தர்மகுலநாதன்
(வெள்ளை  )

இலங்கை உதைபந்தாட்ட வரலாற்றில் நீண்டகாலமாக ஒரு கழகத்துக்காக விளையாடிவரும் ஒரே குடும்பத்தை சேர்த 4 திறைமையான வீரர்கள் வைரமுத்து தர்மகுலநாதன் குடும்பம் என்ற பெருமைக்குரியவர்கள்.

யாழ்மாவட்டத்தில் றோயல் வெள்ளை என்றல் விளையாட்டுத்துறையில் தெரியதவர்கள் இருக்கமுடியாது ஊரேழு றோயல் விளையாட்டுக்கழகத்தை சேர்த வைரமுத்து தர்மகுலநாதன் என்ற வீரர் உதைபந்தாட்டத்தின் மறுஉருவமாக கருதமுடியும் அவ்வாறு பல சாதனைகளுக்கு உரியவர் றோயல் வெள்ளை இன்று 50 வயதை தாண்டியும் சற்றும் குறையாத இளமை துடிப்புடனும் உற்சாகத்துடனும் எதிரணிகளை கலங்கடித்துக்கொண்டிருக்கும் நட்சந்திரவீரர் றோயல் வெள்ளை அனுபாவம் திறமைக்கு துடிப்பு இளமைக்கு அப்பால் அனைவரின் நன்மதிப்பை பெற்றவர் மிகவும் எளிமையான மனிதர் போட்டிகளின் போது  கழகங்களுக்கிடையிலான ஏற்படும் குழப்பங்களை ஒரு வார்தையில் தனது கழகத்தைகட்டுப்பாடுத்து தன்மை இவரிடம் உள்ளது இவரை மீறி எந்த ஒரு உறுப்பினர்களும் செயற்படமாட்டார்கள் அவ்வளவு மாரியதை உரியவர் வெள்ளை  வடமாகாணத்தில் மிக சிறந்த உதைபந்தாட்ட கழகங்களில் ஊரேழு றோயல் அணியும் ஒன்று நீண்ட வரலாற்றை கொண்ட மிகசிறந்த கழகமாக விளங்கிவருகின்றது பல வருடங்காளக விளையாடிவரும் வெள்ளை தனது கழகத்தின் மேல் திரத பற்றுகொண்டவர் இதனால் தனது 3 புதல்வர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பமால் தனது கழகத்துக்காவே வைத்து விளையாடிவருகின்றார் அத்துடன் பல வீரர்களை உருவாக்கிய பெருமையும்  யாழ்மாவட்டத்தில் அதிக விருதுகளை பெற்றவர் என்ற பெருமையும் விளையாட்டுத்துறைக்கே தன்னையும் குடும்பத்தையும் அர்பணித்துவரும் என்ற பெருமையுடையவர் 


இவருக்கு வடமாகாணத்தில் அதிக ரசிகர்கள் உதைபந்தாட் ரசிகர் கூட்டம் உள்ளது ஊரேழு றோயல் வெள்ளை விளையாடும் போட்டி என்றால் அதனை பார்பதற்கு அதிகளவான ரசிகர்கள் திரளுவர்கள் இவ்வாறு பல திறமைகளை கொண்டவர் வைரமுத்து தர்மகுலநாதன் (றோயல் வெள்ளை) அவர் இன்னும் பல ஆண்டுகாலமாக உதைபந்தாட்டத்தில் சாதனை படைக்கவேண்டும் என அனைவரும் வாழ்துவோம்  

தமிழர்களின் விளையாட்டுத்துறையில் இவருக்கு என்றும் தனியிடம் இருக்கும் என்பதை நாம் பதிவுசெய்வோம் இவரின் திறமை மதிப்பு அனுபாவம் எளிமையும் இவர் தற்போழுது விளையாடிவரும் வயது  இவரின் பிள்ளைகளுடன் மைதானத்தில் விளையாடும் நுட்பம் போன்றவற்றை ஆய்வுசெய்து அவருக்குரிய அதிஉச்ச கௌரமான விருதை பெற்றுகொடுக்க விளையாட்டு துறை அதிகாரிகள் முன்வரவேண்டும் என்பதே விளையாட்டு அவதானிகளின் வேண்டுகோள்.

விவசாயி இணையத்துக்காக

ஆக்கம் எஸ்.செல்வதீபன்
Read More

July 14, 2015

விவசாய பீட மாணவனின் கண்டுபிடிப்பு
by admin - 0

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் விவசாயபீட மாணவனொருவன் அரிய கண்டுபிடிப்பொன்றை கண்டுபிடித்துள்ளார்.

தானியங்கி முட்டை பொரிக்கும் இயந்திரமொன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். விவசாயபீடத்தின் இறுதியாண்டு விவசாய இயந்திரவியல்துறை மாணவனான வாகீசன் டிவாகர் இதனை கண்டுபிடித்துள்ளார்.

இவர் யாழ்ப்பாணத்தின் கோப்பாய் பகுதியை சேர்ந்தவர்.

இதுவரை பாவனையில் உள்ள தானியங்கி முட்டைபொரிக்கும் இயந்திரங்கள் அனைத்தையும் விட தொழில்நுட்பத்தில் மேம்பட்டதாகவும், அதிக வசதிகளை கொண்டதாகவும், குறைவான விலையை கொண்டதுமாக இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.

தற்போதைய சூழலில் வடக்கிற்கு தேவையான கோழிக்குஞ்சுகள் தென்பகுதியிலிருந்தே கொண்டுவரப்படுகின்றன. யாழில் உள்ள அச்சுவேலி பகுதியிலுள்ள நிலையத்தில் கோழிக்குஞ்சு உற்பத்தி நடக்கின்ற போதும், அங்கு இந்திய தயாரிப்பான இயந்திரங்களே பாவனையில் உள்ளன. இலங்கையில் தற்போது இந்த வகை இயந்திரங்களே பாவனையில் உள்ளன.

பாவனையில் உள்ள இந்த இயந்திரத்தில் முட்டைகளை வைத்தாலும், குறிப்பிட்ட காலஇடைவெளியில் அவற்றை பக்கம் மாற்றி வைக்க வேண்டியுள்ளது. அதிக மின்சாரத்தை உறிஞ்சுபவையாக உள்ளன.

தற்போது யாழ்.மாணவன் தயாரித்த இயந்திரத்தில் அதிக வசதிகள் உள்ளன. முட்டைகளை பக்கம் மாற்றி வைக்கத் வேண்டியதில்லை. தானே அதனை செய்து கொள்ளும். இந்த இயந்திரத்திற்குள் ஒரு தடவையில் 120 முட்டைகளை வைக்க முடியும். அத்துடன் இயந்திரத்திற்குள் பகுதி ஈரப்பதனிற்கு தண்ணீர் வைக்கத் தேவையில்லை. தானியங்கி வெப்பநிலை சீர்படுத்தியை கொண்டுள்ளது.

அத்துடன் இது மிகக்குறைந்த சக்தியில் சூரியஒளியில் இயங்ககூடியது. பற்றரி மூலமும் இயக்கலாம். 12V DC மின்சாரத்தில் இயங்கக்கூடியது.

அத்துடன் இந்த இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி உணர்திறன் கருவியின் மூலம், இயந்திரத்திற்கு முன்பாக ஒருவர் சென்றாலே, வாசிப்புக்களை தானே காட்டும். மனிதர் அந்த இடத்தைவிட்டு விலகிச் சென்றால், தானே நிறுத்திக் கொள்ளும்.

இந்த இயந்திரத்தை பரிசோதித்தபோது, இதுவரை பாவனையில் உள்ள இயந்திரங்களை விட முட்டைகள் குஞ்சாகும் பொறிதன்மை அதிகமாகவும் காணப்பட்டுள்ளது. 81வீத பொறி தன்மையை கொண்டுள்ளது.

அத்துடன் இதன் உற்பத்தி செலவும் மலிவாக உள்ளது.

விரைவில் விற்பனைக்கு வருமென எதிர்பார்க்கப்படும் இந்த இயந்திரத்தை மலிவான விலையில் கொள்வனவு செய்ய முடியுமென்பது கோழிக்குஞ்சு உற்பத்தியாளர்களிற்கு ஒரு வரப்பிரசாதம் என்பதில் சந்தேகமில்லை.

புதிய கண்டுபிடிப்புக்களின் மூலம், புதிய அடையாளங்களை ஏற்படுத்தும் நம்மவர்களை உற்சாகப்படுத்துவதும் எங்கள் எல்லோரதும் கடமையுமாகும்.
Read More

July 11, 2015

இந்த வார வீரர் மதனராஜா பிறேம்குமார்
by admin - 0


வாரம் ஒரு விளையாட்டு வீரரை விவசாயி இணையம் அறிமுகம் செய்து வருகின்றது அதில் இந்த வார வீரராக தமிழர்களின் உதைபந்தாட்ட வரலாற்றில் தனக்கு என்று தனித்துமான இடத்தை பிடித்த வதிரி டையமன்ஸ் அணி வீரா் பீமா தமிழர்களின் உதைபந்தாட் வரலாற்றில் நீண்டகாலமாக முன் களவீரராக அசத்தி வரும் வடமராட்சி வதிரி டைமன்ஸ் வீரா் மதனராஜா  பிறேம்குமார் பற்றி அறிமுகத்தை தாங்கி வருகிறது இது நம்மவர்.

வடமராட்சி வதிரி கிராமம் என்றல் அங்குள்ளமக்கள்அனைவரும் உடன் கூறும் வார்தை கால் பந்து ஆட்டக்காரர்களின்  இடம் என்று அவ்வாறு நீண்ட வரலாற்றையும் வீரர்களையும் கொண்ட கிராமம்தான் வதிரி அங்குபல வீரா்கள் உருவாகினாலும் இன்றைய தலைமுறையினரின் நன்மதிப்பை பெற்ற மிகசிறந்த வீரா் யார் என்றால்  உடன் பீமா என்று கூறுவர்கள் அந்தவகையில் அவரின் உதைபந்தாட்ட திறமை அங்கு அதிக்கம் செலுத்துகின்றது.

வதிரி தேவைராளி இந்து கல்லூரியில்  கல்வி கற்ற பிறேம் குமார் தனது 12,14,16,18 ,வயது பிரிவு பாடசாலை அணியில் இடம்பிடித்து தனது திறைமையால் பல வெற்றிகளை பாடசாலைஅணிக்கு பெற்றுக் கொடுத்தார் தனது 15வயதில் வதிரி டைமன்ஸ் அணிக்கு விளையாட தகுதிபெற்றர் அன்றுதொடக்கம் இன்று வரை பீமா என்ற பெயர் உதைபந்தாட்ட ரசிகர்கள் மத்தில் பேசும்பொருளாக உலா வருகின்றது. வதிரி டைமன்ஸ் அணிக்காக அதிக கோல் அடித்தவீரா் என்ற பெருமையும் இவரை சாரும் தனது அணி் பல இக்கட்டான நிலையிலும் தனது அணிக்காக கோல் அடித்து வெற்றி பாதைக்கு அழைத்துசெல்லும் திறன் இவரின் தனித்திறைமைக்கு சான்று இவரை உருவக்குவதிலும் வழிகாட்டியாக சிறுவயது முதல் இன்றுவரை அந்த அணியின் வீரா் அரவிந்தனுக்கு முக்கிய பங்கு உண்டு இவர்கள் இருவருமே நீண்டகாலமாக டைமன்ஸ் அணியின் முன்கள வீரா்களாக விளையாடி வருகின்றனார்.

இப்படியான நமது வீரர்களை உலகுக்கு நாங்கள் அறிமுகம் செய்வதில் பெருமை கொள்வோம் அத்துடன் உங்கள் ஊர் வீரர்களை அவர்களின் வீரதிறமைகளை எமக்கு அனுப்பி வைத்தால் உலகுக்கு அவர்களை அறிமுகம் செய்து வைப்போம்



ஆக்கம் எஸ் . செல்வதீபன் 
Read More

July 04, 2015

இது நம்மவர் வாரம் ஒரு விளையாட்டு வீரர் -சிறி சிதம்பரலிங்கம் தயானி
by admin - 0


துப்பாக்கி என்றாலே அலறி ஒடும் நம்மவர்கள் மத்தியில் துப்பாக்கி சுடும் போட்டியில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்து இன்று சர்வதேசத்தில் தடம்பதிக்கும் தமிழ் வீராங்கனை தயானி
வடமராட்சி அத்தாய் கிராமத்தைச்சேர்த்த சிறி சிதம்பரலிங்கம் தயானி நெல்லியடி மத்திய கல்லூரி மாணவியான இவர் சிறுவயது முதல் விளையாட்டுக்களில் அதிக ஆர்வம்கொண்டவர். 



இதன் பயனாக பாடசாலை, கோட்டம் ,வலயம் ,மாவட்டம் ,மாகாணம் தேசியம் ,என்று படிபடியாக முன்னேறி இன்று விளையாட்டுத்துறையில் தொடர்த்தும் சாதனை படைத்துவருகின்றார்.

தனது பாடசாலை அணிகளான தடகளம்,மட்டைப்பந்து, உதைப்பந்து கபடி, வலைப்பந்து, எல்லை பூப்பந்து கரம் என்று அனைத்து விளையாட்டுக்களிலும் சிறந்த வீராங்கனையாக திகழ்துவருகின்றார்.


 அத்துடன் தனது சொந்த விளையாட்டுக்கழகமான மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகத்திலும் மேற்படி போட்டிகளிலும் சிறந்துவிளங்கியதுடன் தனது கழகத்தையும் பெருமைப்பாடுத்திவருகின்றார்.
கடந்த வருடம் இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் தடவையாக பங்குபெற்றி தேசியமட்டத்தில் 2ம் இடத்தைபெற்றுதேசியஅணியில் இடம்பிடித்தார்.


கடந்த வருடம் நவம்பர் மாதம் இவரது பாடசாலையேச்சேர்ந்த குமாரவேல் பிரதீபா என்ற இன்னோரு வீராங்கனையுடன் இணைந்துபோலாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச பாடசாலைவீரார்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டிக்கு இலங்கை சார்பாகபங்குபெற்றுவதற்கு விளையாட்டுத்துறை  அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
பின்னர்அந்த சுற்றுப்பயணம் விளையாட்டுத்துறை அமைச்சினால் 
கைவிடப்பட்டது 
தற்போது துப்பாக்கி சுடும் பயிற்றுவிப்பாளர் பயிற்சிக்கு இலங்கைசார்பில் தெரிவான மகளிர் ஆறு பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார்.

 இந்த அணியிலுள்ளஒரேயொரு தமிழ் வீராங்கணை இவர்தான் இலங்கையில் நடைபெறவுள்ள ஆசிய கனிஷ்ட மெய்வல்லூனர் போட்டிகளில் பங்குபெற்றும் வீரர்களுக்கு பயிற்சிவழங்குவதற்கான தாயார்ப்படுத்தல்களுக்கே அமெரிக்கா செல்லவுள்ளர். 

 தயானி போன்ற வடக்கு கிழக்கு மாகாணங்களில் இலைமறைவாக அதிகமான திறமையான வீரர்கள் உள்ளபோதும் உரிய விளையாட்டு மைதானம் உபகரணங்கள் பயிற்சியாளர்கள் உக்கிவிப்புக்கள்
 இன்றி பலவீரர்கள் காணாமலே போகின்றார்கள்.


 எனவே எதிர் வரும் காலங்களில் அதிகளவான தமிழ் வீரர்கள் சர்வதேச போட்டிகுக்கு செல்வாதற்கு உரிய தரப்பினார் அக்கறைகட்ட முன்வரவேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பும்.

ஆக்கம் எஸ். செல்வதீபன்
Read More