Latest News
Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

March 15, 2019

பிரியங்க பெர்னாண்டோதப்பிக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்
by admin - 0

பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் உள்ள சிறிலங்காதூதரகத்திற்கு எதிரில் சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திரத் தினம் கொண்டாடப்பட்ட 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை நோக்கி “கழுத்தை அறுக்கும்” சைகையை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்குஎதிராக தொடரப்பட்ட வழக்கு மார்ச் 15 ஆம் திகதியான இன்றைய தினம் விசாரணைக்குவந்தது.இந்த விசாரணைகள் இடம்பெற்ற போது நீதிமன்றத்திற்கு வெளியில்திரண்டிருந்த புலம்பெயர் தமிழர்கள், “கழுத்தை அறுக்கும்” சைகையை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோதப்பிக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.





















சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்கபெர்னாண்டோவுக்கு எதிராக இடம்பெறும் இந்த வழக்கு விசாரணை, 2018 பெப்ரவரி 4 ஆம் திகதி இலண்டனிலுள்ள சிறிலங்கா தூதரகத்திற்கு எதிரில்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மூன்று இளைஞர்களால் தொடர்ந்த வழக்கு தொடர்பானவிசாரணையே இலண்டன் வெஸ்ற்மினிஸ்டர் நீதிவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்றது.இந்த வழக்கை இந்த ஆண்டு பெப்ரவரியில் விசாரணைக்குஎடுத்திருந்த வெஸ்ட்மினிஸ்டர் நீதிவான் நீதிமன்றம் பிரிகேடியர் பிரியங்கபெர்னாண்டோவை குற்றவாளியாக அடையாளப்படுத்தியதுடன், அவரைகைதுசெய்யுமாறும் பிடியாணை பிறப்பித்தது.






எனினும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்குஇராஜதந்திர தண்டனை முக்தி இருப்பதாக சிறிலங்கா வெறிவிவகார அமைச்சு, பிரித்தானியவெளிவிவகார அமைச்சின் ஊடாக தெரியப்படுத்திய நிலையில் அவர் மீதான பிடியாணையை வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் மீளப் பெற்றுக்கொண்டது.எவ்வாறாயினும் மார்ச் முதலாம் திகதி இடம்பெற்ற வழக்கவிசாரணையின் போது சிறிலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு அதிகாரியாககடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் கழுத்தை அறுக்கும் சைகையைகாண்பித்து அச்சுறுத்திய நடவடிக்கை அவரது இராஜதந்திர கடமையுடன் தொடர்பில்லை என்றுநீதிமன்றம் அறிவித்தது.இந்த நிலையில் இன்றைய தினம் இந்த வழக்கு மீண்டும்விசாரணைக்கு வந்தபோது, லண்டனுக்கான சிறிலங்கா உயர்ஸ்தானிகர்அலுவலகத்தின் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணிகள் தமது பக்க நியாயத்தை தெளிவுபடுத்தினர்.







இதன்போது நீதிமன்ற விசாரணைகளில் தொழில்நுட்பட குறைபாடுகள்இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டதற்கு அமைய அதனை ஏற்றுக்கொண்ட நீதவான், பிரிகேடியர்பிரியங்க பெர்னாண்டோ “கழுத்தை அறுக்கும்” சைகையை காண்பித்தன் ஊடாக அச்சுறுத்தல் விடுத்த  வழக்கை மீண்டும் மே மாதம் 7 திகதி எடுத்து விசாரிப்பதற்காக நீதிமன்றம் அறிவித்துள்ளது அதன்படி பிரிகேடியருக்கு எதிரான வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 



Read More

February 25, 2019

காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவாக லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
by admin - 0

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து  புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானியானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.



காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி வடக்கு கிழக்கு இணைந்து இன்று கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துகின்ற நிலையில் அதற்கு ஆதரவு தெரிவித்து அவர்களின் குரலாக சர்வதேச அரங்கி ஒலிக்கும் வகையில் லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 




லண்டன் வெஸ்மினிஸ்டர் இலக்கம் 10 இல் அமைந்துள்ள பிரித்தானிய பிரதமரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்திற்கு முன்னால் காலை 10 மணியளவில் ஒன்று திரண்ட பெருமளவிலான மக்கள் சர்வதேசமே காணமல் போன எமது உறவுகளின் விடயத்தில் கால நீடிப்பு வேண்டாம் சர்வதேச விசாரணை வேண்டும் என கோசங்களை எழுப்பியவர்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Read More

February 11, 2019

இலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு!
by admin - 0

இலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு!



சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்றழிக்க பட்டுக்கொண்டிருந்த போது “சர்வதேசமே ஈழத்தமிழர்களைக் காப்பாற்று” என உரத்து குரல்கொடுத்தவாறு தீயிற்கே தன்னை இரையாக்கிய மாவீரன் ஈகைப்பேரொளி முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலண்டனில் வணக்க நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது.

பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் Holders Hill Rd, London NW7 1NB எனும் முகவரியில் அமைந்துள்ள ஈகைப்பேறொளி முருகதாசன் உட்பட்ட 21 தியாகிகள் நினைவுக் கல்லறையில் “ஈகைப்பேரொளி” முருகதாசன் தியாகமரணமடைந்த நாளான 12-02-2019 அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணிவரை மேற்படி நிகழ்வு நடைபெறவுள்ளது.

மொழி மீதும், மண் மீதும், பற்றுக்கொண்டு தன் இனத்தின் சுதந்திர வாழ்விற்காக தன்னையே அர்ப்பணித்த அந்த உன்னத தியாகியின் நினைவு நாளில் நடைபெறும் இந் நிகழ்வில் அனைத்து மக்களும் கலந்துசிறப்பிப்பதே சிறந்த மரியாதையும், அஞ்சலியுமாகும்.

உலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம்
பெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும், போராட்ட
குணத்தையும் விட்டுச் சென்ற ஈகப்பேரொளி முருகதாசன், சுவிஸ்லாந்தில், ஜெனிவா
ஐக்கிய நாடுகள் மனித அவையின் முன்றலில் முன்பாக 2009 மாசி 12ம் திகதி
அன்று இரவு இன அழிப்பிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்றக்கோரி
தீக்குளித்தார்.

“7 பக்கங்களுக்கு உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தமிழீழத்தின் விடியலுக்காக தீயில் வீரகாவியமானவரே “ஈகைப்பேரொளி” என போற்றப்படும் வர்ணகுலசிங்கம் முருகதாசன் அவர்கள் ஆவார்.

-ஈழம் ரஞ்சன்-
Read More

February 04, 2019

ஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
by admin - 0

ஶ்ரீலங்காவின்  சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 







காலணித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்ட இலங்கை இன்று 71 ஆவது சுதந்திரத்தினத்தினை கொண்டாடுகின்ற நிலையில் அதனை தமிழர்களின் கரி நாளாக அனுஷ்டித்து தொடரும் இன அழிப்புக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கும் எதிராக பெரும் திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இலங்கை தூதரகத்தின் முன்னாள் காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்பாட்டத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது பெருமளவிலானோர் ஒன்றுதிரண்டுள்ளதுடன் பறை இசை முழக்கங்களுடனும் தேசியக்கொடிகளை கைகளில் ஏந்தியவாறும் இலங்கை அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பிவருகின்றனர்.



இதேவேளை கடந்த ஆண்டு சுதந்திர தின சம்பவத்தினையடுத்து இம்முறை குறித்த பகுதியில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. 





கடந்த ஆண்டு (2018) இதே நாளில் சுதந்திர தினத்தின ஆர்ப்பாட்டத்தின் போது அப்போதைய தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியாகவிருந்த பிரியங்க பெர்ணான்டோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை பார்த்து கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.






இது தொடர்பிலான வழக்கும் தற்போது வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.














தூதர்க பெண் ஊழியர் ஆர்ப்பாட்டக்காரர்களை புகைப்படம் எடுக்க முயன்றதால் முறுக்க நிலை 

லண்டனில் இலங்கை தூதரகத்தின்  முன் நடைபெற்றுவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது தூதரக்கத்தின் பெண் ஊழியர் ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களை தனது கமராவில் படம் பிடிக்க முயன்றபோது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் குறித்த ஊழியருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது

Read More

January 29, 2019

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் மரபுத்திங்கள் 2019
by admin - 0

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் மரபுத்திங்கள் 2019



நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் தமிழ் மரபுத் திங்கள் (பொங்கல் திருநாள்), 19ம் திகதி ஜனவரி 2019 சனிக்கிழமை அன்று விமர்சையாக இலன்டனிலுள்ள Archbishop Tenison High School, Selborne Road, CR0 5JQ எனும் இடத்தில் பொதுமக்கள் மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தன்னார்வத் தொண்டர்கள் உள்ளிட்டோரின் பங்களிப்புடன் இனிதே நடைபெற்றது.

இவ் விழாவில் உலகத் தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் விதமாக பொங்கல் பொங்குதல் மற்றும் கலைநிகழ்வுகள் ஆகியன நடைபெற்றிருந்தன.

இந்நிகழ்வின் முதல் நிகழ்வாக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்திலே பொங்குவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு பொங்கல் பொங்குதல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிரித்தானிய தேசியக்கொடி, தமிழீழ தேசியக்கொடி ஆகியன தேசிய கீதம் இசைக்கப்படுகின்ற நேரத்தில் ஏற்றப்பட்டன.



அதனைத் தொடர்ந்து கலைநிகழ்வுகள் யாவும் ஆரம்பமாகியது. கவிதை, பேச்சு, நடனம், நாடகத்துடன் கூடிய நடனம், பாடல்கள், இசைக்கருவி வாசித்தல், என்பன இடம்பெற்றன. எமது கலை கலாச்சார பண்பாடுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டியதன் தேவை அறிந்து இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளில் பங்கு கொண்ட 130 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. கலையை வளர்க்கும் நோக்கத்தோடும், ஈழத்தமிழர்களின் வலிகளை காட்சிகளாக்கிய நடனங்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கு கேடையமும் மதிப்பளிப்பும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இந் நிகழ்வில் பிரதம அதிதியாக Croydon Mayor Hon Bernadette Khan கலந்து கொண்டு பொங்கல் பானையில் அரிசி போட்டு பொங்கலை தொடங்கி வைத்தார், Croydon North பாராளுமன்ற உறுப்பினர் Stev Reed, Croydon Central பாராளுமன்ற உறுப்பினர் Sarah Jones, Sutton and Cheam பாராளுமன்ற உறுப்பினர்கள் Paul Sclly, Croydon Broad Green Labour councillor Muhammad Ali, West Thornton Labour Councillor Janet Campbell, Councillor Jamie Audsley Bensom Menar,  Chetharine CLS Chair, தமிழ்த்திரு. பெ. மணியரசன் தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைவர் தமிழ் நாடு, Dr.Jeyanthan, Devidthayaparan Solicit, Mrs Sujeetha Kirubakaran Solicitor ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இறுதியாக பொங்கல் விழாவிற்காக அச்சிடப்பட்டு விற்பனைசெய்யப்பட்ட நல்வாய்ப்புச் சீட்டிழுப்பு (Raffles) குழுக்கப்பட்டு வெற்றி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டது.

இதன் வெற்றி இலக்கங்களாக 1வது வெற்றி இலக்கமாக 2625, 2வது வெற்றி இலக்கமாக 0505,  3வது வெற்றி இலக்கமாக 6443 இதன் வெற்றி இலக்கங்களை பெற்றுக்கொண்டவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அலுவலகத்தில் பெப்ரவரி மாதம் இறுதிக்குள் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் அறியத்தருகின்றோம்.

இறுதியாக கொடி கையேந்தலுடன் உறுதிமொழி ஏற்புடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
Read More

November 07, 2018

பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் 11 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு
by admin - 0

அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரகாவியமான ஆறுவேங்கைகளின் 11 ஆம் ஆண்டு நினைவு வணக்கமும் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி அவர்களின் 3 ஆவது வருட நினைவு நிகழ்வும் பிரித்தானியாவில் நினைவு கூறப்பட்டது.



பிரித்தானியா வாழ் புலம்பெர் இளையோரின் ஏற்பாட்டில் ஹரோவில் நடைபெற்ற இந்த உணர்வுபூர்வ நினைவஞ்சலி நிகழ்வில் பெருமளவிலானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.











கடந்த 2007 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 02 ஆம் திகதி கிளிநொச்சி சமாதான செயலகம் மீது இலைங்கை வான்படையினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் மற்றும் லெப்.கேணல் அன்புமணி, மேஜர் மிகுந்தன், மேஜர் கலைச்செல்வன், மேஜர் செல்லத்தம்பி, லெப் ஆட்சிவேல், லெப். முல்லைக்குமரன் ஆகியோர் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டனர்.

Read More

June 29, 2018

வீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்
by admin - 0

தாயகத்தில்  வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு   நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்களுக்கு  துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு



 *இரண்டாவது* *கட்டமாக* இன்று வெள்ளிக்கிழமை (29/06/2018)
 மாலை *3.00 மணிக்கு* 
 *முப்பது துவிச்சக்கர* வண்டிகள் *மட்டக்களப்பில்* உள்ள  முதலைக்குடா கொக்கட்டிச் சோலை என்னும் இடத்தில் 

வீரத்தமிழர் முன்னணியினரால்  உதவி வழங்கல் நிகழ்வு நடைபெற்றுள்ளது. 
*வீ,த.மு* 
 *VTM* 
 *UK* 
  🙏
தொடர்புகளுக்கு வீ,த,முன்னணி ஐக்கியராச்சியம்
 *07436287931/2/3/5*
Charity number 1178947















Read More

May 18, 2018

தாய் தமிழக உறவுகளுக்கு, இன மொழி ரீதியாக ஒன்றிணையுங்கள்; மறுபடியும் உலகை ஆள்வோம்
by admin - 0

தாய் தமிழக உறவுகளுக்கு, இன மொழி ரீதியாக ஒன்றிணையுங்கள்; மறுபடியும் உலகை ஆள்வோம்.
----------------------------------------------------------



மே 18 தமிழின அழிப்பு நாளாகும்...
அன்றைய நாளில் மட்டும் முள்ளிவாய்க்காலில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட உங்கள் தொப்புள்கொடி உறவுகளிற்காக ஒருநாளாவது கேளிக்கை, களியாட்ட நிகழ்வுகள் போன்றவற்றைத் தவிர்த்து...

மாறாக

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக கருத்தரங்குகள், நினைவஞ்சலிக் கூட்டங்கள்  மற்றும் அந்த மக்கள் சார்ந்த நினைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அதுவே அந்த இறந்த ஆன்மாக்களுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரும் புண்ணியம் ஆகும்.

தற்போது தமிழகத்தில் "மே18" என்ற "தமிழின அழிப்பு தினத்தை" பெரிதாக நினைவு கூறவிடாமல் தடுப்பதற்காக பல புல்லுருவிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். 

குறிப்பாக ரஜினிகாந்த் அவர்கள் ஈழத்தமிழர்களின் முக்கிய பெரும் நினைவு தினங்களில் எல்லாம் தனது ரசிகர்களைச் சந்தித்து அர்த்தமற்ற செயற்பாடுகளை முன்னெடுப்பது மற்றும் போலித்தனமாக அறிக்கைகளை வெளியிடுவது போன்ற கேலிக்கூத்துகளை நிகழ்த்தி வருகிறார்.

ஒரு போலியான திரைப்பட நடிகனை தமது பெற்றோர்கள் மற்றும் தெய்வங்களை விட உயர்ந்தவர்களாக பார்க்கும் மூடர் கூட்டம் உலகத்தில் தமிழ்நாட்டை விட வேறு எங்கும் இல்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். இந்த மூடர்களெல்லாம், கைக்கெட்டும் தூரத்தில் இறந்த போன அந்த மக்களின் ஆன்மாக்களுக்கு சின்ன நினைவஞ்சலி செய்யக்கூட துப்பில்லை; என்பது அதைவிடக் கேவலம்!!



தறுதலைத் தலைவன் எவ்வழியோ, அவ்வழியே மானங்கெட்ட ரசிகர் மந்தைகளும்.

இதுதவிர...

தமிழின எதிர்ப்பாளர்கள் பலரும் "மே18" என்ற பெரும் வரலாற்று நினைவு தினத்தை அனுஷ்டிக்க விடாமல் வேறு விடயங்களில் கவனங்களைத் திருப்புவதற்கு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக திரைப்படங்கள் வெளியிடுதல் மற்றும் கேளிக்கைகள் நடத்துவது மற்றும் தொலைக்காட்சிகள் ஊடாக கூத்து நிகழ்வுகளை அன்றைய நாளில் நடத்தி மக்களை வேறு பக்கத்தில் திசை திருப்புவது.

காரணம், உலகத்தில் தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் மட்டுமே திரைப்பட நாயகர்களை தெய்வங்களுக்கு நிகராக வணங்கிக் கொண்டாடுவதை வைத்து  உளவுத்துறையினர் மற்றும் தமிழின எதிர்ப்பாளர்கள் பலர் தமிழக இளைஞர்களை இன ரீதியாக ஒன்றுபட விடாமல் மேற்கண்ட விடயங்களை முன்னெடுப்பதால் தடுக்கலாம் என நினைக்கிறார்கள். அதற்கு தமிழக இளைஞர்களும் இடம் வகுத்து கொடுக்கிறார்கள்.

தமிழக மக்கள் இன, மொழி ரீதியாக ஒன்றிணைந்தால் இவர்களை விட பலமிக்க இனம் உலகில் வேறெங்கும் இல்லை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? உலகில் அதிமூளை கூடிய யூத இனத்தைவிட   அதிக பலம் வாய்ந்த அறிவு கூடிய இனம் தமிழினமே! உதாரணமாக சாதி, மத பேதங்களை மறந்து இன மொழி ரீதியாக ஒரு தலைவனின் கீழ் ஒன்றுபட்டு பெரும் வரலாறு படைத்த ஈழத்தமிழர்களே ஓர் எடுத்துக்காட்டு.

அந்த ஈழத்தமிழர் போல் தமிழ்நாட்டுத் தமிழர்களும் இன மொழி ரீதியாக ஒன்றிணைந்தால் இவ்வுலகில் வல்லரசு நாடுகளையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு அறிவியல் மற்றும் போரியல் வரலாற்றைப் படைத்துவிடுவார்கள் என்ற அச்சமே பல சர்வதேச நாடுகளுக்கு இன்றுவரையும் உறுத்தலாக உள்ளது.

அதனாலேயே இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் உருவாகும் எழுச்சிகள், போராட்டங்களை இந்திய அரசுடன் சேர்ந்து மறைமுகமாக சர்வதேசமானது அடக்கி வருகிறது. அத்துடன் இந்திய அரசும் இன்றுவரை தமிழகத்தை வஞ்சித்தே வருகிறது. (உ+ம் காவேரி பிரச்சனை மற்றும் இலங்கை அரசால் கொல்லப்படும் மீனவ பிரச்சனை இன்னும் பல)

கடந்த காலங்களில் ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களுடன், மக்களும் ஒன்றிணைந்தது உலகளாவிய ரீதியில் பெரும் தாக்கத்தை உருவாக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  இதே போன்ற இனியொரு கட்டத்தை உருவாக்க விடக்கூடாது என்பதிலேயே இந்திய உளவு அமைப்புக்கள் மும்முரமாக இயங்கி வருகின்றன.

சில இலட்சம் ஈழத்தமிழர்கள் ஒன்றிணைந்து சொற்ப வளங்களை வைத்து வென்றுகாட்டி பெரும் வரலாறு படைத்தது போல், பல கோடி தமிழ்நாட்டு தமிழர்கள் பல வளங்களை வைத்து இன மொழி ரீதியாக ஒன்றுகூடினால், தமிழகம் உலகிலேயே முதன்மை நாடாக வந்து விடும் என்ற அச்சம் காரணமாகவே ஈழத்தமிழர் போராட்டத்தை சிங்கள அரசுடன் சேர்ந்து உலக வல்லரசுகள் அழித்தது போல் தமிழகத் தமிழர்களின் இன மொழி ரீதியான ஒன்றுசேரலை தடுப்பதிலேயே மத்திய மாநில உளவுத்துறையினர் பல வகைகளில் வேகமாக செயற்பட்டு வருகின்றனர்.

அதற்கு தமிழகத் தமிழர்களின் திரைப்பட மோகம், மட்டைப்பந்து (கிரிக்கெட்) மோகம் மற்றும் களியாட்ட கேளிக்கை மோகங்களை வைத்து அத்துடன் சாதி மத வெறியையும் தூண்டி ஒரு போதைநிலையில் வைத்திருப்பது. 

இதை எப்போது தமிழக மக்கள் உணர்ந்து என்று வெளிவருகிறார்களோ அன்றுதான் தமிழகத்திற்கு சுபிட்சம் கிடைக்கும்.

ஆனால், முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் பின் திரு. சீமான் அவர்களால்  தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் ஈழத்தமிழர் போராட்டத்தின்பால் உள்ள நீதி நியாய தர்மங்கள் எடுத்துச் செல்லப்பட்டது. தமிழக இளைஞர்கள் மத்தியிலும் ஒரு எழுச்சி உருவாகியது. அத்துடன் நின்றுவிடாமல் "மாவீரர் நாள்" நிகழ்வும் வருடா வருடம் நினைவுகூறப்பட்டு வருகிறது. மற்றும் ஈழத்தமிழர் போராட்டம் சார்ந்த பல நிகழ்வுகளும் மெதுமெதுவாக தமிழகத்தில் பரவி வருகிறது. இது இந்திய உளவுத்துறையினருக்கு பெரும் தலைவலியை உருவாக்கி விட்டுள்ளது.

இவ்வேளையில் வருகிற மே18 அன்று நாம் தமிழர் கட்சியினரால் முன்னெடுக்கபடவுள்ள பெருமெடுப்பிலான "முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு தினம்" ஆனது இன்னும் பல தமிழக இளைஞர்களையும் மக்களையும் இன மொழி ரீதியாக ஒன்றிணைத்து விடும் என்றே உளவுத்துறையினர் கருதி மக்கள் ஒன்றிணைவதை தடுக்கும் வகையில் வேறு வகையான வழிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உதாரணமாக மே18 அன்று வெளிவரும் விஜய் அண்டனியின் "காளி" திரைப்படம் போன்றவை. 

தமிழின அழிப்பு நாளான மே18 அன்று உலகத் தமிழர்கள் அனைவரும்  "தமிழின அழிப்பு நாளாக" நினைவு கூறப்பட்டு வரும் நிலையில் திருச்சியில் பிறந்த விஜய் அண்டனி தன் படத்தை வெளியிடுவதென்பது எதைக் குறிக்கிறது?

ஆகவே தமிழர்கள் அனைவரும் மே 18 ஆன அன்றைய தினத்தை "தமிழின அழிப்பு நாளாக" நினைவு கூர்ந்து மற்றைய நிகழ்வுகளை புறக்கணியுங்கள். 

உலகை ஆண்ட தமிழர் பரம்பரையில் வந்த நாம் இன மொழி ரீதியாக ஒன்றிணைந்து மறுபடியும் உலகை ஆள்வோம்.

- வல்வை அகலினியன்

Read More

April 19, 2018

இலண்டனில் மைத்திரிக்கு எதிராக தமிழர்கள் போராட்டம்
by admin - 0

பிரித்தானியாவில் நடைபெறகின்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருந்த இனப்படுகொயைாளியும் சிறீலங்கா அதிபருமான மைத்திரிபால சிறீசேனவுக்கு எதிராக பிரித்தானியா வாழ் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.






இன்று வியாழக்கிழமை பிற்பகல் 13.00 மணியளவில் ஒன்றுகூடிய தமிழர்கள் மைத்திரிக்கு எதிராக கொட்டொலிகளையும் சுலோகங்களையும் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டதை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.






































Read More