Dropdown Menu
December 19, 2018
நினைவு மனித உரிமைகள் மகாநாடு - தமிழர் தகவல் நடுவகம்
by
admin
11:35:00
-
0
March 28, 2018
எதிர்வரும் வெள்ளிக்கிழமை உலகை நோக்கி வரவுள்ள பேராபத்து
by
admin
21:46:00
-
0
சீனாவின் விண்வெளி ஆய்வு மையம் சில நாட்களில் பூமியில் விழக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை அளவில் இந்த சீன விண்வெளி மையத்தின் துகள்கள் பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் 30ஆம் திகதி முதல் 2ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த விண்கலம் பூமியைத் தாக்கும் என குறிப்பிடப்படுகிறது.
Tiangong-1 என்ற விண்வெளி மையமே இவ்வாறு பூமியின் ஏதேனும் ஓர் பகுதியில் விழக்கூடிய ஆபத்து காணப்படுகின்றது.
இதேவேளை, 2022ம் ஆண்டில் ஆய்வாளர்களுடன் விண்வெளிக்கு சென்று ஆய்வுகளை நடத்துவதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
November 18, 2017
2004 சுனாமி வரும் என்று சென்னவர் மீண்டும் சுனாமி வரும் என அறிவிப்பு -பீதியில் மக்கள்
by
admin
08:56:00
-
0
இந்தோனேஷியாவில் அதிகளவில் திமிங்கலங்கள் கடற்கரை நெருங்கி வருவதாகவும், மேலும் மலேசியா பினாங்கு கடற்கரை மீனவர்கள் வலையில் வழக்கத்திற்கு மாறாக பல டன் மீன்கள் கடலில் சிறு பகுதியிலேயே கிடைப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
இவை கடலில் ஏதோ ஒரு இயற்கை பேரிடருக்கான எச்சரிக்கையாக இருக்கலாம், மேலும் இலங்கையில் கடல் உள்வாங்கி இருப்பதாக கூறுகின்றனர்.
இதற்கு முன்னதாக கடந்த சில மாதங்களாக வதந்தி என்று சொல்லி, மீண்டும் சுனாமி 2017, டிசம்பர் 31க்குள் வருவதாக ஒரு தகவல் வெளியானது.
அதில் சரியான தேதி மட்டும் குறிப்பிடப்பட வில்லை. ஆனால் இந்தமுறை முன்பை விட “பலமடங்கு” அளவில் பெரியது என்பது தான் அதிகாரப் பூர்வமான தகவலாக இருந்தது.
11 நாடுகளை கடுமையாக பாதிக்கக் கூடியதாக இருக்கும் என்றும, இந்தமுறை சுனாமி ஆக்ரோஷமாக ஆரம்பிப்பதே இந்தியப்பெருங்கடலில் இருந்து தான் என்றும் கூறப்பட்டது.
இந்த தகவலைத் தெரிவித்தவர் Thiruvandrum Forest Wala, Tamilnadu Border, B.K.Research Association – Director Mr.BabuKalayil, என்பவர்.
இவர்தான் 2004-லும் சுனாமி வருவதற்கு முன்பாகவே தகவல் தெரிவித்தவர். அப்போது இந்தியாவே அறிந்திராத சுனாமி என்பதால் யாரும் கவனம் கொள்ளவில்லை.ஆனால் சுனாமிக்குப் பின்னரே இவர், முன் அறிவிப்பு கொடுத்தற்காக பாராட்டுப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்தான் தற்போது “வருமுன் காப்பதே சிறந்தது” என்பதற்காக இந்த தகவலைத் தெரிவித்ததுடன்,
இரு மாநில முதல்வர்களுக்கும் கடந்த 20.09.2017 அன்றே அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தி உள்ளார்.
இந்த தகவலின் உண்மை தன்மை இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இருந்த போதிலும் பேரிடர் மேலாண்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால், தாங்களாகவே தற்காத்து கொள்ளும் திறனாவது மக்களிடையே வளரும்.
இயற்கை சீற்றத்தை மனிதனால் தடுக்க முடியாது. ஆனால் தகுந்த முன்னறிவிப்பு இருந்தால் நிச்சயம் தற்காத்துக் கொள்ள முடியும்.
September 10, 2017
லண்டன் கிரெடிட் ஸ்கோர் நிறுவனத்திற்கே ஆப்பு வைத்த ஹக்கர்: 44 மில்லியன் திருட்டு.
by
admin
09:38:00
-
0
June 15, 2017
உண்மையிலேயே வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா? திங்கள் தெரியவரும்!
by
admin
11:56:00
-
0
மனிதன் பல நூற்றாண்டு காலமாய் தேடிக் கொண்டிருப்பது வேற்றுக் கிரக வாசிகள் உண்மையிலேயே இருக்கிறார்களா இல்லையா என்ற கேள்விக்கான ஆதாரப்பூர்வமான பதிலை.
பூமிக்கு வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டு மூலமாக வந்ததாகவும் பரபரப்பான தகவல்கள் அவ்வப்போது வெளியாவது உண்டு.
இதுகுறித்து பல ஆயிரம் பேர் ஆய்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பறக்கும் தட்டுகள், படங்கள்
நான் பார்த்தேன்... என்னிடம் ஆதாரம் உள்ளது என பல ஆயிரம் பேர் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
வேற்று கிரகவாசிகள் குறித்து ஏராளமான பிரமாண்டப் படங்கள் வெளியாகி வசூலைக் குவித்து வருகின்றன.
ஆனால் இதுவரை வேற்று கிரகவாசிகள் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ச்சி செய்து முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை.
நாசா ஆய்வு
இந்த ஆய்வில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா. இதில் உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியப்படக்கூடிய பல கிரகங்களை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதற்கான விடை அநேகமாக வரும் திங்கட்கிழமை தெரிந்துவிடும்.
இதுகுறித்த ஆய்வு முடிவுகளை வரும் திங்களன்று வெளியிடப் போவதாக நாசா அறிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு (இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு) இதனை நாசா அறிவிக்கிறது.
பெரும் எதிர்ப்பார்ப்பு
நாசாவின் இந்த அறிவிப்பு பெரும் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. விண்வெளி, வேற்றுக்கிரகவாசி ஆர்வலர்கள் இதுகுறித்து பல்வேறு கருத்துகளை, யூகங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
- Valampuri
June 03, 2017
அந்தாட்டிக்காவில் இரகசிய உலகம்- தாக்குதல் நடத்த அமெரிக்கா தயார்
by
admin
13:48:00
-
0
உலகம் முழுவதும் ஆய்வாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக இருப்பது அந்தாட்டிக்கா குறித்த மர்மங்களே.
ஒரு தரப்பினர் முற்றாக பனியின் மத்தியில், அல்லது கீழ் இரகசிய உலகம் இருக்க வேண்டும் என நிச்சயமாக நம்பி வருகின்றனர்.
என்றாலும் அசாதாரணமான நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் முன்னர் இதனை நரூபிப்பதற்காக பல ஆதாரங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்பது அறிஞர்களின் கூற்று.
அந்த வகையில் அந்தாட்டிக்காவில் ஓர் இரகசிய உலகம் இருப்பது தொடர்பில் அன்றாடம் பல செய்திகளும் புகைப்படங்களும் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
ஜெர்மனியில் 20ஆம் நூற்றாண்டில் நாசிசம் என்ற கொள்கை அதி உச்ச வளர்ச்சியில் இருந்தது. நாசியர்கள் மட்டுமே உலகை ஆழத்தகுந்தவர்கள் என்ற கொள்கை அவர்களுக்கு இருந்தது.
நாசிக்கள் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியவர்கள். அவர்களுடைய காலத்தில் செய்யப்பட்ட பல இரகசிய திட்டங்களில் ஒன்றே பேஸ் 211 எனப்படும் திட்டம். அது அந்தாட்டிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
அந்தாட்டிக்காவின் நிவ் ஸ்வாபியா (new swabia) அமைக்கப்பட்ட இந்த இடத்தை, துருவப் பகுதி தொடர்பிலான நீண்ட ஆய்வுப் பயணத்தினை மேற்கொண்ட புவியியலாளர்கள் கண்டு பிடித்தனர்.
அந்தப் பகுதியில் வெந்நீர் ஊற்றுக்களும், தாவரங்களும் நிறைந்த அதி உயர் தொழில்நுட்பத்தோடு கூடிய மர்மத் தளம் ஒன்று அடையாளம் காணப்பட்டு அதற்கு ஸ்டேஷன் 211 எனப் பெயரிடப்பட்டது.
என்றாலும் அதன் பின்னர் இது குறித்து செய்திகள் எதுவும் அதிகமாக வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பலர் இவற்றினை ஓர் வதந்தியாகவே சித்தரித்தனர்.
இதேவேளை இவ்வாறான ஓர் தளம் தொடர்பில் ஏற்கனவே இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் 1946 - 1947களில் அட்மிரல் ப்ரைட் (Admiral Byrd) எனும் துருவ கண்டுபிடிப்பாளர் பேஸ் 211 இருப்பதை உறுதி செய்தார்.
அதன் பின்னர் அமெரிக்கா Operation Highjump எனப்படும் ஓர் திட்டத்தை கொண்டு வந்தது. இது அந்தாட்டிக்காவில் உள்ள இரகசியத் தளமான பேஸ் 211இனை கண்டுபிடித்து அழிப்பது தொடர்பாகவே இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அந்தத் திட்டத்தில் 13 கப்பல்களும், 1 விமானம் தாங்கி கப்பலும், விமானங்களும், 2 நீர் மூழ்கிக் கப்பல்களும், 4700 படை வீரர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தனர். இந்தப் படை அந்தாட்டிக்காவை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பேஸ் 211 குறித்து செய்திகளை அமெரிக்கா வெளியிட மறுத்துவிட்டது.Operation Highjump என்பது ஓர் பயிற்சி நடவடிக்கை எனவும் கூறி இரகசியங்கள் மூடப்பட்டன.
இன்று வரை அவை பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை. தற்போதும் அந்தாட்டிக்காவின் Neuschwabenland மலைத்தொடருக்கு கீழ் ஓர் இரகசியத் தளம், அதி உயர் தொழில்நுட்பம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டு கொண்டே வருகின்றனர்.
அதேபோல் இந்தத் தளம் குறித்து அமெரிக்கா அறிந்துள்ள போதும், தகவல் வெளியிட மறுத்து வருகின்றது. மேலும் அந்தாட்டிக்காவின் பல பகுதிகள் இன்று வரை ஆய்வுகளுக்கு உட்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் பனியினால் சூழ்ந்த பகுதிக்குள் அதி உயர் தொழில் நுட்ப அறிவு கூடிய ஓர் இனம் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் மனித குலத்திற்கு எதிரானவர்களாகவும் கூறப்படுகின்றனர்.
அதே சமயம் தற்போது இது குறித்து பல்வேறு ஆவணப்படங்களும், ஆய்வுச் செய்திகளையும் ஆங்கில ஊடகங்கள் அன்றாடம் வெளியிட்டு வருகின்றன.
இந்த தளத்திற்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் ஒரு சில ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.
May 29, 2017
இறந்தால் புதைக்கவோ எரிக்கவோ தேவையில்லை - புதிய முறை கண்டுபிடிப்பு
by
admin
01:37:00
-
0
இறந்த பிறகு எரிப்பதா அல்லது புதைப்பதா எனும் சர்ச்சை தொன்றுதொட்டு தொடரும் ஒன்று.
இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் நோக்கில் மாற்றுவழி ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
அதாவது காரத்தன்மையுடைய திரவத்தில் சடலத்தைக் கரைத்துவிடுவது.
தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்த மூன்றாவது வழிமுறை உள்ளது. விரைவில் அந்த தொழில்நுட்பம் பிரிட்டனுக்கு வரவுள்ளது.
பசுமை தகனம்
அறிவியல் ரீதியாக அதற்கு 'அல்கலைன் ஹைட்ரோலிசிஸ்' என்று பெயர். ஆனால் சுலபமாகப் புரிந்துகொள்வது என்றால் பசுமை தகனம்.
தீயிலிட்டு தகனம் செய்வதைவிட, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், மென்மையான முறையில் இந்த தகனம் நடைபெறும் என்று அதற்கான விளக்கக் குறிப்பு கூறுகிறது.
பொட்டாசியம் ஹைட்ராக்சைட் கொண்ட காரத்தன்மையுள்ள திரவத்தில் உடல் வைக்கப்படும்போது, எலும்புகளைத் தவிர அனைத்தும் கரைந்து, எலும்புக்கூடு மட்டுமே எஞ்சும்.
சுற்றுச்சூழல் மாசடையும் பிரச்சினை
அமெரிக்கா போன்ற நாடுகளில் உடல் புதைக்கப்படும்போது, அது சவப்பெட்டியில் வைத்தே புதைக்கப்படுகிறது. சில சமயம் சவக்குழிகளின் பகுதிகள் சிமெண்ட் கலவையால் பூசப்படுகின்றன. பல சமயங்களில் சவப்பெட்டிகள் உலோகத்தால் செய்யப்படுகின்றன.
அப்படி செய்யும்போது அவை மக்கிப்போவதில்லை.
சரி தகனம் செய்தால் பிரச்சினை தீர்ந்துவிடுமா என்றால் அதுவும் இல்லை. ஏனென்றால் ஒரு உடலை தகனம் செய்யத் தேவைப்படும் வெப்பத்தை வைத்து, மிகவும் கடுங்குளிர் நிலவும் அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டை, குளிர்காலத்தில் ஒரு வாரத்துக்கு கதகதப்பாக வைத்திருக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அறிவியல் சிந்தனை கொண்டவர்களுக்கு அப்பாற்பட்டு, உணர்வுபூர்மாக எவ்வளவுபேர் இரசாயன தகனத்தை விரும்புவார்கள் எனும் கேள்வியும் இதில் உள்ளது.
முற்போக்கு சிந்தனையும், சுற்றுச்சூழலில் ஆர்வம் கொண்டவர்களும் இந்த எண்ணத்துக்கு ஆதரவு தெரிவித்தாலும், பொருளாதாரம் இடம் கொடுக்குமா?
ரசாயன தகனத்துக்கான கட்டுமானத்தை ஏற்படுத்துவதற்கு 7.5 லட்சம் டாலர்கள்-அதாவது சுமார் ஐந்து கோடி இந்திய ரூபாய்- செலவாகிறது என்று அதை அமைத்துள்ளவர்கள் கூறுகின்றனர்.
கரைத்து கரையேற்றும் முறை
இதற்கு பயன்படுத்தப்படும் உலோகப் பெட்டி எஃகால் செய்யப்பட்டது. 6 அடி உயரம், 4 அடி அகலம் மற்றும் 10 அடி ஆழம் கொண்ட அந்தப் பெட்டி பாதுகாப்பு பெட்டகம் போலவுள்ள அறையில் பொருத்தப்பட வேண்டும்.
உடல் முழுவதும் கருப்புத் துணியால் மூடப்பட்ட நிலையில் கொண்டுவரப்படும் சடலம், எஃகுத் தகடில் வைத்து மெல்ல அந்த கரைசல் இயந்திரத்தினுள் செலுத்தப்படுகிறது.
பின்னர் கணினி உதவியுடன் உடல் வைக்கப்பட்டுள்ள அந்தத் தகடு நகராதவாறு பூட்டப்படுகிறது.
அடுத்த கட்டமாக அந்த உடல் எடை போடப்படும். பிறகு அந்த உடல் மூழ்கும் அளவும், அதற்கு எவ்வளவு தண்ணீரும் பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடும் சேர்க்கப்பட வேண்டும் என்பதும் நிர்ணயிக்கப்படுகிறது.
மிகவும் காரத்தன்மை வாய்ந்த அந்தக்கரைசல் 152 செண்டிகிரேட் அளவுக்கு சூடாக்கப்படும். ஆனால் அந்த இரசாயன திரவம் கொதிநிலைக்கு உள்ளாவதில்லை. அழுத்தம் மூலமாகவே உடல் கரைக்கப்படுகிறது.
விரைவாக உருக்குலையும்
புதைக்கப்படும் உடல் என்னவாகுமோ அதேதான் இந்த முறையிலும் நடைபெறுகிறது. ஆனால் ஒரே வித்தியாசம் புதைத்தால் உடல் உருக்குலைந்து போவதற்கு பல தசாப்தங்கள் ஆகலாம்.
ஆனால் இந்த முறையில் 90 நிமிடங்களிலேயே அது நடந்து முடிந்துவிடுகிறது. பின்னர் பல முறை நீரில் அலசப்படும். அதற்கு மீண்டும் அதே அளவு நேரம் பிடிக்கிறது.
மூன்று அல்லது நான்கு மணி நேரங்களுக்கு பிறகு, மூடிய கதவு திறக்கும். உடலுடன் உள்ளே தள்ளப்பட்ட எஃகுத்தகடு வெளியே இழுக்கப்படும்.
சிதறிய ஈர எலும்புகளும், உடலில் ஏதாவது மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்தால், அவையும், அந்தத் தகடில் எஞ்சி இருக்கும். ரசாயன திரவத்தில் கரைந்த இதர பகுதிகள் வடித்தெடுக்கப்படும்.
வடித்தெடுக்கப்பட்ட திரவம் சோப்பு வாடையுடன் இருக்கும். அதில் உப்பும் சர்க்கரையும் கலந்திருக்கும். கழிவாக வெளியேறும் திரவம் சோதிக்கப்படுகிறது.
வெள்ளை சாம்பல்
மனித மரபணுக்கள் ஏதும் இல்லாத அந்த திரவம் பின்னர், மாசு நீர் சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் கட்டமைப்பு போன்ற ஒன்றின் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, வடிகட்டப்படுகிறது. எஞ்சியுள்ளவை நுண்துகள்களாக மாற்றப்படுகின்றன.
மரபுரீதியான தகனத்தின் பின்னர் கிடைக்கும் சாம்பல் போலன்றி, பளிச்சென்று வெண்மை நிறத்தில் மாவு போல் இந்த நுண்துகள்கள் இருக்கும்.
இயந்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஈர எலும்புகள் சுத்தம் செய்யப்பட்டு உலர்ந்த பிறகு அலங்காரமான குடுவையில் அடைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இடப்பிரச்சினை
சரி இதனால் என்ன பலன்? முதலாவதாக இறந்தோரை புதைப்பதற்கான இடுகாடுகள் நிலப்பரப்பில் குறைந்து வருகின்றன. அவற்றை பராமரிக்கும் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன.
ஆகவே இடப்பற்றாக்குறையுடன் பொருளாதார நெருக்கடியும் சேர்ந்துகொள்கிறது.
இதனால் பல நாடுகளில் இடுகாடுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மேலும் மேலும் ஆழமாகத் தோண்டப்பட்டு, ஒன்றன் கீழ் ஒன்றாக புதைக்கும் நிலை ஏற்படுகிறது.
புதைப்பதில் இப்படியான பிரச்சினைகள் என்றால், எரிப்பதிலும் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. எரிபொருள் செலவு, அதனால் சுற்றுச்சூழல் மீதான தாக்கம். ஒவ்வொரு தகனத்தின் போதும் 320 கிலோகிராம் கரியமில வாயு வெளியேறுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி கரியமில வாயுவைவிட நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள் தகனம் செய்யப்படும்போது வெளியேறுகின்றன. இப்படியான காற்றை கோடிக்கணக்கான மக்கள் தினமும் சுவாசிக்கும் நிலை ஏற்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்கள் நலன், பொருளாதாரம் போன்ற 18 அளவுகோல்களின்படி, மற்ற எவ்வகையான இறுதிக்கிரியைவிட இராசயன தகனமே சிறந்தது என்று அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
செலவு?
இரசாயன தகனத்துக்கான செலவு மற்ற இருவகைகளுக்கு ஆகும் செலவில் ஒரு சிறுதுளி மட்டுமே எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
சடலம் ஒன்றை புதைப்பதற்கு நிகர செலவு -இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிடப்படும்போது 4500ம், அதை எரிப்பதற்கு 3500ம் ஆகின்றன அதை இரசாயன முறையில் கரைப்பதற்கு 300 ரூபாய் மட்டுமே ஆகும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், மரபுகளை அறிவியல் எண்ணங்கள் மாற்றுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
May 08, 2017
கொரிய மக்களின் தெய்வம் ஒரு தமிழிச்சி- மறைக்கப்பட்ட தமிழர்கள் வரலாறு
by
admin
07:53:00
-
0
March 21, 2017
நாம் பூமிக்கு சொந்தமானவர்கள் அல்ல என்றும். நாமும் ஒருவகையான ஏலியன்கள் -உண்மை ஆராய்ச்சி வெற்றி
by
admin
11:08:00
-
0
January 28, 2017
உலகம் அழிய இன்னும் இரண்டரை நிமிடங்களே!
by
admin
10:11:00
-
0
January 03, 2017
2017 உலக அழிவு ஆரம்பம் - இலங்கை 3ம் உலக யுத்ததிற்கு காரணமாகிறது
by
admin
08:24:00
-
0
நடைமுறை உலக பயணத்தில் முக்கியமான தொரு கேள்வி அடுத்த உலக யுத்தத்திற்கு இலங்கை வித்திடுமா? இப்போதைக்கு வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக இது உச்சரிக்கப்பட்டு கொண்டே தான் இருக்கின்றது.
உலகத்தோடும், கடந்து வந்த சம்பவங்களின் அடிப்படையிலும் இலங்கையை தொடர்பு படுத்தி பார்க்கும் போது இந்த கூற்றுக்கு இலங்கையின் பெயரும் அடிபட செய்கின்றது.
உலக அளவில் பலரையும் கவர்ந்துள்ள 16ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி மைக்கேல் டி நாஸ்டிரடாமஸ் என்பவரது கணிப்புகள் இன்றும் குழப்பமாகவும், சர்ச்சையாகவும் இருக்கின்றது.
காரணம் அப்போது 1555 ஆம் ஆண்டு இவர் எதிர்வு கூறியவை 2016ஆம் ஆண்டு அப்படியே நடந்தது. எப்படி இது சாத்தியம் என விஞ்ஞானிகளும் திக்கு முக்காடி போய் உள்ளதோடு, நடுங்கவைக்கும் விடயமாக உள்ளது 2017 தொடர்பில் அவர் கூறியுள்ள கணிப்புகள்.
உதாரணமாக அமெரிக்காவின் அதிபர் மாற்றமடைவார் என்று அவர் கணித்ததோடு ஒபாமாவே கடைசிஅதிபர் என்றார். அதிபர் மாறி விட்டார் ஆனால் கடைசி அதிபர் மட்டும் இன்னும் நிறைவேறவில்லை காரணம் ட்ரம்ப் இருக்கின்றார் இன்னும்.
இயற்கைப் பேரிடர்கள், பேரழிவுகள், கடல் கொந்தளிப்புகள், நில நடுக்கங்கள் வெள்ளப்பெருக்குகள் அதிக அளவில் ஏற்படும் ஆண்டாக 2016 அமையும் எனவும் கணித்தார். இவையும் நடைபெற்றது என்பது தெரிந்த விடயமே.
மத்திய கிழக்கு நாடுகள் 2016ஆம் ஆண்டு பற்றி எரியும் கணித்ததும் நடந்தது கடந்த 4 வருடங்களாக மத்திய கிழக்கு பற்றி எரிந்து கொண்டு தான் இருக்கின்றது.
அதே போல விமானங்கள் விபத்துக்கு உள்ளாகும், காணாமல் போகும் என்றும் அவர் கணித்தது கூட அப்படியே நடந்தது ஆச்சரியம் தான்.
துருவப் பகுதிகள் உருகும் 2016இல் நடக்கும் என நாஸ்டிரடாமஸ் கணித்தது இன்னொரு முக்கிய அம்சம் துருவப் பகுதிகள் மூழ்கும் என்பது. உலக அளவில் வெப்பமயமாதல் அதிகரித்து வருவதாக ஏற்கனவே விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.
அதே போன்று வரலாறு காணாத வெப்ப நிலையும் 2016ஆம் ஆண்டு பதிவாகியமையும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.
அதே போன்று 2017 தொடக்கம் உலகம் அழிவை சந்திக்க ஆரம்பமாகும் என்றும், ஈராக் போர்தான் உலக அழிவுக்கான முதல் படி என்றும் அவர் கூறியுள்ளார்.
சிரியா யுத்தம் தொடர்பிலான பார்வைகள் தற்போது மாற்றமடைந்து, அமெரிக்கா ரஷ்யாவிற்கு இடையே தொடர்ந்து வரும் பனிப்போரை வெளிப்படுத்தும்.
வகையில் இரு நாடுகளும் பூசலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளையே இப்போது வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றது காணக் கூடியதாகவே இருக்கின்றது.
ஏற்கனவே மாயன் காலண்டரில் கூட இப்படி உலகம் அழியும் என்று கூறப்பட்டு அது பொய்யாகிப் போன காரணத்தினால் அது தொடர்பில் பெரிதாக பேசப்படுவதில்லை.
என்றாலும் இவருடைய மூன்றாம் உலக யுத்த கணிப்பில் ஒரு சிறிய நாடு மூன்றாம் உலக யுத்தத்திற்கு வித்திடும் என்று கூறியுள்ளார்.
இவர் இங்கு குறிப்பிட்டது இஸ்ரேலை என்றே பல ஆய்வாளர்களின் கூறும் கருத்து. ஆனாலும் அது இலங்கையாக இருக்குமா? என்ற சந்தேகமே இப்போது வலுப்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்கால் அழிவிற்கு பழிவாங்க தமிழர்களின் ஆத்மாக்கள் இன்றும் தங்களை அழித்த உலகை பலிவாங்கும் என்னத்துடன் இருப்பதால் உலகப் போரை ஏற்படுத்தி தங்கள் பலிவாங்கும் படலத்தை ஆரம்பிக்கும் .
காரணம் அமொிக்காவும், சீனாவும், இந்தியாவும் கூட இலங்கை கடற்பரப்புகளையும் துறைமுகங்களையும் ஆக்கிரமிக்கும் நோக்கோடு செயற்படுகின்றன.தமிழர்களை அழிப்பதில் இவர்களின் பங்கு தவிர்க்க முடியாது.
பொருளாதார ரீதியான அபிவிருத்தி செயற்பாடுகளாக இவை நோக்கப்பட்டாலும் கூட அடுத்த பக்கம் ஒரு நாட்டுக்குள் வல்லரசுகள் போட்டியிடுவது ஆபத்தானது. பொருளாதார யுத்தம் போராகவும் மாறலாம்.
அமெரிக்காவின் நோக்கம் திருகோணமலை துறைமுகத்தை கையகப்படுத்துவதே என்ற எண்ணம் கூட தோன்றுகின்றது.
அதே போன்று இப்போதைய நிலவரப்படி அடுத்து அமெரிக்கா என்ன செய்யும் என்பது கூட தெரியாத நிலையே தொடருகின்றது, அதே போல் வல்லரசுகளும் கூட பகிரங்கமான போர் ஒத்திகையிலும் கூட ஈடுபட்டு வருகின்றது.
ஆக மொத்தம் என்றோ நாஸ்டிரடாமஸ் கணித்து விட்டவை நடந்து கொண்டு வர, 2017ஆம் வருடம் தொடர்பில் அவர் கூறியவை நடந்து விடுமா?
அது மட்டும் அல்லாமல் அனைத்து வகையிலும் 2017 என்பது ஆபத்தான வருடமாகவே நோக்கப்படுகின்றது. ‘Planet X: The 2017 Arrival’ எனும் ஆய்வுப் புத்தகத்தின் மூலம் David Meade என்பவர் ஓர் இருண்ட கிரகம் பூமி மீது 2017இல் மோதும் என்றும் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியானதொரு செய்தியே.
இதன்படி உலக அழிவின் ஆரம்பமா இந்த 2017 என்பது கூட இப்போது அச்சத்தை ஏற்படுத்தும், நடுங்கவைக்கும் விடயமாக பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் மக்களுக்கு இது தொடர்பில் வெளிப்படுத்தப்படுவதில்லை.
January 01, 2017
செவ்வாயில் சிலந்திக்கு இணையான மிகப் பெரிய உயிரினம்!
by
admin
09:03:00
-
0
செவ்வாய்க் கிரகத்தில் சிலந்திக்கு இணையான உயிரினம் ஒன்று தென்பட்டதாக வேற்று கிரகவாசிகள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமான புகைப்படங்களை நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் சிலந்திக்கு இணையான ஒரு பெரிய உயிரினம் தென்படுவதுடன் அது பாறையல்ல என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதனை சிலர் நத்தை என்றும் சிலர் சிலந்தி என்றும் வேறு சிலர் இது நான்கு கால்களை கொண்ட குரங்கை போல் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
ஆய்வாளர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து செவ்வாய்க் கிரகத்தில் தென் பட்ட பல உருவங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் இன்னும் கால் பதிக்கவில்லை என்பதால், அங்குள்ள உயிரினங்கள் சம்பந்தமான உண்மைகள் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எது எப்படி இருந்த போதிலும் செவ்வாயில் அண்மையில் தென்பட்ட உயிரினம் தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ள போதும், நாசா நிறுவனம் செவ்வாய்க் கிரகத்தில் உள்ள உயிரினம் தொடர்பான உண்மையை மறைப்பதாகவும் ஆய்வாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
November 18, 2016
நேதாஜி அவர்களின் (கார்) மகிழுந்து ஓட்டுனர்
by
admin
09:52:00
-
0
October 30, 2016
மனிதனை ஏலியன்களை உருவாக்கியது போல மனிதன் ஏலியன்களை உருவாக்க இறந்தவர்களை அனுப்பும் விஞ்ஞானிகள்
by
admin
08:58:00
-
0
நாம் வாழும் இப்பூமியில் மரணமடையும் சிலரது சடலங்களை விண்வெளிக்கு அனுப்புவதன் மூலம் மற்றொரு கிரகத்தில் புதிய ஏலியன்களை உருவாக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியில் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் வாழ்வது போல் மற்ற கிரகங்களிலும் ஏலியன்ஸ் எனப்படும் உயிரினங்கள் வசித்து வருவதாக பல ஆண்டுகளாக நம்பப்படுகிறது.
ஆனால், இதனை ஆதாரத்துடன் நமது ஆராய்ச்சியாளர்கள் இன்னும் நிரூபிக்கவில்லை.
ஏலியன்ஸ் இருக்கிறார்களா? இல்லையா? என்ற கேள்விக்கு பதில் தேடுவதை விட நாமே புதிதாக ஏலியன்ஸ்களை உருவாக்க முடியும் என்ற முயற்சியை தான் ஆராய்ச்சியாளர்கள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
பூமி உருவான பிறகு கடலில் நுண்ணுயிரிகள் தோன்றின. இந்த நுண்ணுயிரிகள் படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்து தற்போது மனிதர்கள், விலங்குகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களாக மாறியுள்ளன.
இதே போன்று நுண்ணுயிரிகளை மற்ற கிரகத்திற்கு அனுப்புவது தான் தற்போது ஆராய்ச்சியாளர்களின் தீவிரப்பணியாக உள்ளது.
இதனை செயல்படுத்த பூமியில் உயிரிழக்கும் ஒருவரின் சடலம் விண்வெளிக்கு அனுப்பப்படும்.
ஆதி காலத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை சில திரவங்களை பூசி மம்மிகளாக இப்போது வரை பாதுகாத்து வருகிறோம்.
இதே வழிமுறையை பின்பற்றி, விண்வெளியில் உள்ள குளிர் மற்றும் வெப்பத்தை தாங்கிக்கொள்ளும் வகையில் சடலத்தின் மீது திரவங்கள் பூசப்பட்டு விண்வெளியில் மிதக்க விடப்படும்.
மேலும், விண்வெளி வீரர் உடுத்தும் ஆடையை சடலத்திற்கு அணிந்து அனுப்புவதால், அது தொலை தூரம் பயணிக்க முடியும்.
இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளரான கேரி கிங் பேசியபோது, ‘விண்வெளிக்கு அனுப்பப்படும் மனித சடலம் சுமார் 4.2 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள மற்றொரு சூரிய குடும்பத்தை அடைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு சடலம் மற்றொரு சூரிய குடும்பத்தை அடைந்து அங்குள்ள ஏதாவது ஒரு கிரகத்தில் இறங்கி விடும்.
பின்னர், காலப்போக்கில் சடலத்தில் உள்ள மூலக்கூறுகள், நுண்ணுயிரிகள் அங்குள்ள காலநிலைக்கு ஏற்ப சுற்றுச்சூழலில் பரவும்.
இவ்வாறு மற்றொரு கிரகத்தில் பரவும் நுண்ணுயிரிகள் எதிர்காலத்தில் மனிதர்களாகிய நாம் உருவாக்கிய ஏலியன்ஸ்களாக மாற வாய்ப்புள்ளது என கேரி கிங் தெரிவித்துள்ளார்.
October 27, 2016
இருமுறை பிறந்த குழந்தை உலக அதிய நிகழ்வு
by
admin
21:16:00
-
0
அமெரிக்காவில் தாயின் கற்பப்பை பையில் இருந்து இருமுறை பிறந்த குழந்தை சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவி வருகின்றது.
அமெரிக்காவை சேர்ந்த பெண் மார்கரேட் போமர். இவர் கருவுற்று 16 வாரங்கள் ஆன போது பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த அமெரிக்க மருத்துவர்கள் அவரின் கருவில் இருக்கும் குழந்தைக்கு கட்டி ஒன்று இருப்பதை உறுதி செய்துள்ளனர். இந்த கட்டி குழந்தையின் இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயின் ரத்த ஓட்டத்தை தடுப்பதாக கண்டறிந்தனர். அதனை உடனே வெளியேற்றா விட்டால் குழந்தை 23வது வாரம் ஆகும் போது அதன் இதயம் முற்றிலுமாக செயலிழந்து விடும் என்றும் கண்டறிந்தனர்.
இதனால் மருத்துவர்கள் மார்கரேட் கரு வளர்ந்து ஆறு மாதம் ஆகிய நிலையில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுத்தனர். பின்னர் அந்த பெண் குழந்தையின் முதுகில் இருந்த அபாய கட்டியை நீக்கினர், பின்னர் மறுபடியும் அந்த குழந்தையை தாயின் கருவில் வைத்து மருத்துவர்கள் மூடினார்கள்.
பிறகு 12 வாரங்கள் மருத்துவமனையிலேயே இருந்த மார்கரேட் பிறகு அந்த பெண் குழந்தையை மீண்டும் பெற்றெடுத்தார். தற்போது குழந்தை நலமாகவுள்ளது. இச்சம்பவம் அமெரிக்கா மட்டுமல்லாது தற்போது சமூக வலைதளத்திலும் வைரலாகப் பரவி வருகின்றது. பலரும் இருமுறை பிறந்த அந்த அதிசயக் குழந்தையை வாழ்த்தி வருகின்றனர்.
October 22, 2016
தமிழ் கட்டளைகளை மட்டும் ஏற்கும் புலி
by
admin
23:50:00
-
0
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வனவிலங்கு காப்பகத்தின் புதிய வரவாக சேர்ந்துள்ள ஒரு அரியவகை வெள்ளைப் புலி தமிழில் அளிக்கப்படும் கட்டளைகளை மட்டுமே ஏற்றுக் கொள்வதால் தமிழ்மொழி தெரியாத வனவிலங்கு காப்பக பணியாளர்கள் திணறி வருகின்றனர்.
சென்னை வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் அரியவகை வெள்ளைப் புலிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு புலியை தங்களுக்கு அளிக்குமாறு ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் உள்ள வனவிலங்கு காப்பக அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு பதிலாக இரு ஓநாய்களை அளிக்கவும் அவர்கள் சம்மதித்தனர். இதையடுத்து, ‘ராமா’ என பெயரிடப்பட்டிருந்த அந்த வெள்ளைப் புலி சாலை மார்க்கமாக உதய்பூரில் உள்ள வனவிலங்கு காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
தற்போது, அங்கு புதிய வரவாக சேர்ந்துள்ள ராமாவை பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் ஆர்வம் காட்டிவரும் நிலையில் சென்னையில் வளர்ந்த ராமா, இங்குள்ள அண்ணா உயிரியல் பூங்கா பணியாளர்கள் தமிழில் கூறிய சிலவார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு வளர்ந்ததால், ராஜஸ்தான் மாநில வனவிலங்கு காப்பக பணியாளர்கள் பேசும் மொழி அதற்கு சரியாக புரிவதில்லை.
எனினும், வண்டலூர் உயிரியல் பூங்காவில் ராமாவை பராமரித்தவர்களிடம் இருந்து கற்றுசென்ற சில வார்த்தைகளை வைத்து அவர்கள் ஒப்பேற்றி வருவதாக தெரியவந்துள்ளது.
October 11, 2016
5300 வயது பனிமனிதன் பேசுவது தமிழா? திடுக்கிடும் உண்மை ஆதாரம்
by
admin
07:30:00
-
0
ஆஸ்திரியா-இத்தாலி நாட்டின் எல்லையில் பரந்து விரிந்து கிடக்கும் ஆல்ப்ஸ் மலையில் உள்ளது டைசென்ஜாக் என்கிற சிகரம். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி மதியம் 1.30 மணியளவில் இரண்டு ஜெர்மன் சுற்றுலாவாசிகள் உலகையே அசத்தப்போகும் ஒன்றை கண்டுபிடித்தனர். அது 5300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதன் ஒருவனின் உடல்.
இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? அந்த உடல் 90% சதவிகிதம் அப்படியே இருந்ததுதான். அதுமட்டுமல்ல அந்த மனிதன் பயன் படுத்திய பொருட்களும் அப்படியே பனியில் உறைந்து போயிருந்தது. மனித அறிவியல் வரலாற்றில் இப்படி முழுமையாக சிதிலமின்றி கிடைத்த மம்மி இதுதான். கடல்மட்டத்தில் இருந்து 11000 அடி உயரத்தில் இறந்து கிடந்ததால் இப்படி அச்சு குலையாமல் அந்த உடல் கிடைத்தது.
இந்த மம்மி இவ்வளவு ஆயிரம் ஆண்டுகளாய் பனியில் உறைந்த இடத்தை ‘ஊட்ஸல் ஆல்ப்ஸ்’ என்று அழைப்பார்கள். அதைக் காரணமாக வைத்து அந்த மம்மி மனிதனுக்கும் ‘ஊட்சி’ என விஞ்ஞானிகள் பெயர் வைத்தனர்.
தோளில் 6 அடி வில்லும் 14 அம்புகளும், தாமிர கோடாரியுடன், கரடி தோலினால் ஆன உடைகளுடன் இறந்து போயிருந்த ஊட்சி இறப்பதற்கு முன் சாப்பிட்டது என்ன தெரியுமா? சிவப்பு மானின் இறைச்சி. அவரின் உடலில் 56 இடங்களில் பச்சை குத்தியிருந்ததையும், அவருக்கு பல்வேறு எலும்புப்பிரச்சினைகள் இருந்ததையும் கண்டுபிடித்துள்ளார்கள்.
ஊட்சி பின்னால் இருந்து எய்யப்பட்ட அம்பினால் இறந்ததையும், அப்போது அவருக்கு வயது 45 என்பதையுமே கண்டுபிடித்துவிட்டார்கள். இதைவிட கூடுதல் தகவல் அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து அவர் மனவேதனையுடன் இருந்ததையும் விரல் நகங்களில் உள்ள ரேகைகள் மூலம் கண்டுபிடித்துள்ளனர். கம்ப்யூட்டர் மூலம் ஊட்சியின் முழு உருவத்தையும் வடிவமைத்து அவரைப்போன்ற மெழுகுச்சிலையையும் உருவாக்கியுள்ளனர்.
இதையெல்லாம் கண்டு பிடித்துள்ள விஞ்ஞானிகள் மற்றொன்றையும் செய்துள்ளனர். ஆராய்ச்சியாளர்களின் தொடர்ச்சியான முயற்சியால் ஊட்சியின் குரல் தடத்தை உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் பனி மனிதனின் குரலின் மூலம் உலகின் எந்த மொழியையைம் பேச வைக்க முடியும் என்கின்றனர் அழுத்தமாக.
பொதுவாக மம்மிக்கள் கிடைத்தால் பல்வேறு ஸ்கேனிங்களை பயன்படுத்தி ஏதேனும் வித்தியாசமாக கண்டுபிடிப்பது வழக்கம். இம்முறை ஸ்கேனிங் மூலம் ஊட்சியின் குரல்வளை மற்றும் குரல் தடப்பாதையை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதன் மூலம் எப்படி ஊட்சியின் குரல் ஒலித்திருக்கும் என ஆடியோவினை உருவாக்கி விட்டனர். அதாவது ஊட்சி குரல் இப்படித்தான் இருந்திருக்கும் என ஒரு டெமோ ரெடி.. அது நம் தமிழைப் போன்றே ஒலிக்கிறது.
“ஆ, ஈ, உ ஊ” ஆகிய வார்த்தைகளை உச்சரிக்கும் போதுதான் நமது நுரையிரலும் குரல்வளையும் மூச்சுகுழலும் ஒன்றாக வேலை செய்கிறது. அந்த வார்த்தைகளை உச்சரிக்கும் காற்றினை நுரையிரல் வழங்குகிறது. அப்படி இந்த மூன்றின் உதவியுடன் பிறக்கும் சொற்களை ஊட்சியின் ஓசையோடு ஒலிக்கும் ஆடியோ பைல் வெளியாகியுள்ளது.
September 08, 2016
அல்லா அனுப்பிய தூது - ஐந்துவேளை தொழுவதால் அருள் கிடைக்குமா? அதிர்ச்சியில் உலகம்
by
admin
11:53:00
-
0
கேக் தயாரிப்பதற்காக கடையிலிருந்து வாங்கிவந்த கோழி முட்டை வழியாக இறைவன் தமக்கு கட்டளையிட்டுள்ளதாக ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதியர் பூரிப்படைந்துள்ளனர்.
ஐஸ்லாந்து நாட்டில் வசிக்கும் அனிசா என்பவர், தனது கணவர் பரித் ஜுசாப் என்பவருக்கு மிகவும் பிடித்தமான கேக் தயாரிப்பதற்காக கடையில் இருந்து கோழி முட்டைகளை வாங்கி வந்தார். அவற்றை உடைத்து கேக் செய்ய முற்பட்டபோது, ஒரு முட்டையின் ஓட்டில் மட்டும் தடிமனான சில ரேகைகள் காணப்படுவதை அனிஸ் கவனித்தார்.
அந்த முட்டையை நெருக்கமாக வைத்து, உற்றுப்பார்த்தபோது ‘லாஇலாஹா’ (அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துக்குரிய இறைவன், வேறு யாருமில்லை) என்ற அராபிய மொழி எழுத்துக்கள் அதில் காணப்பட்டன. இதையடுத்து, புல்லரித்துப்போன அவர் அந்த முட்டையை உள்ளூரில் இருக்கும் மசூதியில் இமாமாக உள்ள ஒருவரிடம் காட்டி, வியந்தார்.
இது உங்களுக்கு இறைவனிடம் இருந்துவந்த நற்செய்தியாகும். அந்த முட்டையின் ஓட்டினை சின்னதாக உடைத்து, அதன் உள்ளே இருக்கும் முட்டையின் கருவை நீயும், உன் கணவரும் சமைத்து சாப்பிடுங்கள். ஓட்டை மட்டும் ஒரு கண்ணாடி குவளைக்குள் போட்டுவைத்து, பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள் என அந்த இமாம் கூறினார்.
இதையடுத்து, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அந்த முட்டையின் ஓட்டை அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் தினந்தோறும் ஆச்சரியத்துடன் பார்வையிட்டுச் செல்வதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாங்கள் ஐவேளையும் தவறாமல் இறைவனை தொழும் பழக்கம் கொண்டவர்கள் அல்ல; எங்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக இறைவன் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளதாகவே இந்த முட்டையை பார்த்ததும் கருதத் தோன்றுகிறது, என பரித் ஜுசாப்- அனிசா தம்பதியர் கூறுவதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
September 06, 2016
தேசியத்தலைவரை புகழும் ஶ்ரீலங்கா இராணுவத்தளபதி-எதிரியே போற்றிய வீரன் எம் தலைவன்
by
admin
15:44:00
-
0
தேசியத்தலைவரை புகழும் ஶ்ரீலங்கா இராணுவத்தின் தளபதிகளின் வரிசையில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன அவர்களும் இணைந்துள்ளார் அவர் தெரிவித்த கருத்துக்கள்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி இன்று வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாவது,
பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தை பேணினார்.
தற்கொலைத் தாக்குதல் கலையை கட்டியமைத்தது இவர் தான். அல்-குவைடாவின் முதலாவது, தற்கொலைக் குண்டுதாரிக்கு முன்பாகவே, பிரபாகரன் 200 தற்கொலைக் குண்டுதாரிகளை வைத்திருந்தார்.
பெரும்பாலான தற்கொலைக் குண்டுதாரிகள் பெண்களாகவே இருந்தனர். தமது தலைமையின் கட்டளைக்கு பணிந்து தமது உயிரைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் பெண் போராளிகளை தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த சான்றுமே கிடையாது.
அவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார். இலங்கை இராணுவத்தினர், பிரபாகரனினதும், அவரது குடும்பத்தினரதும், விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளினதும், 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர். ஆனால் ஒரு படத்தில் கூட மதுபான குவளையுடன் பிரபாகரனை காண முடியவில்லை.
அவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார். ஷரியா சட்டத்தை விடவும் மேலான சட்டத்தை பேணுபவராக அவர் இருந்தார். நீங்கள் திருடியிருந்தால் ஷரியா சட்டத்தின்படி கையைத் தான் இழக்க நேரிடும். ஆனால் பிரபாகரனின் சட்டத்தின் கீழ் வாழ்க்கையை இழப்பீர்கள்.
அவர் ஒரு இந்துவாக இருந்தாலும், கடவுளை நம்பவில்லை. கடவுள் சக்திவாய்ந்த நாடுகளில் தான் இருக்கிறார் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். அவர் ஒரு வித்தியாசமான தலைவர். பலரும், கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தது.
அவர் ஒரு உறுதியான முடிவை எடுப்பவராக இருந்தார். எடுக்கும் முடிவு சரியோ தவறோ அதையிட்டு கவலைப்படமாட்டார். அந்த முடிவை நடைமுறைப்படுத்துவார்.
ராஜீவ்காந்தியைக் கொலை அவரது விவேகமற்ற ஒரு முடிவுகளில் ஒன்று. ராஜீவ்காந்தியைக் கொல்லவதன் மூலம் இந்தியா முழுமையாகவும், உலகமும் தனக்கு எதிராகத் திரும்பும் என்று அவருக்கு தெரியும்.
ஆனால் விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கையில் இந்திய அமைதிப்படையை நிறுத்தியதற்குப் பழிவாங்க அவர் விரும்பினார். எனவே அவரைக் கொலை செய்தார். ஏனெனில் அவர் இரக்கமற்றவர்.
அவரிடம் பொறுமை நிறையவே இருந்தது. தனது பயணங்களுக்கு அவர் அவசரப்படவில்லை. தாக்குதலுக்கு சரியான தருணம்வரும் வரை காத்திருந்தார்.
பிரபாகரனின் தலைமைத்துவம், இறுதி நிமிடச் சமர் வரையில் மிகத்திறமையானதாகவே இருந்தது. ஏனைய தளபதிகளால் பாணு, ரட்ணம் மாஸ்டர், சூசை ஆகியோரும் மிகச்சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினர்.
இறுதி சிலநாட்களில் சூசையின் கட்டளைகளினால் யாரும் திரும்பிச்செல்ல விரும்பவில்லை. இந்த தளபதிகளின் கீழ் புலிகளின் கொமாண்டோக்கள், மிக நன்றாகவே செயற்பட்டனர்.
வேவுபார்க்கும் போராளிகள் தொடக்கம், தற்கொலைப் போராளிகளுக்கான வெடிபொருள் நிபுணர்கள், ஆட்டிலறி குழுக்கள், ஆட்டிலறி அவதானிப்பாளர்கள், எல்லோருமே, ஆற்றலுள்ள போராளிகளாகவே இருந்தனர்.
இறுதிச்சமரின் கடைசி சில மணித்தியாலங்கள் வரையில், விடுதலைப் புலிகளின் தலைமை கடுமையாகவே போரிட்டது.” என்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.







Social Buttons