Latest News
Showing posts with label வடமாகாண தேர்தல். Show all posts
Showing posts with label வடமாகாண தேர்தல். Show all posts

October 02, 2013

வெற்றிக்கு ஆதரவளித்த புலம்பெயர் உறவுகள் மற்றும் இணைய ஊடகங்களுக்கு எமது உளப்பூர்வமான நன்றிகள்!- கிளி. மாவட்ட த.தே. கூட்டமைப்பு உறுப்பினர்கள்!!!
by Unknown - 0

வடமாகாண தேர்தலில் போட்டியிட்ட கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் ஆகிய எங்களின் வெற்றிக்கு ஆதரவளித்த, புலம்பெயர் உறவுகளுக்கும் அனைத்து இணையத்தள ஊடகங்களுக்கும் எமது உளப்பூர்வமான நன்றியறிதல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

முள்ளி வாய்க்காலில் அழிக்கப்பட்டதால் தோற்கடிக்கப்பட்ட சமூகம் என இலங்கை அரசால் எள்ளி நகையாடப்பட்ட நாம் இன்று அவர்களுக்கு வீழ்ந்து போகும் இனம் நாம் அல்ல என்பதனை இத் தேர்தல் மூலம் தெட்டத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம். எம்மக்கள் அனைவரும் ஒன்றிணைந்ததால் இப் பெரு வெற்றியினைச் சாதிக்க முடிந்தது என்பது தெட்டத் தெளிவான ஒன்று.
நடைபெற்று முடிந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் கிளிநொச்சி வாழ் மக்கள் உவகையுடன் வாக்களித்து எம்மை வெற்றி பெறச் செய்த அதேவேளை, தொடர்பாடல் ஊடகங்கள் ஊடாக வட மாகாணத்திலுள்ள தமது உறவுகளுடன் தொடர்பு கொண்டு பரப்புரை செய்ததன் மூலமும் இவ் வெற்றிக்குப் பெரும்பங்களிப்பினை எமது புலம்பெயர் உறவுகள் ஆற்றியிருந்தனர்.
அத்துடன் சர்வதேச ரீதியாக எமது இனத்தின் குரலை எடுத்துச் சென்று எமது வெற்றிக்குத் தோள் கொடுத்த பெருமை புலம்பெயர் மக்களையும் அனைத்து புலம்பெயர் இணையத் தள ஊடகங்களையும் சாரும்.
ஆகவே, இத் தேர்தல் வெற்றிக்கு அனைத்து வழிகளிலும் ஆதரவளித்த எம் தமிழ் புலம்பெயர் உறவுகளுக்கும்,  சகல  இணையத்தள ஊடகங்களுக்கும் ஒட்டுமொத்த கிளிநொச்சி வாழ் மக்கள் சார்பில் எமது உளமார்ந்த நன்றியுணர்வினை வெளிப்படுத்துவோடு, எம்மக்கள் எமக்குத் தந்த ஆணையினை மதித்து அதற்கேற்ப எமது பணியினை மேற்கொள்வோம் எனத் தெரிவிக்கிறோம்.
இவ்வண்ணம்
மாகாண சபை உறுப்பினர்கள்
ப.அரியரத்தினம்
த.குருகுலராசா
சு.பசுபதிப்பிள்ளை

Read More

September 30, 2013

வடமாகாண சபைத் தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்ற எதிர்பார்ப்பு தவறாக அமைந்தது!- ஜனாதிபதி மகிந்த
by Unknown - 0

சில இராஜதந்திரிகள் தன்னிடம் வடமாகாண சபைத் தேர்தல் பற்றி கேட்ட போது நான் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 முதல் 10 ஆசனங்களை வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டுமென்று கூறிய போதிலும் எனது இந்த எதிர்பார்ப்பு தவறாக அமைந்தது. இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அல்ஜெசீரா தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பது எமக்கு நன்கு தெரியும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்கவேண்டுமென்று அறிவித்திருந்தது. 
எனவே, வடமாகாணத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீரான நிர்வாகத்தை நடத்த வேண்டுமென்று நான் சவால் விடுக்கிறேன்.
தனது கட்சி வடமாகாண சபைத் தேர்தலில் தோல்வியடையும் என்பதை நான் முன்கூட்டியே தெரிந்திருந்ததாகவும் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரிடமும் நாம் வடமாகாண சபைத் தேர்தலை நடத்தப் போகிறோம் என்றும் இதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்றும் எமது கட்சியின் மக்கள் ஆதரவை இந்தப் பேட்டியின் போது வலியுறுத்தினேன்.
எவருக்கும் ஒரு நிர்வாகத்தைப் பற்றி குற்றம் குறை காண்பது இலகுவான விடயம். எனினும் நிர்வாகத்தை சீராக நடத்துவது கஷ்டமான விடயம். ஆகவே தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபையை நிர்வகியுங்கள் என்று கூறினோம்.
சில இராஜதந்திரிகள் தன்னிடம் வடமாகாண சபைத் தேர்தல் பற்றி கேட்ட போது நான் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 முதல் 10 ஆசனங்களை வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டுமென்று கூறிய போதிலும் எனது இந்த எதிர்பார்ப்பு தவறாக அமைந்தது. நாம் அங்கு 7 ஆசனங்களையே வெற்றி பெற்றோம் என்றும் ஜனாதிபதி இந்த தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார்.
நாடெங்கிலும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த இராணுவம் நிலைகொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடமாகாணத்திலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு கோரிக்கை விடுக்கலாகாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடெங்கிலும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் இராணுவ முகாம்களை வைத்திருக்கிறது. விக்னேஸ்வரனின் வேண்டுகோளுக்கு அமைய வடக்கில் இருந்து இராணுவத்தை எனது அரசாங்கம் வெளியேற்றாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 
Read More

September 27, 2013

வட மாகாண சபை தேர்தலில் தமிழர்கள் முதுகெலும்புடன் வாக்களிப்பு - ஹரீன் எம்.பி
by Unknown - 0


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு வடக்குத் தமிழர்களின் ஒருமித்த கொள்கையே காரணம். வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் முதுகெலும்போடு வாக்களித்துள்ளனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் குறுகிய காலத்திற்குள் மாற்றமொன்றினை எதிர்பார்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் அடக்கு முறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் வடக்கு தமிழ் மக்கள் தைரியமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்துள்ளனர்.

தமிழர்களுக்கு அபிவிருத்திகளை விடவும் தமது உரிமைகளே முக்கியம் என்பதை உணர்ந்து செயற்பட்டுள்ளனர். எனினும் வடமேல் மத்திய மாகாண சபைத் தேர்தல்களில் மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்துள்ளமையானது வருந்தத்தக்க விடயமாகும்.

நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளையும் பொருளாதார சிக்கல்களையும் நன்றாக தெரிந்து கொண்ட மக்களே கண்மூடித்தனமாக செயற்படுவது கவலையளிக்கும் விடயமாகும்.

எனவே அரசாங்கம் மக்களுக்கு உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். அதேபோன்று எமது கட்சியிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இன்றைய கால சூழ்நிலைக்கேற்ப எமது கட்சியின் இருப்பினை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இனிமேல் ஒருவர் வெளியேறுவதை நாம் விரும்பவில்லை.


தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் எஞ்சியிருக்கும் உறுப்பினர்களை வைத்தாவது மக்களுக்கான உண்மையான சேவையினை செய்ய வேண்டும். எனவே அதற்கு அவசியமான மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆட்சி மாற்றும் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

இராஜகிரியவில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

Read More

யாரிடம் பதவிப்பிரமாணம் செய்வது என்பது குறித்து பரிசீலிக்கவுள்ளோம்!
by Unknown - 0

வட­மா­காண ஆளு­நரின் பதில் கிடைத்­ததும், முத­ல­மைச்சர் சத்­தி­யப்­பி­ர­மாண விட­யத்­தையும் அமைச்சர் வாரிய நிய­ம­னங்­களைப் பற்­றியும் பரி­சீ­லிப்போம். அவ­ரு­டைய பதிலுக்­காக காத்­தி­ருக்­கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,-

வடக்குத் தேர்­தலில் கூட்­ட­மைப்பின் சார்பில் போட்­டி­யிட்டு வெற்­றி­யீட்­டிய 28 அங்­கத்­த­வர்­களும் ஏகமனதான தீர்­மா­னத்­துடன் என்னை முத­ல­மைச்­ச­ராக்கும் படி வட­மா­காண ஆளு­ந­ருக்கு உத்தியோகபூர்வ­மாக செய­லாளர் நாயகம் மாவை சேனா­தி­ராசா கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கடிதம் ஒன்றை அனுப்­பி­வைத்­துள்ளார்.

முத­ல­மைச்சர் நிய­ம­னத்­துக்­கான சிபா­ரிசை அனுப்­பி­ வைத்­துள்ளோம். முத­ல­மைச்சர் ஒருவர் யாரிடம் பத­விப்­பி­ர­மாணம் செய்­ய ­வேண்­டு­மென்­பது மாகாண சபை சட்­டத்தில் தெளி­வாக சொல்­லப்­பட்டிருக்­கி­றது.

ஆளு­நரின் உத்­தி­யோ­க­பூர்வ பதில் கிடைத்­ததும் முத­ல­மைச்­ச­ராக எப்­பொ­ழுது சத்­தி­யப்­பி­ர­மாணம் எடுப்பது-? யாரிடம் எடுப்­பது என்­பது பற்றி பரி­சீ­லிக்­க­வுள்ளோம் எனக் கூறினார்.

யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ர­னிடம் இவ்­வி­டயம் குறித்து வினவியபோது, மாவை சேனா­தி­ராசா மூலம் எமது முத­ல­மைச்சர் நியமனத்துக்கான சிபா­ரிசை அனுப்­பி­ வைத்­துள்ளோம். முத­ல­மைச்சர் ஒருவர் யாரிடம் பத­விப்­பி­ர­மாணம் செய்­ய­வேண்­டு­மென்­பது மாகா­ண­சபை சட்­டத்தில் தெளி­வாகச் சொல்­லப்­பட்­டி­ருக்­கி­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ரா­கிய நாங்­களே யாரிடம் முத­ல­மைச்சர் பதவிப் பிர­மாணம் செய்ய வேண்­டு­மென தீர்­மா­னிக்க முடியும். ஜனா­தி­ப­தி­யி­டமோ அல்­லது ஆளுநரி­டமோ பதவிப் பிர­மாணம் செய்­ய­வேண்­டு­மென்ற கட்­டாயம் இல்லை. சாதா­ரண சட்­டத்­த­ரணி ஒரு­வ­ரி­டமும் சத்­தி­யப்­பி­ர­மா­ணத்தை மேற்­கொள்ள முடியும்.
2012 ஆம் ஆண்டும், 1989 ஆம் ஆண்டும் மாகா­ண­சபை முத­ல­மைச்­சர்கள் ஜனா­தி­ப­தி­யி­டமும் ஆளுநரிடமும் பதவிப் பிர­மாணம் மேற்­கொண்­டுள்­ளார்­களே என வின­வி­ய­போது 2012ஆம் ஆண்டு கிழக்கு மாகா­ண­ச­பையில் வென்­ற­வர்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு என்ற கார­ணத்­தினால் அவர்கள் ஜனாதி­ப­தி­யிடம் பதவிப் பிர­மாணம் செய்­தார்கள்.

அதேபோல் 1989 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகா­ண­ச­பையின் முத­ல­மைச்சர் ஆளுநர் முன் பதவிப் பிர­மாணம் செய்­தார்கள். ஆனால், அந்தத் தேவை வடக்கு மாகாணத்திற்கு தேவை­யில்லை. யாரிடம் பத­விப்­பி­ர­மாணம் செய்­ய­ வேண்­டு­மென்­பதை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ரா­கிய நாங்­களே முடிவு செய்வோம் எனவும் குறிப்பிட்டார்.
Read More

September 26, 2013

வடக்கு மாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களாக துறை சார்ந்த நபர்கள் நியமிக்கப்பட உள்ளனர்!!!
by Unknown - 0

வடக்கு மாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களாக அந்த துறைகளை சார்ந்த வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு பேர் நியமிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரகாரம் முதலமைச்சருடன் கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய விடயங்களை உள்ளடக்கிய 4 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையை மாகாண சபை கொண்டிருக்கும்.

இந்த நிலையில் வட மாகாண சுகாதார அமைச்சராக மருத்துவர் சத்தியலிங்கம் நியமிக்கப்பட உள்ளார். இவர்கள் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்டு 20 ஆயிரம் விருப்பு வாக்குகளை பெற்றார். அதேவேளை கிளிநொச்சி மாவட்ட முன்னாள் கல்வி பணிப்பாளர் தம்பிராசா குருகுலராசா கல்வியமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. குருகுலராசா கடந்த மாகாண சபைத் தேர்தலில் 26 ஆயிரம் வாக்குகளை பெற்றார். இவர் மாகாணத்தின் கல்வி துறை தொடர்பில் சிறந்த அனுபவங்களை கொண்டுள்ளார்.

இவர்களை தவிர ஏனைய இரண்டு அமைச்சுக்களில் ஒன்று மன்னாரை சேர்ந்த பொறியியலாளர் ஒருவருக்கு வழங்கப்பட உள்ளதாக தெரியவருகிறது. மற்றைய அமைச்சு யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.கே. சிவஞானம் அல்லது புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகிய இருவரில் ஒருவருக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர். புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண சபைக்கு கூட்டங்களை நடத்துவதற்கான கட்டடங்கள் இல்லை என்பதுடன் அதன் வரவு செலவு என்பனவும் இதுவரை முடிவு செய்யப்படவில்லை.
Read More

தம்மைத் தாமே ஆளுகின்ற பொழுதே தமிழ் மக்களாலும் நிம்மதியாக வாழ முடியும் - சித்தார்த்தன்
by Unknown - 0

தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆளக்கூடிய நிரந்தரமான தீர்வும் அமைதியும் கிடைக்கும்போதுதான் நாம் பெருமைப்படவும் சந்தோஷப்படவும் முடியும் எனவும் ஆதலால் இந்தத் தேர்தல் வெற்றிக்காக வரவேற்புக் கூட்டங்கள் நடத்துதல் , மாலை அணிவித்தல் வெடிகொளுத்தி ஆரவாரம் செய்தல் போன்றவற்றை மக்கள் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு யாழ் . மாவட்டத்தில் 39 ஆயிரத்து 715 வாக்குக்களை பெற்று வெற்றியீட்டிய மாகாண சபை உறுப்பினரும் புௌாட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில் ,

வாக்களிப்பு என்பது இம்முறை எழுச்சி பூர்வமாக இருந்தது . பல மறைமுகமான அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும் மக்கள் துணிந்து மாபெரும் வெற்றியை கூட்டமைப்பிற்குப் பெற்றுக் கொடுத்திருக்கின்றனர் .
யாழ் . மாவட்டத்தில் இடம்பெற்ற வாக்களிப்பின்போது ,

சில வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மையில் நின்ற இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் மக்களை மனரீதியாக அச்சுறுத்தும் வகையில் வெற்றிலைக்கு வாக்களிக்குமாறும் அல்லது வாக்களிக்கச் செல்லவேண்டாமெனவும் அச்சுறுத்தல்களைப் பிரயோகித்திருந்தனர் .

இருப்பினும் மக்கள் பெரும் திரளாக அணிதிரண்டு வாக்குச் சாவடியில் வாக்களித்தனர் . அவர்கள் அச்சுறுத்தல்களிலிருந்து வெளிவந்துவிட்டதை இன்றைய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன .

தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டபோதும் சரி , தேர்தல் இடம்பெறுவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பும் சரி மக்கள் தமது மிகப் பெரிய ஆர்வத்தை தேர்தலையிட்டுக் காட்டாத போதிலும் தங்களுக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவேண்டுமென்ற உறுதிப்பாட்டுடனேயே இருந்திருக்கின்றனர் .

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பது என்பதை தங்களுடைய மிகப் பெரிய போராட்டமாகவும் தமிழ்த் தேசிய இனத்தின் சாத்வீக ஜனநாயகப் போராட்டத்தில் தம்முடைய பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்பதிலும் அவர்கள் உறுதியாக இருந்துள்ளனர் .

அவர்களுக்கு நாங்கள் நன்றி கூறுவது என்பது அவர்களுடைய கொள்கை பற்றுறுதியைக் கொச்சைப்படுத்துவது போலாகும் .

ஏனெனில் அவர்கள் தங்களுடைய கடமையைத்தான் செய்துள்ளனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் மிகவும் ஆர்வமாக இருந்த ஆதரவாளர்களிடம் ஒருவேண்டுகோளை தாழ்மையாக விடுகின்றேன் . வரவேற்புக் கூட்டங்கள் நடத்துதல் வெடிகொளுத்துதல் போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும் . ஏனெனில் இந்த மாகாண சபைத் தேர்தல் ஒரு கொள்கை அடிப்படையில் மக்கள் தங்களது விழிப்புணர்வைக் காட்டி நின்ற தேர்தலாகும் .

தமிழ் மக்கள் தாங்களே தங்களை ஆளக்கூடிய நிலைக்கு வந்து நிரந்தரமான தீர்வும் அமைதியும் கிடைக்கும் போது தான் பெருமைப்படவும் சந்தோஷப்படவும் முடியுமெனவும் இலட்சியத்திற்காக போட்டியிட்ட தேர்தல் தான் இது எனவும் அவர் மேலும் தெரிவித்தார் .
Read More

இரு போனஸ் ஆசனங்களில் ஒன்று அஸ்மீனுக்கு மற்றையது சுழற்சி முறையில் ஐவருக்கும்!!
by Unknown - 0

முஸ்லிம் வேட்பாளருக்கு போனஸ் ஆசனத்தை வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. நடைபெற்று முடிந்த வட மாகணாசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்கு இரண்டு போனஸ் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன. இவற்றில் ஒரு ஆசனத்தை மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளருக்கு வழங்க தீர்மானித்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட அயூப் நஸ்மீன் என்பவருக்கு ஒரு போனஸ் ஆசனம் வழங்கப்பட உள்ளது. ஏனைய போனஸ் ஆசனம், ஐந்து மாவட்டங்களி;லும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற வேட்பாளர்களில் கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு தலா ஒரு ஆண்டு வீதம் மாகாணசபை உறுப்பினர் பதவி வழங்கப்பட உள்ளது.

வட மாகாணசபைக்காக முதலமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேரை அமைச்சர்களாக நியமிக்க முடியும். இதன் அடிப்படையில் அமைச்சர்களை நியமிப்பது குறித்து இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Read More

September 24, 2013

இலங்கையில் அமைதியான முறையில் தேர்தல் நடத்தியமைக்கு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பாராட்
by Unknown - 0

இலங்கையில் இராணுவ மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் மூன்று மாகாணங்களுக்கு அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்பட்டமை தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டர் பேர்ட் (Alistair Burt ) பாராட்டு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் அதிகளவில் வாக்குகளை பயன்படுத்தியமை அவர்களின் ஜனநாயக செயற்பாடுகளில் ஈடுபடும் விருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
மூன்று மாகாணங்களிலும் பெரும்பாலும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெற்றதுடன் அதிகளவான வாக்குகள் பதிவானதாக உள்நாட்டு மற்றும் பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் விபரித்துள்ளனர்.
இலங்கை அரசாங்கமும், மாகாண சபையில் ஆசனங்களை வென்ற கட்சிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும். இலங்கையின் மாகாண ஆட்சியை அர்த்தமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் முன்னெடுக்க இரண்டு தரப்புக்கும் அழைப்பு விடுகின்றோம்.
நீடித்த நல்லிணக்கம் தேவை என்ற செய்தியை இந்த தேர்தல் அனைத்து இலங்கையர்களுக்கும் வழங்கியுள்ளது.
ஆனால் இலங்கையின் சகல பிரஜைகளின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளை அங்கீகரிக்கும் முக்கியமான முதல் படியாக இந்த தேர்தல் இருக்கும்.
வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வசதிகள் மற்றும் தேர்தல் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட விடயங்களை வரவேற்கின்றோம்.
எனினும் அரச வளங்கள் தேர்தல் பிரசாரத்தில் தவறாக பயன்படுத்ப்பட்டமை, வாக்காளர்கள் அச்சுறுத்திய சம்பவங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் கவலையை ஏற்படுத்திள்ளன.
இந்த தீவிர குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Read More

September 22, 2013

யாழ். மாவட்ட விருப்பு வாக்குகள்! சீ.வி.விக்னேஸ்வரன் முதலிடம்
by admin - 0

இலங்கை தமிழரசுக் கட்சியின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரான ஓய்வுபெற்ற நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் 132,255 அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.
யாழ். மாவட்டத்தில் இருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் மாவட்ட செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பாக

சீ.வி.விக்னேஸ்வரன் 132,255 அதிகூடிய விருப்பு வாக்குகளையும்,

அனந்தி சசிதரன் 87,870 விருப்பு வாக்குகளையும்,

தர்மலிங்கம் சித்தார்த்தன் 39,715 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மேலும், பாலச்சந்திரன் கஜதீபன் 29,669 விருப்பு வாக்குகளையும், 

இ.ஆர்னோல்ட் 26,888 விருப்பு வாக்குகளையும்,

கந்தையா சிவஞானம் 26,747 விருப்பு வாக்குகளையும்,

எம்.கே.சிவாஜிலிங்கம் 22,660 விருப்பு வாக்குகளையும்,

ஐங்கரநேசன் பொன்னுத்துரை 22,268 விருப்பு வாக்குகளையும்,

 எஸ்.சுகிர்தன் 20,541 விருப்பு வாக்குகளையும்,

கே.சயந்தன் 20,179 விருப்பு வாக்குகளையும்,

விந்தன் கனகரத்தினம் 16,463 விருப்பு வாக்குகளையும்,

ஏ.பரம்சோதி 16,359 விருப்பு வாக்குகளையும்,

கந்தையா சர்வேஸ்வரன் 14,761 விருப்பு வாக்குகளையும்,

வி.சிவநேசன் 13,479 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.'

இதேவேளை, ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் 

கமலலேந்திரன் 13,632 விருப்பு வாக்குகளையும், 

அங்கஜன் இராமநாதன் 10,034 வாக்குகளையும் பெற்றுள்ளனர்
Read More

ஆனந்த சங்கரி தோல்வி
by admin - 0

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.அனந்த சங்கரி வட மாகாண சபை தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். 

இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக இவர் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி  மாவட்டத்தில் இருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், இலங்கை தமிழரசு கட்சி சார்பாக ப.அரியரட்ணம் 27,264 விருப்பு வாக்குகளையும் குருகுலராஜா 26,427 விருப்பு வாக்குகளையும் பசுபதிப்பிள்ளை 26,132 விருப்பு வாக்குகளையும் திருலோகமூர்த்தி 4,199 விருப்பு வாக்குகளையும் விணுபானந்த குமாரி 2,953 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை, ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக தவநாதன் 3,753 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
Read More

வவுனியா மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள்
by admin - 0

வவுனியா மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளின் இறுதி முடிவுகள் வருமாறு,
பி. சத்தியலிங்கம் – 19656கே. லிங்கநாதன் – 11901
எம். தியாகராஜா – 11681
இந்திரராஜா – 11535

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
தர்மபால செனவிரட்ன – 5148
எ.ஜெயதிலக – 4806
Read More

மொத்த முடிவு: ஒரே பார்வையில் வடமாகாண சபை தேர்தல் முடிவுகள்…
by admin - 0

 யாழ்ப்பாணம் மாவட்டம் 

ஊர்காவற்றுறை 
இலங்கை தமிழரசு கட்சி – 8917
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4164
சோசலிச சமத்துவக் கட்சி – 29
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 21
ஐக்கிய தேசியக் கட்சி – 17 வட்டுக்கோட்டை இலங்கை தமிழரசு கட்சி – 23,442
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 3,763 ஐக்கிய தேசியக் கட்சி – 173
காங்கேசன்துறை 
இலங்கை தமிழரசு கட்சி – 19,596
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4,048
சுதந்திர குழு7 – 62
சுதந்திர குழு6 – 42
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 41
ஐக்கிய தேசியக் கட்சி – 35 மானிப்பாய் இலங்கை தமிழரசுக் கட்சி – 28,210
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 3,898
சுதந்திர குழு6 – 109
ஐக்கிய தேசியக் கட்சி – 88 

கோப்பாய் 
இலங்கை தமிழரசுக்கட்சி – 26,467
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4386
ஐக்கிய தேசியக்கட்சி – 127 உடுப்பிட்டி இலங்கை தமிழரசுக்கட்சி – 18,855
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2,424
ஐக்கிய தேசியக் கட்சி – 57 

பருத்தித்துறை 
இலங்கை தமிரசுக்கட்சி – 17,719
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2,953
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 162
சுதந்திர குழு1 – 80
ஐக்கிய தேசியக் கட்சி – 26 சாவகச்சேரி இலங்கை தமிரசுக்கட்சி – 22,922
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4,193
ஐக்கிய தேசியக் கட்சி – 89 

நல்லூர் 
இலங்கை தமிழரசு கட்சி – 23733
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2651
ஐக்கிய தேசியக்கட்சி – 148 
யாழ்ப்பாணம் 
இலங்கை தமிழரசு கட்சி – 16421
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2416
ஐக்கிய தேசியக்கட்சி – 60 யாழ்ப்பாணம் மாவட்டம் இலங்கை தமிழரசு கட்சி -14ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -02ஆசனங்கள் 

கிளிநொச்சி மாவட்டம் 
கிளிநொச்சி 
இலங்கை தமிழரசு கட்சி – 36323
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7737
ஈழவர் ஜனநாயக முன்னணி – 300 இலங்கை தமிழரசு கட்சி – 03ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 01ஆசனம் 
முல்லைத்தீவு மாவட்டம் முல்லைத்தீவு இலங்கை தமிழரசு கட்சி – 27,620
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7,063
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 199
ஐக்கிய தேசியக் கட்சி – 195 இலங்கை தமிழரசு கட்சி – 04ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 01ஆசனம் 


வவுனியா மாவட்டம்
வவுனியா இலங்கை தமிழரசுக்கட்சி – 40,324
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 16,310
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,967
ஐக்கிய தேசியக்கட்சி – 1,704 இலங்கை தமிழரசு கட்சி – 04ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 02ஆசனங்கள் 
மன்னார் மாவட்டம் மன்னார் இலங்கை தமிழரசுக்கட்சி – 31,818
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 14,696
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 4,436
ஐக்கிய தேசியக்கட்சி – 180 இலங்கை தமிழரசுக்கட்சி – 03ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 01ஆசனம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 01ஆசனம் 

வடமாகாண சபை தேர்தல் முடிவுகள்.. மொத்த முடிவு இலங்கை தமிழரசுக்கட்சி – 28ஆசனங்கள் + போனஸ் 02ஆசனங்கள் = 30ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 07ஆசனங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 01ஆசனம்
Read More

டக்ளசின் கடைசிக் கோட்டையும் தகர்ப்பு.....
by Unknown - 0

இரண்டு பத்தாண்டுகளாக ஈபிடிபியின் கோட்டையாக விளங்கி வந்த, ஊர்காவற்றுறைத் தொகுதியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4700 வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

யாழ்.மாவட்டம், நல்லூர்த் தொகுதியில் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், யாழ்ப்பாணம் தொகுதியில், 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி பெற்றுள்ளது.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், முல்லைத்தீவு மாவட்டத்தில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்கடித்துள்ளது.

இதன் மூலம், முல்லைத்தீவு மாவட்டத்துக்கான ஐந்து ஆசனங்களில், நான்கு ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. ஒரு ஆசனமே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைத்துள்ளது.

கிளிநொச்சித் தொகுதியில், ஆளும்கட்சியை 28 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்கடித்துள்ளது. இதன் மூலம், 4 ஆசனங்களைக் கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

Read More

30 ஆசனங்களுடன் வடக்கை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி...
by Unknown - 0

இலங்கை தமிழரசுக்கட்சி 30 ஆசனங்களுடன் வடமாகாண சபையைக் கைப்பற்றியுள்ளது. வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் போனஸ் ஆசனங்கள் இன்றி இலங்கை தமிழரசுக்கட்சி 28 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

ஒவ்வொரு மாகாணத்திற்கும் 2 போனஸ் ஆசனங்கள் வழங்கப்படுவது வழமை. அதற்கமைவாக அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ள இலங்கை தமிழரசுக் கட்சிக்கு மேலதிக 2 ஆசனங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.


Read More

மாத்தளை ஐ.ம.சு.மு. வசம்
by Unknown - 0


மத்திய மாகாண சபைத் தேர்தலின் மாத்தளை மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1,35,128
ஐக்கிய தேசியக் கட்சி - 63,365
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 10,498

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 225,268
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 15,336
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 240,604
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 366,549

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 3 ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 1 ஆசனம்

Read More

வடமாகாணத்தின் 14 தொகுதிகளையும் தமிழரசுக் கட்சி கைப்பற்றியது!!
by Unknown - 0


இதுவரையில் வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் பிரகாரம் வட மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களிலுள்ள 14 தேர்தல் தொகுதிகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி தம்வசப்படுத்தியுள்ளது.

அத்துடன் ஐந்து மாவட்டங்களிலும் வெளியான தபால் மூல வாக்களிப்பிலும் தமிழரசுக் கட்சி முன்னணியில் இருக்கின்றது.

தமிழரசுக் கட்சியானது வடமாகாண சபைக்கான அத்தனை தொகுதிகளையும் வெற்றிகொண்டு வரலாற்று சாதனை புரிந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Read More

மன்னார் மாவட்டமும் தமிரசுக்கட்சியிடம்
by Unknown - 0


வட மாகாண சபை தேர்தலின் மன்னார் மாவட்ட வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. இம்முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம் வருமாறு.


இலங்கை தமிழரசுக்கட்சி 31,818
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 14,696
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4436
ஐக்கிய தேசியக்கட்சி  - 180
Read More

வவுனியாவில் தழிரசுக்கு கட்சிக்கு 4 ஆசனங்கள்: முன்னணிக்கு 2
by Unknown - 0

வவுனியா மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி 41,225 வாக்குகளை பெற்று 4 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 16,633 வாக்குகளை பெற்று இரண்டு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.
Read More

வடமாகாண சபை தேர்தல்- முல்லை, கிளி, வவுனியாவில் கூட்டமைப்பு மாபெரும் வெற்றி!
by Unknown - 0

முல்லைத்தீவு மாவட்ட மொத்த தேர்தல் முடிவின்படி தமிழத் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளதோடு 5இல் 4 ஆசனங்களையும் பெற்றுள்ளது. அத்தோடு கிளிநொச்சி மாவட்டத்திலும் கூட்டமைப்பே அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் முடிவுகள்

இலங்கை தமிழரசு கட்சி - 27,620 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,063 
ஐக்கிய தேசியக் கட்சி -195 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199 
மக்கள் விடுதலை முன்னணி - 30 

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,683 
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,002 
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 35,187 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,815

இலங்கை தமிழரசு கட்சி - 36,323
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,737
ஈழவர் விடுதலை முன்னணி -300
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு -60
ஐக்கிய தேசியக் கட்சி- 53
சுயேட்சைக்குழு-2 -22
ஏனையவை - 46

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 68600
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 49265
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 44540
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4725

வவுனியா மாவட்ட தேர்தல் முடிவுகள்
இலங்கை தமிழரசு கட்சி - 40324
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 16310
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் -1967
ஐக்கிய தேசியக் கட்சி- 1704
ஜனநாயக ஐக்கிய கட்சி 170

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 94644
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 65410
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 61019
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4391

யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் முடிவுகள்
யாழ். நல்லூர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 23733
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2651
ஐக்கிய தேசியக் கட்சி - 148
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  62
சுயேட்சைக்குழு1  38

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 42466
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 28424
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 26774
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1650
யாழ்ப்பாணம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16421
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2416
ஐக்கிய தேசியக் கட்சி - 60
சுயேட்சைக்குழு1  40
சுயேட்சைக்குழு1 - 34
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 28610
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 20303
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 19063
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1240

யாழ். ஊர்காவற்துறை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8917
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4164
சோஷலிச சமத்துவக் கட்சி  29ஜனநாயக ஐக்கிய கட்சி 21
ஐக்கிய தேசிய கட்சி - 17

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 21548

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 14604
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 13227
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1377


யாழ்.காங்கேசன்துறை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 19596
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4048
சுயேட்சைக்குழு7 - 62
சுயேட்சைக்குழு6 - 42

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 61196
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 26021
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 23947
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2074

யாழ்.மானிப்பாய்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 28210
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  3898
சுயேட்சைக்குழு6 - 109
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 51722
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 35116
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 32585
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2531

யாழ்.வட்டுக்கோட்டை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 23442
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  3763
ஐக்கிய தேசிய கட்சி - 173
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள்  45195
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  30257
செல்லுபடியான மொத்த வாக்குகள்  27736
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2521

யாழ்.உடுப்பிட்டி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 18855

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2424
ஐக்கிய தேசிய கட்சி  57
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 37926
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 23266
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 21511
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  1755

மாத்தளை மாவட்ட தேர்தல் முடிவுகள்


இரத்தோட்டை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 29568
ஐக்கிய தேசியக் கட்சி - 14103 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 5040
 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 235
ஜனநாயகக் கட்சி - 1402
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 89978
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 58192 
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 53627 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4565

மாத்தளை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 23138
ஐக்கிய தேசியக் கட்சி - 15025
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 3580
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2994
ஜனநாயகக் கட்சி - 1231

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 80854
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 50301
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 47036
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3265


கண்டி மாவட்ட தேர்தல் முடிவுகள்
மஹாநுவர

ஐக்கிய தேசியக் கட்சி - 10047
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 9156
ஜனநாயகக் கட்சி  1741
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  498
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 293
மலையக மக்கள் முன்னணி 234

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 38364
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 23367
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 22426
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 941
Read More

September 21, 2013

கிளிநொச்சியும் தமிழரசுக்கட்சி வசமானது
by admin - 0

கிளிநொச்சி மாவட்டம்
Kilinochchi District 
இலங்கைத் தமிழரசுக் கட்சி Ilankai Tamil Arasu
Kadchi
37,079 - ஆசனங்கள் - 3 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு United
People's Freedom Alliance
7,897 - ஆசனம் - 1

வடமாகாண சபை தேர்தலின் கிளிநொச்சி மாவட்ட வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.
இம்முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம் வருமாறு. 
இலங்கை தமிழரசு கட்சி - 36323
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7737 ஈழவர் ஜனநாயக முன்னணி – 300 செல்லுப்படியான வாக்குகள்       45,540
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்          4,737
அளிக்கப்பட்ட வாக்குகள்             49,265
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்     68,600
Read More