Latest News
Showing posts with label விவசாயம். Show all posts
Showing posts with label விவசாயம். Show all posts

September 14, 2021

சேதன பசளை உற்பத்தியினை ஊக்குவிக்கும் முகமான விழிப்புணர்வு நடவடிக்கை
by Editor - 0

சேதன பசளை உற்பத்தியினை ஊக்குவிக்கும் முகமான விழிப்புணர்வு நடவடிக்கை ஒட்டுசுட்டான் விவசாயா போதனாசிரியர் பிரிவில் வட மாகாண விவசாய திணைக்களத்தின் வழிகாட்டலில் CSIAP திட்டத்தின் அனுசரணையில் பிரதி மாகாண விவசாயப் பணிமனையின் ஆலோசனையில் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தின் ஒழுங்கமைப்பில் இன்று இடம்பெற்றது இவ் நிகழ்வில் வட மாகாண விவசாய பணிப்பாளர் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின்  வட மாகாண பிரதி பணிப்பாளர் முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பண்ணை முகாமையாளர் விவசாய போதனாசிரியர்கள் கலந்து கொண்டனர் இதில் சேதன பசளை உற்பத்தி சம்பந்தமான தெளிவூட்டல்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது








Read More

April 22, 2020

லாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி பற்றி அறிந்து கொள்ளுங்கள் vivasaayam
by admin - 0


 வேளாண்மை
லாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி பற்றி அறிந்து கொள்ளுங்கள்

 இயற்கை விவசாயத்தில் ஊடுபயிர் சாகுபடி என்பது ஒரு அங்கமாகும். எல்லா விவசாயிகளும் ஒரே பயிரை மட்டும் நம்பியிராமல் அதனுடன் மற்றொரு பயிரையும் சேர்த்து சாகுபடி செய்தோம் என்றால் கொஞ்சம் அதிகமாக வருமானம் எடுக்க முடியும் அதாவது மானாவாரி பகுதியில் விவசாயிகள் சோளத்தை மட்டும் பயிர் செய்தீர்கள் என்றால் குறைந்த லாபம் மட்டும் பெற முடியும். ஒருவேளை மழை பொய்த்து விட்டது என்றால் சோளப்பயிர் நமக்கு நஷ்டத்தை தந்து விடும். எனவே அந்த சோளப்பயிர் நடுவே வேறு ஏதேனும்  ஊடுபயிர் போட்டு இருந்தால் அதன் மூலம் நமக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக ஊடுபயிர் மூலம் 40 லிருந்து 60% கூடுதலாக லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது



ஊடுபயிரின் அவசியம் மற்றும் நமக்கு கிடைக்கும் நன்மைகள்
முதன்மை பயிருக்கு பாதுகாப்பு அரணாகவும், நோய் பூச்சித் தாக்குதலை தடுத்தும் விடுகிறது.
மண் வளம் பெருகி, நுண்கிருமிகள் மூலம் மண்ணிற்கு தேவையான அங்ககச் சத்தை அதிகரிக்க செய்துவிடுகிறது.
ஒரு இலை தாவரகளான சோளம், கம்பு, மக்காச்சோளம் போன்ற பயர்களில் இரு இலை தாவரமான பாசிப்பயிறு, தட்டபயிறு, நிலக்கடலை, உளுந்து போன்றவற்றை ஊடுபயிராக பயிரிடலாம்.
மானாவாரி நிலங்களில் பயிரிடப்படும் பயிர்கள் இலைகளின் மூலம் தான் 80% தங்களுக்குத் தேவையான உணவு உற்பத்தியை சூரிய ஒளியின் மூலம் எடுத்துக்கொள்கின்றன. சூரிய ஒளி இலைகளில் அதிக அளவு இருந்தால் உணவு உற்பத்தி கூடவோ குறையவோ வாய்ப்பு இருக்கிறது. ஆகவே இந்த சூரிய ஒளியை சற்று குறைக்கும் விதத்தில் நாம் ஊடு பயிர் செய்தால் நிச்சயம் நமக்கு லாபம் கிடைக்கும்.
விவசாயிகளின் மந்திரம் எப்படி இருக்க வேண்டும் என்றால் "ஒரு மடங்கு நிலம், இருமடங்கு உற்பத்தி, மூன்று மடங்கு லாபம்" என்ற விதத்தில் அமைய வேண்டும்




குறைவில்லா லாபம் தரும் ஊடுபயிர் சாகுபடி
விவசாயி குறைவில்லா வருவாய் பெற ஒரு முக்கிய பயிர்,அதனுடன் ஊடுபயிர், வரப்பு பயிர், சால் பயிர் சாகுபடி என அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்தால் அதிக லாபம் பெற முடியும்.  தற்பொழுது மானாவாரி நிலங்கள் விவசாயிகள் கீழ்க்கண்ட முறைகளை கடைபிடிக்கிறார்கள் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நிலக்கடலையில் நான்கு அல்லது 6வரிசைக்கு ஒரு வரிசை ஆமணக்கு பயிர் செய்கிறர்கள். இதனால் நிலக்கடலையில் வரக்கூடிய அனைத்து பூச்சிகளும் முதலில் ஆமணக்கு பயிரை தாக்குகிறது. அதனால் நிலக்கடலை எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.நமக்கு ஆமணக்கில் இருந்து ஒரு லாபம் அதே சமயத்தில் ஆமணக்கு பயிரில் இருந்து  மற்றொரு லாபம் கிடைக்கிறது. இந்த ஊடுபயிர் சாகுபடி மூலம் நிலத்திற்கு தேவையான அங்ககச் சத்துக்கள் எல்லாம் நன்கு கிடைக்கிறது.

முதன்மை பயிருக்கு அருகில் பயிறு வகைகளான தட்ட பயிறு, உளுந்து காராமணி, பாசிப் பயிறு, மொச்சை, அவரை போன்றவற்றை போடுவதால் அவற்றின் மூலம் நமக்கு மகசூலும், அறுவடைக்கு பின்பு அதன் கழிவுகள் மண்ணிற்கு உரமாகிறது. எடுத்துக்காட்டாக பருத்தியில் ஊடுபயிராக என்ன என்ன பயிர் போடலாம் என்றால் கண்டிப்பாக பயறு வகையான உளுந்து /பாசிப்பயறு தட்டைப்பயறு, வெண்டை கொத்தவரங்காய், அவரை போன்ற 80 முதல் 85 நாட்கள் வயது உடைய பயிரை பயிரிடலாம்.


வரப்பு பயிராக பருத்தி வயலைச் சுற்றி சூரியகாந்தி பயிர் செய்யலாம் . இந்த சூரியகாந்தி பயிர் பருத்திக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும். அதே சமயம் சூரியகாந்தி வயலைச் சுற்றி சோளம், கம்பு போன்றவற்றை வரப்புப் பயிராகவும் ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம். தென்னையில் ஊடுபயிராக இஞ்சி, வாழை, கோக்கோ, முருங்கை, பயறு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை சாகுபடி செய்து அதன் மூலம் நாம் அதிக லாபம் பெறலாம்
தென்னைகேற்ற ஊடுபயிர்
பொள்ளாச்சி விவசாயிகள் தென்னை மரத்தில் மிளகு கொடிகளை ஏற்றி விடுகிறார்கள். இதன் மூலம் தென்னையில் வரும் வருமானத்தை விட மிளகில் அதிக லாபத்தை பெற்று விடுகிறார்கள்.  தென்னையில் புத்திசாலித்தனமாக லாபம் தரும் மிளகினை ஊடுபயிர் செய்வதால் நல்ல லாபம் பெற்று வருகின்றனர்.

வாழை சாகுபடிக்கு ஆடிப்பட்டம் மிகச்சிறந்ததாகும். தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால், தற்போது நடவு செய்யும் பயிரின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பொதுவாக தென்னையில் ஏதோ ஊடுபயிர் இருக்க வேண்டும். அது தென்னை வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இலைவாழை, மஞ்சள், இஞ்சி, ஏலக்காய், ஜாதிக்காய், கருணைக்கிழங்கு, பைனாப்பிள், பாக்கு மற்றும் கறிப்பலா போன்றவை தென்னையின் சிறந்த ஊடுபயிர்களாகும். இலைவாழை பயிரிடும் போது தோப்புகளுக்கு இயற்கையாகவே குளிர்ந்த சூழ்நிலை கிடைக்கிறது. ரகங்கள் இலைவாழைக்கு, பூவன், கற்பூரவள்ளி, மொந்தன் வாழை ரகங்கள் சிறந்ததாகும். திசு வாழை அல்லது கிழங்கு மூலம் நடவு பயிரிடலாம். ஒரு ஏக்கர் தோப்பில், 4.5 அடிக்கு, 4.5 அடி இடைவெளியில் இரண்டாயிரத்து, 150 வாழைக்கன்றுகள் வரை நடவு செய்யலாம். தார்வாழையை விட, இலைவாழை சாகுபடி எளிதாகும். இவற்றில் மரத்துக்கு முட்டுக்கொடுக்கும் வேலை மற்றும் திருட்டு பயம் இருக்காது. காற்று, மழையால் ஏற்படும் பாதிப்புகளும் மிக குறைவு.


கரும்கேற்ற ஊடுபயிர்
கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் கரும்பு பயிரில் ஊடுபயிராக உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளையும், சணப்பை மற்றும் தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உர பயிர்களையும் ஊடுபயிராக சாகுபடி செய்து மண் வளத்தை அதிகரித்து உபரி வருமானம் பெறலாம். இந்த ஊடுபயிர் சாகுபடி மூலம் கரும்பு பயிர் இளங்குருத்து புழு தாக்குதலில் இருந்து பாதுகாப்பதுடன் செடிகள் வளர்வதையும் கட்டுப்படுத்துகிறது. கரும்பு பயிரில் ஊடு பயிர் செய்யும் போது,  குறுகிய வயதுடைய கிளைகள் இல்லாத மேலோட்டமான வேர்களைக் கொண்ட உளுந்து, பச்சைப்பயறு,  சணப்பை, தக்கைப்பூண்டு போன்ற பயிர்களை கரும்பு நடவு செய்த பின்பு கரும்பு பார்களுக்கிடையே ஒரு வரிசையிலோ அல்லது இரு வரிசையிலோ நடவு செய்ய வேண்டும். மணற்பாங்கான நிலத்திற்கு சணப்பையும், களிமண் நிலத்திற்கு தக்கைப்பூண்டும் ஊடுபயிர் விதைப்பு செய்ய வேண்டும். சணப்பை மற்றும் தக்கைப்பூண்டு பயிர்களை 45-50 நாட்களில் பூக்கும் தருணத்தில் மடக்கி உழுது விடுவதால் நிலத்தில் அங்ககப் பொருட்கள் அதிகமாகி உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது.எனவே கரும்பு நடவு செய்யும் விவசாயிகள் உளுந்து, பாசிப்பயறு போன்ற ஊடுபயிர்களை சாகுபடி செய்து உபரி வருமானம் பெறுவதோடு, சணப்பை மற்றும் தக்கைப்பூண்டு பயிர்களை பயிரிடுவதால் மண் வளத்தைப் பெருக்கி பயன் அடையலாம்.

கரும்பு வயலில் ஏக்கருக்கு 4 கிலோ உளுந்து அல்லது பாசிப்பயறு அல்லது சோயா மொச்சை 6 கிலோ கரும்பு நட்ட 3-ம் நாள் ஊடுபயிராக விதைக்கலாம். நீடித்த நவீன கரும்பு சாகுபடியில் அதிக இடைவெளியில் இருப்பதால் ஊடுபயிராக காய்கறிகள் பயறுவகைகள், வெள்ளரி, தர்பூசணி, பசுந்தாள் உர பயிர்களை பயிர் செய்யலாம். மேலும் ஊடுபயிர் செய்வதால் அதிக லாபம், களை கட்டுப்பாடு, மண் வளம் பெருக்க முடியும்.

பருத்திக்கேற்ற ஊடுபயிர்
பருத்தி விவசாயிகள் ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலம் கணிசமான லாபம் பெறலாம். பருத்தி நடவு 6 வரிசைக்கும் ஒரு வரிசை தட்டப்பயறு  நடவு செய்ய வேண்டும். அல்லது மக்காச்சோளம் இதேபோல நடவு செய்யலாம். மேலும் ஊடுபயிராக வரப்பு ஓரங்களில் வெண்டை அல்லது ஆமணக்கு பயிரிடலாம்.
பருத்தி பயிரில் தட்டப்பயறு ஊடுபயிராக சாகுபடி செய்வதால் பொறிவண்டு இனப்பெருக்கம் அதிகமாகி அசுவுனியை பிடித்து உண்ணும்.
பருத்தியை தாக்கும் காய்ப்புழு முதலில் சூரியகாந்தி பயிரையே தாக்குவதால் கட்டுப்படுத்துதல் இலகுவாகிறது. மேலும் சூரியகாந்தியின் மகரந்த்தினை பருத்தியின் சூழின் உன்னியாக கண்ணாடி இலைப்பூச்சி அதிகம் விரும்பி உண்ணும். இவ்வாறு சாறு உறிஞ்சும் பூச்சிகளையும், காய்ப்புழுக்களின் இளம் பூச்சிகளையும் உண்ணும்.
மக்காச்சோளம் ஊடுபயிராக விதைப்பதால் அதன் மகரந்தத்தை உண்டு, பொறிவண்டு இனப்பெருக்கம் அதிகமாகிறது  மேலும் இது பருத்தியை தாக்கும்
வெண்டை ஊடுபயிராக பயிரிடுவதால், பருத்தியினை தாக்கும் காய்ப்புழுக்கள் அதிகமாக வெண்டைப் பயிரையே விரும்பி உண்பதால் அதன் தாக்குதல் வெண்டைப் பயிரில் அதிகமாக இருக்கும். இதனை கட்டுப்படுத்துதல் 6 வரிசைக்கு ஒரு வரிசை பயிரிட்டு புழுக்களை கவர்ந்து அழிக்க வேண்டும்.
வரப்பு ஒரங்களில் ஆமணக்கு பயிரிடுவதால் பருத்தியினை தாக்கும் புகையிலை புழு (புரோடினியா) தாக்குதல் பருத்தி பயிருக்கு குறைகிறது. மேலே குறிப்பிட்டுள்ள ஊடு பயிர்களை தினந்தோறும் கண்காணித்து முட்டை குவியல் புழுக்களை கையால் பொறுக்கி அழிக்கவும். மேலும் பருத்தியை தாக்கும் அனைத்து காய்ப்புழுக்களையும் ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தலாம்.
இப்படி நாம் முதன்மை பயிருடன் ஊடுபயிராக சாகுபடி செய்வதால் மிகுந்த நன்மை கிடைக்கும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருப்பீர்கள் ஆகவே இந்த மானாவாரி சமயத்தில் கண்டிப்பாக ஊடுபயிரை பயன்படுத்துங்கள். உண்மையாகவே உங்களது வருமானத்தை ஊடுபயிர் சாகுபடி இரட்டிப்பாக்கும் என்பதில் ஐயமில்லை.

என்.மதுபாலன்
ஓய்வுபெற்ற வேளாண்துறை உதவி இயக்குனர்,
9751506521
தர்மபுரி மாவட்டம்
Read More

October 03, 2017

தென்னையின் மகசூலை பாதிக்கும் பூச்சிகளை ஒழிக்கும் முறைகள்
by admin - 0

காண்டா மிருக வண்டு 
காண்டா மிருக வண்டு

காண்டா மிருக வண்டு விரியாத குருத்து, மலராத பாளை முதலியவற்றை கடித்து உண்ணும். இதைக் கட்டுப்படுத்த எருக் குழிகளில் பச்சை மஸ்கார்டினே பூசணத்தை இட்டு, இளம் புழுக்களை அழிக்கலாம். பாதிக்கப்பட்ட மரத்தில் உள்ள வண்டு துளைத்த ஓட்டை வழியாக இரும்புக் கம்பியை செலுத்தி வண்டை எடுக்க வேண்டும். 

மரத்தில் உள்ள துளைகளில் 1-2 செல்பாஸ் மாத்திரைகளை இட்டு களி மண்ணினால் மூடி விட வேண்டும்.

 மட்டைகளின் அடி பாகத்தின் 45 நாட்கள் இடைவெளியில் 2 நாப்தலின் உருண்டைகளை வைத்து மண்ணால் மூடி இதனை கட்டுப்படுத்தலாம். 

கருந்தலைப்புழு: இலை மடிப்புகளில் இப்புழுக்களால் தாக்கப்பட்ட மரங்கள் நோயுற்றது போல் காணப்படும். அதிகம் பாதிக்கப்பட்ட மரங்களின் இலைகள் காய்ந்து, தீய்ந்து தொங்குவதுடன் குறும்பைகளும் உதிரும். இலை மடிப்புகளில் புழுக்களின் கழிவுப் பொருளும் சக்கையும் ஒட்டிய, நூலாம் படை நூலில் இருந்து பச்சையத்தை சுரண்டி தின்னும்.

 2 கி. மாலெத்தியான் தூளை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஓலைகளின் அடி பாகம் நன்றாக நனையும்படி கைத் தெளிப்பானால் தெளிக்க வேண்டும். சேதப்படுத்தப்பட்ட இலைகளையும், மட்டைகளையும் நீக்கி அழிக்க வேண்டும். 

அதனுள் 5மி.லி நுவக்ரான் மருந்தை உட்செலுத்தி சரிபார்த்து மூடவும். பைட்டலான் மருந்து கலந்து கலவையை செலுத்து முன் எல்லா காய்களையும் பறித்து விட வேண்டும். இம்முறை இப்புழுவினால் அழிவு அதிகமாக இருந்தால் மட்டும் மேற்கொள்ள வேண்டும். மேலும் இப்புழுக்களின் பெருக்கத்தை தடுக்க அவைகளைத் தாக்கும் ஒட்டுண்ணிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை தோப்பில் விட்டு கூட்டுப் புழுவை அழிக்கலாம்.
Read More

May 15, 2017

26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.
by admin - 0

26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.
 

திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம்.தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது.

இந்தத் தலை நகரந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈடிணையற்ற போராளிகளை உவந்தளித்தது. மானிப்பாயில் பிறந்த பொழுதும் திருமலை அரசடி வாழைத் தோட்டம் என்னும் ஊர்தான் இவரை சிறு பராயத்தில் இருந்து மாபெரும் வீரனாக வீரத்தை ஊட்டி வளர்த்த மண்.

தந்தை ஜோசப்புக்கும் தாய் திரேசம்மா (பரிபூரணம்) அவர்களுக்கும் மகனாக பிறந்தவன் தான் பிரிகேடியர் சொர்ணம். இவனது இயற்பெயர் அன்ரனிதாஸ். இவன் இளைமைக் காலத்திலேயே குறும்புத்தனம் மிக்கவனாகவும் உயர்ந்த கம்பீரமிக்க தோற்றமுடைய ஆற்றல் மிக்க சிறுவனாக வளர்ந்து வந்தான்.

பாடசாலையிலும் திறமையுடன் படித்து உயர்தரம் வரை சென்றான். உடற் பயிச்சியிலும், தற்காப்புக் கலையிலும் சிறப்புறச் செயற்பட்டு சிறந்த மாணவனாக திகழ்ந்தான். மாணவப் பருவத்தில் பொதுப் பணிகள், வேலைகள் என்றால் இவன் தான் முன்னிப்பான்.
 
இக்கால கட்டத்தில்தான் தமிழர்கள் வாழ்ந்த மண்ணை சிங்களவர் சிங்கள பூமியாக்க மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் தமிழர்களுக்கு எங்கும் எதிலும் அநீதி, படுகொலைகள்இ கற்பழிப்புக்கள் இதைக் கண்டு சிறுவயதிலே கொதித்தெழுந்தான்.

திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் உயர்தரம் பயின்றுகொண்டிருந்த வேளையில் சிங்கள இராணுவத்தினரும் இனவாதிகளினதும் கொடூரங்களைக் கண்டு இவ் அநீதியை தட்டிக்க கேட்க வேண்டும் என்றால் போராடித்தான் ஆகா வேண்டும் என்று தன்னை போராட்டத்தில் இணைத்துக் கொள்ள விரும்பினான் அக்காலகட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் பல்வேறு வழிகளில் போராடிக் கொண்டிருந்தன. அதில் சரியான பாதையை தேர்தெடுப்பது என்பது அக்கால கட்டத்தில் மிகவும் சிக்கலான விடயம்.

ஆனால் தனது இலட்சிய போராட்டத்திற்கு சரியானது விடுதலைப் புலிகள் இயக்கம் தான் என்று 12.09.1983ல் தன்னை விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொள்கிறான். எமது தேசியத் தலைவரின் செயற்பாட்டிற்கு ஊடாகச் சரியானதோர் முடிவெடுத்து எமது போராட்டத்தின் அத்திவாரக்கற்களாக திகழ்ந்த மூத்த தளபதிகளில் இவனும் ஒருவனாக நின்று போராட்டத்தை வளர்த்தெடுத்தான்.
 

சொர்ணம் என்ற பெயருடன் சமர்ப்புலி வளரத் தொடங்கியது. பயிற்சிக்காலங்களில் திறம்படச் செயற்பட்ட இவன் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, மணலாறு மாவட்டங்களிலும் அதன் காடுகளிலும் எதிரியை திணறடித்தவன் இவ் மாவட்டங்களில் பெரும் காடுகளுக் கூடாக நீண்ட நடை பயணத்தை சோர்வின்றி மேற்கொண்டு போராட்ட பணிகளை திறம்படச் செயற்படுத்தினான்.

வேவு அணி, பதுங்கித்தாக்கும் அணி, விநியோக அணி, வழிகாட்டிகள் என காட்டிற்குள் பல அணிகளை உருவாக்கி கிழக்கு மாகாணத்தில் எதிரியின் தடைகளை எல்லாம் சவாலாக ஏற்று எதிர்த்து நின்று போராடி சாதனைகள் படைத்தவன்.

இவனது போரிடும் ஆற்றலையும் முடிவெடுக்கும் தன்மையையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இனங்கண்டு இதற்கமைவாக தலைவர் அவர்களால் கொடுக்கப்படும் கட்டளைகளுக்கு செயல்வடிவம் கொடுத்துக்காட்டிய கட்டளைத் தளபதியாகத் திகழ்ந்தான். சொர்ணம் கதைக்கிறான் என்றாலே சிங்கள இராணுவத்திற்கு கதிகலங்கும் அந்த அளவுக்கு தனது போரிடும் ஆற்றலை வளர்த்துக்கொண்டவன்.

இவ்வாறு இவன் வெற்றிவாகை சூடிய சமர்க்களங்களே அதிகம் ஆகாயக் கடல் வெளிச்சமர், மாங்குளம், தவளைப் பாய்ச்சல், மண்டைதீவு, மண்கிண்டி மலை, இதய பூமி, புலிப்பாய்ச்சல். சூரியக் கதிர், ஓயாத அலைகள் எனப் பல வெற்றிச் சமர்களை எல்லாம் வழிநடத்திய சமரக்களத் தளபதிகளில் இவனும் ஒருவனாகத் திகழ்ந்தான். இவன் படை ஒழுங்கு படுத்தும் சிறப்பை புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் கண்டு வியப்படைந்தோம்.

ஜெயசீக்குறு படையினர் மீது திட்டமிட்ட தாக்குதல் மேற்கொள்ள பலமுறை தேசியத் தலைவரிடம் அனுமதி கேட்ட போதும் கிடைக்கவில்லை. ஜெயசிக்குறு படை ஒட்டிசுட்டான் வரை முன்னேறி நிலைகொண்டிருந்த வேளையில் தேசியத் தலைவர் அவர்களால் ஒட்டிசுட்டான், நெடுங்கேணி, கருப்பட்ட முறிப்பு போன்ற படைத்தளங்கள் மீது திட்ட மிட்ட தாக்குதல் மேற்கொள்வதற்கு தளபதி சொர்ணத்திற்கும், தளபதி ஜெயம் அவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகின்றது. பல வருடங்களாக ஆமை வேகத்தில் நகர்ந்து வந்த ஜெசிக்குறு இராணுவ நடவடிக்கையை மூன்று நாட்களில் பழைய நிலைக்கு வீரட்டியடித்த பெருமை இந்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணத்தையும் சாரும்.

இம்ரான் பாண்டியன் படையணியின் முதல் தளபதியாக விளங்கிய இவன் தலைவரை பாதுகாக்கும் பணியையும் பொறுப்பேற்றான். திறம்படச் செய்த வீரத்தளபதியுடன் தலைவர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட சிலர் துரோகம் இழைத்த போது தலைவருக்கு அருகில் நின்று துரோகத்தை துடைத்தெறிந்தவன். தலைவர் அவர்களின் நம்பிக்கைக் குரியவர்களில் இவனும் ஒருவன்.

இக்காலகட்டத்தில்தான் திருமணம் செய்யுமாறு தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதன் படி ஜெனனி என்ற போராளியைத் திருமணம் செய்து 3 பிள்ளைகளை பெற்றெடுத்தான். தனது திருமணத்திற்கு தலைவர் அவர்கள் வருவார் என்பதால் தனது இடுப்பு வேட்டிக்குள் கைத்துப்பாக்கியை வைத்திருந்தபடி தாலி கட்டினான்.

அந்தளவுக்கு தலைவர் அவர்களின் பாதுகாப்பில் என்நேரமும் விழிப்பாக இருந்து தலைவர் அவர்களை ஆழமாக நேசித்தான். எமது விடுதலைப் போராட்ட விழுமியங்களில் இருந்து என்றுமே அவன் தவறியதில்லை. எமது விடுதலை மரபையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவன். அதே போல் தனது போராளிகளையும் வளர்த்தெடுத்தான்.

நான் சொர்ணமண்ணையோட நின்ற நான் என்றால் வேறு எந்தத் தளபதிகளும் எந்தக் கேள்விகளும் இன்றி அவனுக்கு கடமை வழங்குவார்கள். அந்தளவுக்குப் போராளிகளை புடம் போட்டு வளர்த்த ஆற்றல் மிக்க தளபதியாவான். இயக்கத்தில் இக்கட்டான காலங்களில் எல்லாம் திறம்படச் செயற்பட்டு தடைகளை உடைத்தெறிந்த தளபதிகளில் இவனும் ஒருவன்.

இந்த வீரத்தளபதி கேப்பாபுலவிலும், தேவிபுரத்திலும் ஊடறுப்பு தாக்குதல்களை வழிநடத்தி நூற்றுக்கணக்கான இராணுவத்தை கொண்று சிங்கள படையை திணறடித்தான். தேவிபுர ஊடறுப்பு தாக்குதலில் விழுப்புண் அடைந்து தனது கால் இயலாத நிலையிலும் முப்படைகளையும் பொறுப்பெடுத்து இறுதிமூச்சு உள்ளவரை எதிரியோடு சண்டைபிடித்துக் காட்டிய வீரத்தளபதி. இவன் தமிழீழ விடியலுக்காகவும் தமிழ் மக்களின் சுபீட்சமான வாழ்விற்காகவும் 26 வருடங்கள் அயராது உழைத்த எமது கட்டளைத் தளபதி.

இவனது மூர்க்கமான சமரைக் கண்டு இராணுவம் கதிகலங்கியது. அதன் எதிர் தாக்குதலாக இராணுவம் பெருந்தொகையில் தமிழ் மக்களை கொண்றுகுவித்தது. மக்களுக்காகப் போரிடும் போது மக்களே இறக்கின்றார் என்ற போது இவனால் எதுவும் செய்ய முடியவில்லை.

எமது மண்ணினதும் மக்களினதும் விடிவிற்கான போராட்டத்தை நேசித்த இவனால் போராட்டத்தைக் கைவிட்டு சரணடைய முடியவில்லை. எனவே போராட்ட மரபுக்கேற்ப தனது இலட்சிய உறுதிப்பாட்டுடன் தன்னை தமிழீழ விடியலுக்காக 15. 05. 2009ம் நாள் தன்னை விதையாக்குகிறான்.

-ஈழம்ரஞ்சன்-
   
Read More

May 06, 2017

மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் செய்முறை
by admin - 0

மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் செய்முறை

கோமியம்(மாட்டு சிறுநீர்)            15 லிட்
சாணம்                 35 கிலோ
பூசணி                     5கிலோ
நாட்டுசர்க்கரை     2 கிலோ
பப்பாளி                  3கிலோ
பேரீச்சம்பழம்      1/2 கிலோ
கடலைப் புண்ணாக்கு 5கி
தயிர்                      1/2 லிட்
 
200லிட் டிரம்மில் முதலில் கோமியம் மற்றும் சாணத்தினை மேற்கூறிய அளவில் நன்கு கலந்து இரண்டு நாள் மூடி வைக்கவும்.

3ம் நாள் காலை அக்கலவையுடன் நன்கு கூழாக்கப்பட்ட பூசணி ,பப்பாளி கடலைபுண்ணாக்கு, நாட்டு சர்க்கரை, தயிர் மற்றும் பேரீச்சம்பழம் இட்டு நன்கு கலக்கி 130 லிட் நீருடன் கலந்து  மூடி வைக்கவும்.

5ம் நாள் ,8ம் நாள் ,11ம் நாள் குச்சி வைத்து கலக்கிவிட்டு பின் குச்சியை கழுவி வைக்கவும்.

12 வது நாட்களில் இக்கரைசல் தயாராகிவிடும்.

நிறைந்த நுண்ணுயிரிகளுடன் அனைத்து சத்துகளுடன் கூடிய எளிமையான விலைகுறைவான இயற்கை இடுபொருள்.

அனைத்து பயிர்களுக்கும் சிறப்பான வளர்ச்சி கொடுக்கக் கூடிய அருமையான கரைசல்.
Read More

January 28, 2017

மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு நெல் ரகம்... சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை!
by admin - 0

விழித்துக்கொள்ளுங்கள் தமிழா...

 
மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு நெல் ரகம்... 

இந்த அரிசியை சாப்பிட்டால் சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை!

தமிழகத்தில் வழக்கொழிந்து போன ஆயிரம்,
ஆயிரம் தமிழ் பாரம்பரிய நெல் ரகங்கள்.

‘‘ஒசுவக்குத்தாலை,
 சிவப்புக்குடவாழை, 
வெள்ளையான், 
குருவிகார், 
கல்லுருண்டை, 
சிவப்பு கவுணி, 
கருடன் சம்பா, 
வரப்புக் குடைஞ்சான், 
குழியடிச்சம்பா, 
பனங்காட்டுக் குடவாழை, 
நவரா, 
காட்டுயானம், 
சிறுமணி, 
கரிமுண்டு, 
ஒட்டடையான், 
சூரக்குறுவை... 
 
இதெல்லாம் நம்ம தமிழ் பாரம்பரிய நெல் ரகங்கள். 

இந்த மாதிரி ஆயிரக்கணக்கான ரகங்களை பிலிப்பைன்ஸுக்கும், அமெரிக்காவுக்கும் கொண்டு போயிட்டாங்க. 

இன்னைக்கு உள்ள விவசாயிகளுக்கு இதோட அருமையெல்லாம் தெரியாது. ஒவ்வொரு நெல்லும் ஒவ்வொரு மருந்து. 

மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு ரகம்... சாப்பிட்டா சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை!

 கவுணி அரிசி நாள்பட்ட புண்ணையெல்லாம் ஆத்திடும்.

 கருங்குறுவை, யானைக்காலை குணமாக்கும்.

 பால்குடவாழையில சமைச்சுச் சாப்பிட்டா குழந்தை பெத்த பெண்களுக்கு பால் நல்லா ஊறும்.

 தங்கச்சம்பாவை தங்க பஸ்பம்னே சொல்வாங்க.
( தங்கமே தங்கம் பாடலில் வருவதுதான்)

புயல், மழை, வெள்ளம், வறட்சி எல்லாத்தையும் தாங்கி வளர்ற ரகங்கள் ஏராளம் இருக்கு. 

விதைச்சு விட்டுட்டா அறுவடைக்குப் போனா போதும். 

கடற்கரையோர உப்புநிலத்துக்கு ஒசுவக்குத்தாலை, 
சிவப்புக்குடவாழை, 
பனங்காட்டுக் குடவாழை. 

மானாவாரி நிலங்கள்ல குறுவைக் களஞ்சியத்தையும், குருவிக்காரையையும் போட்டா காடு நிறையும். 

காட்டுப்பொன்னியை தென்னை, வாழைக்கு ஊடுபயிரா போடலாம்.

 வறட்சியான நிலங்களுக்கு காட்டுயானம், 

தண்ணி நிக்கிற பகுதிகளுக்கு சூரக்குறுவை, 
இலுப்பைப்பூ சம்பா... 

இப்படி நுணுக்கம் பார்த்துப் போடணும்.

 வரப்புக்குடைஞ்சான்னு ஒரு ரகம்... ஒரு செலவும் இல்லை. விளைஞ்சு நின்னா வரப்பு மறைஞ்சு போகும்.

 இதையெல்லாம் இன்னைக்கு இழந்துட்டு நிக்கிறோம்.

விவசாயம் நசிஞ்சதுக்கு காவிரிப்பிரச்னை மட்டும்தான் காரணம்னு சொல்றாங்க. 

அது உண்மையில்லை. விவசாயிகளோட மனோபாவமும் காரணம். 

எந்த மண்ணுக்கு எந்த நெல்லைப் போடணும், எப்போ போடணும்னு கணக்குகள் இருக்கு. 

அதை எல்லாரும் மறந்துட்டாங்க.. 

புது தொழில்நுட்பம்னு சொல்லி நிலத்தை நாசமாக்கிட்டாங்க. 

நம்ம இயற்கை தமிழ் விவசாயத்தை அழிச்சு, உரத்தையும் பூச்சிமருந்தையும் நம்ம மண்ணுல கொட்டுன நாடுகள், இப்போ இயற்கை விவசாயம் பண்றாங்க.

 உலகத்துக்கே கத்துக்கொடுத்த தமிழர்கள் இன்று  தொழில்நுட்பத்தைக் கடன் வாங்குறோம்.

திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள கட்டிமேட்டில், பழமையான ஆதிரெங்கன் கோயிலை ஒட்டியிருக்கிறது செயராமனின் குடில். குடிலைச் சுற்றிலும் பச்சைப் பசேலென உடல் விரித்துக் கிடக்கிறது வயற்காடு. தழைத்து நிற்கிற அத்தனையும் தமிழ் பாரம்பரிய ரகங்கள்.

இவர் ஒரு நாடோடியைப் போல அலைந்து திரிகிறார் தமிழர்  செயராமன். 

வயற்காடுகளையும், விவசாயிகளையும் தேடி அவரது பயணம் நீண்டுகொண்டே இருக்கிறது.

 தமிழகத்தில் வழக்கொழிந்து போன 10 ஆயிரம் தமிழ் பாரம்பரிய நெல் ரகங்களையும் மீட்டு, தமிழக விவசாயத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வதுதான் அவரது இலக்கு.

படித்தது பத்தாம் வகுப்புதான். ஆனால் ஒரு பேராசிரியரின் தெளிவோடு விவசாயமும், விஞ்ஞானமும் பேசுகிறார். 

தமிழ் பாரம்பரிய நெல் சாகுபடி பற்றி பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பயிற்சி அளிப்பதோடு, விவசாயிகளுக்கு தமிழ்  பாரம்பரிய விதைகளை இலவசமாகவும் வழங்குகிறார்.

 வழக்கொழிந்து போன 63 நெல் ரகங்களை மீட்டு, வயற்காட்டுக்கு கொண்டு வந்த இவர், ‘ தமிழ் விதை வங்கி’ ஒன்றையும் நடத்துகிறார்.

அரசாங்கம் ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய ஏக்கருக்கு 30 கிலோ விதையைப் பரிந்துரைக்கிறது.

 ஆனால் தமிழர் செயராமன் வெறும் 240 கிராம் போதும் என்கிறார்.

‘‘ஒவ்வொரு வருஷமும் மே மாதம் கடைசி சனி, ஞாயிறுகள்ல எங்க குடிலுக்குப் பக்கத்தில நெல் திருவிழா நடக்கும். 

நெல் உற்பத்தி முதல் விற்பனை வரை உள்ள பிரச்னைகள் பத்தி விவாதிப்போம். 

தமிழ் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி பண்ற பயிற்சிகளும் தருவோம். நிகழ்ச்சியோட இறுதியில, ஒரு விவசாயிக்கு ரெண்டு கிலோ வீதம்  தமிழ் பாரம்பரிய விதைகளைக் கொடுப்போம். 

ஒரே ஒரு கண்டிஷன். 2 கிலோ விதையை வாங்கிட்டுப் போறவங்க, அதை சாகுபடி பண்ணி அடுத்த வருஷம் நாலு கிலோவா தரணும்.

 இந்த வருஷம் நடந்த நெல் திருவிழாவுல 1860 விவசாயிகளுக்கு விதை கொடுத்திருக்கோம்’’ என வியக்க வைக்கிறார் தமிழர் செயராமன்.

இதைத்தான் பழங்கால தமிழர்கள் சோழர் காலத்திலயும் செஞ்சிருக்காங்க.

இவர்களை போன்றவர்களை அரசு உக்குவிக்காது, பாராட்டாது. 

நீங்களாவது பகிருங்கள். அனைவரும் அறிய உதவுங்கள்.
Read More

October 08, 2016

தென்னையில் வறட்சியை தாங்க சோற்றுக் கற்றாழை நடவு செய்த விவசாயின் அனுபவம்
by admin - 0

தென்னையில் வறட்சியை தாங்க சோற்றுக் கற்றாழை நடவு செய்த  விவசாயின் அனுபவம்
 
முத்துவேல் என்ற விவசாயி தென்னை மரம் நடவு செய்த ஒரு வருடத்தில் ஒவ்வொரு  தென்னை மரத்திற்கும் அருகில்;  ஒரு   சோற்றுக் கற்றாழை கன்றை நடவு செய்து உள்ளார். அவை ஒரு வருடத்திற்குள் மரத்தை சுற்றி பக்கக் கன்றுகள் தோன்றி மடல்கள் பெரிய சைசாக வளர்ந்திருந்தது. 

அவற்றை வெட்டி தென்னை மரத்தின் மறுபக்கம் கீழே புதைத்து வைத்தள்ளார்  அவை  தண்ணீர் விட மக்கியது போக வேரிலிருந்து தழைந்து  வர ஆரம்பித்தது. இவை மரத்திற்கு ஒரு எருவாகவும் என்று நினைத்தார்.

 ஆனால் என்னுடைய நிலத்திற்கும் பக்கத்து தோட்டத்தில் உள்ள தென்னந் தோப்பு விவசாயி உன்னுடைய தென்னை மரம் மட்டும்  வாடாமல் இருக்கிறது. அதுவும்  ஒரு பொழிக்குள்ள என்னுடைய தென்னை மரம்  வாடி காய ஆரம்பித்தது  ஏன் என்று தெரியவில்லையே என்றார். நான் அப்ப ( மூன்று வருடத்திற்கு முன்பு) தண்ணீர் இருந்ததால் சொட்டுநீர் போட்டு தண்ணீர் தினமும் பாய்ச்சி வந்தேன் தண்ணீர் பாய்ச்சியதால்; தான்  என்னுடைய மரம் நன்றாக இருக்கிறது என்று நினைத்து விட்டேன்.

இப்பொழுது பார்த்தால் அவர் மரம் காய்ந்து பட ஆரம்பித்து  உள்ளது. என்னுடைய மரம் பாளை போட்டு  காய்ப்புக்கு வந்து விட்டது.   இப்ப  தண்ணீர் கூட  பாய்ச்சுவது இல்லையே.   வறட்சியின் காரணமாக  நம்ப மரமும் காய்ந்து விடுமோ என்று வருத்தப்பட்டு கொண்டு தென்னை மரத்தின் அடியில் வெரும் புல்லாக இருந்த இடத்தில் தோண்டி பார்த்தேன். மண் பொது பொதுப்பாக இருந்தது நான் சோற்று கற்றாழையை வெட்டி புதைத்து வைத்த இடம் அது.

தென்னை மரம் மரத்து  சோற்று கற்றாழை வைப்பது  இது  ஒரு வகைக்கு பரவாயில்லை  நம்ம மரத்துல வண்டு தாக்குதலும் இல்லை. வறட்சியையும்  தாங்கி கொண்டு வருகிறது. வேர் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. காய்ப்புக்கு வருகிற காய் சொறிக் காயாகவும் இல்லை என்று நினைத்து ஒவ்வொரு வருடமும் நான் சோற்றுக் கற்றாழை வளர வளர மடல்களை அறுத்து புதைத்து வைத்து வருகிறேன். 
 
எனவே இவற்றை கருத்தில் கொண்டு மற்ற தென்னந் தோப்பு வைத்துள்ள விவசாயிகளும் மரம் மரத்திற்கு ஒரு சோற்றுக் கற்றாழை வைத்து  வறட்சியிலிருந்தும், வண்டு தாக்குதலில் இருந்தும் தென்னை மரங்களை பாதுகாக்கலாம் என்றார்.
மேலும் செய்திகளை அறிய
Read More

June 11, 2016

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன் சுமை அதிகரித்துச் செல்வதைக் கண்டுகொள்ளாத அரசாங்கம்!
by admin - 0

kavinthan
மகிந்த அரசாங்கம் பெற்ற ஆடம்பரச் செலவுகளுக்கான பெருமளவு கடன் தொகையை மக்கள் பணத்திலிருந்து திருப்பிச் செலுத்தும் மைத்திரி அரசாங்கம் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமது வாழ்வாதாரத்திற்காகப் பெற்ற கடன், கனமழை வெள்ளப் பெருக்கினால் பாயிரழிவுகளை எதிர்நோக்கிப் பாதிக்கப்பட்ட நிலையில்  வட்டியினால் கடன் தொகை அதிகரித்துச் செல்கின்றமை அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலக்கமுற்றுள்ளமை தொடர்பில் கவனம் செலுத்தாமல் பொறுப்பற்ற நிலையில் கண்மூடியிருந்து வருகின்றது.

வன்னிப் பகுதிகளில் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்த விவசாயிகள் மீள்குடியேற்றத்தின்போது 2010, 2011 காலப்பகுதிகளில் வங்கிகளிடமிருந்து பெற்ற விவசாயக் கடனைப் பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கனமழை, வெள்ளப்பெருக்குக் காரணமாக விவசாயிகளின் பயிர்ச்செய்கைகள் அனைத்தும் முற்றாக அழிவடைந்தன. இதனால் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட விவசாயக் கடன்களை மீளச் செலுத்தமுடியாது கலங்கி நின்றார்கள். அப்போது ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விவசாயக் கடன்களை இரத்துச் செய்வதாகவும் மானியமாக்குவதாகவும் கூறியது. இதனைக் கேள்வியுற்ற பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஓரளவு மன நிம்மதியடைந்தார்கள். ஆனாலும் அது நீடிக்கவில்லை. மகிந்த அரசாங்கத்தின் கூற்று வெறும் வாய்ப்பேச்சளவில் மட்டுமே இருந்தமைதான் அதற்குக் காரணம். விவசாயக் கடன்களை வழங்கிய வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துமாறு கடிதமூலம் அறிவித்தும், விவசாயிகளது வீடுகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளை வாய்க்குவந்தபடி தரக்குறைவாகக் ஏசியும் வந்தன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் அப்போது பெற்ற விவசாயக் கடன்களை தற்போதுவரை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் வங்கி நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடமுடியாதவர்களாக கடன் சுமையுடன் அவலப்படுகின்றார்கள். 
வன்னி யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு விவசாயிகள் வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட விவசாயக் கடன்களை பயன்படுத்தி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டபோது கனமழை, வெள்ளப் பெருக்குக் காரணமாக ஏற்பட்ட  பயிரழிவுகளால் வங்கிக் கடன்களை இன்றுவரை திருப்பிச் செலுத்த முடியாது கலங்கி நிற்கும் விவசாயிகளின் வங்கிக் கடன்தொகைகள் வட்டியினால் பெருமளவுக்கு அதிகரித்துச் செல்கின்றன. வட்டியுடன் அதிகரித்த கடன் தொகையை உடனடியாகத் திருப்பிச் செலுத்துமாறும் திருப்பிச் செலுத்தாதவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகு உட்படுத்தப்படுவார்கள் எனவும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளால் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் விவசாயக் கடன்களைப் பெற்று இயற்கையின் சீற்றத்தால் விவசாய நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கடன் தொகை வட்டியினால் அதிகரித்துச் செல்கின்ற அதேவேளை கடனாளிகளாகவுள்ள விவசாயிகள் வங்கி நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடமுடியாத நிலையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

விவசாயக்கடன் பெற்ற கடனாளியாகவுள்ளவர்கள் தமது அவசர தேவையின் நிமித்தம் வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களிடம் பண உதவி கோரி தமது வங்கிக் கணக்கு இலக்கத்தைக் கொடுத்தபோது அந்த வங்கிக் கணக்குக்கு அவர்களால் அனுப்பப்பட்ட பணாத்தை உரியவரிடம் வழங்குவதற்கு வங்கிகள் மறுத்ததுடன் விவசாயக் கடன் தொகையை வட்டியுடன் கட்டியதன் பின்னர் அனுப்பப்பட்ட பணத்தை வழங்குவதாகக் கூறியதாகவும் பாதிக்கப்பட்ட பல விவசாயிகளால் கூறிக்கவலை தெரிவிக்கப்படுகின்றது.

விவசாயக் கடன் தொகையைக் கட்ட முடியாத பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிலர் தற்கொலை செய்துகொண்டுள்மை ஊடகங்களில் வெளிவந்த உண்மையாகவுள்ளன. 

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விவசாயக் கடன் தொகைகள் ஒரு முடிவின்றிய நிலையில் வட்டியால் அதிகரித்துச் செல்கின்றமையால் கடன்சுமை தாங்க முடியாத கலக்கத்துடன் பல விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில் விரக்தியுடன் காணப்படுகின்றார்கள்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன்சுமை வட்டியினால் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் ஆட்சியாளர்கள் எவருமே இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தமது ஆடம்பரச் செலவுகளுக்காகப் பெற்ற பெருமளவு கடன் தொகைகளை தற்போதைய நல்லாட்சிக்கான மைத்திரி அரசாங்கம் மக்கள் பணத்திலிருந்து திருப்பிச் செலுத்தி வருகின்றது. ஆனால் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தமது வாழ்வாதாரத்திற்காகப் பெற்று விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டபோது கனமழை, வெள்ளப்பெருக்குக் காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் கலங்கிநிற்கும் ஏழை விவசாயிகளின் விவசாயக் கடன்களை இரத்துச் செய்யவோ மானியமாக்கவோ மனமின்றியிருந்து செயற்பட்டு வருவதாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளால் கூறிக் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.

சிவேந்தன்.
Read More

April 13, 2016

கட்­ட­ணத்தில் சீரில்லை- விவ­சா­யிகள் விசனம்
by admin - 0

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கம­நல அபி­வி­ருத்தி வங்­கி­களில் சேமிப்­புக்­க­ணக்கை ஆரம்­பிப்­ப­தற்கு ஒரு சீரான கட்­டணம் அற­வி­டப்­ப­ட­வில்லை என்று விவ­சா­யிகள் விசனம் தெரி­விக்­கின்­றனர்.

பசளை நிதி மானி­யத்­துக்கு விண்­ணப்­பிக்கும் ஒரு விவ­சாயி ஏதா­வது ஒரு அரச அல்­லது வர்த்­தக வங்­கியில் சேமிப்பு கணக்கை வைத்­தி­ருக்க வேண்டும் என்­பது நிபந்­த­னை­யாகும். இருந்த போதிலும் அவ்­வாறு வைத்­தி­ருந்­தாலும் கம­நல அபி­வி­ருத்தி வங்­கி­யிலும் கணக்கை திறக்­கு­மாறு விவ­சா­யிகள் நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டனர். இதற்கு அமை­வாக நிதி­மா­னியம் மறுக்­கப்­படும் எனப் பயந்து விவ­சா­யிகள் கணக்கை ஆரம்­பித்­துள்­ளனர்.

எனினும் இதற்­கான கட்­டணம் ஒரு சீராக அற­வி­டப்­ப­ட­வில்லை. மண்டூர் கம­நல சேவை நிலை­யத்தில் ஆயிரம் ரூபாயும் வெல்­லா­வெளி கம­நல சேவை நிலை­யத்தில் ஐநூறு ரூபாயும் அற­வி­டப்­பட்­டுள்­ளன.

கொக்கட்­டிச்­சோலை மற்றும் வாழைச்­சேனை நிலை­யங்­க­ளிலும் ஆயிரம் ரூபா அறி­வி­டப்­பட்­ட­தாக தெரி­வித்த விவ­சா­யிகள் அதற்­கான பற்­றுச்­சீட்­டு­க­ளையும் காண்­பித்­தனர்.

இவ்­வாறு ஒரு மாவட்­டத்­துக்­குள்­ளேயே வேறு வேறு வித­மான கட்­டணம் அற­வி­டப்­பட்­ட­மைக்கு யார் பொறுப்பு. நல்­லாட்­சியில் அரச நிரு­வாகம் சரி­யாக இயங்­க­வில்­லையா? சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் சரி­யான அறி­வு­றுத்­தலை வழங்­கி­யி­ருக்க வேண்டும். அத்­துடன் மேற்­பார்வை செய்­தி­ருக்­கவும் வேண்டும். விவ­சா­யி­களின் அமைப்­பான விவ­சாய அமைப்பு மற்றும் மாவட்ட விவ­சாய அமைப்பு என்­பன இதனை அறிந்­தி­ருந்தும் உரிய நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றி­விட்­டன. ஆங்­காங்கே நிய­மிக்­கப்­பட்­டுள்ள விவசாய பிரதிநிதிகளும் கரிசனை காட்டவில்லை. அரச நிருவாகம் ஓர் ஒழுங்கு முறைக்கு உட்பட்டது. இவ்வாறு விவசாயிகள் பலரும் கவலையும் அதிருப்தியும் தெரிவித்தனர்.
Read More

March 14, 2016

இலங்கையின் முதலாவது தமிழ் விவசாயக் கல்லூரி
by admin - 0

கிழக்கு மாகா­ணத்தின் முத­லா­வதும் இலங்­கையின் முத­லா­வதும் தமிழ் மொழி­மூ­ல­மா­ன­து­மான விவ­சாயக் கல்­லூரி அட்­டா­ளைச்­சேனை பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட பால­முனைப் பிர­தே­சத்தில் திறந்து வைக்­கப்­பட்­டது.

இக்­கல்­லூ­ரியின் உத்­தி­யோ­க­பூர்வத் திறப்பு விழா பால­முனை விவ­சாயக் கல்­லூ­ரியின் அதி­பரும் உதவி விவ­சாயப் பணிப்­பா­ள­ரு­மான எம்.எப்.ஏ.சனீர் தலை­மையில் இடம்­பெற்­றது.4

இவ்­வி­ழாவில் விவ­சாயத் திணைக்­கள விரி­வாக்கல் மற்றும் விவ­சா­யப்­ப­யிற்சிப் பணிப்­பாளர் ஆர்.எஸ். விஜ­ய­சே­கர பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண் டார்.

விவ­சாய விரி­வாக்க பணிப்­பாளர் ஆர்.எஸ். விஜ­ய­சே­கர பால­முனை விவ­சாயக் கல்­லூரி அபி­வி­ருத்திச் சபை சார்­பாக முன்னாள் தவி­சாளர் எம்.ஏ. அன்­சி­லினால் பொன்­னாடை போர்த்­தியும் கல்­லூரி நிர்வா­கத்­தி­னரால் நினை­வுச்­சின்னம் வழங்­கியும் கௌர­விக்­கப்­பட்­ட­தோடு பால­முனை விவ­சாயக் கல்­லூ­ரியின் அதி­பரும் உதவி விவசாயப் பணிப்பாளருமான எம்.எப்.ஏ. சனீர், விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் ஆகியோரும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்
Read More

February 15, 2016

கிளிநொச்சியில் விவசாயத்துறையில் புதுப்புரட்சி
by admin - 0

ஏனையோரும் அறிந்து பயன்பெற பகிருங்கள்.

கிளிநொச்சியில் விவசாயத்துறையில் புதுப்புரட்சி. !

புல் வெட்டும் இயந்திரத்தை அரிவு வெட்டுவதற்கு பயன்படுத்தும்  எண்ணம் செயல் வடிவம் பெற்றுள்ளது. இதற்கு செயல் வடிவம் கொடுக்க முயற்சி செய்த கிளிநொச்சி தொழிநுட்ப கலைஞரை அறிமுகப்படுத்தியே தீர வேண்டும்.

கிளிநொச்சி கரடிப்போக்கு உருத்திரபுரம் வீதியில் அமைந்துள்ள பவிசன் மின் ஒட்டு தொழிலக அதிபரும், சிறந்த தொழிநுட்ப கலைஞருமான திருவாளர் காண்டீபன் அவர்களின் அயராத முயற்சியில் வடிவமைக்கைப்பட்டு பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றியடைந்துள்ளது. 

இப்படியான இயந்திரவியல் தமிழர்களை ஊக்குவிப்பதன் மூலம் தமிழர்களின் தொழில்நுட்பத்தை வளர்க்க முடியும் 




தொடர்புகளுக்கு - 077 6403646
Read More

February 07, 2016

அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யாததால் வடக்கு விவசாயிகள் கவலை
by admin - 0

அரசாங்கம் ஒரு கிலோ நெல்லிற்கு 32 ரூபா விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆயினும் வியாபாரிகள் 22 ரூபா அறுபது சதத்திற்கே விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்கின்றார்கள். எனவே அரசாங்கம் உடனடியாக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

அறுவடை செய்தவுடனேயே நெல்லை விற்பனை செய்ய வேண்டிய தேவை இருப்பதனால், தனியார் வியாபாரிகளுக்கு அரை விலை கால் விலைக்கு விற்பனை செய்ய விவசாயிகள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றார் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிற்றம்பலம் என்ற விவசாயி.


நல்ல விலை வரும் வரை, காத்திருந்து அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்யவும் முடியாது. ஏனென்றால் அறுவடை இயந்திரத்தின் மூலம், நெல்லாக்கி தூற்றித் தருகின்ற இயந்திர உரிமையாளருக்கும் ஏனைய விவசாயத் தொழிலாளர்களுக்கும் உடனடியாகக் கொடுப்பனவு செய்ய வேண்டி இருக்கின்றது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். பெரும் நட்டத்திற்கு ஆளாகின்றார்கள்.
நெல்லை நல்ல விலைக்கு விற்க முடியாத காரணத்தினால் விவசாயிகள் மட்டுமல்லாமல் விவசாய தொழிலாளிகளும் பாதிக்கப்படுகின்றார்கள். விவசாயத் தொழிலாளர்களாகிய பெண்களுக்கு நாளொன்றுக்கு 650 ரூபா மாத்திரமே சம்பளம் கிடைக்கின்றது.
இன்றைய வாழ்க்கைச் செலவைச் சமாளிப்பதற்கு குறைந்தது 800 ரூபாயாவது எங்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றார் காளிமுத்து ராஜேஸ்வரி.
கடந்த சிறுபோகத்தின்போது அறுவடை செய்யப்பட்ட நெல் இன்னும் விற்பனை செய்யப்படாமல் கிளிநொச்சி மாவட்டத்தின் பத்து களஞ்சியசாலைகளில் குவிந்து கிடப்பதனால், இந்த காலபோக அறுவடை நெல்லைக் கொள்வனவு செய்து சேமித்து வைப்பதற்கு களஞ்சியசாலை வசதி இல்லாதிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதுவும் நெல் கொள்வனவு செய்யப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.
அறுவடை ஆரம்பமாகி நடந்து கொண்டிருப்பதனால், நெற் சந்தைப்படுத்தும் சபையினர் நெல்லைக் கொள்வனவு செய்து சேமித்து வைப்பதற்கு வசதியாக புளியம்பொக்கணை, கோணாவில், முழங்காவில் போன்ற பகுதிகளில் உள்ள களஞ்சியசாலைகளைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது. விவசாயிகளிடமிருந்து உடனடியாக நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றார் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்.
இயந்திரங்களைப் பயன்படுத்தி அறுவடையாக்கி உடனடியாகவே விற்பனை செய்யப்படும் நெல் அதிக ஈரத்தன்மையைக் கொண்டிருப்பதனால், வியாபாரிகள் குறைந்த விலைக்குக் கொள்வனவு செய்ய நேரிடுகின்றது. ஈரத்தன்மையுள்ள நெல்லைக் களஞ்சியப்படுத்துவதிலும் கஸ்டம் உள்ளது. ஆனால், இயந்திரத்தின் உதவியுடன் அறுவடை செய்யும் நெல்லைக் காயவைப்பதற்குரிய மேடை அல்லது களம் இல்லாதிருப்பது தங்களுக்குப் பிரச்சினையாகும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
இதற்குத் தீர்வு காண்பதற்காக வயல்களில் மேட்டுப்பாங்கான இடங்களில் நெல்லை காயவிடுவதற்கான களம் அமைப்பதற்கு நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றது என்றார் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்.
Read More

November 01, 2015

திராட்சைகளை உட்கொள்ள வேண்டாம்
by admin - 0

தற்போது சந்தையில் மலிவு விலையில் விற்கப்படும் திராட்சைப் பழங்களை வாங்கி உட்கொள்ள வேண்டாமென கிண்ணியா பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி இன்று ஞாயிற்றுக்கிழமை மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிண்ணியாவில் சனிக்கிழமை (31) வாராந்தச் சந்தையில் ஒரு கிலோகிராம் திராட்சைப்பழம் 100 ரூபாய் படி விற்கப்பட்ட திராட்சைப்பழத்தை வாங்கி உட்கொண்ட  சில மணி நேரங்களில் வாந்தியும் தலைச்சுற்றும் ஏற்பட்டு மயக்கமான நிலையில் 13 கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 07 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

03 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரே  திடீர் சுகவீனமுற்றனர். இந்நிலையிலேயே, பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
 

Read More

September 28, 2015

இலங்கையில் முதல் முறையாக 'மதுரை மல்லி' சாகுபடி ஆரம்பம்
by admin - 0

இலங்கையில் மலர் சாகுபடியை பெரிய அளவுக்கு முன்னெடுக்கும் திட்டமொன்று நாட்டின் வட பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மதுரையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மல்லைகைப் பூச்செடிகள் வவுனியாவிலுள்ள பண்ணை ஒன்றில் வர்த்தக ரீதியில் நடப்பட்டுள்ளன.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கில், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரக அலுவலகத்தின் முயற்சியில், உள்ளூர் வர்த்தகர் ஒருவர் இதில் இறங்கியுள்ளார்.
இலங்கையில் மலர்களுக்கான தேவை அதிகமாக இருந்தாலும், அதற்கான உறுபத்தி வர்த்தக ரீதியில் இல்லாத குறை உணரப்பட்டதாலேயே இந்த புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மதுரையில் மல்லிகை சாகுபடியில் நல்ல அனுபவம் கொண்டவர்களின் உதவியுடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்த மல்லிகைப் பண்ணையை ஏற்படுத்தியுள்ள உள்ளூர் வர்த்தகர் பிரேமந்திரராஜா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மல்லிகை சாகுபடியில் ஆர்வம் காட்டினால் தேவையான உதவிகள் செய்யப்படும் என இந்தியத் துணைத் தூதர் நடராஜன் கூறுகிறார்.
இந்தத் திட்டத்துக்காக இந்தியாவிலிருந்து 30,000 மதுரை மல்லிகைச் செடிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
Read More

September 25, 2015

வடக்கு விவசாய அமைச்சரின் நன்கொடை நிதியில் இருந்து ரூபா 3 மில்லியன் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைப்பு
by admin - 0



வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் 2015 ஆம் ஆண்டுக்குரிய பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து ரூபா 3 மில்லியன் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பொருட்களை  வழங்கி வைக்கும் நிகழ்ச்சி விவசாய அமைச்சின் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை (23.09.2015) நடைபெற்றபோது அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு உரிய பயனாளிகளுக்குப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.
வடக்கு விவசாய அமைச்சரின் நன்கொடை நிதியில் இருந்து  ரூபா 3 மில்லியன் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைப்பு

பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதி பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், சமூக அமைப்புகளை  வலுப்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்ற நிதி ஒதுக்கீடு ஆகும். இவற்றின் அடிப்படையில், அமைச்சருக்கு அனுப்பிவைக்கப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாடசாலைகள், முன்பள்ளிகள், சனசமூகநிலையங்கள், விளையாட்டுக்கழகங்கள் போன்றவற்றுக்குக் கணணிகள், ஒலிபெருக்கி சாதனம், தொலைக்காட்சிப்பெட்டி, சங்கீத உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள், பாதணிகள், தளபாடங்கள், நூல்கள் மற்றும் சீமெந்து போன்ற பொருட்களும் தனிப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவியாக தண்ணீர்ப்பம்பி, மீன்பிடி உபகரணங்கள், துவிச்சக்கரவண்டிகள், தையல் இயந்திரங்கள், மரவேலை இயந்திரம், சமையல் தொழில் உபகரணங்கள் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன. 

வாழ்வாதார உதவியாக கோழிவளர்ப்பு, நல்லின பசு மற்றும் ஆடு வளர்ப்பில் ஈடுபடுவதற்கான உதவி கோரிய விண்ணப்பங்களில் இருந்து உரிய பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கான உதவிகள் விரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்ச்சியில் வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர் கலாநிதி க.சர்வேஸ்வரன், பிரதம செயலாளர் அ.பத்திநாதன், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் சி.வசீகரன் ஆகியோரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்குப் பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.






















Read More