Latest News
Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

April 17, 2021

ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் தொடங்கியது விவேக்கின் இறுதி ஊர்வலம்.. திரளானோர் பங்கேற்பு!
by Editor - 0


தமிழ் சினிமா நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிசச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அரவது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் 24 மணி நேரத்திற்கு பிறகே சொல்ல முடியும் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நேற்று மாலை தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று காலை நடிகர் விவேக் அவர்கள் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.


அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறை பிரபலங்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 5 மணியளவில் அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது.


ஆனால் மூன்றரை மணிக்கே விவேக்கின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதிச்சடங்குகளை தொடங்கினர். இதனை தொடர்ந்து தற்போது நடிகர் விவேக்கின் பூத உடல் ஊர்வலமாக மேட்டுகுப்பம் மின் மயானத்தில் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்படவுள்ளது.

Read More

January 03, 2021

கடைசி நேரத்தில் சுருக்கை பிடித்துக் கொண்டு திணறிய சித்ரா?வசமாக சிக்கிய ஹேமந்த்!
by Editor - 0

சின்னத்திரை பிரபலமான நடிகை சித்ரா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி தவறான முடிவால் உயிரிழந்த சம்பவம் பலரையும் கவலையில் ஆழ்த்தியது.


எனினும், சித்ராவின் உயிரிழப்பு தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் பல தரப்பிலும் இருந்து எழுந்தது.அதிலும், சித்ராவின் முகத்தில் இருந்த தழும்புகள் எப்படி ஏற்பட்டிருக்கும் என்ற கேள்விக்கு இதுவரையில் பல விளக்கங்கள் கொடுக்கப்பட்ட போதிலும் அவற்றை நம்பமுடியவில்லை என்றே கூறலாம்.இந்த நிலையில், சம்பவம் நடந்த ஹோட்டல் அறையில் மருத்துவர்கள் செய்த ஆய்வில் விளக்கப்பட்டது என்ன? ஒருவேளை சித்ரா முயற்சி செய்திருந்தால் அவரின் முகத்தில் எப்படி காயங்கள் ஏற்பட்டிருக்கும்? அவரது சுய முடிவாகவும் இருக்கலாம், அல்லது கொலையாகவும் இருக்கக்கூடும் என மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சித்ராவின் காதல் கணவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தது முதல் 6 நாட்கள் தொடர் விசாரணைக்கு பிறகு ஹேமந்த் கைது செய்யப்பட்டது வரை சித்ராவின் மரணத்தில் கேள்விகள் எழுந்தன.

ஆனால், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சித்ராவின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவ சட்டவியல் மருத்துவர்கள் அதனை, அவரது சுய முடிவில் எடுத்தது என உறுதி செய்தனர்.

கழுத்தில் சுருக்கு எப்படி? மருத்துவர்கள் விளக்கம்


சித்ராவின் கழுத்தில் எந்த தழும்பும் இல்லை, நாக்கு வெளிப்படவில்லை என்ற தூக்கிற்கான விளைவுகள் ஏதும் இல்லாத நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பாக சில கேள்விகள் எழுகின்றன. இந்நிலையில், சித்ராவின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவ குழுவில் இருந்து சிலர் தனியார் செய்தி புலனாய்வு நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலில், ” சம்பவம் நடந்த இரண்டாவது நாளில் சித்ரா உயிரிழந்த அந்த ஹோட்டலுக்கு சென்றோம். அங்கு சித்ரா தங்கியிருந்த அறையை ஆய்வு செய்தோம், அந்த அறையில் தூக்கிட்டுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. சித்ராவுடைய கழுத்தின் முன்புறத்தில் தழும்புகள் இல்லை. ஆனால், கழுத்தின் பின்புறம் துணி இருக்கப்பட்ட காயங்கள் உள்ளன. அவர் கழுத்தில் சுருக்கு போட்டுக்கொண்ட பின்னர் துடித்துக்கொண்டிருந்த வேளையில் தன்னை விடுவிக்க முயற்சித்திருக்கலாம். அப்போது அவருடைய நகங்கள் அவரது முகத்தை கிழித்து காயத்தை ஏற்படுத்தியிருக்கும்” என இவ்வாறு கூறியுள்ளனர்.


இருவரும் குடிப்பார்களாம்.

பொலிசாரின் விசாரணையில் நேரடியாக வெளிவராத சில தகவல்களும் சித்ராவின் தனிப்பட்ட சில பழக்கங்களை தெரியப்படுத்துகிறது. அதாவது, சித்ராவின் உடமைகளை சோதனையிட்டபோது அவரது ஹேண்ட் பேக்கில் 150 கிராம் கஞ்சா இருந்ததாகவும் கூறப்படுகிறது. சித்ராவுக்கு போதை பழக்கம் இருந்ததாகவும் அவர் அடிக்கடி ஹேமந்த்துடன் சேர்ந்து மது குடித்துள்ளார் என்றும் ஏற்கனவே ஹேமந்த்தின் தந்தை ரவிச்சந்திரன் கூறியுள்ளார். ஆனால், சித்ராவின் உயிரிழப்பிற்கும், போதை பழக்கத்துக்கும் எந்த அளவில் சம்மந்தம் உள்ளது என்று தெரியவில்லை

அடிப்படை காரணம் ஹேமந்த்

ஆனால், சித்ராவை சந்தேக கண்ணோட்டத்தால் ஹேமந்த் அடிக்கடி சண்டையிட்டு வந்ததும் அதனால் சித்ரா மன உளைச்சலில் இருந்ததும் பொலிஸார் கொடுத்த முதற்கட்ட தகவல். மேலும், சித்ராவுக்கு இரண்டரை வருடங்களாக உதவியாளராக இருந்து வந்த சலீம் என்பவரும், ஹேமந்த் எப்படியெல்லாம் சித்ராவை கொடுமை படுத்தி வந்தார் என்பதை விளக்கி அந்த தகவலை நிரூபணம் செய்தார். ஹேமந்த் மீது அதீத காதலை வைத்திருந்த சித்ராவை அவர் சந்தேகப்பட்டு சண்டையிட்டதாலும், சம்பவம் நடந்த அன்று ‘செத்து போ’ என்று கூறியதாலும் மேலும், போதை பழக்கத்தின் விளைவாகவும் சித்ரா துணிந்திருக்கலாம் என்றும் முக்கிய தரப்பில் இருந்து வரும் செய்திகள். அத்துடன், சித்ராவை ஹேமந்த் அடித்து துன்புறுத்தி இருக்கலாம் என்றும், அதன்பின் கதவின் பொத்தானை அழுத்திவிட்டு பின்னர் வெளியில் வந்த பிறகு கதவை சாத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.




சிபிஐக்கு மாறுமா?




இதற்கிடையில், பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக உட்சபச்ச ரசிகர்களை பெற்ற சித்ராவுக்கு மார்க்கெட்டிங் அதிகமானதால் அவர் தனது உழைப்பை நம்பியே ஒரு கோடிக்கும் மேல் கடன் பெற்று வீடு, கார் ஆகியவற்றை வாங்கியுள்ளார். ஆனால், அதற்கு பின்னால் அரசியல் புள்ளிகளை தொடர்புபடுத்தியும் சமூக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. காதல் கணவனின் சித்திரவதையுடன் சேர்ந்து கடன் பிரச்சினையும் சித்ராவின் முடிவிற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. நசரத்பேட்டை போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், மகளின் மரணத்தின் முழு முக்கிய காரணத்தை கண்டுபிடிக்க சிபிஐ விசாரிக்க வேண்டும் என சித்ராவின் தாயார் மனு அளித்துள்ளார்.




இன்றுவரை சித்ராவின் உயிரிழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, உலகளவில் அவருடைய ரசிகர்களையும் பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

October 19, 2020

முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்
by Editor - 0

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமான 800 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்பது கோரிக்கை. ஈழத் தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர்; இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருப்பவர் என்பதால் முரளிதரன் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க எதிர்ப்பு எழுந்தது.


முரளியின் முதல் அறிக்கை


இதனை அடுத்து முத்தையா முரளிதரன் முதலில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், தமிழனாக நான் பிறந்தது என் தவறா? ஈழத் தமிழருக்கு நான் இப்போதும் உதவி வருகிறேன் என கூறியிருந்தார். ஆனாலும் உலகத் தமிழர்கள் மத்தியில் முத்தையா முரளிதரனுக்கு கடு எதிர்ப்பு நீடித்தது.


நடிக்க வேண்டாம்முரளி மீண்டும் அறிக்கை


இந்த நிலையில் தம்முடைய வரலாற்று படத்தில் விஜய்சேதுபதி நடிக்க வேண்டாம் என முரளிதரன் ஒரு வேண்டுகோள் விடுத்து இன்று மற்றொரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், விஜய் சேதுபதி அவர்களின் கலைபயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்க் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக் கொள்கிறேன் எனவும் முத்தையா முரளிதரன் கூறியிருந்தார்.


விஜய்சேதுபதிக்கு வேண்டுகோள்விஜய் சேதுபதிக்கு முரளி வேண்டுகோள்


மேலும், எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என்று நடிகர் விஜய்சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை என்றும் முரளி கூறியிருந்தார்.


விஜய் சேதுபதி விலகல்விலகினார் விஜய்சேதுபதி


முத்தையா முரளிதரனின் இந்த வேண்டுகோள் அறிக்கையை தமது ட்விட்டரில் ஷேர் செய்து நன்றி வணக்கம் என்று மட்டும் சூசகமாக பதிவிட்டுள்ளார் நடிகர் விஜய்சேதுபதி. இதனால் முத்தையா முரளிதரன் திரைப்படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலகுவது உறுதியாகி உள்ளது.


Read More

July 12, 2020

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கு கரோனா தொற்று
by Editor - 0

அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.  இந்த பரிசோதனையின் முடிவுகள் இன்று வெளியாகும் என்று அம்மநில சுகாதாரத்துறை மந்திரி கூறினார்.

 

இந்த நிலையில், அமிதாப் பச்சனின் மருமகள் மற்றும் அபிஷேக் பச்சனின் மனைவியான நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களது மகள் ஆரத்யாவுக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை சுகாதாரத்துறை மந்திரி உறுதிப்படுத்தி உள்ளார். ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அமிதாப்பச்சனை தொலைபேசியில் தொடர்புகொண்ட நடிகர் ரஜினி காந்த், உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அமிதாப் பச்சனும் அவரது மகனான அபிஷேக் பச்சனும் கரோனாவில் இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும் நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். 
Read More

July 10, 2020

த்ரிஷாவுக்கு எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன்!
by Editor - 0

"எட்டுத் தோட்டாக்கள்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா மிதுன். மாடலிங் துறையிலிருந்து தமிழ் சினிமாவில் ஒருசில கதாபாத்திரங்களில் தோன்றினார். இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாம் சீஸனில் பங்குபெற்றதன் மூலம் பிரபலமடைந்தார்.

பிக்பாஸில் இயக்குனர் சேரன் மீது, மீரா மிதுன் அவதூறு பரப்பியபின் இவருக்கு சமூக வலைதளத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. அவர் பிக்பாஸைவிட்டு வெளியேறிய பின்பும் இது தொடர்ந்தது. இதன்பின் தினசரி தன்னைத்தானே புகழ்ந்துகொண்டு, மற்றவ போட்டியாளர்களை இகழ்ந்து வீடியோக்களை பதிவிட்டார். இதுவும் சர்ச்சையை கிளப்பியது.

 

இந்நிலையில் நடிகை த்ரிஷா குறித்து மீரா மிதுன் ட்வீட் செய்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. “இனி என்னை போல ஹேர் ஸ்டைல், என்னை போன்ற தோற்றம் என மார்பிங் செய்து புகைப்படங்களை நீங்கள் எடுப்பதை கண்டால் சீரியஸாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுக்கும்படி ட்வீட் செய்துள்ளார்.
Read More

June 04, 2018

ரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்
by admin - 0

ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது.தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில் காலா திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டுமென உலகம் முழுவதிலும் இருக்கும் பல தமிழர் அமைப்புகள் அறிவித்து கொண்டிருக்கின்றன.









இதற்கு நோர்வே, சுவிஸ் நாடுகளுக்கான திரைப்பட விநியோகித்தர்கள் ஏற்றுக்கொண்டு தமது நாடுகளில் காலா திரைப்படத்தை திரையிடவில்லை என அறிவித்துள்ளனர்.



Read More

February 25, 2018

பிரபல திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார்.
by admin - 0

பிரபல திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார்.


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த 1967-ஆம் ஆண்டு கந்தன் கருணை படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன இவர் அதன் பின் நடிகர்களான ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் நடித்து தனக்கென்று திரையுலகில் தனி முத்திரை பதித்தார்.

இந்நிலையில் ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.நேற்று இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார்.



இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர்.

ரஜினி, கமல் போன்ற தமிழின் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீதேவி. அவர் நடித்த 16 வயதினிலே முக்கியமானப் படம்.

திருமணத்திற்குப் பிறகு திரைத்துறையை விட்டு விலகிய அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி ஆனார். அவருடைய மரணம் திரையுலகினருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Read More

January 16, 2018

மண்டையோடு நாய் நக்கும்…! காலத்திற்கேற்ற சமூகத்திற்கு அவசியமான பாடல்..!
by admin - 0

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதி தப்பிச்சென்றதாக ஒரு செய்தியோடு ஆரம்பிக்கின்றது இந்தப்பாடல்.தமிழர்களின் கலாச்சாரமான “கற்பை” கருவாகக்கொண்டு, நாட்டில் அரங்கேறும் பல தரப்பட்ட சீர்கேடுகளை இந்தப்பாடல் வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றது.





பலரது உள்ளத்தை உலுக்கிப்பதற வைத்த பாடசாலை மாணவியைக் கடத்திக் கற்பழித்துக் கொலை செய்த கொடூர சம்பவத்தின் சூத்திரதாரிக்குத்துணை போன அரசியல் மந்தி(ரி) களின் முகத்திரை இந்தப்பாடல் மூலம் நன்கு கிழித்துத் தொங்கவிடப்பட்டதுடன், மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னரும் அதாவது எதிர்காலத்தில் மீண்டும் தப்பிக்க எத்தனித்தால் என்ன ஆகும் என்பதனை கன கச்சிதமாக பாடலுடன் பாடலாய் நெற்றிப்பொட்டில் சுடுவதைப்போன்று வெளிப்படுத்தியிருக்கின்றது. 


“கற்பு” என்பது அழிக்கப்பட்டாலும் சரி அது இழக்கப்பட்டாலும் சரி தமிழினமே அழிந்து விடும் என்ற முதல் ஆரம்ப வரிகளே பாடலுக்கு மகுடம்.

மரண தண்டனைக்கைதியாக நடித்திருப்பவரின் இயல்பான நடிப்பைப்பாராட்டியே ஆக வேண்டும். கதைக்கருவிற்கேற்ற அசத்தல் இசையும் பாடல் வரிகளும் விறு விறுப்பானவை. பல நாள் கடின உழைப்பில் படைக்கப்பட்ட பாடல் என்பது கண்கூடாகத்தெரிகின்றது.பாடலின் இரண்டாவது பகுதியாக காதல் என்னும் போர்வையில் இருவரை ஏமாற்றுகின்றாள் ஒரு பெண். அவளுக்கும் தப்பிச்சென்ற மரண தண்டனைக்கைதிக்கும் ஒரே முடிவினை வழங்குவதாக பாடல் மற்றும் காட்சிகள் மூலம் மிக அருமையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது.



“இது இப்பிடித்தான் நாங்கள் அப்பிடித்தான்”

மண்டையோடு நாய் நக்கும்…
காலத்திற்கேற்ற சமூகத்திற்கு அவசியமான பாடல்..!

-அரசி நிலவன்


Read More

November 23, 2017

முகமிழந்த எதிலிகள் - குறும்படம் short film
by admin - 0

முகமிழந்த எதிலிகள் - குறும்படம் 



தமிழுக்கும் தமிழனுக்கும் வரப்போகும் பிரச்சனையை எடுத்துக் கூறும் கதை 






Read More

July 25, 2017

BIGG BOSS ஓவியா வெற்றிபெறுவது உறுதி.
BIGG BOSS மனித நிஜ உணர்வுகளின் பிம்பம்.

by admin - 0

BIGG BOSS ஓவியா வெற்றிபெறுவது உறுதி.
BIGG BOSS மனித நிஜ உணர்வுகளின் பிம்பம்.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

▪பல போலி முகங்களின் உண்மையான முகங்களை தெளிவாகக் காட்டுகிறது..!




▪நம்பமுடியாத சில மனிதர்களின் உண்மையான உணர்வுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது...



▪நாம் மற்றவர்களின் கதை கேட்டு  அவமதித்து, கண்டுகொள்ளாமல் துரத்தி/தூர வீசியவர்களின் நியாய தர்மங்களையும் காட்டுகிறது.



▪நாம், நம்பித் தொலைக்கின்ற/தொடருகின்ற திரை நட்சத்திரங்களின் போலிப் பிம்பங்களையும் தோலுரித்து தொங்க விடுகிறது!



▪திரைப் பிரபலங்கள் அனைவரும், உண்மையில் நடிகர்களே என்பதை தெளிவாக உணர வைத்திருக்கிறது.



▪திரைப் பிரபலங்கள் அனைவரும்  நம்மைப் போன்றவர்களே (கமல், ரஜினி, விஜய் மற்றும் அஜித் உட்பட) என்பதை மிக மிகத் தெளிவாக உணர வைத்திருக்கிறது.



▪பணம், பெயர் மற்றும் புகழ் உள்ள மனிதர்களை (இலட்சியவாதிகள், கொள்கைவாதிகள், பொதுநலவாதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தேச நலன் விரும்பிகள் போன்றோர்களைத் தவிர) இது போன்ற BIGG BOSS வீட்டில் 30 நாட்கள் மட்டுமே தங்கவிட்டால் போதும்... 

அவர்களின் உண்மையான சுயரூபம் அனைவருக்கும் தெரிந்து விடும். 



▪நாம், ஒவ்வொருவரின் வெளிக் காட்டும் உணர்வுகளையும், பேச்சுக்களையும், செயற்பாடுகளையும் மற்றும் நடைமுறைகளையும் வைத்துக் கொண்டே... நாம், நம்பித் தொலைக்கிறோம்.

ஆனால், அவர்கள் மட்டுமே (ஒரு சிலரைத் தவிர) நமக்கு எதிரானவர்களாக மாறுவார்கள் என்பதை... நாம் ஒரு கணம்கூட நினைத்துப் பார்ப்பதில்லை!!!



▪ நமது அனைத்துச் செயற்பாடுகளையும் யாரோ ஒருவர் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை... நாம், எப்போதுமே மறந்து விடுகிறோம்.

அதனாலேயே,

நமது நிஜ உணர்வுகளின் போலிப் பிம்பங்களை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பி நடிக்கத் தொடங்கி விடுகிறோம். (பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது போல்)

BIGG BOSS தேவையற்ற ஒன்றே என்று கருதினால்...

தற்போதைய சூழலில், BIGG BOSS தேவையான ஒன்றே..!

தற்போது....

சரியான தலைமை இல்லாத தமிழர்களிடையே (தற்போது ஈழம் மற்றும் தமிழகத்தின் இளைஞர்கள், திரைப்பட நாயகர்களே, தமது மாயைத் தலைவர்கள் என பைத்தியக்காரத்தனமாக நம்பி தாய்நாட்டையும் மற்றும் தாய் தந்தையரையும் வெறுத்து ஒதுக்கிக் கொண்டிருப்பதால்) BIGG BOSS மூலம் அரசியல்வாதிகளும், திரைநாயகர்களும் போலியானவர்களே என்பதை நம்ப வைக்கும்.

இந்த BIGG BOSS ஐ விமர்சனங்களின் ஊடாக பார்ப்பவர்களே நமது நாட்டில் அதிகம்.!!

ஆனால், கதிராமங்கலம், நெடுவாசல் தற்போது ஈழத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனோருக்காக வீதிவரை  இறங்கி நின்று போராடும் பெற்றோர், உறவினர்களுக்காக.... 

இன்றுவரை ஆதரவாகத்  துடிப்பவர்களும்/ ஊடக ஆதரவும் மிகமிகக் குறைவே..!



தற்போது நம் தமிழர்களிடையே இனம், மொழி மற்றும் தேசம் சார்ந்த விடுதலைப் போராட்ட எழுச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு...

BIGG BOSS போன்ற திரைக் கவர்ச்சி நிகழ்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். 

பல கோடிப் பார்வையாளர்கள் தினமும் ஒரே நேரத்தில் பார்வையிடுகிறார்கள். புலம்பெயர் ஈழத்தமிழரும் உட்பட...

BIGG BOSS  ஆரம்பித்த முதல் வாரங்களில் எந்தளவு முக்கியத்துவம் பெற்றதோ அந்தளவிற்கு எதிர்மறையான விமர்சனங்களுக்கும் உள்ளானது. 

தற்போது கடந்த வாரங்கள் வரையும் திரைப்படங்களை விடவும் மிகுந்த உச்சக்கட்டம் அடைந்துள்ளதோடு சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. 

ஒரு தேசத்திற்குத் தேவையான முக்கிய செய்திகளை இருட்டடிப்பு செய்து கொண்டு திரை நாயகர்களின் கூத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் தற்போதைய ஊடகங்கள் (ஒரு சில ஊடகங்களைத் தவிர) மிகவும் சிறப்பாகவே செய்து வருகின்றன.

ஆனால், இதுவரையும் அரிதாரம் பூசிய நடிகர்களின் வெளி நடிப்பை திரைகளில் கண்டு அவர்களை தலைவர்களாகவும், கடவுளாகவும் மற்றும் தேவதைகளாகவும் பார்த்து மனதிற்குள் வணங்கி வந்த பல மூடர்களின் மூளைகளில் ஓங்கி ஆணி அறைந்தது போல் BIGG BOSS வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள் ஏற்படுத்தியுள்ளன.



அத்தோடு ஊடகங்களும், சமூக வலைத்தளங்களிலும் BIGG BOSS வீட்டிற்குள் இருப்பவர்களில் ஓவியாவைத் தவிர மற்ற அனைவரையும் அதிலும் குறிப்பாக காயத்ரி ரகுராம், கவிஞர் சினேகன் மற்றும் ஜூலி போன்றோரை கிழித்து தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

ஆஹா... இப்போதுதான் சமூக வலைத்தளங்களும், ஊடகங்களும் திரைநாயகர்களின் உண்மை முகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. 

இவ்வாறாக மக்கள் நம்பித் தொலைக்கின்ற ஒவ்வொரு திரைப்பிரபலங்களையும் வரிசையாக இந்த BIGG BOSS வீட்டினில் தங்க வைத்து அவர்களின் போலி முகமூடிகளை அகற்றி உண்மை முகங்களை காண்பிக்க வேண்டும். 

அதேபோல் போலி முகமூடி அணிந்து கொண்டு மக்களை ஏமாற்றித் திரிகின்ற அரசியல்வாதிகளையும் இந்த BIGG BOSS வீட்டினில் ஒரு மாதமாவது தங்க வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால்.... 

இன்று ஓவியாவைப் போன்ற சகிப்புத்தன்மை நிறைந்த பல நல்ல உள்ளங்களை அடையாளம் கண்டறிந்தது போல் காயத்ரி, ஜூலி மற்றும் சினேகன் போன்றோரைப் போல் உண்மை முகங்களையும் அறிந்து கொள்ள முடியும்.



அத்தோடு போலி அரசியல்வாதிகளையும் திரைப்பட நாயகர்களையும் சிறந்த தலைவர்களாக நம்பி பின்தொடர்ந்த ரசிகர்கள் அந்த மாயையில் இருந்து விடுபட்டு  தற்போதைய நாட்டின் முக்கிய தேவைகள் எவை என்பதை உணர்ந்து இனம், மொழி, தேசமே... நாம் கௌரவத்தோடும், மானத்தோடும் சுதந்திரத்தோடும் மற்றும் நிம்மதியோடும் வாழ உகந்தது என்பதை உணர்ந்து புதியதொரு பாதையில் பயணிப்பார்கள்.

- வல்வை அகலினியன்
Read More

June 18, 2017

புத்தாக்க அரங்க இயக்கத்தின்உயிர்ப்பு தெருவெளி நாடக ஆற்றுகை
by admin - 0

புத்தாக்க அரங்க இயக்கத்தின்உயிர்ப்பு தெருவெளி நாடக ஆற்றுகை
 
வேல்ட் விசன்(world visions )நிறுவன அனுசரனையில் சாவகச்சேரி பிரதேச செயலக ஒழுங்குபடுத்தலில் புத்தாக்க அரங்க இயக்கத்தின் தயாரிப்பில் எஸ்.ரி.குமரன் எஸ்.ரி.அருள்குமரனின் நெறியாள்கையில் "உயிர்ப்பு" தெருவெளி நாடக ஆற்றுகை தென்மராட்சி பிரதேசத்திற்க்கு உட்பட்ட நாவற்குழி கோயிலாக்கண்டி  , வரணி கரம்பன் குறிச்சி , மந்துவில் கொடிகாமம் , மட்டுவில் ஆகிய இடங்களில் சுற்றுச் சூழல் விழிப்புணர்விழிப்புணர்வு செயற்ப்பாடாக ஆற்றுகை செய்யப்பட்டது.    
 
Read More

June 15, 2017

நடிகரும்,பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
by admin - 0

நடிகரும்,பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
 

இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் தமிழீழ விடுதலைக்காகவும்,தமிழ்த் தேசிய அரசியலுக்காகவும் தீவிரமாகக் களமிறங்கிப் பணியாற்றினார்.விடுதலைப் புலிகளை ஆதரிப்பதிலும்,தமிழீழத்தை ஆதரிப்பதிலும் முன்னணியிலிருந்தார்.தம்முடைய இறுதி மூச்சு வரையில் ஒரு தமிழ்த் தேசியப் போராளியாகவே வாழ்ந்தார்.உலகத் தமிழர்களின் நம்பிக்கைக்கும் நன்மதிப்புக்கும் உரியவராக விளங்கினார்.

இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்து,பல வெற்றிப் படங்களை இயக்கி, வெற்றிக் கண்டதோடு மட்டுமல்லாமல், ஒரு நடிகராகவும் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், மணிவண்ணன் அவர்கள். ஒரு இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த அவர், தனது 50-வது திரைப்படமான ‘நாகராஜசோழன் எம். ஏ.எம்.எல்.ஏ’ என்ற படத்தை இயக்கிமுடித்து, அதன் இசையையும் வெளியிட்டுள்ளார். இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வந்த அவர், ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, மற்றும் ‘ஆகாய கங்கை’ போன்ற திரைப்படங்களுக்குக் கதாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். 1982ல், தமிழ்த் திரையுலகில் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவர், ’24 மணி நேரம்’, ‘நூறாவது நாள்’, ‘ஜல்லிக்கட்டு’, ‘சின்ன தம்பி பெரிய தம்பி’, ‘தெற்குத் தெரு மச்சான்’, ‘அமைதிப்படை’ போன்ற வெற்றிப் படங்களைத் தமிழ் ரசிகர்களுக்குப் பரிசாக்கியவர். அத்தகைய சிறப்புமிக்க இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன்.

மணிவன்னான் அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் ஆர். எஸ். மணியம் மற்றும் மரகதம் தம்பதியருக்கு மகனாக ஜூலை மாதம் 31 ஆம் தேதி, 1954 ஆம் ஆண்டில் பிறந்தார். அவருக்குப் பெற்றோரிட்ட பெயர் ‘மணிவண்ணன் ராஜகோபால்’. அவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

மணிவண்ணன் அவர்களது தாயார் ஒரு பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அவரது தந்தை ஒரு அரிசி வியாபாரியாகவும், ஜவுளி வர்த்தகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தனர். மேலும், அவருடைய குடும்பத்தில் ஒரே மகன் என்பதாலும், வீட்டில் அவருக்குச் செல்லம் அதிகமாகவே இருந்தது. இதனால் அவருக்குப் படிப்பில் அதிகளவு நாட்டம் செல்லவில்லை. இருப்பினும், கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.யூ.சி வரை படித்த அவர், பலருடன் நட்பாக இருந்தார். அப்பொழுது அவருக்கு அறிமுகமானவரே, சத்யராஜ் அவர்கள். கல்லூரியில் படிக்கும் போது, பல மேடை நாடகங்களால் ஈர்க்கப்பட்ட அவர், சில நாடகங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

திரையுலகப் பிரவேசம்

பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தால் பெரிதும் கவரப்பட்ட மணிவண்ணன் அவர்கள், 1௦௦ பக்கம் ரசிகர் மின்னஞ்சல் ஒன்றை பாரதிராஜாவிற்கு அனுப்பினார். அவரது உள்ளார்வமிக்கத் தாக்கத்தை உணர்ந்த பாரதிராஜா அவர்கள், அவரை சந்திக்க விரும்பியதால், சென்னை சென்றார், மணிவண்ணன். மேலும், 1979ல் பாரதிராஜா ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தை இயக்கும் போது, அவரைத் தன்னுடைய உதவியாளராக சேர்த்துக் கொண்டார். ‘நிழல்கள்’, ‘டிக் டிக் டிக்’, ‘காதல் ஓவியம்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘ஆகாய கங்கை’, ‘லாட்டரி டிக்கெட்’, ‘நேசம்’ போன்ற படங்களுக்குக் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்திருக்கிறார். ‘புதிய வார்ப்புகள்’, ‘கொத்த ஜீவிதாலு’ (தெலுங்கு), ‘கிழக்கே போகும் ரயில்’ (தெலுங்கு), ‘ரெட் ரோஸ்’ (ஹிந்தி) மற்றும் ‘லவ்வர்ஸ்’ (இந்தி) போன்ற படங்களில் பாரதிராஜாவின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அவர், பாரதிராஜாவின் ‘கொடிப் பறக்குது’ என்ற படத்தில் வில்லனாகத் திரையில் அறிமுகமானார்.

திரையுலக வாழ்க்கை

1982ல் வெளியான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம், மணிவண்ணன் தமிழ் திரையுலகில் தனித்து இயக்கிய முதல் படமாகும். அதைத் தொடர்ந்து, ‘ஜோதி’ (1983), ‘வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன்’ (1983), ‘இளமைக் காலங்கள்’ (1983), ‘குவாகுவா வாத்துக்கள்’ (1984), ‘ஜனவரி ஒன்னு’ (1984), ‘இங்கேயும் ஒரு கங்கை’ (1984), ‘இருபத்தி நாலு மணிநேரம்’ (1984), ‘நூறாவது நாள்’ (1984), ‘அன்பின் முகவரி’ (1985), ‘விடிஞ்சா கல்யாணம்’ (1986), ‘பாலைவன ரோஜாக்கள்’ (1986), ‘முதல் வசந்தம்’ (1986), ‘இனி ஒரு சுதந்திரம்’ (1987), ‘தீர்த்தக் கரையினிலே’ (1987), ‘புயல் படும் பாட்டு’ (1987), ‘கல்யான் கச்சேரி’ (1987), ‘ஜல்லிக்கட்டு’ (1987), ‘சின்ன தம்பி பெரிய தம்பி’ (1987), ‘கணம் கோர்ட்டார் அவர்களே’ (1988), ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ (1988), ‘மனிதன் மாறிவிட்டான்’, (1989), ‘வாழ்க்கை சக்கரம்’ (1990), ‘சந்தனக்காற்று’ (1990), ‘புது மனிதன்’ (1991), ‘தெற்குத் தெரு மச்சான்’ (1992), ‘கவர்மென்ட் மாப்பிள்ளை’ (1992), ‘மூன்றாவது கண்’ (1993), ‘அமைதிப்படை’ (1994), ‘வீரப்பதக்கம்’ (1994), ‘ராசாமகன்’ (1994), ‘தோழர் பாண்டியன்’ (1994), ‘கங்கை கரை பாட்டு’ (1995), ‘ஆண்டான் அடிமை’ (2001), ‘நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ’ (2013) என ஐம்பது திரைப்படங்கள் இயக்கியுள்ளார். தற்போது, தனது 50-வது திரைப்படமான ‘நாகராஜசோழன் எம். ஏ.எம்.எல்.ஏ’ என்ற படத்தை இயக்கிமுடித்து, அதன் இசையையும் வெளியிட்டுள்ளார்.

நடிகராக மணிவண்ணன் ஒரு உதவி இயக்குனராக தமிழ்த் திரையுலகில் நுழைந்த மணிவண்ணன், பாரதிராஜாவின் ‘கொடி பறக்குது’ என்ற படம் மூலமாக வில்லனாக அறிமுகமானார். அக்கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததால், தொடர்ந்து 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் இயக்கிய ‘அமைதிப்படை’ படத்தில் நடித்த கதாபாத்திரம் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றதால், அவர் ‘கோகுலத்தில் சீதை’, ‘காதல் கோட்டை’, ‘அவ்வை சண்முகி’, ‘காதலுக்கு மரியாதை’, ‘ஜீன்ஸ்’, ‘பொற்காலம்’, ‘சங்கமம்’, ‘படையப்பா’, ‘முதல்வன்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘முகவரி’, ‘ரிதம்’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘டும் டும் டும்’, ‘காசி’, ‘பிரியாத வரம் வேண்டும்’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’, ‘வசீகரா’, ‘மஜா’, ‘சம்திங் சம்திங்… உனக்கும் எனக்கும்’, ‘ஆதி’, ‘சீனா தானா’, ‘சிவாஜி’, ‘குருவி’, ‘ராமன் தேடிய சீதை’, ‘தில்லாலங்கடி’, ‘வேலாயுதம்’ போன்ற பல்வேறு படங்களில் தனக்கென உரித்தான பாணியில் வசனங்களை சர்வசாதாரணமாக அவரது சிறப்பான நடிப்பில் வெளிப்படுத்தி, அவர் ஒரு சிறந்த இயக்குனர் மட்டுமின்றி மிகப்பெரிய நடிகர் என்பதையும் நிரூபித்துள்ளார். அவர், தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், விக்ரம் போன்றோருடன் இணைந்து நடித்துள்ளார்.

இல்லற வாழ்க்கை

மணிவண்ணன் அவர்கள், செங்கமலம் என்பவரை மணமுடித்தார். அவர்கள் இருவருக்கும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர். அவரது மகனும் ஒரு நடிகரென்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் வாழ்க்கை

மணிவண்ணன் அவர்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (ம.தி.மு.க.) அரசியல் கட்சியில் சேர்ந்தார். மேலும், 2006 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில், அக்கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரமும் மேற்கொண்டார்.

இறப்பு

இயக்குனராகத் தனது 50 வது படத்தை இயக்கி, அப்படத்தை வெளியிட்ட மணிவண்ணன் அவர்கள், தனது 58வது வயதில் மாரடைப்பால் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் ஜூன் மாதம் 15 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டில் காலமானார். அவரது விருப்பப்படி,அவரது உடல் தமிழ் ஈழக் கொடியால் மூடப்பட்டது.

காலவரிசை

1954: தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் ஆர். எஸ். மணியம் மற்றும் மரகதம் தம்பதியருக்கு மகனாக ஜூலை மாதம் 31 ஆம் தேதி, 1954 ஆம் ஆண்டில் பிறந்தார்.

1979: பாரதிராஜா ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தை இயக்கம் போது, அவரைத் தன்னுடைய உதவியாளராக சேர்த்துக் கொண்டார்.

1989: ‘கொடிப் பறக்குது’ என்ற படத்தில் வில்லனாகத் திரையில் அறிமுகமானார்.

1982: ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம், மணிவண்ணன் தமிழ் திரையுலகில் தனித்து இயக்கிய முதல் படமாகும்.

1994: அவர் இயக்கிய ‘அமைதிப்படை’ பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

2006: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (ம.தி.மு.க.) அரசியல் கட்சியில் சேர்ந்த அவர், 2006 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில்,அக்கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரமும் மேற்கொண்டார்.

பல இயக்குநர்களையும், நடிகர்களையும் உருவாக்கியவர்.
கட்சி பேதங்களை தாண்டி தன் நடிப்பாலும்,இயக்கத்தாலும்,அரசியற்செயற்பாட்டாலும் அனைவராலும் மதிக்கப்பட்ட தமிழ் உணர்வாளரான திரு.மணிவண்ணன் அவர்களுக்கு வீரவணக்கம்.

-ஈழம் ரஞ்சன்-
  
Read More

May 03, 2017

வடமராட்சி மாலை சந்தை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயத்திற்கு புதிய பாடல் வெளியீடு 

 New song
by admin - 0

 
வடமராட்சி மாலை சந்தை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயத்திற்கு புதிய பாடல் வெளியீடு 




அல்வாய் கிழக்கு மாலை சந்தை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாலைசந்தையான் புகழ் பாடும் புதிய இறுவெட்டு வெளியீடப்பட்டுள்ளது, 

பாடல் வரிகள் 
வெற்றி துஷ்யந்தன் 



இசை 
வெற்றி சிந்துஜன் 



பாடியவர் 
ஈழத்து முன்னனி பாடகர் ஜெயா சுகுமார் 



ஔிப்பதிவு 
எஸ் - பிரவீன் 
மாலு சந்தி 

தயாரிப்பு -அனுசரனை 
கணேசராசா சதீசன் ( கானா )
சிவஞானம் செல்வதீபன்  (சுவிட்சர்லாந்து )
Read More

March 21, 2017

தமிழா நீ தமிழா? ஈழத்திலிருந்து தமிழர்களுக்கான ஒரு பாடல்.
by admin - 0

தமிழா நீ தமிழா? ஈழத்திலிருந்து தமிழர்களுக்கான ஒரு பாடல்.

sivakurunathan
தடைகள் பல தாண்டி
படைகள் பல வென்ற
தமிழன் போலவா
இருக்கின்றோம்

சொல்லிசை - கலாமோகன் பகிர்தன்
உரையிசை- த.மதீசன்
வரிகள்-  கலாமோகன் பகிர்தன், தி.தர்மலிங்கம்
ஒலிச்சமப்படுத்தல்-  ரஞ்சன்  கிருஷ்ணா
ஓவியங்கள் - திரோஸ்கி மருது
ஒளித்தொகுப்பு - சசிகரன் யோ
இசை- த.மதீசன்
தயாரிப்பு- பூவன் மீடியா


Read More

March 16, 2017

விஜய் மீண்டும் சாதனை! ரசிகர்கள் உற்சாகம்
by admin - 0

விஜயின் படங்களில் மிகவும் எதிர்பார்ப்பை பெற்றிருந்தது அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த பைரவா. பரதன் இயக்கத்தில் வெளியான இப்படத்தால் நஷ்டம் தான் என வினியோகஸ்தர்கள் கூறினர்.

அதே நேரத்தில் படத்திற்கு சில அரசியல் சிக்கல்கள் இருந்தது எனவும் சொல்லப்படுகிறது. படத்தில் பாடல்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்பது சிலரின் கருத்து.

ஆனாலும் ஏற்கனவே நில்லாயோ பாடல் இணையதளத்தில் 1 கோடி பார்வைகளை தாண்டியது. தற்போது பாப்பா பாப்பா பாடலும் தற்போது 1 கோடி பார்வைகளை தாண்டியுள்ளது.
Read More

February 10, 2017

சி3 (சிங்கம்3) விமர்சனம்
by Editor - 0

நடிகர்கள்: சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன், சூரி, ரோபோ சங்கர், அனூப் சிங், இமான் அண்ணாச்சி

ஒளிப்பதிவு: ப்ரியன்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்

இயக்கம்: ஹரி

இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று பெயருக்கு போட்டுக் கொண்டு, முந்தைய பாகத்துக்கு சம்பந்தமே இல்லாமல் படமெடுத்து வைப்பார்கள். ஆனால் ஹரி அதில் ரொம்ப தெளிவானவர். உண்மையிலேயே முந்தைய பாகங்களின் தொடர்ச்சியாக சிங்கம் 3-ஐ எடுத்திருக்கிறார்.

விசாகப்பட்டணத்தில் போலீஸ் கமிஷனர் மர்மமாகக் கொல்லப்படுகிறார். அதை விசாரிக்க தமிழக போலீசின் உதவியை ஆந்திரா நாட, நம்ம துரைசிங்கம் சூர்யாவை அனுப்பி வைக்கிறார்கள். அவர் வி.பட்டணத்தில் இறங்கியதுமே பின் தொடர ஆரம்பிக்கிறார் ஸ்ருதி ஹாஸன்.

இந்தக் கொலையில், வெளிநாட்டிலிருந்து விஷக் கழிவுகளைக் கொண்டுவந்து இந்தியாவில் எரிக்கும், காலாவதியான மருந்துகளை இந்தியாவில் விற்று காசு பார்க்கும் கொடிய கும்பல், அவர்களுக்குத் துணை நிற்கும் அரசியல்வாதிகள் பின்னணி இருப்பதை சூர்யா கண்டுபிடிக்கிறார். இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி சூர்யா எப்படித் தண்டிக்கிறார் என்ற டெம்ப்ளேட் கதைதான் சி3. ஆனால் அதை எடுத்திருக்கும் விதம் செம விறுவிறு... ஒரு ஆக்ஷன் கதையில் எத்தனை ஓட்டைகள் வேண்டுமானாலும் இருக்கட்டும்... கதை அரைத்த மாவாகவே கூட இருக்கட்டும். ஆனால் காட்சிகளை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் கடத்தும் வித்தை கை வந்தால் ஒவ்வொருவரும் ஹரிதான்!

சி3 எனும் சிங்கம் 3 படத்தைப் பார்க்கும் யாரையும் யோசிக்கவே விடவில்லை ஹரி. பரபரவென நகர்கின்ற காட்சிகள். அதே நேரம் காதைக் கிழிக்கிறது சத்தம். எல்லோரும் ஹை டெசிபலில் கத்திக் கொண்டே இருப்பதைத் தவிர்த்திருக்கலாம்



முதல் இரு பாகங்களில் வந்த அதே துரை சிங்கம் சூர்யா. ஆனால் முந்தைய இரு பாகங்களை விட இதில் கூடுதல் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். பார்க்கிறவர்களின் ரத்தத்தைச் சூடாக்கும் பரபர நடிப்பு. வசன உச்சரிப்பில் அனல் கக்குகிறார். ஆனா இவ்ளோ கத்தாதீங்க சூர்யா... தொண்டைக்கும் இதயத்துக்கும் நல்லதல்ல, உங்களுக்கு மட்டுமல்ல, பார்ப்பவர்களுக்கும்தான்.. அப்புறம் காதல் காட்சிகளில் எதற்கு இத்தனை விறைப்பு.. கொஞ்சம் ரிலாக்ஸா லவ் பண்ணுங்க பாஸ்! சூர்யாவுக்கு இளம் ஆன்ட்டி மாதிரி ஆகிவிட்டார் அனுஷ்கா. இருந்தாலும் ரசிக்க வைக்கிறது அவரது அழகு. நல்ல வேளை இந்தப் படத்தில் கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள்.

துப்பறியும் பத்திரிகையாளராக வரும் ஸ்ருதி, வழக்கம் போல சூர்யாவை ஒருதலையாகக் காதலிக்கிறார். முந்தைய படத்தில் ஹன்சிகா செய்ததைத்தான் இதில் ஸ்ருதி செய்கிறார். பெரிதாகக் கவரவில்லை. சூரியுடன் அவரது காமெடிக் காட்சிகள் எரிச்சலூட்டுகின்றன

ரோபோ சங்கர் - சூரி காமெடிக் காட்சிகள் வருவதும் தெரியவில்லை, கடந்து போவதும் தெரியவில்லை. அத்தனை வேகம். அனுபவித்து சிரிக்க கொஞ்சம் அவகாசம் தந்திருக்கலாம் இயக்குநர்! படத்தில் இரண்டு வில்லன்கள். ஏகப்பட்ட பாத்திரங்கள். வில்லனைத் தவிர, மற்றவர்கள் வந்தார்கள், சென்றார்கள். பாடகர் க்ரீஷுக்கும் ஒரு வேடம் தந்திருக்கிறார். 

ஹரிக்கு ஏற்ற கேமிராமேன் ப்ரியன். ஹாரிஸ் ஜெயராஜினி இசையில் இரண்டு பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை மண்டைக்குள் செம குடைச்சல்! எடிட்டிங்கில் இன்னும்கூட கவனம் செலுத்தியிருக்கலாம் விடி விஜயன். அவரும்தான் என்ன செய்வார், 18 லட்சம் அடி எடுத்து, அதை 14 ஆயிரம் அடியாக்குவது சாமான்ய விஷயமா என்ன!

வேகம் ஓகே.. இன்னும் கூட விவேகத்தோடு தந்திருக்கலாம். ஆனால் இதையெல்லாம் மீறி ஒரு முறை பார்க்கலாம் எனும் ரகம் இந்த சி3!


Read More

December 20, 2016

இரண்டு இட்லி கூட கிடைக்காமல்..! பட்டினியோடு இறந்த சூப்பர் காமெடி நடிகர்..!!
by admin - 0

எம்.ஜி.ஆர் காலத்தில் அந்த ஒல்லிப் பையன் சென்னைப் பாஷையோடு வாய்ப்புத் தேடி அலைந்தான்.

பல கம்பெனிகள் ஏறி இறங்கியதில் சின்ன சின்ன கேரக்டர்கள் ஓரிரு காட்சிகள் மட்டுமே நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.

சென்னை புறநகரில் ஓலைக் குடிசையில் தான் வாழ்க்கை.. பஸ் பயணம் ஸ்டூடியோவில் சூட்டிங்.. மீண்டும் இரவு நடந்தே தனது வீடு போய் சேருவான்.

1980களில் மெல்ல மெல்ல வெளியே தெரிய ஆரம்பித்தார். காரணம் வித்தியாசமான தோற்றம், சென்னைப் பாஷை..! எஸ் அவர் தான் லூஸ்மோகன்.

ஆர்.சுந்தர்ராஜன் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார். ராமநாராயணன் ரெகுலராக வாய்ப்பு கொடுத்தார்.

சூரக்கோட்டை சிங்க குட்டி படம் இவரை தனித்து அடையாளம் காட்ட லூஸ்மோகன் காலம் உருவானது.

இவர் இல்லாத படங்களே இல்லை.. தனி பாடல் காட்சியே வைத்தார்கள். “கண்ணுன்னா கண்ணு எம்மாம் பெரிய கண்ணு” என்றொரு பாடல் இவரை மேலும் உயர்த்தியது.

1990 முதல் 1999 வரை லூஸ்மோகன் காட்டில் அடைமழை பணமும், புகழும் குவிந்தது. ஏற்கனவே திருமணம் ஆகி பிள்ளைகள் இருந்தார்கள்.

வீடு வாங்கினார், கார் வாங்கினார். ஆசை ஆசையாய் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.

இவர் செய்த மிகப் பெரிய தவறு தனக்கென்று எதுவும் சேர்த்து வைக்காமல் பிள்ளைகள் பெயரில் சொத்துக்கள் வாங்கினார்.

லூஸ்மோகனுக்கு வயதானது. படவாய்ப்புகள் குறைந்தது. வீட்டில் முடங்கிப் போனார். பிள்ளைகளும் ஒரு வாய் சோறு போடவில்லை.

பசி, பட்டினி.. மூப்பு நோயோடு போராடியவர். எனக்கு தினமும் இரண்டு இட்லி கொடுங்கள் என்றார்.

அதுகூட போடவில்லை. பார்த்தார். போலீஸ் கமிஷனர் ஆபீஸ் போனார். பிள்ளைகள் மீது புகார் கொடுத்தார். பெரிய பரபரப்பானது.
Read More

November 13, 2016

இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு குறும்படம் “தனியன்
by admin - 0

 

இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு குறும்படம் “தனியன்



ஒரு காலமும் நாங்கள் ஒருவரை பார்த்து குறைத்து எடைபோடவும் கூடாது அதே நேரத்தில் ஒருவரை பற்றி தெரியாமலும் நாங்கள் வீரம் பேசவும் கூடாது. அதேபோல் அவரை பற்றி தெரியாமலும் அவரை தரை குறைவாகவும் பேசக்கூடாது; இது இயல்பான ஒரு முக்கியமான ஒன்றாகும்.

எழுத்து மற்றும் இயக்கம் லீ அவர்கள்
இசை ஜஸ்ரின் 

நடித்தவர்கள் ஜீவா, ரமேஸ், ஜஸ்ரின் ஆகியோரின் நடிப்பில் வெளியாகியது இந்தக் குறும்படம் 

நாங்கள் ஒருவரை பற்றித் தெரியாமல் எங்களின் சுயவிருப்பங்களுக்காக மது அருந்தி சுயநினைவு இழந்து ஒருவரை தரைகுறைவாக பேசுவது எப்படி ஒரு கேவலமான விடயம் தெரியுமா…? 

அதை அழகாக இந்தக் குறும்படத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. அத்தோடு இதில் ஒரு போராளியை நாம் மதிக்க வேண்டும், அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதையும் குறிப்பிட்டுள்ளமை போற்றப்படவேண்டியவை.

வாழ்த்துக்கள் அனைவருக்கும்
கண்டிப்பாக இளைய சமூதாயத்தவர்கள் இக் குறும்படத்தைப் பாருங்கள் 

நன்றி மீண்டும் சந்திப்போம்
அன்புடன் கஜன்

Read More

October 31, 2016

பிள்ளைகள் குளிர்காய விறகுகாளாகும் அப்பாக்களுக்காக
by admin - 0

 நட்சத்திரம் படைப்பகத்தின் யாழ் சண் ஆதரவில் அஐந்தனின் இயக்கத்தில் முள்ளந்தண்டுகள் குறும்படம் 
 


Read More

October 19, 2016

பிரபுதேவா, தமன்னா திருமணம்..? நயன் கதறல்..!!
by admin - 0


கடந்த இரு வாரங்களாக கோலிவுட், பாலிவுட், மாலுவுட், ஹாலிவுட் வரை பிரபு தேவா, தமன்னா பற்றித்தான் சூடான விவாதங்கள். அந்த மனுஷனுக்கு மட்டும் எப்படியா லட்டு லட்டா வந்து மாட்டுது. என்கிற ரேஞ்சுக்கு காதில் புகை வர பேசுகிறார்கள் சினிமா புள்ளிகள்.


திருமணம் உறுதியாகிவிட்டது என்கிறார்கள். இந்த விஷயத்தில் அதிகமாகவே பாதிக்கப் பட்டது நயன் தானாம்.
கொதித்துப் போய் தமன்னாவை நேரிடையாகவே தொடர்பு கொண்டு அத்தனை விஷயங்களையும் கண்ணீரோடு போட்டு உடைத்தாராம்.
லூசாடி நீ சம்பாதிச்ச மொத்த பணமும் பறி போய்டும் என்று கதற, தமன்னா ஜெர்க் ஆகிவிட்டாராம்.
இரண்டு நாட்கள் பிரபுவிடம் பேசாமல் தவிர்க்கிறாராம். அங்க பிரபு தவிக்கிறாராம்..!
Read More