Latest News
Showing posts with label தேச விடுதலை வீரர்கள். Show all posts
Showing posts with label தேச விடுதலை வீரர்கள். Show all posts

June 07, 2024

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப் போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம்
by Editor - 0

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறையில் நீண்ட காலமாக களமாடி 2009 க்கு பின்னர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த புலனாய்வுத்துறையின் மேலாளர்களில் ஒருவரான விநாயகம் அவர்கள் பிரான்ஸ் நாட்டின் சாவடைந்துள்ளார் . அவரின் இழப்பு குறித்து விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையினர் துயர்பகிர்வு செய்தி ஒன்றினை வெளியிட்டு உள்ளனர். அந்த செய்திக்குறிப்பினை இங்கே அப்படியே பதிவிடுகின்றோம்



தமக்கான தனியரசை அமைத்துக் கொள்வதற்காகத் தமிழினம் சுமந்து நின்ற விடுதலைப் போராட்டப் பாதையிலே, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலில் பிறப்பெடுத்துக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற மாபெரும் இயக்கத்தின் அச்சாணியாகத் திகழும் புலனாய்வுத்துறையின் இயங்குவிசைத் தளத்திலே இமாலய வெற்றிகளையும், சாதனைகளையும் நிகழ்த்தித் தனக்கென ஓர் அத்தியாயத்தை பதிவு செய்து தமிழீழத் தேசியத் தலைவரின் பாராட்டு- தல்களையும் பெற்று மிக நீண்டகாலமாக தமிழீழ நிலப்பரப்பிலும், தமிழீழ எல்லைக்கு அப்பாற்பட்ட எதிரிகளின் தளங்களிலும் சுழன்று வீசிய புலனாய்வுப்போர்முகம் மேலாளர் விநாயகம் (கதிர்காமசேகரம்பிள்ளை- விநாயகமூர்த்தி) அவர்கள் உடல்நலக்குறைவினால் 04.06.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று பிரான்சு நாட்டில் சாவை அணைத்துக் கொண்டார்.  

 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதி உச்சமான தியாகங்களும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவங்கள் மிக்க பகுதியாகவும், விடுதலைப் போராட்ட ஆரம்ப காலங்கள் தொட்டே துலங்கிய தமிழீழத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சி வரணியைப்பிறப்பிடமாகக் கொண்ட மேலாளர் விநாயகம் அவர்கள் 1983ஆம் ஆண்டு தனது பத்தொன்பதாவது வயது தொடக்கம் தமிழீழ விடுதலைப் புலிக- ளின் மறைமுகப் போராளிகளுக்கான தகவல் பரிமாற்றம் மற்றும் வழங்கல் உதவியாளராகச் செயற்பட்டுத் தனது முழுமையான நம்பிக்கையினையும், உறுதியையும் நிலைநாட்டினார். பனை, தென்னைகள் நிறைந்த தோப்புகளிலும், நீரேரி கலந்த சதுப்பு நிலங்களிலும் இவர் பாதங்கள் இலட்சியப் பணி தொடர்ந்தன. பின்னர் 1984ஆம் ஆண்டு தன்னை முழுநேரப் போராளியாக மாற்றிக்கொண்டு, தனக்கான அடிப்படைப் பயிற்சியினை தென்மராட்சியிலே நிறைவு செய்து, தென்மராட்சியின் முதற் பொறுப்பாளராக மிகத் துடிப்போடும், மக்களின் நம்பிக்கையாகவும் இருந்த மேஜர் கேடில்ஸ் அவர்களின் பொறுப்பில் ஆர்வம் துடிப்பு. அறச்சீற்றம் விவேகம் விடுதலை இலட்சியம் ஆகிய சிறப்பம்சங்கள் கொண்ட போராளியாகத் தன்னை நிலைநிறுத்தித் தமிழின விடியலுக்காக அயராது உழைத்தார். 

 சிறிலங்கா இராணுவக் கொடூரங்கள்கண்டு கொதித்தெழுந்த விடுதலைப் பற்றுமிக்க பல போராளி களைக்கொண்ட யாழ் மாவட்டத்தின் அன்றைய பொறுப்பாளராக இருந்த கேணல் கிட்டு அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவுசெய்யும் மேஜர் கேடில்ஸ் அவர்களின் தென்மராட்சி அணியில் மேலாளர் விநாயகமும் ஒருவராக செயற்பட்டார். 1987ஆம் ஆண்டு நாவற்குழி இராணுவமுகாம் மீதானதொரு பாரிய தாக்குதலுக்கான திட்டமிடல்கள் நிகழ்ந்துகொண்டிருந்தவேளையில் வெடிபொருள் நிரப்பப்பட்ட நீர்த்தாங்கி வாகனம் தவறுதலாக வெடித்த சம்பவத்தில் லெப்.கேணல்.பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட பதினொரு போராளிகள் வீரச்சாவைத் தழுவிய சம்பவத்தில் மேலாளர் விநாயகம் அவர்கள் விழுப்புண் அடைந்தார்.  

 

விடுதலைக்கான உழைப்பு என்பதில் கால நேரங்களையோ. கடினங்களையோ சுமையாகக் கொள்ளாது சுகமாக ஏற்று இதயச் சுத்தியோடு கடமைகளை முடிக்கும் பக்குவ நிலையால் மக்கள் மனங்களில் நிறைந்து அழியாப்புகழ் கொண்டவர்களே எங்கள் மாவீரர்கள். அத்தகைய வார்த்தைகளுக்குள்ளும், வரலாறுகளுக்குள்ளும் எப்போதும் நிலைத்து நிற்கும் பெரும் பேறு பெற்றவர் மேலாளர் விநாயகம் என்றால் அது மிகையாகாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் ஆளுகைப் பரப்பென்பது உள்ளக. வெளியகப் பரப்புக்களால் விரிந்து முகவர் கட்டமைப்புத் தொடக்கம் ஈட்டப்படும் பெரு வெற்றிவரை அது தமிழ்த்தேசிய நிழலரசின் ஆணிவேர்ப் பரப்பைத்தாங்கிநிற்கும் நுண்ணிய உயிர்நாடிப் பொறிமுறையாகும். அவதானித்தல், தகவல்களைச் சேகரித்தல், ஒப்புநோக்கல், செவ்வைபார்த்தல், திட்டமிடல். இலக்கைச் சென்றடைதல், எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் வெற்றியைப் பெறல், மீண்டும் தளம் திரும்புதல், பகுப்பாய்தல், பொறுப்புக்கூறல்,இப்படியாக நீண்டு செல்லும் ஒவ்வொருகட்டத்திற்கும் தனித்தனியான கடும்பயிற்சியும், தந்திரங்களும், முயற்சியும் இருந்தே ஆகவேண்டும், 

 

இவற்றுக்கெல்லாம் தனது உடலில் எத்தனை உபாதைகள் இருந்தாலும் அவற்றைத் தாண்டி சாதனை நாயகனாக வலம் வந்தார் மேலாளர் விநாயகம் அவர்கள். பல்வேறு பொறுப்பாளர்களின் பொறுப்பின் கீழ் பல்வேறு தளங்களில் ஓயாது உழைத்த மேலாளர் விநாயகம் அவர்களது வாழ்க்கை வரலாற்றை வெறுமனே ஓர் அறிக்கையின் மூலமாக நிறுவிவிடமுடியாது. அது தமிழ் இலக்கண, இலக்கியக் கோவைகளால் நிரம்பிய எதிர்கால இளம்தலைமுறை படித்துணரவேண்டிய ஒரு சிறந்த நூலாக அமைய வேண்டும், அதனை உலகப் பரப்பெங்கிலும் வாழும் அவரது தோழமை உறவுகளால் காலக் கிரமத்தில் ஈடேற்றப்படுமென நம்புவோம். புலனாய்வுத்துறைப் போராளியாகவே அறியப்பட்ட மேலாளர் விநாயகம் அவர்கள் தமிழீழ விடுதலைக்காகப் பிரசவமாகிய அத்தனை துறைகளோடும், பிரிவுகளோடும் எத்தகைய நல்லுறவைப்பேணினார் என்பதும், தேசநலன் சார்ந்த தெளிவோடும் குறிப்பாக நேர்மையோடும், அறச்சீற்றத்தோடும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் அவர் எப்போதும் பின்னிற்பதில்லை. 

 

தமிழீழத் தேசியத் தலைவரிடம் பல பாராட்டுக்களைப் பெற்றதோடு தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரால் எப்போதுமே இவரைப் போராளிகளுக்கு எடுத்துக்காட்டாளனாகப் பயன்படுத்தியமையும் வரலாறு தன்னகத்தே தாங்கிக் கொண்டுள்ளது. எமது தனித்துவமான அரசியல் இலக்கினை அடைந்துகொள்வதற்கான போர் முறைகளின் ஒரு வடிவமே ஆயுதப் பொறிமுறை என்பதாகும். அவ் ஆயுதப் பொறிமுறை மூலமாக நிகழ்த்தப்படும் சமாதானம் நோக்கிய மாற்றங்கள் மறக்கப்பட முடியாதவை. அத்தகைய ஒரு மாற்றமாகவே 2001ஆம் ஆண்டு சிறிலங்கா கட்டுநாயக்கா விமான நிலையம் மீதான தாக்குதலாகும், எந்தவொரு பொது மக்களுக்கும் பாதிப்பை உண்டுபண்ணாத வகையில் திட்டமிடப்பட்ட இத்தாக்குதலானது உலகின் கவனங்களை ஈர்த்துக்கொண்டதோடு சிறிலங்கா அரசை சமாதானப் பேச்சுநோக்கி முன்னகரவும் வைத்துள்ளது. இத்தாக்குதலின் பிரதான பொறுப்பாளர்களில் ஒருவராக மேலாளர் விநாயகம் அவர்கள் இருந்தார் என்பதும் வரலாறே. 

 

முள்ளிவாய்க்கால் பெருவெளியாக விரிந்த நெருப்பாற்று நீச்சலில் நின்றபடியே, தலைமையின் கட்டளைக்கு அமைய ஒரு குறிப்பிட்ட அணியோடு வரலாற்றுத் திருப்புமுனையை ஏற்படுத்தும் சிறப்பு நடவடிக் கையின் நிமித்தம் வாழ்வா? சாவா? எனும் சவால்மிகு தருணத்தை உறுதியோடும், ஓர்மத்தோடும் ஏற்று எதிரியின் குகைக்குள் சென்று கடமையாற்றியமை ஒரு மாபெரும் மயிர்க்கூச்செறியும் வரலாறு. இந்த வரலாற்றுப் பக்கங்களில் அவரோடு களமாடிய சகதோழர்கள் இன்னும் உயிரோடுதான் உள்ளார்கள். ஆனால் அந்தக் காத்திரமான வரலாற்றுப் பக்கங்களைக் கிழித்தெறியவும், இல்லாதொழிக்கவும் அவதூறுகளைப் பரப்பவும் பல நேரடி, மறைமுகத் துரோக முகங்கள் முற்படினும், நிகழ்காலம் பலரை காலமறிந்து அறத்தின்வழியாக கரங்களைக் கட்டிவைத்திருப்பதானது இப்போது துன்பியலாக இருப்பினும் காலம் ஒரு நேர்கோட்டில் அவற்றைத் தெளிவோடு பதிவாக்கி, இந்த மாவீரன் நேசித்த அதே மக்களின் கரங்களில் ஒப்படைக்கும் என்பது திண்ணம். 

பத்தொன்பது வயதில் ஆரம்பித்த விடுதலைப் பணிகளூடாக அறியப்பட்ட இந்த வரலாற்று நாயகன் தனது அறுபதாவது வயதில் விழிமூடிய இந்நாளில் உலகப் பரப்பெங்கிலும் வாழ்ந்துவரும் உறவுகளாகவும், தாயக மக்கள் சார்பாகவும் வீர வணக்கம் செலுத்துவோமாக. 

 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” 

 

புலனாய்வுத்துறை,  

தமிழீழ விடுதலைப் புலிகள்,  

தமிழீழம் 
Read More

October 19, 2020

சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்
by Editor - 0

சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 20 வருடங்கள் கடந்துள்ளது.2000 ம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி இரவு 10 மணியளவில் ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி சூடு நடத்தி, கைக்குண்டு வீசி நிமலராஜனை அவரது வீட்டில் வைத்தே படுகொலை செய்தனர். அப்போது நிமலராஜன் வீரசேகரி பத்திரிகைக்கு செய்தியொன்றை எழுதிக் கொண்டிருந்தார்.

1983ம் ஆண்டு சிங்கள கடையர்களால் இனக்கலவரத்தில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ் மக்களில் நிமலராஜனும் அவரது குடும்பத்தினரும் உள்ளடங்குகின்றனர். அரசாங்க அச்சகத்தில் பணியாற்றி, அவரது தந்தை இடதுசாரி கொள்கைளைக் கொண்ட தொழிற்சங்கவாதியாவார்.

கொழும்பில் குடியிருந்த நிமலராஜன் குடும்பத்தினர் வீட்டைவிட்டு இரண்டு வாரங்கள் அகதி முகாம்களில் இருந்த பின்னரே யாழ்ப்பாணத்திற்குச் சென்றனர். 1983ம் ஆண்டு ஜூலை இனவாதத் தாக்குதலில் உயிர் தப்பிய தமிழர்கள் பலர் வடக்கு கிழக்கிற்கு அனுப்பப்பட்டனர்.சில வருடங்கள் சென்ற பின்னர் நிமலராஜன் வடபகுதி தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரங்களை ஊடகவியலாளர் என்ற வகையில் எடுத்துரைத்தார்.

குறைந்த வசதிகளுடன் கடினமான சூழலில் அவர் இந்தப் பணியை மேற்கொண்டார். பி.பி.சி தமிழோசை,ஐபிசி தமிழ்,தமிழ் நெற், வீரகேசரி ஆகிய தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழியிலும் பி.பி.சி சந்தேஷய, ஹிரு எவ்.எம் மற்றும் ராவய ஊடகங்களில் சிங்கள மொழியிலும் உயிரிழக்கும் வரை தொடர்ந்தும் தகவல்களை மிகவும் அக்கறையோடு வெளியிட்டு வந்தார்.

இதுதொடர்பாக ஊடக நிறுவனங்களில் அப்போது பணியாற்றிய ஊடகவியலாளர்கள் சாட்சி கூறுவார்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் சரியான தகவல்களை வழங்கும் ஊடகவியலாளராக பல கஸ்டங்களுக்கு மத்தியில் பணியாற்றியக் கூடிய இயலுமையின் காரணமாக நிமலராஜன் தென்பகுதி ஊடகவியலாளர் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஊடகவியலாளராக இருந்தார். தலைநகரில் இருந்ததால் சிங்கள மொழியின் பரீச்சயமும் தனது தந்தையிடமிருந்து கிடைத்த இடதுசாரி கொள்கைகளும், அவருக்கு உதவியாக அமைந்தன. ஒருமுறை நிமலராஜன் ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக பாரதூரமான நெருக்கடியை எதிர்நோக்கினார்.

அப்போது யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வன்முறை மற்றும் அடக்குமுறைச் சூழல் காரணமாக ஊடக அடையாள அட்டையை வைத்திருப்பது மிக முக்கியமாக இருந்தது. இதன்மூலம் ஓரளவு தடையின்றி தகவல்களைத் தேடிக்கொள்ள முடியுமென்ற நிலைப்பாட்டில் நிமலராஜன் இருந்தார். அவருக்குப் பல சிங்கள நண்பர்கள் இருந்தனர். ராவய பத்திரிகை நிறுவனத்தின் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக மிகவும் எதிர்பார்ப்புடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தார். எனினும் அது கிடைக்கவில்லை.

ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன், நிமலராஜன் புலிகள் அமைப்புடன் சம்பந்தப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படுவதால் ராவய பத்திரிகையின் மூலம் அவருக்கு ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுக்க முடியாது எனக் கூறியிருந்தார். ஏ.பி.சி நிறுவனத்தின் தலைவர்களும் அவருக்கு ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கவில்லை. அப்போது பிரதேச ரீதியாக செயல்படும் ஊடகவியலாளர்களுக்கு ஊடக அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுக்க ஊடக நிறுவனங்கள் போதிய அக்கறைக் காட்டவில்லை.

இறுதியில் நிமலராஜன் அரைய பத்திரிகையின் ஊடாக ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டார். எனினும் அவரது செய்தியின் தேவை ஊடகங்களுக்கு இருந்தது. அதற்காக நிமலராஜனை அனைத்து ஊடகங்களும் பயன்படுத்திக் கொண்டன.

வடபகுதி மக்கள் தொடர்பாகவும் அங்கு இடம்பெற்ற, இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பான விடயங்களில் நிமலராஜன் முக்கிய இடத்தை வகித்தார். தனக்குத் தெரிந்த சகல தகவல்களையும் மறைக்காது வெளியிடுவது அவரது இயல்பாக இருந்தது. இதற்காக பணம் கிடைத்ததா கிடைக்கவில்லை என அவர் கருத்திற்கொள்ளவில்லை. அவர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயல்பட்டார். அதை அவர் தனது கடமையாக ஏற்றுக்கொண்டிருந்தார்.

எப்படியான சிரமங்களுக்கு மத்தியிலும் செய்தி அளிக்கையில் ஈடுபட்டிருந்தாலும் பல உள்ளூர் வர்த்தக நிறுவனங்கள் அவருக்கு குறைந்தபட்ச கொடுப்பனவுகளையே வழங்கியது. ஒரு செய்திக்காக 50 ரூபா மாத்திரமே வழங்கப்பட்டது. 24 மணி நேரம் செயல்படும் அந்த நிறுவனத்தின் ஐந்து வானொலிகள் மணிக்கொரு தடவை செய்திச் சுருக்கங்களை ஒலிபரப்பி வருகிறது.

பிரதான செய்திகளுக்கு புறம்பாக இந்தச் செய்திகள் ஒலிபரப்பப்படுகின்றன. அனைத்து செய்தி அறிக்கைகளிலும் நிமலராஜனின் செய்திகள் பயன்படுத்தப்பட்டன. தொலைநகல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தனது குரல் ரீதியாகவும் வழங்கிய அனைத்துச் செய்திகளும் ஒரே அளவிலான ஊதியமே வழங்கப்பட்டது.

இதுசம்பந்தமாக ஊடக நிறுவனங்களின் அதிகாரிகளிடம் சில கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் அதற்கு சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், நிமலராஜன் கொலை செய்யப்பட்ட பின்னர் அவர் தமது நிறுவனங்களின் ஊடகவியலாளர் எனக் கூறி புகழைத்தேடும் தேவை அவர்களுக்கு இருந்தது. நிமலராஜனின் இறுதிக் கிரியைகளுக்காக ஏ.பீ.சி நிறுவன அதிகாரிகள் நிதியுதவிகளை வழங்க முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்தது. இதன்மூலம் அவர்கள் தமது ஊடக நிறுவனத்திற்குப் புகழை ஈட்டிக்கொள்ள முயற்சித்தனர்.

நிமலராஜன் ஊடகவியலாளர் என்ற வகையில் பி.பி.சி சந்தேஸய மூலமே சிங்கள மக்கள் மத்தியில் பரீட்சையமானார். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் காணாமல் போதல், கொலைகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட துன்ப துயரங்கள், அனைத்தையுமே அவரது குரலில் சிங்கள மக்கள் கேட்டனர்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் துயரங்களை சிங்களத்திற்கு கொண்டுசென்றவர் நிமலராஜன்தான். அதில் முக்கியமான நபரும் அவர் தான். செம்மணி படுகொலை தொடர்பான முழுமையான அறிக்கையை நிமலராஜன் ஊடகங்களில் வெளியிட்டார். 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஊர்காவல்துறை தீவகப் பகுதிகளில் இடம்பெற்ற வாக்கு மோசடிகள் தொடர்பாக அவர் முழுமையான செய்தியை வழங்கியிருந்தார்.

இந்தச் செய்தி வெளியிடப்பட்டு சில தினங்களுக்குப் பின்னர் அவருக்கு அடிக்கடி மர்ம அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன. அதிலொரு அழைப்பிற்கு நிமலராஜனின் மனைவி பதிலளித்திருந்தார். நீங்கள் வெள்ளை ஆடை உடுத்த தயாராக இருங்கள் என அந்தத் தொலைபேசி அழைப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த அச்சுறுத்தல்கள் ஈ.பி.டி.பியினரால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. நான் அஞ்சப் போவதில்லை. செய்திகளை நான் தொடர்ந்தும் வழங்குவேன் என நிமராஜன் கூறியிருந்தார்.

தனக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருப்பதாக நிமராஜன் தனது ஊடக நண்பர்களிடம் கூறியிருந்தார். சில தினங்கள் கடந்தன. நிமலராஜன் அவரது வீட்டுக்குள் வைத்தே கொலை செய்யப்பட்டார். அவரது வீடு யாழ்ப்பாணத்தின் அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் அமைந்திருந்தது.

நிமலராஜனின் கொலையானது தேசிய ரீதியில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலும் பாரிய அதிருப்திக்கு காரணமாக அமைந்தது. இந்தக் கொலை தொடர்பாக நேரடியாக அரசாங்கம் மீதே குற்றஞ்சாட்டப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தின் பிரதான கூட்டணிக் கட்சியாக டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி செயல்பட்டது. டக்ளஸ் தேவானந்தா அந்த அரசாங்கத்தின் புனர்வாழ்வு தொடர்பான அமைச்சரவை அந்தந்துள்ள அமைச்சராகப் பணியாற்றினார்.

இந்தக் கொலையுடன் ஈ.பி.டி.பி சம்பந்தப்பட்டுள்ளதாக முதலாவது ஊடக அறிக்கையைத் தமிழர் விடுதலைக் கூட்டணியே வெளியிட்டது. அப்போது அந்தக் கூட்டணியின் தலைவராக ஆனந்தசங்கரி செயல்பட்டுவந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த ஈ.பி.டி.பியினர் நிமலராஜனை விடுதலைப் புலி உறுப்பினர் எனக் குறிப்பிட்டனர். விடுதலைப் புலிகள் அவரைக் கொன்றிருக்கலாம் என ஈ.பி.டி.பி.யினர் குற்றஞ்சுமத்தினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சங்கமும் நிமலராஜன் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது.

மக்களைப் புனர்வாழ்வளிக்க முயற்சிக்கின்றவர்கள் மக்களைக் கொலை செய்துவருவதாகக் கூறி அவர்களும் கொலைக் குற்றத்தை ஈ.பி.டி.பி யினர் மீது சுமத்தினர். சுதந்திர ஊடக அமைப்பும் நிமலராஜனின் கொலைக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது. கொலை இடம்பெற்று சில வாரங்களுக்குப் பின்னர் கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிமலராஜனின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் நிமலராஜனின் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டன. எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்கான குழு போன்ற பல சர்வதேச அமைப்புகள் இந்தக் கொலை குறித்து கவனம் செலுத்தின.

2000ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் மோசடிகள் இந்தக் கொலைக்கு காரணமாக இருப்பதாக இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன. தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்ட எதிர்ப்பு காரணமாக பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம், நிமலராஜன் கொலை சந்தேக நபர்களைத் தேட ஆரம்பித்தது. இந்த விசாரணைகள் யாழ்ப்பாணக் காவல்துறை நிலையத்தின் குற்றப் புலனாய்வுத் துறையின் பொறுப்பதிகாரி ரஞ்சித் டி சில்வாவின் தலைமையில் நடைபெற்றன.

கொலையுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 10 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஈ.பி.டி.பியின் உறுப்பினர்கள் அல்லது அந்த அமைப்பில் முன்னர் செயல்பட்டவர்களாக இருந்தனர். இதுகுறித்து ஊடகங்கள் வழியாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், கொலைக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஆயுதங்களையும் பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

எனினும், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பிரதான சந்தேக நபரை காவல்துறையினர் கைதுசெய்யத் தவறினர். புலனாய்வுப் பிரிவனரால் அந்த பிரதான சந்தேக நபரின் சாட்சியங்களைப் பதிவு செய்து கொள்ள முடியாது போனது.

ஈ.பி.டி.பியின் முக்கிய நபரான நெப்போலியன் என்ற செபஸ்டியன் பிள்ளை ரமேஸ் என்பவர் அரசாங்க அரசியல்வாதிகளின் பாதுகாப்பின் கீழ் நாட்டிலிருந்து இந்தச் சந்தர்ப்பத்தில் தப்பிச் சென்றார். ஏனைய சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதன்பின்னர், ஊடகத்துடன் தொடர்புடைய சில ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் பத்திரிகையின் அலுவலகம் பல சந்தர்ப்பங்களில் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தப் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் கானமயில்நாதனை பல தடவைகள் கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

வலம்புரி பத்திரிகையின் பிரதேச ஊடகவியலாளரான ராமச்சந்திரன் காணாமல் போனதுடன் இதுவரை அவர் தொடர்பான எந்தத் தகவல்களும் இல்லை. ராமச்சந்திரன் வலம்புரி பத்திரிகையின் சாவகச்சேரி செய்தியாளராக பணியாற்றினர்.யாழ்ப்பாண ஊடங்களுக்கு பல தடைகள் விதிக்கப்பட்டதுடன், அச்சு காதிதங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறான பல சிரமங்களுக்கு மத்தியிலும் தமது உயிரரை துச்சமென மதித்து, யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை செய்தனர்.

பல ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த போது, பலர் தமது ஊடக நடவடிக்கைகளில் அமைதியான போதிலும், உதயன் பத்திரிகையின் ஆசிரியர் உள்ளிட்ட சிலர் தமது கடமைகளை தொடர்ந்தும் முன்னெடுத்தனர். இந்த நிலைமையில் நிமலராஜனின் பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் உயிர் பாதுகாப்பு கருதி வெளிநாடு சென்றனர்.

நிமலராஜன் உள்ளிட்ட ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பில் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திடம் நியாயமான விசாரணைகளை எதிர்பார்க்க முடியாது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தொடர்பில் ராஜபக்ஸ அரசாங்கத்தின் முரண்பாடு காணப்பட்டாலும் அவர்கள் சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றவைகள் தொடர்பில் மௌனம் சாதித்து வருகின்றனர். நிமலராஜன் உள்ளிட்ட ஊடகவியலாளர்களின் கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் தற்போதை மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினதும் முக்கிய கூட்டணியாளர்களாக உள்ளனர் என்பதே இதற்கான காரணமாகும்.

நிமலராஜனின் கொலை தாம் செய்யவில்லை என ஈ.பி.டி.பியினர் நிராகரித்த போதிலும், உரிய விசாரணைகளை நடத்த இதுவரை அவர்கள் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. அந்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்பதை எதிர்பார்க்க முடியாது. காரணம் யாழ்ப்பாணத்தில் ஏனைய விடயங்கள் மாத்திரமல்ல ஊடகங்களும் அரசாங்கத்தின் கட்டளையின் கீழேயே செயற்படுகின்றன.

நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 20  வருடங்கள் கடந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது ஊடக நண்பர்கள் அதனை நினைவுகூருவதும் கஸ்டமான நிலைமையாக மாறியுள்ளது. அவ்வாறு அவர்கள் நிமலராஜனை நினைவு கூர்ந்தாலும் அவரை கொன்றவர்களுடன் இணைந்தே நினைவுகூர வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.


நன்றி
-ஈழம் ரஞ்சன்-
Read More

October 05, 2020

தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த பன்னிரு வேங்கைகள்.வேங்கைகள்.
by Editor - 0

1987 செப்ரெம்பர் 26ம் நாள் தமிழீழம் எங்கும் ஒரு துயரம் தோய்ந்த சோகநாளாகவே அமைந்தது. திலீபனின் இழப்பு அனைத்து தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது. சிறீலங்கா – இந்தியா ஒப்பந்தம் மூலம் தமிழீழத்தை ஆக்கிரமித்த இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மக்களுக்காக வாழ்ந்த அந்த ஒளிவிளக்கு ஓய்ந்தது.
இத்தோடு முடிந்துவிட்டது என்று மக்களின் மனத்தில் எண்ணங்கள் ஓட, தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு சிறீலங்கா – இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது. 1987ம் ஆண்டு யூலை 29ம் நாள் சிறீலங்கா – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

சிறீலங்கா – இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்களிற்கு நன்மைகள் கிட்டும், இந்தியா எமக்கு ஒரு வழியைக்காட்டும் என நம்பியிருந்த மக்களிற்கு மாறாக துன்பங்களையும் துயரங்களையுமே சிறீலங்கா அரசும், இந்திய அரசபடைகளும் சுமத்தின. 1987ம் ஆண்டு ஒக்டோபர் 3ம் நாள் தமிழீழக் கடற்பரப்பிலே நிராயுத பாணிகளாக எதிர்கால எண்ணக் கனவுகளுடன் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் படகில் பயணித்தனர். அன்று விடுதலைப் போராட்டம் முனைப்பு பெற்றிருந்த காலத்தில் மிகத்திறமையான படகோட்டிகள், ஆழ்கடலோடிகளாகச் செயற்பட்டவர்கள் இவர்கள்.
சிறீலங்கா இராணுவத்தின் ஆதரவோடு தமிழீழக் கடற்பரப்பில் வைத்து இந்தியப் படைகளால் கைதுசெய்யப்பட்டனர். 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 3ம் நாள் இவர்களைக் கைதுசெய்து பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டுசென்று விசாரணகள் நடாத்திவிட்டு, பின் கொழும்பு கொண்டுசென்று அதன் மூலம் ஒரு சதி நாடகத்தை அரங்கேற்றலாம் என எண்ணி சிறீலங்கா பேரினவாத அரசு திட்டம் தீட்டியது. பலாலி இராணுவ முகாமில் பன்னிருவேங்கைகளும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட சிறீலங்கா அரசபடைகள் எதுவித பலனையும் அடையவில்லை.

தமிழர்களின் காவலர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உயிர் நாடியாகவும் இருந்த இவர்களைக் கைதுசெய்வதன் மூலம் தமிழ் மக்களையும் விடுதலைப் போராட்டத்தையும் அழித்துவிட எண்ணி பல சதிகளைச் செய்தனர். சிறையிலும் எதுவித தளர்வுகளும் இன்றி தமிழர்களின் உரிமைக்காகவே வாதாடினார்கள். இரண்டு நாட்கள் பலாலி இராணுவ முகாமில் தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு அது நடைபெறும் சமநேரத்தில் விடுதலைப் புலிகள் அவர்களை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் இந்தியப் படைகளுடன் பேச்சுவார்த்தையும் நடாத்திப் பார்த்தனர்.

அதுவும் பயனற்றுப் போய்விட்டது. குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளையும் கொழும்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல அரசு திட்டமிட்டிருந்தது. 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 5ம் நாள், தமிழ் மக்கள் மீதும் தாயக மண்மீதும், தலைவர் மீதும் கொண்ட பற்றினால் அங்கு நின்ற இராணுவத்துடன் தங்களால் இயன்றவரை அவர்களுடன் மோதி இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீர மரபினைக்காக்க சயனைட் அருந்தி பன்னிரு வேங்கைகளும் அந்த மண்ணில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தனர்.

அன்றைய நாட்களில் அச்சம்பவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், விடுதலைப் போராட்டம் இன்னும் வீச்சுடன் முன்னகர்ந்தது. தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் போரிடும் வல்லமையை தூண்டியது. பலாலி இராணுவ முகாமில் வைத்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவடைந்த லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் மற்றும் ரகு, நளன், ஆனந்தக்குமார், மிரேஸ், அன்பழகன், றெஜினோல்ட், தவக்குமார், கரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களும் யாழ்ப்பாணம் வடமராட்சி தீருவிலிற்கு எடுத்துவரப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் போராளிகள் முன்னிலையில் தீயில் சங்கமமாகின.

Read More

September 16, 2020

நீர்வேலியின் முத்து கப்டன் அக்காச்சி அண்ணன் அவர்களின் 31 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
by Editor - 0

நீர்வேலியின் முத்து கப்டன் அக்காச்சி அண்ணன் அவர்களின் 31 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
வடக்கு புன்னாலைக்கட்டுவனில் இந்தியப் படையின் முகாம் பொறுப்பதிகாரியான மேஜர் கே.பி.தாஸ் அச்செழு அங்கிளிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். அதாவது அக்காச்சி எப்படிப்பட்டவன் என்பதே அக்கேள்வி. அதற்கு அங்கிள் நல்ல போராளி அதைவிட மிகச் சிறந்த சமூகசேவையாளன் என்று பதில் கொடுத்தார். இதன் பின் அக்காச்சியின் பொதுப் பணிகள் பற்றி ஆராய்ந்த மேஜர் கே.பி. தாஸ் தான் அக்காச்சியைப் பார்க்க வேண்டும் என்றும், அக்காச்சியருகில் இருந்து தேனீர் குடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அடுத்த போர் நிறுத்தம் வரும்போது தனது கண்களைக் கட்டுக்கொண்டுபோயாவது அக்காச்சியின் முன் நிறுத்துங்கள் என்றார். தெற்கு புன்னாலைக்கட்டுவன் முகாம் அதிகாரியான மேஜர் ஒபரோய் பத்து நாட்களுக்குள் அக்காச்சியை உயிருடன் பிடிப்பேன் எனச்சொல்லி தோற்றுப் போனார். ஆனால் பின்னர் அக்காச்சி சமூகத்திற்கு நிறைய சேவைகள் செய்துள்ளான். என்று பிரஜைகள் குழுவிடம் கூறியுள்ளார். இதேபோல் நீர்வேலிச் சந்தியில் முகாமிட்டிருந்த படையதிகாரியான மேஜர் பாபுஜி ஏபிரகாம், அக்காச்சியின் சமூக சேவைகள் பற்றி தான் கேள்விப்பட்டதாக பொது மக்களிடம் கூறியிருக்கிறார்

அனைத்து மக்களதும் அன்பிற்கு உரித்துடைய அந்த வெள்ளை உள்ளம் மறைந்த செய்தி குடாநாடெங்கும் பரவியது. எல்லோர் முகத்திலும் ஒரே துயரம். வலிகாமம் மேற்கில் வட்டுக்கோட்டை தொடக்கம் வலிகிழக்கு அச்சுவேலி, புத்தூர் பகுதியில் இருந்தும் மக்கள் சாரை சாரையாக மிதிவண்டிகள், உழுபொறி வண்டிகள்(டிரக்கரர்), சிறு உழுபொறி வண்டிகள்(லான்ட்மாஸ்ரர்கள்) மூலமும் கப்டன் அக்காச்சியின் வீரவணக்க நிகழ்வு இடம்பெற்ற அந்த இடத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். ஈகைச்சுடர் திலீபன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் தொடங்கிய 15.09.1989 நினைவு வணக்க அலங்கரிப்பு மற்றும் பதாகைகளைக் கட்டுவதிலும் ஈடுபட்டிருந்த மக்களின் செவிகளில் அக்காசியின் வீரச்சாவுச் செய்தி விழுந்த போது அக்காச்சியின் உடலையாவது கடைசியாகப் பார்த்து விடவேண்டும் என்ற ஆவலில் எல்லோரும் வீரவணக்க நிகழ்வு இடம்பெற்ற அந்த ஒதுக்குப் புறமான ஏகாந்தமான பகுதியை நோக்கி விரைந்து கொண்டிருந்தோம். தரிசு நிலப்பகுதி அந்த தரவை நிலத்தை ஊடறுத்துச் செல்லும் களிமண் பாதையில் நெடுந்தூரம் சென்று பின்னர் இடைக்கிடை கரடுமுரடான பாதையிலும் சேற்று நிலத்திலும் மாறி மாறி சில மைல்கள் தூரம் சென்று அக்காச்சியின் வீரவணக்க நிகழ்வு நடந்த அந்த இடத்தை அச்செழு அங்கிளும் எனது மகனும் நானும் அடைந்தோம். இன்னுமொரு பாதைவழியாக, யாழ். மாவட்ட மக்கள் முன்னணி அமைப்பளார் ராஜன் அவர்களை வழிமறித்து அக்காச்சி பற்றிய செய்தியை வினவிய நீர்வேலி உதயதாரகை வாசிகசாலை மக்கள், துயரம் ததும்பிய குரலில் "ஐயோ எங்கள் தலைவனை இழந்து விட்டோம்" என்று அழுது கூறினார்கள். இப்படித்தான் அக்காச்சியின் வித்துடல் வைக்கப்பட்டிருந்த பேழையைச் சுற்றி அமர்ந்திருந்த மக்கள் பெண்கள் முதியவர்கள் தமது தலைவனை இழந்த சோகத்தில் மூழ்கியிருந்த காட்சி என் நெஞ்சை பிழிவதாக இருந்தது.

இளமைக்காலம்

இளமைக் காலம் வசந்த காலம் என்பர். நீர்வேலியைச் சேர்ந்த சிவகுருநாதன் - கனகமணி இணையர் தாம் பெற்ற இரட்டைக் குழந்தைகளுக்கு சிறிகாந்தன் என்றும் சிறிரஞ்சன் என்றும் பெயரிட்டிருந்தனர்;. சிறிரஞ்சன் சிறு வயதிலேயே சாவடைந்து விட்டான். சிறிகாந்தன் விடுதலை இயக்கத்தில் ஜெகன் என்ற பெயரில் இணைந்து கொண்டு அக்காச்சி என்ற பெயரில் மக்கள் தலைவனாக இருந்தான். அக்காச்சி பள்ளியில் படிக்கும் காலத்தில் விளையாட்டுக் போட்டிகளிலும் கராட்டிப் பயிற்சிகளிலும் குதிரையேற்றப் பயிற்சிகளிலும் மிகுந்த ஆர்வமுள்ளவனாக இருந்தான். துடுப்பாட்டம், உதைபந்தாட்டம் ஆகிய வற்றோடு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கிளித்தட்டு விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக அக்காச்சி விளங்கினான். குதிரையேற்றப் பயிற்சிக்காக சிறுவயதில் ஒரு குதிரையை வளர்த்து வந்தான். சிறுவயதிலிருந்தே கீழ்ப்படிவு, நேர்மை, கண்ணியம், இரக்கம் சகிப்புத் தன்னை, கொடுத்த வேலைகளை திறம்படச் செய்யும் மனப்பான்மை என்பன இவனிடம் குடிகொண்டிருந்தன. ஒரு முறை ஈகைச்சுடர் திலீபனின் தந்தையார் இராசையா மாஸ்ரர் "உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாத வெள்ளையுள்ளம் அக்காச்சியின் உள்ளம்" என்று குறிப்பிட்டார்.

கப்டன் அக்காச்சி (சிவகுருநாதன் சிறிகாந்தன்) எப்படிப் போராளியானான்?

இயக்கத்தில் அக்காச்சி

1983ஆம் ஆண்டு கலவரத்தின் எதிரொலிகள் எல்லோரையும் போல அக்காச்சியையும் பாதித்தது. இதனால் விடுதலை இயக்கத்தின் போரணியில் ஒர் உறுப்பினனாக இணைந்து கொண்டான். நீர்வேலியைச் சேர்ந்த கப்டன் கண்ணாடி ராஜனும்(இராஜதுரை ஜெயக்குமார்) இவனும் ஒரே நாளில் இயக்கத்தில் இணைந்து கொண்டனர். 'அக்காய் ரீசேர்ட்' அணிந்து கொண்டு நின்ற ஜெகனைக் கண்ட, மறைந்த கப்டன் பண்டிதர் "அக்காச்சி" என்ற பெயரை வைத்தார். அன்றிலிருந்து அப்பெயரே நிலைத்து நின்றுவிட்டது.

விடுதலை இயக்கத்தின் இரண்டாம் படைப்பிரிவில் படையப் பயிற்சியை முடித்துக் கொண்டு 1985ஆம் ஆண்டின் முற்பகுதியில் தாயகம் திரும்பிய அக்காச்சி அக்கால கட்டத்தில் விடுதலை இயக்கத்தினால் நடாத்தப்பட்ட பல தாக்குதல் நடவடிக்கைகளிலும், 1985 பெப்ரவரியில் இடம்பெற்ற கொக்கிளாய் படை முகாம் தாக்குதல், 1985 ஏப்ரல் மாதம் நடைபெற்ற யாழ்ப்பாணப் காவல்துறை நிலையத் தாக்குதல், 1985 மே மாதம் நடைபெற்ற மன்னார் காவல்துறை நிலையத் தாக்குதல் என்பவற்றில் பங்கேற்றான். யாழ். காவல்துறைநிலையத் தாக்குதலில் அக்காச்சி குருநகர் பாசையூர் பகுதிகளில் தாக்குதலுக்குத் தயார் நிலையில் நின்ற விடுதலைப் புலிகளுடன் இணைந்து குருநகர் படை முகாமைச் சேர்ந்தோர் வெளியேறி முன்னேறாதபடி தடுத்துக் கொண்டிருந்தான்.

1985ஆம் ஆண்டு நடுப்பகுதியில் யாழ். குடா நாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இதன் பின் நீர்வேலிப் பகுதிப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்ட அக்காச்சி ஸ்ரீலங்காப் படைகள் முகாமைவிட்டு வெளியேறாத படி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளில் பங்குபற்றினான். குறிப்பாக பலாலியிலிருந்த தரைப்படை - வான்படை கூட்டுத் தளத்திலருந்து படைகள் வெளியேற முயன்றபோது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பல எதிர்த் தாக்குதல்களில் அக்காச்சி பங்கேற்றான். நீர்வேலிப் பகுதியில் பொம்மர் குண்டுவீச்சு வானூர்திகள் குண்டுகளை வீசித் தாக்ககுதல் மேற் கொண்டபோது அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அக்காச்சி உதவி செய்தான். படை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு நீர்வேலி கூட்டுறவுச் சங்கக் கட்டடமொன்றை ஒதுக்கிக் கொடுத்து அவர்கள் நலன்களைக் திறம்படக் கவனித்துக் கொண்டான். பல இடம்பெயர்ந்தோர் முகாம்களை அமைத்து மக்களைப் பாதுகாத்தான். மழையில் நனைந்து கொண்டு சென்று இடம்பெயர்ந்தவர்களிற்கு உதவிகள் செய்திருக்கிறான். விடுதலை இயக்கத்துடன் தொடர்பு கொண்டு உழைத்த பொது மக்களுக்கு தோள் கொடுத்து உதவியிருக்கிறான். வறுமையில் வாடிய மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களை அளிக்க பண்ணைகளை நிறுவினான். கிராமிய உழைப்பாளர்கள் சுரண்டியபோது அம்மக்களின் நேர்மையான ஊதியத்திற்காகவும் நேரப்படியான உழைப்பிற்காகவும் போர்கொடி தூக்கிப் போராடியவன் அக்காச்சி. ஏழைகளுக்கு கட்டுப்பாட்டு விலையில் பொருட்கள் கிடைக்க வேண்டுமென்பதற்காக தளபதி கிட்டுவின் அறிவுரையில் பல நேர்மை விலைக் கடைகளைத் திறந்தான்.

பொதுப்பணிகள்

தமிழ் இளைஞர்கள் ஒவ்வொருவரும் பொதுப்பணி செய்ய முன்வரவேண்டும் என அறிஞர் அண்ணாத்துரை ஒரு முறை குறிப்பிட்டார். விடுதலைப் போராளியாகவும், சமூக ஒழுங்கமைப்பவனாகவும் பொதுப் பணியாளனாகவும் விளங்கிய கப்டன் அக்காச்சியை மக்கள் தலைவனாக்கிய சிறப்புப் பரிமாணங்கள் அவனது யாதார்த்தமான செயற்பாடுகளேயாகும். சக விடுதலைப் போராளிகள் அக்காச்சியை ஏழைகளின் தொண்டன், மக்கள் தலைவன் என்று சுவையாக குறிப்பிடுவதுண்டு. படித்தவர்கள் பலர் புத்தகப் பூச்சிகளாகவே வாழ்நாளை வீண் நாளாக்கி மறையும் காலத்தில் கிராமத்தையே கலாசாலையாக்கி ஏழைகளையே தனது ஆசான்கiளாக்கி அக்காச்சி அனுபவக் கல்வியூடாக மக்கள் பணிசெய்யக் கற்றுக் கொண்டவை ஏராளம். அவையே அவனது முன்னேற்றப் பாதையின் படிக்கற்களாகும்.

அபிவிருத்தியென்பது சமூகத்தின் அடி மட்டத்திலிருந்து கட்டியெழுப்பப்பட வேண்டு என ஒர்சுலாக்கிக்ஸ் என்ற அறிஞர் குறிப்பிட்டார். அபிவிருத்தியில் பல்வேறு பரிணாமங்களை சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்ப விரும்பிய கப்டன் அக்காச்சி, கீழ் மட்டத்தில் வாழும் மக்களுக்கு அடிப்படைக் கல்வியறிவைப் போதிக்க விரும்பி அதற்கான திட்டங்களை முதலில் வகுத்துக் கொண்டான்.

கல்விப் பணிகள்

"அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" இப்படி மகாகவி பாரதியார் பாடினார். கப்டன் அக்காச்சியின் கல்விப் பணிகளும் பாரதி பாடலின் தாற்பரியத்தை வெளிப்படுத்துவனவாகவே அமைந்திருந்தன.

நீர்வேலி பல பொருளாதார கட்டுமானங்களைக் கொண்ட மக்கள் வாழும் பகுதியாகும். பொருளாதார வசதி படைத்த செல்வந்தர்களும் மிக ஏழைகளும் இங்கே வாழ்கிறார்கள். முற்றிலும் கிராமப் புறம் சார்ந்த ஒரு பகுதிப் பொறுப்பாளனாக பொறுப்பேற்றுக் கொண்ட அக்காச்சி இப் பகுதியில் வாழும் வசதி குறைந்த குழந்தைகளுக்கு கல்வியூட்ட விரும்பி பல பகுதிகளில் மழலைகள் பாடசாலைகளை உருவாக்கினான். புத்தூர் வாதரவத்தையில் இரண்டு மழலைகள் பாடசாலைகளை திறந்து வைத்தான். நீர்வேலி கந்தசாமி கோயில் அருகில் ஓர் மழலைகள் பாடசாலையை உருக்கினான். இதைவிட இடைநிலைக் கல்வி கற்கும் மாணவர்களது வசதி கருதி அக்காச்சி கட்டணமற்ற வகுப்புக்களை தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நடத்தினார். அக்காச்சி அச்செழுவில் நூலகம் ஒன்றை அமைத்திருந்தான். வெளிநாட்டு விடுதலைப் போராட்டங்கள் பற்றி அபூர்வமான நூல்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன.

தனது போராளிகளை அரசியல் அறிஞர்களாக வளர்த்து எழுப்பதில் அவன் அதிக நாட்டமுடையவனாக இருந்தான். அந் நூலகத்தில் அருந்த நூல்களையெல்லாம் 1987 ஒக்ரோபர் - நவம்பர் மாத காலத்தில் அந்நிய ஆக்கிரமிப்பு அள்ளிக் கொண்டு சென்று நீர்வேலி - மாசுவன் சந்தியில் போட்டுத் தீயிட்டது. யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டபோது அதனைக் கண்டித்த இந்தியா தனது வல்வளைப்புப் படைகள் மூலம் ஈழத்தின் பல பகுதிகளிலிருந்த நூலகங்களைத் தீக்கிரையாக்கி 'வரலாற்று பெருமை' யைப் பெற்றுக் கொண்டது.

மதிய உணவு

தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படும் திட்டமும் இலங்கை அரசின் மாணவர் மதிய உணவுத் திட்டமும் அறிமுகப்படுத்தப்படு முன்னரேயே கப்டன் அக்காச்சி பாலர்களிற்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தான். இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் அரசியல் நோக்குடன் இத்திட்டம் அடுத்த தேர்தலை நோக்காக் கொண்டே மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அடுத்த சந்ததின் வளமான வாழ்வுக்காக அக்காச்சி இத்திட்டத்தை அறிமுகம் செய்தான். நீர்வேலி கந்தசுவாமி கோயில் அருகில் அமைக்கப்பட்ட பாடசாலை அபிவிருத்திக்காக காலஞ்சென்ற மக்கள் கலைஞர் வி.எம்.குகராஜா அவர்கள் தயாரித்த "மனிதனும் மிருகமும்" என்ற நாடகத்தை அரங்கேற்றி அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு பாடசாலைக்கான சுற்றுமதில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தான். பாடசாலை காலையிலும் மாலை வேளையிலும் இலவசமாக இருநேர உணவு வழங்க ஏற்பாடு செய்தான். பொருளாதார வசதியுடையவர்களை அணுகி அவர்கள் மூலமாக தளபாட வசதிகளைப் இப் பாடசாலைக்குச் செய்த கொடுத்தான்.

நீர்வேலி வீரபத்திரர் கோயில் அருகில் ஈகைச்சுடர் திலீபன் நினைவு ஒரு நூலகத்தை அமைத்த அக்காச்சி, அக் கட்டடித்திற்குத் தேவையான சீமெந்து கற்களை தனது சொந்த வீட்டிலிருந்தே எடுத்து வந்து பயன்படுத்தினான். ஏழை மக்கள் மதுப்பழக்கத்திற்கு இலக்காகி சீரழியாமல் தடுக்க விரும்பிய அக்காச்சி கசிப்பு ஒழிப்பு நாடக மூலம் பரப்புரை செய்தான். கசிப்பு ஒழிப்பு நேரடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டான்.

தூய்மைப்படுத்தல் பணி

அக்காச்சி தான் பொறுப்பாளராகவிருந்த நீர்வேலிப் பகுதியில் காலத்திற்குக் காலம் பல தூய்மையாக்கல் பணிகளைச் செய்து வந்தான். இப் பணிகளில் போராளிகளும் பொது மக்களும் இணைந்து பங்கேற்றார்கள். நீர் வழங்கல் வசதி குறைந்த இடங்களில் குளங்களைத் திருத்தும் வேலைகளை அக்காச்சி செய்து வந்தான். அந்த வகையில் நீர்வேலிப் பகுதியிலுள்ள நடுவத்தாள், கிராஞ்சி போன்ற குளங்களின் திருத்த வேலைப் பணிகள் கப்டன் அக்காச்சியால் மேற்கொள்ளப்பட்டவையாகும். அக்காச்சி இரக்கம் மிக்க போராளி என்ற முறையில் வரட்சிக் காலத்தில் மேய்ச்சலுக்காக செல்லும் கால் நடைகளும் இக்குளங்களில் நீர் பருக வேண்டும் என்பது அவனது ஆசையாக இருந்தது. வாதரவத்தைப் பகுதியில் கல்வி வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் அயராது உழைத்த அக்காச்சி இப் பகுதியில் குடிநீர்ப் பிரச்சினையை தீர்கும் முகமாக வாகரவத்தையில் பெரியபொக்கணைக்கும் வீரவாணிக்கும் இடையில் வாழ்ந்த மக்கள் நலன் கருதி தண்ணீர் வசதிகளைச் செய்து கொடுத்தான்.

மக்கள் மத்தியில் ஏற்பட்ட பிணக்குகளை மனச்சாட்சியின் படி இயற்கை நீதிக் கோட்பாட்டைப் பின்பற்றி தீர்த்து வைத்தான். காணிப் பிரச்சினைகளை அவன் அணுகிய விதமும் தீர்த்து வைத்த முறையும் பலரது பாராட்டுதல்களையும் பெற்றது.

"ஒப்பரேஷன் லிபரேஷன்"

1987இல் சிறிலங்கா அரசு வடமராட்சி மீது தொடுத்த ஒப்பரேஷன் லிபரேஷன் படை நடவடிக்கைக்கு எதிரான யுத்தத்தில் அக்காச்சி பங்குபற்றினான். சிறிலங்கா படைகள் எனது பகுதிக்குள் நுழைய முயன்றால் எல்லையில் வைத்து மோதுவேன், என் உடலைத் தாண்டி வந்தே அவர்கள் எனது பகுதிக்குள் நுழையலாம் என சபதம் எடுத்துச் செயற்பட்டான். வடமராட்சி சென்று பலதாக்குதல்களில் பங்குபற்றிவிட்டு பொது மக்களுக்கு உதவியும் செய்துவிட்டே அக்காச்சி மீண்டும் வந்தான்.

இந்திய படையினருடன் ஏற்பட்ட மோதல்
இந்திய படைகள் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் விடுதலைப் புலிகளுடன் மீது போர் தொடுத்தது. யாழ்ப்பாணம் டச்சுக் கோட்டையில் இருந்து ஒரு பிரிவினர் வெளியேற முயன்று கொண்டிருந்த அதே வேளையில் வேறு படைப் பிரிவினர் பலாலி வீதி, காங்கேசன்துறை. வீதி, கண்டி வீதி வழியாக யாழ்ப்பாண நகரை நோக்கி முன்னேற முயன்று கொண்டிருந்தனர். கைதடி - கோப்பாய் வீதி வழியாக கோப்பாய்ச் சந்திக்க வரமுயன்ற இந்திய படையினரை அந்த இடத்தை நோக்கி நகரவிடாமல் பதினொரு நாட்கள் அக்காச்சியின் அணி தடுத்து நிறுத்தி வைத்துக்கொண்டது. கடுமையான போர் இடம்பெற்றது. பலத்த எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றன. சமர்க் களத்தில் நின்ற இந்திய போர் வீரர்களிற்கு உணவு கொண்டு வந்த இந்திய உலங்குவானூர்திகள் மீது விடுதலைப் புலிகள் தொடுத்த தாக்குதலால் அவை உணவுப் பொட்டலங்களை நாவற்குழி தரவகை; காட்டுப்பகுதியில் போட்டுவிட்டு ஓடித்தப்பி தலைமறைவாயின. இந்த கடுமையான போரில் கோப்பாய் சந்திக்கு வரமுடியாத நிலையில் நின்ற இந்திய படைகளின் ஒரு பிரிவை அக்காச்சியின் அணி தடுத்து நிறுத்தி வைத்துக் கொண்ட நிலையில் இன்னுமொரு இந்தியப் படைப்பிரிவு மறுபக்கத்தால் உரும்பிராய் கிருஷ்ணன் கோயிலடிக்கு வந்து வாழைத் தோட்டங்களுக்கூடாக நீர்வேலி வெங்காயக் கூட்டுறவுச் சங்கமருகில் வந்தது. கொமாண்டோ மோட்டார் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறும், போர் டாங்கிகளுடன் கோப்பாய்ச் சந்திக்கு இந்திய படைகண் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கே சென்றடைந்தது. இந்திய படை நடவடிக்கைளின் போது நீர்வேலிப்பகுதியில் அதிக உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்படாமல் அக்காச்சியே ஏற்ற நடவடிக்கைகளையெடுத்து தனது திறமையால் கிராமத்தைக் காப்பாற்றினான் என இப்பகுதி மக்கள் நினைவு கூர்ந்து கொள்கிறார்கள்.

வேறும் பல தாக்குதல்கள்

1987 அக்டோபர் தொடக்கம் 1988 மார்ச் வரையுள்ள காலப்பகுதியில் நீர்வேலிப் பகுதியில் இந்திய படையினருடன் பல சண்டைகளில் அக்காச்சி பங்கேற்றான். இந்தத் தாக்குதல்களில் பலவும் தற்காப்பு நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்டவையாகும். அதாவது 1987 டிசம்பர் மாதத்தின் பின்னர் நீர்வேலி, அச்செழுப் பகுதிகளில் போராளிகளைத் தேடி இந்திய படைகள் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களை உடைத்து அவர்களது தேடுதல் வேட்டைகளை நிறுத்திய பின் அக்காச்சி அங்கிருந்து தப்பி பிறிதொரு பகுதிக்குள் நுழைந்தான். இந்த சுற்றி வளைப்பின் போது காயப்பட்ட மன்னாரைச் சேர்ந்த பெண் போராளி சகிலா சயனைட் உட்கொண்டு ஈகைச் சாவடைந்தார்.

பொதுமகன் காப்பாற்றல்
1988 முற்பகுதியில் ஒரு நாள் அச்செழு பகுதிக்கு வந்த இந்திய படையினர் பற்றை மறைவுகளின் பின்னால் படுத்துக் கொண்டு போராளிகளது வாருகைக்காகக் காத்துக் கிடந்தனர். முக்கிய போராளிகளான லெப்டினன்ட் கேணல் இம்ரான், கப்டன் நேரு, அக்காச்சி இப்படியாக பல போராளிகள் அங்கே தங்கியிருந்தனர். அதிகாலை ஆகையால் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் படையினரின் நடமாட்டம் பற்றிய தகவல் அன்றைய நாள் போராளிகளுக்குக் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பொதுமகன் ஒருவர் மீன் வலைகளைத் தன் தோளில் போட்டுக் கொண்டு வந்து படையினர் நடமாட்டம் பற்றிய தகவலைக் கொடுத்து போராளிகளைக் காப்பாற்றினார். தலைவர் பிரபாகரன் கூறியது போல "நாம் கடக்க வேண்டியது நெருப்பாறு என்பது எமக்குத் தெரியும். ஆனால், அதனைக் கடக்க மக்கள் ஆதரவு எனும் கவசம் எம்மிடம் உண்டு" என்ற கூற்றை இச் சம்பவம் நினைவு படுத்துவதாக அமைந்தது.

வன்னியில் அக்காச்சி

1988 மார்ச் மாதம் தொடக்கம் 1989 தை மாதம் வரை அக்காச்சி வன்னிப் பகுதியில் இந்திய படையினருடன் பல மோதல்களில் ஈடுபட்டான். காலத்திற்குக் காலம் பல்வேறு சங்கேத மொழிகளில் இந்திய படையினர் மீது விடுதலைப் புலிகள் மீது தொடுத்த தாக்குதல்களின் இந்திய படை ஒவ்வொரு தடவையும் பலத்த இழப்புக்களைச் சந்தித்துக் கொண்டது. போராட்டத் தலைமையையும் போராட்டத்தையும் இக் கால கட்டத்தில் காப்பாற்றுவதில் வன்னிப் பகுதி வகித்த பங்கு வரலாற்றுச் சிறப்புடையது. பாரிய இழப்புக்களை இந்திய படைகள் அடைந்ததோடு, பெரும் ஈகத்தை செய்து வரலாற்றுக் கடமையை விடுதலைப் புலிகள் நிறைவேற்ற வன்னியின் இயற்கை அரணுடன் மக்களும் உறுதுணையாயினர். முல்லைத்தீவுப் பகுதியில் நின்று போரில் ஈடுபட்ட அக்காச்சியிடம் வன்னி அனுபவங்கள் பற்றிக் கேட்டபோது, ஒரு நாள் அடர்த்தியான காட்டில் பொழுது இருண்ட வேளையில், ஒரு இளம்புலி தனது கையிலிருந்த துப்பாக்கியால் இரண்டு தடவைகள் சுட்டான். மறுநாள் காலையில் இந்திய வானொலி அந்த இடத்தைக் குறிப்பிட்டு அந்த இடத்தில் இரண்டு படையினர் சொன்னது. தலைவர் அந்த இளம் போராளியை அழைத்துப் பாராட்டினார். அதனை என்னால் மறக்க முடியாது என்று அக்காச்சி பதில் சொன்னான்.

மீண்டும் அக்காச்சி

சில மாதங்களை வன்னியில் கழித்துவிட்டு மீண்டும் 1989 தை மாதமளவில் அக்காச்சி குடா நாட்டிற்குள் வந்தான். இக்காலத்தில் அக்காச்சியும் அவனது தோழர்களும் கெரில்லா வாழ்க்கையே மேற்கொண்டனர். வீதிகளைக் கடக்கும் போது அல்லது தனது ஆதரவாளர்களைச் சந்திக்க வரும்போது எதிர்பாராமல் இந்திய படையினரைச் சந்திக் நேரிட்டால் மோதல்கள் ஏற்படுவதுண்டு. இவ்வாறான மோதல்களில் பெரும் இழப்புக்களோடு இந்திய படை முகாம் திரும்பிய ஒரு மோதல் 17.05.1989 அன்று நீர்வேலிப் பகுதியில் நிகழ்ந்தது. இதேபோல் 30.05.1989 அன்று அக்காச்சியும் சிவநேசன் என்ற இன்னொரு போராளியும் எதிரும் புதிருமாக இந்திய படையினரைச் சந்தித்தபோது பெரும் மோதல் ஒன்று நிகழ்ந்தது. இந்த மோதலின் போது கப்டன் நேரு, லெப்.குட்டி ஆகியோரும் இந்தியப் படையினருடன் மோதினர். நீர்வெலி - அச்செழு வீதியில் நிகழ்ந்த இந்த மோதலில் எல்லோரும் சுற்றி வளைப்பை உடைத்து வெளியேறினர். ஆனால் போராளி சிவநேசன் நேருக்கு நேர் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவடைந்தான். இதே போன்ற பிறிதொரு மோதல் 8.8.1989 அன்று பருத்தித்துறை வீதியில் சிறுப்பிட்டிக்கு அருகே ஏற்பட்டது. இந்த மோதலில் கப்டன் ஒருவன் உட்பட இரண்டு இந்திய படையினர் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் அக்காச்சி முக்கிய பங்கு வகித்தான். இந்த மோதல் நிகழ்ந்த மறுநாள் காலை 7:15 மணிக்கு ஆகாசவாணி டில்லி தமிழ்ச் செய்தியில் இந்த மோதல் பற்றிக் குறிப்பிட்டு அக்காச்சி தலைமையிலான குழுவே இந்த மோதலில் ஈடுபட்டது என்று தெரிவித்தது.

சுவையான சம்பவங்கள்

1987 ஒக்டோபர் தொடக்கம் 1989 செப்ரம்பர் வரை ஏறத் தாழ இரண்டு ஆண்டுகளில் அக்காச்சி கரந்துறை வாழ்வில் பல சுவையான சம்பவங்கள் நிகழ்நதன. 1987 டிசெம்பர் மாதம் ஒருநாள் அக்காச்சி இராஜ வீதி வழியாக வந்துகொண்டிருந்தான். இந்திய படையினர் வீதியில் நின்று வீதியாற் செல்வோரை வழிமறித்து விசாரிப்பதும் அவர்களைச் சோதனையிடுவதுமாக நின்றனர்.எதிரும் புதிருமாக அந்த வீதி வழியாக வந்த அக்காச்சி படையினரைக் கண்டவுடன் பதட்டமடையாமால் வாழைத் தோட்டம் ஒன்றுக்குள் இறங்கினான். மறு மக்கமாக சீக்கிய இனப்படையாள் வருவதைக் கண்ட அக்காச்சி அந்தத் தோட்டத்திலே நின்று வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவரின் கையில் தனது சேட்டைக் கழற்றிக் கொடுத்து விட்டு அந்த விவசாயியின் சவுக்கத்தை(சால்வை)யை வாங்கி தலைப்பா கட்டிக் கொண்டு அந்த விவசாயின் மாட்டை மேய்த்துக் கட்டுவதுபோல் சாய்த்துக் கொண்டு சென்று அப்பால் உள்ள மரம் ஒன்றில் கட்டிவிட்டுத் தலைமறைவானான்.

இதேபோல் இந்திய படைகள் நூற்றுக் கணக்கில் ஒரு கிராமத்தைச் சுற்றி வளைத்த போது ஒரு வீட்டின் தண்ணீர்த் தாங்கி ஒன்றினுள் ஏறி அக்காச்சியும் அவனது தோழர்களும் படுத்துக் கொண்டனர். நீண்ட நேரமாகியும் படையினர் அகல்வதாக இல்லை. திடீரென தண்ணீத் தாங்கி அருகில் இருந்த பப்பாசி மரம் அசைந்தது. திகைப்படைந்த அக்காச்சி எட்டிப் பார்த்தான். அந்த வீட்டுக்காரர் பப்பாசிமரம் மரம் வழியாக ஏறி தண்ணீர்த் தாங்கி அருகில் வந்து "இந்தாங்கோ ஜூஸ் கரைச்சுக் கொண்டு வந்தனான்" என்று கொடுத்துவிட்டு மரத்தில் இருந்து இறங்கிச் சென்றார்.

இதேபோல் பிறிதொரு இடத்தில் அக்காச்சியும் அவனது நண்பர்களும் ஒரு சுற்றிவளைப்பின் போது தண்ணீர்த் தாங்கி ஒன்றினுள் ஒளிந்து கொண்டனர். ஏணி வழியாக ஏறி மேலே வந்த அந்த வீட்டின் ஐந்து வயதுச் சிறுவன் தானும் அக்காச்சியோடு தண்ணீர்த் தாங்கியினுள் ஒளிந்து கொள்ளவேண்டும் என்று அடம்பிடித்தான். உடனே அக்காச்சி "நீ போகாவிட்டால் அடிப்பேன்" என்று அதட்டிக் கூறினான். உடனே அந்தச் சிறுவன் "அண்ணை இப்ப அடிப்பியளோ? அல்லது ஆமி போனப்பிறகு அடிப்பியளோ?" என்று வினா எழுப்பினான்.

இதேபோல் அக்காச்சியும் அவனது தோழர்களும் ஒரு வீட்டிற்கு மதிய உணவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். அந்த வீட்டிற்குள் நுழைந்த அக்காச்சி குழுவினர் "எம்மைப் போல் இன்னும் இரண்டு நண்பர்கள் இங்கோ சாப்பிட வருவார்கள்" என்று கூறிவிட்டு உள்ளே இருந்த தமது வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர். திடீரென அங்கு வந்த அந்த வீட்டுக்கார அம்மா, "தம்பியவை, இரண்டுபேர் படலேலை வந்து நிக்கினம். ஒருவர் தாடியும் தலைப்பாகையுமாக நிற்கிறார், மற்றவர் ஆமி உடுப்புப் போட்டிருக்கிறார். அவையளைக் கூட்டிக் கொண்டு வரட்டோ" என்றார். வெளியே அக்காச்சி எட்டிப் பார்த்தான். படலையில் ஒரு சீக்கியனும் அவனுக்குதவியாக ஒரு ஒட்டுக்குழு உறுப்பினரும் நின்றனர்.

இப்படியாகப் பல சுவையான சம்பவங்களையெல்லாம். தனது கெரில்லா வாழ்க்கையின் போதுதான் சந்திக்க நேரிட்டது என்று அக்காச்சி தனது நண்பர்களுக்குக் கூறி தானும் சேர்ந்து சிரிப்பான். அக்காச்சியின் வசீகரமான அந்த முகத்தில் அடிக்கடி உதிரும் புன்னகை ஆயிரம் பொருட்களைக் கொண்டது. அவனது அந்தப் புன்னகையில் எம்மை மறந்து எமது கவலைகளை மறந்து மகிழ்சியடைந்த நாட்கள் எத்தனை எத்தனை.

மக்கள் காப்பாற்றல்

ஒரு நாள், 1989 ஆகஸ்ட் மாதமளவில், அக்காச்சியும் அவனது நண்பர்களும் கப்புது என்ற கிராமத்தில் தங்கியிருந்தனர். கிராமத்தை 800க்கு மேற்பட்ட இந்தியச் படையினர் சுற்றிவளைத்துக் கொண்டனர். வீடுவீடாகத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சாதாரண மக்களைக் கொண்ட அந்தக் கிராமம் அக்காச்சியையும் அவனது தோழர்களையும் காப்பாற்றியது. இந்தக் கிராம மக்கள் நீண்ட காலமாகவே போராளிகளுக்கு உறுதுணையாக இருந்து வருபவர்கள்.

இன்னும் ஒரு சம்பவம் மறக்க முடியாதது.

1987 ஜூலை 5ஆம் திகதி மில்லர் இலங்கை இராணுவம் தங்கியிருந்த நெல்லியடி மத்திய கல்லூரி முகாம் மீது தாக்குதலைத் தொடுக்க முன்னர் தயாரிப்பு வேலைகளை முடித்துக் கொண்டு இக் கிராமத்துக்குள் சென்றான். கப்டன் மில்லர் எடுத்துச் சென்ற அந்த ஊரை்தி இலங்கை படையினரின் கண்களில் படாதபடி அந்தப் பெரிய ஊர்தி இலைகுழைகளில் மூடி மறைத்து உருமறைப்புச் செய்து உதவியவர்கள் இந்தப் பகுதி மக்கள் தான் என்று ஈகைச்சுடர் திலீபன் பெருமையோடு கூறுவார். மில்லரின் அந்தத் தாக்குதல் தமிழர் வரலாற்றில் ஒரு திருப்பு முனைக்கு வழிவகுத்தது.

கடைசித் தாக்குதல்

ஓட்டுமடம் என்ற இடத்தில் கூடாரமடித்து தேசத்துரோகச் செயல்களில் ஈடுபட்டிருந்த ஈ.என்.டி.எல்.எப். என்ற ஒட்டுக் கும்பல் 15.09.1989 அன்று ஈகைச்சுடர் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு மக்களை கொடுமைப்படுத்தியது. நிகழ்ச்சிகளைக் குழப்பும் நோக்குடன் நீர்வேலிக்கு ஹைஎஸ் ரக ஊர்தி ஒன்றைக் கடத்திக் கொண்டு வந்தார்கள். திலீபனின் நினைவு வணக்க பதாகை ஒட்டிய மதனா என்ற இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டான். இவற்றையெல்லாம் கேள்வியுற்ற அக்காச்சி நீர்வேலிச் சந்தியில் நின்ற தேசவிரோதிகளை நோக்கி சக போராளிகளோடு விரைந்தான். அங்கே பெரும் மோதல் ஒன்று தொடங்கிய. தேசத் துரோகிகள் தாம் கடந்தி வந்த வானையும் விட்டுவிட்டு நீர்வேலி தரவைப் பாதையூடாக ஓட்டம் பிடித்தனர். சண்டையில் பல துரோகிகள் மாண்டுபோயினர். ஒருவன் உயிருடன் பிடிபட்டான். தற்செயலாக நீர்வேலி கண்ணாடித் தொழிற்சாலைக்குச் சென்ற அக்காச்சி மீது அங்கு ஒளிந்திருந்த கோழையொருவன் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மார்பினில் குண்டேந்தி அக்காச்சி வீரச்சாவை அணைத்துக் கொண்டான்.

நீர்வேலியில் பிறந்து நீர்வேலியில் கல்வி கற்று நீர்வேலிப் பகுதிப் பொறுப்பாளனாக இருந்து நீர்வேலியில் வீரச்சாவடைந்த அக்கச்சியின் வாழ்வு விடுதலைக்குப் போராடும் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாகவுள்ளது. அவன் செய்த சேவையின் நினைவுச் சின்னங்களாக நீர்வேலிப் பகுதியில் காணப்படும் கட்டங்களாக மிளிர்கின்றன. இவனது ஒன்றுவிட்ட சகோதரர் பல தடவை தன்னுடன் வெளிநாடு வருமாறு அழைத்தும் அங்கு செல்ல மறுத்து விட்டான். இவன் வீரச்சாவடைவதற்கு இரண்டு நாட்களிற்கு முன்னரும் இவ்வாறான வேண்டுகோளை அவர் அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியைக் கொண்டு வந்தவரிடம் அக்காச்சி பின்வருமாறு சொன்னான் "நான் செய்யும் பணிகளை வேறு ஒருவரைக் கொண்டு நிறைவு செய்ய முடியுமாயின் தான் வருவேன். அதுவரை நான் வரமாட்டேன்." இந்த ஆணித்தரமான பதில் வெறும் மேனி மினுக்கு வார்ததைகளல்ல, அது ஒரு உறுதியான வீரனின் வெளிப்பாடு என்பதில் சந்தேகமில்லை.

ஈழம் ரஞ்சன்.
Read More

July 23, 2020

லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 37 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
by Editor - 0

லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 37 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
23.07.1983 அன்று யாழ் திருநெல்வேலிப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வரலாறாகிய லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 37ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தளபதி லெப்.சீலன் அவர்கள் மீதான தாக்குதலுக்கான பதில் நடவடிக்கையாக 23.07.1983 அன்று இரு படை ஊர்திகளில் சுற்றுக்காவல் வந்த சிறிலங்கா படையினர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.

கண்ணிவெடித் தாக்குதலுடன் தொடங்கிய விடுதலைப் புலிகளின் கரந்தடித் தாக்குதலில் சுற்றுக்காவல் வந்த படையினரில் 13 பேர் கொல்லப்பட இரு படுகாயத்துடன் தப்பியோடினர்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் உட்பட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பங்கெடுத்த இத்தாக்குதல் லெப்.செல்லக்கிளி அவர்களின் தலைமையிலேயே நடாத்தப்பட்டது.

படை ஊர்தியை இலக்கு வைத்து கண்ணிவெடி இயக்கிய லெப். செல்லக்கிளி அம்மான் பின்னர் படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

வரலாற்றுப் புகழ்வாய்ந்த யாழ். திருநெல்வேலி தாக்குதல். 

1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள்.

நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரும் கீழே இறங்குகிறோம். அங்குதான் கண்ணிவெடி புதைக்க வேண்டும். வான் அந்த இடத்தில் நின்று நாங்கள் இறங்க அயல் சனங்கள் அரவம் கேட்டு வெளிவரத்தொடங்க விக்ரரும், செல்லக்கிளியும் (இராணுவச் சீருடை அணிந்து இருந்தனர்) சிங்களத்தில் உரக்கத் கதைத்தபடி றோட்டிலே நடக்கத் தொடங்க வெளியே எட்டிப் பார்த்த தலைகளை காணவில்லை. வெளிச்சம் போட்ட இருவீடுகளின் விளக்குகளும் அணைந்து விட்டது. யாரும் வெளிவரவில்லை. இராணுவத்தினர் வந்து நிற்கின்றனர் என்று நினைத்து விட்டனர்.

முன்பு திட்டமிட்டபடி அப்பையா அண்ணை, விக்ரர், செல்லக்கிளி மூவரும் வெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர். விக்ரரும் செல்லக்கிளியும் பிக்கானால் றோட்டிலே கிடங்கு வெட்டுகின்றனர். கண்ணிவெடி புதைப்பது பெரிய வேலை. வெடிமருந்து தயார்படுத்துகையில் வெடிமருந்தின் நச்சுத் தன்மையால் தலையிடிக்கும். என்னுடைய அனுபவப்படி தாங்க முடியாத தலையிடி. அதன்பின் கிடங்குவெட்டி, (இறுகப் போடப்பட்ட தார் றோட்டிலே கிடங்கு வெட்டுவது அவ்வளவு இலகுவானதல்ல) இவற்றையும விட தாக்குதலின் போது சண்டையும் போடவேண்டும்.

எமது தகவலின் படி சுமார் நள்ளிரவு 12 மணியளவில் பலாலியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஜீப் வண்டியிலும், ஒரு ட்ரக் வாகனத்திலும் இராணுவத்தினர் வருவது வழக்கம். ஜீப்பில் 4 இராணுவத்தினரும் ட்ரக்கில் 10 பேர் அளவிலும் வருவார்கள் எனத் தகவல். எனவே யாழ். பல்கலைக்கழக பின்வீதி பலாலி றோட்டைச் சந்திக்கும் இடமாகிய தபால் பெட்டிச் சந்தியில், கண்ணிவெடிபுதைத்து இரண்டாவதாக வரும் வாகனத்துக்கு கண்ணி வெடியால் தாக்க முன்னால் வரும் வாகனத்தைச் சுட்டு மடக்குவது என்று நாம் வகுத்த திட்டம். அதன்படி திருநெல்வேலிச் சந்தியில் ஒரு வோக்கிரோக்கி. அது அவர்களுடைய வரவை எமக்கு அறிவிக்கும்.

விக்ரரும் செல்லக்கிளியும் அப்பையா அண்ணையும் கண்ணிவெடி தயார்படுத்திக் கொண்டிருக்கையில் மற்ற எல்லோரும் அருகில் உள்ள வீடுகளின் சுவர்களின் உள்ளே பாய்ந்து தத்தமக்கு உரிய இடத்தை தேர்ந்தெடுக்கத் தொடங்கினோம். ஒவ்வொருவருக்கும் இடம் கிடைத்தது. கண்ணிவெடியை புதைத்துக் கொண்டிருக்கையில் விக்ரர் விலகி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தின் சுவரின் உள்ளே பாய்கின்றான். சுவர் அவனை விட உயரமாக இருக்க பின்பு வெளியில் குதித்து உயரம் வைப்பதற்காக தெருவில் தேடி சில பெரிய கற்களை எடுத்து உள்ளே போட்டு தன் உயரத்தைச் சரிப்படுத்திக்கொண்டு அந்த சுவரின் மறைவைக் கொண்டு தன் நிலையை சீர்படுத்திக் கொள்கிறான். துப்பாக்கியை தோளில் வைத்து இயக்கிப்பார்க்கும் விதங்களையும், துப்பாகியை இலகுவாக இயக்கமுடியுமா என்பதையும் சரி பார்த்துக் கொள்கின்றான்.

தம்பி (பிரபாகரன்) தபால் பெட்டிச் சந்தியில் இருந்து திருநெல்வேலிப்பக்கமாக உள்ள ஒரு வீட்டின் சுவரின் பின்னே நிலையை எடுத்து தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கையில் வோக்கி செல்லக்கிளியை கூப்பிடுகின்றது.

செல்லக்கிளி அம்மான் மிக அவசரமாக தன் வேலையை முடித்துக்கொண்டு மீதி வேலையை அப்பையா அண்ணையிடம் விட்டுவிட்டு தனது நிலைக்குச் செல்கின்றான். அம்மான் அருகில் உள்ள ஒரு கடையின் மேல் வெடிக்கவைக்கும் கருவியுடனும் தானியங்கி இயந்திரத் துப்பாக்கியுடனும் தயாராகின்றான்.

வெளிச்சம் எமக்கும் தெரிந்தது. அப்பகூட வேலை முடியவில்லை. விக்ரர் ”அப்பையா அண்ணை வெளிச்சம் வருகின்றது கெதியா மாறுங்கோ”” என்று கத்த அப்பையா அண்ணை வயர் ரோல்களுக்கு ரேப் சுத்திக் கொண்டிருக்கையில், வோக்கி மீண்டும் அலறியது.

“அம்மான் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான். முன்னால் ஜீப், பின்னால் ட்ரக்” என்று அறிவித்தது. எனவே அம்மான் ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடியால் தாக்க முன்னால் வரும் ஜீப்புக்கு நாம் தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கையில் வெளிச்சங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

ஜீப்பை எம்மிடம் வரவிட்டு, பின்னால் வரும் ட்ரக்வண்டியை கண்ணிவெடியால் தாக்கி அதில் தப்புபவர்களைச் சுடுவதாக எமது திட்டம். ட்ரக் வண்டியில் பின்பக்கமாக இருப்பவர்களை சுடக்கூடியவாறு விக்ரர் நிற்கின்றான். விக்ரரையும் தாண்டுபவர்களை கவனிக்க தம்பியும் சில தோழர்களும் நிற்கின்றனர். வெளிச்சங்கள் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து வந்துகொண்டிருந்தது. நான் எட்டிப்பார்த்தேன். முன்னால் இரு விளக்குகளுடன் ஒரு வாகனம். அந்த விளக்குகளுக்கிடையிலான இடைவெளியைக் கொண்டு அது ஜீப் என்று புரிந்துகொண்டேன். அடுத்து ட்ரக். மெல்ல வந்து கொண்டிருக்கின்றன.

நாம் ஜீப்பைத் தாக்குவதற்குத் தயாராகிக்கொண்டிருக்க ஜீப் விக்ரர் நின்ற இடத்தைத் தாண்டி கண்ணிவெடி வைத்த இடத்தை அண்மித்த போது கண்ணிவெடி வெடிக்க வைக்கப்பட்டுவிடுகிறது. எமக்கு அதிர்ச்சி. ஏன் அப்படி நடந்தது? சிந்திக்க நேரமில்லை. உண்மையில் ஜீப்வண்டியை விட்டு பின்னால் வரும் ட்ரக் வண்டிக்கே கண்ணிவெடி வைக்க இருந்தோம். இன்றுவரை அது ஏன் ஜீப்புக்கு வெடிக்க வைக்கப்பட்டது என்பது தெரியாது. ஏனென்றால் அதை வெடிக்க வைத்த செல்லக்கிளி அதை விளக்கவில்லை. சண்டை முடிந்தபோது அவனை நாம் இழந்துவிட்டோம்.

சிந்திக்க நேரமில்லை. உடனே நானும் என்னோடு நின்றவர்களும் சுடத்தொடங்கினோம். ஜீப்பின் வெளிச்சம் அணையவில்லை. எனவே பின்னால் நடப்பவை எடக’கும’ எமக்குத் தெரியவில்லை. எனது G3யால் இரு விளக்குகளையும் குறிபார்த்து உடைத்தேன். விளக்கு உடைந்ததும் பின்னால் நின்ற ட்ரக்கின் வெளிச்சத்தில் ஜீப்பில் இருந்த சில உருவங்கள் இறங்குவதைக் கண்டு அவற்றை நோக்கியும் ஜீப்பை நோக்கியும் ரவைக் கூட்டில் போடப்பட்டு இருந்த அத்தனை குண்டுகளையும் சுட்டேன். அது இப்படி இருக்க விக்ரரைப் பார்ப்போம்.

ஜீப் வண்டி அவனைத் தாண்டும் போது விக்ரர் தன் தலையை சுவருக்கு உன்ளே இழுத்துக் கொண்டு நிற்கையில் மிகப்பெரிய சத்தத்துடன் கண்ணிவெடி வெடிக்கிறது. விக்ரர் தலையை நிமிர்த்திப் பார்க்க ஓரே புழுதிமண்டலம். மங்கலாக ஒருவன் வெடித்த ஜீப்பில் அருந்து ஓடிவருவது தெரிய அவனைக் குறிவைத்து விசையை அழுத்த. சில குண்டுகள் அவனின் உடலில் பாய அவன் தூக்கி எறியப்படுகின்றான். அப்படியே சுருண்டுவிழுந்து விட்டான். இன்னுமொருவன் ஓடிவர அவனை நோக்கிச் சுட அவன் மீண்டும் ஓடிவர மீண்டும் சுட குண்டுகள் அவனை வீழ்த்தவில்லை. ஆனால் காயத்துடன் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடினான். விக்ரர் அவனைத் திருப்பிச் சுட்டான். வானளாவ உயர்ந்த புழுதி மண்டலம் அடங்கவில்லை. மற்றும் தகுந்த வெளிச்சம் இல்லை. எனவேதான் சரியாகச் சுடமுடியவில்லை. அவன் ஓடிவிட ஜீப்புக்குக் கிட்டே ஒன்றோ இரண்டோ துப்பாக்கிகள் விக்ரரை நோக்கிச் சுட்டன. அதன் சுவாலையை விக்ரர் கண்டான். தன் இயந்திரத் துப்பாக்கியால் அந்த சுவாலையை மையமாக வைத்து சில வேட்டுக்களைத் தீர்த்தான். பின்பு அடங்கிவிட்டது. மேலும் ஒருசில உருவங்கள் தெரிய அவற்றை நோக்கியும் சில குண்டுகளைச் சுட்டான் துப்பாக்கி திடீரென்று நின்றுவிட்டது. விக்ரருக்கு விளங்கிவிட்டது. போடப்பட்ட குண்டுகள் தீர்ந்துவிட்டது. குண்டுகள் நிரப்பப்பட்ட மறு ரவைச் சட்டத்தைமாற்றி மீண்டும் சுட்டான். அதேவேளை பின்னால் வந்த ட்ரக் வண்டியின் சாரதி வெடி வெடித்ததைப் பார்த்தான். அவன் உடல் சில்லிட்டது. பெரிய வெளிச்சத்தையும், ஜீப் மேலே தூக்கி எறியப்பட்டதையும் கண்ட சாரதி தன்னை அறியாமலே பிரேக்கை இறுக அமத்தினான். ஏன் பிரேக் அழுத்தும் மிதி மீது ஏறி நின்றான் என்றே கூறலாம்.

ட்ரக் பிரேக் போட்டு நின்றதும் ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் தம் துப்பாக்கியை தயாராக்கியவாறு இருக்கையிலிருந்து எழத்தொடங்கினர்.

தம்பி இரு வாகனங்களும் தன்னைத் தாண்டு மட்டும் சுவரின் மறைவிலே குந்தியிருக்க, இரு வாகனங்களும் அவரைத் தாண்டுகிறது. சிறிதாக நிமிர்ந்து பார்க்கையில் ஜீப் வண்டி கண்ணி வெடியை நெருங்கிக் கொண்டிருக்க ட்ரக் அவருக்கு 20 யார் தூரத்தில் சென்றுகொண்டிருக்க கண்ணிவெடி வெடித்தது. ட்ரக் அவருக்கு மிகக் கிட்ட கையில் எட்டிப்பிடிக்குமாப் போல் துரத்தில் பிரேக் போட்டதால் குலுங்கி நிற்க தான் எப்போதும் உடன் வைத்திருக்கும் அவருடைய G3 வெடிக்கத்தொடங்கியது.

ட்ரக்கின் இருக்கையில் இருந்து இராணுவத்தினர் எழுந்தும் எழாததுமான நிலையில் தம்பியின் G3 வெடிக்கத் தொடங்கியது. G3 யிலிருந்து புறப்பட்ட சூடான ரவைகள் தாக்குதலுக்குத் தயாராக எழுந்த இராணுவத்தினரை வரிசையாக விழுத்தத்தொடங்கியது.

சற்றும் எதிர்பாரமல் ஏற்பட்ட இத்திருப்பம் தம்பியை ஆபத்தின் உச்ச எல்லைக்குள் சிக்கவைத்துவிட்டது.

ஆனால், இந்த எதிர்பாராத திருப்பமே இப்போரின் முழுவெற்றிக்கு வழி அமைத்தது எனலாம். மிகத் துரிதமாகவும் குறிதவறாமலும் துப்பாக்கியை கையாள்வதில் முதன்னமயாளராகத் திகழும் தம்பியிடம் ட்ரக்கில் வந்த 9 இராணுவத்தினரும் சிக்கியதே எமது முழு வெற்றிக்கு வழி கோலியது.

ட்ரக் மிகக் கிட்ட நிற்பதால் இலகுவாக தம்பியால் அவர்களைச் சுடமுடிகிறது. வெடியன் அதிர்வில் தெரு விளக்குகள் அணைந்துவிட்ட பொழுதிலும் மிகக் கிட்டேயிருப்பதால் ஒவ்வொருவராகக் குறிவைத்துச் சுட்டார். ஆனால் மிக அபாயகரமான நிலை அவருக்கு. இராணுவத்தினரைப் பொறுத்தவரையில் தம்பி மிகக் கிட்டே நிற்கிறார். எதிர்பாராமல் இத்தாக்குதலில் மிக அபாயத்தின் எல்லையில் தம்பிதான் நிற்கிறார். ஆனால் தனது ஆளுமையால், ஆற்றலால் வரிசையாக இராணுவத்தினரை விழுத்தி வந்த போதிலும் இரண்டு சாதுரியமான இராணுவத்தினர் ட்றக்கிலிருந்து கீழே சில்லுக்குள் புகுந்துகொண்டு, மறைந்திருந்து தமது தாக்குதலை ஆரம்பித்தார்கள். தம்பி நின்ற சுவரில் வேட்டுக்கள் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தன. இத்துடன் ட்றக்கின் முன்புறத்தில் இருந்தவர்களும் கீழே பாய எத்தனித்தனர். இதை நோக்கிய தம்பியின் G3 இவர்களையும் நோக்கி முழங்குகிறது.

இதிலே மிகவும் சங்கடம் என்னவென்றால் தம்பிக்கு உதவிக்கு எவரும் இல்லை நாம் எமது திட்டத்தின் படி ஜீப்பை முன்னே விட்டு ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடித் தாக்குதல் செய்வதாக இருந்ததோம். அத்திட்டத்தின்படி தம்பியை மிகப் பின்னுக்கு வைத்திருந்தோம். ஆனால் இப்போ தனியாகவே ட்றக்கை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தம்பி தள்ளப்பட்டு விட்டார். இதே நேரம் ஜுப்பை நோக்கி சுட்டுக்கொண்டிருந்த விக்ரர் தனக்கு 20 யார் பின்னே ட்ரக் நிற்பதையும் அதிலிருந்து துப்பாக்கிகள் சடசடப்பதையும் அவதானித்தான். தன் இயந்திரத் துப்பாக்கியை ட்றக்கை நோக்கி திருப்பினான். ட்றக்கின் முன் கண்ணாடிகள் சிதறுகின்றன. கண்ணாடிக்கு குறுக்காக ஓர் நீளவரிசையாகச் சுட்டான்.

அப்பொதுதான் சாரதி இறந்திருக்க வேண்டும். நாம் பின்பு பார்த்தபோது தனது இருக்கையிலேயே ஸ்ரேறிங்கில் சாய்ந்து வாயால் இரத்தம் கக்கியபடி உயிரை விட்டிருந்தான்.

விக்ரரின் இடத்திலிருந்து சற்று முன்னோக்கி எதிரில் இருந்த ஒழுங்கையிலிருந்து ‘”பசீர் காக்கா”” றிப்பீட்டரால் ஜீப்பை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார். றிப்பீட்டரில் தோட்டாக்கள் முடியும்போது அதை மாற்றித் திருப்பித் தாக்கும் படி செல்லி உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார் காக்காவின் அருகிலிருந்த அப்பையா அண்ணை. அப்போழுது ஒழுங்கையை நோக்கி ஒருவன் S.M.G உடன் ஓடி வந்தான். ‘சுடு” என்ற அப்பையா அண்ணை உடனே ‘கவனம் எங்கட பெடியளோ தெரியாது பார்த்துச் சுடு” என்றார். றிப்பீட்டர் சத்தம் ஓய வந்தவன் பிணமாகச் சரிந்தான். அவனது S.M.Gயை அப்பையா அண்ணை ஓடிவந்து எடுத்துக்கொண்டார். இவனே ரோந்துப் பிரிவுக்கு தலைமை தாங்கிய லெப்ரினன்ட் என்று பின்னர் தெரிந்து கொண்டோம். அவனது விசேட இராணுவப் பட்டிகள் அதை உறுதிப்படுத்தின.

இதே நேரம் தம்பி தனியே நிற்பதை உணர்ந்து ரஞ்சனையும் இன்னொரு போரளியையும் ”தம்பியிடம் ஓடு” என்று துரத்தினேன். அவர்கள் அருகிலுள்ள வீடுகளால் பாய்ந்து தம்பியை நோக்கிச் சென்றனர்.

ஆனால் ரஞ்சனும் சக போராளியும் தம்பியை நோக்கி சென்றடைந்த போது ட்றக்கிலிருந்த அனைத்து துப்பாக்கிகளையும் தம்பியின் தனி ஒரு G3 ஓயவைத்துவிட்டது.

சாதாரணமாக எவரும் நம்புதற்கரிய இவ்வீரச்செயலை முடித்து விட்டு அமைதியாக வீட்டின் அருகேயுள்ள மாமரத்தின் கீழிருந்து முடிந்த ரவைக்கூட்டிற்கு ரவைகளை நிரப்பிக் கொண்டிருந்தார் தம்பி.

மதிலேறிக்குதித்த ரஞ்சனும் மற்றைய போரளியும் ஆயுதத்தோடு ஒரு நபர் இருப்பதைக் கண்டு ஆயுதத்தைத் தயார்நிலைக்குக் கொண்டுவந்து ”யாரது”” என்று முன்னே வந்தனர்.

”அது நான்ராப்பா”” என்றவாறு ரஞ்சனை அடையாளம் கண்ட தம்பி இங்கே எல்லாம் முடிந்தது. உங்கடை பக்கம் எப்படி என்றார். ”அண்ணை எங்கடை பக்கம் பிரச்சினையில்லை”” என்றார் ரஞ்சன்.

”இங்கையும் எல்லாம் முடிந்து விட்டது, ஆனால், எனக்கு சற்று முன்பாக எதிரேயிருந்த புலேந்திரனையும் சந்தோசத்தையும் காணவில்லை, வா பார்ப்போம்”” என்றவாறு தன் பிரியத்திற்குரிய பG3யை தூக்கிக்கொண்டு விரைந்தார் தம்பி.

மதிலேறிக் குதிப்பதற்குமுன் ரஞ்சனுடன் வந்த போராளி தம்பியின் அனுமதியைப் பெற்று எதற்கும் முன்னெச்செரிக்கையாக ஓர் குண்டை வீசினான். குண்டு ட்ரக்கின் கீழ் விழுந்து வெடித்து எரிபொருள் தாங்கியை உடைத்தது.

இதன்பின் மதிலேறிக் குதித்து றோட்டைத் தாண்டி புலேந்திரன் சந்தோசத்தின் இடத்தையடைந்தான். அங்கு புலேந்திரன் சந்தோசத்தைக் காணவில்லை. ‘எதற்கும் முதலில் இறந்தவர்களின் ஆயுதங்களைச் சேகரியுங்கள்” எனக் கட்டளையிட்டார் தம்பி. மதிலேறி றோட்டில் குதிக்க ஆயத்தமான ரஞ்சனுடன் வந்த மற்ற வீரன் தம்பியைப் பார்த்து ”அண்ணா அவன் அனுங்குகிறான்.” மீண்டும் ஒருமுறை முழங்கிய G3 அவனின் அனுங்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இதன் பின் ட்ரக்கை நெருங்கி ஆயுதங்களை சேகரிக்கத் தொடங்கினர். தம்பி எதற்கும் என்று வெளியே கிடந்த இராணுவத்தினரின் தலையில் இறுதி அத்தியாயத்தை G3ஆல் எழுதிவைத்தார். Gயின் வேகம் மண்டையோடுகளைப் பிளக்க வைத்தது.

இதே நேரம் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடிய ஓர் இராணுவவீரனை இன்னோர் போரளி துரத்திச் சென்று சுட்டான். ஜீப்பை முற்றாக முடித்துவிட்டு பொன்னம்மானும் நானும் என்னுடைய போரளிகளும் ட்ரக்கை நோக்கி நடு றோட்டால் ஓடினோம்.

”கரையால் வாருங்கள்”” என்ற குரல் எம்மை வரவேற்றது. எல்லோரும் தம்பியை சூழ்ந்துகொண்டு மகிழ்சி ஆரவாரம் செய்து கொண்டு ஆயுதங்களைப் பொறுக்கத் தொடங்கினோம். இதற்கிடையில் பொன்னம்மான் அதீத மகிழ்ச்சியுடன் இறந்து கிடந்த இராணுவத்தினரின் ஹெல்மெட்டை தலையில் போட்டுக்கொண்டு ட்ரக்கின் கீழே இறந்து கிடந்த இராணுவ வீரர்களினது ஆயுதங்களை தேடி எடுத்துக்கொண்டான்.

இத் தாக்குதல் இரவு நேரமாதலால் எம்மையும் இராணுவத்தினரையும் பேறுபிரிக்க நாம் ஹெல்மெட்டைத் தான் குறியீடாகப் பாவித்தோம். எனவே ஹெல்மெட்டுடன் ஓர் உருவம் நகர்வதைக்கண்ட தம்பி உடனடியாக துப்பாக்கியை தயார்நிலைக்கு கொண்டு வந்து ”யாரது” என்று வினவ அம்மான் ”அது நான் தம்பி” என்றவாறு தனது தவறை உணர்ந்து ஹெல்மெட்டைக் கழற்றினார்.

பொன்னம்மானை செல்லமாக கண்டித்தவாறு எல்லாரையும் சரிபார்க்குமாறு தம்பி பணிக்க ”அம்மானைக் காணவில்லை”” என்று விக்ரர் கத்தினான். விக்ரரும் புலேந்திரனும் அம்மான் நின்ற கடையின் மேல் ஏறினர். ”டேய் அம்மானுக்கு வெடி விழுந்திட்டுது” என்ற விக்ரரின் குரல் எங்கும் எதிரேலித்தது. எல்லோரும் அங்கே ஓட நான் வானை எடுத்து வந்தேன்.

வானில் அம்மானை ஏற்றும்போது அம்மானின் உடல் குளிர்ந்துவிட்டது.

லிங்கம் இறுதியாக இராணுவத்தினரின் தலையில் போட றெஜி ஆயுதங்களைப் பொறுக்கினான்.

வான் புறப்படத் தொடங்க மழையும் மெதுவாகத் தன் கரங்களால் வாழ்த்துத் தெரிவித்தது. எமக்கு செல்லக்கிளி அம்மானின் மரணத்திற்காக இடியும் மின்னலும் சேர்ந்து இறுதி வணக்கம் செலுத்த வான் எமது முகாம் நோக்கி பறந்தது.

நினைவுப் பகிர்வு 
அன்புடன் கிட்டு 

https://www.youtube.com/watch?v=PVrnAdGRbhI

- ஈழம் ரஞ்சன்-
Read More

July 05, 2020

கரும்புலி கப்டன் மில்லரின் கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது
by Editor - 0

கரும்புலி
கப்டன் மில்லர்

வல்லிபுரம் வசந்தன்

துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்

வீரப்பிறப்பு:01.01.1966

வீரச்சாவு:05.07.1987

நிகழ்வு:யாழ்ப்பாணம் யாழ். மாவட்டம் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயதில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம்மீது வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி மோதி வெடிக்க வைத்து வீரச்சாவு

முதலாவது கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது .!

 

” Black Tigers ” என்பது தற்கொடைப்பிரிவைச் சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்க்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர்.

இயக்க உறுப்பினர்கள் அனைவருமே சைனைட் குப்பிகனை கழுத்தில் அணிந்து கொண்டு இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில் எதிரிகளிடம் பிடிபடாமலும் இயக்கத்தை பாதிப்படையவிடாமலும் செய்ய உயிர் துறந்தவர்கள் எத்தனையோ பேர்.தெய்வப் பிறவிகள்தான் கரும்புலிகள்

கரும்புலிப்பிரிவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமது உயிரைப் பணயம் வைத்து, அதைவிட தமது உயிரை கொடுத்து சில நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அரிதாக, மிக அரிதாக அவர்கள் தப்பி திரும்பி வரும் சந்தர்பங்களும் உண்டு. எப்படியிருந்தபோதிலும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கும்போது தம்முடைய உயிரை அந்த நடவடிக்கைக்காக தியாகம் செய்யத் தயாராகவே இருப்பர். இப்படியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்கொடைத் தாக்குதலில் முதலில் வீரச்சாவடைந்த கப்டன் மில்லரால் நடாத்தி முடிக்கப்பட்ட தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை பற்றி சற்றுப் பார்போம்

மில்லர் வடமராட்சியின் துன்னாலைப் பகுதியைப் பிறப்பிடமாக கொண்டவன். அவனுடைய தந்தை இலங்தை வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தன்னுடைய தாயகத்தை மீட்க அவன் எப்போதும் சித்தமாக இருந்தான். மில்லர் எமது இயக்கத்தில் சேர்ந்து பல தடவைகள் இராணுவத்துடன் மோதியிருக்கிறான். ஒவ்வொரு மோதலிலும் மீல்லர் தன்னுடைய பணியை தனக்கே உரித்தான அபாரத் துணிச்சலுடன் செய்து பலருடைய மதிப்பை பெற்றவன்.

வடமராட்சிப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றிகையிட்ட போது பிரபாவின் அணியின்ரோடு சேர்ந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டான். வடமராட்சி யுத்தம் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பலத்த சேதத்திற்க்கு பின் வடமராட்சியை இராணுவத்தினர் வடமராட்சி பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டனர். வடமராட்சி பகுதியை திரும்ப மீட்க வேண்டுமென்பதில் மில்லர் துடியாய் துடித்தான்.

 

பிரபாவும், (பிரபா முன்னர் மன்னார் பிராந்தியத்தில் விக்ரருடன் பணியாற்றியவன்) மில்லரும் சேர்ந்து நெல்லியடி இராணுவ முகாமுக்குள் வெடிமருந்து வாகனங்களை விடுவதற்க்கு தலைவரிடம் அனுமதி கேட்டு, வெடி மருந்தையும் பெற்று கொண்டனர். ஒன்றன் பின் ஒன்றாக இரு வண்டிகள் விடுவதற்கு திட்டமிட்டனர். முதலாவது வண்டியை மில்லரும் அதன் பின் வண்டியை, அதன் பின் இரண்டாவது வண்டியை ராசிக்கும் ஓட்டிச் செல்ல முன்வந்தனர்.



கரும்புலி கப்டன் மில்லரின் கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது .!

By திரு வேந்தனார் Last updated Jul 4, 2020

 Share

கரும்புலி

கப்டன் மில்லர்


வல்லிபுரம் வசந்தன்


துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்


வீரப்பிறப்பு:01.01.1966


வீரச்சாவு:05.07.1987


நிகழ்வு:யாழ்ப்பாணம் யாழ். மாவட்டம் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயதில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம்மீது வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி மோதி வெடிக்க வைத்து வீரச்சாவு


முதலாவது கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது .!


 


” Black Tigers ” என்பது தற்கொடைப்பிரிவைச் சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்க்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர்.


இயக்க உறுப்பினர்கள் அனைவருமே சைனைட் குப்பிகனை கழுத்தில் அணிந்து கொண்டு இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில் எதிரிகளிடம் பிடிபடாமலும் இயக்கத்தை பாதிப்படையவிடாமலும் செய்ய உயிர் துறந்தவர்கள் எத்தனையோ பேர்.தெய்வப் பிறவிகள்தான் கரும்புலிகள்


கரும்புலிப்பிரிவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமது உயிரைப் பணயம் வைத்து, அதைவிட தமது உயிரை கொடுத்து சில நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அரிதாக, மிக அரிதாக அவர்கள் தப்பி திரும்பி வரும் சந்தர்பங்களும் உண்டு. எப்படியிருந்தபோதிலும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கும்போது தம்முடைய உயிரை அந்த நடவடிக்கைக்காக தியாகம் செய்யத் தயாராகவே இருப்பர். இப்படியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்கொடைத் தாக்குதலில் முதலில் வீரச்சாவடைந்த கப்டன் மில்லரால் நடாத்தி முடிக்கப்பட்ட தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை பற்றி சற்றுப் பார்போம்


மில்லர் வடமராட்சியின் துன்னாலைப் பகுதியைப் பிறப்பிடமாக கொண்டவன். அவனுடைய தந்தை இலங்தை வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தன்னுடைய தாயகத்தை மீட்க அவன் எப்போதும் சித்தமாக இருந்தான். மில்லர் எமது இயக்கத்தில் சேர்ந்து பல தடவைகள் இராணுவத்துடன் மோதியிருக்கிறான். ஒவ்வொரு மோதலிலும் மீல்லர் தன்னுடைய பணியை தனக்கே உரித்தான அபாரத் துணிச்சலுடன் செய்து பலருடைய மதிப்பை பெற்றவன்.


வடமராட்சிப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றிகையிட்ட போது பிரபாவின் அணியின்ரோடு சேர்ந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டான். வடமராட்சி யுத்தம் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பலத்த சேதத்திற்க்கு பின் வடமராட்சியை இராணுவத்தினர் வடமராட்சி பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டனர். வடமராட்சி பகுதியை திரும்ப மீட்க வேண்டுமென்பதில் மில்லர் துடியாய் துடித்தான்.


 


பிரபாவும், (பிரபா முன்னர் மன்னார் பிராந்தியத்தில் விக்ரருடன் பணியாற்றியவன்) மில்லரும் சேர்ந்து நெல்லியடி இராணுவ முகாமுக்குள் வெடிமருந்து வாகனங்களை விடுவதற்க்கு தலைவரிடம் அனுமதி கேட்டு, வெடி மருந்தையும் பெற்று கொண்டனர். ஒன்றன் பின் ஒன்றாக இரு வண்டிகள் விடுவதற்கு திட்டமிட்டனர். முதலாவது வண்டியை மில்லரும் அதன் பின் வண்டியை, அதன் பின் இரண்டாவது வண்டியை ராசிக்கும் ஓட்டிச் செல்ல முன்வந்தனர்.


திட்டம் உருவானது. இரவு இரவாக நெல்லியடி இராணுவ முகாமிக்குள் வண்டிகளை விடுவது என்றும் ஏனேன்றால் இராணுவத்தினர் இரவு பத்து மணிக்குப் பின்னர் முகாம்களை விட்டு வெளியே வந்து சுற்றாடலில் இருந்த மக்கள் வெளியேறிய வீடுகளில் தங்கிவிடுவார்கள் என்பதால் அதற்கு முன்னர் வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனங்கள் உள்ளே விடப்பட வேண்டும்.


 


வாகனங்கள் முகாமை நெருங்கிச் செல்லும் பாதைகளில் பல தடைகள் போடப்பட்டு இருந்தன. எனவே வாகனங்கள் புறப்பட்டு முகாமை அடைவதற்கு அத்தடைகள் அகற்றப்படுதல் முக்கியமானதாகும். அந்த வேலையை கமல் பொறுபெடுத்துக் கொண்டான். பகல் வேளையே வாகனங்கள் தயார் செய்யப்பட்டு முகாமுக்கு அருகில் கொண்டு வரப்பட்டு இருக்கும்.


சரியான நேரம் நெரிங்கியதும் எம்தோழர்கள் முகாமைத் தம்முடைய துப்பாக்கிகளாலும், ரொக்கட்டுகளாலும் தாக்கத் தொடங்குவார்கள். அந்தச் சந்தர்பத்தில் கமலும் அவனுடைய சகாக்களும் தெருவில் உள்ள தடைகளை அகற்றுவார்கள். கமல் தடைகளை முற்றாக அகற்றிய பின் பிரபாவுக்கு அறிவிக்க வெடிமருந்து நிரப்பிய வாகனங்கள் முகாமை சென்றடையும். இதுதான் திட்டம்

கமல் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டவன். இவரது தந்தை துரைரத்தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர். தந்தையது பாதை எமது தாயகத்தை மீட்டு எடுக்க சரியான தீர்வாகது என்பதை உணர்ந்த கமல், எமது இயக்கத்திலே தன்னை இணைத்து கொண்டு போரடத் தொடங்கினான்.


 


பயிற்சியை முடித்து விட்டு மட்டக்கிளப்புக்குச் சென்று சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றிந்தான். கிளக்கில் எமது இயக்க வளர்ச்சியில் கமலின் பங்கு மிகவும் குறிப்பிடக்கூடியது.

மட்டக்கிளப்பில் மிகவும் சிக்கலான சூழ்நிலைகளிலும் தன் தனித்திறமையினால் எத்தனையோ அரும் பெரும் காரியங்களை ஆற்றியிருக்கின்றான்.


தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடை பெற்றுக் கொண்டிருந்தன. மில்லர் மிகவும் கடுமையாக உழைத்தான். இராணுவத்தினர் ஆக்கிரமிப்புகுள் இருந்த நெல்லியடிப் பகுதிக்கு வெடிமருந்துகளையும், வாகனங்களையும் மிகுந்த சிரமப்பட்டு இரவோடு இரவாக கொண்டுவந்து சேர்த்தான். அவ்வேளைகளில் கூட நான் அடுத்த நாள் இறக்க போகிறேன் என்ற விடயம் தெரிந்த மனிதனைப் போல் நடந்து கொள்ளவில்லை.


 


கவலையோ, திகைப்போ, பயமோ அல்லது தயக்கமோ அவனிடம் காண முடியவில்லை. வெடிமருந்துகளை ட்றக் வாகனங்களில் ஏற்றி அவற்றுக்கு இணைப்புகளை கொடுத்து தன்னுடைய சவப் பெட்டிகளை தானே தயாரித்து கொண்டு இருந்தான்.


அன்று பகல் முழுவதும் வெடிமருந்துகளுடன் இரு வாகனங்கள் தயார் செய்யப்பட்டன. குழுக்கள் யாவும் உசார் நிலைக்கு கொண்டு வரப்பட்டன. நேரம் இரவாகிய போது குழுக்கள் யாவும் முகாமை நோக்கி நகரத் தொடங்கின. மில்லர் தன்னுடைய வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டான்.


கமலுடைய குழு, வாகனம் முகாமை நோக்கி செல்லத் வேண்டிய பாதையில் போடப்பட்டு இருந்த தடைகள் உள்ள பகுதியை சென்றடைந்தனர். எனைய குழுக்களும் முகாமை நெருங்கி தத்தமது இடங்களில் தயார் நிலையில் நின்றனர்.

பொறுபாளரிடமிருந்து தாக்குதல் ஆரம்பிக்கும்படி கட்டளை பிறப்பிககப்பட்டது. எல்லோரும் முகாமை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள்.

மில்லர் ஏறி அமர்ந்து இருந்து ட்றக் வண்டியை ஸ்ராட் செய்து எஞ்சினை உறுமி விட்டு அமைதிப் படுத்தினான். பின் தன் வண்டி செல்வதற்கான உத்தரவுக்காக காத்திருந்தான். அப்போது கூட பக்கத்தில் இருந்த பிரபுவோடு ஏதோ யோக் அடித்து கொண்டு சிரித்து கொண்டு இருந்தான்.


முகாமை நோக்கி எமது தோழர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்து கொண்டிருக்கையிலேயே கமல் குறுக்கே பாய்ந்து தடைகளை அகற்ற முயன்றான். பெரிய மரக்கட்டைகள் புதைக்கப்பட்டு இருந்தன.

தான் கொண்டுவந்த வெடிமருந்துப் பெட்டியை கட்டைகளின் பின் வைத்து விட்டு விலகி மறைவில் படுத்து கொண்டான். வெடி மருந்து வெடித்தது. அத்தோடு கட்டைகள் து}க்கி எறியப் பட்டு பாதை சீராகியது. அதே நேரம் பாதைக்கு நேரே அமைக்கப்பட்டிருந்த காவல் அரணில் இருந்து இராணுவத்தினரின் மெசின்கன்கள் வெடிக்க தொடங்கியது.

கமல் தன்னுடைய வாக்கிடோக்கியில் அறிவித்தான். ‘தடைகள் அகற்றப்டட்டு விட்டது” ஆனால் புதிய சிக்கல்; பாதைக்கு நேரேயுள்ள காப்பரணில்; இருந்து துப்பாக்கிச் சூடு வருகிறது. சற்றுப் பொறு. மில்லருக்குப் பக்கத்தில் நின்ற பிரபாவின் வாக்கியிலும் அறிவிப்பு தெளிவாக கேட்டது.


அதைக் கேட்ட மில்லர் ‘பிரபா பரவாயில்லை, வாகனத்தின் முற்பகுதியில் குண்டுகள் துளைக்காத படி தகடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதனால் நான் கொண்டு போய் சேர்த்து விடுவேன்.” என்றான்.

மில்லர் சற்று பொறுத்துக் கொள் அந்தப் பங்கர் உடைக்கப் பட்டதும் நீ போகலாம். மிக விரைவாக வண்டியை செலுத்தி விட்டு விட்டு, நீ இறங்கி ஓடி வந்து விடு;. என்றான் பிரபா.

மில்லர் ஒரு முறை சற்று சிரித்து கொண்டான். ஏனேன்று புரியவில்லை. அருகில் இருந்த பிரபாவிற்கு கேட்க மனம் துணிய வில்லை. ‘பிரபா முன்பு ஒரு முறை யாழ்பாணத்தில் விடப்பட்ட வாகனம் சரியாக செல்லவில்லை. எனவே இம்முறை நான் நிதானமாகவே வாகனத்தைச் செலுத்துவேன்.


 


எப்படியும் கட்டிடத்துக்கு மிக அண்மையில் வாகனத்தை கொண்டு செல்வேன் என்று மில்லர் கூறினான்.

கமல் தன்னுடைய வோக்கியில் ரொக்கட் லோஞ்சர் வைத்திருப்பவனை அந்த காப்பரணை உடைக்குமாறு கூற ரொக்கட் லோஞ்சரில் இருந்து மிகச் சரியாக ஏவப்பட்ட ரொக்கட் பங்கரை தாக்கியது. மணல் முட்டைகள் சிந்தின. பங்கர் இருந்த இடத்தில் ஒரே புழுதியும் புகையும். கமல் தகவலை தெரிவித்தான். பொறுபாளரிடமிருந்து மில்லரை புறப்படுமாறு பிரபாவிற்க்கு உத்தரவு வந்தது.


 


மில்லர் வண்டியை ஸ்ராட் செய்து மெதுவாக செலுத்தினான். பிரபா வண்டியின் பின்னால் ஏறிக்கொண்டான்.

வண்டி நெல்லியடிச் சந்தியை வந்தடைந்தது. மில்லர் வண்டியை நிறுத்தி பிரபாவை அழைத்தான்.பிரபா மில்லருக்கு கையை அசைத்துவிட்டு வெடி மருந்து வெடிப்பதற்கான கருவியை இயக்கினான் கருவி இயங்கத் தொடங்கியது.


மில்லர் வண்டியை மெதுவாக ஒடவிட்டான் பிரபா வண்டியில் இருந்து குதித்து வண்டியோடு சேர்ந்த ஓடி மில்லரின் பக்கத்தில் வந்து ‘மில்லர் எப்படியும் திரும்பி வந்து விடு” மில்லர் அதை புரிந்து கொண்டது போல் வண்டி வேகம் பிடித்தது. பிரபா அப்படியே தெருவில் நின்று வேகமாகச் செல்லும் வண்டியைப் பார்த்துக் கொண்டிருக்க மில்லரையும் வெடிகுண்டையும் சுமந்து கொண்டு வண்டி சென்று கொண்டிருந்தது..


வண்டி முகாமை நோக்கி வருவதை அறிந்து தோழர்கள் முகாமைவிட்டு பின்னுக்கு வந்தனர். கமல் நின்ற இடத்தை தாண்டி வண்டி சென்றதும் கமல் மில்லரை நோக்கி கையசைத்து பின்னுக்கு செல்ல, சில நிமிடத்தில் நிலத்தை அதிரவைத்துக் கொண்டு பெரிய ஓசை எழுந்தது.

தோழர்கள் மீண்டும் முகாமை; நோக்கி முன்னேறினார்கள்.

இராணுத்தினர் தங்கியிருந்த சற்று முன்னர் கூட இராணுத்தினர் நின்று துப்பாக்கி பிரியோகம் செய்த மிகப் பெரிய மாடிக்கட்டிடம் தரைமட்டமாகிக் கிடந்தது. அதில் இருந்த இராணுவத்தினர் கட்டிடத்தின் உள்ளேயே இறந்து போனார்கள்.


மில்லரின் தாக்குதலை தொடர்ந்து நடந்த அத்தாக்குதலில் கமலும் வீரச்சாவடைந்தான். நெஞ்சிலே காயமடைந்த கமலின் உடல் எடுத்து வரப்பட்டது. ஆனால் மில்லர் திரும்பவே இல்லை. மில்லர் வெடிமருந்தின் அதிர்வலைகனோடு சங்கமாகி அதிர்வலையோடு சேர்ந்து தன் பணியை செவ்வனே முடித்தான்.


வெளியீடு – உயிராயுதம் 


 

Read More

July 02, 2020

இன்னொரு காவியம் கரும்புலி லெப். கேணல் போர்க்
by Editor - 0

இன்னொரு காவியம்…….

இன்னொரு காவியம் கரும்புலி லெப். கேணல் போர்க்
1986, முள்ளியவளைப் பகுதி அன்று இராணுவத்தினரால் நிரம்பி இருந்தது. தமது அட்டூழியங்களை நிகழ்த்திவிட்டு இராணுவத்தினர் பின்வாங்கத் தொடங்கினார்கள். 

அவர்கள் மூன்றாம் கட்டை வயல்வெளியை அண்மித்தபோது மேஜர் பசீலனின் தலைமையில் ஒரு தாக்குதற்பிரிவு தனது தாக்குதலை ஆரம்பித்தது.

வயல்வெளி, ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் அவர்களை நோக்கி ஏவப்பட்ட மோட்டார் செல்களிலும், ரவைகளிலும் அவர்கள் நனைந்தனர். இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு. போர்க் அன்றுதான் ஒரு போராளியாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வந்திருந்தான். வந்த அன்றே ஒரு பெரும் போர் முனையில் அவன் பங்கு பற்றினான். அன்றுமுதல் சிறீலங்கா இராணுவத்தினருக்கு எதிரான பல போர் முனைகளில் போர்க் பங்கு பற்றிக்கொண்டிருந்தான்.

இந்தியப்படை எம் மண்ணை ஆக்கிரமித்தநேரம் சிறிது காலம் அமைதியும் பின் பலத்த போரும் ஆரம்பித்தது. அந்த யுத்தத்தின் மிகக் கடுமையான எதிர்ப்பை இந்தியப்படைகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் சந்தித்தன. ஒட்டிசுட்டானில், முள்ளியவளையில், தண்ணீரூற்றில், அளம்பிலில் என பல முனைகளில் இந்தியப் படையினர் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டது. எல்லாப் போர்முனைகளிலும் போர்க்கும் ஒரு போராளியாக கலந்து கொண்டான். அப்போர்க்களங்களில் தன் திறமையை வெளிப்படுத்தினான்.

அந்நேரத்தில்தான், முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் ஒரு மலைக்கல்லில் முகாம் அமைக்கும் பொறுப்பு போர்க்கிடம் ஒப்படைக்கப்பட்டது. அது ஒரு மிகக் கடுமையான வேலை, வயல்வெளிகளிலும், காட்டுப்பாதைகளிலும் மழைநீர் நிறைந்து சேறும், சகதியுமாக இருக்கும். அப் பாதைகளினால் உணவுப் பொருட்களையும் ஏற்றிக் கொண்டு உழவு இயந்திரத்தில் செல்ல வேண்டும். அவைகள் புதையும்,வயல் வெளியில் சேற்று நிலத்தில் உழவு இயந்திரத்தை மீட்பதற்காக போராடவேண்டும். இந்திய வானூர்திகள் வந்து மிரட்டும், இடைக்கிடை தாக்குதலும் நடாத்தும். அவர்கள் தொடர்ந்து செல்வார்கள். உழவு இயந்திரத்திலிருந்து மூட்டைகளை இறக்கி மலையின் வேறு பகுதிக்கு தோள்களில் சுமக்க வேண்டும். மரங்களில் தங்கி நிற்கும் மழைநீர் அவர்களை நனைக்கும். மறுநாள் இருமலும் தடிமலும்தான் – ஆனாலும் வேலைகள் தொடரும்.

போர்க்கிற்கு ஏற்கனவே இடுப்பு முறிந்திருந்தது. பாரமான பொருட்களை தூக்க அவனால் இயலாது. அப்படித் தூக்கினால் மீண்டும் அவன் நடக்க முடியாமல் படுக்கையில் இருக்க வேண்டி வரும் என்பதை தெரிந்திருந்தும் அவன் வேலைகளைச் செய்தான். உணவுப் பொருட்கள் சேமிக்கப்பட்ட ஒரு பலமான முகாமை உருவாக்கினான்.

ஆனால், அந்த முகாம் இந்தியப்படையினரின் தேடுதல் நடவடிக்கைக்கு உட்பட்டது. பலமான ஒரு சண்டை அந்தக் காட்டுப் பிரதேசத்திலும் நடந்தது. அப்போரில் கப்டன் வாதவூரான் வீரமரணத்தைத் தழுவிக் கொண்டான். போர்க் காலில் காயமடைந்தான். கானகச் சண்டைக்கு நாம் பழக்கப்படாத காலம் அது. காட்டின் எந்தப் பக்கம் சென்றாலும் எதிரி இருந்தான். பசி, களைப்பு, தண்ணீர் இருக்குமிடங்களில் எதிரி இருந்தான். தன்னைத் தூக்கிச் செல்லும் போராளிகளுக்குப் போர்க் கதைகளின் மூலம் உறுதியூட்டினான். அவர்கள் பின்வாங்கிச் சென்றார்கள்.

அதே காட்டின் மூலையில் – எமது புதிய முகாம். அங்கு போர்க் தனது காயத்திற்கு வைத்தியம் செய்து கொண்டிருந்தான். அதே நேரம் அங்கு எமது பயிற்சி முகாமும் ஆரம்பமாகியது.

போர்க் முழுமையாக குணமடையும் முன்பே புதிய போராளிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டான். அங்கேதான் முதன் முதலாக இந்தியப்படைக்கெதிராகப் போராடும் புதிய அணி உருவாகியது.

அதன் பின்பு போர்க்,முல்லைத்தீவு மாவட்டத்தின் இராணுவப் பிரிவுப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். அக் காலத்தில் போர்க்கின் தலைமையில் பல தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இதில் 4ம் கட்டையில் நடந்த தாக்குதல் நடவடிக்கை, தேர்தல் நேரத்தில் பரவலாக நடந்த தாக்குதல்கள் ஆகியவை குறிபிடத்தக்கவை.

இதன் பின்பு, போர்க் முல்லைத்தீவு மாவட்டப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். அந்நேரத்தில் புலிகளின் முகாம்களை சீராக்கி எந்தவொரு தாக்குதலையும் எதிர் கொள்ளக்கூடியளவு பலமுள்ளதாக மாற்றி அமைத்துக் கொண்டான். அதேவேளை தாக்குதற் திட்டங்களை உருவாக்கி இந்தியப்படையினர் மீது நெடுங்கேணி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு என எல்லா இடங்களிலும் பரவலாகத் தாக்குதலை மேற்கொண்டான்.

பின்பு, வன்னிப் பிராந்திய தளபதியின் நேரடி கண்காணிப்பிலிருந்த படைப் பிரிவொன்றின் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். இக்காலகட்டத்தில் கிளிநொச்சி, முசல்குத்தி என சமூகவிரோதிகளை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டான்.
ஆனி 15, இரவு 12 மணி,

இருளில் மூழ்கி இருந்த மாங்குளம் இராணுவ முகாம் புலிகளால் திடீரெனத் தாக்கப்பட்டது. பல முனைகளால் புலிகள் எதிரியின் காவலர ண்களை நோக்கி முன்னேறினார்கள். போர்க் ஒரு தாக்குதல் அணிக்கு தலைமை வகித்து முன்னேறினான். எதரியின் காவலரணுக்கு அருகில் அவனது பலமான துப்பாக்கிப் பிரயோகத்திற்கு நடுவே எம்மவர்களின் ஆயுதங்கள் இயங்கின. கண்ணிவெடி அகற்றியை பிரயோகித்துவிட்டு எதிரியின் காவலரணை நோக்கி போர்க் சென்றான். ஆனால் அவன் தனி ஒருவனாகவே இருந்தான். அவனுடன் சென்ற தோழர்களில் பலர் வீரமரணமடைந்து விட்டனர். சிலர் காயமடைந்து விட்டனர்.

அந்தத் தாக்குதல் முழுமையடையவில்லை. தொடர்ந்து நாம் காப்பரண்களை அமைத்து முற்றுகையிலீடுபட்டோம். முற்றுகைக்குப் பொறுப்பாக போர்க் நியமிக்கப் பட்டான். பலமுனைகளில் பலமுறை போர் நடந்தது. போர்க்கும் அவனது தோழர்களும் கடுமையாகப் போரிட்டார்கள். சில வேளைகளில் பின்வாங்கினார்கள், சில வேளைகளில் முன்னேறினார்கள். ஆனால் தொடர்ந்து எங்கள் மண்ணைக் காப்பதற்காகப் போரிட்டுக் கொண்டிருந்தார்கள்.

பின்பு, மாங்குளம் இராணுவ முகாம் முற்றுகைக்கான பொறுப்பை மேஜர் திலீப்பிடம் ஒப்படைத்துவிட்டு போர்க் மீண்டும் தன் படைப்பிரிவின் பொறுப்பாளனாகச் செயற்பட்டான்.

மாங்குளம் இராணுவ முகாம் மீதான இரண்டாவது தாக்குதல், தளபதிகள் போர்த் திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் போர்க்கும் ஒருவன். ஒரு தாக்குதற் பிரிவுக்கு தலைமையேற்று உள்ளே செல்லும்படி போர்க் கேட்கப்பட்டான்.

ஆனால் அதற்கு அவன் மறுத்து விட்டான். அக்கூட்டத்தில் “நான் வெடிமருந்து வண்டியை ஓட்டிச் செல்கின்றேன்” என்ற அவனது வார்த்தைகள் உறுதியாக வெளி வந்தது.

மற்றவர்கள் வியப்புடன் பார்த்தார்கள். ஆனால் அவனது கண்களில் தெரிந்த ஆழமான உறுதி அவர்களை மௌனமாக்கியது.

இறுதி மூன்று நாட்கள்…….

போர்க் தன்னந்தனியாக எந்தவிதமான பொறுப்புக்களும் இல்லாமல் சுற்றித்திரிந்தான். தான் பிறந்த வீடு, தவழ்ந்த மண், பழகிய மக்கள், மரங்கள், குளம் எல்லாவற்றையுமே பார்த்தான். சேமமடுதான் அவனது கிராமம். சிங்கள எல்லை அருகில்தான். “நாங்கள் ஆயுதம் தூக்கியிராவிட்டால் இப்ப இங்க சிங்களவன்தான் திரிவான்” என்று அடிக்கடி அவன் சொல்லுவதுண்டு.

போர்க் ஏற்கனவே இனிமையானவன், இறுதி மூன்று நாட்களும் அவன் சக போராளிகள் மீது அன்பையும் பாசத்தையும் கொட்டினான். அவன் என்ன செய்யப் போகிறான் என்பது எவருக்குமே தெரியாது…… அவர்கள் வழமை மாதிரி போர்க்கிடம் பழகினார்கள். ஆனால் அவன் தம்மீது ஒரு பெரும் சோகச்சுமையை சுமத்தப் போகிறான் என்பது அவர்களுக்குத் தெரியாது.

வன்னி மண்ணில் போராட்ட வாழ்வின் போது தன்னை அரவணைத்து வளர்த்த கிராமத்து மக்களிடம் போர்க் சென்றான். அவன் நேசித்த மண், மக்கள், காடுகள், வயல்கள்……எல்லாமே அவனுக்கு விடை தந்தன.

23-11-1990…..

திட்டமிட்டபடி மாங்குள இராணுவ முகாமைச் சுற்றி இருந்த காவலரண்கள் வீழ்ச்சியடைந்திருந்தன. அதுவரை நேரமும் தனது போராளிகளுடன் இருந்த போர்க் புறப்படுவதற்குத் தயாரானான். இறுதி நேர நிமிடங்கள், இருள், தன் போராளிகளின் முகங்களைத் தேடியபடியே – போர்க் சொன்னான்.
“பெடியள் கவனம்.பசீலன் செல் வெடிக்கேக்கை சத்தம் தாங்க முடியாமலிருக்கிறது.எதற்கும் பெடியளைத் தள்ளியே நிற்கச் சொல்லுங்கோ” தன் தோழர்கள் மீது அவன் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகள் அவை.

போராளிகள் விலகிச் சென்றார்கள்.

“எல்லாம் சரியாக இருக்கிறதா?” வோக்கியில் அவனது இறுதி வார்த்தை – தன் தோழர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டான். அந்த வெடிமருந்து நிரப்பப்பட்ட பார வண்டி, எதிரியின் வலயத்திற்குள் உறுமிக்கொண்டு நுழைந்தது. அந்த இறுதிக் கணங்களில் போர்க்கின் முகத்தில் என்ன எழுதி இருந்தது என்பது எவருக்குமே தெரியாது.ஆனால் எல்லாப் போராளிகளைப் போலவே அவனுக்கும் தெரியும், இந்த மண் நிச்சயம் மீட்சியடையும்.

அது ஒரு உன்னதமான செயல், அந்தக் கணத்தில் அவன் எடுத்த முடிவு. குறித்த இலக்கையும் தாண்டி அந்த வண்டி மேலும் பல எதிரிகளை தேடிச் சென்றது. முகாமின் மையப்பகுதி –

மிகப் பெரிய சத்தம். அந்தப் பிராந்தியமே அதிர்ந்து மௌனமாகியது.

இருள் கலையும் விடியலின் நேரம் துப்பாக்கிகள் ஓய்ந்து விட்டன. எமது போராளிகள் மாங்குளம் இராணுவ முகாமிற்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் கண்கள் தேடிக் கொண்டிருந்தன. போர்க் அண்ணை எங்கே? போர்க் எங்கே? போர்க்கின் வெடிமருந்து வண்டி வெடித்த இடத்தில் ஆழமான குழி ஒன்று இருந்தது. ஆக்கிரமிப்பாளனின் முகாமின் கட்டிடங்கள் இடிந்து – நொருங்கிக் கிடந்தது. அந்தக் குழிக்கு சற்றுத் தள்ளிப் போர்க்கின் உயிரற்ற உடல்……

போர்க் வீரமரணத்தைச் சந்தித்துக் கொண்டான் – அவன் வரலாற்றில் ஒருவனாக வாழவில்லை, ஒரு புதிய வரலாற்றைப் படைத்தவன். அவனது வாழ்வு அர்த்தமுள்ளது, உன்னதமானது – தனது இனத்தின் விடுதலைக்காகத் தன்னையே ஒப்படைத்த உயர்ந்த வீரன் அவன். தனது உயிருக்கும் மேலாக தனது நாட்டின் சுதந்திரத்தை நேசித்த மாவீரன் அவன். நாளையும் காற்றாக எங்கள் உயிர் மூச்சாக வாழ்வான் அவன்.

வன்னி மண்ணில் சேமமடு என்னும் கிராமத்தைச் சேர்ந்த போர்க் – முல்லைத்தீவு மாவட்டத்தின் பொறுப்பாளராகவும், அதன் பின்பு, மாங்குளம் இராணுவ முகாம் முற்றுகைக்குப் பொறுப்பாளராகவும், பின்பு வன்னி நடமாடும் அணியின் பொறுப்பாளராகவும் இருந்தவர். இந்தியப் படைகளுக்கு எதிராகவும், சிறீலங்கா படைகளுக்கு எதிராகவும் பல தாக்குதல்களை திட்டமிட்டு, தலைமையேற்று வழி நடாத்தியவர். தன்னுயிரைத் தந்து மாங்குளம் படைமுகாம் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தவர்.

நினைவுப் பகிர்வு:- வசந்தன் 
விடுதலைப் புலிகள் (மார்கழி 1990) இதழிலிருந்து.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Read More