Latest News
Showing posts with label ஈழத்து துரோணர். Show all posts
Showing posts with label ஈழத்து துரோணர். Show all posts

October 05, 2017

எமது தார்மீக போராட்டத்தை ஐநா அங்கிகரிக்குமா?
by admin - 0

எமது தார்மீக போராட்டத்தை ஐநா அங்கிகரிக்குமா.? ************************************************************************
"முதலாளித்துவம்" எம்மை ஏற்குமா.?
***************************************************** 
ஈழத்து துரோணர்.!! 
********************************


சமீபத்தில் தான் ஜெனீவாவில் ஒன்று கூடி சர்வதேசத்தின் முன் எமது மனக் குமுறளைக் கொட்டியும், சிங்களத்துக்கு எதிராக "கம்பு சுத்தியும்" இந்த வருடத்திற்கான "ஐநா போராட்டத்தை" இனிதே நிறைவு செய்திருந்தோம். 




எமது குரலைச் சர்வதேசம் செவிமடுக்குமா.? அல்லது, அது எமக்காகக் குரல் கொடுக்குமா.? ஐநா என்றால் யார்.? அதன் பின்னணி என்ன.? அதன் கொள்கைகள் யாருக்காக வகுக்கப்படுகின்றன.? போன்ற கேள்விகள், எம்மத்தியில் எப்போதும் எழுந்ததில்லை என்பது தான் வேதனையே.!

இறுதி யுத்தத்தின் போது, குழந்தைகள் தொடங்கி முதியோர் வரை, பல லட்சம் மக்கள், தாம் வாழும் நாடுகளின் தலைநகரில் கூடி, கண்ணீருடன் தங்கள் ஆதங்கத்தை கொட்டிய போதும், யாரும் எம்மைக் கண்டு கொள்ளவில்லை. 

அந்த நேரத்தில் அந்த,அந்த  நாடுகளின் ஊடகங்கள் சொல்லி வைத்தாற்போல, அந்தச் செய்திகளை இருட்டடிப்பு செய்தன. இப்போது அவர்களிடமே திரும்பவும் நீதி கேட்டு  போய் நிக்கின்றோம்.

ஏன் எம்மை ஒதுக்கினர்.?  இது எப்படி சாத்தியமாகியது.? இதன் பின்னால் யார் உள்ளனர்.? எதற்காக எங்கள் போராட்டமும், எங்கள் உணர்வுகளும் நசுக்கப்பட்டது.? அதற்கான விடையை இந்தப்பதிவின் ஊடாக நாம் தேடுவோம்.!

சமீப காலமாக "இலுமினாட்டி" என்ற சொற்பதம் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி வெளிக்கிளம்புவதை நாம் காணலாம். அப்படியொன்று இருக்கின்றதா அல்லது இல்லையா என்பதை, நான் இங்கு ஆராயவில்லை. மாறாக இந்த உலக ஒழுங்கு பற்றி நாம் வரலாற்றின் மூலம் தேடுவோம். 

1118ம் ஆண்டு ஐரோப்பிய மத குருக்கள் ஜெருசலேம் மீது போர் தொடுத்தனர். அந்த போரில்  பங்குபற்றிய ஒரு பிரிவான "பிரீமேஷன்" என்ற பிரிவினரே ரெம்பிளஸ்  (templas) என்று அழைக்கப்பட்டனர். அந்த யுத்தத்தில் கிடைத்த பொக்கிஷத்தின் மூலம் (அது மன்னர் சாலமனின் நுண்கலைப் புத்தகம் என்கின்றனர்) இந்த அமைப்பினர் பெரும் செல்வந்தராகினர் என்றும் வரலாறு கூறுகின்றது. 

அன்றைய நேரத்தில் இந்த அமைப்பினர் பிரான்சில் குடியிருந்தனர். இவர்கள் பெரும் பாலும் மக்களின் செல்வதை சுரண்டுவதாகக் குற்றம் சாட்டி, பிரான்ஸ் அரசு இவர்களைத் தடை செய்தது. அதனால் இந்த அமைப்பினர் 1730ம் ஆண்டு பிரான்சிலிருந்து, ஸ்கொட்லாந்துக்கு தப்பிச்சென்றனர். 

அங்கு வைத்து தான் இவர்கள் "பிரீமேஷன்" அமைப்பை உருவாக்கினர். பின்னர் அங்கிருந்து அந்த அமைப்பைச்  சேந்தவர்கள் அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தனர். பெரும்பாலும் அங்கு குடியேறியவர்கள் ஐரிஸ், மற்றும் ஸ்கொட்டிசினரே அதிகம். 

சமகாலத்தில்  "அடம் வெய்ஸப்ட்" என்ற யூதர் "பிரமிடுவில் ஒற்றைக்கண்ணைக்" இலச்சினையாகக் கொண்ட  "இலுமினாட்டி" என்ற அமைப்பை 01/05/1776ம் ஆண்டு ஆரம்பித்தார். பின்னர் அவர் கத்தோலிக்க மதத்தை தழுவியதால் "ரொத்சைல்ட்" அதை பொறுப்பேற்றதாகவே இந்த வரலாறு நீள்கிறது. 

1738-1790ம் ஆண்டில் இவர்களின் சுரண்டல்களுக்கு எதிராக, "வத்திக்கான்" இறுக்கமான முடிவின் மூலம், இந்த அமைப்பைத் தடை செய்தனர். அதன் தொடர்ச்சியாக எல்லா நாடுகளும் இந்த அமைப்பின் மீதான தடையை இறுக்கியதால், தங்கள் அடையாளத்தை அகற்றினர் அல்லது மறைத்து வாழ்ந்தனர். 

இந்த நேரத்தில் அமெரிக்காவில் உள்நாட்டுப்போர் தலைவிரித்தாடியது. இந்தக்  கலகங்களை அடக்கி, நிலையான ஒரு கட்டமைப்பை அங்கு " பிரீமேஷன்" அமைப்பினரே உருவாக்கி, தமக்கான நாடாக அமெரிக்காவை கட்டியெழுப்பினர். 

அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜோர்ச் வொஷிங்டனும் அவரது தளபதிகளும்  " பிரீமேஷன்" சடங்குகள் செய்த பின்னரே பதவியேற்றனர் என்பதே வரலாறு. அதன் பின்னர் வந்த அதிபர்கள் அனைவருமே (ஒபாமாவைத் தவிர) " பிரீமேஷன்" குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

"இலுமினாட்டி" என்று அழைக்கப்படும் " பிரீமேஷன்" அமைப்பினரில் பதின் மூன்று குடும்பங்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. நண்பர்களே.! உங்களுக்கு நம்ப முடியாது போனாலும், இந்தப் 13குடும்பங்களிடம் தான், இந்த உலகத்தின் மொத்த பொருளாதாரத்தில் 90% பங்கு  இவர்களிடமே உள்ளது.! மிகுதி 10% தான் இந்தப் பூமியில் வாழும் மக்களிடம் உள்ளது.! 

இந்த உலகின் பெரும் செல்வங்களை ஈட்டும், எந்த வியாபாரமும்  இவர்களிடமே உள்ளது. இவர்கள் தான் நாம் எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும், எந்த நோய் எமக்கு வரவேண்டும் என்பதில் தொடங்கி எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றனர். 

இந்த 13குடும்பங்களின் கட்டுப்பாட்டில் தான் அமெரிக்காவே உள்ளது. அதற்கு ஆதாரம்  அமெரிக்க கொடியின் பதின்மூன்று கோடுகள், இந்தப் பதின்மூன்று குடும்பங்களைக் குறிக்கின்றதாம். கொடியில் உள்ள கழுகின் கையில் 13அம்புகள், கழுகின் வாலில் 13இறகுகள், ஒலிவ் இலையில் 13 இலைகள் இப்படி அதில் உள்ள அனைத்துமே 13இல் தான் இருக்கும். 

அதே போலவே தான் அவர்களின் நாணயத்தில், "பிரீமேஷன்" ஒற்றைக்கண் பிராமுடுவையும் வைத்தனர். ஆக, அமெரிக்காவின் அதிகாரமே "பிரீமேஷன்" அமைப்பை சேர்ந்தவர்களிடமே உள்ளது. 

அமெரிக்காவின் மத்திய வங்கியான "பிடரல் பாங்" 1913இல் ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை, ஜெர்மனில் தங்கள் வட்டித் தொழிலை ஆரம்பித்து, பின் அதை வங்கிகளாக மாற்றி இன்று உலகம் முழுவதுமுள்ள வங்கிகளைக் கையாளும் "ரொத்சைல்ட்"குடும்பத்திடமே உள்ளது. 

இந்த வங்கி இன்று வரை அமெரிக்க அரசுக்கு, வட்டிக்கு கடன் கொடுப்பதை உங்களால் நம்ப முடிகின்றதா.? உலகின் முதல்தர வல்லசு நாட்டில், அந்த நாட்டின் "தாய் வாங்கி" தனியாருக்கு சொந்தமானதென்றால் அந்த நாட்டை இயக்குவது யார்.? 

1963இல் இந்த நடை முறையை மாற்றி மத்திய வங்கியை அமெரிக்க பாராளமன்றத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சியில் ஜான் எப் கெனடி (இவரும்  "ரொத்சைல்ட்" குடும்பத்தை சேர்ந்தவர் தான்) ஈடுபட்டார். அந்த முயற்சியின் போது தான் அவர் "2.2mm துப்பாக்கி" சூட்டின் மூலம் கொல்லப்பட்டார். 

இன்றுவரை மர்மமாக உள்ள, இந்தக்கொலையின் பின் "எந்தொரு அதிபரும்" மத்திய வங்கியை பாராளமன்றத்தின் கீழ் கொண்டுவர முயற்சி செய்யவில்லை. 

உலகின் 90%செல்வதை தம்மகத்தே கொண்டுள்ள, இந்த 13குடும்பங்களின் கட்டுப்பாட்டில் தான், உலகின் பல அரசுகள், ஊடகங்கள், திரைப்படங்கள், இசைத்துறை, தொழில் நிறுவனங்கள் தொடங்கி சமூக ஊடகங்கள் வரை இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தே இயங்குகின்றன. 

யாரை பிரபலியமாக்க வேண்டும், யாரை விழ்த்த வேண்டும் என்பதையும் இவர்களே தீர்மானிக்கின்றனர். அதற்கு சரியான உதாரணம் மைக்கல் ஜாக்சனும், புதிய அதிபர் ட்ரம்பும் தான். 

இவர்களின் தாரக மந்திரம் "எந்த நாட்டையும் யாரும் ஆளலாம், ஆட்டுவிப்பவர்கள் தாங்களாக இருக்கவேண்டும் என்பதே இவர்களின் கொள்கை.  

சரி இவர்களுக்கும் ஐநாவிற்கும் என்ன சம்பந்தம்.??
*********************************************************************************
அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையை,முதன் முதலில் ஆரம்பித்தவர்கள் இந்த 13குடும்பத்தைச் சேர்ந்த "ரொக்ஃபெல்லர்" குடும்பத்தினராகும். இந்த வெளியிறவுக்கொள்கையில் ஈடுபடுபவர்கள் இந்தக்குடும்பத்தை சேர்ந்தவர்களும், பெரும் வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுமே இருக்கின்றனர். 

இவர்களின் நோக்கம் ஒன்று தான். வெளியுறவுக்கொள்கையை "இரகசிய முதலாளிகளுக்கு" ஏற்றால் போல வகுப்பதேயாகும். இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவே தான் "ரொக்ஃபெல்லர்" குடும்பத்தினர் தான் ஐநா சபையை உருவாக்கினர். 

ஐநா சபைக்கட்டிடத்திற்கான நிலத்தினை "ரொக்ஃபெல்லர்" குடும்பத்தினரே வழங்கியிருந்தனர்.! 

ஐநா சபையின் முதல் உறுப்பினர்கள் அன்றைய "ரொக்ஃபெல்லர்" குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட வெளியுறவுத்துறையைச் சேர்ந்த 74உறுப்பினர்களுமேயாகும். இன்றும் அதில் அங்கம் வகிப்பவர்களை இவர்களே உருவாக்கி தங்கள் கைப்பாவையாகவே பாவிக்கின்றனர். 

அமெரிக்காவின் டென்வர் விமானநிலையத்தின் கீழ் இவர்களுக்கான செயலகம் ஒன்று இயங்குவதாகவும் கூறப்படுகின்றது. திடீரென்று அந்த விமானநிலையம் பழுதடைந்து விட்டதாகக் கூறி புனரமைக்கப்பட்டது. புனரமைப்பிற்கான கால எல்லையைத்தாண்டி, மேலும் இரண்டு வருடங்களும், 4பில்லியன் டொலர் பணமும் செலவாகியதாக கணக்கு காட்டியதும் சந்தேகத்தை வரவைத்து விவாதிக்கப்பட்டது. 

இந்த  "இலுமினாட்டி" என்பது எவ்வளவு தூரம் உண்மையோ தெரியவில்லை.? ஆனால், இந்த உலகத்தின் பொருளாதார ஒழுங்கை, இந்த 13குடும்பங்களுமே தீர்மானிக்கின்றனர் என்பதே எனது நம்பிக்கை.! 

இவர்களுக்கு, உலக மக்களிடமோ அல்லது நாடுகளிடமோ எந்தவித கரிசனையும் கிடையாது. தங்களுக்கு ஏற்றால் போல அதை ஒழுங்கமைக்கும் பணியையே இப்போதும், எப்போதும் செய்கின்றனர். 

சில லட்சம் மக்கள் தொகையைக்கொண்ட ஈழத்தமிழர் போராட்டம் என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் பார்ப்பது "தாங்கள் உதவ நினைப்பவர்களால், தங்களுக்கு என்ன லாபம்" என்பது மட்டுமேயாகும்.! 

தங்களுக்கு தேவைப்படும் வரைக்கும் வைத்திருப்பார்கள், தேவை இல்லாத நிலை வரும் போது அழித்து விடுவார்கள். அதற்கு பின்லேடன் தொடங்கி சதாம் குசைன், கடாபி வரைக்கும் இது தான் வரலாறு. 

இவர்களின் "கையாள்கையை" புரிந்ததாலோ என்னவோ தான் தலைவர், யாரிடமும் தங்கி இருக்காது "எங்களின் மக்களின் உதவியுடன்" மட்டுமே போராட்டத்தை முன்னெடுத்தார்.! 

இதில் இன்னொரு பாடத்தை நாம் கற்க வேண்டும். பாபர் மசூதி தகர்ப்பின் பின் ஆயிரக்கணக்கான மக்களின் மரணத்தை காரணம் காட்டி, தம்மை நியாயவான்களாக நிலைநிறுத்துவதற்காக,  இந்தியப் பிரதமர் மோடியின் அப்போதைய பயணத்திற்கு தடைப்போட்டிருந்தது அமெரிக்கா. 

மோடி தேர்தலில் போட்டியிட்ட போது, இவர்கள் காங்கிரஸை வெற்றி பெறவைக்க போராடி தோற்றனர். மோடி வெற்றி பெற்றதும், பயணத்தடையை நீக்கி மோடிக்கு செங்கம்பள வரவேற்பைக் கொடுத்து குத்துக்கரணம் அடித்தது அமெரிக்கா. (மோடி இப்போது இவர்களின் கையால் என்பது வேறு விடையம்) 

இதிலிருந்து நாம் கற்கும் பாடம் "நாம் பலமாக" இருந்தால், இவர்கள் எங்கள் வீட்டு வாசலுக்கு தேடி வருவார்கள். இல்லது போனால் எம்மை யாரும் கண்டு கொள்ளப்போவதில்லை ! 

"தமிழர்கள்" சில லட்சங்கள் என்பதைத் தாண்டி, கோடிகளில் எங்கள் தொகையை நாம் உலகத்திற்கு காட்ட வேண்டும்.! 

அதற்காக உலகத்தமிழர் அனைவரும், ஈழத்தமிழர் நாம் எவ்வாறு "தமிழர்" என்ற அடையாளத்துடன் இணைந்தது போல, தமிழகத்தமிழர்களும் "திராவிடம் என்ற மாயையிலிருந்து" வெளிவந்து "தமிழர்" என்ற அடையாளத்துடன் ஒரே நேர்கோட்டில் இணையவேண்டும். 

தமிழர்கள் ஒன்றுபட்டு பலம் பெறாதவரை ஒவ்வொரு வருடமும் ஐநா முன்றலில் "இலவு காத்த கிளியாக" இருக்க வேண்டும்.! 
அல்லது பொழுது போகாமல், "ஐநா வாசலில் கம்பெடுத்து சுத்த" வேண்டிய நிலை தான் வரும்.! 

நண்பர்களே.! நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விகளுக்கான விடையை, இந்தப்பதிவினுள்ளேயே தேடுங்கள். இளையதலைமுறை இன்னும் வீரியமாக, அரசியல் ராஜதந்திரத் தெளிவுடன், ஒரே நேர்கோட்டில்  நீங்கள் அணிவகுக்க வேண்டும். இளம் தலைமுறை அணி வகுக்குமா.? போராடுமா.??
கேள்விக்குறியுடன் துரோணர்.!
Read More

April 27, 2017

போரில் வடகொரியா வெற்றி பெறுமா.?
by admin - 0

 

இன்றைய திகதியில் மக்களின் பேசுபொருளாக 3ம் உலகப்போர் பற்றியதாகவே இருக்கின்றது. அதற்கு பிரதான காரணமாக வடகொரியாவின் ஏவுகணைப்பரிசோதனையே முக்கியமாகக் கருதப்படுகின்றது. 

வடகொரியாவின் அணுவாயுதச் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐநா சபை கொண்டுவந்த பொருளாதாரத் தடையையும் மீறி, இந்த பரிசோதனையை வடகொரியா மீண்டும் மேற்கொள்ள ஆயத்தம் செய்கின்றது.இந்தச் சோதனையின், பிராந்திய அச்சுறுத்தல் காரணமாக ஜப்பான், மற்றும் தென்கொரியா உட்பட அமெரிக்காவும் அதன் சார்பு நாடுகளும் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன. 

 


வடகொரியாவின் இளம் தலைவர் கிம் ஜொங் உண் (Kim Jong Un), அமெரிக்காவை இருந்த இடம் தெரியாமல் அழிக்கும் பலம் தமக்கு இருப்பதாக மார்தட்டுகின்றார். உண்மையில் வடகொரியாவால் அமெரிக்காவை அழிக்க முடியுமா? அதை அழிக்கும் ஆயுதபலம் வடகொரியாவுக்கு இருக்கின்றதா?இன்று பல எம்மவர்கள் அமெரிக்காவை, வடகொரியா அழிக்கும் என்றே நம்புகின்றனர். ஏன் எனது நண்பர்களும் சிலர் அப்படியேதான் நடக்குமென்று எண்ணுகின்றனர். இதற்கு ஒரு போதும் சாத்தியம் இல்லை என்பதே எனது கணிப்பு. 

 


ஏன் சாத்தியம் இல்லை.?
இதை கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.! 

2ம் உலகப்போருக்கு முன்னர், இரண்டு கொரியாவும் ஒன்றிணைந்த கொரியாவாக, ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஜப்பானின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. 2ம் உலகப்போரில் தோல்வியைச் சந்தித்த ஜப்பான், கொரியாவை விட்டகன்றது.இந்தப் போரில் ஆதிக்கம் செலுத்திய ரஷ்ய மற்றும் அமெரிக்க சதியால் கொரியாவை இரண்டு நாடுகளாகப் பிரித்து, தங்கள் மறைமுக ஆளுகைக்குள் கொண்டுவந்தனர். அமெரிக்க சார்பு தென்கொரியா (முதலாளித்துவம்) பொருளாதாரத்தில் மென்பட்டு, அந்த மக்கள் செழிப்புடன் கூடிய வாழ்க்கையை இன்று வாழுகின்றனர். 

 


அதேநேரம் ரஷ்யாவின் பின்னால் சென்ற வடகொரியா (சோஷலிச கொள்கையை ஏற்றுள்ளது) வளர்முக நாடுகளின் பொருளாதாரத்துடன் பிணைந்து வளரமுடியாது, பல எதிர் நடவடிக்கைகளால், பல பொருளாதாரத் தடைகளைச் சந்தித்து, பெரும் உணவுப்பஞ்சத்துக்கு முகம் கொடுத்து வருகின்றது.

குடும்ப ஆட்சியை கொண்ட வடகொரிய அதிபர் கிம் ஜொங் உண் மூன்றாவது ஆட்சியாளராவார். சோஷலிசத்தின் அடிப்படைக் குறிக்கோள் என்பது எல்லோரும் சமமான உரிமையுடன் கூடிய வாழ்க்கையே. 

உண்மையில் சோஷலிச நாடுகளான ரஷ்யா, சீனா, வடகொரியா போன்ற நாடுகளின் மக்கள்? சமமான வாழ்க்கையா வாழ்கின்றார்கள்? ஏற்றத்தாழ்வு இல்லாதா எல்லோருக்கும் சமமான பொருளாதார வாழ்க்கைத்தரம் கிடைத்துள்ளதா? ஒரு போதும் இல்லை.!ஆனால், இந்த நாடுகளின் உயர் பொறுப்புகளில் உள்ளவர்கள் அதிகூடிய செல்வந்தர்களாக, கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத ஆடம்பர வாழ்க்கையை வாழுகின்றனர். இன்றைய திகதியில் உலகின் முதல் பணக்காரனாக ரஷிய அதிபர் விளாடிமிர் புட்டின் 75பில்லியன் சொத்துகள் சேர்த்து விட்டார். 

 


இதை விட மிகப்பெரும் அடக்குமுறைகளை வடகொரியா மக்கள் நாளாந்தம் சந்தித்து வாழ்கின்றனர். ஒரு அரசின் கடமை என்பது தனது நாட்டு மக்களின் மூன்று நேர உணவுத்தேவையை என்றாலும், குறைந்தது பூர்த்தி செய்யும் கட்டமைப்பை உருவாக்கி கொடுப்பதேயாகும்.

பெரும் உணவுப்பஞ்சத்தில் தத்தளிக்கும் வடகொரிய மக்கள், தங்கள் நாட்டில் இருந்து பாம்பு, எலி என எதையும் மிச்சம் வைக்காது உண்டு பசியாறி விட்டனர். இப்போது இந்த உயிரினங்கள் அழிந்தமையால் மாடு, ஆடு உண்ணும் புற்களை உண்டு உயிர் வாழ்கின்றனர். 

ஆனால், கிம் ஜொங் உண் அவரது தந்தை போலவே பல ஆடம்பர மாளிகைகளைக் கட்டி, சுகபோக வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றார். ஆக, வடகொரிய மக்களின் பெரும்பான்மையினர் இந்த சோஷலிச ஆட்சி முறைமைக்கு எதிராகவே உள்ளனர்.வடகொரியா தனது வருமானத்தில் பெரும் பங்கை இராணுவத் தளபாட மேம்படுத்தலுக்கும், உற்பத்திக்குமே பயன்படுத்துகின்றது. இதற்காக 6.7பில்லியன் டொலர் பணத்தை வருடமொன்றுக்கு செலவு செய்கின்றது. 

 


வடகொரியா மோத நினைக்கும் எதிரியான அமெரிக்காவோ 610பில்லியன் டொலர்களை இராணுவப் பாதுகாப்பு செலவுக்காக 2017 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கியுள்ளது. இன்றைய நிலையில் அதி நவீன ஆயுதங்களின் கையிருப்பு அமெரிக்காவிடமே உள்ளது.

வடகொரியாவின் இராணுவ பலம் என்ன? அதற்கு ஒரு உதாரணத்தைப் மட்டும் பார்ப்போம்.! 

வடகொரியா விமானப்படையிடம் ரஷ்யத் தயாரிப்பு மிக்-29 விமானமே (இது மூன்றாம் தலைமுறை விமானம்) சிறந்த தாக்குதல் விமானமாக உள்ளது. ஏனையவை அதற்கு முந்தைய விமானங்கள். இதை வைத்து அமெரிக்காவின் விமானங்களை எதிகொள்ள முடியுமா? ஒரு போதும் முடியாது.!

இந்த விமானங்களை, அமெரிக்காவின் F-15, F-22 போன்ற தாக்குதல் விமானகள், மேலெழுவதற்கு முன்னமே அழித்துவிட முடியும். அமெரிக்க விமானப்படை தற்சமயம் F-35 அதி நவீன ஐந்தாம் தலைமுறை (Stealth Fighter) தாக்குதல் விமானத்தை உருவாக்கி, தனது கடற்படையில் இணைத்துள்ளது. 

இந்த விமானத்தை எதிர்கொள்ளும் திறன் தற்போது வரைக்கும் எந்த நாட்டிடமும் இல்லை. இது போலவே தான் ஏனைய ஆயுதங்களும், அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது பல தலைமுறை பின்தங்கி நிற்கிறது வடகொரியா.நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். வடகொரியா இப்போதுதான் தனது அணு ஆயுதத்தை பரிசோதிக்கின்றது. ஆனால் அமெரிக்காவோ இற்றைக்கு 70வருடங்களுக்கு முன்னமே இந்த சோதனைகளைச் செய்து, மனிதர்கள்மீது சோதித்துப் பார்த்து விட்டது. 

 


வடகொரியா போரொன்றை ஆரம்பித்தால் தென்கொரியா, ஜப்பான், மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த மூன்று நாட்டு இராணுவத்தை நேரடியாகவும், இவர்களின் சார்பு நாடுகளின் தாக்குதலை மறைமுகமாகவும் சந்திக்க வேண்டி வரும்.

அமெரிக்க பாதுகாப்பு துறையான பெண்டகன் தமது F-35 விமானத்தை எந்த நாட்டிற்கும் விற்கப்போவதில்லையென்றும், அதன் தொழில்நுட்பத்தை கைமாற அனுமதிக்கப்போவதில்லை என்ற கோட்பாட்டை மீறி, F-35 விமானத்தை இஸ்ரேலுக்கு விற்பனை செய்துள்ளது. 

காரணம் இஸ்ரேலின் கண்டுபிடிப்பான இரும்பு கூரை ( ‘Iron Dome’) ஏவுகணை வழிமறிப்பு சாதனத்தை உருவாக்கி, அதன் தொழிநுட்பத்தை அமெரிக்காவுக்கும் கொடுத்திருந்தது. ( இது பற்றிய எனது முன்னைய பதிவை பார்க்கவும்) அந்த தொழில்நுட்பத்திறன் மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் அமெரிக்காவின் “தாட்” என்று அழைக்கப்படும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையாகும்.

இஸ்ரேலின் இரும்புக் கூரை வெற்றி அளித்துள்ளதா?? ஆம் 97% வெற்றி அளித்துள்ளதாக நிபுணர்கள் கருத்து கூறியுள்ளார்கள். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் ஏவுகணைகள் மட்டுமல்ல ஆட்லறி, சிறியரக மோட்டர், மற்றும் எறிகணைகளையும் தடுக்கும் வல்லமை பெற்றுள்ளது. 

நேற்று இந்த ஏவுகணைகளின் பொறிமுறையைத்தான் அமெரிக்காவால், தென்கொரியாவிற்கு அனுப்பப்பட்டு, துரித கதியில் நிறுவுகின்றது அமெரிக்கா. இன்னும் சில நாட்களில் இது பாவனைக்கு வந்துவிடும்.

இந்த முறைமையால் வடகொரியாவின் ஏவுகணைகள் புறப்பட்ட அடுத்த நொடியே தானாக இயங்கும் “தாட்” ஏவுகணை, அதைத் தாக்கி அழிக்கும். 

ஒரு போரின் வெற்றி என்பது “எதிரி மீதான சிறந்த கணிப்பீட்டின் மூலமே எமக்கு சாதகமாக்க” முடியும். 

வடகொரியாவின் இப்போதைய இளம் தலைவரின் போர் முரசம் என்பது என்னைப்பொறுத்தவரை “சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது” என்பதேயாகும்.! 

சரி பொறுத்திருந்து தான் பார்ப்போம்.! 🙂 

எதிர்பார்ப்புகளுடன்
-ஈழத்து துரோணர்

Read More

February 23, 2017

கருணாவின் நேற்றைய நேர்காணலும், தலைவர் பற்றிய அவனது நகைச்சுவையும்.! ஈழத்து துரோணர்.!!
by admin - 0

கருணாவின் நேற்றைய நேர்காணலும், 
தலைவர் பற்றிய அவனது நகைச்சுவையும்.!

ஈழத்து துரோணர்.!!
 

நேற்று கருணாவின் சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் தமிழ்மொழிபெயர்ப்பொன்றை காணநேர்ந்தது. கடந்த வருடம் தமிழக ஊடகங்களுக்கு கருணா வழங்கிய செவ்விக்கும் அன்று பதில் அளித்திருந்தேன். 

அன்றைய நேரம் ஓரளவுக்கு கருணா புலிகளுடன் இணைந்திருந்த போது, அவரது வகிபாகம் பற்றி கூடியவரை பதிவிட்டிருந்தேன். (சில சொல்ல முடியாத சம்பவங்கள் தவிர)

அதனால், இந்த செவ்வியில் கருணாவின் முரண்பட்ட, உண்மைக்கு புறம்பான பொய்களுக்கான விளக்கங்களை, உங்களோடு பகிர விளைகின்றேன். 
 
கருணா, நிதி மோசடி மற்றும் பாலியல் குற்றங்களுக்கான தண்டனைக்கு அஞ்சி, புலிக்கலமைப்பிலிருந்து பிரதேசவாதம் என்ற கருத்தை முன் வைத்து, சுமார் 6000 போர் அனுபவம் பெற்ற போராளிகளுடனும், அவர்களுக்கு தேவையான ஆயுதங்களுடனும், கிழக்கை பிரித்து தனது ஆளுகைக்குள் கொண்டு வந்தான். 

அந்த நேரத்தில் அலவி மௌலானா ஊடாக, சிங்கள அரசின் பின்னுதவி கிடைக்கும் என்ற உத்தரவாதத்திற்கு பின்னரே, துணிந்து இந்த முடிவை கருணா எடுத்தான். 
 
இங்கு நாம் கவனிக்க வேண்டியது, தனி மனித ஒழுக்கம் சிதறிய ஒருவன் தண்டணைக்கு அஞ்சி, பல்லாயிரம் உயிர்களை கொடுத்து, இரத்தம் சிந்தி வளர்த்த, தமிழர் போராட்டம்  அழிவதற்கு இவனும் ஒரு காரணமாகியுள்ளான். 

உண்மையில் பிரதேசவாதம் என்பது தலைவரிடம் இருந்ததா? போராளிகளை வடக்கு, கிழக்கு எனப்பிரித்து பார்த்தாரா? 
 
ஒரு போதும் இல்லை எல்லோரையும், தனது சகோதரர்களாகவும், பிள்ளைகளாகவுமே பார்த்தார்.!

இப்போது நான் கூறப்போகும் இந்த விடையம், எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை? 
இது ஒரு வாய்மொழிக் கருத்து என்பதால், என்னால் உறுதிப்படுத்த முடியாத ஒன்று தான். ஆனால், இது உண்மை என்பது எனதெண்ணம்.! 

1989களில் பிரேமதாசாவின் பேச்சுவார்த்தை மேசையில், பொதுவில் பேசாத விடையமொன்று மறைமுகமாக அவர்களால் முன்வைக்கப்பட்டது. அதாவது கிழக்கை தவிர்த்து(திருகோணமலையையும் தவிர்த்து) வடக்கை தமிழருக்கு தருவதற்கு அவர்கள் முன் வந்தார்கள். 

அதை தலைவர் அடியோடு மறுத்துவிட்டதாக அன்றைய நேரத்தில் கானகத்தில் இருக்கும்போது பேசிக்கொள்வார்கள். வடக்கு தான் தலைவருக்கு முக்கியமாக இருந்திருந்தால், வடக்கை அவர் பெற்றிருக்க முடியும். 

தலைவரோ அல்லது போராளிகளோ எந்தவிதமாகவும் வடக்கு, கிழக்கு என்ற பாகுபாடும் பேணியதில்லை. அதற்கு உதாரணம், கருணாவின் பிரிவின் போது அவனது ஆளுகையின் கீழ், புலிகளின் முக்கிய தாக்குதல் படையணிகளான ஜெயந்தன் படையணி, அன்பரசி படையணிகள் இருந்தன. 

இந்தப் படையணிகள் வடபோர்முனையில் பல, கள அனுபங்களை தன்னகத்தே கொண்ட தாக்குதல் படையணிகள். இந்த அணிகளை தன்னிடம் இருப்பதை எண்ணியே, அந்த நேரத்தில் கருணா ஊடகங்களுக்கு வாய்ச்சவடால் விட்டுக்கொண்டிருந்தான். 

இந்த 6000போராளிகளில், சில நூறுபேர் கருணாவின் விசுவாசிகளாக இருந்து, அவனது பிரதேசவாதத்தையும், இவனது நஜவஞ்சகத்தையும் நம்பியிருந்தனர். ஏனையவர்கள் தலைவர் மீதும், தமிழீழ தனியரசின் மீதும் நம்பிக்கை கொண்டே இருந்தனர். 

இன்று கருணா புலிகளியக்கத்தில் தான் தலைவருக்கு அடுத்த நிலையில் இருந்ததாகவும், தானே பெரும்பான்மை யுத்தக்களங்களை வெண்றதாகவும், மார்தட்டுகின்றான். சரி, இதை ஒரு பேச்சுக்கு, உண்மை என்றே வைத்துக்கொள்வோம்.! 

அப்படியானால், புலிகளுடமான பிரிவின் போது, "தங்கள் படையணிகள் மீது வன்னிப்புலிகள் தாக்குதல் மேற்கொண்டால், தாக்குதலுக்கு வரும் அனைவரும் கொன்று குவிக்கப்படுவார்கள்" என்று சவால் விட்டான். 

சிங்கள ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும் இவனை நம்பி பெரும் பரப்புரையை செய்த போதெல்லாம், அவன் விசரன் கத்திறான் என்றே தலைவர் கடந்து சென்றார். ஒரு கட்டத்தில் எல்லை மீறிப்போனபோது போராளிகளை மீட்கும் நடவடிக்கையை தலைவர் ஆரம்பித்தார்.

1500 போராளிகள் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணை தலைமையில் உள் நுழைந்தபோது, கருணாவுடன் நின்ற பெரும்பான்மையான போராளிகள் புலிகளிடம் சரணடைந்தனர். இதில் கருணாவின் அண்ணன் ரெஜி போன்றவர்கள் எதிர்ப்பை காட்டி, புலிகளின் தாக்குதலில் மாண்டு போயினர். 

இந்த நடவடிக்கையினால் புலிகளிடம் சரணடைந்தவர்கள் போக, மீதியான சில நூறு கருணா விசுவாசிகள் தங்கள் வீடுகளுக்கு ஓடினர். சிலர் மத்தியகிழக்கு நாடுகளுக்கு தப்பி ஓடினர். "தன்னை பெரும் போர் தளபதியாக கற்பனையிலிருந்த கருணா, சிங்கள உளவுத்துறையின் உதவியுடன் கொழும்புக்கு தப்பிச்சென்று பதுங்கினான். 

அங்கும் புலிகளின் உளவுத்துறையினர் இவர்களை வேட்டையாடிய போது, லண்டனுக்கு தப்பிச்சென்றான். அங்கு சிறையில் 6மாதகாலம் இருந்த போது, கொஞ்ச ஆங்கிலத்தை பொறுக்கியெடுத்தபடி மீண்டும் கொழும்பு வந்தான். 

ஆக, கள அனுபவமுள்ள போராளிகளை வைத்திருந்த போதும், 1500 புலிகளை இவனால் ஏன் சமாளிக்க முடியவில்லை? ஏனென்றால், பெரும்பான்மையான போராளிகள் தலைவரை மட்டுமே தங்கள் தேசத்தின் தலைவராக ஏற்றுக்கொண்டிருந்தனர்.

மிக முக்கியமானது, இவனை சண்டைக்களங்களில் வழிநடத்தியது தலைவரே. இவனால் தனித்து திட்டமிட்டு ஒரு தாக்குதலை செய்யமுடியாதென்பதே வரலாறு (கருணா பற்றிய முன்னைய பதிவில் இது பற்றி குறிப்பிட்டுள்ளேன்) அதனால் தான், புலிகள் நடவடிக்கையை மேற்கொண்டபோது என்ன செய்வதென்று தெரியாது, அவனை நம்பி வந்தவர்களையும் கைவிட்டு தான் மட்டும் தப்பி ஓடினான்.  

இதே கருணா தான், தலைவரின் திட்டமிடலுடனும், அவரது வழிநடத்தலுடனுமே, போராளிகளை தான் வழிநடாத்தியதாக  பலதடவை போராளிகளுக்கும், மக்களுக்கும் கூறியுள்ளான். அது தான் உண்மை.! 

உண்மையில் கிழக்குமாகாணத்தின் தளபதியாக கருணா இருந்தபோதும், இவனை வெளிக்காட்டியது லெப்.கேணல்.ரீகண்ணை, மேஜர். அன்டனியண்ணை, லெப்.கேணல்.ஜோய், பிரிகேடியர் பானு அண்ணை (1991-1993வரை தண்டனையின் நிமித்தம்,பானு அண்ணை மட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தார். அன்றைய நேரத்தில் பெரும்பான்மையான தாக்குதல்கள் இவரின் வழிநடத்துதலிலேயே மேற்கொள்ளப்பட்டது) 

இவர்களின் பதுங்கித் தாக்குதல்களின் வெற்றிகள், கருணா தளபதி என்பதால் இவனுக்கே கௌரவத்தைக் கொடுத்தது. இது தலைவருக்கு தெரியாததல்ல. இவனது நிர்வாக நேர்த்தி காரணமாக இவைகளைக் கடந்து சென்றார். 

இப்படி மற்றவர்களின் தியாகத்தில் குளிர்காய்ந்தமையால் தான், இவனும், இவனது சகாக்களும் அன்று, புலிகளை எதிர்கொள்ள முடியாமல் சிதறி ஓடினர். 

இவனை ஒத்த ஒருவனாகவே இன்று நான், தமிழ்நாட்டில் ராகவா லாரன்ஸை பாக்கின்றேன். இன்னொருவரது உழைப்பை திருடுவதே, மிகவும் கேவலமாக செயல் என்பதுவே எனது கணிப்பு. இந்த இருவருக்கும் பல விடையங்கள் ஒத்துப்போவதை பல தடவை நான் காண்டுள்ளேன்.!

இந்த நேர்காணலில் தலைவரின் குற்றம் சுமத்துவதில் பின் நிற்பது தெரிகின்றது. காரணம் தலைவரை யார் எதிர்த்தாலும் அவர்களை துரோகிகளாகவே மக்கள் வகைப்படுத்துகின்றனர். இது கால, காலத்துக்கும் அவர்களது பரம்பரையையே இழிநிலைக்கு இட்டுச்செல்லும் என்பதால், இன்று தலைவரை முன்னிறுத்தி தங்கள் புலியெதிர்ப்பை அடக்கி வாசிக்கின்றனர் பலர். 

இப்போது கருணாவும் தலைவரை குறை கூறுவதைக்குறைத்து, அதற்கு பதிலாக தலைவரைவிட தான் ஆளுமை மிக்கவனாகக் காட்டி, தமிழர்க்கு தலைமையேற்க எடுக்கும் முயற்சிகளின் வெளிப்பாடே, கருணாவின் சமீபத்திய கருத்தாடல்கள். 

அந்த நேர்காணலின்போது தலைவரின்,பல பிழையான முடிவினாலேயே போராட்டம் தோல்விகண்டதாகவே பதிவு செய்கின்றான். 

#இராணுவத்தினரின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில்? என்ற கேள்வி ஒன்றுக்கு..

"இலங்கை இராணுவத்தினர் ஒழுக்கமானவர்கள். அவர்கள் பெண்கள் மீதான துஸ்பிரயோகத்தினை செய்யவில்லை" என்று வக்காளத்து வாங்கி, தனது புது எஜமான்களுக்கு, தனது கீழ்த்தர விசுவாசத்தை உறுதிப்படுத்துகின்றான்.

 #பிரபாகரன் எப்படிப்பட்டவர்? அவருடைய ஒழுக்கம் எவ்வாறானது? என்ற கேள்வியொன்றுக்கு..

அவர் ஒழுக்கமானவர். "அவருடைய பொழுது போக்கு ஆங்கில போர் திரைப்படங்களைப் பார்ப்பதே ஆகும். நான் அவருக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறுவேன். வெற்றிகள் பல வந்ததனால் அவருக்கு தலைக்கணம் அதிகமாகி விட்டது. அதுவே அவரது தோல்விக்கு வழி வகுத்தது. பிரபாகரனுடன் பேச ஏனையவர்கள் அஞ்சுவார்கள் ஆனால் என்னால் பேசமுடியும்".

இதில் தலைவரின் ஒழுக்கம் பற்றி உலகுக்கே தெரியும் அதை நான் சொல்லத்தேவை இல்லை. ஆனால், தான் தான் அண்ணைக்கு ஆங்கிலப்படங்களை மொழிபெயர்ப்பதாக விட்டான் பாருங்கள் ஒரு விடுகை :) 

போராளிகளுக்கு மட்டுமல்ல, ஏன் மக்களுக்கு கூடத்தெரியும், தாயகத்தில் ஆங்கிலத்திரைப்படங்கள் உடனேயே மொழிபெயர்ப்பு செய்து, தணிக்கை செய்த பின்னரே வெளியிடப்படும். அப்படி தமிழாக்கம் செய்யாத நல்ல படங்கள் வெளிவருவது அரிது. 

சரி, அப்படி பார்ப்பதானாலும் இவனைக் கூப்பிட்டு மொழிபெயர்க்கவைத்து தான் பார்க்க வேண்டிய தேவை அண்ணைக்கு இல்லை. ஆங்கிலத்தில் முதிர்ச்சி பெற்ற பல தளபதிகளும், பொறுப்பாளர்களும் புலிகளமைப்பில் பஞ்சமில்லை.! 

இதில் கருணா தலைவரின் கல்வியறிவை குத்திக்காட்டுவதே அவனது வலிந்த கருத்துத் திணிப்பாகவே நான் பாக்கின்றேன். தலைவர் 8ம் வகுப்பு வரை தான் கல்வி கற்றார் என்பது உலகத்துக்கே தெரியும். அவர் அதை நினைத்து ஒருபோதும் கவலைகொண்டதுமில்லை. வெட்கப்பட்டதுமில்லை. 

பெரும் பான்மையான போராளிகள் படிப்பை பாதியில் விட்டே போராட்டத்தில் இணைந்தனர். அதனால்  கல்வி கற்ற போராளிகள் பாதிக்கு பாதியே இருந்தனர் என்பது உண்மையே. புலிகளமைப்பு அனுபவத்தால் கட்டியமைக்கப்பட்ட ஒரு அமைப்பு.!  

ஏன், நானும் 7ம் வகுப்புவரை தான் கல்வி கற்றேன். இதில் எனக்கு வெட்கப்படுவதற்கு எதுவுமில்லை.! ஆனபோதும் மேலதிக கல்வியை தலைவர் போராளிகளுக்கு வழங்கினார் என்பதுவே உண்மை. 

ஆனபோதும் தலைவர் வன்னிக்கு சென்றபின் பண்டிதர் பரந்தாமனிடம் தமிழும், சோதிமாஸ்ற்றரிடம், தற்காப்பு கலையையும், ஆங்கிலத்தை ஒரு பாதிரியாரிடமும் கற்பதற்கு அவர் பின்நிற்கவில்லை. (ஆங்கிலம் கற்பித்தவர் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் முன்னாள் அதிபர். அவரது பெயர் எனக்கு உடனே நினைவில் வரவில்லை. அவர் பின்னைய நாளில் சிங்கள அரசால் கைதுசெய்யப்பட்டு காணாமல் போய்விட்டார்) 

ஆக, கல்வி அறிவுக்கும் அனுபவ அறிவுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அனுபவ அறிவே சிறந்ததென்பதே எனது வாதம்.! 

அடுத்தது கருணா அள்ளி விட்ட ஒன்று, ஏனையவர்கள் தலைவருடன் பேச அஞ்சுவார்கள், நான் அஞ்சுவதில்லை என்றும் ,அத்தோடு நினைத்த நேரத்தில் தன்னால் தலைவரை சந்திக்க முடியுமென்றும் இப்போதெல்லாம் அள்ளித்தெளிக்கின்றான். 

தலைவரால் வெளியில் சொல்லாதபோதும், அண்ணைக்கு அடுத்த நிலையில் இருந்தது, பொட்டு அம்மான் என்பது அனைவருக்கும் தெரியும். அம்மானில் தொடங்கி சாதாரண போராளிகள் வரை தலைவரை மிகுந்த பணிவுடனும், மரியாதையுடனும் தான் அணுகுவர். 

இதில் யாரும் விதிவிலக்கில்லை. பிழை விட்டால் தலைவரின் அணுகுமுறை மிகவும் கடுமையாகவே இருக்கும். யாராக இருந்தாலும் தலைவரின் அனுமதி இல்லாது அவரை சந்திக்க முடியாது. அவரிடம் அனுமதி கேட்டு, சந்திக்கும் "விடையத்தின்  முக்கியத்துவம்" கணக்கிடப்பட்ட பின்னரே நேரமும், சந்திக்கும் இடமும் சொல்லப்படும். 

அதுவரை அவர் எந்த முகாமில் இருக்கிறார் என்பது யாருக்கும் தெரிவதில்லை.இப்படி இருக்கும் போது, இவனது அறிக்கைகள் தான் இன்றைய நகைச்சுவைகள்.

இப்போது  தன்னை முன்னிலைநிறுத்தி அரசியல் பிரவேசம் ஒன்றை மீண்டும் மஹிந்தைக்கு சார்பாக முன்னெடுக்கின்றான். இவன் தலைகீழாக நின்று தண்ணி குடித்தாலும் இவனை எமது மக்கள் ஏற்கப்போவதில்லை.!
நகைப்புடன் துரோணர்.!!
Read More

February 10, 2017

இன்றைய தமிழ்நாடும் அரசியல் சூழ்ச்சிகளும்.! ஈழத்து துரோணர்.!!
by admin - 0

இன்றைய தமிழ்நாடும் 

அரசியல் சூழ்ச்சிகளும்.!

ஈழத்து துரோணர்.!!!
 
தமிழக முன்னாள் முதல்வர் "செல்வி ஜெயலலிதா" காலமானபின், தமிழ்நாட்டின் இன்றைய அரசியல், ஒரு "குழம்பிய குட்டை"போன்ற நிலையிலேயே உள்ளது.! 

இந்தக் குட்டையில் இந்தியாவின் தேசிய காட்சிகள் தொடங்கி, மாநிலக்கட்சிகளும் மீன்பிடிப்பதற்கு முயற்சி செய்கின்றன. இதில் BJP மோடியரசு முழுமூச்சில் காய்களை நகர்த்தி வருகின்றது. அடுத்ததாக திமுகவும் தனது பங்கிற்கு இறங்கி வேலைசெய்கின்றது. 

இதில் திரு.ஸ்டாலினின் நகர்வு அதிமுகாவை அழிப்பதுவல்ல, மாறாக பலவீனப்படுத்துவது மட்டுமேயாகும். கீரைக்கடைக்கு எதிர்க்கடை வேண்டும், ஆனால், அது பலகீனமுடைய திராவிடக் கடையாக இருக்கவேண்டும். அதிமுகாவை அழித்தால் "தமிழர் தேசிய அரசியல்" தலையெடுத்துவிடும் என்பதில் மோடியும், ஸ்டாலினும் ஒத்தகருத்திலேயே செயல்படுகின்றனர். 

ஆக, இவர்கள் அதிமுகாவை அழிக்கப்போவதில்லை, மாறாக அதை சிதைத்து பலவீனப்படுத்தவே, காய்களை நகர்த்துகின்றனர். 

சரி, இவர்கள் ஏன் சசிகலாவை அகற்ற நினைக்கின்றனர்? யார் இந்த சசிகலா? 

மன்னார்குடியில் ஒரு வீடியோக் கடை நடத்திய சாதாரண பெண்மணி.80களில் ஜெயலலிதா அவர்களின் தொடர்பு கிடைத்தபோது, இருவரும் சாதாரன நிலையிலேயே இருந்தனர். 

காலங்கள் கடந்தது, தமிழக முன்னாள் முதல்வர்  திரு. MGR மரணத்தின் பின், இதே அரசியல் குழப்பம் நிலவிய நேரம், இதே சசிகலாவும், அவரது கணவர் நடராசனும் ஜெயலலிதாவிற்கு பக்கபலமாக நின்றனர் என்பதும் வரலாறு.! 

எப்படியோ ராஜிவ் காந்தியின் மரணத்திற்கு பின்,புலியெதிர்ப்பு கோசத்துடன் ஆட்சியை பிடித்தார் ஜெயலலிதா. ஆட்சியை பிடித்தது தான் தாமதம், ஜெயலலிதாவின் பின்னாலிருந்து அவரது ஆசியுடன் உலகில் உள்ள அனைத்து மோசடி வழிகளையும் பின்பற்றி, தமிழக மக்களின் பல்லாயிரம் கோடிகளை சுருட்டினர். 

ஆக, ஜெயா அவர்களின் பினாமியாக வாழ்க்கையை ஆரம்பித்து, இன்று சாராய ஆலைகள், எஸ்ரேட்கள், திரையரங்குகள், பல்பொருள் அங்காடிகளென பல்லாயிரம் கோடிகள் சொத்து சேர்த்துவிட்டனர். 

இப்படி எல்லா வகையிலும் திமுக குடும்பத்தின் அரசியல் போலவே தான் சசிகலா குடும்பமும் உள்ளது.! (கருணாநிதியின் சொத்து மதிப்புடன் ஒப்பிடும்போது சசிகலா குடும்பத்திடம் குறைவு தான்) 

ஆக, பாம்பின் கால் பாம்பறியும்.! 
அதனால் தான் ஸ்டாலினின் பதறல் ஊருக்கே கேட்கின்றது.! 

இது போலவே தான் பணபலமுள்ள சசிகலா, அதிகாரத்துக்கு வந்தால் ஹிந்து மதவாத கட்சியான BJP காலூன்ற முடியாதென்பது மோடியின் பயம். 
ஆனால், சசிகலா மோடியுடன் ஒத்துப்போகத் தயாராக இருந்த போதும், அதற்கான விட்டுக்கொடுப்புகள் சிலவற்றை செய்தபோதும், மோடியின்,சசிகலா மீதான சந்தேகம், பன்னீர்ப்பக்கமே செல்ல வைத்துள்ளது) 

இவர்கள் பன்னீர்செல்வத்தை கொண்டுவருவதற்கு ஏன் முன்னிக்கின்றனர்.? 

பன்னீர் அவர்களின் திடீர் கொந்தளிப்பின் பின்னால் உள்ள காரணம் என்ன? 

திரு.பன்னீர் செல்வம் சாதாரண நிலையிலிருந்து, இன்று முதல்வராக வருமளவுக்கு உயர்ந்ததன் பின்னால், அவர் போட்ட முதலீடு தன்னை ஜெயா அவர்களுக்கு அடிமையாக எண்ணி செயல்பட்டது மட்டுமேயாகும். 

இவரை பார்க்கும் போதெல்லாம் குனிந்தபடியே திரிவதை மட்டுமே நாம் பார்த்துள்ளோம். ஆனால் அந்த குனிவுக்கு பின்னால் அவர் சம்பாதித்ததோ பல்லாயிரம் கோடிகள்.! 

இவரது பணிவிற்கு பின்னால் உள்ள ஊழல் யார் கண்ணுக்கும் தெரியவில்லை அல்லது மறைக்கப்பட்டுள்ளது.! இவரது பினாமி சேகர் ரெட்டியின் வீட்டில் நடந்த ரெய்ட் மூலம் பன்னீர்செல்லவத்தை வழிக்கு கொண்டுவந்தது மோடியரசு.! 

அவர்களுக்கு தேவை ஒரு கேட்பார் கைப்பிள்ளை.! பன்னீருக்கு தேவை பதவி+தான் சேர்த்த சொத்தை பாதுகாப்பது மட்டுமேயாகும். அவரைப்பொறுத்தவரை, தான் விழும் கால் யாருடையதென்பது அவருக்கு முக்கியமில்லை.! 

ஆக, மிகுதி நாலு ஆண்டுகளும் முதல்வராக ஆளவேண்டும். அதன் பின் தன்னால் முதலைவராக முடியாதென்பது அவருக்கே தெரியும்.! 

சசிகலா விட்ட, மிகப்பெரும் தவறு ஜெயலலிதா அவர்களின் சிகிச்சையையும், அவரது மரணத்தையும் மறைத்ததேயாகும். இன்று அவரது முதல்வர் கனவுக்கு எதிராக உள்ளதும் இந்தக்காரணமேயாகும்.!

சசிகலா மீது வைக்கப்படும் மிகப்பெரும் குற்றச்சாட்டு "ஜெயலலிதாவை கொலை செய்துவிட்டார்" என்பதுவேயாகும். ஒரு பொய்யான இந்த செய்தியை திமுகாவே, தமது ஊடகங்கள் மூலமாக இடைவிடாது ஒளிபரப்பி, சசிகலாவின் சாம்பிராச்சியத்தை உடைத்தது. 

உண்மையில் ஜெயா கொல்லப்பட்டாரா? இது சாத்தியமா? என்னைப்பொறுத்தவரை ஒரு போதும் முடியாது.!

ஜெயலலிதா இறக்கும், போது அவர் சாதாரண குடிமகள் அல்ல. ஒரு மாநிலத்தின் முதல்வர். இந்திய உளவுத்துறைகளின் கண்களில் மண்ணைத்தூவி இதைச் செய்ய முடியாது. அப்படி நடந்திருந்தால் இந்திய அரசின் உளவு வலையமைப்புகள் கேள்விக்குரியதாகிவிடும்.! 

ஆனால், இவர்கள் குறிப்பிட்ட திகதியில் அவர் இறக்கவில்லை.! அதற்கு முன்னரே இறந்துவிட்டார் என்பதே எனது நம்பிக்கை. இது மோடி அரசுக்கும் தெரியும்.! 

ஆக, எல்லோரும் கூட்டு கள்வர்களே? 

என்னைப் பொறுத்தவரை சசிகலா கும்பல் பெரிய மாஃபியா என்றால் OPS சின்ன மாஃபியா மட்டுமல்ல சந்தர்ப்பவாத அரசியல்வாதியுமாவார். இவர்கள் இருவரும் தமிழர்கள் என்பதற்காக இவர்கள் செய்த ஊழல்களை மன்னிக்க முடியாது, வக்காலத்து வாங்கவும் முடியாது.!
 
இந்த சம்பவங்கள் அனைத்தும் நடக்கும் போது, இவர்களுடன் கூடவே இருந்து வக்காலத்து வாங்கிய OPS தான் "அம்மா ஆவியுடன் கதைத்துவிட்டு" நல்லவனாகி விட்டார். இதை ஏன் அவர் முன்னமே செய்யவில்லை.? 

தனது பதவிக்கு ஆபத்து வந்ததும் இந்த நாடகத்தை அரங்கேற்றி விட்டார். இதற்கான கதை ஸ்டாலின், டைரக்ரர் மோடி தான்.! 
 

சரி, யார் முதல்வராக வரவேண்டும்? 

சந்தேகமில்லை, எனது பார்வையில் இப்போதைக்குOPS தான் வரவேண்டும்.! 
குழப்பமாக இருக்கின்றதா? 
தூரநோக்கில் சிந்தித்தால், சசிகலா வருவாராகின் "அடுத்த திமுக போன்ற குடும்ப அரசியலொன்று" தமிழ்நாட்டில் உருவாகிவிடும். 

மீண்டும் அதிமுக புத்துயிர் பெற்று, தமிழ்த்தேசியத்தின் கழுத்தை அது நெரிக்கும். திமுக, அதிமுக என்ற இரண்டு பெரும் ஊழல் பூதங்களும் தமிழரை சுரண்டியே, "தமிழர்களைக் கற்காலத்துக்கு" கொண்டுபோய் விடுவார்கள்.! 
 

பன்னீர் ஆட்சிக்கு வந்தால் நாலு ஆண்டுகளில் ஒரு கொள்ளைக்கூட்டம் அழியும்.! 
அதே போன்று கருணாநிதியின் "இருப்புக்கு" பின் திமுகவும் தானாகவே சிதறிப்போகும் என்றே நான் நம்புகின்றேன்.! 

அதற்கான நேரம் நெருங்கி வருக்குன்றது. மக்கள் தான் விழிப்படைய வேண்டும்.! 

ஒருவரது மரணத்தின் மூலம், ஒருவர் செய்த தவறுகள் அல்லது அவரது பாவங்களை போக்கப்படுமா? அல்லது மன்னிக்கப்படுமா? 
 

இல்லை.! அதற்கான வரலாறு ஹிட்லரையோ அல்லது முசோலினி போன்றவர்களையோ கொலைகாரர்களாகவே பதிவு செய்துள்ளது. அதிலிருந்து மக்கள் தங்களுக்கு தேவையான பாடங்களை எடுக்க வேண்டும்.! 

அது போலவே தான் ஜெயலலிதா அவர்களும் செய்த ஊழல்களும், வன்முறைகளும் மன்னிக்க முடியாதவை. இன்று "அம்மா "என பூசி மெழுகி தூய்மை வேஷம் போர்த்திவிட்டனர் அவரின் அடிமைகள்.! 
அதைத் தமிழக மக்கள் நம்பும் நிலையிலேயே உள்ளனர். 
 

இதுபோலவே தான் நாளைக்கு கருணாநிதிக்கும் தூய்மை பட்டம் கொடுத்து, அழகுபார்ப்பர் தமிழர்.! 

தமிழக மக்கள் சின்னத்திற்கு ஓட்டுப்போடும் வழக்கத்திலிருந்து மீண்டு வரவேண்டும். ஊழல் அரசியல்வாதிகளுடன் இணைந்து, வந்தவரைக்கும் லாபமென்ற இழிநிலை மாறவேண்டும்.! 

உங்கள் வாக்காளர்களின் தகுதியும், நேர்மையையும் கருத்திலெடுத்து, உங்கள் தலைவர்களை தெரிவு செய்யுங்கள்.! 

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற ஒரே காரணத்திற்காக அவரை முதல்வராக்க துடிப்பது அடிமை மனப்பான்மையின் உச்சம். இது மிகப்பெரும் கேவலம்.!
 

தமிழக மக்களே.! இரண்டு திராவிடக்கட்சிகளும் மிகப்பெரும் வியாபாரிகள். அதை நீங்கள் எப்போதும் உணரவேண்டும்.! 

உங்கள் அடுத்த சந்ததியின் வாழ்க்கையை முன்னிட்டே உங்கள் அரசியல் தெரிவு எப்போதும்  இருக்க வேண்டும்.! 
உங்களுடன் துரோணர்.!!
Read More

February 04, 2017

இந்தியத்தின் வல்லரசுக்கனவும் எண்ணூர் எண்ணெய்க் கசிவு.! ஈழத்து துரோணர்.!!
by admin - 0

இந்தியத்தின் வல்லரசுக்கனவும் 

எண்ணூர் எண்ணெய்க் கசிவு.!

ஈழத்து துரோணர்.!!
இந்தியா
 

எண்ணூர் அருகே இரண்டு சரக்கு கப்பல்கள் மோதியதால் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் கூறுகின்றன. சில நாட்களாக மசகு எண்ணையை, கடல் நீரிலிருந்து பிரித்தெடுக்கும் பணிகள் நடக்கின்றன.! 

இன்றைய நடப்பில் "வல்லரசுக்கனவில்" மிதக்கும் இந்திய அரசு, எண்ணெயை அகற்றுவதற்கு பாவிக்கும் "அதி நவீன கருவி தண்ணீர் அள்ளும் வாளியே" என்றால் இதில் எந்த அதிசயமும் எனக்கு இல்லை. :)

இதற்கு முன், இதுபோல பல விபத்துகள், பல நாடுகளின் கடலில் நடந்துள்ளது. அவர்கள் பெரும்பாலும் கடலில் வைத்தே மசகு எண்ணெயை, இராச்சத உள்ளிழுக்கும் இயந்திரங்கள் மூலம் அகற்றறிவிடுவர். (வீடுகளில் தூசுகளை உள்ளிழுக்க பயன்படும் ஹூவர் மிசின் போன்ற தொழில்நுட்பம்)  

அதிலிருந்து, சிதறிக்கரையை அடையும் குறைந்த சதவிகித எண்ணெயை, மக்கள் உதவி நாடாது அந்த அரசுகளே துப்பரவு செய்துள்ளது. 

ஆனால், தமிழ்நாட்டில் அந்த எண்ணெய், கரையை அடைந்த பின்னரே, கைகளால் அள்ளி எடுக்கும் நிலையிலேயே, இந்திய அரசு உள்ளது. இப்போது பொதுமக்களின் உதவியை பெற்றே, இந்த துப்பரவுப்பணியை செய்யும் நிலையிலேயே தமிழக அரசும் உள்ளது.! 

இந்த லட்சணத்தில் வல்லரசுக் கனவு வேறு உள்ளது.! 

சரி இந்தியா வல்லரசாகுமா? 

என்னைக்கேட்டால், இந்தியத்தின் நிறைவேறாத பெரும் கனவு, இது தான் என்பேன்.! 

இந்திய ஒன்றியத்தில் இந்த நிமிடம் வரை 30%மக்கள் கழிப்பிட வசதியற்ற நிலையிலேயே வாழுகின்றனர்.
50%த்திற்கு மேற்பட்ட மக்களுக்கு, ஒரு நேர உணவே கிடைக்கின்றது.(அதுவும் கிடைக்காத மக்களின் தொகையும் அதிகம்) 

ஊழலின் பெருத்து வீங்கியிருக்கும் இந்திய அரசியல் கழுகுகள், முதலீடு செய்வதே அரசியலில் தான். அதற்கு வாழும் சாட்சி கலைஞர் கருணாநிதியும், மறைந்த தலைவி செல்வி ஜெயலலிதாவுமே போதும்.

வெறும் மஞ்சள் பையுடன்  வந்த கலைஞரும், அவரது வாரிசுகளின் சொத்துக்களும், உலகப் பணக்காரர் பட்டியலில் சேர்க்குமளவுக்கு ஊழலில் திளைத்துள்ளனர். இது தெரிந்தும் இவர்களுக்கே மக்கள் ஓட்டுபோடுவதில் உள்ளது, இவர்களின் அரசியல் சாணக்கியம்.!

இவர்களைப் போலவே ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒரு கருணாநிதி இருக்கின்றார். 
ஆக, அரசியில்வாதிகளிடமும், பெரும் பண முதலைக்களிடமுமே, இந்திய மக்களின் வரிப்பணங்கள் போய் சங்கமிக்கின்றன.! 

இந்த ஊழல் நிர்வாகங்கள் அழிந்து, நாட்டையும் மக்களையும் மட்டுமே நேசிக்கும் தலைமை உருவாகவேண்டும்.! 

இந்த அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்து, மக்களின் வாழ்வாதாரம் உயராமல், வல்லரசுக்கனவும், வெறும் கனவே.!

ஆனால்,இதில் உள்ள உண்மை இந்த ஊழல் வாழ்க்கையிலிருந்து மக்களும் மாறப்போவதில்லை (இந்த வாழ்க்கை அவர்களுக்கு பழகி விட்டது), அரசியல்வாதிகளும் திருந்தப்போவதில்லை.!

சரி, இந்திய இராணுவத்தின் தற்போதைய  ஆயுத பலம் என்ன? 

இன்றைய திகதியில், உலக இராணுவப்பலத்தில் இந்தியா நாலாமிடத்தில் உள்ளது. 
இந்த கணிப்பீட்டை எதை வைத்து கணிக்கின்றனர்.? 
இதில் பல காரணிகள் இருந்தபோதும், முக்கியமான மூன்று காரணங்கள் உள்ளன.! 

#ஒன்று பாதுகாப்பு படைகளின் எண்ணிக்கை 

#படையத்தளபாடங்கள் பற்றிய கணக்கீடு 

#ஒரு அரசு பாதுகாப்பு செலவுக்கென்று ஒதுக்கும் பணத்தின் அளவு 

இந்த கணிப்பீட்டில், இந்தியா நான்காமிடத்தில் இருக்கின்றது. இந்திய இராணுவத்தில் 15லட்சம் பேர் பாதுகாப்பு படையில் இருக்கின்றார்கள். 

#தாங்கி 6465,( ரசிய தயாரிப்பு T-55, மற்றும் இந்தியத்தயாரிப்பு அர்ஜுன் தாங்கி உட்பட)

#குண்டுவீச்சு விமானங்கள் 2086 உள்ளது( இதில் பழைய மிராச் தொடங்கி 200 Sukhoi S-30Mki உட்பட) 

#உலங்குவானூர்தி 646 ( பழைய போக்கு வரத்து உலங்கு வானூர்தி உட்பட)

#விமானம் தாங்கி கப்பல் 2

#நாசகாரி கப்பல் 10 அதற்கு அடுத்தராக தாக்குதல் கப்பல் 14 (சிறிய படகுகள் கணக்கில் இல்லை)

#அண்ணளவாக 100 அணுவாயுத  முனைகள் (உறுதிப்படுத்தப்படாத தகவல்), மற்றும் அக்கினி-5,பிரமோஸ், பிரித்துவி போன்ற ஏவுகணைகள் இந்திய அரசின் நம்பிக்கை ஆயுதங்கள்.

ஆனால், இதைவிட இன்னொரு மடங்கு அதிக ஆயுதங்கள் சீனாவிடம் உள்ளது. இதில் கவனிக்கவேண்டியது "இந்திய இராணுவத்திடம் ஐந்தாம் தலைமுறை ஆயுதங்கள் கையிருப்பு" இல்லை. 
அதை உற்பத்தி செய்யுமளவுக்கும் தனித்தகமை என்பதும், இந்தியாவிடமில்லை.! 

ஆனால், சீனாவோ ஐந்தாம் தலைமுறை ஆயுதங்களை தானே உருவாக்குகின்றது.(இதன் பாவனைத்திறனின் நம்பகம் சோதிக்கப்படவில்லை) 

இன்றளவும் இந்திய அரசு அதி நவீன ஆயுதங்களை, வளர்ந்த நாடுகளில் இருந்தே கொள்முதல் செய்கின்றது. உதாரணத்துக்கு போனவருடம்,பிரான்சுடன் 117 அதி நவீன ராஃபெல் (Rafale) போர் விமானங்கலும், அணுசக்தியில் இயங்ககும் அணுவாயுதங்களை காவிச்செல்லும் நீர்மூழ்கி கப்பலுக்கும், பல பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. 
 

இந்திய அரசு, ரசியாவுடன் இணைந்து Sukhoi S-30Mki தாக்குதல் விமானத்தை உருவாக்கிய போதும், அந்த "விமானங்களின் நம்பகத்தன்மை" இல்லாதமையே பிரான்சுடனான இந்த விமான ஒப்பந்தம்.! (இரசியாவுடன்,இஸ்ரேலுடன், பிரான்சுடன் எல்லோருடனும் கூட்டு தயாரிப்பில் தான் ஈடுபட்டுள்ளது.) 
 

தற்போது அமெரிக்க இராணுவம் தனது படையத்தளபாடங்களை பெருக்கியபோதும், ஐரோப்பிய நாடுகள் தங்களது படைத்துறையில், நவீன ஆயுதங்களை இணைக்கும் போதும், பழைய ஆயுதங்களை இந்தியா போன்ற நாடுகளுக்கு விற்றுவிடுவர். (உலகில் ஆயுத கொள்முதல் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது.) 

ஆக, எண்ணிக்கையில் அதிக ஆயுதங்களை இந்திய அரசு கொண்டிருந்தபோதும், அவைகளில் பெரும்பான்மையான ஆயுதங்கள் 30,40வருடங்கள் பழமையானவையே. 

இன்றைய நவீன உலகில் இந்தியா, பாக்கிஸ்த்தானுக்கு மட்டுமே படம் காட்ட முடியும். 

அதனால் தான் "சீனன் எவ்வளவு சீண்டினாலும் தெரியாதது போல வேறு பக்கம் பார்த்தபடி" உள்ளது இந்தியம். 
 

சினிமா மோகத்தில் உழலும் இந்திய மக்களுக்கு, இந்திய சுதந்திர தினத்தில் காட்டப்படும், இராணுவத்தின் படையத்தளபாடங்கள், மிகப்பெரும் ஆச்சரியம் என்பதில் சந்தேகமில்லை. 

சீனாவுடன், போரென்று உருவானால், இந்திய இராணுவத்தால், சீன இராணுவத்திற்கு முன்னாள் நிற்கவே  முடியாதென்பதே யதார்த்தம்.!
 
ஆக, இந்தியம் வல்லரசு கனவில் மிதப்பதை விட்டு, மக்களின் வாழ்வாதாரத்தையும், நீர் மேலாண்மையையும்  உயர்த்தினாளே போதும், இந்தியா தானாக வல்லரசாகிவிடும். ஏனெனில் மூன்றாம் உலகப்போர் குடிநீருக்காகவே நடக்குமென்பது போர் வல்லுனர்களின் கணிப்பு. 
 

அதை கருத்தில் கொண்டே சீன தனது இந்திய எல்லைகளை கைப்பற்ற முனைகின்றது.! 

தமிழ்நாட்டு தமிழர்களும் திராவிட ஆட்சிகளின் பிடியிலிருந்து வெளிவரவேண்டும். நிலத்தடி நீரை பாதுகாக்க போராடவேண்டும். அதற்கான அரசொன்றை உருவாக்க வேண்டும்.! 
தவறினால்.......???
உங்களுடன் துரோணர்.!!
Read More

January 26, 2017

மக்கள் அறியவேண்டிய புலனாய்வும் அடக்குமுறை அரசுகளும்.!
by admin - 0

மக்கள் அறியவேண்டிய புலனாய்வும்,

அடக்குமுறை அரசுகளும்.!

ஈழத்து துரோணர்.!!
**************************** இந்திய ஒன்றியத்தின் குடியரசு தினம் இன்று.! 
 

குடியரசு தின நிகழ்வுகளை தமிழ்நாட்டில், தமிழர்கள் புறக்கணித்துள்ளதாகவே செய்திகள் எட்டுகின்றன.! 

இது போலவே தான், இந்தியா முழுவதும் மக்களின் புறக்கணிப்பு விகிதம், அதிகமாக் காணப்படுகின்றது.

புறக்கணிப்புக்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு காரணம் இருந்த போதும், தமிழர்களின் புறக்கணிப்புக்கு, மூலகாரணம் ஜல்லிக்கட்டுக்கு எதிராக, தமிழக அரசு மேற்றுக்கொண்ட  அடக்குமுறையினால் ஏற்பட்ட, மனக்கொதிப்பே இந்த புறக்கணிப்பு.!
 
சிங்களக் காவல்துறையினால்70,80களில் ஈழத்தமிழர் சந்தித்த, அடக்குமுறைக்கு ஒத்ததான அடக்கு முறையே, தமிழ்நாட்டு காவல்துறையும் தனது மக்களில்  மேற்கொண்டது. இதில் மனவேதனை என்னவென்றால் தமிழர்களே, தமிழர்களை தாக்கி, அவர்களின் சொத்தை சூறையாடியது தான் மிகக்கொடுமை.! 

சரி, இந்த அடக்குமுறையை இன்னும் எவ்வளவு காலத்துக்கு எதிர்கொள்ளப் போகிண்றீர்கள்.? 

#ஒரு இனக்குழுமத்தின்மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடும் போது, அந்த அடக்குமுறைக்கு அடிபணிந்து போகவேண்டும்,(இதுவரை நீங்கள் போனது போல) 

#அல்லது ஆயுதவழியில் உங்களை,நீங்களே பாதுகாக்கவேண்டும்.(ஈழத்தமிழர் போராடியதுபோல்) 

#மூன்றாவது அறவழியில் அதிகாரத்தை கைப்பற்றி, அதை மக்களுக்கு சாதகமாக்குவது. இந்த மூன்று தேர்வுகளும் தான் உங்கள் முன் உள்ளது.!

உங்களது அகிம்சைவழி போராட்டங்களை, ஆளும் அரசு உதாசீனம் செய்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பெரும்பாலும் மக்கள் எழுச்சிகளை மக்களோடு மக்களாகவே வந்து சிதைப்பார்கள், அல்லது போனால் அடக்குமுறையை கையாழ்வர். 

மக்கள் மீது வன்முறையை உருவாக்கி, சொத்துக்களை சேதமாக்கி, உயிர் அச்சுறுத்தலையும் ஏற்படுத்துவார்கள். இதில் பெரும்பாலும் இலக்கு வைக்கப்படுவது சிறுவயதுடையோரும், பெண்களுமேயாகும்.

இது போராடும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தோற்றுவிக்கும். அதையே தான் அடக்குமுறை  அரசுகளும் விரும்புகின்றன. 

இது காலம் காலமாக, மக்கள்மீது அரசுகள் கையாளும் உளவியல் போர். மக்கள் இன்னுமொரு போராட்டத்தில் ஈடுபடக்கூடாதென்பதன் மறைமுக எச்சரிக்கையே, இந்த தாக்குதல்கள். 

இந்த இரண்டு அடக்கு முறைகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டால் மட்டுமே, உங்கள் கோரிக்கையை எட்ட முடியும்.! 

இதை கையாள்வதற்கு பொது மக்களுக்கு, புலனாய்வுப்பார்வை ஒன்று மிக மிக அவசியமானது. இதில் நீங்கள் தேர்ச்சி பெறவேண்டும்.! 

ஒரு மக்கள் எழுச்சியை அரசு சிதைப்பதற்கா, தனது எல்லா வளங்களையும் உபயோகிக்கும். அதில் சிறு, சிறு பகுதியாக பல வேலைத்திட்டங்கள் நடைபெறும். அதனை நீங்கள் இனம் காணவேண்டும்.(இது பற்றி இதற்கு  முன்னைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன்) 

சரி, இதை எப்படி எதிர்கொள்வது? 

இந்த உலகத்தில் அரசுகள் கூறும் மிகப்பெரிய பொய் சுதந்திரம்.! 

வளர்ந்த நாடுகளைப்பொறுத்தவரை, வெளிப்பார்வைக்கு எல்லோரும் சுதந்திரமாக இருப்பதுபோல் தோன்றினாலும், இங்கு யாருமே சுதந்திரமாக இல்லை.! 

ஒரு நாட்டில் இரண்டுவிதமான ஆட்சி நடக்கின்றது. ஒன்று மக்களுக்கு, வெளியில் கண்ணுக்கு தெரிந்து வாழும் வாழ்க்கை. எமக்கான சட்டங்களை இயற்றி அதனுள் நாம் வாழும் வாழ்கை. 

இன்னொன்று, எமது கண்ணுக்கு தெரியாது, எம்மை சுற்றி பின்னப்பட்ட உளவு கண்காணிப்பு. இதில் எந்த சட்டங்களும் அவர்களுக்கு இல்லை. அன்றைய நிகழ்வுக்கு அவர்கள் எடுக்கும் முடிவே அவர்களின் சட்டங்கள்.! 

எப்படி நாம் கண்காணிக்கப்படுகின்றோம்? 

வளர்ந்த நாடுகளின், உங்களது கண்,கை அடையாளங்கள் தொடங்கி, வங்கி அட்டை, செல்போன், கணனி, ஈமெயில், மருத்துவ அட்டை, சோசியல் மீடியா, கார் ,பைக், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவைகளின், ஒன்றை வைத்திருந்தாலும், நீங்கள் கண்காணிக்கப்படுகிண்றீர்கள்.! 

இதைவிட தேவைக்கேட்ப நேரடிக்கண்காணிப்பின் ஊடாகவும் மேலதிக தகவல்கள் திரட்டப்படும் அல்லது செயற்கைகோள் மூலமான தெழில்நுட்ப வளர்ச்சி, தனிமனித தேடல்களையும், இன்று அமெரிக்கா சாதகமாக்கியுள்ளது.

மேலைநாடுகளைப் பொறுத்தவரை,நோயின் நிமித்தம், அல்லது விபத்தின் நிமித்தம், ஒரு முறை வைத்திய சாலைக்கு சென்றுவந்தால் போதும், உங்கள் DNA தொடங்கி அணைத்து உடல்கூற்று தகவல்களை திரட்டிவிடுவர். 

ஒரு நாட்டில் இயங்கும் நிறுவங்கள்(அரசு,தனியார்) , வங்கி, வைத்தியசாலைகள் போன்றவைகளை மறைமுகமாக கையாள்வது அல்லது வழிநடத்துவது உளவுத்துறைகளே. 

உதாரணத்துக்கு வைத்திய சாலைகளில் சேமிக்கப்படும் தகவல்களை, வைத்தியசாலையின் "சேவரில் சேமித்து" வைத்திருப்பார்கள். அவர்களிடமிருந்து, தானாகவே அந்த தகவல்கள், அந்த நாட்டின் பொதுவான சேவருக்கு அனுப்பப்படும். 

அங்குவைத்து தான், வைத்திய தகவல்கள், காவல்துறையின் (குற்றங்கள் செய்திருப்பின்) தகவல்கள், வங்கித் தகவல்கள், மட்டுமல்லாது பயணச்சீட்டு எடுக்காது போன குற்றங்கள் கூட, பதிவு செய்யப்படும். 

இது போன்ற அனைத்து தகவல்களும் ஒன்றாக்கி, உங்களுக்கான மொத்த தகவல் படிபம் ஒன்றை உருவாக்கி அது  "சென்ரர் சேவர்" ஒன்றுக்கு அனுப்பப் படும். சரியாக சொல்வதானால் "ஒரு அணுஆயுதத்தை விடக் கூடிய பாதுகாப்பில்" உங்கள் தகவல்கள் சேமிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.! 

ஆக, இங்கு யாரும் சுதந்திரமாய் இல்லை என்பதே நிஜம்.!

இவைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு தலைமையையும், VIP களையும்,  நாமும் எமது கண்காணிப்பில் வைக்க வேண்டும். அவர்களின் "பேச்சின் காரணியை" சரியாக உள்வாங்கவேண்டும். எல்லா விடயங்களையும் தூர நோக்குடன் பார்க்கவேண்டும். 

உங்களுக்கு, "ஒருவரிடம் முழுமையான நம்பிக்கை வரும்வரை, அவரை சந்தேகிப்பது" தவறில்லை. 
முழு நம்பிக்கை வந்தபின் சந்தேகிப்பது தவறென்பது எனது வாதம். 
இந்தக் கருத்தை நான் உங்களிடம் திணிக்கவில்லை. எனது எண்ணத்தை பதிவு செய்தேன்.! 

ஆக, உங்களுக்கு தெளிந்த பார்வை ஒன்று வேண்டும். புலனாய்வு சம்பந்தமான பதிவுகளை தேடிப்படியுங்கள். அப்போது தான் எம்மை சுற்றி போடப்பட்டிருக்கும் மாயவலை கண்ணுக்கு தெரியும்.
 
வரும் காலங்களில் இதுபற்றி மேலும் தேடுவோம். ஒன்றாக பயணிப்போம். துன்பத்தை தந்தவனுக்கே, அதைத்  திருப்பி கொடுப்போம் .!
உங்களுடன் துரோணர்.!!
Read More

January 22, 2017

தமிழரின் ஜல்லிக்கட்டு போராட்டமும் இந்தியப் புலனாய்வு முறியடிப்பும்.! ஈழத்து துரோணர்.!
by admin - 0

தமிழரின் ஜல்லிக்கட்டு போராட்டமும் 
இந்தியப் புலனாய்வு முறியடிப்பும்.!

ஈழத்து துரோணர்.!!
*******************************ஒரு நாட்டின் தேசிய கொள்கை என்பது, நிரந்தரமாக வகுக்கப்பட்ட ஒன்று. கடைசிவரை அதன் பாதையிலேயே அவர்கள் பயணிப்பார்கள். "காலத்துக்கேற்ப அந்தப்பாதையில் வரும் மாற்றங்களுக்கு, சில மாறுதல்களை செய்து" தொடர்ந்து அதிலேயே பயணிப்பார்கள்.! 
 


அந்த மாறுதல்களை பெரும்பாலும், ராஜதந்திர ரீதியாக பொதுவெளியில் தீர்க்க முனைவார்கள். 
அப்படி முடியாத போது, தங்களின் புலனாய்வு ஏஜென்சிகள் ஊடாக, ரகசியமாக தீர்வு காணுவர் அல்லது அகற்றுவர்.

ஒரு நாட்டின் உளவமைப்பென்பது, அந்த நாட்டின் முதுகெலும்பு போன்றது. இவர்களின் முக்கிய பங்கு, அவர்களின் நாடு, தேசிய கொள்கையில் இடரில்லாது பயணிப்பதற்குறிய பாதையை உருவாக்குவது, அல்லது தடைகளை அகற்றுவது. 
 
தேசங்களின் ஆரம்பகாலப் புலனாய்வின் போது, தங்கள் தேச நலனுக்காக எதிராளியை விலை பேசிப்படியவைத்தனர். அந்த பேரம் பேசுதல்கள் படியாமல் போனால், அந்த இலக்கை, "தங்களில் பழிவாராதது போன்ற தோற்றத்தை உருவாக்கி" அழித்தனர்.     

இன்றைய நவீன காலகட்டத்தில் "வெளித்தெரியும் எதிர்ப்பு" இலக்கொன்றை, நேரடியாக அழிப்பது குறைந்து விட்டது. அதற்கு காரணம் தகவல் தொடர்பின் அபரிதமான வளர்ச்சி என்றால், அது மிகையாகாது. 
 
இப்போதைய நவீன யுகத்தில் இந்த இரகசிய நடவடிக்கைகள், மக்களிடம் உடனேயே, எதோ ஒருவிதத்தில் அம்பலப்படுத்துகின்றன.அதனால் தான் இப்போதைய புலனாய்வு நடவடிக்கைகளும், மாற்றம் பெற்றுவிட்டன. 
 

மேற்கூறிய இரண்டு நடவடிக்கையும், புலனாய்வு அமைப்புகளைப்பொறுத்தவரை, மிகவும் இலகுவான ஒன்று.!

ஆனால், இப்போது அரசுகளுக்கு ஏற்படும் தலைக்குனிவையும், எதிர்ப்பையும் அகற்றுவதற்கு அல்லது மடைமாற்றுவதற்கு,பல உத்திகளை உளவுத்துறைகள் கையாள்கின்றன. 
 
இந்த நடவடிக்கைகள் நேர, பண விரையம் மற்றும் நம்பகத்தன்மையற்ற, காரணிகள் இருந்த போதும், வேறு வழியில்லாது, இந்த உளவு நடவடிக்கையை உலகின் முன்னணி நாடுகள் கையாள்கின்றன.

அதில் முக்கியமான உத்தியொன்றை பார்ப்போம். 
இந்த உத்தியை இந்திய உளவுத்துறையினர் தான், அதிகம் பயன்படுத்துகின்றனர்.

அது என்ன நடவடிக்கை? 

அதாவது,ஓரளவு பிரபலியமான "தேச விசுவாசக் கொள்கையுடையவர்களை" இனம் கண்டு, அதில் "இளையோரைக்" கவரும், ஒரு சிலரை தெரிவு செய்வது.  

பின் அவர்ளை தொடர் கண்காணிப்பின் பின், அவர்களின் நம்பகத்தன்மையை  கணிப்பிட்டு, அவர்களுக்கேற்றாற் போல, அதில் சிலரை நேரடியாக தங்கள் தேவையைக் கூறி, தங்களுடன் பயணிக்க வைப்பது ஒரு முறையாகும். 

அடுத்தது, இன்னும் சிலரை அவர்களுடன் எந்தவித நேரடித்தொடர்பும் இல்லாது, அவர்களுக்கே தெரியாது அவர்களைக் கையாள்வது.!

இது உங்களுக்கு குழப்பமாக இருக்கும்? 

எப்படி ஒருவருடன் நேரடித் தெடர்பில்லாது அவரைக் கட்டுப்படுத்துவது? 
அது மிகவும் இலகுவானது.! 

ஆட்சியில் இருக்கும் அரசுக்கு, அரசியலில் பங்குபற்றாத தோற்றப்பாட்டுடன் கூடிய, மிக நெருங்கிய நட்பை கொண்டிருக்கும், சில VIP கள் இருப்பார்கள்.(உதாரணத்திற்கு ரஜனி மோடியின் நெருங்கிய நண்பர். அவருக்காக இவர் எதுவும் செய்வார்) 

இவர்கள் போன்றவர்களை, அரசியல் தலைமைகள், நண்பன் என்ற ரீதியில் அணுகி உதவி பெறுவார். இவர்களை நெறிப்படுத்தி, அந்த இரண்டாவது தெரிவினருக்கு, VIP கள் ஊடாக நட்புகள் கிடைக்கும் அல்லது நட்பு உருவாக்கப்படும்.! 

இவர்களுக்கு VIPகளின் உறவென்பது, அவர்களின் கனவு போன்றது. அவர்களின் சொற்கள், வேத வாக்காக அவர்களுக்கு இருக்கும். 
இவர்களின் அடி மனதில், அவர்களின் கருத்துக்கள், மாற்றமெதுவும் இல்லாது உள்வாங்கப்படும். 
அந்தக்கருத்து, இவர்களை அறியாது, இவர்களையே கட்டுப்படுத்தும்.! 

சரி, இப்போது மாணவர்களின் மெரீனா புரட்சிக்கு வருவோம். இந்தப் புரட்சியென்பது தமிழர் சார்ந்த தேசியத்தை அடையாளப்படுத்தியே வெளிக்கிளம்பியுள்ளது. சில நூறு பேராக இருந்திருந்தால் இன்று தடியடி மூலம் அடக்கப்பட்டிருக்கும். 

இன்று பல லட்சங்களைக் கடந்த மக்கள் வெள்ளம், சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுவிட்டது. இப்போது இந்த எழுச்சியை எப்படி இந்திய அரசு கையாளப்போகின்றது என்பதை உலக நாடுகள், உன்னிப்பாக அவதானிக்கின்றன. 

சரியாக சொல்வதனால் இதுபோன்ற மக்கள் போராட்டங்களை, இந்திய உளவுத்துறையினர் ஏலவே வெற்றிகரமாக கையாண்டுள்ளனர். 

அதற்கு, உதாரணம் கூடங்குள அணுவுலை மற்றும் காவிரிநதிநீர்ப் பிரச்னைக்கு எதிரான போராட்டங்கள், நீர்த்துப்போக வைக்கப்பட்டதில், இந்திய உளவுத்துறைகளின் கைகள், கடைசி எல்லைவரை நீண்டிருந்தது.! 

இந்தியம் என்பது, ஏலவே நான் கூறியது  போல "பல துணிகளால் தைக்கப்பட்ட ஆடையே" இந்திய ஒன்றியமாகும்.! 

இத்துப்போன அந்த ஆடை, எப்போது கிழியுமென்ற ஆபத்திலேயே இப்போது உள்ளது. மிகப்பழமை வாய்ந்த பல மாநிலங்களின் கூட்டாட்சியில் இருக்கும், இந்திய ஒன்றியத்திற்கு, இப்போதைய பெரும் பிரச்சனை "தமிழ் தேசியமும், அதைப்பேசுபவர்களுமே".! 

தமிழ் தேசிய வாதிகளை "கத்தியில் நடப்பது போல்"  மிகக் கவனமாக கையாள்கின்றது, இந்திய உளவுத்துறை.! 

தமிழ் தேசியவாதிகளை, வெளிப் பார்வைக்கு "கண்டும் காணாமலும் விடுதல்" முறையை கையாண்டு, மறைமுகமாக இவர்களுக்கு எதிரான பரப்புரைகளை, மிக கட்சிதமாக செய்கின்றன, இந்திய உளவுத்துறைகள். அதற்கு இந்திய ஊடகங்களும் துணை போகின்றன, அல்லது பணிய வைக்கப்பட்டுள்ளன.! 

தமிழ் தேசியம் மக்களிடத்தில் போய்ச் சென்றுவிடாதபடி, அதற்கு எதிரான கருத்துக்களை விதைத்து, தமிழ் தேசியத்திற்கு போராடுபவர்களின்," உளவுரணை சிதைத்து", அதிலிருந்து அவர்களை அகற்றும் உத்தியே இதுவாகும். இதைத் தான் எல்லா அரசுகளும் இப்போது கையாளுகின்றன. 

அதற்கு உதாரணம், இறுதி யுத்தம் நடந்த போது ஐரோப்பிய நாடுகளில், எமது மக்கள் லட்சக்கணக்கில் வீதியில் நின்று போராடிய போதும், திட்டமிட்டு சர்வதேச ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து எமது இனப்படுகொலையை மறைத்ததை, யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்? என்றே நம்புகின்றேன். அதன் பின்னால் சர்வதேச உளவு நிறுவனங்களே இருந்தன என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

இந்த "தமிழ் தேசிய" முறியடிப்பு புலனாய்வுக்கு, உண்மையான தேச அபிமானிகளும், பலியாகிவிடுவதுதான், இவர்களது புலனாய்வின் வெற்றி.!  

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து மாணவர்கள், தமிழர் என்ற அடையாளத்துடனும், இறுமாப்புடனும் எழுச்சிகொண்ட மாணவர் போராட்டம், இன்று மடைமாற்றம் செய்யப்படுகின்றனவோ? 
என்ற அச்சம் எழுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.? 

இந்த போராட்டத்தை ஆரம்பிக்கும் போது அரசியல்வாதிகளையும், நடிகர்களையும் தடை செய்து, தமிழ் இளையோர் என்ற, அடையாளமே முன் நின்றது. அதுவரை எல்லாம் சரியாகவே நகர்ந்தது.! 

இப்போது மெது, மெதுவாக உள்நுழைந்த, தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், மற்றும் இரண்டாம் கட்ட நாடிகளின் கைகளின், மாணவர் அறியாமலே தமிழர்  போராட்டம் கைமாறிச்சென்று விட்டது.! 

இப்போது இந்த நடிகர்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதை கவனியுங்கள்.! 

இப்போது மக்கள் மனங்களில் கொஞ்சம் கொஞ்சமாக, "இவர்கள் தான்" இந்த எழுச்சியின் நாயகர்கள் என்ற தோற்றப்பாட்டை உருவாக்குவார்கள், அல்லது உருவாக்கி விட்டார்கள்.! 

இவர்கள் யாரென்று பார்த்தால் தமிழனென்று வெளியில் கூறி ,இந்திய தேசத்தின் செல்லப்பிள்ளைகளாகவே இருந்தவர்கள்/இருப்பவர்கள்.!

இப்போது மெது, மெதுவாக தமிழ் தேசியம்/தமிழர் அடையாளம் மறைக்கப்பட்டு, இந்தியம் திணிக்கப்படும்.! 

இந்த நிலை தொடருமானால்? நாளடைவில் இது இந்திய ஒருமைப்பாட்டு, போராட்டமாக மாற்றம் பெரும்.! 

இது எனக்கு, தமிழர் இன்னும்  "சினிமா கதாநாயகர்களை, நிஜக்கதாநாயகர்கள்" என்று நம்பும்,  மாயையில் அல்லது உளவியல் நோயிலிருந்து மீளவில்லையோ? என்ற எண்ணத்தை தோற்றுவிக்கின்றது.!  

மெரீனாவில் தலைவரின் படத்துடன் ஆரம்பித்த தமிழர் போராட்டமும், தலைவரின் "தமிழ்த்தேசிய சித்தாந்தமும்" இந்திய தேசத்துக்கு ரசிப்புடையதாக நிச்சையம் இருக்கப் போவதில்லை.! 

அந்த தமிழ் உணர்வை அகற்றவே, அவர்கள் மறைமுகமாகப் போராடுவார்கள்.! 

இதில் ஒரு உண்மையை,இப்போது இந்தியம் உணர்ந்திருக்கும். இந்த போராட்டத்தில் "இந்தியம், திராவிடம்" என்ற சொல்லாடல் மறைந்து, "நாங்கள் தமிழர்" என்ற கோசம் வானை எட்டியுள்ளது. இதுவே தமிழர் தேசத்துக்கான முதல்படி.! 

மாணவர்கள் விழிப்படைய வேண்டிய நேரமிது.! 
கபட நோக்கம் கொண்டவர்களை அகற்றுங்கள்.!

உங்கள் ஆரம்பப்புள்ளி சரியானது. அதன்படியே பயணியுங்கள். அல்லது போனால் உங்கள் போராட்டம் "விழழுக்கு இறைத்த நீர் போல்" ஆகிவிடும்.! 

இப்போது தமிழருக்கு இருக்கும் ஒரே ஒரு வழி "தமிழ் தேசியம்" மட்டுமே, என்பது எனது அனுபவத்தின் வெளிப்பாடு.! 

தமிழ் தேசியம் என்ற தெடர்ச்சியில் பயணித்தால் மட்டுமே, தமிழன் மீட்சி பெறுவான். அல்லது போனால் நாம் அழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது.! 
ஏக்கங்களுடன் துரோணர்.!
Read More

January 18, 2017

ஜல்லிக்கட்டு அல்லது ஏறுதழுவுதல். தமிழரின் எழுச்சி.!!
by admin - 0


ஏறுதழுவுதல் தமிழரின் பாரம்பரியத்தின் வெளிப்பாடு. அது ஒரு வீர விளையாட்டு மட்டுமல்ல, எமது ஆரோக்கிய வாழ்வாதாரத்தின் சுழற்சியும் அதில் புதைந்துள்ளது. 
அதை மீட்டெடுப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையும் கூட.! 
இதைத் தமிழன் மீட்பதற்கும், பலம் கொண்டு எழுவதற்கும், தமிழராய் இணைவது மட்டுமே, ஒரே வழி.! 50 வருடங்களாக திராவிடர்களாகவே வாழ்ந்து, தமிழர் எந்த ஆதாயத்தையும் பெறவில்லை.! 



திராவிடமும், அதைச் சுற்றி வட்டமிடும் பணமுதலைகளும், பெருத்து கொளுத்தனவே அன்றி, தமிழர் இற்றைவரை ஒருபிடி சோற்றுக்கு போராடவேண்டியே உள்ளது.!
அந்த நிலை மாறவேண்டும்.! திராவிடனாய் உருமாறியுள்ள தமிழனும், தன்னிலை உணர்ந்து தமிழனாகவேண்டும்.!
இதுவரை திராவிட அரசுகள் தமிழனை, சாதிகளாகவும், சமயங்களாகவும் திட்டமிட்டு பிரித்தாண்டனர்/ஆளுகின்றனர்.! 
இன்று தமிழன் சிதைந்தழிந்து போகும் நிலையிலேயே இருக்கின்றான்.! 
இதிலிருந்து மீள்வதற்கு, இப்போது… தமிழருக்கு இருக்கும் ஒரே தெரிவு, எல்லோரும் “தமிழர் தேசியம்” என்ற ஒற்றைக்குடையின் கீழ் அணிதிரள்வதே ஒரே வழி.! 
இனியும் தமிழர்கள் திராவிடத்தின் பசப்பு வார்த்தைகளை நம்பி, பின் செல்வார்களானார், தமிழரின் இருப்பு அகற்றப்பட்டு, கலப்பு மரபாக்க தமிழ்நாடு உருமாற்றம் பெறும்.! 
இன்றைய மாணவர்களின் எழுச்சி, தமிழர் என்பதன் அடையாளத்துடன் பொங்கி எழுந்துள்ளது. இதை அணைப்பதற்கு (முத்துக்குமாரின் மரணத்தின் போது, மாணவர்களின் எழுச்சியை, திமுக அகற்றியது போல்) திராவிடக் கட்சிகள் முனையும். 
அது முடியாவிட்டால் உங்களுடன் சேர்வது போல் சேர்ந்து, தங்கள் ஊடக வலிமையால் தங்களை முன்னிறுத்தி தமிழனின் உணர்வுகளை, ஓட்டாக மாற்ற முயற்சிப்பார்கள்.! 
முன்னர் போல், அவர்களின் சதிகளுக்கு மாணவர்கள் ஆளாகக்கூடாது.! 
சாதி, மதம் மற்றும் பால் வேறுபாடு கடந்து, எப்படி தமிழராக ஒன்றினைந்தீர்களோ, அங்கேயே உங்கள் வெற்றி ஆரம்பித்து விட்டது.! 
திராவிடக் கட்சிகளின் சூழ்ச்சிவலைகளை அறுத்து, உங்கள் உரிமையை நிலை நாட்டுங்கள்.! 
நாங்களும், என்றும் உங்களோடு பயணிப்போம்.! 
“எங்கள் வரலாறுகள், உங்களை வழிநடத்தும்”.! 
இன்று நீங்கள்,எங்களுக்கு விதைத்த நம்பிக்கையை, அழிந்துபோக விடாதீர்கள்.!
உங்களில் ஒருவன்

-ஈழத்து துரோணர்
Read More

January 14, 2017

இயக்குனர் கௌதமன் மீதான தாக்குதல் இந்திய அரசு தமிழருக்கு விட்ட எச்சரிக்கை
by admin - 0

இயக்குனர் கௌதமன் மீதான தாக்குதல் 

இந்திய அரசு தமிழருக்கு விட்ட எச்சரிக்கை.!
 
ஏறுதழுவுதலை அனுமதிக்கக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் இயக்குனர் கௌதமன் மீது தமிழக போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். 

1970களில் தமிழர் மீதான அடக்குமுறையை சிங்கள தேசம் இப்படித்தான் கையாண்டது. அதுவே நாளடைவில் ஆயுதப்போராட்டமாக பரிமாணம் பெற்றது. 

இன்று இந்திய அரசும் அதே தவரையே செய்கின்றது. இந்த அடக்குமுறை தொடர்ந்தாள், சிங்கள அரசு என்ன பாடத்தை,  தமிழரிடமிருந்து கற்றதோ அதே பாடத்தை இந்திய அரசும் கற்க வேண்டி வரும் என்பதை மறுக்க முடியாது.! 

இந்திய அரசு ஒரே மொழி ஒரே மதம் என்ற அடிப்படை கொள்கையை வகுத்தே இன்று காய்கள் நகர்த்தப்படுகின்றது. இதைத் தமிழர்கள் நன்கு உணர வேண்டும்.! 

இந்திய அரசின் கொள்கைக்கு எதிராக இருக்கும் தேசிய இனங்களின் பண்பாடுகளை முதலில் அழித்து, பின்னர் மொழியை திணிக்க ஆரம்பிப்பார்கள்.! 

அதன் ஆரம்பம் தான் ஜல்லிக்கட்டு மீதான தடை.! இது தொடரும்.! 
 
தமிழருக்கு வரலாற்றுக்கடமை அழைக்கின்றது. நீங்கள் ஒன்றாக ஒற்றுமையாக இல்லாது போனால், நீங்கள் இருக்கும் தடம் காணாமல் போகும். தமிழர் மற்றைய இனங்களில் இருந்து மாறுபட்டவன். 

இந்த தாக்குதல் எல்லோருக்குள்ளும் ஒரு கோபத்தை உண்டுபண்ணும் என்பதில் மாற்றம் இல்லை. இது மீண்டும் தொடர்ந்தால், இந்த கோபத்தின் நெருப்பு ஹிந்தியை பெரும் தேசத்தையே சுட்டெரிக்கும். 

இன்று ஒரு கொதி நிலையில், இவர்களுடன் சேர்வதற்கு பல "சேகுவராக்கள்" காத்திருக்கின்றனர். 

தமிழர்களை வஞ்சகத்தால் மட்டுமே வீழ்த்த முடியும். 
லத்திகள் கொண்டு அடக்க நினைத்தால், அவர்களே அதில் அழிவது திண்ணம்.! 

தமிழன் அடங்கிப்போகும் ஒரு இனம் அல்ல. அடக்கி ஆண்ட இனம்.!
சினத்துடன் துரோணர்.!
Read More