Latest News
Showing posts with label நிகழ்வு. Show all posts
Showing posts with label நிகழ்வு. Show all posts

October 06, 2018

பிரபல தமிழ் சட்டவாளர் திருமதி M வாசுகி அவர்களுக்கு மலேசியாவில் விருது வழங்கி கொளரவிப்பு!
by admin - 0

பிரபல தமிழ் சட்டவாளர் திருமதி M வாசுகி அவர்களுக்கு மலேசியாவில் விருது வழங்கி கொளரவிப்பு! 



லண்டனில் சேவையாற்றிவரும் தமிழ் சட்டத்தரணியாகிய திருமதி M வாசுகி அவர்களுக்கு மலேசியாவில் 'நகைச்சுவை கலைநாயகி' விருது வழங்கி கொளரவிக்கப்பட்டுள்ளது.மலேசியாவில் நடைபெற்ற ஆசிய சிலம்பன் சுற்றுதொடர் நிகழ்வில் இந்த சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.மலேசியாவை சேர்ந்த MUHIBAH SILAMBAM கழகம் நடத்திய சிலம்பாட்டக்கலைக்கான முதலாவது ஆசிய சுற்றுத்தொடர் கடந்த செப்டெம்பர் மாதம் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது. இலங்கை இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள் பங்குபற்றிய இத்தொடரின் சிறப்பு விருந்தினராக லண்டனைச் சேர்ந்த சட்டவாளர் திருமதி வாசுகி அழைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையிலேயே குறித்த கழகத்தினால் “லண்டன் மாநகரின் சிறந்த பெண் நகைச்சுவையாளர்” என திருமதி வாசுகி அவர்கள் பாராட்டப்பட்டதுடன் இந்த “நகைச்சுவை கலைநாயகி” விருதும் வழங்கி கொளரவிக்கப்பட்டுள்ளார்.ஈழத்தமிழர்கள் பல்துறைகளிலும் சர்வதேச ரீதியில் சிறந்து விளங்குவதற்கு இது நல்ல உதாரணமாகும்.







-ஈழம் ரஞ்சன்-
Read More

February 19, 2018

சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து, "வேரும் விழுதும் -2018" கலைமாலை விழா..! (அறிவித்தல்)
by admin - 0

சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து, "வேரும் விழுதும் -2018" கலைமாலை  விழா..! (அறிவித்தல்)


சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம், "சுவிஸ் வாழ் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து", எதிர்வரும் 17.03.2018 அன்று சனிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு, “வேரும் விழுதும் 2018” கலைமாலை விழா (ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்) மற்றும் "விழா மலர்" வெளியீட்டு நிகழ்வானது சூரிச் வரசித்தி மஹால் மண்டபத்தில் (Varasithy Mahall, Hütenwiesen str-6, 8101 Dallikön -ZH) நடைபெறவுள்ளது. 

இளையோர்களின் "ஹிப் ஹாப்" நடனங்கள், நாட்டியங்கள், "சுவிஸ்ராகம்" கரோக்கி இசைக்குழுவின் இன்னிசை நிகழ்வு, பட்டிமன்றம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள்.. "ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக" நடைபெற உள்ளது. 


அத்துடன் இலங்கை மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொள்ளும், முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் "வேரும் விழுதும்-2018 விழாமலர்" வெளியீடும் நடைபெற உள்ளது.  

காலம் & நேரம்:- 17.03.2018 அன்று சனிக்கிழமை மதியம் இரண்டு (14.00) மணிக்கு , 

இடம்:- சூரிச் வரசித்தி மஹால் மண்டபத்தில் (Varasithy Mahall, Hütenwiesen str-6, 8101 Dallikön -ZH

"அனைவரும் வருக, ஆதரவு தருக" (அனுமதி இலவசம்)
Read More

December 12, 2017

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் "உலக மனித உரிமை நாளான மார்கழி 10, 2017" நடாத்தப்பட்ட "தமிழர்களுக்கான மனித உரிமை மாநாடு”
by admin - 0

“நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் "உலக மனித உரிமை நாளான மார்கழி 10, 2017" நடாத்தப்பட்ட ......
"தமிழர்களுக்கான மனித உரிமை மாநாடு”


இம் மாநாடு Wembley International Hotel, Empire Way, Wembley, Middlesex, HA9 0NH ல், மார்கழி 10,  2017, காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை நடை பெற்றது.




தலை சிறந்த அறிவாளிகளை உள்ளடக்கி எம் இனத்துக்கு நடந்த இனப்படுகொலையை இவ்உலகுக்கு எடுத்துக்காட்டவும், காணி அபகரிப்பு, இரகசிய சித்திரைவதை முகாம், அரசியல் கைதிகள் விவகாரம் என்று பல விடயங்களை உள்ளடக்கிய கருத்தரங்கும், விழிப்புணர்வுகள் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பெராசிரியர் சொர்னராஜ் அவர்கள் ஏன் இந்த மனித உரிமை நாளை நாங்கள் உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும், எம் இனத்திற்கு எதிராக நடாத்தப்பட்ட மற்றும் நடாத்தப்பட்டுக் கொண்டுருக்கும்  இனப்படுகொலைக்கான நீதியை எப்படி வென்றெடுத்தல், எப்படி இலங்கையை உலக குற்றவியல்  நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்பன பற்றி எடுத்துக் கூறினார்.
  
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரக்குமார் அவர்கள் எப்படியான வேலைப்பாட்டை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செய்து வருகிறது என்பதை கச்சிதமாக எடுத்துரைத்தார், முக்கியமாக தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைக்கு எதிராக பாவிக்கப்படும் 6ம் திருத்தச் சட்டத்தை இலங்கையில் இல்லாமல்  ஒழிக்க வேண்டும் என்பதற்காக 1,705 சட்டத்தரனிகளின் கையொப்பம் இட்ட பத்திரத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு, மனித உரிமை தினமாகிய மார்கழி 10, 2017 அன்று அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தார் அத்துடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பல முக்கிய செயற்பாட்டுகளையும் எடுத்துரைத்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் திரு. மாணிக்கவாசகர், செல்வி. அம்பிகை சீவரடணம் Director of International Centre for Prevention and Prosecution of Genocide (ICPPG), மற்றும் அங்கு கருத்துத் தெருவித்த தேசிய தமிழ் மன்னன், செல்வி அங்கயற்கன்னி, திரு.ராஜன் போன்றவர்கள் தாயகத்தில் எமது மாவீரர் குடும்பங்கள், முன்னால் போராளிகள், தமிழ் மக்கள் படும் இன்னல்கள்களை எடுத்துரைத்தார்கள்.

தமிழர்களின் தோழமை மையமான (Tamil Solidarity)ல் இருந்து திரு.சேனன் அவர்கள் எவ்விதத்தில் எமது தாயக நிலங்கள் சூறையாடப்பட்டுகின்றன என்பதனையும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டும் மற்றும் சமூக நலத்தின் பிரதி அமைச்சர் திரு. சொ. யோகலிங்கம் அவர்கள் எப்படியாக இலங்கை அரசாங்கம் உலக நாடுகளை ஏமாத்தி தம்வசம் எடுக்கின்றனர் என்பதனையும் அதற்கு உலகெங்கம் பரந்து வாழும் தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதனை எடுத்துக் கூறினார். 

இங்கு முக்கியமாக வேற்று நாட்டவரும் வருகைதந்து தமக்கு நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றி விளக்கினார்கள் குறிப்பாக "Nation Without States" ல் இருந்து Clr. Graham Williams, Ms. Doris Jhones, Mr.Thambani and many others அத்துடன் பல லண்டன்வாழ் பொது மக்களும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்யபாட்டார்களும் கலந்து கொண்டிருந்தனர். 

இங்கு புத்தரின் பெயரால் (in the name of Buddha film), எம்மக்களுக்கு நடந்த இனப்படுகொலையை சித்தரிக்கும் திரைப்படம் online ல் www.tecgtheater.com முகவரியில் பார்க்கும் படியும் உங்கள் உற்றார், உறவினர், நன்பர்களை பார்வையிட வைக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. 










இன் நிகள்வை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளும் தொகையான கொடுரங்கள் இனஅழிப்புக் கெதிரான செயற்பாடுகளுக்கான  அமைச்சர் திரு. மணிவண்ணன் அவர்கள் நடத்தியிருந்தார்,

அவருக்கு உறுதுணையாக மாவீரர் முன்னைநாள் போராளிகள் குடும்ப நலம் பேணல் அமைச்சின் ஜக்கிய இராட்சியத்தின் பிரதிநிதி திரு. நிமலன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டும் மற்றும் சமூக நலத்தின் பிரதி அமைச்சர் திரு. யோகலிங்கம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்கள் திரு.குஜியந்தன், செல்வி.சோபனா, திரு.சிவகாந்தன் வழங்கியிருந்தனர். 










இன் நிகள்வு உறுதிமோழி எடுத்து தமிழரின் தரக மந்திரமான "தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்" கூறி முடிவு பெற்றது. 

“Tamil’s Human Rights Conference on the World Human Rights Day 2017 by TGTE (UK)”

Transnational Government of Tamil Eelam (UK) held a Tamil’s Human Rights Conference on the "World Human Rights Day" of December 10, 2017.

To expose the ongoing genocide, enforced disappearance, torture camps, political prisoners, Tamil’s lands been invaded by Sri Lanka forces and many more topics were discussed and debated at the conference.

The conference was addressed by TGTE Prime Minister Hon. Visvanathan Rudrakumar on TGTE activities and specially on this human rights day (10/12/2017), we handed over 1,705 solicitor signatures to the UN to demand the abolition of Sri Lanka"s 6th Amendment which give no freedom of expression by Tamils in Sri Lanka.

Forign Affairs Minister Manikavasakar talked about the current political situation in Sri Lanka,  Prof. Sornaraj  talked about the what is the road map to achive the justice, peace and permanent solution for our people.

Miss. Ambihai Sivaratnam (ICPPG) talked about importance of collecting evidence to submit to UNHRC, Miss. Ankajakkanni, Mr.Thesiyath Thamil Mannan and Mr. Rajan talked about crises faced by post war victims and political Prisoners.










Deputy Minister of Sports and Community Health Mr. Sockalingam Yogalingam talked about how cunningly Sri Lankan Government hoodwink the world and UN and what the diaspora need to do.

Welfare of families of Martyrs and former Cadres UK country coordinator Mr. Nimalan Seevaratnam talked about the need to expose the Sri Lankan Government speacilly by the film "in the name of buddha" how our people were genocide and urge everyone to watch the film online at www.tecgtheater.com










Also the event was addressed by human rights activist Clr. Graham Williamson (Executive member of National Liberal Party (NLP) & Nations without States), Ms. Doris Jhones (Founder of Saba & Sarawak and NwS) and  Mr.Thambani (Matabilan activist).

The event was coordinated by Human Rights and Action against Mass atrocities and Genocide Minister Mr. Pathmanaban Manivannan and TGTE Volunteers Mr. Kujijanthan, Miss. Shopana and Mr.Sivakanthan.

Event was held at place :
Wembley International Hotel
Empire Way, Wembley, Middlesex, HA9 ONH
Date : 10 December 2017
Time : 9.00 AM - 8 PM

Organised by : 
Human Rights and Action Against Mass Atrocities and Genocide Ministry
Transnational Government of Tamil Eelam (TGTE) UK
www.tgte.org


adminuk@tgte.orghttp://feeds.feedburner.com/vivasaayi/QMzm

Read More

November 28, 2017

பிரித்தானியா ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள வரலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள்
by admin - 0

பிரித்தானியா ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள வரலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் ஜெயந்தன் படையணியின் சிறப்புத் தளபதி திரு ஜெயாத்தன் அவர்கள் பிரதான சுடரினை ஏற்றிவைத்தார்.







Read More

November 03, 2017

அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 57 ஆவது சைவப்புலவர் பட்டமளிப்பு விழாவும் சைவ மாநாடும்
by admin - 0

அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 57 ஆவது சைவப்புலவர் பட்டமளிப்பு விழாவும் சைவ மாநாடும் 04.11.2017 சனிக்கிழமை யாழ்ப்பாணம் வண்ணை நாவலர் மகாவித்தியாலயத்தில் சைவப்புலவர் சித்தாந்தபண்டிதர் நித்திய தசீதரன் அரங்கில்  சைவப்புலவர் சங்கத் தலைவர் சைவப்புலவர் சித்தாந்த சிரோமணி மு.திருஞானசம்பந்தபிள்ளை தலைமையில் இடம்பெறவுள்ளது. நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருமுன்னிலையில் நடைபெறும் இந் நிகழ்விற்க்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணப்பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை தலைவர் பேராசிரியர் மா.வேதநாதன்  கலந்து கொள்ளவுள்ளார்.

சிறப்பு  விருந்தினர்களாக சாவகச்சேரி சோலைஅம்மன் ஆலய பிரதம குரு அகில இலங்கை சைவக்குருமார் அர்ச்சகர் சபை தலைவர் சிவஸ்ரீ க.கிருபானந்தக்குருக்கள் , நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சதா மகாலிங்க சிவக்குருக்கள் , யாழ்ப்பாணம் நந்தலாலா இரும்பகம் உரிமையாளர் லயன் திருநாவுக்கரசு சீவரத்தினம் , யாழ்ப்பாணம் கே.எஸ்.ரி. ரெக்ஸ் நிறுவன உரிமையாளர் சுப்பிரமணியம் சிற்றம்பலம் , இணுவில் ஸ்ரீ பரராஜப்பிள்ளையார் கோவில் அறநெறிப்பாடசாலை ஆசிரியர் செல்வி சு.மீனாட்சி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் வண்ணை சாந்தையர் மடம் கற்ப்பகப் பிள்ளையார் கோவில் வழிபாட்டின்  பின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சிலைக்கு மாலை அணிதல் உடன் நிகழ்வு ஆரம்பமாகும். 
நந்திக் கொடி ஏற்றலில் கொடிக்கவி பாடலினை சைவப்புலவர் சண்முகவடிவு தில்லைமணி அவர்களும் திருமுறையினை சைவப்புலவர் கவிதா கதிரமலை அவர்களும் பாடுவார்கள். வரவேற்ப்புரையினை ஓய்வுநிலைப் பொறியிலாளர் சைவப்புலவர் வ.தயாபரசிவம் ஆசியுரையினை சிவஸ்ரீ க.கிருபானந்தக்குருக்கள் அருளுரையினை ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் தலைமையுரையினை சைவப்புலவர் சங்கத் தலைவர் சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை முதன்மை விருந்தினர் உரையினை பேராசிரியர் மா.நேதநாதன் ஆகியோர் வழங்குவார்கள்.

காலை 10.45 மணிக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெறும் கௌரவிப்பினை அகில இலங்கை சைவப்புலவர் சங்கப் பொருளாளர் சைவப்புலவர் ச.முகுந்தன் நெறிப்படுத்துவார். கௌரப்பட்டங்களாக சைவாகமபூஷணம் பட்டத்தினை சிவஸ்ரீ க.கிருபானந்தக்குருக்கள் , சிவஸ்ரீ சதா மாகாலிங்கசிவக்குருக்கள் ஆகியோர் பெறவுள்ளார்கள்.  இவர்களுக்கான அறிமுகஉரையினை அகில இலங்கை சைவப்புலவர் சங்க பிரச்சார அமைச்சர் சைவப்புலவர் கு.சுமுகலிங்கம் , உதவித் தேர்வுச் செயலாளர் சைவப்புலவர் கா.கமலநாதன் ஆகியோர் வழங்குவார்கள்.

சைவப்புரவலர் பட்டத்தினை லயன் திருநாவுக்கரசு சீவரத்தினம் , சுப்பிரமணியம் சிற்றம்பலம் ஆகியோர் பெறுகின்றார்கள். இவர்களுக்கான அறிமுக உரையினை உதவிச் செயலாளர் சைவப்புலவர் ந.புகன்ஸ்ரீந்திரன் , அச்சுவேலி தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளரும் சங்க செயற்க்குழு உறுப்பினருமாகிய சைவப்புலவர் சி.நந்தகுமார் ஆகியோர் வழங்குவார்கள். கௌவிப்பு நிகழ்வில் கௌரவத்தினை  இணுவில் ஸ்ரீ பரராஜப்பிள்ளையார் கோவில் அறநெறிப்பாடசாலை ஆசிரியர் செல்வி மீனாட்சி பெறுகின்றார். அறிமுக உரையினை சைவப்புலவர் ஆனந்தி ஜெயரட்ணம் , சைவப்புலவர் உருத்திராதேவி பகீரதன் ஆகியோர் வழங்குவார்கள்.

இளஞ்சைவப்புலவர் பட்டமளிப்பினை அகில இலங்கை சைவப்புலவர் சங்க தேர்வுச் செயலாளர் சைவப்புலவர் செ.கந்தசத்தியதாசன் நெறிப்படுத்துவார். திருமதி ஜயமோகனா சிவஞானசுந்தரம் - கொழும்பு , முருகன் சேமகரன் - அவுஸ்ரேலியா , செல்வம் கேமநாதன் - பொலநறுவை  , திருமதி கமலாதேவி சபாரத்தினம் - அரியாலை , நாகநாதன் அகிலன்  - கீரி மன்னார் , செல்வி நித்தியா இராமலிங்கம் - பொலநறுவை, செல்லத்தம்பி சதீஸ்குமார்  - பொலநறுவை , திருமதி சுவாசினி ரவேந்திரன் - பொலனறுவை  , செல்வி சின்னையா  வதனி - பன்னவெட்டுவான் மன்னார் , திருமதி ருக்மணிதேவி  சிவபாலன்  - கொழும்பு 4 , கந்தசாமி கௌசிகன் - தேத்தாத்தீவு மட்டக்களப்பு , தம்பிஜயா மனோஜ்குமார் - இணுவில் , செல்வி அர்ச்சனா - -முந்தல் புத்தளம் , செல்வி பஞ்சலிங்கம் குயிலினி  - பூநகரி , செல்வி லோஜினி முத்துக்குமார் - பொலநறுவை , செல்வி பஞ்சலிங்கம் அநிதா  - பூநகரி , திருமதி நிர்மலா தனசிங்கநாதன் - கொழும்பு 6 , செல்வி மந்தாகினி பாலச்சந்திரன் - மல்லாகம் , செல்வி சின்னராசா சனுஷ்யா - அளவெட்டி , திருமதி நரேந்திரதிலகை நடராஜா - கொழும்பு 6 , செல்வி வேல்நாயகம் லவனியா - பொலநறுவை , குணசிங்கம் கந்தபாலன் கோப்பாய் ஆகியோர் இளஞ்சைவப்புலவர் பட்டத்தினை பெற்றுக்கொள்ளவுள்ளார்கள்.

அமர்வு 2 காலை 11.30 மணிக்கு சைவநாதம் 7 மலர் வெளியீடு அகில இலங்கை சைவப்புலவர் சங்க உபதலைவர் சைவப்புலவர் கலாபூஷணம் அ.பரசுராமன் தலைமையில் இடம்பெறவுள்ளது. மலருக்கான வெளியீட்டுரையினை யாழ்ப்பாணப்பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் ப.கோபாலகிருஸ்ணஐயர் வழங்குவார். முதற்ப்பிரதியினை நந்தலாலா இரும்பக உரிமையாளர் லயன் திருநாவுக்கரசு சீவரத்தினம் பெற்றுக்கொள்வார். 

அமர்வு 3 வலிகாமம் வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் சைவப்புலவர் சு.தேவமனோகரன் தலைமையில் இடம்பெறவுள்ளது. கலை நிகழ்வுகளாக புத்தூர் கன்னியர் வைரவர் அறநெறிப்பாடசாலை மாணவி செல்வி பானுஜா தில்லைமணி அவர்களின் கதாப்பிரசங்கம் நிகழ்வு வலயமட்டப் போட்டியில் முதலிடம் பெற்ற யா ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய மாணவர்களின் புராணபடணம் வடமாகாணப் போட்டியில் முதலாமிடத்தினைப்  பெற்ற அளவெட்டி அருணோதயாக்கல்லூரி மாணவர்களின் பண்ணிசை ஆகியன இடம்பெறும் நன்றியுரையினை அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் சைவப்புலவர் த.குமரன் வழங்குவார்.
Read More

June 22, 2016

10.07.2016இல் சுவிஸில் “புளொட்” அமைப்பின் 27ஆவது “வீரமக்கள் தினம்”..!
by admin - 0

புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் 27ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் எதிர்வரும் 10.07.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 08.00 மணிவரை நடைபெறவுள்ளது. 27ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகளாக காலை 11.00 மணியளவில் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து…..
**விநோதவுடைப் போட்டி
**பொது அறிவுப் போட்டி
**பாட்டுக்கு அபிநய ஆட்டம்
**நடன நாட்டிய நிகழ்வுகள்
**இன்னிசை நிகழ்வுகள்
**பரிசளிப்பு நிகழ்வு
**தலைமை உரை
**பிரதம விருந்தினர்கள் உரை
**நன்றி நவிலல்.. போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

"வீரமக்கள் தின" விழா நடைபெறும் இடம்:

வரசித்தி மஹால்.
Hüttenwiesen Strasse - 6
8108 Dallikon Zurich .

தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் "வீரமக்கள் தினம்" வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.


 "விடுதலைக்கு உரம் சேர்ப்போம், வீணர்களை புறம் சேர்ப்போம்"

தொடர்புகளுக்கு:...
077.959 10 10, 076.583 84 10, 078. 916 71 11, 078. 935 46 92, 077. 948 52 14

-- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) – சுவிஸ் கிளை --
 
*******************************************            

"தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும், சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிப் பரீட்சைகள்"..!!

தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும் சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிப் பரீட்சைகள் soodring -34B, 81234 Adlishwil எனும் மண்டபத்தில் 03.07.2016 அன்றையதினம் காலை 08.00 மணியளவில் இடம்பெறஉள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இதுவரை பரீட்சைக்கான விண்ணப்பப் படிவங்களை எமக்கு அனுப்பி வைக்காதவர்கள் கூட (பலருக்கும் விண்ணப்பப் படிவம், உரிய நேரத்தில் கிடைக்காதபடியால்) பரீட்சை நடைபெறும் 03.07.2016 காலை 07.30க்கு நேரில் வந்து, தம்மைப் பதிவு செய்து பரீட்சையில் கலந்து கொள்ளலாம்.

10.07.2016 இல் வரசித்தி மஹால் மண்டபத்தில் நடைபெறும் "வீரமக்கள் தின" நிகழ்வின் போது இப் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.
   
          "எதிர்காலம் வளமாக, எழுவோம் பலமாக"

தொடர்புகளுக்கு:...
077.959 10 10, 076.583 84 10, 078. 916 71 11, 078. 935 46 92, 077. 948 52 14

 -- தமிழீழ மக்கள் கல்விக் கழகம் சுவிஸ்கிளை --
Read More

June 21, 2016

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் நாடகப் போட்டி
by admin - 0

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு  கல்லூரியின் நாடக மன்றத்தின் ஒழுங்குபடுத்தலில் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் நாடகப் போட்டி ஒன்றினை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி நடாத்தவுள்ளது. இவ் சிறுவர் நாடப் போட்டிக்கான நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடகத்தில் பாத்திரமேற்று நடிக்கும் நடிகர்களின் எண்ணிக்கை 16 - 20 ஆக இருத்தல் வேண்டும். , நடிகர்கள் ஆரம்பப் பிரிவின் இவ்வருடம் புலமைப்பரிவில் பரீட்சைக்கு தேர்றறவுள்ள மாணவர்கள் தவிர்ந்த தரம் 4 மற்றும் அதற்க்கு உட்பட்ட மாணவர்களாக இருந்தல் வேண்டும். ,  போட்டியில் பங்கு கொள்ளும் மாணவர்களுடைய பிறந்த திகதி முழுப்பெயர் பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.,  நாடகத்தில் பங்கு கொள்ளும் பிற்ப்பாட்டுக்காரர்களின் எண்ணிக்கை 10 பேருக்கு மேற்படலாகாது இவர்கள் பாத்திரமேற்று நடிப்பவர்களுள் கணிக்கப்படமாட்டார்கள்.பக்கவாத்தியம் வாசிப்போர் அதே பாடசாலையைச் சேந்த  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாக இருத்தல் வேண்டும்.

நாடகத்தின் கருப்பொருளானது ஜீவகாருண்யம் , அன்பு , நட்பு , கருணை , ஒற்றுமை பிறருக்கு உதவிசெய்தல்  , மூத்தோர் சொற்கேட்டல் முதலான விடயங்களைக் கொண்டு சுய ஆக்க பிரதியாக அமைதல் வேண்டும். ஆற்றுகைக்கான நேரம் 25 நிமிடங்கள். ஒரு நிமிடம் முன் பின் விலகலாக கருத்தில் கொள்ளப்படும். அதற்க்குக் குறைவாக அல்லது மேலதிகமாக ஆற்றுகை நேரம் அமையுமாயின் ஒவ்வொரு நிமிட நேரவிலகலுக்கும் 1 புள்ளி வீதம் குறைக்கப்படும்.

நாடக ஆற்றுகைக்கான மேடை ஒழுங்கமைப்பிற்க்கு 10 நிமிடங்கள் மாத்திரமே தரப்படும். மேலதிகமாக எடுக்கப்படும் நேரத்திற்த்திற்கு நிமிடத்திற்க்கு ஒரு புள்ளிகள் வீதம் ஒட்டு மொத்த ஆற்றுகைக்கான புள்ளியில் இருந்து கழிக்கப்படும்.மேடையில் உள்ள ஒளியுடனே ஆற்றுகை செய்யப்பட வேண்டும். பிரத்தியோக ஒளியமைப்புக்கள் யாவும் செய்ய அனுமதிக்கப்படமாட்டாது. நாடக எழுத்துருப்பிரதிகள் போட்டி நடைபெறும் போது நடுவர்களிடம் கையளிக்கப்படுதல் வேண்டும்.. அத்துடன் சுய ஆக்கம் என்பதனை பாடசாலை அதிபர் உறுதிப்படுத்த வேண்டும். 
நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. போட்டிகள் தொடர்பாக முறைப்பாடுகள் மேற்கொள்ள வேண்டி ஏற்படின் நாடக பொறுப்பாசிரியர் ஊடாக எழுத்து மூலம் போட்டி முடிவு அறிவிக்கப்படுவதற்க்கு முன்னர் தரப்பட வேண்டும். போட்டி முடிவு அறிவிக்கப்பட்ட பின் முடிவுகளில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படமாட்டாது.
நாடகப் போட்டிகள் எதிர்வரும் யூலை மாதம்  15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் தம்பர் மண்டபத்தில் இடம்பெறும். இந் நாடகப்போட்டிக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இவ் நாடகப் போட்டி தொடர்பாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்பபவர்கள் நாடகமன்றப் பொறுப்பாசிரியர் எஸ்.ரி.குமரன் அவர்களுடன் 0779773538 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக தகவல்களினை பெற்றுக் கொள்ள முடியும்  அத்துடன் போட்டியில் பங்குபற்றுகின்றவர்கள். யூலை மாதம் 12 ஆம் திகதிக்கு முன்பாக தமது வரவினை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

200 வருட கல்வி மற்றும் கலைப்பாரம்பரியத்தினை கொண்ட யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியின் நாடக செயற்ப்பாட்டிற்க்கு தங்களின் மேலான ஒத்துழைப்பினை எதிர்பர்த்து நிற்க்கின்றோம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
Read More

June 20, 2016

இந்துக்கல்லூரி விவாத அணி முதலாமிடத்தினை பெற்றுக் கொண்டு சம்பியனாகியது
by admin - 0

மொறட்டுவைப்பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தினால் அகில இலங்கைரீதியான நடத்தி வருகின்ற சொற்கணை விவாதபோட்டியில் யாழ் மாவட்டமட்டப்போட்டியில் யாழ்.இந்துக்கல்லூரியில் 18.06.2016 சனிக்கிழமை இடம்பெற்றது . இவ் விவாத சுற்றுப்போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணி யும் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி அணியும் மேதிக்கொண்ட இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விவாத அணி முதலாமிடத்தினை பெற்றுக் கொண்டு  சம்பியனாகியது. இரண்டாம் இடத்தினை சென்ஜோன்ஸ்கல்லூரி பெற்றுக்கொண்டது.இவ் விவாத சுற்றுப்போட்டியில் 17 பாடசாலைகள் போட்டியில் பங்குபற்றிமை குறிப்பிடத்தக்கது


Read More

March 10, 2016

மகாசிவராத்திரி தினம் -சரவணை கிராமம்
by admin - 0

சிவராத்திரி தினத்தில் சரவணை கொட்டாங்காடு ஞான பைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற காத்தவராயன் சிந்து நடைக் கூத்தின் பதிவுகள்














Read More
Copyright © TamilNews விவசாயி All Right Reserved