Latest News
Showing posts with label கோவில்கள். Show all posts
Showing posts with label கோவில்கள். Show all posts

August 06, 2016

யாழ் தீவகம் சரவணை சின்னமடு மாதா ஆலய நவநாள் திருவிழா
by admin - 0

யாழ் தீவகம் சரவணை சின்னமடு மாதா ஆலய நவநாள் திருவிழா கடந்த 27.07.2016 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகி, தொடர்ந்து விசேட பூஜை வழிபாடுகள் தினமும் இடம்பெற்று வந்ததுடன்-4ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு செபமாலையுடன் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நற்கருணை ஆராதனை இடம்பெற்று- 5ஆம் திகதி  வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு யாழ். மறை மாவட்ட முன்னாள் ஆயர் தோமஸ் சௌந்திரநாயகம் ஆண்டகையின் தலைமையில் திருவிழா திருப்பலி சிறப்பாக  இடம்பெற்று பின்னர் அன்னையின் திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது.

சின்னமடு அன்னையின் வருடாந்த,பெருநாள் விழாவில் கலந்து கொள்ள-தீவகத்திலிருந்தும்,யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் பெருமளவான பக்தர்கள் வருகைதந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.





Read More

July 20, 2016

சரவணை கதிர்வேலாயுத சுவாமி கோவில் தேர் திருவிழா-5 பக்தர்கள் ஒன்றாக தூக்கு காவடி
by admin - 0

சரவணை கதிர்வேலாயுத சுவாமி  கோவில் தேர் திருவிழா-5 பக்தர்கள் ஒன்றாக தூக்கு காவடி

யாழ்ப்பாணத்தீவுகளில் பெரிய தீவான வேலணைத்தீவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சரவணைக் கிராமத்தில் அருள்பாலிக்கும் சரவணை கதிர்வேலாயுத சுவாமி கோவிலின் தேர்திருவிழா மிகவும் சிறப்பாக அருள் எழுச்சியுடன் இன்று இடம்பெற்றது இதில் பெருமளவில் முருகன் பக்தர்கள் கலந்துகொண்டு முருகனின் அருளை வேண்டி நின்றார்கள் .

இதில் சிறப்பம்சமாக முருகன் பக்தர்களால் ஒரு காவடியில் 5 பேர் ஒன்றாக காவடி எடுத்துக்கொண்ட அழகு அனைவரையும் பக்தி பரவசத்திற்கு கொண்டு சென்றது அத்துடன் வாள் மேல் அமர்ந்து தூக்குகாவடியும் சரவணை கதிர்வேலாயுத சுவாமி  அருளால் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.





















Read More

July 19, 2016

சரவணை முருகன் கோவில் 8 ம் திருவிழா
by admin - 0

ரயாழ் வேலணைத்தீவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சரவணை கிராமத்தின் முருகன் கோவில் திருவிழா மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த 8ம் நாள் திருவிழாவில் தீ மிதிப்பு  நிகழ்வும் இடம்பெற்றது இதில் முருகன் பக்தர்கள் அரோகரா சத்தத்துடன் தமது நேர்த்திக்கடன் நிவர்த்தி செய்தார்கள் 


அதன் 8ம் நாள் திருவிழாவில் முருகன் வீதியுலா வரும் காட்சிகள்










Read More

July 17, 2016

சரவணை முருகன் கோவில் 7 ம் திருவிழா
by admin - 0

யாழ் வேலணைத்தீவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சரவணை கிராமத்தின் முருகன் கோவில் திருவிழா மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்று வருகிறது.

அதன் 7ம் நாள் திருவிழாவில் முருகன் வீதியுலா வரும் காட்சிகள் 
















Read More

November 17, 2015

தாண்டிக்குளம் முருகன் கோயில் சூரன் போர் காட்சிகள்
by admin - 0

தமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதம் கடந்த 12ம்  திகதி ஆரம்பமாகியது.


சரவணப் பொய்கையில் ஆறு திருமுகங்களுடன் அவதரித்த முருகனை நோக்கி ஆறு தினங்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும். இந்த கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று முருகப் பெருமான் மூல மூர்த்தியாக வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற ஆலயங்களில் சூரன் போர் இடம்பெற்றது.

அந்தவகையில் வவுனியா நகரில் அமைந்துள்ள தண்டிக்குளம் அருள்மிகு  கந்தசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்ஹாரம் இன்று செவ்வாய்க்கிழமை ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
























Read More

நல்லூர் கந்தசுவாமி கோவில் 2015 கந்த சஷ்டி உற்சவத்தின் 6ம் நாள்
by admin - 0

நல்லூர் கந்தசுவாமி கோவில் 2015 கந்த சஷ்டி உற்சவத்தின் 6ம் நாள்











Read More

September 26, 2015

வல்லிபுர ஆழ்வார் தேர் திருவிழா
by admin - 0

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தேர்திருவிழா இன்று காலை8-30 மணிக்கு பல்லயிரக்கணக்கான பத்தர்கள் அரோகரா முழங்க நடைபெற்றது.

வடமாகாணத்தில் இருத்தும் நாட்டின் பல பகுதிகளில் இருத்தும் பக்தர்கள் வந்து தேர்திருவிழாவில் பங்குகொண்டு மாயவனின் அருள்பெற்றனர்.












Read More