Latest News
Showing posts with label அறிவித்தல். Show all posts
Showing posts with label அறிவித்தல். Show all posts

August 16, 2018

திரு அப்புத்துரை நோதனராஜா (வினோத்)
by admin - 0

பிறப்பு : 29 டிசெம்பர் 1967 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2018

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா அவர்கள் 14-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை பூபதி தம்பதிகளின் அன்பு மகனும், இராஜதுரை வள்ளிநாயகி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனுஷா அவர்களின் அன்புக் கணவரும்,

நிக்‌ஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அம்பிகைராசா, வில்வராசா மற்றும் தேவானந்தராசா(ஆனந்தன்), உருத்திரதேவி, திருதேவி, சரோசினி தேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலாதேவி, வீரலெட்சுமி, சாந்தினி, கிருஷ்ணமூர்த்தி, சிறிஸ்கந்தராசா, காலஞ்சென்ற பரமநாதன், வனுஷா(விஜி), காலஞ்சென்ற கிருஷா, தனுஷா, மயூரன், சைலஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இளந்திரியன், குணசீலன், உமாகாந்தி, விஜேந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

சுதர்சன், திவ்யா, விஜிதா, வினோஜா, அர்ச்சனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

நிசாந்தி, நிசாந்தன், சிறிராம் ஆகியோரின் அன்பு மாமாவும்,

விஷ்ணுப்பிரியா, மானுஷா, ஓவியா, கீர்த்திகா, அக்‌ஷயா, அஜித்தா, சஞ்ஜய், வியோனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
அனுஷா(மனைவி)

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 22/08/2018, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Oshwal Ekta Centre, 366A Stag Ln, London NW9 9AA, UK
தகனம்
திகதி: புதன்கிழமை 22/08/2018, 12:00 பி.ப — 12:45 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK


தொடர்புகளுக்கு
நிக்‌ஷன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447491060924
தேவானந்தராசா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41796591250
உருத்திராதேவி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41793430929
Read More

February 23, 2016

அந்தியேட்டி சபிண்பீகரண அழைப்பிதழ்...
by admin - 0

அந்தியேட்டி சபிண்பீகரண அழைப்பிதழ்...

எங்கள் அன்புத்தாய்மாமன் கந்தையா தங்கவடிவேலு அவர்களின் 31 நினைவுநாள் எதிர்வரும்25-02-2016 வியாழக்கிழமை அதிகாலை 5-00 மணிக்கு இல்லத்தில் நடைபெறவுள்ளது அத்துடன் 12 மணியளவில் இல்லத்தில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம் , இவ்அழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்..

எங்கள் அன்புத் தெய்வம்!!
ஒரு மாதம் ஆகியும்
ஆறவில்லை எம் துயரம்
அன்பு கொண்ட உங்கள் ஆத்மா
அருகினில் இருப்பது போல் உணர்கின்றோம்!
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில் நடந்ததென்ன
நிஜம்தானா என்று நினைக்கின்றோம் தினமும்
திக்கற்று தவிக்கின்றோம் திரும்பிவரமாட்டீர்களோ!
என்றும் உங்கள் நினைவுடனே வாழ்கின்றோம் மாமா 
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம் 
ஓம் சாந்தி! ஓம்சாந்தி !ஓம் சாந்தி!
பிரிவுத் துயரில் வாடும் 
குடும்பத்தினர்


தகவல் 

மருமக்கள் 
Read More