Latest News
Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

April 17, 2021

ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் தொடங்கியது விவேக்கின் இறுதி ஊர்வலம்.. திரளானோர் பங்கேற்பு!
by Editor - 0


தமிழ் சினிமா நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிசச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அரவது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் 24 மணி நேரத்திற்கு பிறகே சொல்ல முடியும் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நேற்று மாலை தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று காலை நடிகர் விவேக் அவர்கள் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.


அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறை பிரபலங்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 5 மணியளவில் அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது.


ஆனால் மூன்றரை மணிக்கே விவேக்கின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதிச்சடங்குகளை தொடங்கினர். இதனை தொடர்ந்து தற்போது நடிகர் விவேக்கின் பூத உடல் ஊர்வலமாக மேட்டுகுப்பம் மின் மயானத்தில் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்படவுள்ளது.

Read More

February 05, 2021

பேரறிவாளன் உள்பட 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவை பரிந்துரையை நிராகரித்தார் ஆளுநர்
by Editor - 0

பேரறிவாளன் உள்பட 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவை பரிந்துரையை நிராகரித்தார் ஆளுநர்



பேரறிவாளன் உள்பட 7 தமிழரை விடுவிக்க வேண்டும் என தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிராகரித்துள்ளார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக அரசியலமைப்பு சட்டம் 161 இன்படி தமிழக அமைச்சரவை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் மீது ஆளுநர் எந்தவித முடிவையும் எடுக்காமல் இருந்தார். இதனிடையே பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என மத்திய அரசு முதலில் வாதிட்டது. பின்னர், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியது, தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவு எடுப்பார் என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பேரறிவாளன் விடுதலை தொடர்பான பரிந்துரை மீது ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அவகாசம் வழங்கி, விசாரணையை ஒத்திவைத்தனர். ஆனால், உச்ச நீதிமன்றம் ஆணையட்டு 12 நாட்களாகியும் தமிழக அரசின் பரிந்துரை குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிராகரித்துள்ளார். மேலும் இந்த விடுதலை தொடர்பான முடிவை எடுக்க குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரையை சட்டத்திற்கு உள்பட்டு மத்திய அரசு பரிசீலிக்கும் என்றும் ஆளுநர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 7 பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என இன்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்த நிலையில் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார்.


Read More

September 29, 2020

இந்தியாவை அவமதிக்கும் இராஜபக்சேவிடம் தமிழர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்!
by Editor - 0

இந்திய நிலைப்பாட்டை ஏற்க மறுக்கும் நிலையில்  இலங்கை பிரதமர் ராஜபக்சே உள்ளார், அதற்க்கு இந்திய மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்….


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி – இலங்கை பிரதமர் இராஜபக்சே ஆகியோருக்கிடையிலான இரு தரப்பு பேச்சுகளின் போது பரிமாறிக் கொள்ளப்பட்ட கருத்துகளின் பயனாக தங்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்று ஈழத்தமிழர்கள் நம்பிக் கொண்டிருந்த நிலையில், அவர்களின் நம்பிக்கை மீது வெந்நீரை ஊற்றி சிதைத்திருக்கிறார் இராஜபக்சே. ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் விஷயத்தில் இந்தியாவின் யோசனையை இலங்கை ஏற்க மறுத்திருப்பது திட்டமிட்டு இழைக்கப்படும் அவமதிப்பாகும்.

இந்தியா – இலங்கை இடையிலான இரு தரப்பு உறவுகள் குறித்து இரு நாடுகளின் பிரதமர்களும் கடந்த 26-ஆம் தேதி இணையவழியில் பேச்சு நடத்தினார்கள். அப்போது, இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 13-ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளித்தல், போருக்குப் பிந்தைய சமாதான முயற்சிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர்கள் சமத்துவம், நீதி, அமைதி, மரியாதை ஆகியவற்றுடன் வாழ வகை செய்ய வேண்டும் என்று இலங்கை பிரதமர் ராஜபக்சேவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கேட்டுக் கொண்டார்.
அதையேற்ற இலங்கை பிரதமர் ராஜபக்சே, இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவுகளை முழுமையாக செயல்படுத்துவதன் மூலம் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற தமது அரசு நடவடிக்கை எடுக்கும் என மோடியிடம் உறுதியளித்திருந்தார். இரு நாடுகளின் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்த அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

வழக்கமாக இரு நாட்டு தலைவர்களுக்கு இடையில் நடைபெறும் பேச்சுக்களுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட நாடுகளின் சார்பில் தனித்தனியாக அறிக்கை வெளியிடப்படும். அந்த அறிக்கையில், இருதரப்பு பேச்சுக்களில் முடிவு செய்யப்பட்ட விஷயங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்படுவது வழக்கம்.

ஆனால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடனான பேச்சுக்களுக்குப் பிறகு இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையில், ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பது குறித்தோ, இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் 13-ஆவது சட்டத் திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துவது குறித்தோ எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தியப் பிரதமருடனான பேச்சுக்களின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயத்தை இலங்கை அரசு அதன் அறிக்கையில் தவிர்த்திருப்பதன் மூலம் இந்தியாவை அவமானப்படுத்தியிருக்கிறது. இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் 13-ஆவது திருத்தம் என்பது 1987-ஆம் ஆண்டு இந்திய – இலங்கை அமைதி உடன்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகும். அத்திருத்தத்தை முழுமையாக செயல்படுத்தும்படி வலியுறுத்தும் உரிமை இந்தியாவுக்கு உண்டு. இந்த விஷயத்தில் இந்தியாவின் வலியுறுத்தல்களை செயல்படுத்த வேண்டிய கடமை இலங்கைக்கு உள்ளது. ஆனால், அக்கடமையையும், ஒப்பந்த விதிகளையும் மதிக்க இலங்கை அரசு மறுத்திருப்பதை விட மோசமான அவமதிப்பை இந்தியாவுக்கு இழைக்க முடியாது.

இலங்கைப் போரில் ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்த இராஜபக்சே, அதற்கு எதிராக உலக அரங்கில் எழுந்த கண்டனத்திற்கு பணிந்து, 13-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை விட கூடுதல் அதிகாரத்தைத் தமிழர்களுக்கு வழங்கத் தயார் என்று அறிவித்தார்.

ஆனால், இப்போது 13-ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை செயல்படுத்துவது குறித்து உறுதி அளிக்க மறுத்திருக்கிறார். இலங்கை அரசியலமைப்பு சட்டத்திலிருந்து 13-ஆவது திருத்தம் நீக்கப்படும் என்ற அச்சம் ஈழத்தமிழர்களிடம் எழுந்துள்ள நிலையில், அதை நீக்குவதற்கான உறுதிமொழி கூட அளிக்கப் படவில்லை என்பதிலிருந்தே இந்தியாவை இலங்கை எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை உணரலாம்.

போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் உள்ளிட்ட விஷயங்களில் உலக அரங்கில் இலங்கை கடுமையான கண்டனங்களுக்கு உள்ளான போதெல்லாம், அந்த நாட்டைக் காப்பாற்றியது இந்தியா தான். இப்போதும் கூட இலங்கை கடுமையான கடன் வலையில் சிக்கியுள்ள நிலையில், இந்தியாவின் கடன்களைத் திருப்பிச் செலுத்த கூடுதல் கெடு வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு உதவிகளுக்கும் இலங்கை செலுத்தியுள்ள நன்றிக்கடன் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்திருப்பது ஆகும். இத்தகைய தொடர் அவமரியாதைகளை இந்தியா எப்படி எடுத்துக் கொள்ளபோகிறது? என்பது தான் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல்கள், ஈழத்தமிழர்களுக்கு போதிய அதிகாரம் வழங்குதல் ஆகியவற்றில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். பன்னாட்டு அமைப்புகளில் இது குறித்த விவாதங்களும், விசாரணைகளும் வரும் போது, இலங்கைக்கு எதிரான, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும். அதன்பிறகும் இலங்கையின் போக்கு மாறாவிட்டால், இறுதித் தீர்வாக ஐக்கிய நாடுகள் அவையின் மூலம் தனித்தமிழீழம் அமைக்க உலகம் முழுவதும் ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read More

July 02, 2020

சாத்தான்குளம் பெண் காவலருக்கு ஊதியத்துடன் ஒரு மாதம் விடுப்பு.. ஐஜி முருகன் தகவல்
by Editor - 0

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் இறப்பு விவகாரத்தில் சாட்சி கூறிய பெண் காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு மாத விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐஜி முருகன் தெரிவித்தார்.

சாத்தான்குளத்தில் போலீஸாரால் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 5 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.


தந்தை மகன் இறப்பு விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்தது என்ன என்பது குறித்து மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் பெண் காவலர் ரேவதி நேரடி சாட்சியம் அளித்தார்.

இதையடுத்து தனக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ரேவதி கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவருக்கு உரிய பாதுகாப்பும் ஊதியமும் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Read More

October 27, 2019

87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம் 
by Editor - 0

குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

குழந்தை இருக்கும் குழிக்கு அருகில்

ரிக் இயந்திரம் மூலம் தற்போது அகலமான குழி தோண்டப்படுகிறது

100 அடியை எட்டியதும் உள்ளே இறங்கி குழந்தையை மீட்க ஆறு பேர் கொண்ட குழு குழிக்குள் இறங்க தாயாரான நிலையில்

தற்போதைய நிலவரம் சுரங்கம் வழியே குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

தனி ஒருவனாக சென்று மீட்டுவரத் தயார் என வீரர்களில் ஒருவரான நகைமுகன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி தினமான இன்று உலகத் தமிழர்களின் பிரார்த்தனையாக சிறுவன் சுஜித்தை எப்படியாவது காப்பாற்றப்பட வேண்டும் என்பதாகவே அமைந்துள்ளது.

ஊடகங்கள் ஊடாக உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் சிறுவன் சுஜித் மீட்கப்படும் காட்சிகளை கண் கலங்கியபடி பார்த்து வருகின்றனர்.

எப்டியாவது சுஜித் காப்பாற்றப்பட வேண்டும் என்று தமிழர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்ணீருடன் காத்திருக்கின்றனர் தமிழர்கள்.

சுஜித் என்ற சிறுவன் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்ற பிரார்த்தனை தொடர்கிறது 

Read More