Dropdown Menu
July 12, 2017
தமிழர் உலகையே ஆண்ட மூத்தகுடி என்பதற்கு மற்றுமொரு ஆதாரம்!
by
admin
12:34:00
-
0
May 08, 2017
கொரிய மக்களின் தெய்வம் ஒரு தமிழிச்சி- மறைக்கப்பட்ட தமிழர்கள் வரலாறு
by
admin
07:53:00
-
0
March 21, 2017
தமிழா நீ தமிழா? ஈழத்திலிருந்து தமிழர்களுக்கான ஒரு பாடல்.
by
admin
09:32:00
-
0
தடைகள் பல தாண்டி
படைகள் பல வென்ற
தமிழன் போலவா
இருக்கின்றோம்
சொல்லிசை - கலாமோகன் பகிர்தன்
உரையிசை- த.மதீசன்
வரிகள்- கலாமோகன் பகிர்தன், தி.தர்மலிங்கம்
ஒலிச்சமப்படுத்தல்- ரஞ்சன் கிருஷ்ணா
ஓவியங்கள் - திரோஸ்கி மருது
ஒளித்தொகுப்பு - சசிகரன் யோ
இசை- த.மதீசன்
தயாரிப்பு- பூவன் மீடியா
January 18, 2017
ஜல்லிக்கட்டு அல்லது ஏறுதழுவுதல். தமிழரின் எழுச்சி.!!
by
admin
12:08:00
-
0
January 07, 2017
ஒன்று, இரண்டல்ல, மொத்தம் 60 பெயர்கள் உள்ளன. இவை எல்லாமே தூய தமிழ்ப் பெயர்கள்.
by
admin
09:24:00
-
0
யானைக்கு மொத்தம் எத்தனை பெயர்கள் இருக்கின்றன தெரியுமா? ஒன்று, இரண்டல்ல, மொத்தம் 60 பெயர்கள் உள்ளன. இவை எல்லாமே தூய தமிழ்ப் பெயர்கள்.
# யானை (கரியது)
# வேழம் (வெள்ளை யானை)
# களிறு
# களபம்
# மாதங்கம்
# கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
# உம்பர்
# உம்பல் (உயர்ந்தது)
# அஞ்சனாவதி
# அரசுவா
# அல்லியன்
# அறுபடை
# ஆம்பல்
# ஆனை
# இபம்
# இரதி
# குஞ்சரம்
# இருள்
# தும்பு
# வல்விலங்கு
# தூங்கல்
# தோல்
# கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
# எறும்பி
# பெருமா (பெரிய விலங்கு)
# வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது)
# பூட்கை (துளையுள்ள கையை உடையது)
# ஒருத்தல்
# ஓங்கல் (மலைபோ ன்றது)
# நாக
# பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
# கும்பி
# தும்பி
# நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
# குஞ்சரம் (திரண்டது)
# கரேணு
# உவா (திரண்டது)
# கரி (கரியது)
# கள்வன் (கரியது)
# கயம்
# சிந்துரம்
# வயமா
# புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
# தந்தி
# மதாவளம்
# தந்தாவளம்
# கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
# வழுவை (உருண்டு திரண்டது)
# மந்தமா
# மருண்மா
# மதகயம்
# போதகம்
# விரமலி
# மதோற்கடம் (மதகயத்தின் பெயர்)
# கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்) ஆகியவை ஆண் யானைகளின் பெயர்கள்.
# பிடி
# அதவை
# வடவை
# கரிணி
# அத்தினி ஆகியவை பெண் யனைகளின் பெயர்கள். இரண்டும் சேர்ந்து மொத்தம் 60 பெயர்கள்.
December 10, 2016
அப்பல்லோவில் டிசம்பர் 5, 11.30 P.M எல்லாமே செட்டப்! அம்பலமாகும் மரண மர்மம்…
by
admin
07:41:00
-
0
அ.தி.மு.க. தொண்டர்களின் அடக்கமுடி யாத கோபத்திலிருந்து தப்பிக்க… சசிகலா தரப்பும் அப்பல்லோவும் பல்வேறு வேலைகளில் இறங்கி யிருக்கின்றன. “முதல் அமைச்சரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துகொண்டிருக்கிறது,… திட உணவுகளை சாப்பிட ஆரம்பித்துவிட்டார்,… உட்கார ஆரம்பித்துவிட்டார்,…எழுந்து நடப்பதற் கான பயிற்சிகளை கொடுத்துக் கொண்டிருக் கிறோம்’…என்றது அப்பல்லோ அறிக்கை. அதைத் தொடர்ந்து சசிகலா தரப்பின் அறிவுறுத்தல்படி அப்பல்லோவும் அ.தி.மு.க நிர்வாகிகளும் பலவிதமாகக் கதையளந்தனர்.
எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் அப்பல்லோ வாசலில் தொடங்கி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பிரார்த்தனை செய்தனர். அவர்கள் நம்பிக்கைக் கேற்றபடியே ஒவ்வொரு நாளும் தகவல்கள் வெளியிடப்பட்டன.
* காவிரி விவகாரம், சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் நடைபெற உள்ள கூட் டத்தில் முதல்வர் ஆற்றவேண்டிய உரையை தலைமைச் செயலாளர் வாசிக்க உள்ளார். இந்த உரையை ஜெ. சொல்ல சொல்ல அதிகாரிகள் தயாரித்தனர்.
* ஜெ. 2 முறை தண்ணீர் வாங்கிக் குடித் தார். வேக வைத்த ஆப்பிள் பழங்களை சாப்பிட்டார்.
* பிசியோதெரபி சிகிச்சையால் ஜெ. நன்றாக பேசுகிறார். சில நாட்களில் வீடு திரும்புவார்.
* எழுவதற்கு பயிற்சி எடுக்கிறார். சாதாரண வார்டுக்கு மாற்றத் திட்டம்.
* எலெக்ட்ரானிக் கருவிகள் மூலம் அரசு அதிகாரிகளுடன் தகவல்களை பரிமாறிக்கொள்கிறார்- அ.தி.மு.க. சீனியர் தலைவர் பொன்னையன்.
* “வழக்கமான உணவை சாப்பிடுகிறார். எப் போது டிஸ்சார்ஜ் ஆகவேண்டும் என்று ஜெய லலிதாவே முடிவு செய்வார்’- அப்பல்லோ ரெட்டி.
* ஓய்வு என்பது நான் அறியாதது. உழைப்பு என்னை விட்டு நீங்காதது. நான் மறுபிறவி எடுத்துள்ளேன்- ஜெ. கையெழுத்திட்ட அறிக்கை.
* அறையில் இருந்தபடி டி.வி. பார்த்து நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்கிறார்.
* மூன்று தொகுதி இடைத்தேர்தல் வெற்றி யால் ஜெயலலிதா உற்சாகம். ஓட்டு எண்ணிக்கை நிலவரத்தை டி.வி.யில் பார்த்தார்.
* “”90 சதவீதம் இயல்பாக சுவாசிக்கிறார். மிகுந்த வலிமை, மனவலிமை படைத்தவர் அவர். எப்போது வீட்டுக்குப் போகவேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார்”. -அப்பல்லோ ரெட்டி
இவையெல்லாம் தொண்டர்களின் நம்பிக்கை யை அதிகரிக்கச் செய்தது. கடந்த செப்டம்பர் 22-ந் தேதி அப்பல்லோவில் ஜெ. அட்மிட் ஆனபோது எந்தத் தொண்டரும் நேரில் பார்க்கவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 74 நாட்களில் ஒருமுறைகூட ஜெ.வின் முகத்தை பார்க்கமுடிய வில்லை. அவரின் குரலையாவது கேட்கமுடியாதா என்கிற ஏக்கம் தொண்டர்கள் மத்தியில் பரவியது.
அப்பல்லோ மற்றும் அ.தி.மு.க. முக்கிய நிர் வாகிகளின் அறிக்கைகள், பத்திரிகை ஊடகங்களின் செய்திகளைப்பார்த்து, “விரைவில் அம்மா குணமாகி இரட்டை விரலை அசைத்து புன்னகையோடு போயஸ்தோட்டம் செல்வார்’ என்று நம்பிக்கை யோடு காத்திருந்த தொண்டர்களுக்கு முகம் தெரியாதபடி அமரர் ஊர்தியில்…
December 05, 2016
ஜெயலலிதாவுக்கு தொடரும் தீவிர சிகிச்சைகள்.. நம்பிக்கை தரும் அப்பல்லோ அறிக்கை
by
admin
13:02:00
-
0
July 26, 2016
30 ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் வாழ்ந்த இடம் கண்டுபிடிப்பு..!!
by
admin
09:30:00
-
0
கடந்த ஆண்டில் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரும்புக் காலத்தைச் சேர்ந்த மட்பாண்ட வகைகளும் கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் கிடைத்ததையடுத்து, இந்த இடம் ஆகழ்வாராய்ச்சி செய்வதற்கான இடமாகத் தேர்வுசெய்யப்பட்டு, இந்த ஆண்டில் அகழ்வாராய்ச்சி நடந்துள்ளது.
கற்காலம் (கி.மு. 30,000 – கி.மு. 10,000) முதல் மனிதர்கள் வாழ்ந்ததற்கான மண் அடுக்கச் சான்றுகளும் இரும்புக் காலம், வரலாற்றுத் தொடக்க காலம் ஆகியவற்றின் எச்சங்களும் இங்கே கிடைத்திருப்பதால், கற்காலத்தில் துவங்கி தற்போதுவரை இந்தப் பகுதியில் தொடர்ச்சியாக மனிதர்கள் வாழ்ந்து வந்தததாகக் கொள்ள முடியும் என தமிழக தொல்லியல் துறையின் துணை இயக்குனர் ஆர். சிவானந்தம் பிபிசி தமிழோசையிடம் கூறினார்
.
இந்த அகழாய்வில் குறிப்பிடத்தக்க பொருட்களாக, பழங்கற்காலத்தைச் சேர்ந்த இரு பக்க முனையுடைய கத்தி, புதிய கற்காலத்தைச் சேர்ந்த கோடாரிகள், சாம்பல் நிற மண்பாண்ட ஓடு, ரோமானிய மட்பாண்ட வகையான ரௌலட் மட்பாண்ட ஓடு, 23 உறைகளைக் கொண்ட உறை கிணறு ஆகியவற்றை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இரு பக்க முனையுடைய கத்தி தமிழகத்தில் அரிதாகவே கிடைத்திருப்பதாகவும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த பொருட்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் அரிதாகவே கிடைத்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
”ரோமானியர்கள் வர்த்தகம் மேற்கொண்ட இடமாக இருக்கலாம்”
சங்ககாலத்தில் இந்த இடம் ரோமானியர்களுடன் வர்த்தகம் மேற்கொண்டிருக்கக்கூடிய ஒரு வர்த்தக மையமாக இருந்திருக்கக்கூடும் என்பதையே இது சுட்டிக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது அகழ்வாராய்ச்சி நடந்திருக்கும் பட்டறைப் பெரும்புதூர் பழங்காலத்திலிருந்து பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டுவந்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
July 06, 2016
தமிழ் பிறந்தநாள் பாடல் "Tamil Birthday Song"
by
admin
14:07:00
-
0
நீண்ட நீண்ட காலம்
நீ நீடு வாழ வேண்டும்
நீண்ட நீண்ட காலம்
நீ நீடு வாழ வேண்டும்
வானம் தீண்டும் தூரம்
வளர்ந்து வாழ வேண்டும்
அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
பண்பு வேண்டும் பணிவு வேண்டும்
எட்டுத்துக்கும் புகழ வேண்டும்
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்
உலகம் பார்க்க உனது பெயரை
நிலவுத் தாளில் எழத வேண்டும்
சர்க்கரை தமிழள்ளி தாலாட்டு நாள்சொல்லி வாழ்த்துக்கிறோம் ...
பிறந்தநாள் வாழ்த்துகள் ... பிறந்தநாள் வாழ்த்துகள் ...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
June 18, 2016
தமிழர் தமிழராகவே இருங்கள்.! -ஈழத்து துரோணர்
by
admin
11:01:00
-
0
January 21, 2016
காந்தாரி அம்மன் யார்?-தமிழருக்கான புதிய உண்மை
by
admin
23:55:00
-
0
September 22, 2015
உலகின் மிகவும் பழமையான 10 மொழிகளில் தமிழ் மொழியே முதலிடம்.!
by
அகலினியன்
20:10:00
-
0
September 19, 2015
கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் 23 மொழிகளில்!
by
Unknown
22:33:00
-
0
August 11, 2015
தமிழை தூக்கி பிடித்த சிங்கப்பூர்,!!!
by
admin
18:46:00
-
0
நேற்று நடந்த சிங்கப்பூரின் 50 வது பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் தான் இந்நிகழ்வை காண முடிந்தது..!!!
லட்சோப லட்சம் மக்களின் முன்னிலையில் 5 வெளிநாட்டு தலைர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் சிங்கப்பூர் முன்னேற்றத்திற்கு தமிழர்கள் செய்த தியாகத்தை போற்றும் வகையில் வெற்றி என தமிழ் வடிவத்தில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடத்தியது மெய்சிலிர்க்க வைத்தது...
இந்தியா கூட தமிழனுக்கு கொடுக்காத மரியாதையை கொடுத்து #தமிழை பெருமை படுத்திய சிங்கப்பூருக்கு
நன்றி நன்றி..!!!
August 10, 2015
உலகின் பழமையான மொழி தமிழ்
by
admin
13:36:00
-
0
July 19, 2015
மின்கலத்தை, மின்சாரத்தை கண்டுபிடித்தது ஒரு தமிழனே...
by
admin
17:31:00
-
0
வாட்ஸ் அப், வைபர், ஸ்கைப் மூலம் இந்தியாவுக்குள் இனி இலவசமாக பேச முடியாது
by
admin
16:40:00
-
0
வருவாய் இழப்பு செல்போனில் செயலிகளை உருவாக்கும் நிறுவனங்களும், ஸ்கைப் போன்ற வலை தளங்களும் இணையதளம் வாயிலாக இலவச அழைப்புகளை வழங்குவதன் மூலம் தங்களுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படுவதாக ஏர்டெல், வோடாபோன், ஐடியா செல்லுலார் ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசிடம் முறையிட்டிருந்தன
கட்டணம் வசூலிக்கப்படுமா? வாட்ஸ் அப், ஃபேஸ்புக், வைபர், ஸ்கைப் போன்ற சமூக வலைத்தள சேவைகளின் வரவு காரணமாக வருமான இழப்பு ஏற்படுவதாகக் கூறி, இவற்றுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்க, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், டிராய் அமைப்பிடம் வலியுறுத்தியது.
ஜீரோ திட்டம்
ஏர்டெல் ஜீரோ திட்டத்தில் இணையும் நிறுவனங்களின் இணையதளங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும், மற்ற இணையதளங்கள் கட்டணமாக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டது. இதற்கு நாடுமுழுவதும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்த புரட்சி போராட்டத்துக்கு ஆதரவாக பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
நாடுமுழுவதும் எதிர்ப்பு
நெட் நியூட்ராலிட்டிக்கு எதிராக, இந்தியாவில் இணைய சமநிலை வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, இதற்காக தனி குழு அமைக்கப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டது. மேலும் இந்த பிரச்சனை, பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டு, இணைய சமநிலை தொடர்பாக மக்களின் கருத்துகள் சேகரிக்கப்பட்டது.
டிராய் ஆய்வறிக்கை வெளியீடு
பல லட்சம் மக்கள் கருத்து தெரிவித்ததை அடுத்து, தொலைத்தொடர்பு துறை, இன்று அதன் இணையத்தளத்தில், இணைய சமநிலை தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 24 பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த பரிந்துரைகள் பெரும்பாலும் மக்களுக்கு சாதகமாக இயற்றப்பட்டுள்ளது. மக்களுக்கு இணைய சேவை சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் கிடைக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. இணைய சமநிலை குறித்த 112 பக்க ஆய்வறிக்கை இன்று இந்திய தொலைத்தொடர்பு துறையின் http://www.dot.gov.in/ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இணைய சமநிலை குறித்து தொலைத்தொடர்பு துறை நியமித்த குழு அளித்த பரிந்துரைகள் இதில் இடம்பெற்றுள்ளன
மக்களின் நலன் முக்கியம்
'நெட் நியூட்ராலிட்டி' விவகாரத்தில் இந்தியாவில் வாடிக்கையாளர்களான மக்களின் நலன்தான் முக்கியம், அதற்கு ஏற்பதான் செல்போன் நிறுவனங்களும், ஓடிடி எனும் ஆப்ஸ் சேவை நிறுவனங்களும் தங்களது சேவையை வழங்க வேண்டும். பல லட்சம் பேரின் கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இணைய சமநிலை
அதேபோல் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப இணைய பயன்பாட்டை செல்போன் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது. ஓடிடி நிறுவனங்களுக்கு செய்திகளை வழங்குவதில், தகவல் பரிமாற்றத்திற்கு எந்த நெறிமுறையும் இல்லாமல் தங்களது பழைய நடைமுறையிலேயே இயங்கலாம் என கூறியுள்ளது. ஆனால் இது தகவல் பறிமாற்றத்துக்கு மட்டுமே என்று கூறியுள்ளது. அதே போன்று
இலவச அழைப்புகள் வெளிநாடுகளுக்கு இணையவழியில் வழங்கப்படும் இலவச அழைப்புகளுக்கான சேவைகளை ஏற்றுக் கொள்ளலாம் என்றும், அதேவேளையில் உள்ளூர் அழைப்புகளைப் பொருத்தவரை, இணையதளத்தில் இலவச அழைப்புகள் வழங்கும் நிறுவனங்களுக்கும், தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான விதிகளே பின்பற்றப்பட வேண்டும் எனவும் அந்தக் குழு தெரிவித்துள்ளது
இலவச அழைப்புகள்
வாட்ஸ் அப், வைபர் போன்ற ஆப்ஸ்களில் தகவல் பரிமாற்றத்தை மட்டும் இலவசமாக வழங்கலாம். ஆனால் விஓஐபி எனும் இணையதள கால் சேவைகளை இலவசமாக வழங்க முடியாது. அதனை நெறிமுறைப்படுத்த வேண்டும். அவை தொலைதொடர்பு நிறுவனங்களின் அழைப்பு கட்டணங்கள் போலவே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இனி வாட்ஸ் ஆப், ஸ்கைப், வைபர் மூலம் இலவசமாக பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கருத்துக்கள் தெரிவிக்கலாம்
இணைய வழியில் வழங்கப்படும் இலவச அழைப்புகளை முறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான கருத்துகளை பொதுமக்கள் தொலைத் தொடர்புத் துறைக்கு அனுப்பலாம் என்றும் பார்கவா தலைமையிலான குழு கூறியுள்ளது.
ஊக்குவிக்க முடியாது
இணையதளக் கட்டணமின்றி சில வலை தளங்களைப் பயன்படுத்தும் வகையில் முகநூல் நிறுவனம், இன்டர்நெட்.ஆர்க் என்ற சேவையை அறிமுகப்படுத்தியது. இந்தச் சேவையானது, நெட் நியூட்ராலிட்டி விதிகளுக்கு எதிரானது என்றும், இத்தகைய நடவடிக்கைகளை ஊக்குவிக்க முடியாது எனவும் தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
உரிமைகள் உறுதி
செய்யப்படும் இணையதள சேவை அனைவருக்கும் நேர்மையாக கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் முற்போக்கான அணுகுமுறை கடைபிடிக்கப்படும். நாட்டின் தேவைக்கு ஏற்ப கொள்கைகள் வகுக்கப்படும்.இணையத்தை பயன்படுத்துபவர்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
May 28, 2015
தமிழில் உள்ள ஒரெழுத்துக்களுக்கும், அவற்றிற்கான விளக்கமும்.
by
admin
20:21:00
-
0
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்
அ ----- எட்டு
ஆ ----- பசு
ஈ ----- கொடு, பறக்கும் பூச்சி
உ ----- சிவன்
ஊ ----- தசை, இறைச்சி
ஏ ----- அம்பு
ஐ ----- ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ ----- வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா ----- சோலை, காத்தல்
கூ ----- பூமி, கூவுதல்
கை ----- கரம், உறுப்பு
கோ ----- அரசன், தலைவன், இறைவன்
சா ----- இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ ----- இகழ்ச்சி, திருமகள்
சே ----- எருது, அழிஞ்சில் மரம்
சோ ----- மதில்
தா ----- கொடு, கேட்பது
தீ ----- நெருப்பு
து ----- கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ ----- வெண்மை, தூய்மை
தே ----- நாயகன், தெய்வம்
தை ----- மாதம்
நா ----- நாக்கு
நீ ----- நின்னை
நே ----- அன்பு, நேயம்
நை ----- வருந்து, நைதல்
நொ ----- நொண்டி, துன்பம்
நோ ----- நோவு, வருத்தம்
நௌ ----- மரக்கலம்
பா ----- பாட்டு, நிழல், அழகு
பூ ----- மலர்
பே ----- மேகம், நுரை, அழகு
பை ----- பாம்புப் படம், பசுமை, உறை
போ ----- செல்
மா ----- மாமரம், பெரிய, விலங்கு
மீ ----- ஆகாயம், மேலே, உயரம்
மு ----- மூப்பு
மூ ----- மூன்று
மே ----- மேன்மை, மேல்
மை ----- அஞ்சனம், கண்மை, இருள்
மோ ----- முகர்தல், மோதல்
யா ----- அகலம், மரம்
வா ----- அழைத்தல்
வீ ----- பறவை, பூ, அழகு
வை ----- வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ ----- கௌவுதல், கொள்ளை அடித்தல் —
April 05, 2015
சவூதி அரேபியா கவிஞர்களிடம் வரவேற்பை பெற்ற திருக்குறள்: அரபி மொழியில் வெளியீடு!
by
admin
00:22:00
-
0
இவ்வெளியீடு குறித்து தெரிவித்த கவிஞர் ஜாஹிர் ஹுசைன் பாகவி, திருக்குறளை அரபு உலகிற்கு அறிமுகப்படுத்திய முதல் நிகழ்ச்சி இது. நம் தாய் நாட்டுச் சொந்தங்கள், நண்பர்கள் அதிக அதிக அளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அரபுக் கவிஞர்கள் வள்ளுவரின் வார்த்தைகளை மெய்மறந்து ரசித்தார்கள். இது ஓர் அற்புதமான அனுபவம் என்று கூறியுள்ளார்.
March 18, 2015
உங்களுக்கு தெரியுமா ...?? தமிழனின் இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில்
பயன்பாட்டில் இருந்துள்ளது...!!
by
admin
19:57:00
-
0
அன்று இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்...!!
இன்று கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம்..!!
உலகுக்கு எடுத்து சொல் !! தமிழன் என்று தலை நிமிர்ந்து நில் !! அனைவருக்கும் பகிருங்கள் .....
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.


















Social Buttons