Latest News

November 23, 2014

ஜனாதிபதி தேர்தல் தமிழர்களின் நிலை என்ன? சரவணை மைந்தன்
by admin - 0


இலங்கையின் பிரதம மந்திரிப் பதவி 1948 ஆம் ஆண்டில் இலங்கை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தபோது உருவாக்கப்பட்டது. பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் அமைப்பைப் போன்ற அரசியலமைப்பு இலங்கையிலும் நடைமுறையில் இருந்தது. அதனால் இலங்கையிலும் பிரத மந்திரியே நாட்டின் அதியுயர் தலைமைப் பதவியைக் கொண்டிருந்தார். இலங்கை 1972 இல் குடியரசான போதும் பிரதம மந்திரியே நாட்டின் தலைவராக இருந்தார். ஆனால் இவ்வமைப்பு 1978இல் மாற்றப்பட்டது. 1978 ஆம் ஆண்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி (அரசுத்தலைவர்) அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. இதன்படி ஜனாதிபதி நாட்டின் தலைவராகவும் அரசின் தலைவராகவும் இருக்க வழிகோலப்பட்டது.இது ஜனாதிபதி பதவியின்  சுருக்க வரலாறு

இலங்கை தேசம் பல ஜனாதிபதி தேர்தல்களை சந்தித்துள்ளது இதில் பல வகையான ஜனாதிபதிகள் வந்து ஜனாதிபதி அரியணையில் அமர்ந்துள்ளார்கள் அனைவருமே இனவாத அடிப்படையில் தமது அதிகாரத்தை செலுத்தி சிங்கள் பெரும்பான்மை என்னும் மமதையில் ஆட்சி செய்வதால் தமக்குள்ள ஒற்றுமையை வெளிப்படுத்தினார்கள், வெளிப்படுத்துவார்கள். 


 நிறைவேற்று ஆதிகாரம் என்பது ஒரு நாட்டை சர்வதிகார போக்கில் ஆளும் ஒரு ஆட்சி ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டவர் தனக்கு கிழ் அனைத்து அரச அதிகாரங்களையும் வைத்திருக்க கூடியவர்.மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தையே அதன் ஆயுள்காலம் முடிவடைய முன்னர் கலைக்கும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே இலங்கையில் காணப்படுகிறது.

இப்படி பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் அமர ஸ்ரீலங்காவின் அரசியல் தலைமைகள் என்ன விலை கொடுக்கவும் தயங்கமாட்டார்கள்.நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பேன் என்று வாக்குறுதி அளித்து பதவியில் அமரும் யாரும் அந்த அதிகாரத்தை தாரவாக்க என்றுமே முயன்றதில்லை அந்தளவுக்கு அந்த பதவியின் அதிகாரம் அவர்களை இறங்கி போக விடுவதில்லை.

இந்த அதிகார ஆசையால் சிங்கள் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் இனவாதத்தை பேசியே பெரும் பான்மை சிங்களவர்களின் வாக்குகளை பெறுவதற்காக தமிழர்களை சிங்களவர்களின் எதிரிகளாக்கி இன்றும் தனது இனவாதத்தை காட்டி வருகிறது. சிங்களவர்களின் வாகுபலத்தை பெற்றால் சிறுபான்மை தமிழர்களின் வாக்குகள் அவர்களுக்கு தேவையற்றதாகிறது. இதனால் தமிழர்கள் என்றுமே அடக்கப்பட்ட இனமாக சிறிலங்காவில் அடிமையாக வாழ்கிறார்கள் .அகிம்சை,ஆயுதம் போன்றவற்றை கையில் எடுத்து போராடும் தமிழர் இனம் இன்று வரை பேராடும் இனமாகவே காணப்படுகிறது விடிவு என்பது இன்னும்  எட்டவில்லை. சிங்கள ஆட்சியாளர்கள் தீர்வு தருவார்கள் என்பது என்று நடவாத ஒன்றாகி போய்விட்டது மீண்டும் மீண்டும் ஏமாற்றம் அடைய தமிழர்கள் தாயார் இல்லை.

கற்ற பாடங்களை கையில் எடுத்து எமது போராட்டத்தை உலகுக்கு அவர்களின் வழிகளிலேயே உணர்த்தவேண்டும்.ஜனாதிபதி தேர்தல் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது அதன் திகதியும் தைமாதம் எட்டாம் நாள் என தேர்தல் திணைக்களமும் அறிவித்து விட்டது இதனால் தமிழர்களாகிய எங்களுக்கு என்ன பலன். ஆட்சியில் அமரபோவது ஒரு சிங்கள பெரும்பான்மை வேட்ப்பாளர் ஒருவரே அவர் எப்படிப்பட்டவர் எனபது அவர் வந்தபின் தெரியும் என்பது முட்டாள்தனம் இதுவரையும் பட்ட  பாடங்களிலிருந்து சிங்கள ஆட்சி அதிகாரங்களின் அதாவது பேரினவாதத்தின் முகங்கள் எப்படிப்பட்டது என்பது தமிழ் சமுகம் நன்கு அறியும். சிங்களம் எங்களுக்கு எந்த ஒரு  தீர்வையும் தராது சிங்களம் அதற்கு இடம் கொடுக்காது அவர்கள் தமிழர்களை என்றுமே அடிமைத்தனமாக வைத்திருக்க முயலுவார்கள் நாங்கள் பலமாக இருந்தபோதே தீர்வை தராதவர்கள் இப்போது தருவார்களா என்பது ஒரு மூடனுக்கும் தெரியும் ஆகவே நாங்கள் எங்களுக்கான தீர்வை வலியுறுத்தி இந்த ஜனாதிபதி தேர்தலை சந்திக்கவேண்டும்  

நாம் கற்றுகொண்ட அனுபவங்களை  எமது பாடங்களாக்கி எமது விடுதலை வடிவத்தை கொண்டு செல்லவேண்டும் அதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலை சிறப்பாக பயன்படுத்தவேண்டும்.இப்போதைய ஜனாதிபதிக்கும் எதிரணி வேட்ப்பாளரான  சுகந்திர கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன இடையில் கடும் போட்டி இருக்கலாம் இதில் யாரும் வெற்றி பெறலாம்.அதனால் தமிழருக்கு என்ன கிடைக்கும்.இதில் யாரும் தமிழர் வாக்குகளை பகிரங்கமாக எமக்கு அளியுங்கள் உங்களுக்கு தீர்வை தருகிறோம் என்று சொல்ல தயங்குவார்கள் ஏன் என்றால் யார் தமிழர் வாக்குகளை பெற அவர்களின் அதரவு தமக்கு உண்டு என்று கூறி சிங்களவர்களிடம் வாக்கு கேட்ககிறார்களோ அவர்கள் புலி முத்திரை குத்தப்பட்டு சிங்கள மக்களின் கணிசமான அளவு ஆதரவை இழப்பார்கள் அந்தளவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் தமிழ்விரோத இனவாதம் விதைக்கப்பட்டுள்ள்ளது.மறைமுகமாக ஆதரவை கூட்டமைப்பிடம் கேட்ப்பார்கள் வெற்றிபெற்றபின் எல்லாம் பழைய பல்லவிதான் தமிழர்களுக்கு எதுவும் இல்லை ஆகவே இதில் நாங்கள் மிகவும் அவதானத்துடன் செயலாற்றவேண்டும் 


எந்த ஒரு வேட்பாளர்களையும் ஆதரிப்பதால் பலன் ஏதும் எமக்கு கிடைக்க போவதில்லை தமிழ் மக்களின் தெரிவுகளில் ஒன்று தேர்தலை புறக்கணிப்பது அல்லது தமிழ்தேசிய கோரிக்கைகளை முன் வைத்து தமிழர் தரப்பு ஒரு வேட்பாளரை நிறுத்துவது. இந்த இரண்டு தெரிவுகளே தமிழர்களின் தெரிவாகலாம். இதில் சிறந்தது எது? தமிழர்களின் அபிலாசைகளை எது வெளிப்படுத்தும் ?அதாவது எமக்கும்  இந்த ஜனாதிபதி தேர்தலில்  எந்த ஒரு தீர்வும் கிடைக்காது இதில்  எந்த நப்பிக்கையும்  இல்லை என்பதை தேர்தல் புறக்கணிப்பின் மூலம் உலகுக்கு பறைசாற்றலாம் இது தேர்தலை புறக்கணிப்பதால் வெளிப்படும் ஆனால் நாம் தமிழரை பிரநிதித்துவப்படுத்தும் தமிழர்களின் சுயநிர்ணய தாயக கோட்பாட்டை பறைசாற்றி ஒரு தமிழ் தேசிய வேட்பாளரை நிறுத்துவதால் தேர்தலை புறக்கணிப்பதால் ஏற்படும் தாக்கத்தை விட உலகுக்கு தமிழரின் அபிலாசைகளை வெளிக்காட்டி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் . இதில் வடக்கு கிழக்கு பகுதிகளில் பெரும்பானமையான 80% மேற்ப்பட்ட வாக்குகளை தமிழ் தேசிய வேட்ப்பாளர் பெற்று வடகிழக்கில் வெற்றி  பெறுவாராயின் தமிழ்தேசியம் பறைசாற்றப்படும் இதனால் உலகுக்கு எமது அபிலாசைகளை கொண்டு சென்று எமக்கு என்ன வேண்டும் என்பதை மக்கள் ஆணையாக வெளிப்படுத்தலாம். இதற்கு தெளிவான தமிழ்தேசிய சுயநிர்ணய கொள்கையை இன்றுவரை கொள்கை மாறாமல் வெளிபடுத்தும் ஒரு வேட்ப்பாளரை தெரிவு செய்து அதற்க்கு தமிழ்தேசியகூட்டமைப்பு  மற்றும் தமிதேசிய மக்கள் முன்னணி போன்றன அதரவு வழங்கி தமிழர் அபிலாசைகளான  தங்களை தங்கள் ஆளும் கொள்கையை வகுத்து தேர்தலில் போட்டியிட்டு எமது விடுதலைக்கு வலுசேர்க்கவெண்டும்.இதுவே நல்லதொரு தெரிவாகலாம் இதை தமிழ் தலைமைகள் ஒன்றுமையுடன் வெளிப்படுத்தவேண்டும்.


« PREV
NEXT »