Latest News

November 22, 2014

மீண்டும் வாருங்கள் பசில் அழைப்பு
by admin - 0

அரசாங்கத்தில் இருந்து விலகி சென்ற குழுவினர் மீண்டும் அரசாங்கத்துடன் ஒன்றிணையுமாறு அமைச்சர் பசில் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

கொலன்னாவ ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டு அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

கொலன்னாவ தேர்தல் தொகுதியின் பிரதான ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் இன்று சாலமுல்லயில் அமைச்சர் பசில் ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டது.

அவரை வரவேற்பதற்காக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா உள்ளிட்ட தரப்பினர் இருந்துள்ளனர்.

இதன்போது, ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அங்கத்துவத்தை பெற்று கொண்டமை விஷேட அம்சமாகும்.

இதனையடுத்து, அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் பசில் ராஜபக்ச இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

விஷேடமாக ஜனாதிபதி தேர்தலை உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னர், நாள் மாத்தரமின்றி எதிர்கட்சி வேட்பாளரையும் தெரிந்து கொண்டு நான் திறக்கும் முதலாவது அலுவலகம் இதுவாகும். மதகுருவே அந்த சங்கீத நாற்காலி போட்டி போன்று சுற்றி வந்தனர்;. இதில் யார் அமருவார்கள் என்று. நாங்கள் நினைத்தது போன்று யாரும் அமரவில்லை. அவர்களுக்கு தெரியும் அந்த சரத் பொன்சேகாவிற்கு நடந்தது போலவே நடக்கும் என்று. பிலி போய் ஆக நேரிடும். சிலரை பலவந்தமாக அமர செய்ய முற்பட்டனர். எனினும் முடியாது போனது. இறுதியாக கடந்த முறை போலவே எங்களுடன் இருந்த ஒருவரை தேடி கொண்டனர். 2007 ஆம் ஆண்டு முதல் வைராக்கியம் இருந்து வந்துள்ளது. எனவே நாங்கள் அனுதாபபடுகிறோம். நாங்கள் இன்றும் அழைக்கின்றோம் மீண்டும் ஒரு முறை வருமாறு. எங்களுக்கு தெரியும் சிலர் இதய சுத்தியுடன் செல்லவில்லை என்று. அவ்வாறானவர்களுக்கு முடியும் மீண்டும் வந்து, நாட்டு மக்களை காப்பாற்றும் வேலைத்திட்டங்களுக்காக இணைந்து கொள்ள.

இதன்போது, கருத்து வெளியிட்ட கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா

இன்று எங்களுக்கு தெரியும், எமது ஜனாதிபதிக்கு இதுவொரு பாரிய பிரச்சினை அல்லவென்று. ஏன் என்றால் அவருக்கென்று தெளிவான பயணம் ஒன்று இருக்கிறது. நாட்டின் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். பாரிய அபிவிருத்திகளை ஏற்படுத்தினார். அதேபோல, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பாரிய நிதி தொகைகளை அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக நாடு பூராகவும் பகிர்ந்தளித்துள்ளார். எனவே, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே எதிர்காலத்தில் ஜனாதிபதி பதவியை ஏற்கவுள்ளார் என்பதை.
« PREV
NEXT »

No comments