மூதூர் பிரதேச பாலத்தடிசேனை, பட்டித்திடல், பச்சனூர், ஒட்டுப்புலவட்டை, சம்மாற்துரை கிராமங்களில் உள்ள சுமார் 2500 ஏக்கர் வயல்களுக்கு போதிய நீர் வழங்கப்படாமையால் பயிர்கள் வாடுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் கடந்த சனிக்கிழமை கிராம மக்கள் முறைப்பாட்டை செய்ததன் விளைவாக 29.05.2015 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் இரா. ஞானேஸ்வரன் மற்றும் மாவட்ட அனமப்பாளர் இராஜகோண் ஹரிகரன் மற்றும் உறுப்பினர்கள் கிராம மக்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டனர்.
நெற்செய்கை நீரின்றி முற்றாக அழிவடையும் நிலையில் உள்ளதாகவும், தமக்கான தீர்வினைப் பெற்றுத் தருமாறும் மக்கள் தெரிவித்தனர். குறித்த வயல் நிலங்களுக்கு இன்னும் இரண்டு நாட்களுக்கு நீர்கிடைக்காவிடின், தமது நெற்செய்கை முற்றாக அழிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலைதெரிவித்தனர். உரிய அதிகாரிகளிடம் இதுதொடர்பில் தெரிவித்தும் இதற்கான தீர்வினைப் பெற்றுத்தரவில்லை எனக்குறிப்பிடும் விவசாயிகள், இலட்சக்கணக்கில் பணம் செலவழித்தும் இறுதியில் கடலில் விழுகின்ற பருவத்தில் தாங்கள் உள்ளதாக விசனம் தெரிவித்துள்ளனர்.


No comments
Post a Comment