
அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். நகரில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் பத்திரிகையாளர்களைத்
தனியே அழைத்து அவர் இவ்வாறு தெரிவித்தார். வடகடல் நிறுவனத்தின் புதிய இயந்திரங்களின் பணிகளைத் தொடக்கி வைக்கும் நிகழ்வு நேற்று நடந்தது. அதன் பின்னர் பத்திரிகையாளர்களைத்
தனியே அழைத்துப் பேசினார் அமைச்சர். வடமாகாண தேர்தல் மற்றும் வலி.வடக்கு மீள்குயமர்வு என்பன குறித்துத் தனது வழமையான கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ், தனது பேச்சை ஒலிப்பதிவு செய்வதை நிறுத்துமாறு
தெரிவித்த பின்னர் மிரட்டல் பாணியில் கருத்துத் தெரிவித்தார். என்னுடன் கதைத்து விட்டு வேறு ஏதாவது எழுதினால் என்னால் உடனடியாக நடவடிக்கை எடுக்க
இயலும், கழுத்தையும் நெரிக்க இயலும் என்றார் அமைச்சர். அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களிடம் அமைச்சரின் மிரட்டல் பாணியிலான கருத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொது இடத்தில் வைத்து பகிரங்கமாகத் தாம்
மிரட்டப்பட்டமை ஊடக
சுதந்திரத்திற்கு அமைச்சரால் விடுக்கப்படும் அச்சுறுத்தல் என்று ஊடகவியலாளர்கள்
கூறினர்.
ஊடகவியலாளர்களை கழுத்தை நெரிப்பேன் அமைச்சர் டக்கிளஸ் அதாவது கழுத்தை நெரிப்பேன் என்றால் என்ன கொள்ளுவேன் என்றுதானே பொருள்படும். bbc செய்தியில் பேட்டி கொடுத்த அமைச்சர் உதயனில் தாக்குதல் நடந்துகொண்டு இருகிறது என்று தகவல் வந்ததாக சொல்லிவிட்டு பின் மாற்றி சொன்னார் அதை விவசாயி வெளிப்படுத்தியது
No comments
Post a Comment